Beautiful Names for Girls from Lalitha Sahasranamam (Post No.15,275)

Written by London Swaminathan

Post No. 15,275

Date uploaded in London –  15 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெண்குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?

அழகான பெயர்களை லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது!

Lalitha Sahasranamam is a hymn on Goddess Parvati, Shiva’s wife. It is recited by millions of Hindu women every day. It has some beautiful names for girl children. Parents sometimes struggle to find some attractive, short and popular names after the birth of a baby girl. Nowadays there is a craze about numerology. So, they distort the names with strange spellings. It is not good. But when you call the child at home if you use the real name that is okay.

Here are good sounding names:

Feminine names in Sanskrit end with long sound: aa, ee

Krishna is masculine; Krishnaa (Draupadi) is feminine. But when you write Hindu feminine names you simply write Gayatri instead of Gayatree.

It is up to individuals to choose the spelling. When one names a child, make sure it looks awkward in another language, at least spoken in that country.

Last but not the least, if your child has A lettered name, she will be called first in any public event or Interviews. If your child has Y lettered name, she will be called last in any public event or Interviews. For the meaning in English, please go to:

All the names have positive meaning; They are about, radiant, bright, shining, power, eternal, happy, pleasure, knowledge, consciousness, wisdom, smiling, wealth, flowery, gold, gems, long life and health.

I have only given popular spellings

ஸ்ரீ லலிதா ,செண்பகம்லட்சுமி லோசனாபுஷ்பாதாரா,  காந்தி மஞ்சரி மனோகராமனோகரி பிரபாகனகாஅருணா லாவண்யாசிவாசுதாசிந்தாமணிகாமாக்ஷி ,ஜ்வாலாமாலினிலதா,  நித்யா ,பங்கஜாபவானிசாம்பவிசக்திசர்வானிசாந்திசங்கரிசாத்விநிரஞ்சனாநிர்மலாசாந்தாசர்வ மங்களாதுர்காமனோன்மணிமஹாதேவிமஹாலக்ஷ்மிமஹாரதிமஹேஸ்வரிகலாகலாமயிசாருஹாசாபார்வதிபத்மாபத்மநாயனாசின்மயி , ஈஸ்வரி, புவனா, புவனேஸ்வரி, பகவதி, நாராயணி, அம்பிகா, அம்பா, ராமயா, ரஞ்சனி, ரமா, ரமணி, ரதிப்ரியா, கல்யாணி, காந்தா, காந்தி, காந்திமதி, கலாவதி, வித்யா, விமலா, வந்த்யா,  ஜெயா, நிருபமா, பிரபாவதி, பிரசித்தா, பரமேஸ்வரி, சிவப்ரியா, காயத்ரி சந்த்யா, நித்ய யெளவனா,நந்தினி, நளினி, தேஜோவதி, ஷோபனா, சித்தேஸ்வரி, யசஸ்வினி, மதுப்ரீதா   ,மேகா, சுருதி, ஸ்ம்ருதி, வித்யா, காத்யாயனி, மோகினி, பராசக்தி, ஸ்ரீவித்யா, உமா, கெளரி, தாட்சாயணி ,லோபாமுத்ரா, வஸுதா, சுபகரி, சரஸ்வதி, சாவித்ரி, மதுமதி, ஸ்வதந்த்ரா,சித்கலா, பிரேமா, ரூபா, மஹதி, அபர்ணா, கலா, மாலா, ஸத்யா, சத்யவ்ரதா, சத்யரூபா, ஜனனி, கம்பீரா, வைஷ்ணவி, மனஸ்வினி, ஸெளம்யா, விசாலாக்ஷி, லீலா, வினோதினி, பூர்வஜா, சியாமளா, தேவி, ராணி,மந்த்ரிணி

சம்ஸ்க்ருத வழக்குப்படி எல்லா பெண்களின் பெயர்களும் ஆ, ஈ என்ற நெடில்களில் முடியும்; கிருஷ்ண என்றால் ஆண்; கிருஷ்ணா (திரவுபதி) என்றால் பெண்; இங்கேயுள்ள பெயர்களை இணைத்தும் பெயர் சூட்டலாம் ; உதாரணம்- நித்ய கல்யாணீ.

****

श्रीललिता – Sri Lalitha (sree lalithaa)

चम्पका- Champaka/a

लक्ष्मी,लोचना Lakshmi, Lochana

पुष्पा Pushpa

तारा   Tara

कान्ति Kanthi

मञ्जरी Manjari

मनोहरा /री Manohara or manohari

प्रभा Prabha

कनका Kanaka

अरुणा Aruna

लावण्य Lavanya

शिवा Shivaa

चिन्तामणि Chintamani

सुधा Sudhaa

कामाक्षी Kamakshi

ज्वाला , मालिनि Jwala, Malini

लता Latha

नित्या Nithya

पङ्कजा Pankaja

शक्त Sakthi

भवानी Bhavani

शाम्भवी  Sambhavi

शर्वाणी  Sarvani

शाङ्करी Sankari

साध्वी Sadhwi

शान्ति Santhi

निरञ्जना Niranjana

निर्मला Nirmala

नित्या Nithya

शान्ता Shantha 

दुर्गा Durga

सर्व   मङ्गला Sarava Mangala

मनोन्मनी Manonmani

माहेश्वरी Maheswari

महादेवी Mahadevi

महालक्ष्मी  Maha Lakshmi

महारतिः Maharathi

कलामयी Kala or Kalamayi

चारुहासा Charuhasa

पार्वती Parvati

पद्मनयना Padma Nayana

चिन्मयी Chinmayi

ईश्वरी Eswari

भगवती Bhagavathi

पूर्णा Poorna or Purna

भुवनेश्वरी Bhuvana or Bhunaneswari

अम्बिका Ambika

नारायणी Narayani

रम्या Ramya

रञ्जनी Ranjani

रमणी Ramani

रमा Rama

रतिप्रिया Rathipriya

कल्याणी Kalyani

कलावती Kalavathy

कान्ता Kantha

विजया Vijaya

विमला Vimala

वन्द्या Vandhya

जया Jaya

निरुपमा Nirupama

प्रभावती Prabhavathy

प्रसिद्धा Prasidhdha

परमेश्वरी Parameswary

शिवप्रिया Sivapriya

गायत्री Gayatri

सन्ध्या Sandhya

नित्ययौवना Nithya Yauvana

नन्दिनी Nandhini

तेजोवती Tejovathy

नलिनी Nalini

शोभना Shobana

कान्तिमती Kanthimathy

सिद्धेश्वरि Sidhdeswari

यशस्विनी Yassvini

मधुप्रीता Madhu Preetha

मेधा Megha

श्रुतिः Sruthi

स्मृतिःSmriti

विद्या Vidhya

कात्यायनी Kathyayani

मोहिनी Mohini

पराशक्तिः Para Sakti

श्रीविद्या Sri Vidhya

दाक्षायणी Dakshayani

उमा Uma

गौरी Gowri

लोपामुद्रा Lopamudra

वसुदा Vasudha

शुभकरी Subhakari

सावित्री Savitri

सरस्वती Saraswati

मधुमती Madhumathi

स्वतन्त्रा Swatantra

चित्कला Chitkala

प्रेमरूपा Prema, Roopa

अपर्णा Aparna

महती Mahathi

कला, माला Kala, Mala

सत्यव्रता Sathya, Vrata

सत्यरूपा Sathyarupa or Sathya, Rupa

जननी Janani

गम्भीरा Gambhira

वैष्णवी Vaishnavi

सौम्या Sowmya

मनस्विनी Manasvini

विशालाक्षी Visalakshi

लीला,  विनोदिनी Leela, Vinodhini

पूर्वजा Purvaja

Shyamala devi (Mantrini) Shyamala, Devi, Mantrini

Mani, Ratna (gems), Meena, Kamala, Padma and other words come in the long names

–subham—

Tags- Naming, Baby Girls, Goddess names, Lalitha Sahasranamam , Beautiful Names for Girls, பெண் குழந்தைகள் ,பெயர்கள், லலிதா சஹஸ்ரநாமம் 

GNANAMAYAM 14 December 2025 BROADCAST PROGRAMME

prayer

News

singapore Smt Bhanumathi Ravi

Alayam Arivom

Nagarajan

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayanthi Sundar Team- Mr Natarajan and Mrs Nirmala Natarajan.

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Brahannayaki Sathyanarayanan from Bangalore

Topic- Madurai Koodal Azakar Temple

Talk by S Nagarajan from Bangalore

Topic: Famous Composer Uthukkadu Venkata Kavi

****

SPECIAL EVENT-

INTERVIEW WITH MRS BHANUMATHI RAVI, 

POET, AUTHOR, WRITER FROM SINGAPORE.

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 14th December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-

திரு நடராசன், திருமதி நிர்மலா நடராசன் திரு நடராஜன்,திருமதி நிர்மலா நடராஜன்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

பிரஹந்நாயகி சத்தியநாராயணன்- பெங்களுர்

தலைப்பு — மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில்

****

சொற்பொழிவு : திரு எஸ் நாகராஜன்

தலைப்பு : ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சிங்கப்பூர் கவிஞருடன் பேட்டி

திருமதி பானுமதி ரவி , சிங்கப்பூர் ;

எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர்,

—subham—

Tags-Gnanamayam Broadcast, 14-12- 2025, programme

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post.15,274)

Written by London Swaminathan

Post No. 15,274

Date uploaded in London –  15 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்   வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 14- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

***

முதலில் திருப்பரங்குன்றம் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ( திங்கட்கிழமை) ஐகோர்ட் மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்’ என்றார்.

நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், வாதங்களை முன் வைத்தார்.

, ”இது ஒன்றும் பொது நல வழக்கு அல்ல. இந்த வழக்கு, அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. முதலில் அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்பதையும், இரண்டாவதாக, அதில் தீபம் ஏற்றும் சம்பிரதாய நடைமுறையின் அவசியம் குறித்தும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார்.

கோயில் தரப்பு வக்கீல்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது கிரைனைட் தூண்.

நீதிபதிகள்: மலை உச்சியில் இருப்பது கிரைனைட் தூண் என்பதை யார் உறுதி செய்தது ?

கோயில் தரப்பு வக்கீல்: பல புகைப்படம் பார்த்து பேசுகிறேன். அரசு அதிகாரிகள் அதை சர்வே கல் என்கின்றனர்

நீதிபதிகள் : இது சர்வே கல்லா ? தீபத்தூணா ? விளக்குத்தூணா? என்பதை வல்லுநர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதை கூற முடியாது எனத் தெரிவித்தனர். மேலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

***

திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம்


திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, தமிழக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் அதன் தேசியத் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை நடத்தி உள்ளார்.

கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ‘நோட்டீஸ்’ கொடுத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த அதன் தலைவர் மோகன் பாகவத்திடம், இந்த பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். அப்போது, தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பின்னர், திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் பிரச்னையில், ஹிந்து அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்., உதவியை நாடினால் பரிசீலிப்போம்,” என்றார்.

****

பாஜக எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகப் பாரதீய ஜனதாக் கட்சி  எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விவாதத்தின் போது பேசிய பாஜக எம்பி அனுராக் சிங் தாக்கூர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அதேபோல் மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.இதற்குத் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

***

தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் தீபம் ஏற்றினர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் உண்ணாவிரதமம் துவக்கியுள்ளனர் 

****

திருப்பதியில் பட்டு சால்வை வழங்கியதில் மோசடி: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதியில் பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணியை வழங்கி மோசடி செய்தது பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2014 முதல் 2025ம் ஆண்டு வரை, திருப்பதி கோவிலில் முக்கிய நபர்களுக்கு பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இப்போது இரண்டாவது மோசடி அம்பலமாகியுள்ளது

திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பிஆர் நாயுடு, பட்டு சால்வைகள் குறித்து சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவிலின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணையை துவக்கினர். அதில், முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட சால்வைகள், உண்மையில் 100 சதவீதம் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டு சால்வை எனக் கூறி வழங்கப்பட்ட துணி ஆய்வகங்களில் அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவை பாலியஸ்டர் துணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிஆர் நாயுடு கூறியதாவது:

350 ரூபாய் மதிப்பிலான சால்வையை 1,300 ரூபாய் எனக்கூறி பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 50 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 2015 – 2025 ம் ஆண்டு வரை மோசடி நடந்துள்ளது.

****

புத்தகக் கண்காட்சியில் இந்து விரோத துண்டுப் பிரசுரம்

பல்லடம் புத்தகக் கண்காட்சியில், ஹிந்து மதம் மீது அவதுாறு பரப்பும் வகையில் நோட்டீஸ் வினியோகித்த ‘திராவிடர் தளம்’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கோரியு ள்ளன.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள மணிவேல் மஹாலில், கடந்த 5ம் தேதி துவங்கி புத்தகக் கண்காட்சி நடந்தது . இமைகள் ரோட்டரி சங்கம், பல்லடம் நகராட்சி, தமிழ்ச்சங்கம் உள்ளிட்டவை சார்பில் நடத்தப்படும். புத்தகக் கண்காட்சியில், ‘கருஞ்சட்டை பதிப்பகத்தினர் அரங்கு அமைத்திருந்தனர்.

இந்த அரங்கில், ஒருவர். ‘திராவிடர் தளம்’ என்ற பெயரில்,

பக்தியுள்ள மாணவர்களுக்கு சில கேள்விகள் என்ற நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இதில், ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கருத்துகள் இடம் பெற்றிருந்தன,
தகவல் அறிந்த பல்வேறு ஹிந்து அமைப்புகள், புத்தகக் கண்காட்சியை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஹிந்து அமைப்பினரிடம் புகார் மனு பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. ஆனால் திராவிடர் தளம் போன்ற அமைப்புகள், கண்காட்சிக்குள் எப்படியோ புகுந்து, மத நம்பிக்கை கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் விதமான செயலில் ஈடுபடுகின்றன.

ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது:
புத்தக கண்காட்சி என்பது அறிவை வளர்க்கும் விதமாக நடக்க வேண்டும். அதற்குப் பதிலாக கலகத்தை விளைவிக்கும் வகையில் இது போன்ற செயல்கள் நடக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. கடந்தாண்டு திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியிலும் இதுபோல் நடந்த நாத்திக பிரசாரம் காரணமாக பெரும் பிரச்னை ஏற்பட்டது. அடுத்த மாதம் நடக்கவுள்ள புத்தக கண்காட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் உரிய கண்காணிப்பும் அறிவுறுத்தலும் வழங்க வேண்டும்  என்று கிஷோர் குமார் கூறினார்.

***

கோவில் நிலம் விற்பனை குத்தகைக்கு புதிய விதிகள்

சென்னை: கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை அல்லது அடமானம் ஆகியவற்றுக்கான புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில், திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஒரு தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலத்தை மீட்க, ஹிந்து சமய அறநிலையத் துறை முயற்சித்தபோது, அந்த கல்லுாரி நிர்வாகம் மாற்று நிலத்தை கொடுக்க முன்வந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலங்களை பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் குறித்து, கேள்வி எழுப்பியது.

இதன் அடிப்படையில், தமிழக அரசு கோவில் நிலங்கள் விற்பனை, பரிமாற்றம், குத்தகை, அடமானம் ஆகியவற்றுக்கான விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

***

பாகிஸ்தானில் மீண்டும் சம்ஸ்க்ருதம் !

இந்தியா இரண்டு நாடுகளாகப்பிரிந்து 78 ஆண்டு ஆன பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் மீண்டும் சம்ஸ்க்ருத கல்வி துவக்கப்பட்டுள்ளது

லாகூர் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், மகாபாரதம் குறித்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன்

லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நடவடிக்கையாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மகாபாரதம் மற்றும் பகவத் கீதையின் பகுதிகள் உட்பட சமஸ்கிருத வசனங்கள் உருது மொழியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாபாரத தொலைக்காட்சி தொடரின் பாடலின் முதல் வரியான ”ஹை கதா சங்க்ரம் கி” என்பது மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் உலகின் நன்மைக்காகவும், தர்மம் மற்றும் அதர்மத்தின் நித்திய போராட்டத்தையும் குறிப்பதாகும்.

பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு மூன்று மாதப் பயிற்சி பட்டறைக்கு மாணவர்கள் மற்றும் அறிஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இப்போது ஒரு முறையான பல்கலைக்கழக பாடமாக பரிணாமம் எடுத்துள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இதை ஒரு முழு ஆண்டு பாடமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய ஃபார்மன் கிறிஸ்தவக் கல்லூரியின் ஆசிரியர் ஷாஹித் ரஷீத், “தெற்காசியப் பிராந்தியத்தின் தத்துவம், இலக்கியம் மற்றும் ஆன்மீக மரபுகளை வடிவமைத்த ஒரு மொழியைப் பற்றிய தீவிர ஆய்வை மீட்டெடுப்பதற்கான முயற்சியின் சிறிய படியாக இந்த விஷயம் பார்க்கப்பட்டாலும், இதை முக்கியமான ஒன்றாக கருதுகிறோம். சமஸ்கிருத மொழியை நாம் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது?, அது இந்தப் பகுதி முழுவதையும் இணைக்கும் ஒரு மொழியாக உள்ளது. சிந்து சமவெளி காலத்தில் இங்கு நிறைய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் அதை ஏற்க வேண்டும். அந்த மொழி எந்த ஒரு மதத்துடனும் பிணைக்கப்படவில்லை. எனவே அது நமக்கும் சொந்தமானது” என குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மாணவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் இப்போது அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டனர். சிலருக்கு சமஸ்கிருதம் வேறு, இந்தி வேறு என்பது தெரியாது. மாணவர்கள் அதன் தர்க்கரீதியான அமைப்பைப் புரிந்துகொண்டபோது, ​​அவர்கள் மொழியை ரசிக்கத் தொடங்கினர் எனவும் அந்த பேராசியர் கூறியுள்ளார்.

இதனிடையே சமஸ்கிருத ஆவணங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அது பல தசாப்தங்களாக கல்வியாளர்களால் தொடப்படாமல் இருந்ததாகவும் கூறினார்

இப்போது உள்ளூர் அறிஞர்களுக்கு சமஸ்கிருதத்தில் பயிற்சி அளிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 10-15 ஆண்டுகளில், பாகிஸ்தானில் இருந்து கீதை மற்றும் மகாபாரத அறிஞர்கள் வெளிவருவதை நாம் காணலாம்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  டிசம்பர் 21 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் . வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, Broadcast, News, 14 12  2025, Vaishnavi

ஆலயம் அறிவோம்! மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்!(Post No.15273)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 15,273

Date uploaded in London – –  15 December 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

14-12-2025 ஞாயிறன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!

ஆலயம் அறிவோம்

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு  பல கோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!

உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு

–    பெரியாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் ஆகும். இது மதுரை ரயில் நிலையதித்லிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

108 வைணவத் திவ்யத் தலங்களில் இந்தக் கோவில் அமைந்துள்ள மதுரையும் ஒரு திருத்தலமாகும்.

ஆறுகள் கூடும் இடங்களுக்கு நமது நாட்டில் முக்கியத்துவம் உண்டு. அதன்படி கிருதமாலா என்னும் நதி பூமாலை போன்று இந்த மதுரை நகரைச் சுற்றி ஓடி மீண்டும் ஒன்று சேர்வதால் இது கூடல் நகர் என்ற பெயரைப் பெற்றது. இது கோவிந்தனின் அருள் பெற்றதால் திருக்கூடல் ஆயிற்று.

சில வருங்கள் முன்னர் கூட இந்தக் கோவிலுக்கு மிக அருகில் ஓடிக் கொண்டிருந்தது கிருதமாலா நதி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் சாக்கடை நீரைச் சேர்க்கவே அது அனுப்பானடியாக இன்று விளங்குகிறது.

மூலவர்: கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம், திருமுக மண்டலம்

தாயார்: மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி

தீர்த்தம் : கிருதமாலா, ஹேமபுஷ்கரணி

விமானம் : அட்டாங்க விமானம்

காட்சி கண்டவர்கள் ; பெரியாழ்வார், வல்லபர், பிருகு முனிவர்

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், கூடல் புராணம் உள்ளிட்ட நூல்களில் ஏராளமான வரலாறுகள் தரப்படுகின்றன.

கிருத யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றபடி ஒரு கோவிலை படைக்கச் சொன்னார். அவரும் இங்கு கிருதமாலா நதிக்கரையில்  அஷ்டாங்க விமானத்துடன் ஒரு கோவிலை அமைக்க எம்பெருமானும் பிராட்டியும் இங்கு எழுந்தருளினர்.

திரேதாயுகத்தில் பிருது என்னும் ஒரு மன்னன் இந்தத் தலத்தின் மீது பறக்க முயன்ற சமயத்தில் அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் அவனது விமானம் பறக்க முடியவில்லை. அவன் கீழிறங்கி இங்கு பெருமாளை வணங்க ஆரம்பித்து இறுதியில் முக்தி பெற்றான.

துவாபர யுகத்தில் விஷ்ணு பக்தியில் சிறந்த மன்னனான அம்பரீஷனும் இங்கு பெருமாளை வழிபட்டு முக்தி அடைந்தான்,

கலியுகத்தின் ஆரம்பத்தில் புரூரவன் என்னும் மன்னன் இங்கு பெருமாளை வழிபட்டு வைகுந்தம் அடைந்தான். அவனது புதல்வன் இந்திரத்யும்னன் என்பவனும் இங்கு வழிபட்டு வந்தான். அவனது புதல்வனே மலயத்வஜ பாண்டியன் ஆவான்.

அவன் வடக்கே உள்ள மன்னர்களை வென்று இமயத்தில் தன் மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையையும் பதித்தான்.

பின்னால் வந்த வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் முக்தி அளிக்கும் தெய்வத்தைப் பற்றி தனக்கு உரைத்து நிரூபணம் செய்பவருக்கு பொற்கிழி தருவதாக அறிவித்தான். அப்போது அவன் அரசவையில் புரோகிதராக இருந்த செல்வநம்பியின் கனவில் பெருமாள் தோன்றி ஶ்ரீ வில்லிப்புத்தூரில் இருக்கும் பெரியாழ்வாரை அழைக்குமாறு கூறினார். அவரும் அழைக்கப்பட்டார். பெரியாழ்வார் அரசவைக்கு வந்து வேதம், இதிஹாஸம். புராணங்கள் ஆகியவற்றிலிருந்து பல மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி  திருமாலே பரம்பொருள் என்று நிரூபிக்கலானார். அப்போது பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது. இதனால் ஆச்சரியமுற்ற மன்னன் பெரியாழ்வாரை யானை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்து கௌரவித்தான். அதனைக் காண பெருமாள் பிராட்டியுடன் கருட வாகனத்தில் விண்ணில் தோன்றினார்.

இதனைக் கண்ட ஆழ்வார், “இப்படி அழுகுடன் நீ காட்சி தந்தால் நின் அழகுக்கு கண் திருஷ்டி பட்டு விடாதோ என்று நினைத்து பெருமாளை பல்லாண்டு வாழ்க என்று பல்லாண்டு பாடினார்.

இந்தப் பலாண்டு தான் எல்லா வைணவத் தலங்களிலும் பெருமாளுக்கு முன்னர் முதன் முதலில் பாடும் திருப்பல்லாண்டாக அமைந்து விட்டது.

மதுரையில் ஓடும் வைகை நதி உருவான வரலாறு ஒன்று உண்டு. திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்த போது அவரது ஒரு பாதம் சத்தியலோகம் வரை சென்றது. அங்கிருந்த பிரம்மா அந்தப் பாதங்களை தனது கமண்டல தீர்த்தத்தால் அலம்ப அதிலிருந்து வந்த நீர்த்துளிகள் வையத்தில் இங்கு வீழுந்து வைகை ஆனது. அதுவே இரண்டாகப் பிரிந்து ஒரு மாலை போல ஆனது. ஒன்று வையை எனவும் மற்றொன்று கிருதமாலா எனவும் பெயரைப் பெற்றது.

இந்தத் தலம் திருமங்கையாழ்வாராலும் திருமழிசை ஆழ்வாராலும் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலமாகும்,  பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய தலமும் இதுவே என்பதால் அவராலும் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலமாகும் இது. மணவாள மாமுனிகள் இப்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்துள்ளார். இராமானுஜரால் பெரிதும் விரும்பி போற்றப்பட தலம் இது.

இங்கு கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்டது. கீழ்த்தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் பெருமாள் வியூக சுந்தரராஜன் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

இரண்டாவது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற பெயரில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூன்றாவது அடுக்கில் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

நவகிரகங்கள் இந்தக் கோவிலில் இருப்பது ஒரு சிறப்பாகும். இங்குள்ள சிற்பங்கள் வியக்க வைக்கும் சிறப்புகளைக் கொண்டவையாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கூடலழகரும் மதுரவல்லி நாச்சியாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

**

ஊத்துக்காடு வேங்கட கவி (Post No.15,272)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,272

Date uploaded in London –   15 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-12-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை! 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே

நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

 மக்களின் நெஞ்சங்களை அலை பாய வைத்து கிருஷ்ணரின் நர்த்தனங்களிலும் கானங்களிலும் ஈடுபடுத்தி உன்னதமான ஒரு பரவச நிலையை ஏற்படுத்தியவர் யார்?

இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் வரும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்று.

 ஊத்துக்காடு வேங்கட கவி என்றும் அறியப்படும் இவர் 1715ம் ஆண்டு ராமசந்திர ஐயர் – கமலநயனி தம்பதிகளுக்கு  மன்னார்குடியில் பங்குனி மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தார்.

இவர் ஊத்துக்காடு என்னும் ஊரில் வாழ்ந்தார்.

 ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு கிராமத்தை அடையலாம்.

 பழைய காலத்தில் இந்த ஊர் கோவூர் என்ற பெயருடன் விளங்கியது. ஆனால் தண்ணீரே இல்லாமலிருந்த இடத்தில் ஶ்ரீ கிருஷ்ணர் தனது லீலையைச் செய்து ஒரு ஊற்றை உருவாக்கியதால் ஊத்துக்காடு என்ற பெயரைப் பெற்றது.

 பிரசித்தி பெற்ற காளிங்க நர்த்தன பெருமாள் கோவில் இங்கு உள்ளது. ஆகவே இதற்கு தென் கோகுலம் என்ற பெயரும் உண்டு.

 இந்த ஊரில் தான் வேங்கடகவி வாழ்ந்து வந்தார். இளமையிலேயே தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமையை இவர் பெற்றார்.

 நீடாமங்கலத்தில் வாழ்ந்த ராஜா பாகவதர் என்பவரிடம் முறையாக இசையைப் பயின்றார்.

 இவரது தாயின் அறிவுரையின் படி ஶ்ரீ கிருஷ்ணனையே குருவாகக் கொண்டு உபாசனை செய்ய ஆரம்பித்தார்.

இவரது தமையனார் காட்டு கிருஷ்ண ஐயர் என்பவர் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மன் அரசவையில் புலவராகத் திகழ்ந்தார்.

அவரே இவரது பாடல்களை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார்.

 ‘இது ஒரு திறமாமோ’ என்ற பேகடா ராகப் பாடலே இவர் முதலாவதாக இயற்றிய கீர்த்தனை ஆகும். பிறகு அற்புதமான எளிய தமிழில் மளமளவென்று இனிய ராகங்களில் சொற்கள் விளையாட ஏராளமான கீர்த்தனைகளைப் புனைய ஆரம்பித்தார்.

சுமார் 246 பாடல்களை இவர் கிருஷ்ணர் மீது இயற்றியுள்ளார். அத்தோடு முருகன் மீது 9, விநாயகர் மீது 6, சிவன் மீது 5, அம்பிகை மீது 12, ராமன் மீது 5, ராதா மீது 4 அனுமன் மீது 1, சரஸ்வதி மீது 1 என்று பாடல்களை இயற்றியுள்ளார்.

அத்துடன்  வால்மீகி, ஜெயதேவர் உள்ளிட்டவர்கள் மீதும் இவர் பாடல்களை இயற்றியுள்ளார்.

 கானடா ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்துள்ள இவரது அலைபாயுதே கண்ணா பாடலைக் கேட்டு ரசிக்காதவர் யாரும் இருக்கமாட்டார்கள். திரைப்படத்தில் கூட இந்தப் பாடல் இடம் பெற்று ஆயிரக்கணக்கானோர மகிழ்வித்தது.

 தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த என்ற ஹம்சத்வனி ராக ஆதி தாளப் பாடலையும்

ஆடாது அசங்காது வா கண்ணா என்ற  மத்யமாவதி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த பாடலையும் கேட்காத பக்தர்களே இருக்க முடியாது.

 மிக பிரபலமான ஸ்வாகதம் கிருஷ்ணா மோஹன ராகத்தில் அனைவரையும் மயக்கும் பாடலாகும்.

பால்வடியும் முகம் என்ற பாடல் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த பாடல்.

அசைந்தாடும் மயில் ஒன்று, மாடு மேய்க்கும் கண்ணே என்று இவரது புகழ் பெற்ற பாடல்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 ஹிந்தோளம், ஆரபி போன்ற ஜனரஞ்சகமான ராகங்களில் இவர் பெரும்பாலான பாடல்களை அமைத்த போதும் நீலாம்பரி ராகத்திலும் இவர் பாடல் உண்டு. அபூர்வ தாளமான சங்கீர்ண மட்டிய தாளத்திலும் இவர் பாடல் உண்டு.

ஊத்துக்காடில் உள்ள உற்சவ விக்ரஹமான காளிங்க நர்த்தன கிருஷ்ண விக்ரஹம் அபூர்வமான வியக்க வைக்கும் அமைப்பைக் கொண்டதாகும். இதன் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணர் நடனமாடும் கோலத்தில் இது அமைந்துள்ளது. இந்த விக்ரஹத்தில் கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை.  கிருஷ்ணரின் இடது பாதத்திற்கு காளிங்கனின் தலைக்கும் ஒரு நூலை விட்டு எடுக்கும் அளவு மட்டுமே இடைவெளி உள்ளது. கிருஷ்ணர் வலது காலைத் தூக்கியபடி நர்த்தன கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டைவிரல் மட்டுமே காளிங்கனின் வாலைத் தொடுகிறது..

 இங்கு தான் கிருஷ்ணரின் அருளைப் பெற்றார் வேங்கட சுப்பையர்.

 வேங்கட சுப்பையரின் ஒரு பாடல் குறிப்பிடத்தகுந்த ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறது. ‘குரு பாதாரவிந்தமு கோமளமு’ என்ற பாடலில் அவர் கூறுகிறார்: “தான் யாரிடமும் கற்கவில்லை; அனைத்தும் கிருஷ்ணரின் அருளே” என்று குறிப்பிடுகிறார்.

இப்படி இவர் குறிப்பிடுவதால் இவருக்கு அனைத்தையும் அருளியது கிருஷ்ணர் தான் என்பது பக்தர்களின் கருத்தாகும்.

 ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின்  பாடல்களைத் தொகுத்து நீடாமங்கலம் ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளார்.

கே.ராஜம்மாள் (நீடாமங்கலம் ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் மனைவி)

5. எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம் சென்னை 600003

என்ற முகவரியில் இது பற்றிய விவரங்களை அறியலாம்.

இதிலிருந்து 105 பாடல்களைத் தொகுத்து www.projectmadurai.org

இணையதளம் வெளியிட்டுள்ளது. டிஜிடல் பிரதியை இதில் பார்க்கலாம்.

 இவரது பாடல்களில் உள்ள இனிமையான தமிழ் வார்த்தைகளின் இணைப்பையும் அவை தரும் பரவசத்தையும் விளக்க வார்த்தைகளே இல்லை.

ஊத்துக்காடு வேங்கடசுப்பையரைப் போற்றுவோம்; அவர் பாடல்களைக் கேட்டும் பாடியும் இறைவன் திருவருளைப் பெறுவோம்.

நன்றி. வணக்கம்! 

–SUBHAM—

TAGS- ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்

தந்த உலக்கையும், உரலில் ரத்தினைக் கற்களும்! அருணகிரிநாதர் காட்டும் காட்சி!! (Post.15,272)

ஸ்ரீரங்கம் தந்த சிற்பம் , பதினேழாம் நூற்றாண்டு 

Written by London Swaminathan

Post No. 15,272

Date uploaded in London –  14 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ்நாட்டின் செல்வவளத்தைக் காட்டும் காட்சி ஒன்றினை சங்க காலம் முதல் தற்காலம் வரை காண்பது மகிழ்ச்சி தரும். கலித்தொகையில் கபிலர் வருணித்த காட்சியை அருணகிரிநாதர் திருப்புகழில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தரித்துள்ளார்.

குருடனைப்  பார்த்து ராஜ முழி முழி’ என்றால் செய்ய முடியாது. அதே போல பிச்சைக்காரனிடம் போய் உனக்கு எவ்வளவு வேண்டும்? என்று கேட்டால் நம்முடைய சக்தியைக் குறைவாக மதிப்பிட்டு, ‘100 ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் தாங்க சாமி’ என்பான். அதாவது மனம் போல மாங்கல்யம். ஆனால் முத்தும் யானைத் தந்தமும் கொழித்த தமிழ் நாட்டில், அந்தக்காலத்தில், தந்த உலக்கையையும் சந்தன மரத்தினால் ஆன உலக்கையையும் பயன்படுத்தினர். கபிலர் கூட குறிஞ்சிக் கலியில் அந்தப் பெண்கள் தானியத்தைக் குத்தத்தான் பயன்படுத்தினர் என்றார். அருணகிரியோ ஒரு படி மேலே சென்று வள்ளி குத்திய உரலில் ரத்தினக் கற்களும் முத்துக்களும் இருந்தன என்கிறார் ; கற்பனை என்று எண்ணி இதை ஒதுக்காமல் அதற்குப் பின்னுள்ள செல்வக் கொழிப்பினை, ஆக்கபூர்வ மனநிலையைக் காண வேண்டும்; முத்தும் தந்தமும் ரத்தினக் கற்களும் இல்லாத நாட்டில் டாffபோடில்ஸ் DAFFODILS போன்ற மலர்களின் அழகினைத்தான் வோர்ட்ஸ்வொர்த் WORDSWORTH போன்ற கவிஞர்கள் பாட இயலும். நாமோ சந்திரனையும் பாடுவோம்; இந்திரனையும் பாடுவோம்; தங்கத்தையும் பாடுவோம் வயிரத்தையும் பாடுவோம்;  அந்த அளவுக்குச் செல்வச் செழிப்பு ! இதோ ஒரு திருப்புகழ்

பாடல், 

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்

     றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் …… புலவோரென்

றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்

     டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் …… றியல்மாதர்

குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்

     பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் …… திடுமானின்

குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்

     குறித்திருபொற் கழற்புணையைத் …… தருவாயே

அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்

     கலக்கணறக் குலக்கிரிபொட் …… டெழவாரி

அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்

     தனைச்சிறையிட் டிடைக்கழியிற் …… பயில்வோனே

கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்

     கழைத்தரளத் தினைத்தினையிற் …… குறுவாளைக்

கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்

     கயத்தொடுகைப் பிடித்தமணப் …… பெருமாளே.

****

திருப்புகழ் விளக்கம் (தமிழிலும் ஆங்கிலத்திலும்    பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்; கெளமரம்.காம் )

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன

சொப்பனத்திலும் அற்ற எனக்கு … யாசிப்பவர்களுக்கு மிக்க

இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று

சொல்லும்படியான எனக்கு,

இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித்

தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு …

இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து,

அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு

முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு

எனக் குறுகி … ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வரபெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின்  குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து,

கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம்

இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன்

கழல் புணையைத் தருவாயே … ஆடைக்குள் மறைத்து

வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில்

துன்பப்படும் பிறப்பு என்ற கடலை (பவ சாகரம்)  நான் தாண்டி உய்யஇனி

அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக.

அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து

உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ …

அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக

அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை

பொடிபட்டு உதிர,

வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக்

கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே …

எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய

பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி* என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே,

கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த

மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை …

துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை,

கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக்

கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே. … வேங்கை

மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படிகணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே.

***

* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

***

ஸ்ரீரங்கம் தந்த சிற்பம் , பதினேழாம் நூற்றாண்டு ;Sriranagm Ivory Carving

இந்தப்பாடலில் மேலும் சில சுவையான விஷயங்களை கவனித்து இருப்பீர்கள் ; அதாவது, அந்தக் காலத்தில் பிச்சை எடுக்கும் புலவர்களும் கூட படாடோப ஆடைகளுடன் கையில் கங்கணம் மோதிரத்துடனும் சென்றார்கள் அவர்களுக்கு கூஜா தூக்கும் ஒருவன் வெற்றிலை ப்பெட்டியைச் சுமந்து வருவான் இன்னும் ஒருவன் அவர் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலைப் பெறுவதற்கு ஒரு சட்டியை ஏந்தி வருவான் .

அதற்குப்பின்னர், பணக்காரன் வீட்டுப் பெண்களை ரம்பா ஊர்வசி மேனகா என்று புகழவேண்டும் அதுகளுக்கோ குரங்கு மூஞ்சி !

இன்னும் ஒரு உருவகம்! உனது மரத்தால்ஆன காலணிகளைத் தா ; அவைகளை நான் தெப்பம் போலப் பயன்படுத்தி பிறப்பு இறப்பு என்னும் பவ சாகரத்தைக் கடக்கிறேன் என்கிறார் புலவர்.

***

OLD ARTICLE ON IVORY FIGURES IN INDIA

கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை! (Post No.5399)

Research article written by by London Swaminathan 

swami_48@yahoo.com

Date: 6 September 2018 

Time uploaded in London – 18-55  (British Summer Time) 

Post No. 5399

—Subham—

Tags- தந்த உலக்கை, உரலில் ரத்தினைக் கற்களும்:, அருணகிரிநாதர், காட்சி, திருப்புகழ் ,பவ சாகரம் 

விண்வெளி அதிர்ச்சியும் அதிசயமும்! (Post No.15,271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,271

Date uploaded in London –   14 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

விண்வெளி அதிர்ச்சியும் அதிசயமும்! 

ரஷிய ரேடியோ டெலஸ்கோப்பை உக்ரேன் அழித்ததுஜப்பான் தனது விண்கலத்தைக் குறுங்கோளில் இறக்குவதற்கு முயற்சிக்கிறது! 

ச. நாகராஜன் 

க்ரிமியாவில் ரஷிய ரேடியோ டெலஸ்கோப் அழிந்தது 

க்ரிமியா என்ற தீபகற்பம் உக்ரேனுக்குத் தெற்குப் பகுதியில் உள்ளது.

மலைகள் அடங்கிய இந்த தீபகற்பத்திற்கு உல்லாசப் பயணிகள் வந்து குவிவது வழக்கம். அழகான இயற்கைச் சூழலில் மணல் பரப்புடன் கூடிய இதன் வெப்பநிலை அனைவரையும் ஈர்க்கும் ஒன்று. 

இது 1954ம் ஆண்டில் உக்ரேனுக்கு ரஷியாவால் வழங்கப்பட்டது. ஆனால் 2014ம் ஆண்டு இதை ரஷியா தன் வசம் கைப்பற்றியது.

க்ரிமியாவில் (Crimea)  ரஷியா தனது மாபெரும் ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை அமைத்தது. இது செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களை ஆராயப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாயிரமாவது ஆண்டில் இது அயல்கிரக வாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய முற்பட்டது.  20 தகவல் பாக்கேஜுகள் நான்கு கிரகங்களை நோக்கி அனுப்பப்பட்டன. இந்த இடங்களில் அயல்கிரகவாசிகள் இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டு இவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

 இந்த தகவல்கள் இன்னும் குறிப்பிட்ட கிரகங்களை அடையவில்லை. ஏனெனில் இவை 20.5 ஒளியாண்டுகள் தள்ளி உள்ள கிரகங்களாகும். க்ளையிஸ் 581 (Gliese 581) என்ற கிரகத்திற்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செய்தி 2029ம் ஆண்டு தான் சென்று சேரும். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இது வெனிரா திட்டம் என்ற திட்டத்தின் கீழ் வீனஸ் என்ற சுக்கிர கிரகத்தைப் பற்றி ஆராய பலவேறு திட்டங்களைச் செயல் படுத்தியது.

 230 அடி குறுக்களவு உள்ள RT 70 என்ற இந்த மாபெரும் ரேடியோ டெலஸ்கோப்பை இப்போது உக்ரேன் அழித்து விட்டது. இந்த டெலஸ்கோப்பின் ஆண்டெனா ரஷிய ராணுவத் துருப்புகளுக்கு உதவியாக இப்போது இருந்து வந்தது. எங்கே எப்படி தாக்குதல்களை நடத்தலாம் என்பதற்கு இது தான் வழிகாட்டும். 5000 மெட்ரிக் டன் எடை உடைய இந்த டெலஸ்கோப்பை ராணுவத்திற்கு உதவுமாறு பல மேம்பாடுகளை ரஷியர்கள் செய்தனர்.

 அமெரிக்காவின் ஜிபிஎஸ்-ஸுக்குப் பதிலாக ரஷியாவின் க்ளோநாஸ் (GLONASS) சாடலைட் நாவிகேஷன் அமைப்பு இயங்கி வந்தது. இந்த க்ளோநாஸின் துல்லியத்தை 30 சதவிகிதம் கூடுத\லாக இந்த ரஷிய ரேடியோ டெலஸ்கோப் கூட்டியது.

 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ட்ரோன் இந்த 50 ஆண்டுக் கால ஆண்டெனா மீது மோதியது. 200 கிலோவாட் ரேடியோ ரிஸீவரின் மீது அது குறி வைத்து மோதவே அது அழிந்தது. இதை 2011ம் ஆண்டு மாஸ்கோ உருவாக்கி மேம்படுத்தியது.

போரின் கொடுமைகளில் இந்த ஆண்டெனா அழிவும் ஒன்று என்பது வெளி உலகம் பரவலாக அறியாத செய்தி!

 ஜப்பானின் புதிய முயற்சி

அடுத்து ஜப்பான் நாட்டின் ஒரு புதிய முயற்சியை விண்வெளி ஆர்வலர்கள் வெகுவாக வரவேற்கின்றனர்.

அது தனது ஹயாபுஸா 2 என்ற விண்கலத்தை ஒரு புது ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளது.

அஸ்ட்ராய்ட் KY26 என்பது ஒரு சிறிய குறுங்கோள். இது பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை சுழன்று கொண்டிருக்கிறது இதன் குறுக்களவு 98 அடி மட்டுமே தான் என்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இது 36 அடி குறுக்களவைக் கொண்ட மிகச் சிறிய கோள் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

சிறிய குறுக்களவு, வேகமான சுழற்சி – அடடா, இது தான் ஹயாபுஸா 2 – ஐ இறக்கிப் பார்க்க உகந்த இடம் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் சந்தோஷப்படுகின்றனர்.

2031ம் ஆண்டு இந்த முயற்சி வெற்றி பெறும் என்பது விஞ்ஞானிகளின் இப்போதைய கணிப்பு.

சின்னச் சின்ன வெற்றிகளே பெரிய சாதனைக்கு வழி வகுக்கும் என்பது உலகத்தினருக்குத் தெரியாதா என்ன?

ஜப்பானின் முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்!

**

Purananuru (Tamil Sangam Book) Wonders- 1 (Post No.15,270)

Written by London Swaminathan

Post No. 15,270

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil Sangam Book Purananuru Wonders- 1

Ancient Tamil Encyclopaedia -41; One Thousand Interesting Facts -Part 41

Item 254

(in the first forty parts we saw many wonders from 30 poems from Akananuru. Let us now look at some poems from Purananuru)

Purananuru (pura naanuuru) is one of the Eight Anthologies, part of Sangam Tamil Literature. It is the most important anthology of Sangam Age. It covers mainly the period between 2nd century BCE and 3rd Century CE. In the Akananuru, we see repeated themes regarding love and family life but in Puranauru we see a great variety of information about Tamil life, which is predominantly Hindu.

புறநானூறு பாடல் 1

The very first poem in the collection is in praise of God added by a later poet. He praised Lord Shiva in the invocation poem and the poet’s name itself is Mahadevan, Lord Shiva’s name! Like Kalidasa, he also added more hymns in praise of Lord Shiva in other Sangam books. This poet also wrote the invocation poems for Natrinai, Ainkurunūru, Akanānūru, and Kurunthokai.

***

255

The wonder is that Lord Shiva’s appearance is described in detail which is used by later poets for another 1500 years!

Shiva wears Kondrai flowers on his head;

He is wearing a Kondrai flower garland as well;

His vahana is white Bull (Rishaba vahana);

His flag is also Bull Flag ( it is seen in all Tamil temples during festive days)

He has blue throat (Neela kantan) which is praised by Brahmins; it is in the Vedas.

256 Man and Woman are equal

He shares half his body with his wife (Ardhanari Concept; Hindus only declared that man and woman are equal)

He has crescent on his forehead;(the worship of crescent moon is seen in several poems of Sangam Age)

Ever flowing water pot is held by him (water is the source of life; he is associated with the River Ganga)

He is doing penance.

Eighteen Types of Ganas/followers praise him

***

257

He is a shelter for ALL living beings (எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,)

The very important line in the poem is Lord (Shiva) is the protector of all living beings; Hindus used to use the cliché from ant to elephant.

The Tamil word is Emam is related to Sanskrit word Kshemam.

***

258

Who are the 18 Ganas? (பதினெண் கணனும் ஏத்தவும் படுமே)
it is very important that Indians should know how the society was classified before foreigners invaded India. Those who came to occupy India and divide Hindu society wrote that this is a land of Aryas, Dravidas and Mundas. Some gangs added the words aborigines, tribes etc. But the original classification is 18 groups and they were

Devas

Asuras

Munis

Kinnaras

Kimpurushas

Garudas

Yakshas

Rakshasas

Gandharvas

Siddhas

Saranas / saarana

Vidhyadharas

Nagas

Bhutas

Vetals

Tara ganas (stars)

Bhogabhumi residents (Heaven)

***

The last two are living in the sky/heaven

‘கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர்,

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும்,

உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம்.

பரகதியோர் சித்தர் பலர்;

காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம்,

ஏந்து புகழ் மேய விராக்கதரோ – டாய்ந்ததிறற்,

போகா வியல்புடைய போகபுவி யோருடனே,

ஆகாச வாசிகாள வார்”

259

The last two groups are very interesting !

They are part of Astronomy and Cosmology.

In the Vana Parva of Mahabharata when Arjuna was taken into a space shuttle to heaven he saw stars and asked the pilot Matali who they were. He replied that they were the holy ones. Hindus believe that holy souls become light and you can travel at the speed of light or faster than light (My apologies to Einstein! ). We see inter galactic travellers like Narada and they are classified as Deva Rishis; Deva= Light.

In Indus Valley/ Harappan symbols we see Fish representing Devas.

***

Tamil original is given below

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்றுஅவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்றுஅப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. –புறநானூறு பாடல் 1

–Subham—-

Tags- Purananuru, Poem 1, wonders-1, Ancient Tamil Encyclopaedia -41, One Thousand Interesting Facts -Part 41  , item 259

Vaishnavite Saint’s Warning about Naming Children!(Post No.15,269)

Written by London Swaminathan

Post No. 15,269

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Periyalvar is one of the 12 famous Tamil Vaishnavite saints known as Alvars (aalvaar). He lived in Sri Villipputtur in Tamil Nadu about 1200 years ago. He is advising Hindus about naming children.  He is against using meaningless words in the names just for the sake of rhyme and rhythm. He is also warning us about using names of living human beings just to get some money and garments. He says that if we name our children after God Vishnu, that will prevent us from falling into hell. He also assures us that such naming will take us to Vaikunda, the abode of Lord Vishnu. Another famous poetess and saint Andal (aandaal) was his foster daughter.

(Translation was done by Mrs Kausalya Hart; For more poems, please go to Project Madurai website)

Advising the devotees about naming children with the names of God.

****

381. O poor ones!

You gave your children mean names of the rich

because you wanted to get money,

clothes with decorations and other things from them.

If you give the name of Kesavan and live worshipping him,

the god Nāraṇan will not send

the mothers of your children to hell.

382. O poor ones!

You name your children the names of people

even if they are not good,

because you wish them to give you some clothes.

If you call your children,

“O lovely-eyed Neḍumāl, O Sridhara,”

Nāraṇan will not send

the mothers of your children to hell.

383. Why did you name your children

with the names of those who give you oil

to put on your children’s hair, and give ornaments

and bracelets to decorate them?

Even if you have to live by begging,

you should give your children the divine name of our god Nārāṇan.

If you do, Nāraṇan will not send

the mothers of your children to hell.

384. You will not be blessed in your next birth

if you give that child the name of another person than god.

If you call your child,

“O Madhava, king of heaven, Govinda,”

Naraṇan who is in all hearts will not send

the mothers of your children to hell.

385. You will not be blessed in your next birth

if you give the name of another human

born from an unclean womb.

If you call him, saying, “O Govinda, Govinda!

You have been born in a good family!”

Nāraṇan who does only good things for all

will not send the mothers of your children to hell.

386. Do not give human names to your children

like others joining with the people

of your country and town and celebrating with them

the name ceremony for their children.

Do not fall in the ditch like them.

If you approach the god and worship him saying,

“O Nāraṇa, you destroyed the Asuran when he came as a cart.

You are our chief, O Damodara!”

he will not send the mothers of your children to hell.

387. O, ignorant ones!

Your children are human

and they were born from unclean bodies

and will return to the earth.

You gave them the name of people

and do not realize what you have done is not good.

Think of giving the name of the dark cloud-colored one

who is sweet to the eyes.

Approach Nāraṇan.

He will not send the mothers of your children to hell.

388. If you give your children the names of village people

such as “nambi, pimbi,” those “manbu, pimbu”

will be forgotten in a few days.

If you give them the name of the lovely lotus-eyed lord,

O friends, Nāraṇan will not send the mothers of your children to hell.

389. Giving the name of the dark cloud-colored god

to your children born in an unclean body

is like pouring nectar into a dirty ditch.

But if you wear the nāmam

and dance and sing the praise of Nāraṇan

who is never false to his promises,

he will not send the mothers of your children to hell.

390. Vishṇuchithan from the ancient village of Veeraṇai,

is praised by all, always,

and he worshipped the divine name of Thirumāl.

He composed ten beautiful Tamil pāsurams about how people

should name their children with the names of the god.

If devotees recite these ten beautiful pāsurams

they will go to the divine splendid Vaikuṇṭam

and stay there happily forever.

–suham—

Tags- Perialvar, naming, children, Hell, Vaikund, Vishnu , Vaishnavite

கண்ட பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டாதீர்கள்: பெரியாழ்வார் எச்சரிக்கை (Post.15,268)

Written by London Swaminathan

Post No. 15,268

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிள்ளைகளுக்கு ,குழந்தைகளுக்கு, அரசியல் தலைவர்களின் பெயர்களையோ, நடிகர், நடிகையர் பெயர்களையோ சூட்டக்கூடாது. இறக்கும் தருணத்தில் இறைவன் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடும் வகையில், தெய்வீகப் பெயர்களை வைக்கவேண்டும் என்கிறார் பெரியாழ்வார்

இதோ சில சுவையான பாசுரங்கள்:

1

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-6—

காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்

ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ

நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.

பதவுரை

காசுக்காகவும் பார்டர் BORDER  போட்ட ஆடைகளுக்காவும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் அறிவிலிகளே! கேசவன், நாராயணன் பெயர்களை சூட்டினால் நீங்கள் நரகத்துக்குள் விழமாட்டீர்கள் .

ஆதர்= குருடர்க்கும், அறிவில்லாதார்க்கும் பெயர்:

(இக்காலம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு கூலிப்பட்டாளம் இருந்ததை அறிய முடிகிறது)

****

2

அங்கொரு கூறை அரைக்குடுப்ப தனாசையால்

மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்

செங்க ணெடு மால் சிரீதரா என்று அழைத்தக்கால்

நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-2-

மானிட சாதி பேர் இடும் ஆதர்காள் (குருடர்களே)!

ஒரு உடுப்புக்காக பெயர் வைக்காதீர்கள்

ஸ்ரீதரனே! என்று பெயர் வைத்து அழைத்தீர்களாகில்

நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய

தாயானவள் நரகம் புகார்

***

3

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து

எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர்

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே

நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3-

தலையிலும் கையிலும் அணியும் ஆபிராணங்களுக்காக பெயர் வைக்காதீர்கள்; பிச்சை எடுக்க நேரிட்டாலும்

பெருமாளின் திரு நாமத்தையே சூட்டுங்கள்

***

4

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை

வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்

நானுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-4-6-4-

மானிட சாதியில் உண்டான ஒரு மனிதனின் பெயரைச் சூட்டினால் மறுமைக்குப் பலனில்லை;மாதவா, கோவிந்தா என்று பெயர் வைத்தால் அவனுடைய அன்னை, நரகத்துக்குப்  போகமாட்டாள்

***

5

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை

மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்

நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-5-

நம்முடைய சரீரம் அழுக்குடைய ஊத்தை ; அந்த ஊத்தைக்கு இன்னுமொரு ஊத்தையின் பெயரை வைக்காதீர்கள் .கோவிந்தா கோவிந்தா என்று பெயர் சூட்டி அழைத்தால் அவனுடைய அன்னைக்கு நற்கதி கிட்டும்

****

6

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு

கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று

நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6-

மானிடர் பேர் இட்டு ஒளி மழுங்கி குழியிலே வழுக்கி விழாதீர்கள் . சகடாசுரனை  அழித்த தலைவா, தாமோதரா என்று கூப்பிடுங்கள்  ; தாய்க்கு நரகம் வராது

***

7

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு

எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்

கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே

நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7-

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டுத் திரியும் அறிவு குறைந்தவர்களே  ,கண்ணன் நாமத்தையேயிடுங்கள்

***

8

நம்பி பிம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால்

நம்பும் பிம்பு மெல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்

செம் பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால்

நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-8-

நம்பி என்றும் பிம்பி என்றும் பொருளற்ற பெயர்கள் வேண்டாம்; கண்ணன் நாமத்தை இட்டு

அழைத்தால் அவன் தாய்க்கு நரகம் கிடைக்காது (ஸ்ரீவைகுண்டமே புகுவாள்)

***

9

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ

நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-9-

அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே

உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு, எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி, அதனாலுண்டாகும் ஆநந்தத்  தோடு கூத்தாடிக் கொண்டு திரியுங்கள்

****

10

சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய

வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த

ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர்

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10-

கல்யாண குணங்களை ஆபரணமாகவுடைய திருநாமத்தையே இந்திரியங்களை வெல்லும்  வீரப் பாட்டை ஆபரணமாக வுடைய,  சாச்வதமான கீர்த்தியை யுடைய , பெரியாழ்வார் விரிவாக அருளிச் செய்தார்.    கற்பார்க்கு ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும், அழகிய தமிழ்ப்மொழியிலுமுள்ளவையும் ஆன இப் பத்துப் பாட்டுக்களையும் துதிப்போர் ஸ்ரீவைகுண்டத்தில்  எந்நாளும்  வாழ்வார்கள்.

–SUBHAM—

TAGS- பிள்ளைகளுக்கு , குழந்தை , பெயர், நாமகரணம் ,பெரியாழ்வார், எச்சரிக்கை, நரகம்