ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை (Post No.12,297)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,297

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனுக்கு வருகை தந்து 16 நாட்களுக்கு லண்டன் ஈலிங் பேட்டையில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் தொடர் சொற்பொழிவாற்றிய பொற்கிழிக் கவிஞர், தமிழ் அறிஞர் சொ சொ மீ . சுந்தரம் அவர்களுக்கு நேற்று கோவில் கமிட்டியார் தக்க மரியாதைகளை செய்து கெளரவித்தனர் .பேராசிரியரும் அருணகிரிநாதர் என்ற தலைப்பில் உரையாற்றி, தனது தொடர் சொற்பொழிவினை நிறைவு செய்தார் .

காசியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருக்கும் அகில உலக கோவில் மகாநாட்டில் சொற்பொழிவாற்ற லண்டனிலிருந்து சொ சொ மீ சுந்தரம் புறப்பட்டுச் சென்றார் .

14-7-2023 அன்று தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ . சுந்தரம்  திரு ஞான சம்பந்தர் என்ற தலைப்பில் உரை ஆற்றினார் . சம்பந்தருக்கும் மதுரையில் அரசியலில் ஈடுபட்ட சமணர்களுக்கும் நடந்த மோதல்கள், அனல் வாதம் புனல் வாதம் கதைகளை பலரும் அறிவர். ஆயினும் சமணர்களுக்கும் சைவர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்பதைப் பலரும் அறியார் . மூன்று முக்கிய விஷயங்களை சொ சொ மீ சுந்தரம் அழகாக விளக்கினார் :

1.ஒருவர் செய்த வினைகளின் பலன் அந்த மனிதரைத் தானாகப் பற்றிக்கொள்ளும்

ஆனால் சைவமோ சிவபெருமான் என்ற ஒரு கடவுளே நமக்கு வினைப்பயனைத் தருபவன் என்பதை ஒப்புக்கொள்கிறது . சமணர்களுக்கு கடவுள் இல்லை .

2.பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அவர்கள் அடுத்த பிறவியில் ஆண்களாகப் பிறந்துதான் மோட்சத்தை அடைய  முடியும். இதற்காகப் பெண்கள் இப்பிறவியில் தவம் செய்யவேண்டும் என்பது சமணர் கூற்று

ஆனால் இந்துக்களோ பெண்களும் மோட்சம் அடைந்த பல கதைகளைக் கூறுகின்றனர் . சிவன் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவன் இல்லை . இங்குள்ள கனக துர்க்கை உள்பட நாம் வணங்குவது எல்லாம் பெண் கடவுளர்கள்தான்

3. வழிபாட்டுத் தலங்களில் ஆடலும் பாடலும் கூடாது என்பது சமணர்தம் கொள்கை.;

ஆனால் நாமோ அவைகளை வழிபாட்டின் ஒரு அம்சமாகப் பார்க்கிறோம் ; இந்துக் கடவுளர் அனைவரும் நடனப் பிரியர்கள்

நடராஜன் ஆடிக்கொண்டே இருக்கிறார் ; கணபதியும் ஆடுகிறார்.அவரை நர்த்தன கணபதியாகப்  பார்க்கிறோம் .

கண்ணனும் ஆடுகிறான்.

பாம்புத் தலை மேலே நடஞ்செய்யும் பாதத்தினைப் புகழ்வோம் என்று கிருஷ்ணன்  ஆட்டத்தை பாரதி பாடுகிறார் .

காளியும் ஆடுகிறாள் . பாரதியாரே

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்

அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்

தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை……. என்று காளியின் நடனத்தைப் பாடுகிறார்..

முருகன் ஆட்டத்தினை அருணகிரிநாதரும் திருப்புகழில் பாடுகிறார்

அதல சேட னாராட அகில மேரு மீதாட

     அபின காளி தானாட …… அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட

     அருகு பூத வேதாள …… மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட

     மருவு வானு ளோராட …… மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட

     மயிலு மாடி நீயாடி …… வரவேணும்

xxx

அது மட்டுமல்ல சமணர்கள் விபூதிக்கும் சிவன் நாமத்துக்கும் எதிரிகள்

நமசிவாய என்று யாரவது சொல்லிவிட்டால் கேட்டுமுட்டு (கேட்ட தீட்டு) என்று  சொல்லி சாப்பிட மாட்டார்கள்

விபூதி பூசியவனைப் பார்த்தால் கண்டு முட்டு ( கண்டதே தீட்டு) என்று  சொல்லி சாப்பிட மாட்டார்கள்.; அவர்களைச் சேர்ந்த கூன் பாண்டியனும் இதே கொள்கையைக் கடைப்பிடித்தான் . பாண்டியன் மனைவியான மங்கையர் கரசியார் , மந்திரி குல சிறையார் இருவரும் சம்பந்தரை வரவழைத்து சைவத்தைக் காப்பாற்றினார்கள்.

Xxx

ஆயிரம் பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்..

Xxxxx

மதுரை ஜோக் Joke  – பையக் கொடு !!

ஞான சம்பந்தர்  மதுரைக்கு வந்து பாண்டிய மன்னனை சந்திக்கவிருப்பதை அறிந்த சமணர்கள், சிறுவன் தங்கிய மடத்துக்கு இரவோடு இரவாக தீ வைத்தனர். சம்பந்தரைத்  தீர்த்துக் கட்ட வேண்டும் என்பது  சமணர் திட்டம். ஆனால் சிவனின் பரிபூரண அருள்பெற்ற  சம்பந்தரை தீ ஒன்றும் செய்யவில்லை. அந்த தீயையே அவர் பாண்டிய மன்னனுக்கு நோய் தரும் நெருப்பாகத் திருப்பி அனுப்பினார்.

பையவே சென்று பாண்டியர்க்காகவே என்பது  சம்பந்தரின் வாக்கு.

பைய என்பது மெதுவாக என்று பொருள் தரும் சொல். மதுரைத் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்.

இது பற்றி சொ சொ மீ ஒரு ஜோக் JOKE சொன்னார்

தமிழ்நாட்டில் பஸ் கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது காசுகளை வாங்கிப் பையில் (SHOULDER BAG)  போடுவார்கள் . பொதுவாக பெரிய நோட்டைக் (Currency Note) கொடுத்தால், மீதி சில்லறையை அப்புறம் வாங்கிக் கொள் என்பார்கள் .

இப்படி மதுரை வாசியிடம் ஒரு வெளியூர் கண்டக்டர் சொன்னார்.

பஸ் பயணியும் அதற்கென்ன பையக் கொடுங்கள் என்றார் (பைய= மெதுவாக).

கொஞ்ச நேரம் ஆயிற்று. மீதிப்  பணத்தை பயணி கேட்டார்.

இன்னும் சில்லறை சேரவில்லையப்பா என்கிறார் பஸ் கண்டக்டர்.

பயணி சொன்னார் – அதற்கென்ன பையக் கொடுங்கள் .

கண்டக்டருக்கு கோபம் வந்து விட்டது

ஏனப்பா , உன் மிச்சக் காசுக்காக என் பையையே கொடு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய் என்று திட்டினார்.

பின்னர் எல்லா பயணிகளும் பைய= என்றால் மதுரையில் மெதுவாக என்று பொருள் என்று விளக்கினர் .

சம்பந்தர் இந்தச் சொல்லை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தினார்

xxx

ஆணை நமதே நாயனார்

திரு ஞான சம்பந்தரை அழைக்க பாண்டிய நாட்டு ராணியே வந்தார். அப்போது அப்பரும் அங்கே இருந்தார். அப்பருக்கு சமணர்கள் இழைத்த தீமைகள் ஏராளம். அவர் சம்பந்தரை எச்சரித்தார். ஐயோ நீங்கள் சின்னப் பையன். அவர்களோ பொல்லாதவர்கள் கொல்லாமை என்னும் போர்வையில் மறைந்து உறையும் பொல்லாதவர்கள் போகாதீர்கள் என்றார். மேலும் நாளும் கோளும் சரியில்லை என்கிறார் .

சம்பந்தரோ சுப்பிரமணியரின் மறு அவதாரம். நாளும் கோளும் சிவன் அடியார்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லி வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு பதிகப் பாடலைப் / பதிகத்தைப் பாடி இதைப் பாடும் எவரையும் நவக்கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் ஒன்றும் செய்யாது; தீமை என்பதே இராது என்று சொல்லி ஆணை நமதே என்கிறார். இது போலப் பல பாடல்களில் ஆணை என்று கட்டளை இடுகிறார் ; இதனால் இவர்க்கு ஆணை நமதே நாயனார் என்ற பெயரும் உண்டு .(IT IS MY COMMAND/ ORDER)

xxx

இவ்வாறு பல அரிய செய்திகளை சொற்பொழிவில்  வழங்கிய சொ சொ மீ , சிவனுடைய 5 தொழில்களான ஆக்கல் அழித்தல் அருளுதல்  காத்தல்,  மறைத்தல் என்ற 5 தலைப்புகளில் சம்பந்தர் வரலாற்றை அமைத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்

சுபம் —-

Tags- கோளறு பதிகம், ஆணை நமதே நாயனார், சமணர் கொள்கைகள்,  பைய, மெதுவாக, பையக் கொடு ஜோக்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1972023 (Post No.12,296)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,296

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 15 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.மந்த்ராலய மஹான் ; பிறந்தது தமிழ்நாட்டில் ,

4.இவர்கள வம்சம் மேலை, கீழை என்று இரண்டு பிரிவுகளை  உடையது

,5. அடுத்தாற் போல என்ன செய்வது என்பதை இந்த சொல்லால் சொல்லுவர்

 6.உணர்ச்சி இல்லாத உடல்;, ⇠ 

7.மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் இடம் ,

 8.தென்னை, வாழை முதலி யன கொத்தாக இருக்கும் நிலை

(right to left )

9. ⇠ நோபல் பரிசு பெற்ற வங்காளக் கவிஞர் (right to left

11. ⇠ சிவாஜிக்கு குரு இன்னொருவர் பத்ராசலம் வாசி; இருவருக்கும் இப்பெயர்  (right to left)

11.பூபாளம், காம்போதி, முதலியவற்றைக் குறிப்பிடும் பொதுப் பெயர்

xxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.ராஜ ராஜ சோழனின் மகன்

2.தமிழ் நாட்டின் வட எல்லை , 

3.ராமர் மீது அதிகம் பாடிய கர்நாடக இசை மேதை  ,

9 ⇡  .அன்னை பூமியை இப்படியும் சொல்லலாம் ,

9.தண்ணீருக்குத் தவிக்கும் நிலை ,

10. ⇡  களிமண் பானை

1 2 3   
       
  4    
5       
    6  
7  8    9
        
     1011  

விடைகள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.ராகவேந்திரர், 4.கங்கர்,5. திட்டம், 6.ஜடம், ⇠  7.சோலை, 8.குலை(right to left 9. ⇠ தாகூர்(right to left 11. ⇠ ராமதாசன் (right to left) 11.ராகம்

xxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.ராஜேந்திர சோழன் ,2.வேங்கடம்,  3.தியாகராஜர் , 9  .தாயகம், 9.தாகம், 10.  மண்குடம்

ரா1வே2ந்தி3ர்
ஜே ங் யா  
ந் க4ங்ர்ம்
தி5ட்ம்ரா 
 ம்ஜ 6 
சோ7லைலைகு8ர்கூ  9தா
  ண்  
ன்தா  10ரா11ம்

—SUBHAM–

 tags– Tamil CW, 1972023, 

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 8 (Post No.12,295)

DIAMOND CROWN – VAIRA MUDI FESTIVAL 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,295

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART EIGHT

44.. Mukthanatheshwara Swami Temple, Nelamangala நீலமங்கல முக்தனாதேஸ்வர கோவில்

பெங்களூரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோழர் கால கோ வில்.. ராஜேந்திர சோழனின் சிலை உள்ளது மிகவும் பாழடைந்த நிலையில் இருந்த இந்தக் கோவிலை தொல்பொருட் துறை செப்பனிட்டுள்ளது .

கோவிலுக்கு முன்னால் தமிழில் எழுதப்பட்ட பலகை இருக்கிறது கோவிலுக்குள் சிவலிங்கமும், வெளிச் சுவர்களில் பார்வதி-பரமேஸ்வரன் , நடராஜர் சிற்பங்களும், கூரையில் அஷ்ட திக் பாலகர்களும் பார்க்க வேண்டியவை.

Sri Lakshmi Venkateshwara Swamy Temple, Nelamangala, லெட்சுமி வெங்கடேஸ்வரர் கோவில், பசவேஸ்வரர் கோவில், ஆஞ்சனேயர் கோவில்களும் இந்த வட்டாரத்தில் உள்ளன

XXXX

45.பசராலு மல்லிகார்ஜுனர் கோவில் Mallikarjuna temple, Basaralu

இதை ஒரு கலைக்கூடம் என்று சொல்லலாம். சோம்நாத்பூர், ஹலபேடு , பேலூர் போல சுவர் முழுதும் சிற்பங்கள். பார்த்தவுடனேயே ஹொய்சாளர் பாணி கோவில் என்று சொல்லிவிடலாம். சிவ பெருமான் உறையும் கோவில் இந்த மல்லிகார்ஜுனர் கோவில் ஹரிஹர தன நாயக்க என்பவர் 1234 ஆம் ஆண்டு கட்டிய கோவில் . தொல்பொருட் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது  மூன்று சன்னதிகள் இருக்கும் திரிகூட அமைப்பு ள்ளது. ஜகதி என்று அழைக்கப்படும் மேடை மீதுள்ள கோவில். ஹொய்சாளர் பாணியில் ஆமலக சிகரமும் காணப்படும். ஜகதிஆமலக என்பனவெல்லாம் ஹொய்சாளரின் கட்டிடக்கலை முத்திரைகள் .

நுழை வாயிலில் கல் யானைகள் நிற்கின்றன. சுவர் முழுதும் புராண இதிஹாஸக் கதைகளை விளக்கும் சிற்பங்கள். நூற்றுக் கணக்கில் என்பதைவிட ஆயிரக்கணக்கான சிற்பங்கள் என்றே சொல்ல வேண்டும் ( யூ ட்யூப்பில் YOU TUBE காணலாம் )அந்தகாசுரன்  தலையில் ஆடும் 16 கைகள் கொண்ட  சிவ பெருமான் , ராவணன் தூக்க முயற்சிக்கும் கயிலை மலை, ,கஜாசுர சம்ஹாரம், அர்ஜுனன் தன வில்லால் சுழலும் மீன் உருவத்தை அடிக்க, மாலை போட திரவுபதி விரைந்து வரும் காட்சிகள் பார்த்து ரசிக்க வேண்டியவை. பசராலு மாண்ட்யா மாவட்டத்தில் இருக்கிறது

xxxx

46.மேலுகோட்டை  செலுவ நாராயணர் கோவில்

Melukote  Cheluva Narayana Temple

மாண்டயாவிலிருந்து 30 கி.மீ . தொலைவிலுள்ள செலுவ நாராயணர் கோவிலில்  நடக்கும் வைரமுடி உற்சவம் மிகவும் புகழ் படைத்தது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமானுஜர் 12 ஆண்டுகள் வசித்த ஊர் இது..

Sri Cheluvanarayana Swamy Temple, Pandavapura, Taluk, Melukote, Karnataka 571431     

மைசூரிலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள இந்த ஊருக்கு திருநாராயணபுரம் என்ற பெயரும் உண்டு .

உற்சவ மூர்த்தி விக்ரகம் செல்வப்பிள்ளை. இதற்கு ராமப்ரியா என்ற பெயரும் உண்டு . ராமரால் கிருஷ்ணராலும் வணங்கப்பட்ட விக்ரகம் என்பது ஐதீகம் .

காவிரி நதியையும் யதுகிரியையும் நோக்கி அமைந்த கோவில்.

டில்லியிலுள்ள முஸ்லீம் மன்னர் முகமது ஷாவிடம் பறிபோன விக்ரகத்தை ராமானுஜர் மீட்டு வந்தார். விக்கிரகத்தின் மீது அன்பு பூண்ட அவரது மகள் கோவிலுக்கு வந்தபோது இறந்ததாகவும் ஆகையால் அவரும் இங்கு வணங்கப்படுவதாகவும் சொல்லுவர். பீபி நாச்சியார் என்ற அந்த முஸ்லீம் பெண்ணின் உருவமும் கோவிலில் உளது.

கோவிலின் கோபுரம் மிகவும் அழகானது. ஆழ்வார்கள், ராமானுஜர் யதுகிரியம்மா சந்நிதிகள், சிலைகளும் இருக்கின்றன. தங்க கருட வாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா வரும் நாள் மிகவும் பக்தர் கூட்டத்தைக் கொண்டுவருகிற்து .மாலையில் துவங்கும் விழா இரவு முழுதும் நீடிக்கும்

வைர முடி விழா  

வீதி உலா வருகையில் பெருமாள் அணிவது வைர முடி. ஏனைய காலங்களில் அவர் அணிவது ராஜ முடி. அதிலும் ரத்தினைக் கற்கள் இருக்கும்.

வைரமுடி பற்றி சுவையான கதைகளும் பு ழ க்கத்தில் உள்ளன. பெருமாள் உறங்கும்போது அது திருடு போனதாகவும் கருடன் அதை மீட்டு வருகையில் அதன் தலையிலுள்ள நீலக் கல் தமிழ்நாட்டில் நாச்சியார் கோவிலில் விழுந்ததாகவும் பின்னர்  அது மணிமுத்தாறு மூலம் மீண்டும் மேலுகோட்டைக்கு வந்ததாகவும் கதை சொல்லுவார்கள் (நெல்லை ஜில்லா மணிமுத்தாறு வேறு).

Xxxx

பேய்களை விரட்டும் தடி !

47.Yoga Narasimha Temple, Melkote யோக நரசிம்ம சுவாமி கோவில்

Yoga Narasimha Temple, Melkote Main Road, District Mandya, Melukote, Karnataka 571431 

மைசூரிலிருந்தது 50 கிமீ தொலைவு.

1777 மீட்டர் உயர குன்றின் மீது மேலுகோட்டை யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது . யோக பட்டையுடன் நரசிம்மர் அமர்ந்த நிலை யில் இருக்கிறார் 365 படிகள் ஏறி  சென்றால் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.

இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் நரசிம்மரின் வலப்புறத்தில் ஒரு தடி / தண் டம்  வைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பேய் பிடித்தவர்களின் தலையில் அடித்தால் பேய்கள் ஒடி விடும்.

மேலுகோட்டையில் ராமானுஜர் தங்கியிருந்த காலத்தில் அவருக்கும் சமணர்களும் மோதல் ஏற்பட்டது . பிட்டிதேவன் என்னும் சமண சார்பு மன்னன் மகளை பிரம்மராக்ஷஸி பேய் பிடித்த பொழுது 1000 சமணர்களால் பேயை விரட்ட முடியவில்லை. இறுதியில் ராமானுஜர் அந்தப் பேயை விரட்டினார். மந்திரம் சொல்லி ஒரு குச்சியால் பெண்ணின் தலையில் தட்ட பேய் பறந்தோடிப்போனது ; பொறாமை கொண்ட சமணர்கள் மதுரையில் ஞான சம்பநதரை அனல்வாதம், புனல்வாதம் போட்டிகளுக்கு  அழைத்தது போலவே ராமாநுஜரையும் போட்டிக்கு அழைத்தனர். ஆயிரம் பேரும் 1000 கேள்விகள் கேட்போம். நீர் ஒரே பதிலில் திருப்திகரமான பதில் சொல்ல வேண்டும் என்று ராமானுஜருக்கு நிபந்தனை விதித்தனர். அவர் ஒரு திரை மறைவில் சென்று ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உருக்கொண்டு ஒரே பதிலில் விடை சொன்னார் ; சமணர்கள் திரையை விலக்கியபோது ஆயிரம் தலை கொண்ட ஆதி சேஷனைக் கண்டு மூர்ச்சித்து  விழுந்தனராம் .

To be continued………………………………..

TAGS- வைர முடி, மேலுகோட்டை, பேய் விரட்டும் , தடி , குச்சி, சமணர் மோதல், ஆதிசேஷன், மல்லிகார்ஜுனர் , ராமானுஜர்

நள சம்பு (Post No.12,294)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,294

Date uploaded in London –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நள சம்பு

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 2 

ச.நாகராஜன்

நள சம்பூ சம்ஸ்கிருதத்தில் அமைந்த அற்புதமான நூல்.

இதை திரிவிக்கிரம பட்டர் என்பவர் இயற்றியுள்ளார்.

சம்பு காவ்யம் என்றால் உரைநடையும் கவிதையும் இணைந்த ஒன்று.

நூலை உரைநடையாக அமைத்து அதில் முக்கியமான சாரத்தைக் கவிதையாகத் தந்தது பஞ்ச தந்திரக் கதை.

ஆனால் சம்பு இலக்கியமோ நூலைக் கவிதை வடிவில் தந்து சாரத்தை உரைநடையாகத் தந்து புது பாணியை வகுத்தது.

சம்பு என்ற இந்த ஒரு புதிய பாணியை சம்ஸ்க்ருத கவிதா இலக்கியத்தில் திரிவிக்கிரம பட்டர் ஆரம்பித்து வைத்தார்.

இவரது கவிதா சாமர்த்தியம் அபாரமானது. அழகிய ஒரு தனி நடையை இவர் கொண்டிருந்தார்.

 கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் அரசவையில் பிரதான கவியாக இவர் அங்கம் வகித்தார்.

கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் (Nausari Inscription of Rastrakuta Kind Indra III of 915 A.D.) காலத்திய நௌசாரி கல்வெட்டில் உள்ளதை எழுதியவர் இவரே.

பத்தாம் நூற்றாண்டில் பிரபலமான காவியமாக நள சம்பு திகழ்ந்தது.

இவரது காவியத்திலிருந்து அறிஞர்கள் அனைவரும் மேற்கோள் கவிதைகளைக் காட்டுவது வழக்கம்.

போஜன் தான் இயற்றிய சரஸ்வதி கண்டாபரணம் நூலில் இவரது கவிதையைக் காட்டியுள்ளான்.

திரிவிக்கிரம பட்டர் தனது நூலில் பாணரின் கவிதையை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்.

ஆகவே இவர் போஜன் மற்றும் பாணரின் காலத்தையொட்டி வாழ்ந்திருக்கக் கூடும்.

நள தமயந்தி சரித்திரம் அனைவரும் அறிந்த ஒன்று தான். என்றாலும் இவர் அதில் மோஹா, விவேகா, காமதேவன், தர்மா என்று பல புதிய கதாபாத்திரங்களைப் புகுத்தி கதையைச் சுவையுள்ளதாக ஆக்கி இருக்கிறார்.

மஹாபாரதத்தின் மூலத்தை இவர் சற்று விரிவுபடுத்தி அழகுற அமைத்துள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவரது காவியம் பாதியில் நின்று விட்டது.

ஏழு அத்தியாயங்களுடன் இது நிற்கக் காரணம் என்ன?

அதற்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது:

தேவாதித்யா என்ற பிராமணர் ஒருவர் அனைத்து சாஸ்திரங்களிலும் வல்லவர்.

அவர் ராஷ்டிரகூட மன்னரின் அவையில் இருந்தார். ஒரு சமயம் அவர் தனது நகரிலிருந்து வெளியே சென்றிருந்த சமயம் இன்னொரு அறிஞர் மன்னரின் அவைக்கு வந்து தன்னோடு போட்டி போட வல்லவர் யாரேனும் இருக்கிறார்களா என்று வினவினார்.

அப்படி இல்லையெனில் தனக்கு ஜயபத்ரம் எழுதித் தருமாறு கேட்டார்.

ஜெயபத்ரம் வெற்றி பெற்றதற்கான அத்தாட்சிப் பத்திரம்.

மன்னர் திகைத்தார். தேவாதித்யரை அழைக்க ஆளை அனுப்பினார். அவரோ ஊரில் இல்லை.

தேவாதித்யரின் மகனே திரிவிக்கிரம பட்டர். அவர் சோகத்தில் ஆழ்ந்தார். தன் தந்தையைப் போலத் தனக்கு அறிவில்லையே என்று வருந்தினார்.

சரஸ்வதியின் முன் அமர்ந்து தனக்கு அருள் புரிய வேண்டுமென்று உளமார வேண்டினார். அவர் முன் பிரத்யட்சமான சரஸ்வதி தேவி அவருக்கு அருள் புரிவதாகவும் ஆனால் அவர் தந்தை திரும்பி வரும் அளவே அவருக்குத் தனது அருள் இருக்கும் என்று கூறினாள்.

உடனே அவர் நள சம்பு காவியத்தை ஆரம்பித்தார்.

‘புண்ய ஸ்லோகோ நளோ ராஜ’ என்று ஆரம்பித்த அவர் மளமளவென்று கவிதையாகவும் உரைநடையாகவும் நூலை வழங்க ஆரம்பித்தார். மன்னரும் மகிழ்ந்து அவருக்கு நல்ல வெகுமதிகளை வழங்கினார்.

ஏழாவது அத்தியாயத்தை அவர் முடித்த போது அவர் தந்தை ஊருக்குத் திரும்பினார்.

அத்தோடு சரஸ்வதி கூறிய படி அவரது கவிதை புனையும் ஆற்றல் நிற்க நூலும் ஏழு அத்தியாயங்களுடன் நின்று விட்டது.

என்றாலும் இந்த ஏழு அத்தியாயங்களில் உள்ள பல பாடல்களைப் பின்னால் வந்தவர்கள் பல இடங்களில் எடுத்துக்காட்டாகக் காட்டியதிலிருந்தே இது எப்படிப்பட்ட அரிய நூல் என்பது விளங்குகிறது.

நள தமயந்தி சரித்திரத்திற்கு அணி சேர்க்கும் அழகிய நூல் நள சம்பு!

***

Sanskrit in Burma /Myanmar -Part 2 (Post No.12,293)

Nanpaya Temple in Burma

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,293

Date uploaded in London – –  18 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 1 was posted yesterday

A Sanskrit inscription from Hamawaa indicates the practice of Hinduism long before the fifth century CE.

A Pagan inscription dated 1442 CE mentions the gift of 255 books to the

Sangha . some of these bear Sanskrit titles.

About 1600 CE, Pundits well versed in Vedas and other branches were living in the country. Experts in Atharvan Veda were in Burmese court.

The Mon Inscriptions contain many Sanskrit words.

An inscription found at Myinpagan opens with a Sanskrit verse taken from Mukundamala of saint king Kulasekhara Alvar

xxx

City names in Sanskrit

Arimaddanapura for ancient Pagan ;

Bissunumyo  for Vishnumaya ;

Hmawza was Srikshetra /Sisit

The Burmese chronicle Mahayazavin contains the tradition that the city was founded by Vishnu with the help of Chandi, Garuda and Parameswara.

Apart from Sanskrit inscriptions, one can see hindu influence in the law books of Myanmar . some legal treatises written in pali betray their indebtedness to the Dharmasastras of Manu and Narada.

The Burmese versions of the Chanakya Niti sastra is very popular in Burma .

Hindu deities Brahma , Vishnu, Siva, Ganesa and Durga are found in Burmese temples

xxxx

Buddhist Pagoda in Yangon

Hindu temples in Burma

Nanpaya Temple (Burmese: နန်းဘုရားကျောင်း [náɰ̃ pʰəjá tɕáʊɰ̃]; lit. “palace temple”) is a Hindu temple located in Myinkaba (a village south of Bagan) in Burma. The temple is adjacent to the Manuha Temple and was built by captive Thaton Kingdom King Makuta.

It was built using mud mortar, stone, and brick, and was used as the residence of Manuha. The temple contains intricate carvings of Brahma, and also contains depictions of other Hindu gods. Also, because Manuha was a Mon, there are many figures and symbols of the Mon within the temple, including Hinthas.

Burma is the British colonial officials’ phonetic equivalent for the first half of Brahma Desha, the ancient name of the region. Brahma is part of Hindu trinity, a deity with four heads. The name Myanmar is the regional language transliteration of Brahma, where b and m are interchangeable.

Arakan (Rakhine) Yoma is a significant natural mountainous barrier between Burma and India, and the migration of Hinduism and Buddhism into Burma occurred slowly through Manipur and by South Asian seaborne traders. Hinduism greatly influenced the royal court of Burmese kings in pre-colonial times, as seen in the architecture of cities such as Bagan. Likewise, the Burmese language adopted many words from Sanskrit and Pali, many of which relate to religion.

During 19th and 20th century , over a million Hindu workers were brought in by British colonial government to serve in plantations and mines. The British also felt that surrounding the European residential centre with Indian immigrants provided a buffer and a degree of security from tribal theft and raids. According to 1931 census, 55% of Rangoon’s (Yangon) population were Indian migrants, mostly Hindus.

The Nathlaung Kyaung Temple (Sanskrit: नाथ्लौंग क्यौंग, Burmese: နတ်လှောင်ကျောင်း [naʔl̥àʊɰ̃ tɕáʊɰ̃]; literally “shrine confining the spirits”) is a Hindu temple dedicated to Vishnu. The temple is located inside the city walls of old Bagan.

Nathlaung Kyaung Temple is to the west of the Thatbyinnyu Temple, and it is the only remaining Hindu temple in Bagan. Nat-Hlaung Kyaung temple is one of the oldest temples in Bagan, and was built in the 11th century, during the reign of King Anawratha. Some historians believe the temple was built in the 10th century, during the reign of King Nyaung-u Sawrahan (also known as Taungthugyi). The temple was originally built for Hindu Burmese Indians of the 11th century, including merchants and Brahmins in the service of the king. Many structures of the original temple have disappeared, although the main hall remains. Originally, the temple contained statues of the incarnations of Vishnu; however, today, only seven remain. The brick temple was isolated and unrepaired for many years, damaged by earthquakes.

The temple is set on a square template with steep-rising upper terraces. It may have been built by Indian artisans brought into Bagan (Pagan), during the 10th century CE, to work on it and other temples.
xxxxx

Ananda Temple in Bagan (Pagan)

It is Buddhist temple built in 1105 CE.

The name Ananda of the temple is derived from the Venerable Ananda, Buddha’s first cousin, personal secretary, one of his many principal disciples and a devout attendant. It was once known as Ananta Temple, coming from the phrase ‘ananta pinya’ in Sanskrit, which translates as “endless wisdom”. However, the word ‘Ānanda’ in Pali, Sanskrit as well as other Indian languages mean “bliss”. It is a popular Buddhist and Hindu name.

All most all the Buddhist Pagodas have something in Sanskrit. Kings’ names are also in Sanskrit, some beyond recognition. Like Brahma became Myanmar, many names have changed.

–subham—

Tags- Burma, Brahmadesh, Myanmar, Hindu Temples, Sanskrit inscriptions

HINDUISM VEDIC GODS CROSSWORD 18 7 2023 (Post No.12,292)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,292

Date uploaded in London – –  18 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1 2 3 4   
       567
          
         ⇠8
9      10  
          
1112        
13       14    
 15        
16   ⇡17     

ACROSS

1.—Author of Mahabharata

8.—Vedic Goddess of Dawn in Rig Veda

9.—Goddess in Rig Veda; Still Gujaratis have this name

10.Pranava mantra

11.River name in Burma

13.Vedic God of Rain

15.Goddess Meenkashi Temple is here

16.Brother of Krishna, who spread agriculture in India

XXXXXXXX

DOWN

1.author of Ramayana

1. (Go down diagonally)-Saint who took Rama and Lakshmana to forest with a mission

2.Inexhaustible, indestructible; with the word ‘Patra’ it became famous in Mahabharata

3.End in Sanskrit; English word END is derived from it.

4.Vedic God of Death

5.Boundless, splendid, excellent (In Tamil awesome)

6.Vedic Gods Eight in number ; part of 33 Gods in Vedas

7.Vedic Goddess meaning Divine Favour; in Tamil and Hindi used as Permission

12.Dasaratha’s son who was sent to forest

14.Soul, Self in Sanskrit

17.Debt; Hindus are indebted to five groups and they pay respect every day in Pancha Yajna

ANSWERS

ACROSS

1.VYASA, 8.USHAS,9.ILA, 10.AUM, 11.IRAVATII, 13.VARUNA, 15.MADURAI, 16.BALARAMA

XXXXXXXX

DOWN

1.VALMIKI , 1. VISVAMITRA, 2.AKSHAYA, 3.ANTHA,, 4.YAMA, 5.APHARA, 6.VASUS, 7.ANUMATI, 12.RAMA, 14.ATMA, 17.RUNA 

V 1YA2SA3 Y4   
AIK N AA5V6A7
L S T MPAN
M HVHSAHSU⇠8
I 9LA AA A10UM
K Y  M RSA
I11R12AVATIA T
V13ARUNA   14 T I
 M 15ADURAIR 
B16ALAR⇡17AMA A

—SUBHAM—-

tags CW 1872023, Hinduism, Vedic gods

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,291

Date uploaded in London – –  18 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?

XXXX

2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன ?

XXXX

3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?

XXXXXX

4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?

XXXXX

5.வெங்கடேச சுப்ரபாதத்தை  இயற்றியவர் யார் ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

XXXXX

6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?

XXXX

7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?

XXXXXX

8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?

XXXX

9.பெருமாள் எப்படி  உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?

XXXX

10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும்  திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?

XXXXXXXXXXXX

விடைகள்

1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்

.XXXX

2.திருமலை-திருமலை கோவிலிலும்  அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள  வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர்  காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக்  கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

XXXX

3. குலசேகர ஆழ்வார் 

XXXXX

4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா

XXXX

5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால்  ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.

இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।
उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana

kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।
uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥

Valmiki Ramayna Translation, 1.23.2

O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.

The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.

XXXX

6.வடவேங்கடம் முதல் தென்குமரி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

X

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

X

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )

XXXX

7.ஆகாய கங்கா.

திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

XXXX

8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:

Vrushabhadri – விருஷபாத்ரி

Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)

Neeladri – நீலாத்ரி

Garudadri or Garudachalam – கருடாத்ரி

Seshadri or Seshachalam – சேஷாத்ரி

Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி

Venkatadri – வேங்கடாத்ரி

XXXX

9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை  அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்..

XXXX

10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

XXXX SUBHAM XXXXX

TAGS– திருமலை, வெங்கடாசலபதி, வியப்பான , விஷயங்கள், அதிசயங்கள், முருகனா குலசேகர ஆழ்வார், அருணகிரிநாதர், குபேரன், ஏழுமலைகள் , வேங்கடம், திருப்பதி,

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 6 (Post No.12,290)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,290

Date uploaded in London –  18 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 6 

ச.நாகராஜன்

பூகம்ப ஜனாதிபதி!

மெக்ஸிகோவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் கார்லோஸ் ஸலினஸ் டி கார்டாரி. (Carlos Salinas De Gortari)

இவர் மெக்ஸிகோவில் அவமானப்பட்டார்.  1995 மார்ச் மாதம் தனக்குத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட இடத்திற்குச் சென்று ஒதுங்குமறைவான ஒரு வாழ்க்கையை வாழலானார்.

பின்னர் 1999 ஜூன் மாதம் தனது நாட்டிற்குத் திரும்பினார். சிறிது காலம் தங்கி விட்டுத் திரும்பிச் சென்று விட்டார்.

அவர் தனது நாட்டை விட்டு வெளியேறிய மறு நாள் மெக்ஸிகோவை ஒரு பெரும் பூகம்பம் தாக்கியது. 17 பேரைக் கொன்ற 6.9 மாக்னிட்யூட் பூகம்பம் அது.

செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு நாள் விஜயமாகத் தனது நாட்டிற்கு அவர் வந்தார். 7.5 மாக்னிட்யூட் என்ற பெரிய அளவில் பூகம்பம் வட மெக்ஸிகோவைத் தாக்க 27 பேர் இறந்தனர்.

டிசம்பரில் மூன்றாவது முறையாக அவர் மெக்ஸிகோவிற்கு வந்த போது 5.3 மாக்னிட்யூட் அளவிலான பூகம்பம் அகாபல்கோ கடற்பகுதியைத் (Coast of Acapulco)  தாக்கியது. அங்கு தான் ஸலினஸ் தங்கி இருந்தார்.

அதிலிருந்து மெக்ஸிகோ மக்கள் அவர் மெக்ஸிகோவிற்கு வருவதாகத் தெரிந்தாலே அஞ்சி நடுநடுங்க ஆரம்பித்தனர்.

ஜோதிடம் பலிக்கவில்லை ஜோதிடருக்கே!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபல ஜோதிடப் பெண்மணி சிபில் மோர்ஸ் (Sybil Morse).

ஒரு முறை அவர் ஒரு பந்தயத்தில் 70 பவுண்டை தான் இழக்கப் போவதாக ஒரு பந்தயம் கட்டினார். பந்தயத்திற்கு அவர் செலுத்திய தொகை 350 பவுண்ட். ஆனால் அவர் 70 பவுண்டை இழக்கவில்லை. தான் சொன்ன ஜோதிடம் பொய்யாகப் போக அவர் தனது பந்தயத் தொகையை இழந்தார்!

சர்ச்சில் கொடுத்த பணம்!

 பிரிட்டிஷ் பிரதம மந்திரியாகப் பதவி வகித்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை வெஸ்ட் எண்ட் பகுதியில் ஒரு டாக்ஸியைப் பார்த்து பிபிசி ஒலிபரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு கூறினார்.

 அந்த டிரைவருக்கு சர்ச்சில் யார் என்று தெரியாது.

“ஐயா! மன்னிக்க வேண்டும். அவ்வளவு தூரம் என்னால் இப்போது வர முடியாது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதை நான் கேட்க வேண்டும்” என்றார்.

சர்ச்சிலுக்கு ஒரே சந்தோஷம்.

டாக்ஸி டிரைவர் தன் பேச்சைக் கேட்கப் போவதாகச் சொல்லி வருமானம் வரும் சவாரியைக் கூட மறுத்து விட்டாரே!

உடனே தன் பையிலிருந்து ஒரு பவுண்ட் நோட்டை எடுத்து அவர் டிரைவரிடம் கொடுத்தார்.

டாக்ஸி டிரைவர் இப்போது  முகம் ஒளிரக் கூறினார்: “வாங்க, சார், வண்டியிலே ஏறுங்க! சர்ச்சில் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன? நீங்க வாங்க, போவோம்” என்றார்.

ஆபரேஷன் ஃபைனல்!

ஆபரேஷனை முடித்த டாக்டர் தனது நோயாளியிடம் மெதுவாகக் கூறினார் :”உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நண்பரே! இன்னும் இரண்டு நாட்கள் தான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள்.”

நோயாளி எதுவும் பேசவில்லை.

டாக்டர் தொடர்ந்தார் : “இப்போது வரிசையாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நீங்கள் செய்ய ஆரம்பியுங்கள்.

முதலில் நீங்கள் யாரையாவது பார்க்க வேண்டுமா?”

நோயாளி, “ஆமாம்” என்றார்.

“யாரை?” என்று கேட்டார் டாக்டர்.

“இன்னொரு டாக்டரை” என்றார் நோயாளி!

***

xxxx subham xxxx

Sanskrit in Burma /Myanmar -Part 1 (Post No.12,289)

Golden Pagoda in Yangon, Burma

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,289

Date uploaded in London – –  17 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

About thirty Sanskrit inscriptions are discovered so far in Myanmar/Burma. Three new inscriptions are found in Arkan area of  Burma. They are kept in Mrauk U Archaeological museum and the copies are in Paris Museum. I have compiled only details about some Sanskrit inscriptions . Full texts are available in the websites . Those inscriptions use pure Sanskrit words to describe matters of Buddhism.

Burma is Brahma desh in our scriptures.

Here are my compilations.

xxxx

Mrauk U

Ancient capital of the powerful Mrauk U empire

Mrauk U is a little known archaeological site in Western Burma. In the beautiful hilly landscape of the Rakhine state hundreds of ancient temples and pagodas, many of which are well preserved remain of the powerful empire that once flourished here.

The site used to be the capital of the Mrauk U Kingdom, a powerful empire that existed from 1430 until 1785.

A new Mrauk U museum is located near the palace site. It displays some old artifacts of Vesali. Launggret and Mrauk U periods. The bronze Buddha icons of Rakhine are equisetic in design. Various inscribed stone inscriptions in Sanskrit. Rakhine and Arabic are also displayed Votive tablets. Krishna Vishnu. Bodhisattvas. dvarapala. stone htis (stone umbrella of pagodas). lintels coins. musical instruments. ceramic-wares are also on display.

Mrauk U is an ancient city in the Rakhine State. which is situated in the western part of the Union of Myanmar. Mrauk-U is also a place where cultural heritages have flourished for many years. The Rakhine State is close to the Bay of Bengal and the coastal region is full of rocks and reefs and may be that is why so many stone-sculptures can be seen as ancient cultural crafts in the Rakhine region.

Moreover. the pieces of a stone Vishnu Image of 15th century in Mrauk U period can also be seen at the Museum. The Wetha Li coins from 4th to 8th century. the votive tablets and the motifs of stone-sculptures from Mrauk U period can also be seen at the museum. You can also find stone-sculptures such as God of Earth. Godness. Wathoundarei and Wathoundara at the museum. There is a replica of Ananda Sandra stone inscription carved in Danyawaddy alphabets from the 8th century. The inscription tells us about Watha Li King Ananda Sandra and his ancestors with 65 verses.

Moreover. the stone inscription of Purain Ah Song-Taung (AD-1430). Wara-Dhamma-Yar-Zar stone inscription (AD-1618) and An-Taw-Thein stone inscription (AD-1596) are also there to be studied

Xxxxx

Three New Sanskrit Inscriptions

Three More Sanskrit

Inscriptions of Arakan:New Perspectives on Its Name,Dynastic History, and

Buddhist Culture in the First Millennium

By Arlo Griffi ths

École française d’Extrême-Orient

The total number of Sanskrit inscriptions so far recorded for the fi rst millennium is about two dozen; among these less than a dozen constitute substantial

(non-formulaic) texts. Scholarship so far has assumed the

bulk of this small corpus to date to the sixth through eighth

centuries, with outliers as early as the third century and as

late as the eleventh century CE

I am so far aware of just four inscriptions wholly or partly composed

in Sanskrit found in other parts of Burma:

[1] the bilingual Sanskrit-Pyu

inscription engraved on the base of a stone Buddha sculpture at the

Śrīkṣetra Museum (Luce 1985/I: p. 65 with n. 22, p. 132; II: plates 16–7);

xxxx

[2] the fragments of a monolingual Sanskrit inscription said to have been

found at Śrīkṣetra but of which no trace is to be found there nowadays (see

Sircar 1976: 210–7, Gutman 2001: 109 n. 1; another fragment whose discovery was mentioned in the report of the Archaeological Survey of Burmafor 1960, p. 22 with fi g. 13, may well belong to this same inscription);

xxxx

[3] a ruined inscription held in a small shed near the Tharaba gate at Pagan

brought to my att ention by Tilman Frasch, who kindly shared photos of

an estampage revealing an almost entirely illegible inscription in a form of

script called Gauḍī that was current in eleventh-/twelfth-century Bengal;

xxxx

[4] the recently discovered Saw Lu inscription in Myitt ha, which at the top

of the side also bearing Pali and Pyu texts reveals the extremely damaged

remains of a Sanskrit one as well, again in such a Northeast Indian script.

xxxxxx

Details of Three New Sanskrit Inscriptions

Stone of Odein (A. 1)

Currently held in the Mrauk U Museum, Rakhine State,

under nr. 48, this stone was found by Kyaw Htun Aung on

December 2, 1986 in the water tank of the monastery of

Odein <auiḥ thinḥ> village (Rakhine State, Sitt we Division,

Mrauk U Township), about a half mile from the southern head

of the Lan Mwee Taung <laṅḥ mvī toṅ> hills, on the bank of

the Rann Chaung <ramḥ khyoṅḥ> river.

xxxxx

Stela of Prine Cha Hill (A. 2)

Currently held at the State Archaeological Museum, Mrauk

U, Rakhine State, under nr. 39, this stone was found on

December 1, 1980 by Kyaw Htun Aung beside a hill outside

of Prine Cha <pruiṅḥ khya> village (Rakhine State, Sitt we

Division, Mrauk U Township), on the bank of the Rann

Khyaung <ramḥ khyoṅ>. This village lies opposite the village

Odein, where inscription A. 1 was found

xxxxx

Stone Slab from Vesālī (A. 60)

Currently held in a cabinet in the bronze room at the State

Archaeological Museum, Mrauk U, Rakhine State, under nr.

393, this stone was found before 1969 “near the south-west

Veśālī moat” (Gutman 1976: 99). It represents only a fragment

(23 × 18 cm) of the original, which would have been taller, an

indeterminate number of lines having been lost.

At its library in Paris, the EFEO holds for this inscription

the estampage numbered n. 2172.

The above three are newly discovered ones

Xxxxx

Sanskrit inscription found in Śrīkṣetra several

decades ago and partly deciphered by D.C. Sircar.53 It refers

repeatedly to a “lord of Kalaśapura” (kalaśapureśvara) called

Śrī Parameśvara, and—judging from palaeography—is

roughly contemporary with our inscription. The second gives

some reason to favor the hypothesis that Kāmaraṅgeśvara in

the fi rst denoted the “lord of Kāmaraṅga,” i.e., that Kāmaraṅga

was a place name. (The author identified this place with the help of latest inscriptions).

xxx

• Burma is an abbreviation of the Sanskrit name Brahmadesh, or the region of Brahma.

• The names of it’s rivers are Sanskrit names, such as Irrawati, Brahmaputra and Chindwin (from Chintanvan–a region of forests for meditative seclusion).

• It’s cities also have Sanskrit names, such as Rangoon, Prome, Mandalay, Meiktila (Mithila), and the ancient Pragan (city of exquisite temples) all remind one of Burma’s Vedic past.

• It’s head of state is also known as Adipadi, which is the Sanskrit Adhipati, referring to the chief executive.

• The kings also bore Sanskrit names. Plus, the people enjoy the annual Indian festival of Holi, and throwing colored water and dyes on one and all.

• Hindu temples which are left over in Burma have influence from South Indians. Nanpaya temple is one of them.

Xxxx

The Sawlumin inscription (Burmese: စောလူးမင်း ကျောက်စာ [sɔ́lúmɪ́ɴ tɕaʊʔ sà]) is one of the oldest surviving stone inscriptions in Myanmar. The slabs were mainly inscribed in Burmese, Pyu, Mon and Pali, and a few lines in Sanskrit. According to an early analysis, the stele was founded in 1079 by King Saw Lu of Pagan (Bagan).

Discovery

Three broken slabs of the inscription were discovered in Myittha Township, Mandalay Region on 17 November 2013 and a fourth piece was found on 27 November 2013. A fifth piece is still missing. The found four pieces were rejoined and currently stands in Petaw monastery. The slab size is 1.75 metres (5.7 ft) in height, and 1.06 metres (3.5 ft) in breadth.

It belongs to 1053 CE.

What has been translated so far describes the donation of a monastery, Maha Anuruda Deva Rama, by King Saw Lu and his wife Manikanda

(More details are in Wikipedia)

To be continued………………….

 Tags- Burma, Sanskrit, Inscriptions, Myanmar

அப்பர் பற்றிய அரிய தகவல்கள்– சொ. சொ. மீ. உரை (Post No.12,288)

LONDON TEMPLE PRIEST IS WELOMING PROF. S S M

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,288

Date uploaded in London – –  17 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பொற்கிழிக் கவிஞர் , மதுரை பேராசிரியர் சொ சொ மீ. சுந்தரம் அவர்கள் லண்டனில்  உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவிலில் 18-7-23 முடிய தொடர் சொற்  பொழிவு  ஆற்றி வருகிறார் . ஒவ்வொரு நாளு ம் ஏதேனும் புதிய செய்திகள் கிடைக்கின்றன

இன்று 17-7-23 அன்று காலையில் நடத்திய உரையில் கேட்ட செய்திகள் :

குளிச்சி எழுந்த நாயனார்

அப்பருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் – மருள் நீக்கியார்

சமண மதத்தலைவர் ஆனவுடன் கிடைத்த பெயர் – தருமசேனர்

சம்பந்தர் அவரை அழைத்த பெயர் – அப்பர்

சிவன் தந்த பெயர் — நாவுக்கரசர்; சம்ஸ்க்ருதத்தில் வாகீசர் என்பர்

அவர் முதல் முதலில் தேவாரம் பாடிய அதிகையில் உள்ள கல்வெட்டில் அவரை குளிச்சி எழுந்த நாயனார் என்றே குறிப்பிட்டுள்ளனர்

Xxxx

அப்பர் ஏன் சமணராக மாறினார் ?

தந்தையை இழந்து, தாயை இழந்து. சிவபக்தையான திலகவதியால் அன்போடு வளர்க்கப்பட்ட அப்பர் ஏன் சமணராக மாறினார் என்று பலரும் எண்ணுவோம்.

சேக்கிழார் சொல்லும் காரணம் — விதி.

ஆராய்ச்சி செய்வோர் சொல்லும் காரணம் — அவரைத் திருமணம் செய்துகொள்ள, சகோதரி திலகவதியார் வற்புறுத்திவந்தார் . அது அவருக்குப் பிடிக்கவில்லை. காரணம் குடும்பத்தில் தாய், தந்தை, மற்றும் சகோதரி திலகவாதியாருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை கலிப்பகையார் மரணம் அடைந்தனர் . சமணத்துக்குத் தாவினால் கல்யாணத்தைத் தவிர்க்கலாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் .

Xxx

சொ சொ மீ . சொன்ன கதை

பலரும் தன்னை முன்வைத்து பெருமை பாராட்டுவர். பல அரசியல் வாதிகள் இப்படிச் செய்கிறார்கள் .

ஒரு அரசியல்வாதி மேடையில் தோன்றினார். பொன்னாடைக்கு மேல் பொன்னாடை போர்த்தி அவரைப் பலரும் கெளரவித்தனர் . இரவில் அவர் வீட்டுக்கு வந்து பொன்னாடைகளை எண்ணிப் பார்த்தார் 96 பொன்னாடைகள்தான் இருந்தன.

ஏய் என்னடா, 4 பொன்னாடை குறைகிறது  ? என்று விரட்டினார் தொண்டர்களை.

புரிகிறதா?

அவரே ‘செட்டப்’ செய்து 100 பொன்னாடைகளை போர்த்த ஏற்பாடு செய்து வாங்கிக் கொடுத்திருந்தார். அதில் 4 பொன்னைடைகளை தொண்டர்களே ஆட்டை’ போட்டுவிட்டனர் (திருடிக்கொண்டனர்).!!

Xxx

ஒரே மாமரத்தில் உள்ள கனிகள் ஒரே இனிப்புச் சுவையுடன் இருக்கின்றன. ஒரே அம்மா, அப்பாவுக்குப் பிறந்த 5 குழந்தைகள் ஒரே மாதிரி இல்லையே ! ஏன்?

 அதுதான் பூர்வ ஜென்ம வினைப் பயன் .

அவரவர் வினைப்படி வாழ்க்கை அமைகிறது .

xxx

அப்பர் பார்த்தது பத்து ஜோடி !

அப்பர் கயிலை மலையில் சிவனைத் தரிசிக்கச் சென்றபோது, வயதும் உடலும் உதவாததால் ஒரு ஏரியில் மூழ்கி  சிவனைக் காணச் சொன்னபோது, அவர் இமயமலை மானசரோவர் ஏரியில் மூழ்கி, திருவையாற்றில் எழுந்து கயிலைக் காட்சியைக் கண்ட கதையைப் பலரும் கேட்டிருப்பீர்கள். அது நடந்தது ஆடி அமாவாசை அன்றுதான். இப்போதும் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று திருவையாற்றில் கயிலை தரிசன விழா நடக்கிறது இன்று ஆடி அமாவாசையன்று அப்பர் என்ற தலைப்பு அமைந்தது பொருத்தமே. (இந்த ஆண்டு ஆடி மாதமே இரண்டு அமாவாசைகள் வருவதால் எந்த அமாவாசையன்று அது கொண்டாடப்படுகிறதோ தெரியவில்லை) .

கயிலைக் காட்சி கதை பற்றிச் செல்லுகையில் எல்லோரும்

மாதர் பிறைக்  கண்ணியானை பாடலைச் சொல்லி களிறு (ஆண் யானை ), பிடி (பெண் யானை) ஆகிய இரண்டையும் கண்டதைச் சொல்லி நிறுத்தி விடுவர் . ஆனால் அப்பர் பாடிய பதிகத்தில் பத்து ஜோடிகளைக் கண்டதாகப் பாடுகிறார் ; ஆண் கிளி ,பெண்  கிளி ,ஆண் மயில்  ,பெண் மயில் , பசு, காளை என்று பாடிக்கொண்டே போகிறார்.

கருத்தொருமித்த கணவன் மனைவி வாழ்க்கையே கயிலை போலத்தான்

xxxxxx

கணவன் என்று பெயர் ஏன் வந்தது ?

பெண் என்பவள் கண். பெண்ணே, கண்ணே, என்றுதானே கொஞ்சுகிறார்கள்

அந்தக் கண்ணுக்குள் எப்போதும் அவன் இருப்பதால் கண் +அவன் =  கணவன் என்றாயிற்று    

xxxxx

ராவணனுக்கு ஏன் பெயர் வந்தது?

ராவணன் என்றால் அழுகை; அழுபவன் .

கயிலையைத் தூக்கப்போய் கை சிக்கியதால் அழுதான் . பின்னர் சிவன் கருணையால் மீண்டான் . அதுவும் அங்கு தோன்றிய முனிவர் வீணா கானம் செய் என்றார். வீணை, அங்கே இல்லாததால் தன்  இரண்டு தலைகளை வெட்டி தனது நரம்பையே வீணை நரம்பாக்கி சாம கானம் இசைத்தான் .

இருவருக்குத்தான் ஈஸ்வரன் பெயர்

ஒருவர் பரமேஸ்வரன்; இன்னும் ஒருவன் ராவணேஸ்வரன்  (சனீஸ்வரன் என்பது தவறு ; அது சனைச் +சரன் = மெதுவாக நகரும் கிரகம்).

இராவணன் என்றால் அழுகை என்பதை கம்பனே சொல்கிறான்.

கும்ப கர்ணன் இறந்த போது இராவணன் அழுகிறான். அவன் பெயருக்குப் பொருத்தமான செய்கையை அவன் செய்தான் என்று கம்பன் , ராமாயணத்தில் பாடுகிறான்.

xxxx

அப்பர் சாதனைகள்

தேவார மூவரில் அதிகம் பாடியவர் அப்பர். அதிக காலம் வந்தவரும் அப்பர்.

அவர் பாடிய பாடலை மட்டுமே தேவாரம் என்று அழைத்தனர். இப்போது மூவர் பாடிய தேவாரம் என்று சொல்லுவது பிழை.

xxx

அவன் இப்போது உதவான்

பெரியபுராணத்தை அனைவரும்படிக்கவேண்டும் 42286 பாடல்கள்தான் .

அப்பூதி அடிகளார் என்ற அந்தணர் தண்ணீர் பந்தல் முதல் மகன்கள் வரை எல்லோருக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயர் வைத்திருந்தார். அப்பூதி அடிகளாரின் வீட்டில் அப்பர் சாப்பிட உட்கார்ந்தபோது மூத்த மகனான பெரிய /மூத்த  திரு நாவுக்கரசை கூப்பிடுங்கள் என்கிறார். அவனோ , அதற்கு சற்று முன்னர் தோட்டத்தில் வாழை  இலை பறிக்கச் சென்றபோது பாம்பு கடித்து இறந்துவிட்டான் . அவன் சடலத்தை பாயில் சுருட்டி, வைத்து விட்டு உணவு பரிமாற வருகின்றனர் அடிகளும் அவர்தம் மனைவியாரும்  .

அப்போது அப்பருக்கு அப்பூதி அடிகள் சொன்னது:

இப்போது அவன் உதவான் — இது சேக்கிழார் வாக்கு. ஒருவன் இறந்த அமங்கலச் சொல்லை விருந்தினர் சாப்பிடும்போது சொல்லக்கூடாது ஆகையால் அப்பூதி மகன் இறந்த செய்தியை அழகாக ‘இப்போது அவன் உதவான்’ என்கிறார் .

பின்னர் ஒன்று கொலாம் முதல் …. என்று துவங்கும் விடம் தீர்த்த பதிகத்தை எண் பத்து வரை பாடி , பாம்பின் விஷத்தை நீக்கி, இறந்த மகனை உயிர்ப்பிக்கிறார் அப்பர்.

 –சுபம்—-

TAGS– சொ சொ மீ. சுந்தரம், அப்பூதி அடிகள், சேக்கிழார் ,திருநாவுக்கரசர்