நீதி த்விசஷ்டிகா (Post No.12,307)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,307

Date uploaded in London –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நீதி த்விசஷ்டிகா

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 3

ச.நாகராஜன்

‘நீதி த்விசஷ்டிகா’ சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள அழகிய நீதி நூல்.

இதை இயற்றியவர் சுந்தரபாண்டியர்.

சுந்தரபாண்டியன் என்ற பெயர் பாண்டிய மன்னர்களுக்கு வழக்கமாக சூட்டப்பட்ட ஒரு பெயர். ஆகவே இந்த நூலை இயற்றிய சுந்தரபாண்டியரது காலத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

என்றாலும் கூட கி.பி.600 இல் ஜனாஸ்ரயா என்ற நூலில் இதிலிருந்து மேற்கோள்கள் காண்பிக்கப்பட்டிருப்பதால் இது ஆயிரத்திநானூறு வருடங்களுக்கு முற்பட்ட நூல் என்று உறுதிபடச் சொல்லலாம்.

கி.பி.750 ஆம் ஆண்டைச் சேர்ந்த சின்னமனூர் செப்பேடு ஒன்று சுந்தரபாண்டியன் சகல சாஸ்திர விற்பன்னன் என்று கூறுகிறது. அரிகேசரி வர்மனுக்கு மூத்தவர் இவர் என்பதால் இவர் நிச்சயமாக கி.பி, 600 அல்லது கி.பி.650 இல் வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.

ஆதிசங்கரரும் தனது பிரம்மசூத்ரத்தில் சமன்வயாதிகரணத்தில் சுந்தர பாண்டியரது மூன்று செய்யுள்களை மேற்கோளாகக் காட்டுகிறார்.

இப்படி இன்னும் ஏராளமான நூல்களில் சுந்தரபாண்டியரது அழகிய நீதி ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

இப்போது நமக்குக் கிடைத்துள்ள ஓலைச் சுவடிகளில் இது 120 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.

என்றாலும் கூட மூல நூலில் 100 ஸ்லோகங்கள் மட்டுமே இருந்திருக்கக்கூடும் என்றும் 20 அதிகப்படி ஸ்லோகங்கள் காலப்போக்கில் ஏற்பட்ட இடைச்செருகல்களாக இருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் ஆர்யா சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகும்.

மனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் பல்வேறு நிலைகளுக்கும் சுந்தரபாண்டியர் வாழ்வாங்கு வாழும் அற நெறிகளைக் கூறுகிறார்.

பேச்சில் அடக்கம், நளினம், சத்யம், இனிமை இருக்க வேண்டும் என்பது அவரது அறிவுரை.

நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது என்றும் நல்ல நட்பை யாராலும் சரியாக விவரிக்க முடியாது என்றும் கூறும் இவர் நட்பைப் பற்றி மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

வாழ்க்கைக்கு ஒரு பெரும் இடையூறு ஏழ்மை என்று கூறும் இவர் செல்வத்தின் பண்பைப் பற்றியும் அழகுறக் கூறுகிறார். ஆனால் செல்வத்தை விட ஞானம் மிகச் சிறந்தது என்று விளக்குகிறார் சுந்தரபாண்டியர்.

தானம் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற அறவுரையை நம் முன் வைக்கும் இவர் பல்வேறு பொருள்களைப் பற்றி மனிதனுக்குப் பயன்படும் விதத்தில் எடுத்துக் கூறுகிறார்.

இவரது நீதிகளைப் படிக்கும் போது தமிழில் உள்ள திருக்குறள் ஞாபகத்திற்கு வரும். தமிழ் நூலான மூதுரையில் உள்ள பல நீதிகளை இவர் சொல்கிறார்.

அதே போல கவிஞர்களான காளிதாஸர், பர்த்ருஹரி ஆகியோரின் பல செய்யுள்களையும் இவரது ஸ்லோகங்களுடன் ஒப்பு நோக்கி மகிழ முடியும்.

ஆரோக்கியம், வித்வதா, நல்ல நண்பர்களின் சேர்க்கை, நல்ல குலத்தில் பிறப்பு, யாரையும் நம்பி வாழாமல் ஸ்வாதீன வாழ்க்கை ஆகியவையே ஒரு மனிதனுக்கான உண்மையான செல்வம். அவனிடத்தில் லோகாயத ரீதியிலான செல்வம் இல்லாவிட்டாலும் இவையே உண்மையான செல்வங்கள் என்று உறுதிபட இவர் அறிவிக்கிறார். (‘ஆரோக்யம், வித்வத்தா சஜ்ஜனமைத்ரீ மஹாகுலே ஜன்ம’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)

யாரெல்லாம் மற்றவர்களைப் பற்றி தீங்கு பேசாமல் ஊமையாக இருக்கிறார்களோ,

யாரெல்லாம் மற்றவர்களுடைய மனைவிமாரைப் பார்ப்பதில் குருடர்களாக இருக்கிறார்களோ,

யாரெல்லாம் மற்றவர்களுடைய இரகசியங்களைக் கேட்பதில் செவிடர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தெய்வங்களுக்குச் சமமானவர்கள் என்கிறார் இவர். (பரபரிவாதே மூகா: பரதாரநிரீக்ஷணேஷு ஜாத்யந்தா:’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)

இப்படி 120 ஸ்லோகங்கள் கூறும் அறிவுரைகள் அறவுரைகளே.

டாக்டர் S.ஜெயஶ்ரீ இந்த நூலைத் திறம்பட ஆராய்ந்து நீதி த்விஷ்டிகா என்ற நூலை ஆங்கிலத்தில் படைத்துள்ளார். 1984ஆம் ஆண்டு அடையார் லைப்ரரி ரிஸர்ச் சென்டர் இதை வெளியிட்டுள்ளது.

சுந்தரபாண்டியரின் நீதி த்விஷ்டிகா காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த காமகோடி ப்ரதீபம் மாத இதழிலும் தொடராக தமிழில் அர்த்தத்துடன் வெளியிடப்பட்டது.

இதை அன்பர்கள் அனைவரும் ஒரு முறையேனும் படித்தால் அது வாழ்க்கையை வளம் படச் செய்யும் சிறந்த வழியை மேற்கொண்டதாக ஆகும்!

***

Brahma in Burma (Post No.12,306)

Brahma in  Nanapaya Temple, Burma

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,306

Date uploaded in London – –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

The name Burma is the corrupted form of Brahmadesa; scholars agree that Burma is changed in Burmese language to Myanmar. M=B or B=M change is universal; Hindus know that Mumbai was changed into Bombay by the British. In Tamil also we see M=B changes in Bandar= Mandi; Panini himself has given Madra= Badra desa example 2700 years ago.

People used to say that Brahma lied to Shiva and so Shiva cursed that there wont be any temple for him. But we see Brahma temples in many places including Pushkar in Rajasthan. In Tiruppatur near Trichy is Brahmapureeswarar, where a huge Brahma statue is worshipped by thousands of Hindus. More crowd is seen in Brahma’s shrine than  main deity Shiva. Almost all Shiva temples in Tamil Nadu have a shrine or statue for Brahma.

In the Guru sloka/hymn also first comes Gurur Brahma; this is to show that he is not relegated to back position. But his temples are very few.

Xxxx

Brahma in Prambhanan, Indonesia

Six Brahmas in Burma

Brahma is shown with Shiva and Vishnu in the Ananta Sayana relief in Thaton and Hmawza.

Two Brahma statues are in Rangoon (now Yangoon) museum and Pagan (now Bagan) museum.

Another Brahma figure can be seen in the pillars of Manuha Temple in Pagan.

Broken images of Brahma were found in two more places.

The Rangoon Museum Brahma is carved in greyish soapstone. He is in Padmasana with three heads and folded hands (Fourth head is behind). He is with matted lock of hair beautifully dressed in the Jata mukuta style crowned over with a floral ornament.

Though Pagan museum Brahma is similar to this, there is a gap of two centuries between them. This one is a product of Indian artist similar to late Gupta period, not later than 10th century CE.

Xxxx

Nanpaya Temple in Pagan


Brahma in Cleveland Museum, U S A

At Burma’s Nan-hpaya Temple in Pagan, among the finest carvings in the entire temple are a set of four bas-relief panels of Lord Brahma. They appear on the inner sanctum walls, facing the presiding deity there. Carved from single stone blocks rather than a slab, the blocks are interlocked to form the panel, reminiscent of Java or Cambodian sculptures

This temple was the residential house of the defeated king Manuha. He is a Talaing. IT IS THE CORRUPTED FORM OF TELUGU’S TELENGANA.

Kanchi Paramacharya (1894-1994) has already shown that Dhillon in North India is a corruption of ‘Tri Linga’ Desa. Tri Linga Desa is changed to Telengana.

They were originally from Telengna area of Andhra Pradesh. King Anawrahta (corrupted form of Anirudhdha) defeated him and imprisoned him in Pagan.

Brahma is seated on lotus flower in Lilaasana posture; he is holding two lotus flowers; hair is arranged in Jatamukuta fashion and one can see his carefully intertwined plaits. Sacred thread is hanging from his left shoulder. Four images are similar. Brahma holding lotus flowers in both hands is very rare.

MY OLD ARTICLES

29 Names of Brahma!

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2014/11/20 › 29-names-o…

20 Nov 2014 — 1.Brahma = Big, Supreme, creator; To breathe is also another meaning. · 2.Atmabhu = self existent · 3.Surajyeshta = elder of the Devas/Deities 

xxxx

Tamil Hindu Encyclopaedia 31–Brahma / பிரம்மா (Post No.11,489)

Post No. 11,489

Date uploaded in London – 30 November 2022          

xxxxx

Why did Hindu Gods lose their Heads? (Post No.4420)

Date: 21 NOVEMBER 2017

xxxxx

பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.

xxxxx

பிரம்மாவின் 29 பெயர்கள்!

Research paper written by London Swaminathan
Research article No.1424; Dated 21 November 2014.

—– subham—-

Tags- Brahma in Burma, Myanmar, Nanpaya temple, Telangana, Talaing

ஒன்பது தேச தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2172023(Post No.12,305)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,305

Date uploaded in London – –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒன்பது தேசங்கள்,  பழைய பெயர்களுடன்,  இக்கட்டத்தில் உள்ளன. அவைகளைக் கண்டுபிடியுங்கள். இதில் தீட்டப்பட்ட வண்ணங்கள் ஓரளவுக்கு உதவும்.

.

ம1தேம்கா 2
லாபி3மா4லாத்வீம்
க்ஷ் 5யாபோ
காம்ல6ய 7ம்
ம்ம8ஹாலிங்ம்

விடைகள்

மலேயா, பர்மா, தாய்லாந்து, ஜாவா, பிலிப்பைன்ஸ், மாலத் தீவுகள் லாவோஸ்,கம்போடியா , ஆமலகங்கள் அவற்றின் வேறு பெயர்கள் :–

1.மலய தேசம் Malaysia , 3.பிரம்ம தேசம் Burma= Myanmar , 2.காம்போஜம் Cambodia , 6. லவ Laos ,5. ஷ்யாம Siam= Thailand ,4. மாலா த்வீப Maldives= Mala Dwipa, 7.யவ Java/Indonesia, 8.மஹாலிங்கம் Philipines ,1. மலாக்கா Malacca= Amalakka= Indian Gooseberry Tree country தமிழில் நெல்லிக்காய் மரம் = ஆ/மலக

 —subham—

tags– tamil, CW, 2172023

QUIZ  ரிஷிகள் பத்து QUIZ (Post No.12,304)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,304

Date uploaded in London – –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ No.47

1.எந்த ரிஷியிடம் நிறைய நகைகள் கொண்டு வந்தால்தான் பக்கத்தில் வரலாம் என்று லோபாமுத்ரா உத்தரவு போட்டாள் ?

xxxx

2.எந்த ரிஷிக்கு  கால்களில் கண்கள் இருந்தன ?

xxxx

குந்தி தேவிக்கு தேவர்களையும் அழைக்கவல்ல மந்திரத்தைக் கொடுத்த ரிஷி யார் ?

xxxx

4.கழுவில் ஏற்றப்பட்ட ரிஷி யார் ?

Xxxx

5.ரிஷி என்றால் என்ன பொருள் ?

Xxxx

6.ரிஷிகளின் 7 லட்சணங்கள் என்ன ?

Xxxx

7.பாணினி நூலில் உள்ள சப்த ரிஷிக்கள் , அதே வரிசையில் பிராமணர்களின் தினசரி சந்தியா வந்தனத்தில் வருகிறது? அவர்கள் யார் ?

Xxxxx

8.சங்க இலக்கியம் 2000 ஆண்டுகள் பழமையானது ; அங்கு சப்தரிஷிகள் பற்றிய பாடல் எங்கே வருகிறது ?

xxx

9.எந்த முனிவரின் மனைவியை சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன ?

xxxx

10.க்ஷத்ரியனாகப் பிறந்து பிராமணன் ஆகத் தவம் புரிந்து கடைசியில் மூன்றாவது முறை வெற்றி பெற்ற ரிஷி யார்? அவருக்கு பட்டம் கொடுத்தவர் யார்?

10.விசுவாமித்திரர் மூன்றாவது முறை வெற்றி கண்டார். அவருக்கு வசிஷ்டர், பிரம்மரிஷி என்ற பட்டத்தைக் கொடுத்தார் .

Xxxx

விடைகள்

1.அகஸ்திய மகரிஷி ரிஷியிடம் லோபாமுத்ரா உத்தரவு போட்டாள்.

xxx

1.பிருகு முனிவருக்கு காலில் கண் இருந்தது. பின்னர் விஷ்ணுவை உதைத்தபோது அது மறைந்தது .

xxxx

3.துர்வாச மகரிஷி

xxxx

4.ஆணி மாண்டவ்யர் ; சிறு வயதில் அவர் வண்டுகளை பிடித்து முள்ளால் குத்தினார் ; அதனால் பின்னொரு காலத்தில் கழுவில் ஏற்றப்பட்டார் ;  பூர்வ கதை :- அவர் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்தபோது , அரண்மனையிலிருந்து  திருடிய முத்து மாலை , இரத்தின மாலைகளை எல்லாம் அவர் கழுத்தில் போட்டுவிட்டு திருடர்கள் பதுங்கி இருந்தனர். அரச சேவகர்கள் அவரைப் பிடித்து, மன்னருக்கு முன்னால்  நிறுத்தியபோது  அவர் சரியானபதிலைச் சொல்ல முடியவில்லை.. அரசன் அவரைக் கழுவில் ஏற்ற உத்தவிட்டான் .

Xxxx

5.ஆங்கிலத்தில் உள்ள seer என்பது சம்ஸ்க்ருத ரிஷி என்ற சொல்லின் திரிபு (mirror image in Linguistics).

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி என்கிறார்;  ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’  SEE என்பது இதன் மூலம் (root ). அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு SEER  நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

Xxxx

Answer to 6th question 6.

1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

Xxx

7.பாணினி சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.

‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட  கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’–என்கிறார்.

இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறார்கள் —

அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள்.

Xxxxxx

8.சங்க இலக்கியத்தில் நற்றிணைப் பாடல் 231 புலவர் இளநாகனார் பாடியது; அதில் சப்த ரிஷிக்களை தமிழர்கள் கைகூப்பி வணங்குவதை , கைதொழு மரபின் எழுமீன் போல ” என்றார் வரிகளில் குறிப்பிடுகிறார்.

Xxxxx

9.சங்க இலக்கியத்தில், வசிஷ்ட மஹரிஷியின் மனைவி அருந்ததியை பல புலவர்கள் பாடியுள்ளனர் . அவள் கற்பின் இலக்கணம். அருந்ததி காட்டல்  என்னும் சப்த ரிஷி தரிசனம் திருமணத்தின் முதலிரவுக்கு முன்னர் நடைபெறும்.

Xxxxx

10.விசுவாமித்திரர் மூன்றாவது முறை வெற்றி கண்டார். அவருக்கு வசிஷ்டர், பிரம்மரிஷி என்ற பட்டத்தைக் கொடுத்தார் .

—- subham —–

Tags- சப்த ரிஷி, மக ரிஷி , அருந்ததி, வசிஷ்டர், பிரம்மரிஷி, துர்வாசர், பொருள், லட்சணம், ஆணி மாண்டவ்யர்

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்! Part 2 (Post No.12,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,303

Date uploaded in London –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆடி மாதத்தையொட்டி மாலைமலர் அம்மன் தலங்களைப் பற்றி தினமும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதில் கன்யாகுமாரி பற்றிய கட்டுரை 18-7-2023 இதழில் வெளியாகியுள்ளது. இரு பகுதிகளாக இந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன் 

தேவியின் மூக்குத்தி

தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

தேவியின் மூக்குத்தி பற்றி லலிதா சஹஸ்ரநாமத்தில் 20வது நாமமாக வருவது – ஓம் தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா என்பதாகும்.

இதன் பொருள் : சுக்ர நட்சத்திரத்தின் ஒளியைத் தோற்கடிக்கக்கூடிய பிரகாசமான மூக்குத்தியுடன் விளங்குபவள் என்று பொருள்.

அவள் சூரியனையும் சந்திரனையும் தனது இரு காதுகளில் தாடங்கங்களாய் (ஓலைகளாய்) தரித்துக் கொண்டிருப்பவள்.

கதம்பத்தின் துளிர்களை தன் காதுகளில் கர்ணப்பூப்போல தரித்திருந்து

தெய்வீகப் பேரழகுடன் மனதை மயக்கும் உருவத்தை உடையவள். ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களைக் கொண்டவள். இப்படிப்பட்ட தெய்வீக திருவுருவத்திற்கு மூக்குத்தி அதிக சோபையைத் தருவதில் ஆச்சரியமில்லை.

கோவில் அமைப்பு

இப்படிப்பட்ட ஒளி பொருந்திய மூக்குத்தியின் ஒளியால்

தூரத்தில் வரும் கப்பல்கள் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.

கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திருமணம் கைகூடும் தலம்

திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்தத் தலத்தில் வந்து அம்மனை வழிபட்டால் வெகு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடக்கும் என்பது காலம் காலமாக பெரியோர்கள் கண்ட அனுபவம்.

இங்கு மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் சென்று நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பிகையைப் பற்றி அறநூல்கள் குறிப்பிடும்போது வெவ்வேறு ரூபங்களை உடையவள் அவள் என்று குறிப்பிடுகின்றன. அத்தோடு அவரவர் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிக்கும் அவளுக்கு வெவ்வேறு வர்ணங்களும் உண்டு என்பதோடு எண்ணிக்கையற்ற திருப்பெயர்களால் அவள் குறிப்பிடப்படுகிறாள் என்றும் கூறுகின்றன.

இந்த வகையில் மூன்று கடல்களும் சங்கமிக்கும் சங்கமத்தில்

 கன்யாகுமரி என்ற நாமத்தோடு சக்தி வாய்ந்த சக்தி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் பக்தர்களின் வழிபாட்டை உகந்து ஏற்று அவர்களின் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிப்பாள் என்பது இறுதியான உறுதி ஆகிறது.

விவேகானந்தர் தவம் புரிந்த இடம்

கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972இல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.

ஶ்ரீபாதப் பாறை

இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப் பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;

மருந்துவாழ் மலை

கன்யாகுமரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருந்துவாழ்மலை பற்றிய ஆன்மீக வரலாறு ஒன்று உண்டு,

ஹனுமார் அரிய உயிர்காக்கும் சஞ்சீவனி மூலிகையை மலையுடன் பெயர்த்துக் கொண்டு வந்த போது மலையின் ஒரு பகுதி இங்கு விழ அது அரிய மூலிகைகளைக் கொண்ட மருந்து வாழ் மலை என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மலை 2500 அடி உயரம் உள்ளது.

அரிய வகை மூலிகைகளை இது கொண்டுள்ளது. அகத்தியர் இங்கிருந்து தவம் புரிந்து இந்த இடத்திற்கு சக்தி ஊட்டியுள்ளார்.

கன்யாகுமரியில் 131 அடி உயரமுள்ள கம்பீரமான திருவள்ளுவர் சிலையும் உள்ளது.

குமரியில் கடல் கூடும் சங்கம இடத்தில் இருந்து சூர்யோதயமும் சூர்யாஸ்தனமும் பார்ப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும். அம்மனின் தரிசனத்தோடு அம்மனின் படைப்பு அற்புதத்தையும் இங்கு பார்த்து வியக்கலாம்.

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!!

***

கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள 132 நூல்கள் பற்றிய விவரங்களை

இணையதளத்தில் காணலாம்.

Hinduism Crossword 2072023 (Post No.12,302)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,302

Date uploaded in London – –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 11 words following the clues and colour coding.

Across

1.author of Ram Charit Manas

3a.English word OWL is derived from this Sanskrit word

4.goddess Parvati’s other name. Her name is used in one Vrat Mangala……..

5.War, Battle in Sanskrit; also used in Kshatria names

6.His Doha songs are used in all Bhajans

Xxx

Down

1.author of Nobel Prize winning Gitanjali

2.Blind poet and a great devotee of Krishna

3.Goddess worshipped in Bengal during Dasara

7.Vedic Fire god (go up)

8. A priest who at sacrifice recites the hymns of the Rigveda.  (go up); English word Host is derived from it

9.Sun’s another name. In Surya Namaskar, second name (go up)

10.means gold; if you add DAS with this he is a great poet (go up) 

1  2 3  
    3a  k 
4       
        
5       
        
 67 8 910

Across

1.Tulsidas;3a.Uluka;4.Gauri ;5.Rana;6.Kabhir

Xxx

Down

1.Tagore;2.Surdhas ;3.Durga ;7.Agni (go up);8.Hotri (go up)

9.Ravi (go up); 10.Kanaka (go up)

T1ULS2ID3AS
A  U 3alUkA
G4AURIR K
O IDRGIA
R5ANATAVN
E GSO AA
 K6A7BH8IR9K10

—- subham—-

Tags- CW 2072023

QUIZ மும்பை பத்து QUIZ (Post No.12,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,301

Date uploaded in London – –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

QUIZ No.46

1.பம்பாய் எப்படி மும்பை ஆனது ?

Xxxxx

2.மும்பையில் நடிகர் நடிகையரும் வரக்கூடிய இந்துக்கோவில்கள் எவை ?

xxxxxx

3.கேட் வே ஆப் இண்டியா Gate way of India , இண்டியா கேட் India Gate – இவற்றில் மும்பையில் உள்ளது எது?

xxxxx

4.நியூயார்க்கில் வணிக விஷயங்களை கவனிக்கும் நிறுவனங்கள், ஸ்டாக் மார்க்கெட் உள்ள தெருவை Wal Street வால் ஸ்ட்ரீட் என்பர். இது போல மும்பையில் வணிகர் தெரு எது?

xxxxxxx

5.மும்பை வட்டாரத்தில் பல Beach பீச் – கடற்கரைகள் உள்ளன. ஜூஹூ பீச் என்னும் கடற்கரைக்கு ஏன் மதிப்பு அதிகம்.?

xxxxxxx

6.மும்பாயிலிருந்து கடலில் படகில் சென்றால் காணக்கூடிய பெரிய திரிமூர்த்தி சிலை எங்கேயுள்ளது ?

xxxxx

7.புத்தர் சிலைகள் உள்ள இரண்டு  குகைகளும் மும்பையில் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?

zzzzz

8.மும்பை யிலிருந்து நீண்ட காலமாக வெளிவரும் ஆங்கில நாளேடு  எது ?

xxxxxx

9. இந்திய ரயில்வே வரலாற்றில் மும்பைக்கு உள்ள தனிச் சிறப்பு என்ன ?:

xxxxxx

10.உலகிலேயே பெரிய சேரிப்  பகுதி எது?

Xxxxxxx

ANSWERS

1.இந்த நகரின் பூர்வீக பெயர் மும்பைதான். மும்பா தேவி இந்த நகரின் தெய்வம். இப்போது அவள் கோவிலுக்கு ஏராளமான பேர் போகின்றனர்.

ப= ம என்பது மொழியியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே;.பர்மா என்பதை இப்போது மியன்மார் என்று சொல்லுவதும் இதனால்தான் ; பண்டார் என்பது மண்டி என்றாகிறது; மேனுவல் என்பது தமிழில் பனுவல் /நூல் ஆகிறது .

xxxxx

2.சித்தி விநாயகர் கோவிலும் , மகா லெட்சுமி கோவிலும் ஆகும்.

Xxxxx

3.இண்டியா கேட், டில்லியில் இருக்கிறது; கேட் வே ஆப் இண்டியா, மும்பையில் இருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையும் அவரது மனைவியையும் வரவேற்க மும்பையில் கட்டினர்

Xxxxx

4.மும்பையிலுள்ள தலால் ஸ்ட்ரீட்; தலால் என்றால் ப்ரோக்கர்.

Xxxxx

5.கடற்கரை அழகான கடற்கரை என்பது மட்டுமல்ல; நடிகர், நடிகையர் வீடுகள் அருகில் இருக்கின்றன. அவர்களும் வாக்கிங் Walking வருவார்கள்

Xxxxx

6.எலிபெண்டா தீவில் உள்ளது

Xxxxx

7.கனேரி குகைகள், மகா காளி குகைகள்

xxxx

8.டைம்ஸ் ஆப் இந்தியா.Times  of  India ; 1838ல் துவங்கியது.  1861 முதல் இந்தப் பெயரில் வெளிவருகிறது.

xxxxx

9.இந்தியாவின் முதல் ரயில் பாதை 1853ல் பம்பாய்க்கும் தானே நகருக்கும் இடையேதான் போடப்பட்டது . அதன் நீளம் 32 கிலோமீட்டர்தான் .

xxxx

10.மும்பையிலுள்ள தாராவி சேரி உலகில் பெரிய சேரி ஆகும்

Xxxx subham xxxxxx

Tags-  ஆங்கில நாளேடு, டைம்ஸ் ஆப் இந்தியா,. மும்பை 

முதல் ரயில் பாதை,  ஜூஹூ பீச், மும்பை கோவில், Quiz

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 9 (Post No.12,300)

NAMBI NARAYANA TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,300

Date uploaded in London – –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part  9

48.நம்பி நாராயணன் கோவில்  (பஞ்ச நாராயண க்ஷேத்ரம்) Sri Nambinarayana Temple, Thondanur , Mandya

விசிஷ்டாத்வைத ஸ்தாபகர் ராமாநுஜாசார்யார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தில் தங்கியிருந்த காலத்தில் 5 கோவில்களை பிரபலப்படுத்தினார். அவை பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள் என்று  அழைக்க ப்படுகின்றன . அதில்  ஒன்று தொண்டனூரில் உள்ள நம்பி நாராயணன் கோவில்  ஆகும்..

ராமானுஜர் கால பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள்:

1.Nambi Narayana at Kere Thondanur நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர்

2. Cheluva Narayana at Melukote செலுவ நாராயணன் கோவில் , மேல்கோட்டை

3. Vijaya Narayana at Belur விஜய நாராயணன் கோவில் , பேலூர்

4. Keerti Narayana at Talakadu கீர்த்தி நாராயணன் கோவில் , தலக்காடு

5. Veera Narayana at Gadag வீர நாராயணன் கோவில் , கடக்

( Vijaya Narayana at Belur is popular by name Beluru Chennakeshava) பேலூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலை சென்ன கேசவர் கோவில் என்றும் சொல்லுவார்கள் ).

நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர் , ஏனைய பல கோவில்களிலிருந்து வேறு பட்டது. நாலரை ஏக்கர் பரப்பில் நந்த வனம் , புல்வெளிக்கு  இடையில் உள்ளடங்கி இருக்கும் அமைதியான கோவில். பெரிய கோவில்; ஒரே பட்டர். அவரை அழைத்துதான் பூஜை செய்ய முடியும். .பெருமாள் நின்ற திருக்கோலம்.

ராமானுஜர் அமர்ந்த ஆசனம் இன்னும் காட்சிக்கு உள்ளது அவர் இங்கு 1000 தொண்டர்களுடன் தங்கி உபன்யாசம் செய்த இடம்

மேல்கோட்டையிலிருந்து ஆறு கி.மீ. ஹொய்சாளர் கட்டிடக்கலை அம்சங்களைக் காணலாம். அருகில் திருமலசாகர ஏரியும் உளது.

xxxxxx

சமணர் கோவில்கள்

மாண்ட்யா வட்டாரத்தில் கம்பட தள்ளியில் உள்ள சமணர் பஸதிக்கள் மிகவும் புகழ்பெற்றவை Kambadahalli is a  near Nagamangala in Mandya district

இங்கு பிரம்மதேவ யக்ஷ ஸ்தம்பம் ( Manastambha  )உள்ளது.இதன் உயரம் 50 அடி. அதன் உச்சியில் கட்டப்பட்டுள்ள மணி அடிப்பதை சகுனமாக கருதுகின்றனர். மேலை கங்க வம்ச ஆட்சிக்கால , 900 ஆண்டுப் பழமையான பல கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று ஆராய்ச்சிக்கு அவை துணை செய்கின்றன.

பிரம்மதேவ ஸ்தம்பத்துக்கு முன்னால் பஞ்ச கூட கோவில் உள்ளது. 5 தீர்த்தங்கரர்களின் சந்நிதிகள் பொது மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன Panchakuta Basadi. அங்கு நிறைய  கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.

Xxxxxx

49. Adhichunchanagiri Temple, Adichunchanagiri அதி சுஞ்சன கிரி கால பைரவர் கோவில்

சுமார் 3330 அடி உயரமுள்ள குன்று

இது வொக்காலிக சமூகத்தினரின் புனித ஸ்தலம்; மஹா சமஸ்தான மட ம் இருக்கிறது. மயில்கள் சரணாலயத்தில் ஏராளமான மயில்களையும் பார்க்கலாம்

இங்குள்ள பைரவர் கோவிலும் கங்காதரேச்வரர் Gangadeshwara Temple தரிசிக்க வேண்டிய இடங்கள்; மாண்ட்யா மாவட்டத்தின் நாக மங்கல தாலுகாவில் இருக்கிறது

கங்காதரேஸ்வரர் கோவிலில் ஐந்து லிங்கங்கள் (Panchalingas — Lord Gangadhareshwara, Chandramouleshwara, Malleshwara, Siddeshwara, and Someshwara.)

ஐந்து லிங்கங்கள் – கங்காதரேஸ்வர , சந்திர மூலேஸ்வர , மல்லேஸ்வர, சித்தேஸ்வர, சோமேஸ்வர லிங்கங்கள் இருப்பதால் பஞ்ச லிங்கேஸ்வர கோவில் என்றும் கூறப்படும்.. மலையின் உச்சி ஆகாச பைரவர் என்று அழைக்கப்படுகிறது .

காலபைரவர் கோவிலில் அவருடைய 64 அவதார உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சமீப காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்;  பாலா கங்காதரநாத  சுவாமிஜி Sri Balagangadharanatha Swamiji.முயற்சியில் உருவான கோவில்

சுஞ்ச, கஞ்ச என்ற இரண்டு அரக்கர்களை சிவபெருமான் அழித்த இடம். .

Xxxxx

50.மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் The Chamundeshwari Temple

மைசூரு நகரிலிருந்து 13 கி.மீ.தொலைவில் , அரச குடும்பத்தினரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி தேவியின்  கோவில் இருக்கிறது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலின் நந்தி தஞ்சாவூர் பெரிய கோவில் நந்தி போலவே உருவில் பெரியது 16 அடி உயரம், 25 அடி நீளம்!

குன்றின் மீது அமைந்த கோவில் இது. உயரம் 3300 அடி. இங்குதான் துர்கா தேவி மஹிஷ அசுரனை வதம் செய்தாள் என்பது ஐதீகம் மஹிஷாசுர என்பது  ஆங்கிலேயர்களால் மைசூர் என திரிக்கப்பட்டது . இங்கு மிகப்பெரிய மஹிஷாசுரன் சிலையும் உள்ளது

12ஆ ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்களால் கட்டப்பட்டது என்றாலும் சிவனும் நந்தியும் மிகவும் பழையன

நவராத்திரி காலத்தில் தேவிக்கு 9 வித அலங்காரங்களை செய்வார்கள். ஆஷாட வெள்ளிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள் .

To be continued………………………………………………

Tags—ராமானுஜர் ஆசனம், மைசூரு , சாமுண்டீஸ்வரி, பெரிய நந்தி ,  பஞ்சலிங்கம், காலபைரவர்

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!-1 (Post No.12,299)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,299

Date uploaded in London –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆடி மாதத்தையொட்டி மாலைமலர் அம்மன் தலங்களைப் பற்றி தினமும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதில் கன்யாகுமாரி பற்றிய கட்டுரை 18-7-2023 இதழில் வெளியாகியுள்ளது. இரு பகுதிகளாக இந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

நம்பினோர் கெடுவதில்லை

    நான்கு மறைத் தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால்

    அதிக வரம் பெறலாம் – பாரதியார்

மூன்று கடல் சங்கமத்தில் ஒரு தலம்

நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை என்று மஹாகவி பாரதியாரால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு தேவி அருள் பாலிக்கும் திருத்தலமே கன்யாகுமாரி..

பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சக்திபீடங்களில் முக்கியமானது

இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது.

பிரஜாபதி தட்சனுக்கு மகளாக அவதரித்த தாட்சாயிணி எனப்படும் சதி தேவி தனது தந்தை புரியும் யாகத்திற்குத் தன் கணவனான சிவபிரானை அழைக்காதது குறித்து பெரிதும் வருத்தமும் கோபமும் கொள்கிறாள்.

தான் மட்டும் யாகத்திற்குச் செல்கிறாள். ஆனால், தட்சன் செய்த அவமரியாதை காரணமாக யாக குண்டத்தில் விழுந்து தன் உயிரை விடுகிறாள். இதை அறிந்த சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டு சதியின் உடலை ஏந்தியவாறே தாண்டவம் ஆடி அலைகிறார்.

இதைக் கண்ணுற்ற மஹாவிஷ்ணு சதியின் உடலை தனது சக்கரத்தால் 51 துண்டுகளாக ஆக்க, அவை பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் விழுகின்றன. பெரும் வரங்களை நல்கும் சக்தி பீடங்களாக அந்த இடங்கள் மாறி அந்த இடங்களிலெல்லாம் அன்னை ஆட்சி புரிந்து பக்தர்களுக்கு இன்றளவும் அருள் பாலித்து வருகிறாள்.

தேவியின் முக்கிய அங்கமான முதுகுப் பகுதி விழுந்த இடமே சக்தி பீடமான கன்யாகுமாரி!

கன்யாகுமாரி தல வரலாறு

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா.

மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.

சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர்.

அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.

ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.

மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.

சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.

திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.

இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.

தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.

–    தொடரும்

Quiz ராகப் பத்து Quiz (Post No.112,298)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,298

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz No. 45

1.காலைமதியம்மாலை இரவுக்கு என்று பொதுவாக ஒதுக்கப்பட்ட ராகங்கள் எவை ?

Xxxxx

2.பாம்பு படம் பிடித்து ஆடப் பாடும் ராகம் என்ன ?

xxxx

3.சங்கீதம் கற்கத்துவங்கும் எல்லோருக்கும் முதலில் சொல்லித் தரப்படும் வாதாபி கணபதிம் எந்த ராகத்தில் அமைந்தது ?

xxxxx

4.எட்டயபுரத்தில் வறட்சியைப் போக்குவதற்காக மழை வேண்டி முத்துசாமி தீட்சிதர் பாடிய ராகம் எது ?

xxxx

5.கீழ்க்கண்ட தமிழ் ராகங்களுக்கு நிகரானவை என்று இசைமேதைகள் கூறும் ராகங்கள் எவை?

5.செவ்வழி 

வியாழக் குறிஞ்சி –

செந்துருத்தி –

மேகராகக் குறிஞ்சி –

திருத்தாண்டகம் –

Xxxx

6.தான்சேன் பாடிய எந்த ராகம் தீயை உண்டாக்கி அவரை எரித்தது ?

xxxxx

7.தோடி ராகத்தைப் பாடமாட்டேன் என்று அடகு வைத்து கடன் வாங்கிய பாடகர் யார் ?

xxxx

8.அக்பருடன் மோதல் ஏற்பட்டுதீக்குளித்த குஜராத்தி பிராமணப் பெண்கள் இருவர் பெயரில் தான்சேன் பாடிய ராகம் என்ன?

xxxx

9.தியாகராஜ ஆராதனையில் பாடப்படும் பஞ்ச ரத்ன கிருதிகள் ராகங்கள் என்னென்ன ?

Xxxx

10.பாரதியார் பாடல்களுக்கு அவரே ராகமும் போட்டு கவிதைகளை வெளியிட்டார். உங்களுக்கு ஏதேனும் சில பாடல்களின் ராகங்கள் தெரியுமா ?

10.வந்தேமாதரம் –

வந்தேமாதரம் என்போம் –

எந்தையும் தாயும் –

தொன்று  நிகழ்ந்ததனைத்தும் —

பேயவள் காண் எங்கள் அன்னை —

ஞானத்திலே பர மோனத்திலே –

கனவென்ன கனவே

Xxxxxxxx

விடைகள்

1.காலை — பூபாளம், மதியம் – சாவேரி , தன்யாசி; மாலை – பூர்வ கல்யாணி, இரவு – நீலாம்பரி , காம்போஜி

xxxxx

2.புன்னாக வராளி (Nagin)

xxxxx

3.ஹம்சத்வனி

Xxxxx

4.அமிர்தவர்ஷினி

xxxxx

5.செவ்வழி – யதுகுல காம்போதி

வியாழக் குறிஞ்சி – செளராஷ்டிரம்

செந்துருத்தி – மத்யமாவதி

மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி

திருத்தாண்டகம் – ஹரி காம்போதி

xxxxx

6.தீபக் ராகம்

xxxxx

7.தோடி சீதாராமையா என்ற பிரபல பாடகர் இப்படிச் செய்தார் . தஞ்சை மன்னர் அதை அறிந்தவுடன் கடனை அடைத்து அவருக்கு தோடி ராகம் பாடும் உரிமையை மீட்டுக்கொடுத்தார் .

xxxxx

8.தானா, ரீரி என்ற இரண்டு பிராமணப் பெண் பாடகிகள் இருவரையும் தனது அரசவைக்கு அக்பர் அழைத்தார் குஜராத்தி வட்நாகர் பிராமணர்கள் அதை எதிர்க்க பெரிய யுத்தம் மூண்டு ஏராளமானோர் இறந்தனர். தானா ரீரி என்ற இரண்டு பெண்களும் தீக்குளித்து மாண்டனர் அவர்கள் பெயரில் உலகப் புகழ்பெற்ற இசை மேதை தான்சேன்,  தானரிரி என்ற  ராகத்தை உருவாக்கிப் பாடினார். இரு பெண்களுக்கும் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் இன்றும்  உள்ளது.

xxxx

9.ஜகதாநந்த — நாட்டை ராகம்

துடுகு கள  – கெளல ராகம்

சாதிஞ்சன — ஆரபி ராகம்

கன கன ருசிரா – வராளி  ராகம்

எந்தரோ மஹானு பாவ – ஸ்ரீ ராகம்

xxxxx

10.வந்தேமாதரம் -ஹிந்துஸ்தானி பியாக்

வந்தேமாதரம் என்போம் – நாதனாமக் கிரியை

எந்தையும் தாயும் – காம்போதி

தொன்று  நிகழ் ந்ததனைத்தும் — காவடிச் சிந்து மெட்டு

பேயவள் காண் எங்கள் அன்னை — ஆபோஹி

ஞானத்திலே பர மனத்திலே – ஹிந்துஸ்தானி தோடி

கனவென்ன கனவே – ஸ்ரீ ராகம்

—- subham —-

Tags – ராகம், க்விஸ், தீட்சிதர், மழை ராகம் , நெருப்பு ராகம், தான்சேன், பிராமணப் பெண்கள் , பஞ்ச ரத்னக் கிருதிகள், பாரதியார், தமிழ் இசை