மேலும் 30 காந்தி பொன்மொழிகள் (Post No.12,062)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,062

Date uploaded in London – –  30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 ஜூன் 2023 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் – ஜூன் 2 வைகாசி விசாகம்;  21- சர்வதேச யோகா தினம்; 29- பக்ரீத்

அமாவாசை – 17; பெளர்ணமி – 3; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 13, 29

சுப முஹூர்த்த நாட்கள் – 5,8,9,28

Xxx

சென்ற மே மாத காலண்டரில் 31  காந்திஜி பொன்மொழிகளைக் கண்டோம்.இதோ மேலும் 30 பொன்மொழிகள் .

ஜூன் 1 வியாழக்கிழமை

125 ஆண்டுகள் வாழ ஆசை

125 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் என்று நான் பேசியது வெற்றுப் பேச்சல்ல; சிந்தித்த பின்னரே சொன்னேன்.  ஈஸா வாசியோபநிஷத்தின் மூன்றாவது மந்திரத்தில் 100 ஆண்டுகள் வாழ மனிதன் ஆசைப்பட்ட வேண்டும் என்று வருகிறது. ஒரு வியாக்கியானத்தில் 100 என்பது உண்மையையில் 125 ஆண்டு என்றுள்ளது.

.xxx

ஜூன் 2 வெள்ளி க்கிழமை

யக்ஞம் என்றால் என்ன ?

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர் நலனை உத்தேசித்து செய்யும் எல்லாப்பணிகளும் யக்ஞம் எனப்படும்.அது இக, பர நலன் ஆக இருக்கலாம். சொல், செயல், சிந்தனையில் செய்யும் எல்லா வேலைகளும் இதில் அடக்கம்; அது மட்டுமல்ல; மனிதர் நலன் மட்டுமன்று; எல்லா உயிரினங்களையும் பற்றியது இது.

Xxx

ஜூன் 3 சனிக்கிழமை

இதனால்தான் பகவத் கீதையும் சொல்கிறது : யக்ஞம் செய்யாமல் சாப்பிடுபவன் திருட்டு உணவைச் சாப்பிடுவதாகும் என்று.

xxx

ஜூன் 4 ஞாயிற்று க்கிழமை

இன்று நாம் பார்ப்பது உண்மையான இந்து மதமல்ல .இது கேலிக்கூத்து ஆகும். அதனாலேதான் நான் வக்காலத்து வாங்க வேண்டி வருகிறது ; இல்லாவிடில் அதுவே தன்னை விளம்பரப்படுத்தும். .

Xxxx

ஜூன் 5 திங்கட் கிழமை

நம்முடைய அற்புதமான கண்டுபிடிப்புகள்

பொருட்கள் விஷயத்தில் மேலை நாடுகள் அற்புதமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது போல இந்து மதம் அதைவிட அற்புதமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து இருக்கிறது. இது சமயம், ஆன்மா சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்பு. ஆனால் அதை நாம் கண்டுகொள்ளவில்லை மேலை நாட்டு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நம் கண்களைக் கூசச் செய்துவிட்டது

Xxx

ஜூன் 6 செவ்வாய்க் கிழமை

இன்னொரு விஷயத்தைச் சொல்ல நான் மறந்துவிட்டேன்.40 ஆண்டுகளுக்கு முன்னரே மாக்ஸ்முல்லர் (MAX MULLER) சொன்னது என்னவென்றால் மறு பிறப்பு என்பது உண்மைதான் என்ற ஞானோதயம் ஐரோப்பாவில் உதயமாகிவிட்டது என்பதாகும்; நல்லதுதான் ; இது முழுக்க முழுக்க இந்துக்களின் கொள்கை .

Xxx

ஜூன் 7 புதன் கிழமை

ஆங்கிலேயர் சொன்ன தவறான கருத்து

நாம் இதற்கு முன்னர் ஒரே தேசமாக இருந்தது இல்லை என்று  ஆங்கிலேயர்கள் நமக்குக் கற்பித்துவிட்டு, நாம்  அப்படி ஒரே தேசமாக இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என்றும் சொல்கிறார்கள் .இதற்கு ஆதாரமே  இல்லை; வெள்ளைக்காரர்கள் இங்கு வருவதற்கு முன்னரே நாம் ஒரே தேசமாக இருந்தோம் .

xxx

ஜூன் 8 வியாழக் கிழமை

சர் ஜகதிஷ்  சந்திர போஸின் (SIR J C BOSE) அற்புதமான ஆராய்ச்சியால் ஜடப்பொருட்களிலும் உயிர் இருக்கிறது என்பதை அறிகிறோம் .

XXX

ஜூன் 9 வெள்ளிக் கிழமை

எனக்குக் கோவிலா ?

ஒரு பத்திரிகை செய்தியைப் பார்த்தேன். எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிறார்கள் என்றும் அதில் நான் வழிபடப்படுகிறேன் என்றும் செய்தி கூறுகிறது இது அப்பட்டமான தனி நபர் ஆராதனை; யார் கோவிலை  கட்டினார்களோ அவர்கள், பணத்தை வீணடித்து இருக்கிறார்கள் ; அங்கு வரும் கிராம மக்களை தவறான பாதையில் செலுத்துகிறார்கள்;

நான் என்னுடைய வாழ் நாள் முழுதும்  எதைப்  போதித்தேனோ அதை கேலிச்  சித்திரம் வரைந்து கிண்டல் செய்வது போல இருக்கிறது

XXX

ஜூன் 10 சனிக் கிழமை

புனிதமான பூணூல்

நான் பூநூலைக் கழற்றிவிட்டேன் ஆயினும் பூணூல் அணியும் உபநயனம் சடங்கில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது பூணூலை அணிவது புதிய பிறவி எடுப்பது போலாகும் ; அதை அணிவதற்கு முன்னர் ஒரு பிறவி; அது உடல் ரீதியிலான பிறப்பு..   பூணூலை அணிந்தவுடன் எடுக்கும் பிறப்பு ஆன்மீகப் பிறப்பு ஆகும்

XXXX

ஜூன் 11 ஞாயிற்றுக் கிழமை

உண்ணாவிரத நோன்பு

இது ஒரு புனிதமான விரதம் ;உண்மையான உண்ணா நோன்பு உடலையும், உள்ளத்தையும் அதில் உறையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது

XxxX

ஜூன் 12 திங்கட் கிழமை

பிரார்த்தனை

உள்ளத்திலிருந்து எழும் பிரார்த்தனை பல அற்புதங்களைச்  செய்ய வல்லது . அது மேலும் ,மேலும் தூய்மையை நாடும் ஆன்ம எழுச்சியாகும்.; அப்படி கிடைக்கும் தூய்மையை  உன்னத பணிக்குப் பயன்ப டுத்துவது பிரார்த்தனை ஆகும்.

Xxx

ஜூன் 13 செவ்வாய்க் கிழமை

சம்ஸ்க்ருதம் படியுங்கள்

சம்ஸ்க்ருத மொழியின் மகத்தான சக்தி பற்றி விவேகானந்தர் சொன்னதை நானும் நம்புகிறேன். சம்ஸ்க்ருதம் கற்பது கஷ்டமானது என்ற தேவையற்ற பயம் நம்மிடையே இருக்கிறது.முயற்சியுள்ள ஒருவனுக்கு எந்த ஒரு மொழியைக் கற்பதற்குள்ள கஷ்டத்தை விட சம்ஸ்க்ருதம் கற்பதில் கஷ்டம் எதுவும் இல்லை.

Xxx

ஜூன் 14 புதன் கிழமை

காயத்ரீ மந்திரம்

காயத்ரீ மந்திரத்தைப்  பலமுறை ஜபித்து நோயைக் குணப்படுத்துவதானது பிரார்த்தனைக்கு நாம் கொடுத்துள்ள விளக்கத்துக்கு நல்ல உதாரணமாகும்; ஒரு தேசத்துக்கு ஆபத்து ஏற்படுகையில் அல்லது நாட்டுக்குக் கஷ்டம் ஏற்படுகையில் காயத்ரீ மந்திரத்தை சிரத்தையுடன், மனத்தை ஒருமித்து, சரியான முறையில் ஜபித்தால் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்

Xxx

ஜூன் 15 வியாழக் கிழமை

உண்ணாவிரதம் – நோன்பு (FASTING)

இந்துமத நூல்களில் நோன்பு, விரதம் பற்றி ஏராளமான விஷயங்கள் காணப்படுகின்றன பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் இன்றும்கூட எதற்கெடுத்தாலும் நோன்பு, விரதம் அனுஷ்டிப்பதை நாம் காண்கிறோம். தீங்கு எதுவும்  செய்யாத சடங்கு இது.

Xxxx

ஜூன் 16 வெள்ளிக் கிழமை

கிறிஸ்தர்களுக்கு விளங்குவதே இல்லை

கிறிஸ்தவ மத ப்ராட்டஸ்டன்ட் PROTESTANT பிரிவினருடன்தான் எனக்கு பெரிய பிரச்சனை; எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் ஜாஸ்தி; அதுமட்டுமல்ல, அவர்கள் நட்பை     மிகவும் மதித்துப் போற்றுபவன் நான்.ஆனால் ஒரு உண்மையை இன்று பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கிறேன். அவர்களை  அறிந்த  காலத்திலிருந்தே , அவர்களுக்கு நோன்பு, உண்ணாவிரதம் என்பதெல்லாம் பிடிக்கவில்லை என்பதை அறிந்தேன் ; இது ஏன் என்று எனக்கு விளங்கவேயில்லை .

Xxx

ஜூன் 17 சனிக் கிழமை

கடவுளின் குரல் VOICE OF GOD எனக்குக் கேட்கும் என்பது  புதிய தகவல் ஒன்றும் இல்லை; ஆனால் துரதிருஷ்டவசமாக அதற்கு ஆதாரம் காட்ட என்னால் முடிவதில்லை.ஆனால் கிடைக்கும் பலன்கள் மூலம் அதை அறிய முடிகிறது .

Xxx

ஜூன் 18 ஞாயிற்றுக் கிழமை

நான் திண்டாடித் திக்குமுக்கு தெரியாமல் தவித்த காலத்திலும் கடவுள் என்னை ஒருபோதும் கைவிடவில்லை . எனக்கு அவர் சுதந்திரமே தந்ததில்லை நான் நினைத்தற்கும் எதிராக என்னை சரியாக வழி  நடத்திச் சென்றார் . அவரை எவ்வளவுக்குச் சரண் அடிக்கிறோமோ அவ்வளவுக்கு ஆனந்தம் கிடைக்கும் .

XXXX

ஜூன் 19 திங்கட் கிழமை

வைஷ்ணவ ஜனதோ பாடல்

சக மனிதர்களுக்கு எவன் சேவை செய்கிறானோ அவன் இருதயத்தில்தான் கடவுளும் இடம் பிடிப்பார். அடுத்தவன் படும் கஷ்டத்தைத் கண்டு எவன் கண்ணீர் சிந்துகிறானோ அவன்தான் உண்மை வைஷ்ணவன் என்று கடவுளைக் கண்ட, அறிந்த நரசிம்ம மேத்தாவும் பாடினார் .

XXXX

ஜூன் 20 செவ்வாய்க் கிழமை

நோன்பு நாளில் சூதாட்டம்

ஜன்மாஷ்டமி தினத்தில் நோன்பு இருப்பதாக கருதிக்கொண்டு சூதாட்டம் ஆடுகிறார்கள் இந்த வகை உண்ணாவிரதத்தில் பலன் இல்லை ; அதற்கு நேர்மாறாக மேலும் தாழ்ந்துதான் போவான் .

XXX

ஜூன் 21 புதன் கிழமை

ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது

என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் ; அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .

Xxx

ஜூன் 22 வியாழக் கிழமை

இந்து தர்மம் என்பது ரத்தினங்கள் நிறைந்த கங்கு கரை காணாத மஹா சமுத்திரம் ; எவ்வளவு ஆழமாக செல்கிறோமோ அவ்வளவு ரத்தினங்களைக் காணலாம்.

XXX

ஜூன் 23 வெள்ளிக் கிழமை

ராம- ராவண யுத்தம்

ராவணனை ராம பிரான் வெற்றி கொண்ட  நாளில் தசரா கொண்டாடுகிறோம். இந்த வெற்றி வன்முறை மூலம் கிடைத்த வெற்றியன்று ஆயுதமில்லாமல், கவசமில்லாமல், பலம் வாய்ந்த , தேரில் விரைந்து செல்லும் ராவணனை நீங்கள் எப்படிச் ஜெயிக்கப் போகிறீர்கள் என்று ராம பிரானை விபீஷணர்  கேட்டார். ராமர் சொன்னார்- நம்பிக்கையும் மனத்தூய்மையும் இந்த யுத்தத்தில் வெற்றி பெறும் .

Xxx

ஜூன் 24 சனிக் கிழமை

ராமரின் வில் என்பது புலனடக்கம் அவனது வெற்றி தீமையையழித்து நன்மை வெற்றி பெற்றதாகும்.

Xxx

ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமை

வெறி நாய்களைக் கொல்லுங்கள்

நாம் தவறிழைக்கும், பூரணத்துவம் பெறாத மனிதர்கள்.; வெறி நாய்களைக் கொல்லுவதைத்த தவிர நமக்கு வேறு வழியில்லை; மனிதர்களைக் கொல்லும் மனிதனைக் கொல்ல வேண்டிய தவிர்க்க முடியாத கடமை கூட சில நேரங்களில் நமக்கு வந்துவிடுகிறது .

Xxx

ஜூன் 26 திங்கட் கிழமை

தெரு நாய்கள்

தெரு நாய்களை ஒன்றுமே செய்யக்கூடாது என்ற நிலை நீடித்தால், விரை வில் அவைகளைக் கொன்று தீர்க்கும் அல்லது காயடிக்கும் வேலை, நம் முன்னால் வந்துவிடும். மூன்றாவது வழி உண்டு; நாய்கள் காப்பகம் அமைப்பதாகும் .

Xxx

ஜூன் 27 செவ்வாய்க் கிழமை

பிச்சைக்காரர்கள் வேண்டாம்

வீட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு கவளம் சோறு போட்டுவிட்டு புண்ணியம் சம்பாத்தித்துவிட்டதாக எண்ணுகிறோம். இதன் மூலம் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையைத்தான் நாம் அதிகரிக்கிறோம் ; பிச்சை என்னும் இழிதொழிலை ஊக்குவிக்கிறோம்;  சோம்பேறித்தனத்தையும் சாத்திரத்துக்கு ஒவ்வாததையும் அதிகரிக்கிறோம்

Xxx

ஜூன் 28 புதன் கிழமை

அதற்காக எல்லோரையும் பட்டினி போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வயதானவர்களுக்கும் கண் பார்வை தெரியாத வர்களுக்கும் நாம் ஆதரவு தரவேண்டும் எல்லோரும் இப்பணியைச் செய்ய முடியாது அரசாங்கமோ, தலைவர்களோ இதைச் செய்யலாம். அ த்தகையோருக்கு தர்மசிந்தனையாளர்கள் நிதியுதவி செய்யலாம் .

XXXX

ஜூன் 29 வியாழக் கிழமை

நமக்குள் மஹா பாரதப் போர்

வரலாறு என்ற போர்வையில்  சித்தரிக்கப்பட்ட மஹாபாரதம் பற்றி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார் ; இது பல லட்சம் மக்களின் இதயத்தில் தினமும் நடக்கும் போராட்டமே.; பழைய பழக்க வழக்கங்களை உதறிவிட்டு , உள்ளத்தில் உறையும் தீமைகளை ஒழித்துவிட்டு, நன்மையை அதற்குரிய இடத்தில் அமர்த்தும் நோக்கம் மனிதனுடையதாகும்.

Xxx

ஜூன் 30 வெள்ளிக் கிழமை

வருணிக்க முடியாத ஒரு மஹா சக்தி எங்கும் வியாபித்துள்ளது. நான் அதை உணர்கிறேன்; ஆனால் கண்களால் கண்டேன் இல்லை ; காணமுடியாத அந்த சக்தி அதுவே உணரச் செய்கிறது. ஆனால் ஆதாரத்தைக் காட்டமாட்டேன் என்கிறது ; இதை ஐம்புலன்களால் அறிய முடியாது.; இது அதற்கெல்லாம் அப்பாற்பட்டது .

Source book- HINDU DHARMA, M K GANDHI, NAVAJIVAN PUBLISHING HOUSE, AHMEDABAD, 1950, RUPEES FOUR. தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

–சுபம் —

TAGS- காந்தி, பொன்மொழிகள், ஜூன் 2023, காலண்டர், பிச்சைக்காரர்கள், தெரு நாய்கள், ராம நாமம் , பிரார்த்தனை, உண்ணாவிரதம், நோன்பு, கிறிஸ்தவர்கள் , இந்துமதம், பூணூல், வைஷ்ணவன்

Mountains of India Crossword (Post no.12,061)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,061

Date uploaded in London – –  30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Try to find the famous mountains of India. There are nine mountains, mostly with their popular Sanskrit names, are listed here.

Across Down

2. This mountain range servers as a natural border between Maharashtra and Madhya Pradesh state. River Tapti originates here.

4. This is a mountain range in Kashmir region spanning the borders of Pakistan, China, and India, with the northwest extremity of the range extending to Afghanistan and Tajikistan.

5.Eastern Ghat mountain chain’s Sanskrit name (GO LEFT TO RIGHT)

6.sanskrit literature refers to its sandal wood trees and the Southern Breeze from it. (GO LEFT TO RIGHT)

7. Western Ghat mountain chain’s Sanskrit name

8.Ramayana says Hanuman started his journey from this mountain to Sri Lanka

xxxx

Down

1. Northern border of our country; mentioned from Rig Veda to Tamil Sangam literature; Kalidasa referred to it as the Measuring Rod of Earth in Kumarasambhava.

3. Guru Sikhar and Mount Abu are famous peaks here.

5.River Tambrabarani originates here; Place of famous Rishi/seer Agastya.

9.Agastya laid road route for the first time on this central India mountain range. Puranas describe this anecdote as Agastya belittled this range; he subdued the arrogance of this mountain that never allowed anyone to cross. (GO UP FROM DOWN)

Answers

1.HIMALAYA, 2.SATPURA, 3.ARAVALLI, 4.KARAKORUM, 6.MALAYA, 5.POTHIYA

5.PURVANCHALA, 7.SAHYADRI, 8.MAHENDRA, 9.VINDHYA

 answers: 

H 1   S 2A 3TPURA
I    R     
M K 4ARAKORUM
A    V    A
LAHCNAVRP 5Y
A    L   OH
Y AYALAM 6 TD
A    I   HN
  S 7AHYADRII
M 8AHENRA AV 9

-SUBHAM–Tags- Mountains, Crossword, Vindhyas, Satpura, Aravalli

புலவர் கண்ட பெண்! (Post No.12,060)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,060

Date uploaded in London –   30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஒரு பெண்ணுக்கு கண்கள் ஏழுமுலை ஆறுகாது ஐந்துநெற்றி நான்கு! – புலவர் கண்ட பெண்! 

ச.நாகராஜன்

மதுரகவிராயர் என்ற ஒரு புலவர் தமிழின் பால் மிக்க பற்று கொண்டவர். இனிய தமிழ்ப் பாடல்களை அவ்வப்பொழுது சமயத்திற்கேற்றபடி உடனே புனைவார்.

அவருக்கு பிரம்பூர் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் பொருள் உதவி கொடுத்து ஆதரித்து வந்தார்.

ஒரு நாள் அவரைப் பார்த்த புலவர் கூறினார் : கர்ண ப்ரபுவே! ஆனந்த ரங்க மகிபாலா! உனது பிரம்பூரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்குக் கண்கள் ஏழு, முலைகள் ஆறு, காதுகள் ஐந்து, நெற்றி நான்கு என்றார்.

ஆனந்தரங்கம் பிள்ளை அசந்து போனார். பாடலின் பொருளைக் கண்டுபிடித்துப் புலவருக்குப் பரிசுகள் தந்தார்.

பாடல் இதோ:

கார்படைத்த கரதலத்தான் றுரைதிருவேங் கடமளித்த கன்னாவெங்கும்

பேர்படைத்த வானந்த ரங்கமகி பாலாநின் பிரம்பூர் நாட்டில்

நேரிழைக்கு விழியேழு முலையாறு காதைந்து நெற்றி நான்கு

பாரிடத்திலிப் புதுமை கண்டுவந்தே னிதன்பயனைப் பகர்ந்திடாயே

பாடலின் பொருள்:

கார்படைத்த – மேகத்தின் தன்மையைக் கொண்ட

கரதலத்தான் – கையை உடையவனும்

துரை – துரையும் ஆகிய

திருவேங்கடமளித்த கன்னா – திருவேங்கடம் என்ற வள்ளல் ஈன்றெடுத்த கர்ணனே

பேர் படைத்த – எங்கும் பிரபலமாக உள்ள

ஆனந்தரங்க மகிபாலா – ஆனந்தரங்க பூபாலனே

நின் பிரம்பூர் நாட்டில் – உனது பிரம்பூர் நாட்டில்

நேரிழைக்கு – ஒரு பெண்ணுக்கு

விழி ஏழு – ஏழு கண்கள் உள்ளன

முலை ஆறு – மார்பகங்கள் ஆறு உள்ளன

காது ஐந்து – ஐந்து காதுகள் உள்ளன

நெற்றி நான்கு – நான்கு நெற்றிகள் உள்ளன

பார் இடத்தில் – இந்த பூமியில்

இப்புதுமை கண்டு வந்தேன் – இந்தப் புதுமையைக் கண்டு வந்திருக்கிறேன்

இதன் பயனை – இதன் பொருளை

பகர்ந்திடாய்- சொல்வாயாக

நேரிழை என்பதை பன்னிரெண்டு ராசிகளில் ஒன்றாக அமையும் கன்னி ராசி என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு அழகியைக் கண்டேன் என்று பொருள்.

நேரிழைக்கு ஏழு கண்கள் என்பது ராசிகள் பன்னிரெண்டில்  கன்னி ராசிக்கு ஏழாவது ராசியாக அமையும் மீன ராசி என்று எடுத்துக் கொண்டு அவள் கண்கள் கெண்டை மீன் போல உள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து முலை ஆறு என்பது ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு ஆறாவது ராசியாக அமையும் கும்ப ராசி என்று எடுத்துக் கொண்டு அவளது திரண்ட மார்பகங்கள் குடம் போல அழகுற அமைந்துள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து காதுகள் ஐந்து என்பது ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு ஐந்தாவது ராசியாக அமையும் மகர ராசியை எடுத்துக் கொண்டு அவள் அழகிய மகர குண்டலங்களை காதில் அணிந்துள்ளாள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து நெற்றி நான்கு என்பதை ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு நான்காவது ராசியாக அமையும் தநுசு என்று எடுத்துக் கொண்டு அவள் நெற்றி வில் போல அமைந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

வில் போன்ற நுதல், மகர குண்டலங்கள் அணிந்த காது, குடம் போன்ற மார்பகம், கெண்டை மீன் போன்ற கண்கள் உண்ட பேரழகியை உன் பிரம்பூர் நாட்டில் கண்டேன் என்கிறார் புலவர்.

ஆனந்தரங்கம் பிள்ளைக்கும் மகிழ்ச்சி, அவரிடமிருந்து பரிசு பெற்ற மதுரகவிராயருக்கும் மகிழ்ச்சி, ஒரு புதிர்ப் பாடல் கிடைத்ததில் நமக்கும் மகிழ்ச்சி! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தமிழின்பத்தில்!!

***

தேச பக்தர்கள் குறுக்கெழுத்துப் போட்டி(Post No.12,059)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,059

Date uploaded in London – –  29 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

16 தேசபக்தர்களைக் கண்டுபிடியுங்கள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1. ஜவஹர்லால் நேருவின் தந்தை

3. ஹி ந்துஸ்தான் சோசலிசக் குடியரசு இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ; லாகூரில் தூக்கிலிடப்பட்டவர்

4. இவருடைய இயற் பெயர் மோகன்லால் கரம்சந்த்

5. பூதான இயக்கம், சர்வோதய இய க்கத்தின் மூல கர்த்தா

11. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட மராட்டிய வீரர்

12. செக்கிழுத்த செம்மல் 

15. நவஜீவன் பாரத் ஸபா நிறுவுனர்; பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட தேசபக்தர்

Xxxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

 2. இந்தியாவின் முதல் பிரதமர்

6. ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று தீர்க்கதரிசனத்துடன் பாடியவர்

7. பஞ்சாப்பின் சிங்கம் என்றழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்

8. சிங்கப்பூரில் இந்திய தேசீய ராணுவம்  அமைத்து பிரிட்டிஷ் இந்தியாவின் மீது படையெடுத்தவர்

9. செர்வண்ட்ஸ் ஆப் சொசைட்டி நிறுவனர்; மகாத்மாவின் அரசியல் குரு ; சுதந்திர போராட்ட வீரர்

10. பஞ்சாப் லூதியானாவில் பிறந்து பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி சுடப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் லாகூரில் தூக்கிலிடப்பட்டவர்

13. விருது நகரில் பிறந்த படிக்காத மேதை

14.அந்தமானில் சிறை வைக்கப்பட்ட புரட்சிவாதி; எரிமலை புஸ்தகம் எழுதியவர்.

15.மணியாச்சி ஜங்க்ஷனை புகழ்பெற வைத்த புரட்சிவாதி

1     2    3
          
  4   ஜி,   5 
          7
 6     8  9  
   10       
 11         
          
        12 
      13    14 
 15      16   

 ANSWERS  

மோ1திலால்நேரு 2ருகுரா 3
    ரு    
 கா 4ந்திஜி,பா னோவி 5 
    தா   லா 7
பா 6   நே 8 கோ 9 லா
 சு 10  ன்ர்
தி 11 கர்ஜ்லே
யா தே ராநா ர்
 ர்  வ்  சிவ 12தி
    கா 13 ஞ் சா 14ரா
ப 15த்சிங்வா 16  ய்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.மோதிலால் நேரு

3.ராஜகுரு

4. காந்தி ஜி,

5. வினோபாஜி

11.திலகர் 

12.வ.உசி

15.பகத்சிங்

Xxxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

 2.நேருஜி,

6. பாரதி யா ர்

7.லாலா லஜபதிரா ய்

8. நேதாஜி

9.கோகலே

10.சுகதேவ்

13.காமராஜ்

14.சாவர்கர்

16.வாஞ்சிநாதன்

—-subham—-

Tags- தேச பக்தர்கள், குறுக்கெழுத்துப் போட்டி,

More Interesting Quotations from Mahatma Gandhi; June 2023 Calendar (Post No.12,058)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,058

Date uploaded in London – –  29 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Festival days – 2 Vaikasi Visakam in Temples, 21 Yoga Day,  29 Bakrid

New moon Day – 17; Full moon Day– 3; Ekadasi Fasting Days –  13, 29; Auspicious Days – 5, 8, 9, 28

Source book- HINDU DHARMA, M K GANDHI, NAVAJIVAN PUBLISHING HOUSE, AHMEDABAD, 1950, RUPEES FOUR.

June 1 Thursday

I want to live 125 years

I have not talked about wishing to live up to the age of 125 years without thought. It has a deep significance the basis for my wish is the third mantra from Isopanishad, which, literally rendered,  means that a man should desire to live for 100 years while serving with detachment. One commentary says that 100 really means 125.

XXX

June 2 Friday

What is Yajna?

Yajna means an act directed to the welfare of others, done without desiring any return for it, whether of a temporal or spiritual nature. ‘Act’ here must be taken in its widest sense, and includes thought, word as well as deed. Others embraces not only humanity, but all life.

XXX

June 3 Saturday 

And, therefore, says the Gita, he who eats without offering Yajna, eats stolen food.

Xxx

June 4 Sunday

Today’s Hinduism

What we see today is not pure Hinduism, but often a parody of it. Otherwise it requires no pleading from me in its behalf., but would speak for itself.

Xxx

June 5 Monday

Our Marvellous Discoveries

Just as in the West they have made wonderful discoveries in things material, similarly Hinduism has made still more marvellous discoveries in things of religion, of the spirit, of the soul. But we have no eye for these great and fine discoveries. We are dazzled by the material progress the western science has made.

Xxx

June 6 Tuesday

There is yet another thing I have not mentioned. Max Muller said forty years ago that it was dawning on Europe that transmigration is not a theory, but a fact. Well, it is entirely the contribution of Hinduism.

XxxXX

June 7 Wednesday

Wrong teaching by English

The English have taught us that we were not one nation before and it will require centuries before we become one nation. This is without foundation. We were one nation before they came to India.

Xxx

June 8 Thursday

God is not seen but felt

There is an indefinable mysterious Power that pervades everything. I feel it, though I do not see it. It is this unseen Power which makes itself felt and yet  defies all proof, because it is so unlike all that I perceive through my senses. It transcends the senses.

Xxx

June 9 Friday

Jagadish Chandra Bose

Thanks to the marvellous researches of Sir J C Bose it can now be proved that even matter is life.

Xxx

June 10 Saturday 

A temple to Gandhiji

Under the strange heading I read a newspaper cutting sent by a correspondent to the effect that a temple has been erected where my image is worshipped. This I consider a gross form of idolatry the person who erected the temple has wasted his resources by misusing them, the villagers who are drawn there are misled and I am insulted in that the whole of my life has been caricatured in that temple.

Xxx

 June 11 Sunday

Brahmin’s Sacred Thread

As for the Upanayanam ceremony, though I have discarded it myself, it has, there is no doubt, a deep meaning. The sacred thread is a sign of new birth, a regeneration. Before the adoption of the thread, there is but one birth, that is physical. The adoption of the thread is a sign of the second birth, that is the spiritual.

Xxx

June 12 Monday

Fasting

This is a hoary institution. A genuine fast cleanses body, mind and soul. It crucifies the flesh and to that extent sets the soul free.

Xxx

June 13 Tuesday

Prayer

A sincere prayer can work wonders. It is an intense longing of the soul for its even greater purity. Purity thus gained when it is  utilised for a noble purpose becomes prayer

Xxx

June 14 Wednesday

Learn Sanskrit

I believe in the great power which Vivekananda  used to ascribe to Sanskrit . We are unnecessarily frightened by the  difficulty of learning Sanskrit. For a persevering student it is no more difficult than any of the other languages.

Xxx

June 15 Thursday

Gayatri Mantra

The mundane use of the Gayatri, its repetition for healing the sick, illustrates the meaning we have given to prayer. When the same Gayatri Japa is performed with a humble and concentrated mind in an intelligent manner in times of national calamities and difficulties, it becomes a most potent instrument for warding off danger.

Xxx

June 16 Friday

Hindus fast for anything

Hindu religious literature is replete with instances of fasting, and thousands of Hindus fast even today on the slightest pretext. It is the one that does the least harm.

Xxxx

June 17 Saturday 

Christians don’t like Fasting

My real difficulty is with my Christian Protestant friends, of whom I have so many, and whose friendship I value beyond measure. Let me confess to them that though from my very first contact with them I have known their dislike for fasts, I have never been able to understand it.

Xxx

June 18 Sunday

God ‘s Voice

My claim to hear the Voice of God is no new claim. Unfortunately there is no way that I know of proving the claim except through results.

Xxx

June 19 Monday

God has never forsaken me in my darkest hour. He has saved me often against myself and left me not a vestige of independence. The greater the surrender to Him, the greater has been my joy.

XXXX

June 20 Tuesday

Vaishnava Janatao

God seeks for His seat the heart of him who serves his fellow men. That is why Narasimha Mehta who saw and knew sang He is a true Vaishnava who knows to melt at others’ woe. Such was Abu Ben Adhem. He served his fellowmen, and therefore his name topped the list of those who served God.

Xxx

June 21 Wednesday

Fasting and Gambling – no use

A man who fasts and gambles away the whole of the day as do so many on Janmashtami Day, naturally, not only obtains no result from the fast in the greater purity but such a dissolute fast leaves him on the contrary degraded.

Xxxx

June 22 Thursday

Muslims should not object to Rama Nama

My Rama, the Rama of our prayers is not the historical Rama, the son of Dasaratha, the king of Ayodhya. He is the eternal, the  unborn, the one without a second. Him alone I worship. His aid alone I seek and so should you. He belongs equally to all. I, therefore see no reason why a Mussulman or anybody should object to taking His name. but he is in no way bound to recognise  God as Ramanama. He may utter to himself Allah or Khuda so as not to mar the harmony of the sound.

Xxx

June 23  Friday

Hindu Dharma is a boundless ocean teeming with priceless gems. The deeper you dive, the more treasures you find.

XxxX

June 24 Saturday 

Rama- Ravana Yuddha

Dusserah was the celebration of Ram’s victory over Ravana but his victory was not achieved by violence. When Vibhishana asked Sri Ramachandra  how unarmed, unshod, without any armour, he is going to defeat the heavily armed and mighty Ravana with his chariots, Rama’s reply was that it was faith and purity that were going to win the battle.

Xxx

June 25 Sunday

Rama’s bow was his self control. His victory was the victory of good over evil.

Xxx

June 26 Monday

Destroy rabid dogs

Imperfect, erring mortals as we are, there is no course open to us but the destruction of rabid dogs. At times we may be faced with the unavoidable duty of killing a man who is found in the act of killing people.

Xxx

June 27 Tuesday

If we persist in keeping stray dogs undisturbed, we shall soon be faced with the duty of either castrating them or killing them. A third alternative is that of having a pinjrapole (animal shelter) for dogs.

Xxx

June 28 Wednesday

Mahabharata

The question refers to the eternal duel that is so graphically described in the Mahabharata  under the cloak of history and that is  everyday going on in millions of breasts. Man’s destined purpose is to conquer old habits, to overcome the evil in him and to restore good its rightful place.

Xxx

June 29 Thursday

Don’t encourage beggars

We cast a morsel at the beggar come to our door, and feel that we’ve earned some merit (Punya), but we really thereby add to the number of beggars, aggravate the evil of beggary, encourage idleness and consequently promote irreligion.

Xxx

June 30 Friday

This doesn’t mean that we should starve the really deserving beggars. It is the duty of society to support the blind and infirm, but everyone may not take the task upon himself. The state or the head of society should undertake the task. Philanthropists should subscribe funds to such an institution.

—-subham—

Tags- Gandhi, Quotes, beggars, dogs, fasting, prayer, Yanopaveetham, Brahmin, Narasimha Mehta, Hinduism

செங்கோல் விழாவும்  நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் – 2 (Post No.12,057)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,057

Date uploaded in London – –  29 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி- 2

அந்தப்புரம்


சொர்க்க விலாசத்தின் மேற்கில் அந்தப்புரம் ; இங்கு இரண்டு அறைகள் இருந்தன.இப்பொழுது ஒரு அறையின் பகுதி மட்டுமே இருக்கிறது. இங்கு ராஜா வீட்டுப் பெண்கள் இசை, இலக்கிய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர் .

நாடக சாலை

நாடக சாலையின் தூண்களில் அழகிய சிற்பங்கள் இருக்கின்றன; மேலே செல்வதற்கு இரு புறமும் படிகள் இருக்கின்றன.மன்னர், தன் மனைவி மக்களுடன் தீவர்த்தி வெளிச்சத்தில் நாட்டிய , நாடகங்களைக் கண்டு மகிழ்ந்த இடம். 

ஆயுத சாலை

அந்தப்புரத்திற்கு மேற்கில் ஆயுத சாலை  இருந்தது. நாடக சாலையின் மேற்கில் வசந்த வாவி என்னும் தடாகம் இருந்தது. அதைத் தாண்டி மல்யுத்தம் செய்யும் இடம், ஆட்டுக்கிடாய் சண்டை நடக்கும் இடம், சொந்தக்காரர்கள் வசிக்கும் வீடுகள் இருந்தன..மிகவும் திட்டமிடப்பட்டு கட்டிய அரண் மனை இது.

தேவி பூஜைக் கோவில்

நாடக சாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோவில் இருந்தது இங்கு திருமலை நாயக்கர் தினமும் வருவார். ராஜ ராஜேஸ்வரியை வணங்குவார் . கோவிலுக்கு முன்னர் ஒரு குளமும், நந்த வனமும் இருந்தன .

ரங்க விலாசம்

மதுரையில் மஹாலுக்கு அருகிலுள்ள பத்துத் தூண் பகுதியில் 10 தூண்களைக் காணலாம். இதற்கும் மேற்கில் ரங்க விலாசம் இருந்தது நாயக்கரின் தம்பி முத்தியாலு இங்கு வசித்ததால் இதுவும் சொர்க்க விலாசம் போலவே இருந்திருக்க வேண்டும் .

அரண்மனை வாசல்

பத்துத் தூண்களின் கிழக்கில் அரண்மனை வாயில் இருந்தது. அங்கு 18 இசைக் கருவிகள் வாசிக்கும் இடமும், அலங்கார வேலைப்பாடு நிறைந்த வாசலும் இருந்தது. இப்பொழுது இதை நவபத்கானா தெரு என்று அழைக்கிறார்கள் ; 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட பெரும்பாலான பகுதிகளை அடையாளம் காண முடிந்தது ; அவைகளைச் செப்பனிட்டபோதும் பராமரிப்பின்றி அழிந்துபோயின ;1837ல் மதில் சுவர் இடிக்கப்பட்டது. அதற்கு முன்னர் நாயக்கரின் பேரன் அரண்மனையின் முக்கியப் பகுதிகளை இடித்து அவைகளைத் திருச்சி நகருக்குக் கொண்டு சென்று புதிய அரண்மனை கட்டுவதற்கு முயற்சி செய்தான் ; அதுவும் நிலைக்கவில்லை .மீதியிருந்த பகுதிகளை சென்னை கவர்னர் நேப்பியரும் பின்னர் டாக்டர் இரா நாகசாமி தலைமையில் வந்த தொல் பொருட் துறையினரும்  (அரண்மனையின் பகுதிகளை) பாதுகாத்தனர்.

வாஸ்த்து சாஸ்திரம் கற்போர், இந்த அரண்மனையின் எந்தப் பகுதியில் என்னென்ன இருந்தது என்பதைக் கற்று அறிவது பயன்தரும் .

மதுரை மீனாட்சி கோவிலை திருமலை நாயக்கர் எப்படி அழியாத சின்னமாக மாற்றினார் என்பதை மதுரைக் கோவில் திருப்பணி மாலை பாடல் சொல்கின்றது :–

உரக்க வெகு ரொக்கம் கொடுத்துப் படங்கு தூண்

உத்திரம் முதல் பழங்கல்

ஒடிந்தன பிடுங்கி நலமாய் அமைத்துக் காரை

யோடு சீரணம் அகற்றி

அரைத்த சுண்ணாம்பை வெல்லச் சாறு விட்டுநன்

றாய்க் குழைத்துச் செங்கலும்

அடுக்கா ப்பரப்பி க் கடுக்கா யொடு ஆமலகம்

அரிய தான்றிக்காய் உழுந்து

ஒருக்கால் இருக்கால் இடித்து நன்னீரினில்

ஊறிய கடுஞ்சாறும் வி ட்டு

ஊழிக்காலங்களிலும் அசையாத வச் சிரக்

காரை விட்டோங்கும் அம்மை

சிரக்காலம் வாழவே மீனாட்சி கோயிலும்

செப்பமிட்டுவித்து நன் றாய்ச்

செய்வித்த புண்ணியம் சதகோடி புண்ணியம்

திருமலை மகீபனுக்கே.

தற்கால பொறியியல் மாணவர்கள் இதில் சொன்ன பொருட்களைக் கலந்து கட்டிடம் கட்டிப் பார்க்க வேண்டும். சோதனை முறையில் என்ஜினீயரிங் கல்லூரிகள் இதை ஆராய வேண்டும்.

XXXXX

திருமலை நாயக்கர் வரலாறு

தந்தையின் பெயர்- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்

திருமலை நாயக்கர் பிறந்த நாள் – தைப் பூசம் (பொ .ஆ  1584)

ஆட்சிக்காலம் – 1627 – 1659

ஆண்ட பகுதிகள் – திருச்சி முதல் திருவனந்த புரம் வரை

தமிழ் நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் பெரும்பகுதி

திருச்சியில் இருந்த தலைநகர் 1624ல் மதுரைக்கு மாற்றப்பட்டது

செய் த போர்கள் – மைசூர் போர், திருவாங்கூர் போர் , இராமநாதபுரம் போர், செஞ்சிப் போர்

தானைத் தலைவன் – தளவாய் இராமப்பையன்

துணைப் படைத் தளபதி – அரங்கண்ண நாயக்கர்

திருப்பணிகள் – மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோவிலின் வானளாவிய, உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள்; அதிசய சிற்பங்கள் நிறைந்த புது மண்டபம், 2 பெரிய தேர்கள், சிவா பெருமானுக்கும், அன்னை மீனாட்சி அம்மனுக்கும் விலை மதிக்கவொண்ணாத நகைகள்

ஏற்படுத்திய விழாக்கள் -சித்திரைத் திருவிஆ, வைகாசி வசந்த விழா, ஆவணித் திருவிழா, புரட்டாசி நவராத்ரி விழா. அவர் பிறந்த நாளான தைப்பூசத்தில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் தெப்பத் திருவிழா

திருப்பணி செய்த வேறு கோவில்கள் – அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருவரங்கம், திருவானைக்காவல், திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி கோவில்கள்

அவர்காலத்தில் வாழ்ந்த மற்றும் அவரது சபையை அலங்கரித்த புலவர்கள் :-

குமர குருபரர் ( அவர் யாத்த நூல்கள் — மீனாட்சியம்மை பிள்ளை த்  தமிழ், கந்தர் கலிவெண்பா);

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (அஷ்டப் பிரபந்தங்கள்);

சுப்பிரதீபக் கவிராயர் (விறலி விடு தூது, கூளப்ப நாயக்கன் காதல் );

நீல கண்ட தீக்ஷிதர் ( நிறைய சம்ஸ்க்ருத நூ ல்கள் )

சபைக்கு வந்த வெளிநாட்டினர் – கிறிஸ்தவ பிரசாரகர் ராபர்ட் டி நோபிளி

நாயக்கர் இறந்த வருடம் – 1659

( திருமலை நாயக்கர் பற்றிய விவரங்கள், தொல்பொருட் துறைப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி தொகுத்தது . அவர்தான் மஹால் பற்றிய தமிழ், ஆங்கிலப் பிரசுரத்தை வெளியிட்டு  நாயக்கரின் புகழ் பரப்பினார். 1976-ம் ஆண்டில் அவர் நடத்திய கல்வெட்டு முகாமில் நாயக்கரின் உருவங்கள் ஒவ்வொரு கோவிலிலும் வெவ்வேறு வடிவத்தில், கோணத்தில் காணப்படுகின்றன என்று சொன்னார்)

(கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டபோது மதுரை ஆர். எஸ்.எஸ். இயக்கத்தினர் கோவிலுக்கு எதிரேயுள்ள புது மண்டபத்தில் பெரிய கண்காட்சியை ஏற்பாடு செய்தனர். பல வாரங்ககளுக்கு நடந்த அந்தப் படக்காட்சிக்கு ஏராளமான மக்கள் வந்தனர் ;அப்போது காலை முதல் மாலை வரை நானும் அங்கு சேவை செய்தேன் . ஆர். எஸ்.எஸ். பிரசாரகர்  சிவராம்ஜி (சிவராம் ஜோகலேகர்) பல சுவையான விஷயங்களை சொல்லுவார். நாள் தோறும் ஒலிபெருக்கி மூலம், பகவத் கீதை, மராட்டிய ஞானேச்வரி கீதங்கள், தமிழில் உள்ள பக்திப்பாடல்களை ஒலிபரப்பினோம் .) 

–SUBHAM–

 TAGS- திருமலை நாயக்கர், மதுரை , மீனாட்சி கோவில், பத்துத் தூண், நவபத்கானா , இரா.நாகசாமி, அரண்மனை, மஹால்

காட்டிற்குள் ரமண மஹரிஷியுடன் இரு கவிஞர்கள்! (Post No.12,056)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,056

Date uploaded in London –   29 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

காட்டிற்குள் ரமண மஹரிஷியுடன் இரு கவிஞர்கள்!

 ச.நாகராஜன்

காவ்யகண்ட கணபதி முனிவர்

பகவான் ரமண மஹரிஷிக்கு ரமணர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர் மாபெரும் கவிஞரும் உள்ளொளி பெற்றவருமான காவ்ய கண்ட கணபதி முனிவர் ஆவார். இவரை நாயனா என்றே அனைவரும் மரியாதையுடன் அழைப்பர்.

பகவானுடனான இவரது அனுபவம் மகத்தானது.

இவரும் இவருடனான மற்ற பல அன்பர்களும் அவ்வப்பொழுது பகவான் ரமணரிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களைப் பெறுவது வழக்கம்.

அவற்றை ஸம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாக எழுதினார் இவர். அந்த நூலே “ஶ்ரீ ரமண கீதை” ஆகும்.

பகவான் எழுதிய ‘உள்ளது நாற்பது’ மற்றும் ஸத் தர்சனம் ஆகியவற்றையும் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாக இவர் வழங்கினார்.

இந்த இரண்டிற்கும் ஶ்ரீ கபாலி சாஸ்திரிகள் சம்ஸ்கிருதத்தில் விரிவுரை எழுதியுள்ளார்.

இந்த விரிவுரைகள் ரமண பாத சேகரன் ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமிகள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

முகவை கண்ண முருகனார்

இவர் பகவானின் அணுக்க பக்தர். பெரும் தமிழ்க் கவிஞர். பகவானின் பேரில் 1851 தோத்திரப் பாடல்கள் கொண்ட ‘ஶ்ரீ ரமண சந்நிதி முறை” என்ற நூலை இவர் இயற்றியுள்ளார்.

பகவானின் உபதேசங்களை ஒருங்கு திரட்டி 1254 பாடல்களாக, ‘குருவாசகக் கோவை’ என்ற நூலையும் ஶ்ரீ ரமண தேவமாலை, ஶ்ரீ ரமணாநுபூதி (இரு பாகங்கள்) என்ற நூலையும் இவர் படைத்துள்ளார்.

இவர் எழுதிய இன்னொரு நூல் ‘ஶ்ரீரமண ஞான போதம்’

இந்த இரு கவிஞர்களுக்கும் திருவண்ணாமலை காட்டிற்குள் போக ஆசை.

ஆனால் திருவண்ணாமலை காட்டை ஒவ்வொரு அங்குலமாக அளந்து அதை நன்கு அறிந்தவர் பகவான் ரமணர் ஒருவரே.

கணபதி முனிவருக்கு ரமணரின் உறுதி மொழி

ஒரு நாள் கணபதி முனி பகவானிடம் தான் பல காடுகளைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் திருவண்ணாமலை போன்ற ஒன்றைக் கண்டதே இல்லை என்றும் கூறினார்.

பகவான் அவரைத் தன்னுடன் காட்டின் உட்பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

கணபதி முனிவருக்கு யோகாப்யாசம் செய்ததால், குறிப்பாக கபால பேதம் (கபாலத்தை உடைப்பது) என்ற ஒரு யோகாப்யாசத்தைச் செய்ததால், ஒரு சிறிது உஷ்ணத்தையும் தாங்க முடியாத உடல் வாகு அமைந்திருந்தது. ஆகவே நல்ல மேகமூட்டம் சூழ்ந்த ஒரு நாளை பகவான் தேர்ந்தெடுத்தார்.

அன்று அணுக்க பக்தரான ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமியிடம் இன்று காட்டிற்குள் போகலாமா என்று பகவான் கேட்க அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இதற்காகத் தானே அவர்கள் காத்திருந்தனர்!

உடனே ஓடோடிச் சென்று கணபதி முனிவரிடம் சொல்ல அவரும் மகிழ்ந்தார்.

ஒரு சில நிமிடங்களில் பலாக்கொத்தில் இருந்த கணபதி முனிவர் அறைக்கு பகவான் வர, மூவரும் காட்டின் உட்பகுதி நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

திருவண்ணாமலை காட்டிற்குள் செல்ல பல பாதைகள் உண்டு. பகவான் தேர்ந்தெடுத்தது மூன்றாவது பாதையை.

முகவை கண்ண முருகனாரின் வருகை

ஒரு மைல் உள்ளே சென்ற பிறகு பகவான் பெரிய பாறைக்கு அருகே

ஒரு குளிர்ந்த, நிழல்பகுதியை ஓய்வெடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார்.

அப்போது சலசல என்ற ஒரு சப்தம் கேட்டது. யாரோ ஒருவர் வருகிறார் என்று எண்ணியபோது முகவைக் கண்ண முருகனார் அங்கு வந்து நின்றார்.

மூக்கின் மேல் விரலை வைத்த பகவான், “நாங்கள் இங்கே இருப்பது எப்படித் தெரிந்தது. வனக்காவலர் கூட நாங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே” என்று கூறினார்.

முருகனார் கூறினார், “பகவான் நாயனாவிடம் காட்டிற்குள் ஒரு நாள் அழைத்துச் செல்வதாக கூறி இருப்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட வர ஆசை. ஆகவே ஆஸ்ரமத்திற்கு சீக்கிரமாகவே வருவது வழக்கம். ஆனால் இன்று பகவானை அங்கு காணோம். உடனே பலாக்கொத்து சென்றேன். அங்கு நாயனாவின் அறை பூட்டி இருந்தது. அங்கு இருந்த வாட்ச்மேன் சபாபதி என்னிடம் ‘நாயனா, விஸ்வநாத ஸ்வாமியுடன் பகவான் காடு நோக்கிச் சென்றார்’ என்று கூறவே நான் ஓடோடி காட்டுப் பக்கம் வந்தேன்.

இரண்டாவது காட்டுப் பாதை வழியே வந்த நான், இன்னொரு பாதை காட்டிற்குள் செல்வதைப் பார்த்தேன். அதன் வழியாக வந்து இந்த இடத்தை அடைந்தேன்”.

“அட, இப்படி கூட ஒரு குறுக்கு வழி இருக்கிறதா?” என்ற பகவான், திரும்பிப் போகும் போது அந்த வழியாகச் செல்லலாம்” என்றார்.

 முருகனாரின் முதுகைத் தட்டிக் கொடுத்த கணபதி முனிவர், “பகவானின் அருள் இருக்கிறது என்பதற்கு இதுவே அறிகுறி” என்று கூறி மகிழ்ந்தார்.

மாலை நான்கு மணிக்குள்ளாக அவர்கள் அனைவரும் ஆசிரமம் திரும்பினர்.

இந்த அனுபவத்தை ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமி பதிவு செய்துள்ளார்.

திருவண்ணாமலை, சிவன் உறையும் மலை அல்ல, சிவனே இந்த மலை தான் என்பதை மஹரிஷி ரமணர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்த மலையில் ஏராளமான அதிசயங்கள் உண்டு.

அவற்றை ரமண மஹரிஷியின் விரிவான வாழ்க்கை சரிதத்தைப் படிப்பதன் மூலம் அறியலாம்.

***

RIVERS OF INDIA CROSSWORD (Post No.12,055)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,055

Date uploaded in London – –  28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1  2   3 456
   7  8 S    
          
          E 
10         R 
       11  I 
            
 12           
           13 
           14
15  16         
   1         

ACROSS

2.Pandharpur is on the banks of this river;

 9. It is a tributary of the Alaknanda River in the Indian state of Uttarakhand. ,

10. “Life Line of Madhya Pradesh and Gujarat”

 12. India’s second longest river , running through Maharashtrra, Telangana and Andhra Pradesh, 13Tambhrabarani is another name for this river,

14.Turbulent Himalayan River in Uttarkhand; along with Bhagirathi it pours water into India’s holy river,

16.This river basin is the location of India’s oldest civilization

17.It is also called Dakshina Pinakini. Bengaluru, Hosur, Cuddalore and Tiruvannamalai are on the banks of this river.

XXXX

DOWN

1 This river was Lord Krishna’s play ground

3.One of the two rivers that gave the name to Hindus’ holiest city,

4.Madurai is on the bank of this river; Tamil language originated here.

 5.Tamil Nadu’s life line, irrigates most of the paddy lands.

6.Sung by Marathi poets in the Abhangas,

7.Literal translation of this Tamil  river is  Milk River,

8.Ayodhya’s River

11.Another river that gave the name for holy city (See number 3)

15.The holiest river in the world; sung in Rig Veda and India’s National Anthem.

Y 1  B 2HIMA3 V 4K5C6
 A P 7  S 8 S AAH
9MANDAKINIVA
 UL  R   GEN
10NARMADA ARD
 AR  Y V 11 IIR
 AU  U A   A
G 12 ODAVARI  B
 N  IANUROP 13H
 ADNANKALA 14
15GI 16NDUSA   G
  T 17ENPNNAIA

ACROSS

2.BHIMA, 9.MANDAKINI, 10.NARMADA, 12.GODAVARI, 13.PORUNAI, 14.ALAKNANDA, 16.INDUS

17.TENPENNAI

XXXX

DOWN

1 YAMUNA, 3.ASI, 4.VAIGAI, 5.KAVERI, 6.CHNADRABHAGA, 7.PALARU, 8.SARAYU, 11.VARUNA

15.GANGA.

—SUBHAM—T

Tags- River Crossword, Ganga, Mandakini

மரம்,செடி,கொடி,புல் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,054

Date uploaded in London – –  28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

   8      2 
    8 1  2 செ
    812  டி
   77333 
  ம்   6 54  கொ
    6  5 4 டி
   613 9 104பு
   6  139 10  4
    1212 111111 

எல்லா சொற்களும் அ’ என்னும் எழுத்தில் துவங்கும் தாவரத்தின் பெயர்கள் ; மரம்-செடி-கொடி- பூ என்று முடிவடையும் ; அதற்கு முந்திய எழுத்துக்களைக் கண்டுபிடியுங்கள் ; கூடியமட்டும் கலர் வழியே செல்லுங்கள்

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

   ம்8      ம்2 
    க8 தி1 ன 2 செ
    ரு8த்1ச2  டி
   ல்7கி7க3த்3தி3 
  ம்  னி 6ர 5ழி4  கொ
    ச்6  ச5 ஞ்4 டி
   ச6ரி12 ளி9 லி10சி4பு
   ம்6  ல13ர,9ல் 10  ல்4
    ரை12வ 12தி 11ர11ல்11 

 Common words : மரம்  செடி கொடி ,  புல்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

3.மாட்டுக்குப் போடும் கீரை; தமிழ் முனிவரின் பெயர்

7.பெண்கள் தலை முடியை உலர்த்த இந்த மரத்தின் கட்டையை புகைப்பராம் .

11.காட்டு மல்லிகை என்பது இதன் பெயர்

12.. கொடியில் காய்க்கும்; கறியும் கூட்டும் சமைக்கலாம்

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.எப்போதாவது ஒருமுறை நிகழக்கூடியதை XXX  பூத்தாற்போல் என்று சொல்வது உண்டு

2. வேங்கை மரத்தின் வேறு ஒரு பெயர்

4. இதன் விதைகள் மரத்தின் மீது ஏறும் என்று ஆதிசங்கரர் பாடுகிறார். அங்கோல என்பது ஸம்ஸ்க்ருதப் பெயர்

5.XXX மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம் என்பது பழமொழி

6.திருவள்ளுவர் சில குறள்களில் பாடிய பூ. முகர்ந்தால் வாடிவிடுமாம்

8. பிள்ளையாருக்குப் பிடித்த புல்

9.செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்குப் போடும் பூ

10.குளத்தில் வளரும்; இரவில் பூக்கும்

13. திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக உள்ளது. கரவீரம் என்பது மற்றொரு பெயராம்.

ANSWERS

1.அ த் தி, 2.அ ச ன ம், 3,.அ க த் தி  4.அ ழி ஞ் சி ல்  5.அ ர ச,  6.அ னி ச் ச ம், 7.அ கி ல், 8.அ ரு க ம், 9.அ ர ளி, 10.அ ல் லி, , 11.அ திர ல், 12.அ வ ரை,   13.. அ ல ரி 

–subham—

Tags- மரம்,செடி,கொடி,புல் , குறுக்கெழுத்துப் போட்டி

செங்கோல் விழாவும்,  நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் — 1 (Post No.12,053)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,053

Date uploaded in London – –  28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Pictures are from Wikipedia

வெளியூரிலிருந்து சொந்தக் காரர்களும், நண்பர்களும் மதுரைக்கு வந்தால் மூன்று இடங்களைச் சுற்றிக் காண்பிப்பேன். 1987-ல் லண்டனில் குடியேறுவதற்கு முன், சுமார் கால் நூற்றாண்டுக்குக்கு நான் செய்த “சேவை” இது.  மதுரை மீனாட்சி கோவில் மற்றும் அதன் எதிரேயுள்ள புது மண்டபம், சற்று தொலைவிலுள்ள திருமலை நாயக்கர் மஹால், ஊருக்கு வெளியேயுள்ள மாரியம்மன் தெப்பக்குளம் ஆகிய மூன்றும் என் ‘லிஸ்டி’ல் எப்போதும் உண்டு. பெண்களாக இருந்தால், என் தாயார் சின்னாளப்பட்டி சேலைக் கடைகளுக்கும், நகைக் கடைகள்  மட்டுமே உள்ள தெற்காவணி மூல வீதிக்கும் அழைத்துச் செல்லுவார்.

மதுரையில் வானளாவிய கோபுரங்களைப் பார்க்கும் எவரும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை மறக்கமுடியாது. அந்த நாயக்கர் கதையை நான் எத்தனை பேருக்குச் சொன்னேனோ எனக்கே நினைவில்லை. அது மட்டுமா? கோவிலுக்கும் அரண்மனைக்கும் இடையுள்ள சுரங்கப்பாதை, மற்றும் மதுரை செளராஷ்டிர சமூகத்தினர் வீடு கட்டுகையில் அந்தச் சுரங்கத்திலிருந்து எடுத்த தங்கக் கட்டிகள்  போன்ற வழக்கமான ‘கப்ஸா’ கதைகளையும் அவிழ்த்து விடுவேன். நான் சின்ன வயசில் நம்பியதை அவர்களும் நம்பட்டுமே !

xxxx

திருமலை நாயக்கர் மஹால் எனப்படும் அரண்மனை பற்றிய உண்மைக் கதைகளை இப்போது சொல்கிறேன் .

திருமலை நாயக்கர் (1627-1659) மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். தென் இந்தியாவில் துலுக்கப் படைகள் அழித்த அரண்மனைகள் போக எஞ்சியது இது ஒன்றுதான் . இதில் அவர் 75 வயது வரை மனைவிகளுடன் வசித்தார் . இப்போது நாம் காணும் அரண்மனையைப் போல நான்கு மடங்கு பெரிதாக 164-0ல் திகழ்ந்தது; பல வெளிநாட்டினர் குறிப்புகளிலிருந்து நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.

அரண்மனையின் முக்கியப் பகுதிகள்

ரங்க விலாசம் , சொர்க்க விலாசம், , 18 இசைக்கருவிகள் வாசிக்கும் மண்டபம், பல்லக்கு வைக்கும் மண்டபம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், மனைவிகள் வசிக்கும் அந்தப்புரம், நாடக சாலை, வசந்த வாவி, நந்தவனம், படைக்கலன் வைக்கும் இடம், யானைகள் கட்டும் தூண்கள் எனப்பல பகுதிகள்.

நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும்  வசித்தனர் . இப்போது நாம் காண்பது சொர்க்க விலாசம் மட்டுமே; உள்ளே நுழைந்ததும் முற்றமும் பிரம்மாண்டமான தூண்களும் இருக்கும். அவை இளம் பெண்களின் கன்னங்களை விட வழுவழுப்பாக இருக்கும்.; தாஜ் மஹாலின் சலவைக்கற்கள் தோற்றுப்போகும் .இந்தப் பள பள வழு வழு ராட்சத தூண்கள்!!  அவை எப்படிக் கட்டப்பட்டன என்பதை திருப்பணி மாலை பாடல் வருணிக்கிறது.

சுண்ணாம்பு, வெல்லச் சாறு, கடுக்காய், ஆமலகம், தான்றிக்காய், உளுந்து , காட்டுஞ் சாறு ஆகியவற்றை அரைத்து மேலே பூசினாராம். ஆமலகம் என்பது நெல்லிக்காய்.; முட்டைகளை அரைத்துக்  கலந்து கட்டியதாகவும் செவி வழிச் செய்தி.

அரண்மனையைச் சுற்றி பெரிய நீண்ட மதில் சுவர் இருந்தது . 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட 900 அடி நீளமும் 600 அடி அகலமும்  40 அடி உயரமும் இருந்ததாம்.. பின்னர் எல்லோரும் வீடு கட்ட, கிடைத்த பகுதிகளை எல்லாம் எடுத்துச் சென்று விட்டனர்.

ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை என்பது தமிப்பழமொழி. அப்படி இந்த அரண்மனை  ம் மதில் சுவரும்  மொட்டை அடிக்கப்பட்டன. 1868ல் சென்னை கவர்னராயிருந்த நேப்பியர் இந்த அரண்மனையின் அழகைக்கண்டு அந்தக்கால இரண்டு லட்சம் ரூபாய்களை செலவிட்டு பழுது பார்த்தார். வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி  , தமிழ் நாடு தொல்பொருட் துறை இயக்குனராக இருந்த காலத்தில் மேலும் பாதுகாப்பு மற்றும் திருப்பணிகளைச்  செய்தார் .

அரண் மனையின் தற்போதைய கட்டிட உயரம் 58 அடி. தூண் களின் எண்ணிக்கை 248. தூண்களின் உயரம் 82 அடி; அகலம் 6 அடி; மூன்று நான்கு  பேர் இருந்தால்தான் அதைக் கட்டிப்பிடிக்க முடியும்.

கூரைகளில் சிவன், விஷ்ணு புராணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன

1981ம் ஆண்டு முதல் ஒலி -ஒளிக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது . நாள்தோறும் நடக்கும் இக்காட்சியில் மஹாலின் சிறப்பும் மன்னரின் சிறப்பும் விதந்து ஓதப்படுகிறது.

இப்போதும் அரண்மனைக்கு சற்று தொலைவில் பத்துத் தூண் என்ற பகுதி இருக்கிறது. அங்கேதான்  யானைகள் நிறுத்தப்பட்டன.

திருமலை நாயக்கரின் பேரன் இந்தக் கட்டிடத்தின் சில  பகுதிகளை இடித்து திருச்சிக்கு கொண்டு சென்று புதிய அரண் மனை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கிருந்த பொக்கிஷங்களையும் அவர் எடுத்துச் சென்றார்.

சொர்க்க விலாசம்

இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகள் வழியே மேலே செல்லலாம்;.உயர்ந்த தூண்களும், வேலைப்பாடுமிக்க சுதைகளும் (சிற்பங்கள்) இருக்கும் உயரமான பகுதி;  ஒரு காலத்தில் இதன் தூபிகள் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன .நடுவில் யானைத் தந்ததினால் ஆன மண்டபம் இருந்தது. அதில் வைக்கப்பட்ட இரத்தின சிம்மாசனத்தில் நாயக்கர் அமர்ந்து அரசவை நடத்தினார். இதைக் கற்பனை செய்து மனக்கண்களில் பார்த்தால் இதற்கு ஏன் சொர்க்க விலாசம் என்று பெயரிட்டனர் என்பது புரியும் .

XXX

செங்கோல் விழா

மதுரையை ஆள்வது மீனாட்சி அம்மன் ; அவரது பிரதிநிதிதான் பாண்டிய மன்னர்களும் நாயக்க மன்னர்களும். இது புற நானூற்றிலும் உள்ளது. பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர் முதுகுடுமிப் பெருவழுதி. அவர் இரண்டு பேருக்குத்தான் சல்யூட் Salute அடிப்பாராம் ; ஆசீர்வாதம் செய்யும் பிராமணர்களுக்கு ஒரு முறை தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். அடுத்த சல்யூட்  மீனாட்சி கோவிலுக்கு; அங்கே செ ன்றாலும் தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். வேறு எங்கும் தலை நிமிர்ந்து நிற்க , அவருக்கு எல்லோரும் சல்யூட் அடிப்பார்கள்.

செங்கோல் விழாவில் இதையே திருமலை நாயக்கரும் செய்தார். .ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள் திருமலை நாயக்கர், கோவிலுக்குச் சென்று அங்கயற்கண்ணி அம்மனுக்கு முடி சூட்டு விழா நடத்தி, அங்கு மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று, வீதி உலாவாக அதைக்கொண்டு வந்து , அரண்மனையின் சொர்க்கவிலாசத்தில் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்கு சிறப்பாக வழிபாடுகள் நடக்கும். அனறைய தினம் வந்திருக்கும் அனைவருக்கும் மன்னர் பரிசுகளை வழங்குவார் . அன்று முழுதும் அரியணையில் செங்கோல் இருக்கும் ; மறுநாள் செங்கோலுக்கு மன்னர் புனர்பூஜை செய்வார். அதை மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் சென்று ,மீனாட்சி அம்மனின் பாதங்களில் வைத்து வணங்குவார் . மன்னர் என்பவன் இறைவனின் சார்பில் ஆட்சி நடத்தும் ஒரு ஊழியர்தான் என்பது இதன் தாத்பர்யம் .

நவராத்திரி விழா

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் திருமலை மன்னர் தன்னை அலங்கரித்துக்கொண்டு , அரியணையில் கொலு வீற்றிருப்பார். சிற்றரசர்கள் வந்து அவருக்கு கப்பம் செலுத்துவார்கள்

 தொடரும்  ……………………………….

XXX

Tag- செங்கோல் விழா, நான் கண்ட,  நாயக்கர் அரண்மனை    , திருமலை நாயக்கர், பிரம்மாண்டமான தூண்கள்,