HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 13(Post.15,166)

Wax Museum with Ramayana characters.

Written by London Swaminathan

Post No. 15,166

Date uploaded in London –  9 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Following words are added to letter B today:

Bharata, Bharata Muni/Bharatam, mahaBharat,

Bhaarat/am, Bharata naatya , Brhaspati Bhadram, Bhadra kaali, Bharadwaja, Bakasura, Bhima, Bheeshma, Balarama 

Next comes

Benares, Brahmorchava, Bheeja mantra, Brahma suutra (scripture), Brahma Samaaja (movement) , Bel, Basil, Banyan (3 plants) , Brahmaputra,  Brahdeeswar temple/Big Temple, Baali (Indonesia), Bhaashaa (language), Braahmi (script), Brahmaloka, Bhodaayana, Bhaahubali, Bhajrang Dal, Bhairava, Bhattar/Bhattacharya (priest), Bhasa kavi, Bhaana bhatta, Baana, Bhartruhari, Bilhana (five authors) Baadaami (caves), Bhava saagara, , …………

பாரத பரத என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது குழப்பம் ஏற்படுகிறது அது நான்கு அல்லது  ஐந்து  விஷயங்களைக் குறிக்கிறது .

(1).பரத/ன் – ராமனின் சகோதரன் ராம லக்ஷ்மண பரத சத்ருக்ன என்று நாள்வரைக் குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் ராமனுக்கு அடுத்தவர்கைகேயியின் புதல்வர் ராமனுக்காக 14 ஆண்டுகளுக்கு காத்திருந்தவர் .

(2).பரத முனி

சம்ஸ்க்ருதத்தில் ஆறாயிரம் ஸ்லோகங்களில் நாட்டியம்நாடகம் பற்றி நூல் எழுதியவர் . அவர் எழுதிய நூலை (3).பரதம் என்றும் சொல்வர். அவர் சொன்ன படி ஆடும் நாட்டியம் (4)பரத நாட்டியம். அந்தக் கலைக்கு நடராஜன் என்னும் சிவனே அதி தேவதை அல்லது தெய்வம். இப்போது பெரும்பாலும் தமிழ் நாட்டில் பயிலப்படுகிறது . (5).பாரதம் என்பது இந்தியாவின் பழைய பெயர். சகுந்தலையின் புதல்வன் (7)பரதன்  ஆண்டதால் இந்தப்பெயர். இதை மஹாபாரத நூல் செப்புகிறது . தபால்தலைகளிலும் நாணயங்களிலும் ஹிந்தி மொழியில் (8).பாரத் என்று எழுதியிருப்பார்கள் . மஹாபாரத நூலைச் சுருக்கமாகக் குறிப்பிடும்போதும் (9).பாரதம் என்பார்கள்

BHARAT/A is very often confused with four or five different things or persons.

1

Bharata is the brother of Rama, Lakhmana, Satrugna. Bharat is the son of Kaikeyi in Ramayana. He waited for Rama to come back to Ayodhya from the forest.

2 & 3

Bharata Muni is the author of a great book on dance and drama in Sanskrit and the book is called Bharatam.

4 & 5

Bharat or Bhaaratam is the name of India. On postage stamps they write Bharat for India in Hindi. It is named after the great emperor Bharata, son of Shakuntala according to Mahabharat. The same word Bhaarata/m is also used to denote Maha Bharat, the longest epic in the world.

6

Bharata Natyam

A kind of traditional Dance, mostly practised and followed in South India. Lord Nataraja (dancing Shiva) is the patron god of dance.

***

பகாசுரன்

மஹாபாரதத்தில் வரும் அசுரன். ஏகசக்ர என்ற நகரில் வாழ்ந்த பகாசுரன், நாள்தோறும் முறைவைத்து ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு மனிதனைத் சாப்பிட்டுவந்தான்  ஒரு பிராமண குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பீமன் அந்தக் குடும்பத்தின் முறையை ஏற்றுச் சென்று பகாசுரனைத் துவம்சம் செய்தான்.

BAKASURA

Mighty rakshasa, brother of Hidimba lived in the town of Ekachakra terrorising people . Bhima, one of the five Pandavas killed him. Hist tory is in Mahabharata.

***

பலராமன்

கிருஷ்ணனின் அண்ணன் ; ரோகிணியின் மைந்தன்; ரைவத மகாராஜாவின் மகளான ரேவதியை மணந்தவன் ; ஆதிசேஷன் என்னும் பாம்பின் அவதாரம்; மஹாபாரதப் போரில் பங்கேற்காமல் நடு நிலை வகித்து நாடு முழுதும் யாத்திரை சென்று விவசாயத்தைப் பரப்பினார். கண்ணன் மஞ்சள் சட்டைக்காரன்/பீதாம்பரதாரி ; பலராமன் நீலச் சட்டைக்காரன்/ நீலாம்பரதாரி.

BALARAMA

Elder brother of Krishna , son of Rohini . He married Revati, daughter of king Raivata . Considered an avatara/incarnation of snake Adisesha . he spread agriculture throughout India. He wore Blue shirt while his brother Krishna wore yellow shirt.

***

பத்ரம்

பத்திரமாகப் போய்விட்டுவா என்று சொல்லி அனுப்புவது வழக்கம். அதாவது உன்னுடைய பயணம் மங்களமாக அமையட்டும் என்று பொருள். நன்மை, மங்களம், மகிழ்ச்சி, வளமை என்ற பொருளும் உண்டு. ஓம் பத்திரம் கர்னேபி ச்ருணுயாம தேவாஹா என்று துவங்கும் மந்திரம் “ஓ தேவர்களே ! என் காதுகளில் மங்களகரமான சொற்கள் வந்து விழட்டும்”  என்று துவங்குகிறது .

BHADRAM

Means mangala, auspiciousness. Good, happy, prosperous. Auspicious, blessed;

ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः ।

Om Bhadram Karnnebhih Shrnnuyaama Devaah |

 O Devas, May we Hear with our Ears what is Auspicious

***

பத்ர காளி

நம்மை செய்யும் காளி; தென்னிந்தியாவில் அதிகம் வழிபடப்படும் வடிவம்  .

BHADRA KALI , bhadrakaali

Auspicious Kali ; worshipped in south India

***

பரத்வாஜர்

வேதம் ராமாயணம், மஹாபாரதம் புராணங்களில் வரும் மகரிஷி; கோத்ரத்துக்குத் தலைவர்; பல முனிவர்கள் இதே பெயரைத் தாங்கி நின்றதால் இரண்டு இதிஹாசங்களிலும் வருகிறார். துரோணாச் சாரியாரின் தந்தை பெயரும் இதுதான்

BHARADWAJA

A great rishi and founder of a Gotra. Several rishis had this name from Rig Vedic days. His name is in the Ramayana, Mahabharata and puranas. Father of Dronacharya also had this name.

***

பீமன்

பாண்டவர்களில் மிகவும் பலசாலி; எல்லோரையும் பந்தாட வல்லவன். கீசகன், பகாசுரன், துரியோதனன் முதலியோரை எளிதாகக் கொன்ற மஹா பலசாலி;  பெருந்தீனிக்காரன் .

BHIMA

One of the five Pandava brothers; renowned for his super human strength and great appetite. He killed Duryodhana , Bakasura , Keechaka and others.

***

பீஷ்மர்

மஹாபாரதத்தில் பாண்டவர்களாலும்  கெளவர்களாலும்  மதிக்கப்பட்ட மாபெரும் ராஜ தந்திரி . தந்தை சந்தனு, ஒரு மீனவப் பெண்ணைக் காதலித்தவுடன், அவளுடைய நிபந்தனையை ஏற்று, என் வாழ்நாள் முழுதும்  பிரம்மச்சாரியாக இருப்பேன் என்ற மாபெரும் சபதத்தைச் செய்து,  நாட்டுரிமையை விட்டுக்கொடுத்த பெரும் தியாகி. போரில்  சிகண்டி என்ற வீரனின் பின்னால் நின்று பீஷ்மரை அர்ஜுனன்,வீழ்த்தினான் . ஆயினும் மரணத்தின் நாளைத் தேர்ந்தெடுக்கும் வரம் பெற்றிருந்ததால் 56  நாட்களுக்கு அம்புப் படுக்கையில் படுத்திருந்து உயிர் நீத்தார்

BHISHMA

Grandsire and most respected elder statesman; a bachelor in the epic Mahabharata. Symbol of supreme sacrifice. When his father Shantanu fell in love with a fisherwoman, he sacrificed his birth right to the throne. He was killed by Arjuna who stood behind Shikhandi. He had a boon to choose his day of death. So, he remained on a bed of arrows for 56 days and then left the world.

பீஷ்ம அஷ்டமி

பீஷ்மர் உயிர் நீத்த அஷ்டமி நாளில் எல்லோரும் அவருக்காக தர்ப்பணம் செய்வது சம்பிரதாயம்; அவர் சபதம் செய்து பிரம்மச்சரியாகவே வாழ்நாளைக் கழித்ததால் இந்த ஏற்பாடு

BHISHMA Ashtami

Ever year people do tarpan for him on this day because he was a bachelor and had no son to do it. Tarpana is paying obeisance to the departed souls.

***

பிருஹஸ்பதி – வியாழன், ஜூபிட்டர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு குரு ; எதிர்ப்புறத்தில், அசுரர்களுக்கு சுக்ராசார்யார் குரு. அவருடைய மகன் கச்சனுக்கும் தேவயானிக்கும்  இடையே நடந்த காதல் இந்தியா முழுதும் பல மொழிகளில் திரைப்படமாக வந்தது.

BRIHASPATI

Teacher of Devas and his counterpart Sukra was the teacher of demons/Asuras. Son of Angiras rishi/seer and father of Kacha. The love story of Kacha and  Devayani is one of the famous film / cinema stories in India

To be continued…………………

Tags- பரத, பாரத, பிருஹஸ்பதி, பரத்வாஜ, பீமன், பீஷ்மர், HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL இந்துமத, கலைச்சொல் அகராதி– Part 13

லலிதா சஹஸ்ர நாமத்தில் வர்ணங்கள்! (Post.15,165)

Written by London Swaminathan

Post No. 15,165

Date uploaded in London –  9 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முந்தைய கட்டுரைகளில் நாம் லலிதா சகஸ்ரநாமத்தில்நவரத்தினம், நகரங்கள், பூக்கள் முதலியவற்றைப்  பார்த்தோம்   அம்பாளின் வர்ணங்களும் பல நாமங்களில் வருகின்றன ; பொதுவாக, அதிகமாக சிவப்பு நிறத்தை அம்பாளுடன் தொடர்பு படுத்துகிறார்கள் .இதோ சில நாமங்கள்:–

1

சர்வ வர்ணோப சோபிதா என்ற நாமம் தேவியை வர்ணங்களுடன் தொடர்புடுத்திப் போற்றுகிறது.,

எல்லா வர்ணங்களும் உள்ள கலர் சக்கரக் COLOUR WHEEL காற்றாடியைச் சுழற்றினால்-வேகமாகச் சுற்றினோமானால் — வர்ணங்கள் மறைந்து வெள்ளை நிற ஒளி மட்டுமே மிஞ்சும்.   .

இன்னும் ஒரு பரிசோதனை – முப்பட்டைக் கண்ணாடி என்னும் பிரிஸ்ம் PRISM வழியாக வெண்மையான சூரிய ஒளிக்கிரணத்தைச் செலுத்தினால் திரையிலோ சுவற்றிலோ  வான வில்லின் அற்புதமான ஏழு நிறங்களையும் காணலாம்.

இவைகளைக் கருத்திற்கொண்டு அம்பளை நிறங்களுள்ளவள்  என்றும் நிறங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வெண்மை நிறம் — அதாவது ஜோதியாக ஒளிர்பவள் என்றும் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.

(வர்ணம் என்றால் எழுத்து, அக்ஷரம் என்ற பொருளும் உண்டு).

***

ரக்த வர்ணா BLOOD RED

சஹஸ்ரநாமத்தில் வரும் பூக்களைப் பற்றிய கட்டுரையில் ஜபாகுஸுமம் HIBISCUS ROSASINENSIS என்னும் செம்பருத்திப் பூவினைக் கண்டோம். அதை நினைவுபடுத்தும் வகையில் அம்பாளின் மற்றோர் நாமம் வருகிறது ; அது ரக்த வர்ணா என்பதாகும். அம்பாளின் உதடுகள், கன்னங்கள், உடல் முழுதும் சிவப்பு வர்ணமாகப் பார்க்கிறார்கள் முற்றும் துறந்த முனிவர்களும் யோகிகளும் ; நாமும் கூட சூரியனை – ஒளிப்பிழம்பினை- வெள்ளை நிறத்தில், மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிறத்தில் காண்கிறோம் அல்லவா?

***

சர்வாருணா


இதற்கு முன்னர் சர்வாருணா என்ற நாமத்திற்கு சர்வ+அருணா என்று பொருள் கொண்டு அவளை அருண நிறத்தவள் — அதாவது ஆடை, ஆபரணம், மேனி, மலர் ஆகியன எல்லாமே செந்நிறம் என்று  உரை கண்டுள்ளனர்

நீலகண்ட தீட்சிதர் எழுதிய அற்புதமான அம்பாள் துதியான ஆனந்த சாகர ஸ்வத்தில் வரும் பாடலையும் உரைகாரர்கள் எடுத்தாள்கின்றனர் . அதில்,

குங்குமப்பூ அலங்கரிக்கும் திருமேனி, சிவப்பு வர்ண ஆபரணங்களை அணிந்து அழகுடன் காட்சி தருபவள், தாம்பூலம் தரித்து செந்நிற வாயுடையவள் – இப்படிப்பட்ட செந்நிறக் காட்சி என் முன்னால் நிற்கவேண்டும் என்று தீட்சிதர் வேண்டுகிறார்

ப்ரத்யக்ர குங்கும ரசாக்லிதாங்கராகம்

ப்ரத்யங்க தத்த மணி பூஷண  ஜால ரம்யம்

தாம்பூல பூரிதமுகம் தருணேந்து சூடம்

சர்வருணம் கிம் அபி வஸ்து மமாவிரஸ்து 

என்பது  நீலகண்ட தீட்சிதர்  யாத்த பாடல் ஆகும்

***

பீத வர்ணா என்ற நாமத்தை எடுத்துக்கொள்வோம்.

பீதம் என்பது குங்குமப்பூவுக்கும் பெயர்; மஞ்சள் நிறத்துக்கும் பீத வர்ணம் என்று பெயர் ; அதாவது பொன்னிறமான பட்டின் நிறம். க்ரீம் கலர் ; இந்துக்கள் போன்ற வர்ண உணர்வுள்ளவர்களை வேறு எங்கும் காண முடியாது. நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்று சிவபெருமானின் ஐந்து நிறங்களை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் துதிக்கிறார் . பரதர் எழுதிய பரத நாட்டிய நூலில் தியேட்டரில் எந்த ஜாதி மக்களுக்கு எந்த வர்ண ‘சீட்’டுகள்– ஆசனங்கள் -என்று  ஒதுக்குகிறார்  கிருஷ்ணன்- பலராமன் அணிந்த யுனிபார்ம்களை/ சீருடைகளை UNIFORMS பஜனைப் பாடல்தோறும் பாடுகிறோம்; கிருஷ்ணன் CREAM COLOUR, YELLOW பீதாம்பரதாரி; அவனுடைய அண்ணன் பலராமனோ நீலாம்பரதாரி; எப்போதும் BLUE, பிளு கலர் துண்டு மேலிருக்கும். எப்படி கலர் கான்ஸஸியஸ் COLOUR CONSCIOUS பாருங்கள்! மூவாயிரம் அணுக்களுக்கு முன்னரே இப்படி கலர்களை பார்க்கலாம் .பீத என்றால் தீசூரியன் என்றும் அகராதி சொல்லும். பித்தளை என்று நாம் சொல்லும் உலோகத்துக்கும் மஞ்சள் CREAM COLOUR, YELLOW நிறமே காரணம். அத்தனையும் சம்ஸ்க்ருதம்.

***

திரிவேணி, த்ரி குணாத்மிகா, த்ரயம்பகா என்ற நாமங்களுக்கு உரைகாரர்கள் ஆதிசங்கரரின் செளந்தர்ய லஹரியில் ஒரு ஸ்லோகத்தை எடுத்துக் காட்டுகிறார்கள்  :

पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।

नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥ ५४॥

Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;

Nadah sono ganga tapana-tanay’eti dhruvamamum Trayanam tirthanam upanayasi sambhedam anagham-54

பவித்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய  தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:

நத: ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும் த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம்   54

ஆதி சங்கரர். அம்பாள் தரிசனம் பெற்று அதை நமக்கு ஆனந்தாமிர்தமாக 103 ஸ்லோகங்களில்  அள்ளித்தருகிறார் 

“அம்பே, லலிதா தேவி,  பசுபதிக்கு   ஸ்வாதீனமான  அன்பு  நிறைந்த ஹ்ருதயத்தை படைத்தவளே ! அம்மா  உனது நயனங் களை எப்படி வர்ணிப்பேன்?    அவை  தயை, கருணை நிறைந்த  அழகிய,  சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவையாக  இருக்கிறதே.    இது எதை நினைவூட்டுகிறது தெரியுமா?  ப்ரவாஹமாக  மேற்கு நோக்கிச் செல்வதும் சிவப்பு  நிறம் கொண்டதுமான  சோணபத்ரா  என்ற  நதியும்,  பனி உருகி வெள்ளை வெளேரென்று குளிர்ந்த சமுத்திரம் போன்ற  வெண்ணிற கங்கை நதியும், சூரிய  புத்திரியாகவும்   இயற்கையிலேயே கறுப்பு வர்ணம் கொண்ட  யமுனா நதியுமாகிய   மூன்று புண்ய புண்ணிய நதிகளும்  ஒன்று சேர்ந்த ஸங்கமமாகி  பாவத்தையெல்லாம் போக்கும் ப்ரயாகையாக காட்சி அளிக்கிறது.   ஓஹோ!   எங்கள்  பாபத்தை எல்லாம் அழித்து  புனிதமாக்குவதற்காக  அல்லவோ உன் பார்வை இருக்கவேண்டும் என்பதற்காக  நீ அமைத்துக்கொண்ட  மூன்று நிற கண்களோ  உன்னுடையவை”

மேலே சொன்ன மூன்று நிற கண்கள் உள்ளார்த்தமாக குண்டலினி சக்தி தியானத்தால் ஏற்படும் நன்மையை குறிக்கிறது.

திரிவேணி :–

திரிவேணி நாமத்திற்கு உரைகாரர்கள் மூன்று நதிகளை குறிப்பிடுகிறார்கள்

காளிந்தி யமுனை == கருப்பு நிறத்துடன் ஓடும் நதி

கங்கை -வெண்மை நிறத்துடன் ஓடும் நதி

சோணபத்ரா — தங்க நிறத்தில் ஓடும் நதி

***

த்ரி குணாத்மிகா

சத்வ குணம்– வெண்மை

ராஜஸ குணம்– சிவப்பு /தங்க நிறம்

தாமச குணம்– கருப்பு

****

தேவியுடன் தொடர்புடைய நாமங்களில் கீழ்கண்டன வருகின்றன:

தாமரை மலர், மாணிக்கம், குருவிந்தம் – சிவப்பு

ஜபா புஷ்பம் – செம்பருத்தி சிவப்பு நிறம்; கண்களில் தீட்டிக் கொண்டிருக்கும் மை கருப்பு/ நீலம் .

இவை மேம்போக்காகக் கண்டவைதான்; உரைகளை ஆழமாகப் படித்தால் இன்னும் பல  நிறங்களைக் காண முடியும் . ஸ்படிகத்தை எதனருகில் வைத்தாலும் அதன்  நிறத்தைக் கொண்டுவிடும். நிறமற்ற நீரில் போட்டாலோ காண்பதற்க்கரிதாகி மறைந்து விடும் ; தேவியும் அப்படியே !உருவம் உடையவள்; உருவமில்லாதவள்; நிறங்கள் உடையவள்; நிறங்கள் இல்லாத பளிங்கு போன்றவள்.

—SUBHAM—

TAGS- லலிதா சஹஸ்ர நாமத்தில், வர்ணங்கள் , நிறங்கள் , பீத வர்ணா, ரக்த வர்ணா, சர்வ அருணா , சர்வ வர்ணோப சோபிதா

அறிவாற்றலை அதிகரிக்க அணிய வேண்டிய கல் லாபிஸ் லசூலி! (LAPIS LAZULI) (Post No.15,164)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,164

Date uploaded in London –   9 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

29-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

அறிவாற்றலை அதிகரிக்க அணிய வேண்டிய கல் லாபிஸ் லசூலி! (LAPIS LAZULI) 

ச. நாகராஜன்

 ஆறாயிரம் வருடங்களாக மனித குலம் பயன்படுத்தி வரும் ஒரு அபூர்வ ரத்தினக் கல் லாபிஸ் லசூலி! (LAPIS LAZULI). 

லாபிஸ் லசுலஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவான சொல் இது. லஸ்வார்ட் என்ற அராபிய வார்த்தையிலிருந்தும் இது பிறந்தது.

ஒளி என்பது இதன் பொருள். 

நீல வர்ணத்தில் ஒளிரும் இந்தக் கல்லை பிரபல அறிவாளியும் பேரரசனுமான சாலமன் அணிந்திருந்தான். தீய சக்திகளை அடக்க அவன் இதைப் பயன்படுத்தினான்.

 பிரபல அழகிகளான நெபர்டரி, கிளியோபாட்ரா, ஷீபா ஆகியோர் இதை அணிந்து புகழ் பெற்றனர்.

அரச போகத்தையும் சொகுசு வாழ்க்கையையும் தருவது இது.

 அறிவைப் பெருக்கும் இந்தக் கல்லை அறிவாளிகளும், எழுத்தாளர்களும் தவறாது அணிந்து வந்தனர்.

கண்ணுக்குப் புலனாகாத சக்திகள், தத்துவ ஆராய்ச்சி, புதிர்கள், விளங்காத மர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிய உதவும் கல் இது.

 மனிதனின் உள்ளார்ந்த அழுக்குகளை நீக்கி, சிந்தனைத் தெளிவைத் தந்து கடைசியில் சச்சிதானந்த நிலையை இது தரும்.

 லசூரைட் என்ற தாதுக் கலவையிலிருந்து இது உருவாகிறது. சோடோலைட் என்ற ரத்தினக் கல் வகையைச் சேர்ந்தது இது. இதில் சோடியம், அலுமினியம், சில்கேட், சல்பர், கால்சியம் ஆகியவை உள்ளன.

 ஆப்கானிஸ்தானில் உள்ள படகஸ்தானிலும், சிலியிலும் இது மிக அதிகமாகக் கிடைக்கிறது. கனடா, காஷ்மீர், பர்மா, அங்கோலா, சைபீரியா, இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இது கிடைக்கிறது.

இதன் கடினத் தன்மை 5-லிருந்து 5.5 வரை இருக்கிறது.

பெரிய பாறைகளாகக் கிடைப்பதாலும், கடினத்தன்மை குறைவாக இருப்பதாலும் இதை வைத்து அழகிய சிலைகளும் அழகு சாதனங்களும் செய்யப்படுகின்றன. விலையும் சற்று மலிவு தான்!

 குண்டலினி யோகத்தில் விசுத்தி சக்கரத்தையும் ஆக்ஞா சக்கரத்தையும் இது எழுப்பி விடும்.

 தொண்டை, குரல் நாண் ஆகியவற்றை இது நன்கு ஊக்குவிக்கும். மூளையுடன் தொடர்பு கொண்ட இந்தக் கல்லை ADD எனப்படும் Attention Deficit Disorder குணப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள்.

 எகிப்தியர்கள் ஜுரம், காலரா உள்ளிட்ட வியாதிகளைக் குணமாக்க உபயோகப்படுத்தினர்.

 நீலத்தின் பல்வேறு நிறக்கூறுகளில் இது கிடைத்தாலும் அழகிய நீலமாக மட்டுமே இருக்கும் கல்லே மிகச் சிறந்தது என்று கருதப்படுகிறது, இதன் அடர்த்தி எண் 2.38லிருந்து 2.45 g/cm^2.

இதனுடைய ஒளிவிலகல் எண் 1.50

 டாரட் கார்டுகளை வைத்துக் குறி சொல்பவர்கள் ஒரு லாபிஸ் லசூலி கல்லை தங்கள் கார்டுகளின் மீது வைத்து விட்டே குறி சொல்வார்கள்.  அப்போது தங்கள் குறி சொல்லுதல் பலிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

வெவ்வேறு குணநலன்களை இது கொண்டிருப்பதால் ஆன்மீக சிகிச்சை நிலையங்களிலும் Spa –க்களிலும் இது பயன்படுத்தப் படுகிறது.

 ஏழைகளின் நீலம் (Poor Man’s Sapphire) என்று இது அழைக்கப்படுகிறது – இதன் விலையைக் கருதி!

பல்வேறு பிரபலங்களின் ஃபேவரைட் ரத்தினக் கல் இது!

 பிரபல ஹாலிவுட் நடிகையான ஜென்னா டீவான் (Jenna Dewan)  இந்தக் கல்லைப் பெரிதும் விரும்பி அணிபவர். இது என்னை பூமிபிரபஞ்சம்,இயற்கை அனைத்துடனும் இணைக்கிறது’ என்கிறார் அவர்.

 நமது நலனில் அக்கறை கொண்ட நல்ல நண்பர்களின் உதவியைக் கொண்டு தெரிந்த வணிகர்களிடம் இதை வாங்குவது சிறந்தது.

 போலிகளிடம் அதிக விலை கொடுத்து ஏமாறக் கூடாது. பிடித்த வகையில் ஆபரணத்தில் இதைப் பதித்து ஆண்களும்பெண்களும் அணியலாம்.

**

அப்பர் தேவாரத்தில் புவியியல்: நதிகள், மலைகள், கடல்கள்! (Post 15,163)

Written by London Swaminathan

Post No. 15,163

Date uploaded in London –  8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பர் தேவாரத்தில் நவரத்தினங்களைக் கண்டோம் . இதோ மேலும் ஒரு கட்டுரை

நால்வர் என்று போற்றப்படும் அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர், சுந்தரர் ,மாணிக்க வாசகர் ஆகியோரில் அதிகம் பயணம் செய்தவர் அப்பர் சுவாமிகள்தான். ஏனைய மூவரும் அந்தக் காலத் தமிழ் நாட்டுக்குள்ளேயே வலம் வந்தவர்கள் தான். சமண மதத்தைத் தழுவியதால் அப்பர், பீஹார் மாநிலத்திலுள்ள பாட்னா (பாடலிபுத்திரம்) வரை  சென்றிருக்கிறார். இதை அவரது பாடல்களில் காண முடிகிறது.

அடைவுத் திருத்தாண்டகம்  என்ற அற்புதமான பாடலில் அப்பர் தரும் விஷயங்களை வைத்து மட்டுமே தனியான புஸ்தகம் எழுதலாம். அவ்வளவு விஷயங்களை அடுக்கடுக்காகப்   பாடுகிறார். சிவன் தொடர்பான ஊர்களே இவ்வளவு இருக்குமானால்  சக்திக் கேந்திரங்கள் திருமால் திவ்ய க்ஷேத்ரங்கள் என்பன எவ்வளவு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்

அப்பரின் புவியியல் அறிவுக்கு ஈடு இணை இல்லை! புவியியல் விஷயங்களை ,செய்திகளை மட்டும் காண்போம்

ஆறாம் திருமுறையை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பூகோள வர்ணனைகளைக் காண்போம்.

1

 திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -அடைவுத் திருத்தாண்டகம் – திருத்தாண்டகம்

பள்ளி என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் , வீரட்டானத் தலங்களையும்,  குடி , ஊர் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்த பின்னர் காடுகளின் பெயர்களை பாடுகிறார் :

மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;

தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு;

பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க,

விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.

பின்னர் வாயில், ஈச்வரம் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்துவிட்டு மலைகளையும், ஆறுகளையும்  பாடுகிறார்

****

2

கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா,

மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம், மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம்

விந்த மா மலை, வேதம், சையம், மிக்க வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம்,

இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.

***

3

நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும் நாலாறும், திரு ஐயாறும்,

தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல் இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம்,

விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா;

கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே.

***

4

பின்னர் துறைகளைப்பாடுகிறார்

கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள் உரம் நெரியக் கால்விரலால் செற்றோன்

பயில்வு ஆய பராய்த்துறை, தென்பாலைத் துறை, பண்டு எழுவர் தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்

குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறையும், குரங்காடு துறையினோடு,

மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

துறை என்பது ஆற்றில் புனித நீராடும் கட்டங்களாகும்

***

5

இவ்வாறு ஒருவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூச்சில் பாட வேண்டும் என்றால் அவருக்கு அபார பூகோள அறிவு இருக்க வேண்டும் .

கேதார்நாத் முதல் இலங்கையிலுள்ள  கேதீச்வரம் வரை பாடுவதால் அவர் மனக் கண்களுக்கு  முன்னால் ஏக பாரதம்– அகண்ட பாரதம் –தெரிந்திருக்க வேண்டும்  இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே என்பதை பறைசாற்ற இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்

ஆறாம் திருமுறை திருவீழிமிழலை பதிகம்

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்

            பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்

கேதிசர மேவினார் கேதா ரத்தார்

            கெடில வடவதிகை வீரட் டத்தார்

மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்

            மழபாடி மேய மழுவா ளனார்

வேதி குடியுளார் மீயச் சூரார்

            வீழி மிழலையே மேவி னாரே.  2

***

6

நாவலந்தீவு

நாவலந்தீவு பற்றி சங்க இலக்கியப்பாடல்களிலும் அதற்கு முன்னர் காளிதாசன் கவிதைகளிலும் குறிப்புகள் உள்ளான . இதுபற்றியம்  அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான

                மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்

தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்

                செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்

நாவுடையார் நமையாள வுடையா ரன்றே

                நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான

காவலரே யேவி விடுத்தா ரேனுங்

                கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. 

அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

***

7

கங்கை நதிக் குறிப்புகள்:–

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

***

8

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே –பாடல் 909

***

9

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

***

10

கங்கை — காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

ஏழ்  கடலும் ஏழ் மழையும் என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்

கேதீச்வரம் முதல் கேதாரம் வரை உள்ளானை திருவீழிமலைப் பதிகத்தில் பாடுகிறார்

இங்கு கொடுத்தவை ஒரு சாம்பிள்தான் இது போல அப்பர் பாடிய மூன்று திருமுறைகளையும் நிறையா பாடல்கள் உள்ளன.

–subham—

Tags- அப்பர், புவியியல், பூகோள, அறிவு, மலைகள், காடுகள், கங்கை, கோதாவரி நதிகள், கேதார்நாத், கேதீச்வரம்

London Swaminathan’s Article Index for October 2025 Index No.155 (Post No.15,162)

Written by London Swaminathan

Post No. 15,162

Date uploaded in London –  8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Bilingual (English and Tamil Articles)

Hinduism through 500 Pictures in Tamil and English -1 படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-1 (Post No.15,046) 2/10

Hinduism through 500 Pictures in Tamil and English – படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-2 (Post.15,050) 3/10

Parts 1, 2, 3, 4, ,5 ,6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 20 (Post.15,136) 31/10

***

இந்துமத கலைச்சொல் அகராதி –Part 1 (Post.15,072) 10/10

இந்து மத கலைச் சொல் அகராதி- Part 2 (Post.15,075) 11/10

Parts 1, 2, 3, 4, ,5 ,6, 7, 8, 9

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL  இந்துமத கலைச்சொல் அகராதி– Part 10 (Post.15,137) 31/10

***

Ancient Tamil Encyclopaedia- Part 14; One Thousand Interesting Facts! – Part 14 (Post.15,043) 1/10

Parts 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27

Ancient Tamil Encyclopaedia -Part 28; One Thousand Interesting Facts -Part 28 (Post No.15,130) 29/10

***

London Swaminathan’s Article Index for September 2025 Index No.154 (Post No.15,052) 4/10

November 2025 Calendar with More Adi Shankara Quotes (Post No.15,128) 28/10

Nadukal in Agamas 1, 2, 3, (JPG) 6/10

Village Deity (JPG), 1, 2, 3, 4, 5, 6, 7, 8 (Dr R Nagaswamy’s Article)

Village Gods (JPG) 1, 2, 3, 4, 5, 6,7, 5/10

***

Tamil Articles

கலபாகஸ் தீவின் அதிசயங்கள்! எனது மருமகள் கண்ட காட்சிகள்! -1 (Post.15,044)1/10

கலபாகஸ் தீவின் அதிசயங்கள்! எனது மருமகள் கண்ட காட்சிகள்! -2  (Post No.15,047)2/10

லலிதா சஹஸ்ரநாமத்தில் நவரத்தினங்கள் – Part 1 (Post No.15,113) 23/10

லலிதா சஹஸ்ரநாமத்தில் நவரத்தினங்கள் Part 2 (Post No.15,115) 24/10

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124) 27/10

லலிதா சஹஸ்ரநாமத்தில் புஷ்பங்கள் (Post.15,134) 30/10

GNANAMAYAM 5th October 2025 BROADCAST PROGRAMME SUMMARY

Parts- 12th, 19th, 26th.

காசியில் தங்க அன்னபூரணியின் அற்புத தரிசனம்! (Post  No.15,102) 19/10

குருக்ஷேத்ரம் பற்றி பத்து சுவையான செய்திகள் (Post No.15,119) 25/10

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post No.15,059)

6th, 13, 20, 27th October 2025.

நவம்பர் 2025 காலண்டர்- ஆதிசங்கரர் மேற்கோள்கள் (Post.15,127) 28/10

லண்டன் சுவாமிநாதன் கைடு:சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிப்பது எப்படி ? (Post.15,063) 7/10

***

Lifted Items (Not my articles)

‘நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகு தான் துறவி’: தேசபக்தியை முன்னிறுத்திய அபிநவ வித்யாதீர்த்தர் 16/10 Dinamalar article

Rare Darshan of Golden Annapurani in Kasi Temple 19/10 (News Paper Stories)

.—subham—

Tags- London Swaminathan’s Article Index for October 2025 Index No.155

சீனாவுக்குப் போகாதே! அருணகிரிநாதர் அறிவுரை! (Post No.15,161)

Written by London Swaminathan

Post No. 15,161

Date uploaded in London –  8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் 1300-க்கும் மேலான பாடல்கள் நமமக்குக் கிடைத்துள்ளன இதில் ஒரு பாடலில் அவர் ஒரு அட்வைஸ் தருகிறார். ஏன் துபாய், பங்களாதேஷ்  முதலிய துலுக்க நாடுகளுக்கும் சீனாவுக்கும் போய் கஷ்டப்படுகிறீர்கள் ? முருகனைச் சிந்தித்து அருள் பெறுங்கள் என்கிறார். 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதை எழுதியபோது வணிகத்திற்காக பலரும் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.  திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் போன்றோர் தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் வியாபாரம் செய்த செய்திகளைக் கல்வெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன;.சீனாவிலும் ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது.

இப்போதுதான் நம்மவர்கள் மத்திய கிழக்கிலுள்ள துபாய், எமை ரேட்ஸ் நாடுகள், சவுதி அரேபியா ,ஈரான் இராக் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்கள் . அருணகிரிநாதர் பாடிய பாடலில்  சீனம், சோனம், வங்கம் ஆகிய மூன்று நாடுகளைக் கூறுகிறார். சோனம் என்பது அவரது காலத்தில் அரேபிய தீபகற்பத்தைக்  குறித்தது . சீனாவுடனான வணிகம் நீண்ட காலமாக உள்ளது. சில்க் ரூட் என்றும்  பட்டு வணிக்கப்  பாதை என்றும்  வெளியேயான பல ஆராய்ச்சி நூல்களில் 2000  ஆண்டுகளாக நடைபெறும் வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளன

அருணகிரிநாதர் பர்மா, மலேசியா சிங்கப்பூர், தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் குறிப்பிடாமல் ஏன் சோனம் வங்கம் சீனம் என்று குறிப்பிட்டார்? என்பது ஆராய்ச்சிக்கு உரியதே

அந்தக் காலத்திலிருந்தே நம்மவர்களுக்கு சீனா மீது ஒரு அவ நம்பிக்கை! பாரதியாரும்

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்

ஜன்மம்இத்தேசத்தில் எய்தினராயின்

வேதியராயினும் ஒன்றே – அன்றி

வேறு குலத்தினராயினும் ஒன்றே

ஈனப் பறையர்களேனும் அவர்

எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ?

சீனத்தராய்விடுவாரோ? – பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப்பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி ? – ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்

சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

…………………..

என்று சீனாவை ஏசுகிறார்

***

இதோ திருப்புகழ் பாடலும் பொருளும் :

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்

     மென்பா கஞ்சொற் …… குயில்மாலை

மென்கே சந்தா னென்றே கொண்டார்

     மென்றோ ளொன்றப் …… பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்

     வன்பே துன்பப் …… படலாமோ

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா

     வந்தே யிந்தப் …… பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்

     குன்றாள் கொங்கைக் …… கினியோனே

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ

     ரும்போய் மங்கப் …… பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்

     கன்றே வும்பர்க் …… கொருநாதா

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்

     கந்தா செந்திற் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

வெங்கா ளம்பாணஞ்சேல் கண் … கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன்

– இவற்றை ஒத்த கண்கள்,

பால் மென்பாகு அஞ்சொற் குயில் … பால், மென்மையான

வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள்,

மாலை மென் கேசந்தா னென்றே கொண்டார் … இருளை ஒத்த

மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது

மாதர்களின்

மென்றோள் ஒன்றப் பொருள்தேடி … மென்மையான தோள்களைத்

தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி,

வங்காளஞ் சோனஞ் சீனம்போய் … வங்காள நாடு, சோனக நாடு*,

சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய்

வன்பே துன்பப் படலாமோ … வம்பிலே கொடிய துன்பத்தைப்

படலாமோ?

மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா … வலிமை மிகுந்த

தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே,

வந்தே யிந்தப் பொழுதாள்வாய் … வந்து இந்த நொடியிலேயே

என்னை ஆண்டருள்வாயாக.

கொங்கார் பைந்தேனுண்டே வண்டார் … வாசனை மிக்க

பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும்

குன்றாள் கொங்கைக் கினியோனே … வள்ளிமலையில்

வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே,

குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும் … சூரனுக்கு அரணாக

விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும்,

போய் மங்கப் பொருகோபா … பட்டு அழியும்படியாக போர்

செய்த சினத்தை உடையவனே,

கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார் கன்றே … எலும்புகளும்

கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய

சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய்,

உம்பர்க் கொருநாதா … தேவர்களின் ஒப்பற்ற தலைவனே,

கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் … சங்குகள் தவழும்

கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே,

கந்தா செந்திற் பெருமாளே. … கந்தனே, திருச்செந்தூரில்

வீற்றிருக்கும் பெருமாளே.

சோனகம் 56 தேசங்கள் சேர்ந்த பாரத நாட்டில் ஒரு தேசம்.

தமிழிலும் ஆங்கிலத்திலும்    பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம் https://www.kaumaram.com/thiru/nnt0102_u.html

vengA LampA NanjcEl kaN: “Their eyes are like deadly poison, arrows and cEl fish;

pAl menpA kanjcoR kuyil: their speech is sweet as milk, molten jaggery and cuckoo’s music;

mAlai men kEcanthA nenRE koNdAr: their soft hair is like the darkness”; and so on. Thus describing the harlots,

menRO LonRap poruLthEdi: people roam in search of wealth to enable them to embrace their soft shoulders;

vangA LanjcO nanjcee nampOy: they go to far away places like Bengal, ChOnakam* and China

vanpE thunbap padalAmO: to suffer unnecessary miseries. Is it worthwhile?

maindhA runthOL mainthA anthA: Oh KumarA, with strong shoulders! Oh handsome one!

vanthE yinthap pozhuthALvAy: Please come right at this moment and take charge of me!

kongkAr painthE nuNdE vaNdAr kunRAL: She lives in VaLLimalai, which is full of beetles imbibing fragrant and fresh honey;

kongkaik kiniyOnE: You fondly hug the bosom of that VaLLi!

kunRO dunjcU zhampE zhunjcUrum: The seven protective hills of SUran, the seven seas and SUran himself

pOY mangkap porukOpA: were destroyed by Your wrath, Oh Lord!

kangkA LanjcEr moympA ranpAr kanRE: He wears a garland of bones and skulls around His shoulders. You are the loving child of that Lord SivA.

vumpark korunAthA: You are the unique master of the Celestials!

kampUr cinthAr thenpAl vanthAy: You came to reside in the south shore of the sea full of floating conch shells.

kanthA centhiR perumALE.: Oh KanthA, Your abode is ThiruchchendhUr, Oh Great One!

****

என்னுடைய கருத்து

சோனகம் என்ற சொல்லின் அகராதி விளக்கம் — 56  தேசங்களில் ஒன்று .

சோனகர் – துலுக்கர்இஸ்லாமியர் யவனர்உவச்சர் ..

அருணகிரிநாதர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள் இஸ்லாமியர்துலுக்கர்

யவனர் என்ற சொல்லும் காலப்போக்கில் அர்த்தம் மாறிக்கொண்டே வந்த சொல்லாகும்.

கால யவனர் என்ற கருப்பு யவனர்கிருஷ்ண பரமாத்வை  ஓட ஓட விரட்டி ,அவரை உத்தரப்பிரதேச மதுராவிலிருந்து குஜராத்திலுள்ள துவாரகைக்கு யாதவர்களுடன் குடிபெயரச் செய்தான் என்று பாகவத புராணம் கூறுகிறதுஇதுவரை யாரும் இது பற்றி ஆராயாமல் கப்புச்சிப்பு என்று மவுனியாக இருக்கிறார்கள். நான் மட்டும் சுமேரியராக இருக்கலாம் என்று கட்டுரை எழுதியுள்ளேன்.

***

சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014.

***

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்?

Date: 30 DECEMBER 2017 ; Post No. 4564

***

யவன முண்டா ! பாணினி தகவல் (Post No.8021)

Post No. 8021

Date uploaded in London – 22 May 2020   

***

யவனர்கள் கிரேக்கர்களா ஆமாம் / இல்லை (Post No.7812)

Post No.7812

Date uploaded in London – 10 April 2020   

—-SUBHAM—-

Tags- சீனாவுக்குப் போகாதே! அருணகிரிநாதர் அறிவுரை, சோனகம், யவனர்கள்

ஏ.ஐ. தரும் ஆனந்தச் சிரிப்பு! (Post.15,160)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,160

Date uploaded in London –   8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தினமணி கதிர் 12-10-25 இதழில் வெளியான கட்டுரை!

ஏ.ஐ. தரும் ஆனந்தச் சிரிப்பு!

ச. நாகராஜன்

“வெவ்வேறு இடங்களுக்குச் சென்று ஆராய்வதே நமது இயற்கையாகும். நாம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர்களாகவே ஆதி காலத்தில் இருந்தோம். இப்போதும் நாம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து ஆய்பவர்கள் தாம்” என்று பிரபல விஞ்ஞானியும் எழுத்தாளருமான கார்ல் சகன் ஒரு முறை கூறினார்.

அது அப்படியே இன்று வரை உண்மையாக இருக்கிறது.

இப்போது நம்முடன் சுற்றித் திரிய விஞ்ஞான சாதனங்களும் கூடவே வருகின்றன.

வெவ்வேறு அயல்கிரகங்களில் நம்மால் சென்று ஒரு கணம் கூட இருக்க முடியாத நிலையில் நாம் அங்கெல்லாம் ரோவர்களை (ROVER)

அனுப்புகிறோம்,

இந்த ரோவர்களின் பணி என்ன?

அது வேற்று கிரகங்களில் இறக்கி விடப்பட்டவுடன் அங்குமிங்குமாக அலைந்து திரியும். அதனுள்ளே காமராக்கள், சாம்பிள்களை எடுத்து ஆய்வதற்கான சாதனங்கள் இருக்கும்.

அவை மெதுவாக ஒவ்வொரு இடமாகச் சென்று போட்டோக்களைப் பிடித்து பூமிக்கு அனுப்பும். சாம்பிள்களை சேகரிக்கும்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலிருந்து இப்படி  செலுத்தபப்ட்ட ரோவர்களில் செவ்வாய் கிரகத்தில் ஏழு ரோவர்களும் சந்திரனில் ஏழு ரோவர்களும் குறுங்கோள்களில் மூன்று ரோவர்களும் நமக்காக வேலை செய்கின்றன. இந்த ரோவர்களை அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் அனுப்பி உள்ளன.

ஒரு ரோவரை உருவாக்க 7440 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது. இந்த தயாரிப்புச் செலவு இப்போது சற்று குறைவாக ஆகி இருக்கிறது.

ரோவரில் உள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும்  மின்னணு சாதனங்களை இயங்க வைக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் உரிய முறையில் மேல் கூடுகள் அமைக்கபப்ட்டுள்ளன.

2019ம் ஆண்டு நாஸா அனுப்பிய ஆப்பர்சூனிடி ரோவர் தனது கடைசி செய்தியாக இப்படி ஒரு செய்தியை அனுப்பியது : “எனது பேட்டரி மிகவும் மெதுவாக இயங்குகிறது. ஒரே இருள் மயமாக இருக்கிறது,”

இந்தச் செய்தியைக் கேட்ட விண்வெளி ஆர்வலர்கள் பலரும் அழுது புலம்பினர்.

ரோவருக்கும் இப்படி ஒரு முடிவா?

ஆனால் காலம் வேகமாக மாறி வருகிறதில்லையா?

இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் பரவி விட்டது.

ரோவரிலிருந்து பல லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடந்து சிக்னல்கள் நமக்கு வந்து சேர, அவற்றிக்கான தரவுகளை ஆராய்ந்து நாம் முடிவு எடுக்க வேண்டும்.

இதற்கு ஆகும் காலத்தைக் குறைக்க முடியுமா?

செயற்கை நுண்ணறிவு இதற்குப் பதிலைத் தந்து விட்டது.

அந்த ரோவர்களையே சமயத்திற்குத் தக்கபடி முடிவுகளை எடுக்கச் செய்து விட்டால் என்ன?

ஏராளமன டேட்டா எனப்படும் தரவுகளை ரோவரிலேயே தந்து விடலாம். ரோவர்கள் அவற்றை அலசி ஆராய்ந்து உரிய  முடிவுகளை உடனுக்குடன் தானே எடுக்கும்.

ஏஐயின் உதவியால் ஒரு ரோவர் பழைய கால மைக்ரோபியல்  வாழ்க்கையைச் சுட்டிக் காட்டினால் அதனால் உலகம் எவ்வளவு பயனை அடையும்! அது நீர் இருக்கும் தடயங்களைச் சுட்டிக் காட்டினால் உலகமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து விடும் இல்லையா?

எலும்புகளையே உறைய வைக்கும் செவ்வாய் கிரகத்தின் குளிராகட்டும், பூமியை கடுகில் ஆயிரத்தில் ஒரு பங்கு சிறிதாகக் காட்டும் தொலைதூரத்தில் உள்ள கிரகம் ஆகட்டும் இங்கெல்லாம் உள்ள நிலையை உள்ளது உள்ளபடி காட்ட வல்லதாக ஏஐ சாதனங்கள் இனி உதவப் போகின்றன.

எந்த இடங்களுக்கு முதலில் செல்லலாம் என்பதையும் அவை நிர்ணயித்துச் சுட்டிக் காட்டப் போகின்றன.

ரோவர்கள் மட்டுமின்றி மனிதனும் வேற்று கிரகங்களுக்குச் சென்று தங்கி இருக்க வேண்டுமில்லையா? இதற்காக பிள்ளையார் சுழியை ஏஐ சாதனங்கள் போட இருக்கின்றன.

எந்த ஒரு விண் பொருளிலும் மோதாமல் பத்திரமாக விண்ணில் பறந்து சென்று மீள்வதற்கு ஏஐயின் துல்லியமான கணக்கீடுகளும் அல்காரிதங்களும் இனி உதவப் போகின்றன.

நம்பும்படியாகச் சொல்லுங்கள் என்பவர்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.

ஆதி காலத்தில் நெடுந்தூரம் கப்பலில் பயணிக்கலாம் என்ற போது சிரித்தார்கள்; அடுத்த கட்டத்தில் ஆகாயத்தில் விமானத்தில் பறந்து நெடுந்தூரத்தை சில மணி நேரங்களில் அடைந்து விடலாம் என்ற போதும் சிரித்தார்கள். அடுத்த கட்டத்தில் சந்திரனுக்கு ராக்கெட் மூலம் செல்லலாம் என்ற போதும் சிரித்தார்கள்.

ஆனால் மனித சாதனை இந்த சிரிப்பையெல்லாம் வியப்பாகவும் பிரமிப்பாகவும் மாற்றியது.

இப்போது ஏஐயின் காலம். ஏஐ செய்யவிருக்கும் மாயாஜாலங்களை பூமி வாழ் மக்கள் மட்டும் பேசப்போவதில்லை. பிற கிரகங்களில் இருக்கும் நமது வாரிசுகளும் பேசுவார்கள் என்பதில் ஐயமில்லை!

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது அறியாமையின் சிரிப்பு; ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம்;  ஏஐ தரும் இனி ஆனந்தச் சிலிர்ப்பு!

 ***

Deccan Chronicle Newspaper Cartoons up to 7th November 2025

 Deccan Chronicle Newspaper Cartoons up to 7th November 2025.

Posted by London Swaminatha on 7-11-2025

–subham–

Tags- Caetons, Upto 7-11-2025

The Hisory of Vande Mataram Song

150th anniversary of Vande Mataram! 

History of the National Song, how it was called ‘anti-Muslim’ and given a communal colour, and how Congress found it ‘not suitable as national anthem’

Posted from OP India on 7-11-2025

 Muslims argue that since the Vande Mataram song was an ode to Mother India, singing it is against the “tenets of Islam” and a “sacrilege against Allah” because a Muslim can bow to only Allah and no one else.

7th November 2025 marks the 150th anniversary of India’s National Song ‘Vande Mataram’. Today, Prime Minister Narendra Modi inaugurated the year-long commemoration of the iconic song at the Indira Gandhi Indoor Stadium in the national capital.

150 years ago, Bankimchandra Chatterji, also known as Bankim Chandra Chattopadhyay, wrote the Vande Mataram song on the auspicious occasion of Akshay Navami, which was on 7th November 1875. Appearing first in the literary journal
“Bangdarshan” as a part of Chatterji’s iconic novel Anandamath in 1882, the song invoked the motherland as a shining embodiment of strength, unity, prosperity and divinity. The song became synonymous with devotion to Bharat.

Chatterji’s composition transcended its literary origins and became a rallying cry for freedom fighters and nothing short of a national anthem during the independence struggle. Decades later, Vande Mataram became the national song of India, connecting Indians of independent Indian with those who fought and won freedom from the British colonial rule.

In the year 1896, Gurudev Rabindranath Tagore sang the poem for the first time at the Kolkata session of the Indian National Congress. It was officially adopted as the national song by the Constituent Assembly of India on 24th January 1950. At that event, Dr Rajendra Prasad had declared that Vande Mataram should be honoured equally with the national anthem, Jana Gana Mana.

Set against the backdrop of the Bengal famine of 1770, which claimed 10 million lives, the novel Anandamath portrays a dystopian Bengal ravaged by exploitation, starvation, deaths and oppressive foreign rule.

Vande Mataram is a lyrical ode to the motherland. It personifies India as a divine feminine figure akin to Goddess Durga. Rabindranath Tagore performed the song for the first time in front of an audience in 1896 during a meeting of the Indian National Congress.

Vande Mataram and the Fakir-Sanyasi Rebellion

At the heart of Anandamath and Vande Mataram lies the Sanyasi-Fakir Rebellion of the 18th century. The rebellion was a gritty precursor to the intensified resistance against British colonial rule.

Spanning 1763-1800, the Sanyasi-Fakir Rebellion united Hindu Sanyasis and Sufi fakirs or Derveshis in guerrilla warfare against the East India Company and its puppet Nawabs in Bihar and Bengal. The rebellions torched British outposts, raided Company treasuries, and disrupted revenue collection over the British bans on pilgrim taxes, tolls and grants by Zamindars. Earlier, when Zamindars were affluent, they used to give grants to ascetics; however, since the East India Company seized the Diwani or tax collection rights, demands for tax from zamindars increased. Resultantly, the zamindars were neither able to pay taxes to the Company nor give grants to Sanyasis and Fakirs.

Back in 1771, over 150 Hindu Sanyasis were killed for no apparent reason, triggering an uproar and violence in Natore (now in modern-day Bangladesh). The Britishers deemed the Sanyasis as plunderers and wanted to stop them from collecting money from zamindars or headmen en route to shrines. Many sects of Hindu ascetics, including the Dasanami Naga Sadhus, participated in this rebellion.

Drawing heavily from the history, Bankim Chandra fictionalised the Sannyasis as secret warrior-monks in Anandamath, the abbey of bliss or sacred abbey. These warrior-monks rise against a famine-stricken Bengal struck by the dual tyrannies, British mercantilism led by Governor Warren Hastings and the misrule of Nawab Mir Qasim. The rebels chanted Vande Mataram as their rallying cry, and the song went on to become the paean of Indian resistance against British colonial rule.

Vande Mataram given a communal colour due to its critique of the Bengal Nawab’s misrule, which led to famine

Anandamath was founded during the Bengal agrarian crisis, when the region was struck by three successive famines in the early 1770s, against the backdrop of the Fakir-Sannyasi Rebellion. However, interestingly, the novel blamed the agonising conditions on the ruler Nawab Mir Qasim and charged that the state’s downfall was caused by his tacit consent to the East India Company.

In Anandamath, Bankim Chandra Chattopadhyay unflinchingly depicts the Muslim Nawab of Bengal, modelled on Mir Qasim, as an absolutely corrupt tyrant whose policies exacerbated the famine in 1770. While the scenes of Nawab’s soldiers looting granaries and oppressing peasants, while the East India Company pulled the strings from afar, the novel fuelled allegations by the Muslims that it vilified Muslims as oppressors.

This, however, was far from the truth. The Bengali Muslim elite at that time, installed by the Mughal tyrants and subsequently co-opted by the British, were indeed complicit in the oppression of common people.

Muslims had a special objection to the invocation of Maa Durga and Hindu temple imagery in the Vande Mataram song, arguing that it was idolatrous and against Islamic monotheism.

“The East India Company was then calling the shots from behind the facade of a puppet Muslim Nawab. It was rack-renting peasant surplus to augment revenues from which the Company extracted a massive tribute. The drive was so relentless that three successive droughts produced a famine of catastrophic proportions in 1770. Much of the land returned to waste and approximately one-third of the population starved to death,” noted historian Tanika Sarkar in “Birth of a Goddess: Vande Mataram, Anandamath and Hindu Nationhood.”

The account, according to her, held “the Nawab responsible not just for widespread death and starvation, but also for a deliberate and total destruction of Hindus, of their honour, faith, caste and women. In other words, it forces a split between the agents and victims of the famine: the agents are Muslims and the starving and dying people are always identified as Hindus.”

All India Muslim League to Mohammed Ali Jinnah, Vande Mataram got characterised as an ‘anti-Muslim’ song

First sung by Rabindranath Tagore in 1896, Vande Mataram evolved into a battle cry during the 1905 partition of Bengal and quickly advanced to become a strongly evocative representation of the freedom movement. However, the Muslim leadership at that time failed to see and embrace the nationalistic song beyond their narrow fundamentalist mindset. They argued that since the Vande Mataram song was an ode to Mother India, singing of Vande Mataram is against the “tenets of Islam” and a “sacrilege against Allah” because a Muslim can bow to only Allah and no one else.

Sadly, this Islamist viewpoint remains prevalent even in contemporary India, as many Muslim maulvis and Islamists in general refuse to sing Vande Mataram.

Many of the Muslim leaders in British-ruled India, who labelled Vande Mataram as some sort of ‘anti-Muslim’ or ‘Hindu nationalist’ song, ended up being the proponents of the separatist agenda that culminated in the creation of Pakistan. These Islamists not only derided Vande Mataram as idolatrous and anti-Muslim but also argued that the deification of the motherland amounts to ‘shirk’.

All India Muslim League President Syed Ali Imam while speaking at the organisation’s second session in December 1908, declared, “I cannot say what you think, but when I find the most advanced province of India put forward the sectarian cry of ‘Bande Mataram’ as the national cry, and the sectarian Rakhi-Bandhan as a national observance, my heart is filled with despair and disappointment; and the suspicion that, under the cloak of nationalism, Hindu nationalism is preached in India becomes a conviction.”

Three decades later, Mohammed Ali Jinnah, who partitioned the country on Islamic lines, echoed similar views in an article dated 1st March, 1938, published in The New Times of Lahore:

Muslims all over India have refused to accept Vande Mataram or any expurgated edition of the anti-Muslim song as a binding national anthem.”

Muslim League members walked out and Jinnah used the episode for his divisive agenda and to rally Muslim support for the same.

Notably, the main offence over the full Vande Mataram song stemmed from the lyrics त्वंहिदुर्गादशप्रहरणधारिणीकमलाकमलदलविहारिणीवाणीविद्यादायिनीनमामित्वाम्नमामिकमलांअमलांअतुलांसुजलांसुफलांमातरम् (Thou art Durga, Lady and Queen, With her hands that strike and her swords of sheen, Thou art Lakshmi lotus-throned, And the Muse a hundred-toned, Pure and perfect without peer, Mother lend thine ear, Rich with thy hurrying streams, Bright with thy orchard gleams, Dark of hue O candid-fair In thy soul, with jewelled hair And thy glorious smile divine, Loveliest of all earthly lands, Showering wealth from well-stored hands! Mother, mother mine! Mother sweet, I bow to thee, Mother great and free.)

Jawaharlal Nehru truncated Vande Mataram to placate Jinnah and other Islamists

The Congress party’s ‘placate the Muslims at the cost of Hindus’ policy is not a post-independence phenomenon. Rather, the INC began to cede Hindu interests one at a time to appease Muslims, even in the pre-independence era. Since the Muslim community was offended by the Vande Mataram song due to its later stanzas mentioning Maa Durga, the Congress, instead of countering the Islamists by emphasising Bharat’s Hindu cultural and traditional foundation, chose to genuflect before the Islamist intransigence.

In consequence of Congress’s abject surrender, the Vande Mataram song was mutilated, and four stanzas were dropped out of six to satisfy those who, just years after, betrayed the nation.

It would not be wrong to say that, besides the support of Islamists, Mohammed Ali Jinnah’s biggest strength was Mohandas Karamchand Gandhi. M.K. Gandhi’s suicidal empathy for Jinnah and the ‘Muslim cause’ and undeserved attention helped Jinnah stay relevant and influential.

In 1937, Gandhi, apparently wary of alienating his Muslim ‘allies’, advocated that only the first two stanzas, which do not mention overt Hindu religious imagery, be sung. Thus, in the Faizpur Congress Session in that year, only the first two stanzas of Vande Mataram were sung. Prime Minister Narendra Modi also highlighted this fact in his speech on Friday.

To understand how submissively the Congress leadership acquiesced to appease Jinnah and other Islamists, one needs to go through the correspondence and addresses of India’s first prime minister, Jawaharlal Nehru.

In a letter to Urdu poet Ali Sardar Jafri, Nehru stated that the song Vande Mataram is unrelated to the Congress and is “not suitable as a national anthem.”

“The Congress has not officially adopted any song as a kind of national anthem. In practice however the Bande Mataram is often used in national gatherings together with other songs. The reason for this is that 30 years ago this song and this cry became a criminal offence and developed into a challenge to British imperialism,” Nehru wrote.

Although Nehru acknowledged the popularity and significance of the Vande Mataram song in uniting Indians against the British, he further tried hard to reinforce Congress party’s secular credentials and wrote, “I do not think anybody considers the words to have anything to do with a goddess. That interpretation is absurd. Nor are we concerned with the idea that the author of the book, which contains this song, had in his mind when he wrote it, because the public does not think on these lines.”

In his pursuit of distancing Congress from ‘Hindu nationalism’, Nehru went on to write, “It contains too many difficult words which people do not understand and the ideas it contains are also out of keeping with modem notions of nationalism and progress. We should certainly try to have more suitable national songs in simple language.”

Similarly, in his letter to Subhash Chandra Bose dated 20th October 1937, Nehru said that the Vande Mataram song was meant to “irritate the Muslims.”

“I have managed to get an English translation of Ananda Math and I am reading it at present to get the back- ground of the song. It does seem that this background is likely to irritate the Muslims…There is no doubt that the present outcry against Bande Mataram is to a large extent a manufactured one by the communalists. At the same time there does seem some substance in it and people who are communalistically inclined have been affected by it. Whatever we do cannot be to pander to communalists’ feelings but to meet real grievances where they exist,” Nehru wrote.

Similarly, in his letter to Subhash Chandra Bose dated 20th October 1937, Nehru said that the Vande Mataram song was meant to “irritate the Muslims.”

“I have managed to get an English translation of Ananda Math and I am reading it at present to get the back- ground of the song. It does seem that this background is likely to irritate the Muslims…There is no doubt that the present outcry against Bande Mataram is to a large extent a manufactured one by the communalists. At the same time there does seem some substance in it and people who are communalistically inclined have been affected by it. Whatever we do cannot be to pander to communalists’ feelings but to meet real grievances where they exist,” Nehru wrote.

Gandhi and Nehru’s arbitrary truncation of Vande Mataram to appease Muslims reminds of another similar doing of MK Gandhi. The corruption of the Hindu bhajan ‘Raghupati Raghav Raja Ram’ to secularise it and include ‘Allah’.

Although Gandhi is credited with popularising this hymn by using it during his famous Dandi March in 1930, the lyrics were taken from Shri Nama Ramayanan, an old religious text penned by Sri Lakshmanacharya, and modified by Gandhi.

While Gnadhi inserted “Ishwar Allah tero naam, sabko sammati de Bhagwan”, the original lyrics made no mention of Allah. Raghupati raghava rajaram, patita paavana sitaram, Sundara vigraha meghashyam, Ganga tulasi shaligram. Bhadra girishwara sitaram, Bhagat janapriya sitaram. Janaki ramana sitaram, Jaya jaya raghava sitaram.

Be it the truncation of Vande Mataram or bastardisation of Raghupati Raghava Raja Ram song, these episodes showed unmatched alacrity in stripping Hinduness of a song evoking nationalist fervour and distorting a Hindu religious song to address the reservations held by Muslims showed that just like in the post-independence Congress era, even in pre-independence times, it was always the responsibility of the Hindu majority to accommodate the demands of the Muslim minority while expecting nothing but betrayal in return.

Neither Gandhi nor Nehru nor the Congress party ever denounced the verses in the Holy Quran that call idol-worshipping a shirk/sin and ordain capital punishment for idolatry. Gandhi embraced the Khilafat Movement, which eventually gave strength to Muslims in Malabar and resulted in the Hindu genocide, also known as the Moplah riots of 1921. Gandhi embraced Jinnah, who eventually declared Direct Action Day, resulting in the killings and rape of thousands of Hindus, Sikhs and other non-Muslim communities.

No wonder Nehru was opposed to the restoration of the Somnath Temple, citing ‘Hindu revivalism’.

History tells us that a Hindu departure from its religious roots has only pushed Muslims towards their religious extremist foundation. The more secular the Hindu leadership becomes by ceding its religious ground, the further Islamists expand their tentacles.

Vande Mataram: India’s National Song that does not get celebrated by all Indians

On 24th January 1950, Vande Mataram was adopted as independent India’s national song by the constituent assembly based on a proposal by President Rajendra Prasad. While the song is sung in school assemblies, Independence Day events, and patriotic programs, the portions truncated by Congress back in 1937 remain comparatively lesser known and sung. Such is the impact of Congress’s surrender.

Even today, the Muslim bodies in Jammu and Kashmir, including Mutahida Majlis-e-Ulema (MMU) and Anjuman-e-Ahl-e-Hadith, have come out in opposition against a government directive asking schools across Jammu and Kashmir to commemorate the 150th Vande Mataram anniversary.

These Muslim bodies have given the same old excuse of infringement upon Muslim religious freedom and “against our religious beliefs”. They have also called an order to commemorate Vande Mataram, as “a deliberate attempt to impose an RSS-driven Hindutva ideology on a Muslim-majority region under the guise of cultural celebration.”

Islamists in general, too, have been opposed to singing Vande Mataram or raising Bharat Mata ki Jai slogans, calling it against their religious tenets. As the nation commemorates the sesquicentennial of Vande Mataram, India must remember the historical communalisation and derision of the song by Islamists and take measures not to repeat the sinful mistake Congress leadership made back then. Accommodating the unreasonable demands of Islamists does not bolster secularism or ensure peace; it rather amounts to tightening the noose around one’s own neck.

****

Shraddha Pandey

Shraddha Pandey is a Senior Sub-Editor at OpIndia, where she has been sharpening her edge on truth and narrative. With three years in experience in journalism, she is passionate about Hindu rights, Indian politics, geopolitics and India’s rise. When not dissecting and debunking propaganda, books, movies, music and cricket interest her. Email: shraddha@opindia.com

–Subham—

Tags- OPINDIA, Vande mataram, History

அகநானூற்றில் எகிப்திய கடவுள் Ba ‘பா’ (Post No.15,159)

Written by London Swaminathan

Post No. 15,159

Date uploaded in London –  7 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

அகநானூறு பாடல் 113 சுவையான செய்தி தருகிறது. இந்தக் கருத்து எகிப்து நாட்டிலும் இருப்பது வியப்புக்குரியது மனிதனுடைய உடலுக்குள் உள்ள உயிர் ஒரு பறவையின் உடம்பு என்னும் கூட்டிலிருந்து வெளியே போவது போலத்தான் மரணம் என்பது.

இது திருக்குறளிலும் இருக்கிறது பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா , ஆத்மா உடலில் இருந்து பிரிந்து செல்வது –அதாவது இறப்பது— மனிதன்  நைந்துபோன    ஆடைகளை களைந்து விட்டு புத்தாடை போட்டுக்கொள்வது போலத்தான் ஏனெனில் ஆன்மாவுக்கு இறப்பு இல்லை  என்று ஒரு உவமை கூறுகிறார்

பகவத் கீதையில் நைந்து போன உடைகளுக்கு உடலை உவமையாகக் கூறியுள்ளார் கிருஷ்ண பரமாத்மா

वासांसि जीर्णानि यथा विहाय

नवानि गृह्णाति नरोऽपराणि |

तथा शरीराणि विहाय जीर्णा

न्यन्यानि संयाति नवानि देही || 2-22||

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ‌பராணி |

ததா ஶரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ ||2-22||

ஒருவன் கந்தலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டுபுதிய ஆடைகளை அணிவது போலமரணத்தின் போது​​ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.

ஆனால் அகநானூற்றிலும் குறளிலும் ஆன்மா என்பதை பறவைக்கு ஒப்பிடுகிறார்கள். இது கல்லாடர் பாடலிலும் வள்ளுவர் திருக்குறளிலும் வரும் கருத்தாகும்..

அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,

சேயர்’ என்றலின், சிறுமை உற்ற என்

கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,

அழாஅம் உறைதலும் உரியம்-பராரை

அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்

புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,

மெய் இவண் ஒழியப் போகி, அவர்

செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!–அகநானூறு 113

***

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு—  குறள் 338

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

***

அருட் பிரகாசவள்ளளார் ராமலிங்க சுவாமிகளும் இதைச் சொல்கிறார்

உடம்பினை ஒன்பது வாசல் வீடு என்று வருணிப்பதைப் பகவத் கீதை முதல் பல நூல்களில் காண்கிறோம். அதை வருணிக்கும் வள்ளலார், வள்ளுவர் போல பறவைக்கூடு என்றும் பாடுகிறார்

17. உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்

உற்றசும் பொழுகும்உடலை

உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை

உற்றிழியும் அருவிஎன்றும்

வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு

மின்என்றும் வீசுகாற்றின்

மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த

வெறுமாய வேடம்என்றும்

கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த

கனவென்றும் நீரில்எழுதும்

கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை

கைவிடேன் என்செய்குவேன்

***

பா” Ba என்னும் மனித முகப் பறவை ஆன்மா ஆகும்

எகிப்து நாட்டில் இந்த உருவத்தை மனித முகமும் பறவை உடலும் உள்ள ஒரு கடவுளாக சித்தரித்திருக்கிறார்கள் .அந்த மனித முக பறவைக்கு “பா” என்று பெயர்; இதேபோல மாமூலனார் பாடிய பாடல் ஒன்றில் இன்னும் ஒரு எகிப்திய கருத்தினை உரைத்தார் .சூரியனை வானத்தில் செல்லும் ஓடம்/ கப்பல் என்று உவமித்து இருந்தார். மாமூலனார் காலத்தைச் சேர்ந்த கல்லாடரும் இவ்வாறு ஒரு எகிப்திய கருத்தினை சொல்லுவது வியப்புக்குரியது.

****

பல்லி சொல்லுக்கு பலன்

கல்லாடர் பாடிய இன்னும் ஒன்று பாடலைக் காண்போம்

அகநானூறு ஒன்பதாம் பாடலில் அவர் இரண்டு சுவையான செய்திகளை நமக்கு அளிக்கிறார் தலைவனுக்காக காத்திருக்கும் தலைவி பல்லியின் சொல்கேட்டு நன் நிமித்தத்தை அறிகிறார் பல்லி சொல்லுக்கு பலன் என்று இன்று கூட நாம் பஞ்சாங்கத்தில் படிக்கிறோம். இது அந்த காலத்திலிருந்து இருந்து வரும் வழக்கமாகும். பல்லி ஜோதிடத்தைக்  கேட்டு ஒரு பன்றி கூட வேட்டையாடாமல் குகைக்குள் திரும்பிச் சென்றதாக இன்னொரு பாடலில் காண்கிறோம். இது 2000 ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர்களின் நம்பிக்கையாகும்.

***

உலக்கைப்பாட்டு

இரண்டாவது செய்தி பெண்கள் உலக்கையால் நெல்லைக்  குத்தும் ஒலி/ சப்தம் மலையில் உள்ள ஆந்தைகளின் குரல் ஒலி போல இருந்ததாம். இது ஒரு உவமை .உலக்கை குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு பாணி என்று சொல்லப்படுகிறது இதுபோன்ற உலக்கைப்  பாட்டுகளை சைவத் திருமுறைகளிலும் காண்கிறோம்.

***

    கல்லாடர் பாடிய    அகநானூற்றுப் பாடல் 83ல் , வேங்கட மலையில் உள்ள புல்லி பற்றி மீண்டும் கேட்கிறோம். மலையில் வாழும் வேடர்கள் யானைக் குட்டிகளைப் பிடித்து வந்து கள்  விற்கும்  கடைகளின் வாசலில் கட்டுவார்களாம்!  இது ஒரு காட்சி.

***

கரடிகள் இருப்பை மரத்தின் மீது ஏறி பூக்களை   உண்ணும் காட்சி  பாடல்  171 ல் வருகிறது .கரடிகளின் சப்தத்தைக் கேட்டு அவைகளை  வேட்டையாட வேடர்கள் வில்லுடன் வந்தவுடன் அவை பயந்து போய் மரத்தின் மீது ஏறி பூவை சாப்பிட்தாம்.

***

பாடல் 199 இதில் இரண்டு இயற்கைக் காட்சிகள் வருகின்றன. செந்நாய்கள் மான் கூட்டத்தைத்  தாக்கியவுடன் அவைகள் வெவ்வேறு திசையில் ஓடின பெண்  மான்களைக்  கூப்பிடுவதற்காக ஆண் மான்கள் குரல் எழுப்பின.  இந்த குரல் சத்தத்தை பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் மான்களை பிடிப்பதை ஆதிசங்கரர் முதல் பலரும் உவமையாக பயன்படுத்தினார்கள். ஐம்புலன்களில் குரலை கேட்டு உயிரிழக்கும் மான்களை புலன்கள் செய்யும் தீங்கினுக்கு  உதாரணமாகக் காட்டி உள்ளார்கள்

***

இரண்டாவது இயற்கைக் காட்சி: காற்று காற்று வீசியபோது வெண்கடம்பு மலர்கள் தரையில் விழுந்தனவாம். யானைகள் மழை பெய்கிறது என்று எண்ணி நீரைக்  குடிப்பதற்காக அந்த மலர்களை மேய்ந்தனவாம்!  அதாவது வறண்ட பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கிய யானைகள் கீழே விழுந்த மழைத்துளிகள்  என்று கருதி ஏமாந்தன.

*** 

களம் காய் நார் முடிச்  சேரல்

இதைவிட முக்கியமான செய்தி ஒரு வரலாற்றுச் செய்தி.

இதில்  களம் காய் நார் முடிச்  சேரல் என்ற மன்னனைப் பற்றிய செய்திகள் வருகின்றன அவன் முன்னோர் இழந்த நாட்டினைப் பெறுவதற்காக நன்னன் என்ற மன்னனுடன் போரிட்டு வெற்றி பெற்றான். அந்தப் போர் நடந்த இடம் வாகைப் பரந்தலை எனப்படுகிறது. மற்றொரு பெயர் பெருந்துறை. நன்னனுக்கு உரிய காவல் மரம் வாகை.  அதை அவர் தங்கத்தால் அலங்கரித்து வைத்திருந்தாராம்.  நார்முடிச்சேரல் என்ற பெயர் பற்றி இன்னும் ஒரு சங்க நூலான பதிற்றுப்பத்து சுவையான செய்தி தரிகிறது. அவள் முடி சூட்டும் சமயத்தில் உரிய கிரீடம் கிடைக்காதால் களம் காயால்  ஆன மாலையையும் (கண்ணி)  நாரால் செய்த முடியையும் அணிந்தான். அதனால் அவன் பெயர் களம் காய் கண்ணி நார் முடிச்  சேரல் என்று ஆனது! IVVAARU PALA வரலாற்றுச் செய்திகள் கல்லாடர் பாடல்கள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.

—SUBHAM—

 Tags- அகநானூற்றில், எகிப்திய கடவுள் Ba ‘பா’,களம் காய் நார் முடிச் சேரல்