The second story about Ekadasi (pronunciation :EEkaadasi) in the Mahabharata is as follows:
There was brahmin named Devamali in Shantipur. He earned a lot of money through various means but had no issue. When he and his wife were praying for a child, sage Narada appeared before them. He asked them to do a Yajna for a child. When they performed the Yajna two boys emerged from the sacrificial Yajna fire. They were named Yajnamali and Sumali (pronunciation: maali). Yajnamali meant ‘child of sacrifice’; Sumali meant ‘the child of beauty’.
When both of them became youths, both Devamali and his wife settled in an Ashram on the banks of River Narmada. There they met a sage called Jananti. He advised them to repeat the name of Vishnu. They spent their retired life happily and went to Vishnu’s abode after their death.
In the meantime, both Yajna Mali and Sumali got married and had sons. Yajnamali worshipped Vishnu and observed Ekadasi fast, but his brother Sumali squandered all his money upon unworthy objects and ultimately became a scoundrel. When the village headman punished him severely for his bad deeds, only Yajna Mali saved him. When both died on the same day, Yajna Mali was taken to heaven and Sumali was taken to hell by the attendants of Yama. Pitying his brother, Yajna Mali gave a portion of his merit / punya earned by Ekadasi fast and thus saved Sumali. Both of them went to Vishnu’s abode, Vaikunta.
xxx
Third Story
There is one story in Narada Purana that is popular in South India. The story of King Rukmangada of Vidhisha illustrated the greatness of Ekadasi fast. The king was not only very strict in observing the fast, but also insisted all the citizens in his kingdom must observe Ekadasi fast. Since all the citizens obeyed him, Yama, god of death, lost all his customers in Vidisha. No one came to his abode and all got direct tickets to Vaikunta, abode of Vishnu.
Yama was very much worried and approached Brahma for a solution. Brahma told him that he can’t punish anyone without evidence and so asked Yama to wait for the judgement day. In the meantime, Brahma wanted to test the integrity of King Rukmangada and his wife Sandhyavali. They had a son by name Dharmanagada. All of them were devotees of Vishnu and strict observers of Ekadasi fast.
Brahma sent an apsara named Mohini, woman from Indraloka, to entice Rukmangada (here afterwards abbreviated as Ruk.) and make him skip Ekadasi fast. She came to earth and met Ruk. and he easily fell into her trap. After eight years of this dalliance, she insisted that she would marry him only if he promised to fulfil all her wishes. Ruk. Readily agreed. Just before one Ekadasi fast, she asked him to skip the fast. When the king promised her all the things in the world except his Ekadasi vow, she went to Ruk.’s wife Sandhya and asked to give the head of Dhamangada, so that she would not insist on her demand. Their son Dhamangada was equally interested in the fast and so agreed to lose his head so that his father Ruk.’s vow was not compromised. When Ruk. raised his sword to cut the head of his son Dharmangada, God Vishnu appeared before them and took them to Vaikunta. That Ekadasi was named Mohini Ekadasi.
For 24 Ekadasis, there are stories like this or reasons for observing them in a particular way. There is one Nirjala (waterless) Ekadasi, which is observed even without drinking water.
Now I will list the important Ekadasis and why they are called with specific names.
வழக்கமான சுவையான உணவை உண்ணாமல் இறைவனின் நாமத்தைச் சொல்லி, புண்ணியம் சம்பாதிக்கும் காலம் நோன்பு அல்லது விரதம் எனப்படும் . இந்துக்கள் குறைந்தது மாதத்துக்கு இரண்டு முறை இதைச் செய்யவேண்டும் என்று புராண, இதிஹாசங்கள் இயம்புகின்றன . அவை ஏகாதசி எனப்படும் . இதன் தமிழ் மொழிபெயர்ப்பு பதினோறாவது நாள்.
இந்துக்கள் நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒவ்வொரு மாதத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள் . அமாவாசைக்குப் பின்னர் வரும் 14 நாட்கள் சுக்ல பட்ச இருவாரம் (14 நாள்); அதே போல பெளர்ணமி க்குப்பின்னர் வரும் 14 நாட்கள் கிருஷ்ண பட்ச இருவாரம் (14 நாள்). இந்தக் கணக்குப்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி (11 ஆம் நாள்) வரும். அந்த நாளில் உணவு உண்ணாமல் இறைவனின் பெயரைச் சொன்னால் உடலுறுப்புகளுக்கு ஓய்வும் கிடைக்கும்; ஆரோக்கியமும் பெருகும். ஆண்டவன் பெயரைச் சொல்லுவதால் மன அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது இந்துக்களின் மாபெரும் கண்டுபிடிப்பு.
இதுபற்றி இந்துமதத்தை நன்கு ஆராய்ந்த ஸர் மோனியார் வில்லியம்ஸ் (Sir Monier Williams) சென்ற அறிஞர், உண்ணா விரதம் இருப்பதில் இந்தியாவில் வாழும் இந்துக்களையோ, முகமதியர்களையோ யாரும் மிஞ்ச முடியாது கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க, ப்ராட்டஸ்டண்ட் ஆகிய இரு பிரிவினரும் இப்படி விரதம் இருப்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது . எந்த ஒரு சாக்கினையும், காரணத்தையும் கண்டுபிடித்து நோன்பு அனுஷ்டித்து விடுவார்கள் இந்துக்கள் என்று எழுதியுள்ளார் .
மஹாத்மா காந்தியும் ஒரு கட்டுரையில் இதையே சொல்கிறார் :
எனக்கு ஒரு விஷயம் புரியமாட்டேன் என்கிறது; என்னவென்றால் எனக்கு நிறைய ப்ராடண்ஸ்ட் பிரிவு கிறிஸ்தவ நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களது நட்பை நான் மிகவும் மதித்துப் போற்றுபவன் ; ஆனால் ஒரு உண்மையை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கு உண்ணாவிரதம் , நோன்பு என்பன அறவே பிடிக்கவில்லை ; இது ஏன் என்றே எனக்கு விளங்கவில்லை — இது காந்திஜியின் புலம்பல்.
முஸ்லீம்களையும் மோனியர் வில்லியம்ஸ் சொன்னாலும் அவர்கள் விரதம், நம் கணக்குப்படி விரதமே இல்லை. அவர்கள் ரம்ஜான் / ரமலான் மாதத்தில் இருக்கும் விரதம் பகல் நேரத்தில் உணவு அருந்தக்கூடாது என்பதுதான். மற்ற நேரங்களில் வயிறுபுடைக்க சாப்பிடலாம். பகல் நேரத்தில் சாப்பிட முடியாது என்ற பயத்தினால் அவர்கள் இரவு நேரத்தில் கூடுதலாக உண்ணுவதால் ரமலான் விரதத்துக்குப் பின்னர் அவர்களுடைய எடை அதிகரிப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன . ஆக, இந்துக்கள் விரதத்துக்கும் முஸ்லீம்கள் விரதத்துக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது .
தற்காலத்தில் பெரும்பாலான இந்துக்கள் ஏகாதசி இரதம் இருப்பதில்லை. ஆயினும் சிலர் சோமவார விரதம் , செவ்வாய்க்கிழமை விரதம், சனிக்கிழமை விரதம் என்ற பெயரில்– குறிப்பாகப் பெண்கள் — உண்ணாமல் இருப்பதைக் காணமுடிகிறது .
கட்டிட வேலை செய்யும் குஜராத்தி தொழிலாளர்கள் நாள் முழுதும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு ஏகாதசி விரதம் இருப்பதை லண்டனில் கூடக் காண்கிறேன். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர், சுவாமி நாராயணன் இயக்கத்தினர், இன்றும் ஏகாதசி விஷயத்தில் கண்டிப்பு காட்டுகின்றனர் ; வெங்காயம், உள்ளிப் பூண்டு இவைகளைக் கலக்காமலேயே தினமும் சுவையான உணவுகளையும் சமைக்கிறார்கள். ஏகாதசி நாட்களில் வயதுக்கு ஏற்ப உப்பு, புளி , மிளகாய் ருசி இல்லாத கஞ்சி குடிப்பதையும் பால் பழம் மாட்டும் சாப்பிடுவதையும் பலர் கடைப்பிடிக்கின்றனர் ; ஆனால் இறைவன் பெயர் நினைவில் இருப்பதுதான் முக்கியம்.
காந்திஜி கூட ஜன்மாஷ்டமி (கிருஷ்ணன் பிறந்த நாள்) விரதக்காரர் களைக் கிண்டல் செய்கிறார்; அவர்கள் கிருஷ்ணன் பெயரைச் சொல்லாமல் பொழுதைக் கழிக்க அன்று சூதாட்டம் விளையாடுவதை அவர் குறிப்பிடுகிறார் .
இந்துக்கள் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் (ஜலம் ) கூடக் குடிக்காமல் இருக்கின்றனர். இலங்கை இந்துக்கள் ஸ்கந்த சஷ்டி விரத காலத்தில் இவ்வாறு கடும் விரதம் இருப்பதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம் .
இப்பொழுது ஏகாதசி பெருமையை விளக்கும் முதல் கதையை மஹாபாரத்திலிருந்து காண்போம்
முதல் கதை
காலவ முனிவரின் மகன் பத்ரசிலா அவருக்கு சின்ன வயது முதலே
விஷ்ணுவின் மேல் அபார பக்தி. இதனால் வேத அத்யயனம், சமிதாதானம், யாக, யக்ஞங்களைக் கூட செய்யவில்லை. ஆனால் ஏகாதசி விரதம் போன்ற உண்ணாவிரதங்களைக் கடைப்பைடித்தார்; ஒருநாள் அவரை தந்தை அழைத்தார் . மகனே! உன் உடம்பை ஏன் இப்படி பட்டினி கிடந்து வாட்டிக்கொள்கிறாய்? இட்லியும் தோசையும் பொங்கலும் வடையும் சப்பாத்தியும்(Dhal) தால் – உம் சாப்பிட்டு அனுபவிக்க வேண்டிய காலத்தில் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டார்.
பத்ரசிலாவவும் தயங்கமால் பதில் சொன்னார். “அப்பா, ஏகாதசி விரதத்தின் மஹிமை மிகப்பெரியது. அதனால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை; கங்கு கரையற்ற மஹாசமுத்திரம் போனற அளவுக்கு புண்ணியம் கிடைக்கும் வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக மானது அது . இந்த விரதத்தால் நான் பூர்வ ஜன்மத்தையும் அறிவேன் . அப்போது நடந்த கதையைக் கேளுங்கள்” .
“முன் ஜென்மத்தில் நான் சந்திர குலத்தில் உதித்த அரசன். அப்போது என்பெயர் தர்ம கீர்த்தி . நான் அப்போது செய்யாத பாவமில்லை ; பாவத்தின் மூட்டை நான்; ஆட்சியிலோ கொடுங்கோலன். அப்படி திமிரு பிடித்து ஆண்ட காலத்தில் ஒரு நாள் பரிவார சேனையுடன் வேட்டைக்குச் சென்றேன். அழகான கொழு கொழு மான் ஒன்றைக் கண்டேன். வீரர்களே இது தப்பி விடாமல் போக வளையம் போல் இதைக் காத்து நில்லுங்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் நான் காவலாக நின்ற பகுதியிலேயே அது தப்பித்து ஓடிவிட்டது. அம்பை விட்டு எறிந்தேன் ; பயனில்லை; விடேன் தொடேன் என்று நான் மட்டும் குதிரையில் காற்று வேகத்தில் பறந்தேன் ; மான் கிடைக்கவில்லை; இதற்குள் இரவு நெருங்கவே மரத்தடியில் படுத்தேன். இதற்குள் களைப்படைந்த என் குதிரை மலையிலிருந்து உருண்டு செத்தது. நான் படுத்ததுதான் தெரியும். என் உயிர்போனது கூடத் தெரியாது. எம கிங்கரர்கள் என்னைப் பிடித்து எமன் முன் நிறுத்தியபோதுதான் என்ன நடந்தது என்பதே புரிந்தது . நான் நடுங்கி நடுங்கி ஒவ்வொரு நொடியும் மீண்டும் மீண்டும் செத்துக் கொண்டிருந்தேன் ஆனால் என்ன வியப்பு! என் உயிரை ஏன் தவறாக எமலோகத்துக்குக் கொண்டுவந்தீர்கள்? என்று தனது வேலைக்காரகளைத் திட்டி வசைமாரி பொழிந்தார் எமதர்மன் .
இந்த ஆள் ஏகாதசியில் அல்லவா இறந்தான் ? அதுவும் நாள் முழுதும் சாப்பிடாமல் அல்லவா இறந்தான் ? அது ஏகாதசி விரதம் இருந்ததற்குச் சமம்; இது தெரியாதா ? உடனே இவரை வைகுண்டத்துக்கு அழைத்துக் செல்லுங்கள் என்று கடிந்து, என் அருகே வந்து சல்யூட் Salute போட்டு மரியாதையுடன் என்னை வழி அனுப்பினார். இதெல்லாம் ஏகாதசியின் பெருமை, மஹிமை அல்லவா ?
இதைக்கேட்டவுடன் தந்தையான காலவ முனிவரும் விஷ்ணு பக்தராக மாறி மாதம் இரு முறை ஏகாதசி விரதம் இருக்கத் துவங்கினார்..
மஹா பாரதத்தில் மேலும் ஒரு கதையும், நாரத புராணத்தில் ஒரு கதையும் இருக்கிறது. அதையும் கேளுங்கள் . தொடரும் …………………………………………..
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
நல்லதற்கும் கெட்டதற்கும் காரணம் – ‘சுமதி’, ‘குமதி’!
ச. நாகராஜன்
சுமதி – குமதி
ஒருவனுக்கு நல்லது நடக்கிறது அல்லது கெட்டது நடக்கிறது.
ஒருவன் பணக்காரனாக இருக்கிறான். இன்னொருவன் ஏழையாக
இருக்கிறான்.
இதற்குக் காரணம் என்ன? சுமதி – குமதி தான்!
சு- மதி என்றால் நல்ல மனம்
கு -மதி என்றால் கெட்ட மனம்.
ஒரு கோத்ரத்தில் பிறந்தவன் தனது சுற்றத்தையும் குடும்பத்தினரையும் நன்கு பரிபாலிக்கிறான். வயதானவன் இளம் வயதினருடன் சகவாசம் வைத்துக் கொண்டால் பெண்கள் அவனை ஏற்பதில்லை. ஒரு பெண் ஆணைப் போல நடக்க ஆரம்பித்தால் அந்தக் குடும்பம் விநாசம் அடைகிறது.
இயல்பாகவே அமைந்திருக்கும் நல்ல குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.
மற்றவர்களுக்கு உதவி செய்வது, மற்றவர்களின் துன்பங்களைக் காணச் சகிக்காமல் இருப்பது, தயையுடனும் தாக்ஷிண்யத்துடனும் எப்போதும் இருப்பது – இவை கொண்டிருந்தால் அவனே நல்ல மனிதன்.
பரோபகாரஷீலத்வம் பரதுக்காசஹிஷ்னுதா |
தயாப்ரத்வம் தாக்ஷிண்யம் சதாம் ச்வாபாவிகா குணா: ||
திருமணத்தில் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
ஒரு திருமணம் நிச்சயிக்கப்படும் போது பலரும் பலவற்றிற்கும் முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
மணப்பெண் நல்ல வரனை – கணவனை எதிர்பார்க்கிறாள்.
மணப்பெண்ணின் அம்மாவோ வருகின்ற மாப்பிள்ளை நல்ல செல்வம் உடையவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.
மணப்பெண்ணின் தந்தையோ தனது மாப்பிள்ளை நன்கு படித்திருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
நட்பும் சுற்றமும் நல்ல குடும்பமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் திருமணத்திற்கு வரும் பொதுவான நண்பர்களும் தெரிந்தவர்களும் சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.(மற்றதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?!)
வரம் வரயதே கன்யா மாதா வித்தம் பிதா ஸ்ருதம் |
பாந்தவா: குலமிச்சந்தை பிஷ்டான்னமிதரே ஜனா: ||
சம அந்தஸ்து தேவை திருமணத்தில்!
இரு குடும்பங்கள் திருமணத்தால் இணைகின்றன.
அது நன்கு அமைய வேண்டுமெனில் இரு குடும்பமும் சம அளவு செல்வத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். இரு குடும்பங்களும் சமுதாயத்தில் சம அந்தஸ்தைக் கொண்டிருக்க வேண்டும். சமமான நட்பு வட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அந்த திருமணம் நல்ல முறையில் அமையும். ஒரு ஏழைக் குடும்பமும் பணக்காரக் குடும்பமும் சம்பந்தம் செய்து கொண்டால் அது சிறப்பாக அமையாது.
யயோரேவ சமம் வித்தம் யயோரேவ சமம் குலம் |
த்யோமைத்ரீ விவாஹஸ்ச ந து புஷ்டவிபுஷ்டயோ:
ஒரு ரிஷி என்பவர் யார்?
உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் நல்லவர்கள் பேசும் போது அர்த்தமானது அவர்கள் பேசும் சொற்களைத் தொடர்ந்து அதற்கான அர்த்தம் ஏற்படுகிறது.
ஆனால் ஒரு ரிஷி பேசும் போதோ அவர்கள் பேசுவதே அர்த்தம் ஆகிறது.
Panchami means Fifth Day in Hindu Calendar. Hindus have divided each month into two halves. One fortnight begins immediately after new moon called Amavasyai; another fortnight begins immediately after full moon called Purnima or Pournami. Therefore they will have two Panchamis every month . Find the 8 Famous Panchami Festivals in the Crossword:-
P
A
N
C
A
M
I
1⇠
2
3
4
5⇡
⇡6
⇡7
8⇠
Across
1.Thyagaraja Aradhana is organised in Tiruvaiyaru in Tamil Nadu. All famous Carnatic singers assemble there. It is called Pushya xxxxxx Panchami.
2.During Holi festival, this was the day people used to throw colour powder on one another and passers-by. Later it was done from Purnima to Seventh day.
3.Snake worship day in Maharashtra and neighbouring areas.
4. in the month of Magha and Chaitra this Panchami is called Sarasvati Puja day or Goddess Panchami day.
8.Seven Stars in the name of seers are worshipped on this Panchami day
Xxxx
Down
5.Bhadrapatha month is the month when Hindus worship departed souls and this period is known as Pitri Paksha or Mahaalaya or Apara paksha. On the fifth day a rite is done for one who has died in the past one year.
6.Ashada month Krishna Panchami day is for the worship of Snake goddess in Bengal. Women in other parts of India also celebrate this Panchami.
7. This Panchami is celebrated every year on the fifth day of the bright half of the Hindu month of Magha, Saraswati Puja is done ; Utsava (festival) is celebrated forty days before spring.
Hindus fast on Ekadasi Days, that is the eleventh days of Hindu months. According to Hindu calendar, each month is divided into two halves. From new moon day, 14 days is a fort night and from full moon day another fortnight. So every month Hindus will have two Ekaadasis, that is two eleventh days. Orthodox Hindus observe strict fasting. It is not like Muslim’s Ramadan fasting. Muslims are allowed to eat as much as possible after sunset. Hindus are not eating for 24 hours during Ekadasi. Depending upon age, they do take fruits and milk or some light food, mostly without salt or chillies.
I have seen Gujarati builders, who do hard manual work, eating only bananas.
Sir Monier Williams says,
“No Christian man—be he Roman Catholic or Anglican—not even the most austere stickler for the most strict observance of every appointed period of humiliation and abstinence for a moment hope to compete with any religious native of India—Hindu or Mohemedan – who may have entered on a course of fasting, abstinence, and bodily maceration”.
I have already said Muslims do eat during the month of Ramadan after sunset. And statistics show their body weight increase after Ramadan Fasting period.
Mahatma Gandhi also said,
“My real difficulty is with my Christian Protestant friends, of whom I have so many, and whose friendship I value beyond measure. Let me confess to them that though from my very first contact with them, I have known their dislike for fasts, I have never been able to understand it”.
Xxx
Let me revert to my original point, the greatness of Ekadasi fasting. One comes across at least 24 such days in a year.
There are some stories behind this Ekaadasi Vrat.
Let me give some stories from Mahabharata:
First Story- Bhadrashila
Galava Muni has a son by name Bhadrashila; he was a devout votary of Lord Vishnu from early boyhood. He even gave up the study of Vedas and the usual rites in order to devote himself to the worship of Vishnu. From the same early age he observed the Ekaadasi fast twice every month.
His father once asked him why he subjects himself to such difficult fasts when many easier ones are laid down in holy books. He said to his father that the merit (Punya) accruing from the observance of the Ekaadasi fast was literally infinite- as infinite as the starlit sky or the boundless ocean. He was able to see his fast birth as well.
Bhadrashila continued,
“In my former life, I was a powerful king named Dharmakirti of the Lunar race. As a man I was a sinner and as a king a hated tyrant; and in both capacities, I heaped a mountain load of sin. One day I went on a hunting expedition, escorted by a company of soldiers. When I saw a lovely deer, I ordered my attendant to make a cordon round the animal so as not to let the game escape. But it so happened that the deer escaped at a point where I was myself standing on guard. I shot an arrow at the deer, and I missed the mark. I was following it in my horse all alone. when I was deep inside the forest the sun was setting. My horse became very tired and rolled down the hill and died. Hunger and thirst were gnawing at my bowels. Benighted, bewildered, bereft almost of sense and motion, I laid myself down at the foot of a tree. Nature refused to sustain my body. I saw two emissaries of Yama, carrying me to the abode of the dead. Yama was very angry with his servants for taking my soul to his region, for he said I was absolved of all sin. The reason was I breathed my last in state of fasting on an Ekaadasi day. Yama paid obeisance to me and my soul was sent to heaven of Vishnu. There I spent millions of years in the uninterrupted enjoyment of felicity such as a man cannot picture even in dreams.”
Bhadrashila’s story made such a profound impression on the mind of his father that the old man also became a convert to Vaishnavism.
களைமான்களில் ஆண் மான்களின் (Buck) கொம்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படும் காலம் இது
ஏனைய பெயர்கள்
• Berry Moon (Anishinaabe)
• Feather Moulting Moon (Cree)
• Halfway Summer Moon (Anishinaabe)
• Month of the Ripe Corn Moon (Cherokee)
• Moon When the Chokecherries are Ripe (Dakota)
• Raspberry Moon (Algonquin, Ojibwe)
• Salmon Moon (Tlingit)
• Thunder Moon (Western Abenaki)
Xxxx
ஆகஸ்ட் மாத பெளர்ணமி FULL STURGEON MOON
முழு ஸ்டர்ஜன் மீன் மாதம்
அமெரிக்காவின் 2 பெரிய ஏரிகளில் ஸ்டர்ஜன் Sturgeon வகை மீன்கள் பெரிதாக வளர்ந்து வலைகளில் சிக்கும் மாதம் .
ஏனைய பெயர்கள்
• Black Cherries Moon (Assiniboine)
• Corn Moon (Algonquin, Ojibwe)
• Flying Up Moon (Cree)
• Harvest Moon (Dakota)
• Mountain Shadows Moon (Tlingit)
• Ricing Moon (Anishinaabe)
Xxx
செப்டம்பர் மாத பெளர்ணமி
அறுவடை முழு நிலவு
சோளம், மக்காச் சோளம் அறுவடைக் காலம் .உலகில் கோதுமையைவிட அதிகம் பயிராவது சோளம் .
ஏனைய பெயர்கள்
• Autumn Moon (Cree)
• Child Moon (Tlingit)
• Corn Harvest Moon (Dakota)
• Corn Maker Moon (Western Abenaki)
• Falling Leaves Moon (Ojibwe)
• Harvest Moon
• Leaves Turning Moon (Anishinaabe)
• Mating Moon (Cree)
• Moon of Brown Leaves (Lakota)
• Moon When the Rice is Laid Up to Dry (Dakota)
• Rutting Moon (Cree)
• Yellow Leaf Moon (Assiniboine)
Xxxx
அக்டோபர் மாத பெளர்ணமி FULL HUNTER’s MOON or HARVEST MOON
முழு வேட்டைக்காரர் நிலவு
இந்த மாதத்தில் பிராணிகளும் பறவைகளும் கொழுத்துக் கிடக்கும். வேட்டைக்காரர்கள் அவைகளை வேட்டையாடி உண்டு மகிழும் காலம் .
ஏனைய பெயர்கள்
• Drying Rice Moon (Dakota)
• Falling Leaves Moon (Anishinaabe)
• Freezing Moon (Ojibwe)
• Ice Moon (Haida)
• Migrating Moon (Cree)
Xxx
நவம்பர் மாத பெளர்ணமி FULL BEAVER MONTH
முழு பீவர் நிலவு
நீர்நாய்கள் அல்லது நீர்க்கரடிகள் (Beavers) என்ற மிருகங்கள் குளிர்காலம் வருவதை முன்னிட்டு அவைகளின் வளைகளுக்குச் செல்லும் காலம்
• Deer Rutting Moon (Dakota, Lakota)
• Digging/Scratching Moon (Tlingit)
• Freezing Moon (Anishinaabe)
• Frost Moon (Cree, Assiniboine)
• Whitefish Moon (Algonquin)
Xxxx
டிசம்பர் மாதம் பெளர்ணமி FULL COLD MOON
முழு குளிர் கால நிலவு
பூமியின் வட கோளார்த்த நாடுகளில் நீண்ட இரவுப்பொழுது; நல்ல குளிர் வீசும் காலம். நார்வே சுவீடன், பின்லாந்து அமெரிக்கக் கண்டத்தின் வட கோடிப்பகுதிகளில் ஏறத்தாழ ஆறுமாதம் இரவுதான். சூரியனே உதிக்காது பூமியின் தென் ப குதியான அண்டாட்ர்ட்டிக்காவில் சூரியன் மறையவே மறையாது. நீண்ட பகல் பொழுது!
ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)
Drift Clearing Moon (Cree) • Frost Exploding Trees Moon (Cree) • Hoar Frost Moon (Cree) • Little Spirit Moon (Anishinaabe) • Long Night Moon (Mohican) • Mid-winter Moon (Lakota, Northern Ojibwe) • Moon of the Popping Trees (Oglala) • Moon When the Deer Shed Their Antlers (Dakota) • Snow Moon (Haida, Cherokee) • Winter Maker Moon (Western Abenaki)
Xxxx
ஏன் இப்படி பெயர் சூட்டினார்கள் ?
பழங்குடி மக்களிடையே அந்தக் காலத்தில் கடிகாரம் கிடையாது ; காலண்டரும் கிடையாது. நிலவுதான் அவர்களுக்கு காலண்டர். முழுநிலவுக் காலத்தில் என்ன நிகழ்கிறதோ அதை வைத்து அவர்கள் காலத்தைக் கணக்கிட்டார்கள் .
xxx
apogee- பூமியிலிருந்து தொலைவில் இருக்கும் நிலை ; perigee – பூமிக்கு அருகில் இருக்கும் நிலை
சூப்பர் மூன் / பெரிய நிலவு என்றால் என்ன ?
சூரியனைச் சுற்றி பூமி ஓடுகிறது; பூமியைச் சுற்றி நிலவு வருகிறது இது வட்டப்பாதை அல்ல; கோழி முட்டை போன்ற கோளப்பாதை . இதன் காரணாமாக சில பெளர்ணிமி கள் பூமிக்கு அருகில் நிகழும்; அப்போது அவை வழக்கத்துக்கு மாறாகப் பெரிதாகத் தோன்றும் இவைகளை சூப்பர் மூன் அல்லது மிகப்பெரிய நிலவு என்பார்கள்.
How Many Supermoons Are There in 2023?
பழைய விவாசாயிகள் பஞ்சாங்கத்தின்படி 2023 ஜுலை , ஆகஸ்ட், செப் டம்பரில் ஏற்படக்கூடிய பெளர்ணமிகள் / முழு நிலவுகள் சூப்பர் மூன் எனும் பெரிய நிலவுகள் ஆகும் .
இன்னும் ஒரு அதிசயம் என்ன வென்றால் 2023 ஆகஸ்ட் மாதம் ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் வருகின்றன. அதில் இரண்டாவது வரும் பெளர்ணமி ப்ளூ மூன் Blue Moon எனப்படும் .
xxxx
ப்ளூ மூன் BLUE MOON என்றால் என்ன?
ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வந்தால் — பெளர்ணமிகள் வந்தால் —
ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வந்தால் — பெளர்ணமிகள் வந்தால் — அதில் இரண்டாவது வருவதை இவ்வாறு அழைப்பர். அதன் நிறம் நீலம் என்று கருதி விடக்கூடாது. அமெரிக்க விவசாயிகள் காலண்டர் ஜனவரியில் துவங்கி டிசம்பரில் முடிவதல்ல. அது டிராபிகல் இயர் Tropical Year எனப்படும் வேறு கணக்காகும். ஆயினும் 1946 முதல், நாம் பின்பற்றும் காலண்டரில் இரண்டு முழுநிலவுகள் வந்தாலும் ஒன்றை ப்ளூ மூன் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.
எப்போதாவது அதிசயமாக நிகழ்வதை ஆங்கிலத்தில்Once in a blue moon என்பார்கள். இதையே தமிழில் நாம் அத்தி பூத்தாற்போல என்போம். அல்லது பேச்சு வழக்கில் ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை என்போம் .
31 August 2023
The next blue moon takes place on 31 August 2023. As this Moon is also a supermoon, it will be a Super Blue Moon.
அடுத்த நீல முழு நிலவு 2023 ஆகஸ்ட் 31ம் தேதி நிகழ்கிறது. இது சூப்பர் நிலவாக இருப்பதால் சூப்பர் ப்ளூ மூன் எனப்படும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் நாளிதழில் 1-6-2023 அன்று வெளியான கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது
ஜூன் 1 – ஹெலன்கெல்லர் நினைவு நாள்
தடைகளை அகற்றும் விடைகள்! – 2
ச.நாகராஜன்
மரங்களின் நாயகி!
2021 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயதான துளஸி கௌடாவும் ஒருவர்.
அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பற்றிய செய்திகள் சுவையானவை; ஆச்சரியகரமானவை. உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஹளகி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஹொன்னளி என்ற கிராமத்தில் வாழ்பவர்.
30000 மரங்களை அவர் இதுவரை நட்டிருக்கிறார்! மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகளில் இவரது ஞானம் அபாரமானது.
காடு பற்றிய என்சைக்ளோபீடியா இவர். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கணவனை 17ஆம் வயதிலேயே இழந்து விதவையானார். பின்னர் தன்னார்வலராக வனத் துறையில் சேர்ந்தார். சில காலம் கழித்த பின்னர் இவரது வேலை வனத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டது.
அறுபது ஆண்டுகளாக 30000 மரங்களை இவர் நட்டிருக்கிறார். நீரின் தரம் அதிகரிக்க வேண்டுமா, நீர் வளம் சிறந்து இருக்க வேண்டுமா அப்போது மரங்கள் அதிகமதிகம் தேவை என்பதே இவரது தாரக மந்திரம். அதே போல மண் வளம் சிறக்கவும் காடுகளே காரணம் என்கிறார் இவர்.
சுற்றுப்புறச் சூழல் சிறக்கவும், காற்றின் நச்சுத் தன்மை நீங்கி அது சுத்தமாக இருக்கவும் காடுகள் இன்றியமையாதது என்று கூறும் இவர் மரங்களின் பால் அலாதி அன்பு கொண்டவர். தினமும் நூற்றுக் கணக்கான மரங்களை அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வெட்டித் தள்ளுகிறோம். அதே அளவோ அதற்கு அதிகமாகவோ மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமை அல்லவா என்று கேட்கிறார் இவர். மரங்களின் பால் இவர் கொண்டுள்ள அன்பைப் பார்த்த மக்கள் இவருக்கு ‘விருக்ஷ தேவி’ என்ற செல்லப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர்.
மனம் போன போக்கில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கைச் செல்வத்தை மனித குலம் அழிக்க முற்படும் போது அதைத் தடுத்து விழிப்புணர்வை ஊட்டும் துளஸிகள் நிறைய பேர் நமது நாட்டிற்குத் தேவை அல்லவா!
இயற்கையை அழித்தால் வரும் தடைகள் ஏராளம்! அந்தத் தடையைப் போக்கும் விடையாக அமைகிறார் துளஸி!
கல்லூரியில் படிக்க 2500 மைல் நடந்தவர்!
கயிரா : தோற்றம் : 1942 மறைவு 14-10-2012
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நியாஸாலேண்டில் மப்லே என்ற கிராமத்தில் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் லெக்ஸன் கயிரா. பிறந்தவுடன் குழந்தையை அதன் தாயார் டிடிமு ஆற்றில் தூக்கி எறிந்து விட்டார். ஏனென்றால் குழந்தையை வளர்ப்பதற்குப் போதுமான வசதி அவரிடம் இல்லை. அண்டை அயலார் அலறி அடித்துக் கொண்டு குழந்தையை டிடிமு ஆற்றிலிருந்து காப்பாற்றினர். அன்றிலிருந்து அந்தக் குழந்தையின் பெயரில் டிடிமு சேர்ந்து அவர் லெக்ஸன் டிடிமு கயிரா ஆனார். பள்ளிப் படிப்பை முடித்த லெக்ஸனுக்குச் சிறந்த கல்லூரியில் படிக்க ஆசை. அவரது பள்ளியில் இருந்த குறிக்கோள் வாசகம் : நான் முயற்சி செய்வேன் – I will Try – என்பது.
தனது தாயாரிடம் சென்று, “அம்மா. நான் அமெரிக்கா சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். உனது ஆசியும் அனுமதியும் வேண்டும்” என்றார்.
அம்மாவிற்கு அமெரிக்கா என்றால்அது எங்கு இருக்கிறது என்பதே தெரியாது.
அவர், “ ஆஹா! அதற்கென்ன! தாராளமாகப் போய் வா” என்று ஆசி கூறி அனுமதி தந்த அவர், “ எப்போது கிளம்பப் போகிறாய்?” என்றார்.
அவருக்கு அமெரிக்கா எங்கு இருக்கிறது என்பது தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை ஊகித்த கயிரா பரபரப்புடன் “நாளைக்கே” என்றார்.
மறுநாளே கிளம்பி விட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் நியாஸாலேண்டிலுருந்து கெய்ரோ 3000 மைல் தூரத்தில் இருந்தது. அதை நான்கு நாட்களில் அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கயிரா ஐந்து நாட்கள் கழித்து 25 மைல் தூரம் மட்டுமே நடந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
காட்டு வழியாகவும் குக்கிராமங்கள் வழியாகவும் ஆங்காங்கு கிடைத்த வேலைகளைச் செய்து பசியாறி ஒரு வருடம் நடந்து கொண்டே இருந்த கயிரா உகாண்டா நாட்டை வந்தடைந்தார். அங்கு செங்கல் சூளை ஒன்றில் வேலை கிடைத்தது. கம்பாலாவில் அமெரிக்க கல்லூரிகளைப் பற்றிய விவரம் அடங்கிய டைரக்டரி அவருக்குத் தற்செயலாகக் கிடைத்தது.
வாஷிங்டனில் உள்ள மவுண்ட் வெர்னானில் உள்ள ஸ்காகிட் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பித்தார்.
மூன்று வாரங்களில் கல்லூரியில் இடம் தருவதாகவும் கூடவே ஒரு வேலையும் தருவதாகவும் பதில் வந்தது.
திரும்பவும் நடக்க ஆரம்பித்தார் கயிரா. அவரது ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் ஏழ்மை நிலையையும் கேட்டு பரிதாபப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரி கல்லூரி நிர்வாகத்திற்கு அவரைப் பற்றி விளக்கமாக கடிதமொன்றை அனுப்பினார்.
உடனே அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் நிதி திரட்ட ஒரு சிறப்பு உதவி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து 1700 டாலர் சேர்த்து அவருக்கு அனுப்பினர்.
ஒரு வழியாக நடையாய் நடந்து அவர் ஸ்காகிட் கல்லூரியை அடைந்த போது அவருக்கு அங்கு ஒரு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
“உனக்கு என்ன ஆசை?” என்று கேட்ட போது எனது நாட்டிற்குப் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை என்றார்.
அனைவரும் நகைத்தனர். கயிரா சொல்லக் கூடாத எதையேனும் சொல்லி விட்டோமோ என்று திகைத்தார்.
அங்கு படித்தார்; தேர்ந்தார். ‘தி லூமிங் ஷேடோ’ என்ற நாவலை எழுதினார். இங்கிலாந்தை தனது வசிப்பிடமாகக் கொண்டு கேம்பிரிட்ஜில் பேராசிரியராகப் பணி புரிய ஆரம்பித்தார்.
தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஐ வில் ட்ரை’ என்ற தலைப்பிட்டு ஒரு நூலாக எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பாக விற்பனையானது. அவர் பெயரில் அவரது நாட்டில் ஒரு பள்ளியும் சிம்பம்பா என்ற கிராமத்தில் துவக்கப்பட்டது. 2016இல் அவரது அஸ்தி அங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க்கையே தடைக் கல்லாக இருந்தாலும் அதைப் படிக்கட்டுக் கல்லாக மாற்றிய கயிராவின் லக்ஷிய வாசகம் – நான் முயற்சி செய்வேன் என்பது தான்!
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
தங்களுக்குத் துன்பம் அளிக்க வந்த தடைகளை எல்லாம் எதிர்கொண்டு துன்பம் கண்டு பயப்படாதிருத்தல், மனம் தளராமை, உற்சாகம், குறிக்கோளை அடைய இடைவிடா உழைப்பு உள்ளிட்டவற்றை தங்களது விடைகளாக அளித்த இவர்கள் நமது வாழ்க்கைக்கான வழிகாட்டிகள்!
இவர்கள் அனைவரது வாழ்க்கையும் ஒரு ஆங்கிலப் பொன்மொழியை நினைவூட்டுகிறது.
When troubles come to trouble you, don’t allow the troubles to trouble but allow the trouble to trouble the troubles so that no trouble is free to trouble you. Let not the troubles trouble you but let the troubles trouble the troubles.
தொந்தரவுகள் உன்னைத் தொந்தரவு செய்ய வரும் போது அவற்றை உன்னை தொந்தரவு செய்ய விடாமல் தொந்தரவுகளை தொந்தரவு செய்ய தொந்தரவுகளை அனுமதித்து விடு. அப்போது ஒரு தொந்தரவும் உன்னைத் தொந்தரவு செய்யாது. தொந்தரவுகளை உன்னைத் தொந்தரவு செய்ய விடாதே; தொந்தரவுகளைத் தொந்தரவுகளே தொந்தரவு செய்யட்டும்.
அழகாக சுருக்கமாகத் தான் சொன்னார் வள்ளுவர்:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். குறள் எண் 623
1.அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு.,இனிப்புச் சுவை அதிகம்.
3.ரியால்கர் அல்லது ரெட் ஆர்ஸெனிக் எனப்படும் விஷச் சரக்கு ⇠
4. போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். செடியிலிருந்து பெறப்படுகின்றது. இந்தச் செடியை தமிழில் கசகசாச் செடி என்பர்.
8. (Across)ஒரு வகைமானிலிருந்து கிடைக்கும் வாசனைப் பொருள் ; ஒரு மஞ்சளின் பெயரில் ஒட்டிகொள்கிறது மருந்துகளில் பயன்படுகிறது
11.வீட்டுவாசலில் வளர்த்தால் கண் திருஷ்டி போகும். சொறி சிரங்குகளுக்கு எதிரி
12.எரி …….., சவுக் ……..அக்கர ………. இனிப்பு………. வகைகள் இங்கே கிடைக்கும் என்று படிக்கிறோம் . இதில் அக்கர ……. என்பது ஒரு மூலிகையின் பெயர்.
13. ஜீரணத்துக்கு உதவும் ‘ரகம்’; பல ரகங்கள் இருந்தாலும் இதை சீ , சீ என்று ஒதுக்கக் கூடாத ‘ரகம்’.⇠
14.திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி ஆகிய இரண்டுடன் சேர்க்கப்படும் மூன்றாவது பொடி⇠
xxx
கீழே
2.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ட xxxxx ‘ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித்xxxxx என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
5.இதை வைத்து xxxxx நீர் செய்வார்கள். ஆங்கிலத்தில் xxxxxx வாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் .வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு xxxx திரவம் அற்புதமாக வேலை செய்யும் .(Go up)⇡
6.ஜீரணத்துக்கு உதவும் ; சாறு, துவையல், ஊறுகாய் எல்லாம் செய்யலாம்.(go Up)⇡
7 இதனுடைய நிறத்தை வைத்தே இதன் பெயர் வந்தது அல்லது நிறத்துக்கே இது பெயர் தந்தது . இந்திய உணவில் இது அதிகம் பயன்படுகிறது.’
8.Down `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் xxxx மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’, `- இது சித்தர்கள் வாக்கு. `xxxx உண்டால் மிடுக்காய் வாழலாம்’, `ஈனாத மாட்டுக்கு ஒரு xxxxxx ; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு xxxx ‘என்ற பழமொழிகளை அறிந்தால் விடை கிடைக்கும்.
9.இதைக் காட்டினால் நல்ல பாம்பும் பிரக்ஞை அற்றுப்போகுமாம். இது இருக்கும் இடங்களில் பாம்பு வராதாம்
10.மற்றவர்களை அண்டி /சுரண்டி வாழ்வோரை இந்தத் தாவரத்தின் பெயரைச் சொல்லித் திட்டலாம்..(Go up)⇡
15.கறுப்பு நிறம் ஆனாலும் சாப்பிடலாம், பச்சை நிறம் ஆனாலும் சாப்பிடலாம்; கேரளத்தில் வீடு தோறும் தோட்டத்தில் கொடியாகப் படரும் ; மிளகாய் என்பதை இந்தியர் அறியாத காலத்தில் இதுதான் காரம்.. (Go up)⇡