Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
SNR Article Index : MAY 2023
MAY 2023
1-5-23 11954 தாளம் தப்பாமல் பாத்துக்கோ!
2-5-23 11958 SNR Article Index : APRIL 2023
3-5-23 11962 மாக்ஸிம் கார்க்கியை அயர வைத்த இந்திய யோகி!
4-5-23 11966 இரண்டாம் உலகப்போர் அத் 10 தலைவனுக்காக ஏங்கியஜெர்மனி̀5-5-23 11970 இரண்டாம் உலகப்போர் அத் 11 – ஹிட்லர் கொல்லாமல் விட்ட ஒரே யூதர்! 6-5-23 11974 கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி!
7-5-23 11977 காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 5
8-5-23 11980 லக்ஷ்மணரிடம் ஶ்ரீ ராமரின் ப்ரதிக்ஞை!
9-5-23 11983 இந்திரஜித்தை வதைக்கும் போது லக்ஷ்மணர் செய்த ப்ரதிக்ஞை! – ராமாயண வழிகாட்டி!10-5-23 11986 சரணாகதி அடைந்த விபீஷணரிடம் ஶ்ரீ ராமர் செய்த ப்ரதிக்ஞை! ராமாயண வழிகாட்டி 11-5-23 11989 புலவரின் தாயார் முதுகில் ஏறிய புலவர்! கொங்கு நாட்டின்
மீது தொண்டை நாடு செய்த சோதனை! – கொங்குமண்டல
சதகம் – பாடல் 51 12-5-23 11992 சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? – சுபாஷித செல்வம்
13-5-23 11996 உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 6 14-5-23 11999 ஓம் நமோ பகவதே வாசுதேவாய – மந்திரத்தின் அபூர்வ
சக்தி! 15-5-23 12002 அறிவியல் நிரூபிக்கும் ஒளிவட்ட ஆற்றல்! 16-5-23 12005 இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றிய எம்பெருமான்! – கொங்குமண்டல சதகம் பாடல் எண் 64 17-5-23 12008 சந்த்யா காலத்தில் செய்யக் கூடாதவை ஐந்து! – சுபாஷித.
செல்வம் 18-5-23 12011 சிங்களரை எதிர்த்து ஓடவிட்ட கோப்பணனின் வீரம்! –
கொங்குமண்டல சதகம் பாடல் 59. 19-5-23 12015 ராமாயணத்தில் நக்ஷத்திரங்கள்! 20-5-23 12019 கடவுளைக் காண வழி சொல் – ஒரு வாரத்திற்குள்! 21-5-23 12024 விஸ்வாமித்திரருடன் சென்ற 25 நாட்களில் ஶ்ரீ ராமருக்குக்
கல்யாணம்! (இராமாயண வழிகாட்டி)
22-5-23 12029 பெண்களின் வேலைத் திறனைத் திறம்பட விவரிக்கும்
வால்மீகி மஹரிஷி! – இராமாயண வழிகாட்டி!
23-5-23 12033 பிரார்த்தனை புரிபவனுக்குப் பாவம் இல்லை! – சம்ஸ்கிருத சுபாஷிதம் 24-5-23 12039 இரண்டாம் உலகப் போர் அத்தியாயம் 12 – ஆபரேஷன் குன்னர்சைட்! உலகத்தைப் பிழைக்க வைத்த ஒரு சாகஸ செயல்! 25-5-23 12041 பொருள் தராத உன்னைக் கடைவிதியில் விலை கூறி விற்பேன் – புலவரின் தைரியம்! – கொங்குமண்டல சதகம் பாடல் 67 26-5-23 12044 மூன்றாவது நண்பன்!27-5-23 12048 ரஸனைக்குரியவை ஆறு! – சம்ஸ்கிருத சுபாஷிதம் 28-5-23 12052 நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 -அத்தியாயம் 1 கனவு நிஜமானால் கஷ்டம் தான்! 29-5-23 12056 காட்டிற்குள் ரமண மஹரிஷியுடன் இரு கவிஞர்கள்! 30-5-23 12060 ஒரு பெண்ணுக்கு கண்கள் ஏழு, முலை ஆறு, காது ஐந்து, நெற்றி நான்கு! – புலவர் கண்ட பெண்! (தனிப்பாடல்) 31-5-23 12064 நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 -அத்தியாயம் 2 தாந்தேயின் அபார நினைவாற்றல் சக்தி!
Gandhiji explained the meaning of his favourite Upanishad mantra in two meetings in Quilon on 16-1-1937 and at Haripad in Travancore on 17-1-1937.
I have perhaps recited the Gayatri Mantra a thousand times , having understood the meaning of it. But it still seems to me that it di not answer the whole of my aspirations. Then as you are aware I have, for years past, been swearing by the Bhagavadgita , and have said that it answers all my difficulties and has been my Kamadhenu, my guide, my ‘open sesame’, on hundreds of moments of doubt and difficulty. I cannot recall a single occasion when it has failed me. But it is not a book that I can place before the whole of this audience. It requires a prayerful study before the Kamadhenu yields the rich milk it holds in her udders.
But I have fixed upon one mantra that I am going to recite to you, as containing the whole essence of Hinduism. Many of you, I think, know the Isopanishad. I read it years ago with translation and commentary. I learnt it by heart in Yeravada jail. But it did not then captivate me, as it has done during the past few months, and now I have come to the final conclusion that if all the Upanishads and all other scriptures happened all of a sudden to be reduced to ashes, and if only the first verse in the Isopanishad were left intact in the memory of Hindus, Hinduism would live for ever.
ॐ
ईशावास्यं इदम् सर्वं यत्किञ्च जगत्यां जगत् । तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्यस्विद्धनम् ॥ १ ॥
Now this mantra divides into four parts. The first part is
īśāvāsyam idam sarvaṁ
yat kiñca jagatyāṁ jagat
It means as I would translate, all that we see in this great universe is pervaded by God. Then come the second and third parts which read together , as I read them: tena tyaktena bhuñjīthā. I divide this into two and translate them thus : Renounce and enjoy it. There is another rendering which means the same thing, though: enjoy what He gives you. Even so you can divide it into two parts. Then follows the final and most important part
mā gṛdhaḥ kasya svid dhanam
which means: Do not covet anybody’s wealth or possession. All the other mantras of that ancient Upanishad are a commentary or an attempt to give us the full meaning of the first mantra. As I read the mantra in the light of Gita or the Gita in the light of the mantra, I find that the Gita is a commentary on this mantra. It seems to me to satisfy the cravings of the socialist and communist, of the philosopher and the economist. I venture to suggest to all who do not belong to the Hindu faith that it satisfies their cravings also. And if it is true—and I hold it to be true — you need not take anything in Hinduism which is inconsistent with or contrary to the meaning of this mantra.
What more can a man in the street want to learn this , that the One God and Creator and Master of all that lives pervades the universe? The three other parts of the mantra follow directly from the first. If you believe that God pervades everything that He has created, you must believe that you cannot enjoy anything that is not given by Him. And seeing that He is the Creator of His numberless children, it follows that you cannot covet anybody’s possession. If you believe that you are one of His numerous creatures, it behoves you to renounce everything and lay it at His feet. That means that the act of renunciation of everything is not a physical renunciation but represents a second or new birth. It is a deliberate act, not done in ignorance. It is therefore a regeneration. And then since he who holds the body must eat and drink and cloth himself, he must naturally seek all that he needs from Him. And he gets it as a natural reward of that renunciation.
As if this was not enough the mantra closes with this magnificent thought: Do not covet anybody’s possession. The moment you carry out these precepts you become wise citizen of the world living at peace with all that lives. It satisfies one’s highest aspirations on this earth and hereafter.
Xxx
Next day also Gandhiji explained this mantra and described it as Golden Key for the solution of all difficulties and doubts that may assail one’s heart.
He repeated, “Remember that one verse of the Isopanishad and forget all about other scriptures. You can of course drown yourselves and be suffocated in the ocean of scriptures. They are good for the learned if they will be humble and wise, but for the ordinary man in the street, nothing but this mantra is necessary to carry him across the ocean.
Xxx
In Travancore speech the next day, Gandhi said,
I would like the mantra I have recited to be enshrined in the hearts of all our men and women and children. And it should be inscribed on the portals of every temple.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் உருளி காஞ்சன் (Uruli Kanchan) கிராமம் இருக்கிறது. இங்கு நாடு முழுதும் புகழ்பெற்ற இயற்கை வைத்திய ஆஸ்ரமம் (Naturopathy Centre) இருக்கிறது . இதற்கு நிசர்க் உபசார ஆஸ்ரமம்( நிசர்கோபசார ஆஸ்ரமம்) என்று பெயர். இதை மஹாத்மா காந்தி 1946-ம் ஆண்டில் நிறுவினார். காந்திஜிக்கு இயற்கை மருத்துவம் மிகவும் பிடிக்கும். அவரும் தன் வாழ்நாளில் அதைப் பின்பற்றினார் . காந்திஜியின் சீடரான மணிபாய் தேசாய் இதை திறம்பட நடத்தி வந்தார். அவர் 1993-ல் காலமானார். கோவிட் வைரஸ் என்னும் சீன வைரஸ் நாடு முழுதும் பரவிய போது கஷ்ட திசைக்குள்ளான இந்த நிலையம் 75 ஆண்டுகளாகத் தன்னுடைய சேவையை அளித்து வருகிறது.
மணிபாய் தேசாய் 1960ம் ஆண்டுகளில் இதே இடத்தில் சிறந்த வகை பசு, காளை மாடுகளை உருவாக்கும் மற்றோர் அமைப்பையும் (BAIF- Bharatiya Agro Industries Foundation) ) இந்த கிராமத்தில் நிறுவினார்.
சின்ன கிராமம் ஆனாலும், இதற்கு இந்த ஆஸ்ரமம் துவங்கும் முன்னரே பலவகையில் பெயர் கிடைத்தது. வெள்ளைக்காரர்கள் ஆரம்ப காலத்தில் போட்ட ரயில் பாதை இந்த வழியாகச் சென்றது மட்டுமல்ல. ஜெஜூரி என்னும் ஊரிலுள்ள புகழ்பெற்ற கண்டோபா கோவிலுக்குப் போவதற்கு மக்கள் இறங்கிய ரயில் நிலையம் இது. மேலும் துகாராம் என்னும் மஹானின் பல்லக்கு ஆண்டுதோறும் பண்டரீபுரத்துக்கு இவ்வழியாகச் சென்றது.
இந்த கிராமத்தில் மஹாத்மா காந்தி 1946 மார்ச் மாதத்தில் 7 நாட்கள் தங்கினார் .அவருடைய இளம் சீடராக இருந்தவர் மணிபாய் . அவர் இந்த கிராமத்தை பலவகைகளில் முன்னேற்றி ஒரு உதாரண கிராமமாக மாற்றினார் . மலை அடிவாரத்திலுள்ள இந்த கிராமத்துக்கு அருகிலேயே நதியும் ஓடுவதால் கரிசல் பூமியில் நல்ல விளைச்சலும் உண்டு.
ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்த வெளியில் சந்தையும் கூடும்.
இந்த இயற்கைச் சூழ்நிலையில் இயற்கை வைத்திய நிலையம்/ ஆஸ்ரமம் 1946-ல் துவக்கப்பட்டது .
இயற்கை மருத்துவம் என்றால் என்ன ?
மனிதனை இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ வைத்தால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம்; அத்தோடு நோய்கள் வந்தாலும் அதை இயற்கை மூலமாகவே குணப்படுத்தலாம் என்பது இயற்கை மருத்துவம் ஆகும் .
இங்கே வரும் நோயாளிகளுக்கு தண்ணீர் வைத்தியம், மண் வைத்தியம் , சுவாசப் பயிற்சிகள், நடைப் பயணம், சூரிய ஒளி வைத்தியம், பட்டினி சிகிச்சை என்று பலவகைகளில் சிகிச்சை தந்து நோயாளிகளின் மன , உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்கள் . இங்கே வரும் நோயாளிகளில் 97 சதவிகிதத்தினர் குணமடைவதாக ஆஸ்ரம புள்ளி விவரம் கூறுகிறது. இங்கே வந்து ஆஸ்ரமத்தில் தங்கியும் சிகிச்சை பெறலாம் . வெளி நோயாளிகளாகவும் (out Patient) சிகிச்சை பெறலாம் .
ஆஸ்ரமத்தில் தங்குவோரின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை ஆஸ்ரம தகவல் குறிப்பே தெரிவிக்கிறது:-
காலை 5.00AM துயில் எழுதல்
5.15-6.00AM பொதுவான யோகப்பயிற்சி (யோக சாதன ஹாலில்)
6.00- 6.45 AM நோய்க்குத் தகுந்த விசேஷப் பயிற்சி (பிரேரண மந்திர் )
6.15-7.00AM சக்தி தரும் யோகப்பயிற்சி (யோக சாதன ஹாலில்)
7.15-7.30AM மூலிகை தேநீர்
7.30-10.30AM மஸாஜ் (Massage) மற்றும் நீர் வைத்தியம்
8.00-9.00AM பழரசம்
10.30-12.00PM இயற்கை உணவு (Lunch மதிய உணவு)
மத்தியானம்
12-2.15PM மதிய ஓய்வு
2.15-2.45PM நோய்க்குத் தகுந்த சிகிச்சை
3.00-3.15 PM மூலிகை தேநீர் (Herbal Tea)
3.00-5.00PM நீர் வைத்தியம் (Hydrotherapy treatments)
4.00-4.30PM பழரசம்
4.30-5.30PM ஆரோக்கியம் தொடர்பான சொற்பொழிவுகள்
மாலை /இரவு
5.30-6.30PM இயற்கை உணவு (Dinner மாலை உணவு)
6.30-7.15PM ஓய்வு, பொழுதுபோக்கு நேரம்
7.15-7.45PM பிரார்த்தனை (Yogasadhana Hall)
7.45-8.30PM தியானம் (Yogasadhana Hall)
8.30-9.30PM பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள்
9.30PM விளக்கணைப்பு ; உறங்கும் நேரம் Bed Time
Xxx
சிகிச்சை வகைகள்
Mud Therapy மண் சிகிச்சை
உடல் முழுதும், சுத்தம் செய்த மண்ணைப்பூசி அளிக்கும் சிகிச்சை. பூமிக்கு ஆறு அடிக்குக் கீழேயுள்ள மண்ணை எடுத்து பல வகைகளில் சுத்தப் படுத்தி பின்னர் பயன்படுத்துவர்; அதிலுள்ள இயற்கையான தாதுப் பொருட்கள் (Minerals and Salts) சொறி , சிரங்கு முதலிய தோல் நோய்களை (psoriasis, eczema, dermatitis etc. ) குணப்படுத்த மிகவும் உதவுகிறது.
xxx
Hydrotherapy தண்ணீர் வைத்தியம்
வெவ்வேறு உஷ்ண நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வார்கள். நீருக்கள் அமர அல்லது படுக்க வைத்தோ . இடுப்பளவு தண்ணீரில் நிற்க வைத்தோ , இனிமா கொடுத்தோ , நீராவி குளியல் மூலமோ சிகிச்சை தருவர் சில நேரங்களில் நீர் ஒத்தனம் கொடுக்கப்படும்.
குற்றால அருவியில் குளித்தால் எப்படி இருக்குமோ அப்படி கனத்த வேகத்தில் உடலில் தண்ணீரைப் பாய்ச்சி அளிக்கும் சிகிச்சையும் உண்டு .
(Immersion Bath, Under water Massage, Hip Bath, Jacuzzi Hip Bath, Spinal Spray, Vichy Shower, Circular Jet, Douche, Enema, Steam Bath, Arm and Foot Bath, Packs and compress)
Xxx
Yoga Therapy யோகாசன சிகிச்சை
மனதும் உடலும் ஒருமித்து செய்யப்படும் ஆசனங்கள் யோகாசன சிகிச்சையில் வழங்கப்படுகிறது ; ஆசனங்கள் செய்வதால் மனம் தானாகவே அதில் ஒருமிக்கிறது ; இதனால் மனதும் உடலும் சம நிலையில் , அமைதியான நிலையில் இருக்கும். தியானம் மட்டும் செய்கையில் மனம் அலை பாயும். ஆனால் ஆசனத்துடன் தியானம் செய்கையில் மனம் ஒருமுகப்படும்.
இந்த கேந்திரத்தில் வயது, நோயின் தன்மைக்கு ஏற்ப நான்கு வகைப் பிரிவுகள் பின்பற்றப்படுகின்றன.
Xxxx
Physiotherapy உடற்பயிற்சி சிகிச்சை
நரம்புத் பிடிப்புகள், தசைப்பிடிப்புகள் , கீல்வாதம், மூட்டு வலி, உடலின் சில உறுப்புகளை அசைக்க முடியாமல், திருப்ப முடியாமல் ஏற்படும் இறுக்கம் (musculoskeletal and neurological disorders.) ஆகியவற்றைக் குணப்படுத்த சிலவகை உடற்பயிற்சிகள் உண்டு. அவைகளை, நோயாளிகளின் நிலையைப் பரிசோத்தித்த பின்னர் தகுந்த முறையில் கொடுப்பார்கள். இன்னும் சிலருக்கு கருவிகள் மூலம் வெப்ப சிகிச்சை (Heat Therapy, Heat Pads, Hot Water Bottles) அளிப்பர்.
Xxxx
Acupuncture ஊசி முனை வைத்தியம்
நோயாளியின் உடல் வாகுக்கு ஏற்றமுறையில் சில இடங்களில் ஊசியைக்குத்தி அங்கே செல்லும் நரம்புகளில் இருக்கும் சக்தியைத் தூண்டி விடுவார்கள் . உடலில் பல சக்தி வாய்க்கால்கள் இருக்கின்றன. அவை அடைபட்டு ஓடாமல் இருக்கையில், ஊசியைக் குத்தி அடைப்பை நீக்கி மீண்டும் சக்தியை ஊட்டச் செய்வது ஊசி முனை சிகிச்சை ஆகும்
ஆஸ்த்மா, ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, ஆர்த்தரைடீஸ் முதலிய நோய்களுக்கு இது கை கண்ட மருத்துவம் ஆகும்.
Xxx
மஹாராஷ்ரம் வரை பயணம் செய்து சிகிச்சை பெறத் தயாராக இருப்பவர்கள், மேல் விவரம் அறிய, தொடர்பு முகவரி :-
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காங்கிரஸின் நீதி பரிபாலனம்!
ச.நாகராஜன்
புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்தது மன்னிக்க முடியாத தவறான செயல்.
சுதந்திரம் பெற்ற போது திருவாவடுதுறை ஆதீனம் டில்லிக்கு செங்கோலை எடுத்துச் சென்று கொடுத்ததைத் திரித்தும், மறைத்தும், பொய் சொல்லியும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செய்து வரும் பிரச்சாரம் மிக மிகத் தவறான உண்மைக்குப் புறம்பான ஒன்று.
இதில் பெரும் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது இவர்கள் எல்லாம் படித்தவர்களா, தேச பக்தி உள்ளவர்களா என்பதை ஆயிரம் முறை நமக்கு நாமே கேட்டுக் கொண்டு மனச்சலிப்பை அடைய வேண்டிய நிலையை அடைய வேண்டியதாக இருக்கிறது.
எந்த நல்ல காரியத்தைச் செய்தாலும் உடனே அதை எதிர்ப்பது எதிர்க்கட்சியின் வேலை இல்லை. தேசத்துரோக எதிரிக் கட்சிகளின் வேலை தான் அது.
இதை நிச்சயமாக தேசபக்தி உள்ள சோஷியல் மீடியா நண்பர்களும், தனி ப்ளாக்கில் எண்ணங்களைப் பதிவு செய்வோரும் எதிர்த்து உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும்.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
காங்கிரஸின் பழைய நல்ல பாரம்பரியம் போயே போய் விட்டது.
அதற்குத் தொடக்கம் எமர்ஜென்ஸி காலம் என்றே சொல்லலாம்.
1973இல் இந்திரா காந்தி அவர்கள் ஏ.ஏன். ரேயை இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமித்தார். J M Shelet, K S Hegde A N Grover – ஜே.எம். ஷெலத், கே.எஸ்,ஹெக்டே, ஏ.என். க்ரோவர் ஆகிய சீனியர்களைப் புறம் தள்ளி ஒதுக்கி அவர் ஏ.என்.ரேய நியமித்தார்.
இதனால் மனம் வெறுத்துப் போன மூன்று சீனியர் நீதிபதிகளும் தங்கள் ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்தனர்.
இதற்கு பாராளுமன்றத்தில் பதில் அளித்த காங்கிரஸ், “ யார் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்பதை அரசே நிர்ணயிக்கும். அதன் வேலையே அது தான். எங்களது கொள்கைக்கு உகந்தவர்கள் யாரோ அவர்களையே நாங்கள் நியமிப்போம்” என்று கூறியது.
ஆனால் இன்றோ அவர்கள் உரத்த குரலில் நீதி அமைப்பு சுதந்திரமாக இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்.
1975ஆம் ஆண்டு நீதிபதி ஜக்மோஹன் சின்ஹா ஒரு தீர்ப்பை வழங்க வேண்டி இருந்தது.
தேர்தல் ஊழல் பற்றிய கேஸ் அது. ராஜ் நாராயண் Vs இந்திராகாந்தி கேஸ் அது.
நீதிபதி சின்ஹாவுக்கு ஒரு போன் வந்தது.
“நீங்கள் இந்திராகாந்திக்கு எதிராகத் தீர்ப்பை வழங்கினால், உங்கள் மனைவி அடுத்த கர்வ சௌத் விரதம் அனுஷ்டிக்க மாட்டார்” என்றது போன் கால்.
அதாவது சின்ஹா உயிரோடு இருக்க மாட்டார் என்று அர்த்தம்.
அதற்கு உடனே சின்ஹா பதில் கூறினார்: நல்ல வேளையாக என் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்னால் இறந்து விட்டார்.” என்று!
சின்ஹாவின் வரலாற்றுப் பிரசித்தமான தீர்ப்பு தேசத்தை ஒரு கலக்கு கலக்கியது.
காங்கிரஸின் மணிமகுடம் ஆடியது.
மகுடம் கழன்று தரையில் விழாமல் இருக்க எமர்ஜென்ஸி – அவசரநிலை பிரகடனம் அவசரம் அவசரமாய்ச் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகப் பிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
இந்திரா காந்தியும் காங்கிரஸும் தேசத்தைக் காப்பாற்ற இந்த அவசர நிலை என்று கூறியபோதும் கூட அனைவருக்கும் தெரிந்தது – இது இந்திராகாந்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்த செயல் என்று.
1976இல் ஏ.என். ரே தனக்கு நீதிபதி பதவியை அளித்ததற்கான நன்றிக் கடனைத் தீர்த்தார். ஷிவ்காந்த் சுக்லா Vs ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில் வழக்கை விசாரிக்க அவர் அமைத்த பெஞ்ச் அவரது அடிப்படை உரிமை அனைத்தையும் பறித்தது.
அதில் ஒரே ஒரு தைரியமான நீதிபதி தான் இருந்தார். அவர் பெயர் நீதிபதி H R கன்னா.
அவர் சக நீதிபதியைப் பார்த்துக் கேட்டார்: “நீங்கள் கண்ணாடியில் உங்களை உங்கள் சொந்தக் கண்ணால் பார்க்க முடியுமா? என்று!
(Can you see yourself in the mirror with your eyes)
ஆதாரம் :இணையதளப் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்ட தேதி 8-4-2023
If any word is split into two lines, it is shown with ……… dots (in the answers). No abbreviation like Insat, IRRS etc are used. Only names of persons or missions are used.
அறுபடை வீடுகள் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரிந்த முருகன் தலங்கள்தான். அவை தவிர நூற்றுக் கணக்கான புகழ் பெற்ற முருகன் கோவில்கள் இருக்கின்றன. அதற்குச் சான்று 500 ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை அருணகிரி நாதர் பாடிப் பரவியுள்ளார். கீழேயுள்ள கட்டங்களில் காணப்படும் 25 முருகன் கோவில்கள் என்ன என்ன?
அறு படை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றைத் தேடாதீர்கள்.
ஊ
தி
ம
லை
ர
த்
ன
கி
ரி
ம்
ல
ம
ல்
தி
ர்
ரு
க
து
க
ரு
தி
க
வூ
நா
கை
ரை
க
க்
வ
ரு
தி
ழு
ர்
யூ
வா
று
சி
ரு
ச்
ர்
வ
ள்
ளி
யூ
ர்
ணை
சி
கா
ள்
வ
ய
லூ
ர்
த
ம
ளி
லை
சி
ஞ்
ல
இ
சே
ம்
ம்
ம
யி
வ
ழி
ல
ப
சி
லை
ம
லி
ரா
வி
கா
ம்
ர
நா
க
ன
க
கி
ரி
ர்
ம்
வி
ம்
ர
பு
சீ
ஞ்
கா
அ
Answers
வள்ளியூர், வள்ளிமலை, வழுவூர், வி ராலிமலை, மது ரை, ம யில ம், மயிலை, திருவக்கரை, திருவருணை, ஊதிமலை, வய லூ ர், சிக்கல், இலஞ்சி,
ஆஸ்ரமத்திலுள்ள கன்றுக்குட்டி யைக் குணப்படுத்தவே முடியாது என்று டாக்டர்கள் கை விரித்தனர். அதற்கு விஷ ஊசி போட்டுக் கொல்லுங்கள் என்றார் காந்திஜி. அதுவும் இரண்டே நிமிடத்தில் செத்தது. உடனே ஆமதாபாத்திலும், நாடு முழுவதிலும் அஹிம்சா வாதிகள் போர்க்கொடி தூக்கினர். காந்திஜியை வசை மாரி பெய்து கடித மழை பெய்தனர். வச வுகளைக் கண்ட காந்திஜி நவஜீவன் என்ற தன்னுடைய பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதினார் . அதன் சுருக்கம் பின்வருமாறு (தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)
xxxx
ஒரு கவிஞர் பாடினார்
அன்பின் பாதை ஒரு அக்கினிப் பரீட்சை
கோழைகள் அதிலிருந்து ஓடிவிடுவர்
அஹிம்சை என்பதும் அன்புப் பாதை. அதை ஒருவர் தனிக்கத்தான் கடக்கவேண்டும் .
ஆனால் ஒருவர் ஒரு நியாயமான கேள்வியை என்னிடம் கேட்கலாம். கன்றுக்குட்டிக்கு பின்பற்றிய நீதியை மனிதர்களுக்கும் பின்பற்றுவீர்களா? ஐயா காந்திஜியே, உம்ம விஷயத்தில நீ இதைக் கடைப்பிடிப்பியா?
இதோ என் பதில்– ஆமாம்; அப்படித்தான் செய்வேன் . அதே விதி, இந்த இரண்டு கேள்விக்கும் பொருந்தும்.
யதா பிண்டே, ததா பிரஹ்மாண்டே (பிண்டத்தில் இருப்பது பிரஹ்மாண்டத்திலும் இருக்கிறது ); இதற்கு விதிவிலக்கு என்பதே இல்லை ; கன்றுக்குட்டியைக் கொன்ற முறை தவறானது; வன்முறை/ ஹிம்சை மிக்கது .
ஆனால் நிஜ வாழ்வில் நம்முடைய சொந்த பந்தங்கள் நோய்வாய்ப்பட்டால் இந்த விதியைப் பின்பற்றி மரணத்தைக் கொடுப்பதில்லை ; ஏனெனில் அவர்களுக்கு உதவி செய்ய சில வழிகள் நம்மிடம் உள்ளன. மேலும் அவர்களுக்கு சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றல் உள்ளது. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் என் நண்பருக்கு நோய் வந்துவிட்டது அவருக்கு இனி என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது; அவரும் உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை ; அவர் நினைவற்ற நிலையில் இருக்கிறார் ; வலியால் துடித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . இந்த நிலையில் அவருடைய உயிரை முடித்துவைப்பதை நான் ஹிம்சை என்று கருதவில்லை.டாக்டரின் கத்தியும் கொலைகாரன் கத்தியும்
ஒரு நோயாளியிடத்தில் அவனது நோயைக் குணப்படுத்த,அறுவைச் சிகிச்சை மருத்துவர் கத்தியால் உடற்பகுதிகளை வெட்டி சிகிச்சை தருகிறார் ; இதே போல சில தருணங்களில் ஒருவர் மேலும் ஒரு படி சென்று , நோயாளியின் நலனுக்காக அவரது உயிரைத் துண்டிக்கும் தேவை ஏற்படலாம். சிலர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம். நீங்கள் சொன்ன முதல் உதாரணம் உயிரைக் காப்பாற்ற நடந்தது; இரண்டாவதில் உயிரை எடுக்க அல்லவா செய்தீர்கள் என்று .; இதை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இரண்டிலும் குறிக்கோள் ஒன்றுதான் என்பது புலப்படும் கஷ்டப்படும் ஆன்மாவை அதிலிருந்து விடுவிப்பதுதான் .ஒரு சிகிச்சையில் வலி ஏற்படுத்திய பகுதியை டாக்டர் வெட்டி எடுத்தார் இன்னொரு சிகிச்சையில் வலியை நிறுத்த முடியாத உயிரை நீக்கினார் அப் போது அந்த உடலுக்கு/ சவத்துக்கு இன்பமோ துன்பமோ இல்லை. இன்னும் சில சம்பவங்களையும் கற்பனை செயது பார்ப்போம். அங்கும் கொல்லாமல் விடுவதே ஹிம்சை; கொன்று தீர்ப்பதே அஹிம்சை எனப்படும் . என்னுடைய மகளின் நோக்கத்தை அறிய நேரமே இல்லாத ஓர் நொடிப்பொழுதில் அவளை ஒருவன் தாக்குகிறான் ; அவளை என்னாலும் காப்பாற்றும் நிலை இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள் . அப்பொழுது (மானத்தைக் காப்பாற்ற) அவளை நான் கொன்றுவிட்டு, அந்த முரடனை என் பலத்தைக் கொண்டு சமாளிப்பேன் . இது அஹிம்சையே.
ஆனால் பெரிய தொல்லை என்னவென்றால் , நம்முடைய அஹிம்சாவாதிகள் அஹிம்சை என்பது வணங்கப்படவேண்டிய ஒரு வஸ்து / ஒரு தாயத்து என்று கருதிக்கொண்டு அதைப் பின்பற்றுவதில் தடைகளையே போடுகிறார்கள் .
முடிவாக ஒன்று சொல்கிறேன் கோபத்தின் காரணமாகவோ, சுயநலத்தின் காரணமாகவோ ஒருவருக்கு தீங்கு செய்வது , தீங்கு செய்ய விரும்புவது , எதனுடைய உயிரையும் வாங்குவது ஹிம்சை எனப்படும்; இதற்கு நேர் மாறாக , ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர், ஒருவனுடைய உடல் ரீதியிலான, ஆன்மீக ரீதியிலான நன்மையை மனதில் கொண்டு, ஒருவருடைய உயிருக்கு முடிவுகட்டினால் அது அஹிம்சை எனப்படும்.; ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியே பார்த்து, அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முடிவு செய்ய வேண்டும் ; இறுதியாக ஒரு செயல் ஹிம்சையா அஹிம்சையா என்பது அதன் நோக்கத்தையே சார்ந்தது ஆகும்.
(நவஜீவன் பத்திரிகையில் மஹாத்மா காந்தி எழுதிய கட்டுரையின் சுருக்கம்)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –
அத்தியாயம் 2
ச.நாகராஜன்
தாந்தேயின் அபார நினைவாற்றல் சக்தி!
இத்தாலிய கவிஞரான தாந்தே (1265-1321) அபார நினைவாற்றல் சக்தியைக் கொண்டவர். அவரது டிவைன் காமடி (Divine Comedy) என்ற கவிதை உலகப் பிரசித்தி பெற்றது. இத்தாலிய மொழியின் தந்தை என்றும் அவர் புகழப்படுகிறார்.
ஒரு நாள் அவர் ஃப்ளோரென்ஸ் நகர் வீதியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரை அணுகி, “உலகில் சுவையான உணவு எது?”
என்று கேட்டான்.
அவனைச் சரியாகக் கவனிக்காமலேயே “முட்டை தான்” என்று பதில் கூறியவாறே நடந்தார் தாந்தே.
ஒரு வருடம் கழிந்தது. அதே நபர் அதே வீதியில் கவிஞர் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் வந்து, “எதனுடன்?” என்று கேட்டான்.
முந்தைய வருட சம்பவத்தைப் பற்றி தாந்தே நினைத்தாரா இல்லையா யாருக்கும் தெரியாது, ஆனால் அவர், “உப்புடன்” என்று பதில் கூறியவாறே நடந்தார்.
விக்டர் ஹ்யூகோவின் கேள்விக் குறி?
பிரான்ஸ் நாட்டில் நாடகம், கவிதை, இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றின் படைப்பிற்குப் பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார் அறிஞர் விக்டர் ஹ்யூகோ (1802-1835)
அவரது எழுத்துக்கள் ஐரோப்பா முழுவதும் பரவி அவருக்குப் புகழைத் தந்தது. நாடர்டேம் டீ பாரிஸ் என்ற நாவலும் லெஸ் மிஸரபிள்ஸ் என்ற அவரது நாவலும் குறிப்பிடத் தகுந்தவை. 1862இல் அவர் லெஸ் மிஸரபிள்ஸ் நாவலை பிரசுரத்திற்காக தனது வெளியீட்டாளரிடம் அனுப்பினார். ஆனால் அது வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றதா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை.
ஆவல் உந்த ஒரு கேள்விக்குறியை இட்டு ஒரு பேப்பரை தனது பப்ளிஷரிடம் அவர் அனுப்பினார்.
உட்னேயே பதில் வந்தது ஒரு பேப்பரில் – அதில் இருந்தது ஒரு ஆச்சரியக் குறி மட்டுமே!
அபாரமான வரவேற்பு என்று புரிந்து கொண்டார் விக்டர் ஹ்யூகோ.
பிகாஸோவின் (PABLO PICASSO) பயம்!
பாப்லோ பிகாஸோவுக்கு உயில் எழுதுவது என்றால் பயம். தன் உயிலைத் தான் எழுதினால் உடனே தனக்கு மரணம் சம்பவிக்கும் என்று அவர் நம்பினார். ஆகவே அவர் உயில் எழுத மறுத்தார்.
1881ஆம் வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அவர் பிறந்தார்.
1973 ஏப்ரல் 8ஆம் தேதி அவர் மறையும் போது அவருக்கு வயது 92.
இந்த உயில் எழுத மறுத்ததால் அவருக்கும் குடும்பத்தாருக்கும் நேர்ந்த சங்கடங்கள் பல.
அவரது விதவை மனைவியான ஜாக்குலினுக்கும் அவரது நான்கு குழந்தைகளுக்கும் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டு அது பல வருடங்கள் நீடித்தது. அவரது படைப்புகள் பற்றிய ஆராய்ச்சியில் இது கொண்டு விட அங்குமிங்குமாக சிதறிக் கிடந்த அவரது 60000 கலைப் படைப்புகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
எண்பது வருட கால உழைப்பில் உருவானவை அவை.
ஒரு சமயம் உணவு விடுதி ஒன்றில் அவர் இருந்த போது ஒரு பெண்மணி அவரை அணுகி தனது கைக்குட்டையில் எதையாவது எழுதுமாறு வேண்டினார். அதற்கு எவ்வளவு பணம் சொன்னாலும் தருவதாக உறுதி கூறினார்.
அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிகாஸோ அப்படியே செய்தார்.
“எவ்வளவு பணம்?” என்று அந்தப் பெண்மணி கேட்க பத்தாயிரம் டாலர் தாருங்கள் என்றார் பிகாஸோ.
விக்கித்துப் போன அந்தப் பெண்மணி, “அதை நீங்கள் முடிக்க ஆன நேரம் முப்பது விநாடிகள் தானே” என்று கேட்டார்.
“இல்லை, இல்லை, அதற்கு எனக்கு நாற்பது வருடங்கள் ஆயின” என்று பதில் சொன்னார் பிகாஸோ.
(The killing of an ailing calf in the Ashram caused a great commotion in certain circles in Ahmedabad and some angry letters having been addressed to Gandhiji on the subject, he critically examined the question in the light of the principle of non violence ( ahimsa) in an article in the Navajivan, the substance of which is given below)
A poet has sung
“The pathway of love is the ordeal of fire,
The shrinkers turn away from it”
The pathway of ahimsa, that is of love, one has to tread all alone.
But the question may very legitimately be put to me: Would I apply to human beings the principle I have enunciated in connection with the calf? Would I like it to be applied in my own case? My reply is Yes; the same law holds good in both the cases. The law of
Yathaa Pinde, thathaa Brahmaande (as with one, so with all) admits of no exceptions, or the killing of the cow was wrong and violent. In practice however we do not cut short the sufferings of our ailing dear ones by death because aa a rule we have aways means at our disposal to help them and because they have the capacity to think and decide for themselves. But suppose in the case of an ailing friend I am unable to render any aid whatever and recovery is out of the question and the patient is lying in an unconscious state in the throes of fearful agony then I would not see any himsa (violence) in putting an end to his suffering by death.
Doctor’s Knife and Murderer’s Knife
Just as a surgeon does not commit himsa but practises the purest ahimsa when he wields his knife on his patient’s body for the latter’s benefit, similarly one may find it necessary under certain imperative circumstances to go a step further and sever life from the body in the interest of the sufferer. It may be objected that whereas the surgeon performs his operation to save the life of the patient, in other case we do just the reverse. But on a deeper analysis it will be found that the ultimate object sought to be served in both the cases is the same, viz. to relieve the suffering soul within from pain. In the one case you do it by severing the diseased portion from the body, in the other you do it by severing from the soul the body that has become an instrument of torture to it. In either case it is the relief of the soul within from pain that is aimed at, the body without the life within being incapable of feeling either pleasure or pain. Other circumstances can be imagined in which not to kill would spell himsa, while killing would be ahimsa. Suppose for instance that I find my daughter – whose wish at the moment I have no means of ascertaining – is threatened with violation and there is no way by which I can save her, then it would be the purest form of ahimsa on my part to put an end to her life and surrender myself to the fury of the incensed ruffian.
But the trouble with our votaries of ahimsa is that they have made of ahimsa a blind fetish and put the greatest obstacle in the way of the spread of true ahimsa in our midst.
Xxxxx
To conclude then, to cause pain or wish ill to or to take the life of any living being out of anger or a selfish intent is himsa. On the other hand, after a calm and a clear judgement to kill or cause pain to a living being with a view to its spiritual or physical benefit from a pure, selfless intent may be the purest form of ahimsa. Each such case must be judged individually, on its own merits. The final test as to its violence or non violence is after all the intent underlying the act.