Glory of Womanhood: Bharati in English (Post No.11256)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,256

Date uploaded in London – 11 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.Let us rejoice in praise of womanhood,

Let us dance to the cry of ‘Victory to Woman’

For woman is the sanctified union

Of the mother’s fame and the spouse’s name.

1.பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்

2.We shall rejoice in praise of wedded love

We shall dance in honour of lovers’ bliss;

And as woman is the solvent of sorrow,

Her heroic sons shall hail her ‘Holy Mother’!

2.அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

3.It is mother’s milk that gives us strength,

While the wife’s kind words reap our harvest of fame

As woman’s blessedness blasts all evil

Let us rejoice with linked hands

3.வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்

4.Could man’s valour defend woman’s grace

We would then face neither want nor defeat

As the eyelids enclose and sustain the eye

Woman and man must cherish holy wedded love

4.பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா

5.Woman is the heady wine we shall taste

And make the earth tremble with our might

We shall dance to the chime of flute and drum

And lose our hearts in ecstasy.

5.சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்

6.Blow the conch ! Dance in joy!

For woman is sweeter than life itself

She is the protectress of life, and creatrix too

She is the life of our life, and the soul of sweetness.

6.உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே

7.Hail holy mother! We make obeisance;

And we sing our darling’s praises to her ear

We shall canter across a hundred hills

In the service of a slender -waisted girl.

‘7.போற்றி தாய்’ என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே

8.Hail holy Mother To the beat of the drum

Hail holy Mother to the flute’s golden tune.

We shall sweep the blue firmament itself

In honour of a bright – eyed girl

‘8.போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய்’என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே

9.We shall willingly swallow coals of fire

To serve the divine hand that fed us

And although her hands resist us as we kiss

We shall sing in praise of the chosen hands/spouse.

9.அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்

Translated into English by Subrahmanya Bharati

(there are two sets  of manuscripts for  the tamil original in the hand writing of Bharati)

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

Tags- பெண்கள், பாரதி, வாழ்க, Glory, Womanhood, Bharati

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 5வது பாடல் (Post No.11,255)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,255

Date uploaded in London – –    11 SEPTEMBER 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 5வது பாடல் : ஒரு பார்வை!

ச.நாகராஜன்

பாரத தேசம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 19 பாடல்களில் முதல் நான்கு பாடல்களில் அவர் தரும் செய்திகளைப் பார்த்தோம்.

இனி அடுத்து அவர் ஐந்தாவது பாடலில் கூறும் அற்புதமான செய்திகளைப் பார்ப்போம்.

பாரத தேசம் என்ற பாடல்

56) பாரத தேசம் என்று பெயரைச் சொன்னாலேயே போதும், வறுமை மற்றும் பயத்தைக் கொன்று விடுவர். செல்வமும் தைரியமும் தானே வரும்.

57) பாரத தேசப் பெயரைச் சொன்னவுடனேயே துயரமான

பகையை வெல்வர்.

58) நாம் வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்

59) மேற்குக் கடல் முழுவதும் நமது  கப்பல்களைப் பயணிக்க வைப்போம்.

60) நமது தேசத்தில் உள்ள பள்ளித் தலம் அனைத்தையும் கோவில்களாகச் செய்வோம்.

61) பாரத தேசம் என்று சொல்லி நமது வலிமை மிகுந்த தோள்களைக் கொட்டி ஆர்ப்பரிப்போம்.

62) நாம் சிங்களத் தீவினுக்கு ஒரு பாலம் அமைப்போம்.

63) சேதுவை மேடாக ஆக்கி ஒரு சாலையை அமைப்போம்.

64) வங்கத்தில் மிகையாகச் சேர்கின்ற நீரைக் கொண்டு நாட்டின் மையப் பகுதிகளில் விவசாயம் செய்து பயிர் வளர்ப்போம்.

65) சுரங்கங்கள் வெட்டி தங்கம் முதலிய கனிப்பொருள்களையும் வேறு பூமியில் புதைந்திருக்கும அரிய பொருள்களையும் வெளியில் எடுப்போம்.

66) எட்டுத் திசைகளிலும் சென்று இவற்றை விற்று எண்ணுகின்ற தேவையான அனைத்துப் பொருள்களையும் கொண்டு வருவோம்.

67) தென் கடலில் அரிய வகை முத்துக்கள் உள்ளன. அங்கு முத்துக் குளிப்போம்.

68) நமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் பல நாட்டு வணிகர்களும் கொண்டு வந்து தமக்குத் தேவையானற்றை வேண்டிக் கொடுக்குமாறு நமது அருளை வேண்டி மேற்குக் கடற்கரையில் வரிசையாக நிற்பர். அவர்களுக்கு உதவுவோம்.

69) சிந்து நதியில் நல்ல முழு நிலா நாளிலே சேர நன்னாட்டு இளம் பெண்களுடன் சுந்தரமான தெலுங்கு மொழியில் பாட்டுப் பாடி தோணிகளை ஓட்டி விளையாடுவோம்.

70) கங்கைப் பகுதியில் விளைவது நல்ல கோதுமை. அதை காவிரியில் கிடைக்கும் வெற்றிலைக்கு மாறாகக் கொடுப்போம்.

71) சிங்க மராட்டியர் கவிதையைப் பெறுவோம். அவர்களுக்கு சேர நாட்டில் கிடைக்கும் தந்தங்களைப் பரிசாக அளிப்போம்.

72) காசி நகர்  புலவர் அங்கிருந்து பேசுவதை காஞ்சிபுரம் உள்ளிட்ட நம்மிடங்களில் இருந்து கேட்க ஒரு கருவியைச் செய்வோம்.

73) ராஜபுதனத்து வீரர்களுக்கு கன்னடத்தில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை அளிப்போம்.

74) பட்டாடைகளையும் பஞ்சில் ஆடைகளையும் செய்து மலைகள் என வீதிகளில் குவிப்போம்.

75) திரவியங்களைக் கட்டிக் கொண்டு வரும் காசினி வணிகருக்கு அவற்றைக் கொடுப்போம்.

76) ஆயுதம் செய்வோம்.

77) நல்ல காகிதம் செய்வோம்.

78) ஆலைகள் வைப்போம்.

79) கல்விச் சாலைகளை அமைப்போம்.

80) ஓய்வே இல்லாமல் உழைப்போம்.

81) தலை சாயுதல் செய்ய மாட்டோம்.

82) உண்மைகள் சொல்வோம்.

82) அனைவரும் வியக்கும் பல அதிசயங்களைச் செய்து காட்டுவோம்.

83) குடைகள் போன்ற அனைத்துப் பொருள்களையும் செய்வோம்.

84) உழுவதற்குத் தேவையான கருவிகளைச் செய்வோம்.

85) கோணிகளைச் செய்வோம்.

86) இரும்பாணிகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்வோம்.

87) நடையும் பறப்பும் உணர் வண்டிகளைத் தயாரிப்போம்.

88) உலகமே நடுங்கும்படியான அதிரடி கப்பல்களைச் செய்வோம்.

89) மந்திர ஒலிகளைக் கற்போம்.

90) வினை ஆற்றும் தந்திரங்களையும் கற்போம்.

91) விண்ணியலில் முதலிடம் பெற்று வானை முழுவதுமாக அளப்போம்.

92) கடலில் உள்ள உயிர் வாழ் இனங்களைக் கணக்கிட்டு மீன் உள்ளிட்ட அனைத்தையும் பற்றித் தேறுவோம்.

93) சந்திரனைப் பற்றி முழுவதுமாக அறிந்து தெளிவோம்.

94) சுகாதாரத் துறையில் முன்னேறி சந்தியைப் பெருக்குத் துலக்கும் சாத்திரத்தைக் கற்றுத் தேறுவோம்.

95) காவியங்கள் பல இயற்றுவோம்.

96) நல்ல மழைக் காடுகளை வளர்ப்போம். சுற்றுப்புறச் சூழலை அதன் மூலம் பேணிக் காப்போம்.

97) கலைகள் எத்தனை உண்டோ அத்தனையையும் வளர்ப்போம்.

98) கொல்லர் உலையை வளர்த்து நல்ல நல்ல பொருள்களைச் செய்வோம்.

99) ஓவியங்களை வரைவோம்.

100) நல்ல ஊசிகளைச் செய்து நல்ல ஆடைகளைத் தயாரிப்போம்.

101) எந்தத் தொழிலானும் சர், உலகத்தில் இருக்கும் அத்தனை தொழில்களையும் பட்டியல் இட்டு அவை அனைத்தையும் இது உயர்வு இது தாழ்வு என்ற எண்ணமின்றி அனைத்தையும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்வோம்.

102) சாதி இரண்டே தான். இட்டார் பெரியோர். இடாதார் இழி குலத்தோர்.

தமிழ் மகள் ஔவையார் சொல்லிய இந்த சொற்களை அமிர்தம் என்று போற்றி அதைக் கடைப் பிடிப்போம்.

103)  நீதி நெறி வழிப்படி நடப்போம். பிறருக்கு உதவுபவரே பெரியோர்;

நேர்மையானவர். அல்லாத மற்றோர் அனைவரும் கீழ் மக்களே.

எப்படி ஒரு அற்புதமான பாடல் பாருங்கள்.ஒரே பாடல் தான். அதில் 48 கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்.

பாரதியார் கூறுவதைப் பின்பற்றினால் பாரத தேசம் வெல்லும்; உலகத் தலைமையை ஏற்கும் என்பதில் இனி ஐயமும் உண்டோ!

வெல்க பாரதம்.

வாழ்க பாரதியின் திரு நாமம்!

**

Tags- பாரதம், மஹாகவி பாரதி,

புத்தக அறிமுகம் – 53

அறிவியல் துளிகள் – பாகம் – 13

பொருளடக்கம்

313. தகவல் கொள்கையின் தந்தை க்ளாட் ஷனான்!

314. இந்திய கடலோர நகரங்கள் மூழ்கப் போகின்றன!

315. பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!

316. மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்!

317. அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல!

318. அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே! தனக்குத் தானே அசெம்பிள் ஆகி பறந்த விமானம்!

319. மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸ்டன்!

320. பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி சிக்மண்ட் ஃப்ராய்ட்!

321. இயற்பியல் விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர் – ஃபெய்ன்மேன்!

322. விளம்பர குருவின் நல்ல அறிவுரை!

323. உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள்!!

324. பூமியைக் காப்பாற்ற நாஸாவின் புதுத் திட்டம்!

325. வெப்பத்தைக் கையில் உருவாக்கும் ‘சீன ரத்தினம்’

326. “ஆற்றல் புரட்சி” செய்யும் 13 வயதுச் சிறுவன்!

327. நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

328. செரிங்கட்டி விதிகள்! – 1

329. செரிங்கட்டி விதிகள்! – 2

330. அதிசய கண்டுபிடிப்பாளர் ; ‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு!

331.செயற்கை அறிவின் தலை நகரம் சியோல்!

332. ஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு!

333. உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ!

334. சந்திரனை எட்ட எத்தனை காளைகளின் வால்கள் வேண்டும்?

335. மூன்று கறுப்பு நிற பீன்ஸ்களை வெள்ளை நிறமாக்க எத்தனை பீன்ஸ்கள் வேண்டும்?

336. புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம்!

337. ஒரு அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்!

338. வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன். எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பதிமூன்றாம் பாகம் – 313 முதல் உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 17/2/2017 இதழிலிருந்து வாரா வாரம் வெளியானவை. அத்தியாயங்கள் தொடர்ச்சி கருதி சில அத்தியாயங்கள் இந்த பாகத்திலும் அடுத்த பாகத்திலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                             ச.நாகராஜன்
3-5-2022

மேலும் சில விந்தைக் கவிதைகள் (Post No.11254)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,254

Date uploaded in London – 10 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

புலவர் மாக எழுதிய புகழ்மிகு சிசுபால வாதம் நூலிலிருந்து மேலும் ஒரு கவிதையைக் காண்போம் .

மெய்யெழுத்துக்களில் ப -வர்க்கமும்,  ர -வர்க்கமும் மட்டும் பயன்படுத்தப்படுகிற  ஒரு செய்யுளைக் காண்போம் –

பூரிபி பாரிர்பி பீரார் பூபாரை ரபிரே பிரே

பேரீரே பிபிரப்

ராபைர பீரு பிரி பைரிபாஹா

–மாக கவியின் சிசுபால வதம் 19-66

பொருள்

இந்தப் பூமிக்கு பாரம் போல  எடை உடைய , பயமே இல்லாத  , முரசு ஒலிப்பது போல சப்தம்  உடைய, , கரிய மேகம் போன்ற யானை, எதிரியின் யானையைத் தாக்கியது.

Xxx

ஜ ஜெள ஜோ ஜாஜி ஜிஜ்ஜாஜீ 

இதில் முதல் வரியில் ஜ – வர்க்கமும், இரண்டாவது வரியில் த – வர்க்கமும், மூன்றாவது வரியில் ப -வர்க்கமும், நாலாவது வரியில் ர -வர்க்கமும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது

ஜ ஜெள ஜோ ஜாஜி ஜிஜ்ஜாஜீ 

தம் ததோ அதிததாததுத்

பாபோஅபீபா பிபூ பாபூ

ராராரிரரிரீ  ரரஹ

–மாக கவியின் சிசுபால வதம் 19-3

பொருள்

பெரிய வீரனும், பெரிய யுத்தங்களில் வெற்றி பெற்றவனுமான பலராமன் , சுக்கிரன், பிருகஸ்பதி கிரகங்களைப் போல பிரகாசிக்கிறான். சுற்றித் திரியும் எதிரிகளை அழிக்கும் அவன் , சிங்கம் போல போர்க்களம் ஏகி , நாற்படை உடைய எதிரிகளைத் தடுத்து நிறுத்தினான்.

Xxx

க்ஷிதி ஸ்திதி மிதி க்ஷிப்தி விதிவின்நிதி

உயிர் எழுத்துக்கள் இல்லாத சொற்களை மட்டுமே வைத்து கவிதை எழுதுவது இயலாது. ஆனால் ஒரு சில உயிர் எழுத்துக்களை மட்டும் வைத்து எழுதலாம்.  அ  – மற்றும் இ – ஆகிய இரண்டு உயிர் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தும் கவிதை இதோ …..

போஜ மஹாராஜனின் ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-278 நூலிலிருந்து எடுக்கப்பட்டது .

க்ஷிதி ஸ்திதி மிதி க்ஷிப்தி விதிவின்நிதி ஸித்தி லிட்

மம த்ரயக்ஷ  நமத்ரக்ஷ  ஹர ஸ்மர ஹர  ஸ்மர

–ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-278

பொருள்

ஓ மூன்று கண்களை உடைய சிவ பெருமானே , உலக நிலையை  அறிந்தவனே , உலகத்தை அளப்பவனே , அழிப்பவனே , அஷ்டமா சித்திகளையும் , குபேரனின் நவநிதிகளையும்  அனுபவிப்போனே ,தக்ஷனையும் காம தேவனையும் கொன்றவனே , ஓ கடவுளே , என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன் 

Xxx

உருகும் த்யுகுரும் யுத்ஸு சுகுசு

உ – என்னும் உயிர் எழுத்தை  மட்டும் பயன்படுத்தும் கவிதை இதோ-

உருகும் த்யுகுரும் யுத்ஸு சுகுசு ஸ்துஷ்டுவுஹு  புரு

லுலுபுஹு புபுஷு முர்த்ஸு  முமு ஹுர்னு  முஹுர் முஹுஹு

–ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-276

பொருள்

போர்க்களத்துப் போனபோது ,வாக்கிற்கு அதி தேவதையான, தேவ குருவான   பிருஹஸ்பதியிடம் தேவர்கள் அடைக்கலம் புகுந்தனர். அவர் உற்சாகத்துடனும் பலத்துடனும் இருக்கவும் மீண்டும் மீண்டும் நினைவு தப்பிவிடாமல் இருக்கவும் தேவர்கள் பிரார்த்தித்தனர்.

இவ்வாறு செயற்கையாகச் சுற்றிவளைத்துக் கவிதை இயற்றினாலும் படிக்கும்போது வரும் ஆனந்தம் அளப்பரியது

–சுபம்–

Tags- விந்தைக் கவிதைகள், ஸரஸ்வதீ கண்டாபரணம், மாக கவி,  சிசுபால வதம்

IMPORTANCE OF 12 TAMIL MONTHS- PART 4 (Post No.11,253)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,253

Date uploaded in London – 10 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

7.AIPPASI

AIPPASI is the seventh month in Tamil calendar. When sun enters zodiac sign Tulaa Raasi (Libra), Aippai begins.

Deepavali (also  written as Diwali) is the most important festival of Hindus. Millions of businessmen and vendors wait for this month to introduce their new products. Temples become more attractive and crowd pulling. Diwali in Kasi is the most important festival where the Golden Annapurani (annapoorani) is taken in procession. This most valuable idol is kept in the vault of Reserve Bank of India at other times.

In Tamil, there is a proverb about the heavy rains that pour down during this month and next Karthikai month:

Aippasi Kaarthikai Adai Mazaik Kaalam is the proverb. ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம்

Newly married couple celebrate it as Thalai/Head Deepavali which means the first or Most important Diwali. In laws give them big gifts.

Next day of Deepavali is new moon day Amavasai. Tamils celebrate it only for two days: Diwali day and the previous night. But in North India it is celebrated for five days. (two are three articles are in this blog about the significance of Diwali, Sweets and Fire crackers).

Tamils fire sparklers and fire crackers for at least two days. Every child remembers it through out his or her life. Nowadays anti Hindus deliberately spoil the enthusiasm by talking against fire crackers.  Diwali is not the culprit for environmental pollution. More environmental damage is caused by other factors including smoking habit.

Diwali is celebrated in the British Parliament by Hindus and a function held in European parliament as well. In the United states, some states have declared this month as the cultural month.

Several countries issue new postage stamps. Sale of Gold jewellery increase during this period. In big cities there will be long queues in front of shops selling Sweets and Firecrackers. Shops selling clothes do roaring business for a month during Diwali season.

New year starts for some people; Kethaara Gowri Vratham is observed by some people.

In short, the month Aippasi has economic, cultural and religious significance.

North Indians arrange row of lights during Diwali, but Tamils do the same thing during the next month Karthikai (kaartigai)

Skantha Shashti

Shasti means sixth day. Skanda shasti that comes after Diwali is considered the most important festival by devotees of Lord Muruga/Skanda. They observe strict fasting until the day of Sura Samhara (Soora Samhaaram) . That is the day lord destroys the demon Soora.

Most of  Sri Lankan Tamils observe fasting during this period.

Xxx

8.KARTHIKAI (pronounced kaarthigai)

This is the eighth Tamil month. This month begins when the sun enters the zodiacal sign Vrichchika (Scorpio).

Purnima happens on the day the moon appears with Krittika Nakshatra/star. So the month is called Kaarthigai. It is mentioned even in 2000 year old Sangam festival

All the Tamil houses light lamps, particularly made up of burnt clay and arrange them in different parts of the house. Temples also do this. The biggest festival of Kartikai is Annaamalai Deepam in Tiruvannaamalai of Tamil Nadu. It attracts over million people. The big Deepa/lamp is lighted over the hill in the town. People go round the hill and worship Lord Shiva in the Arunaachaleswar Temple (there are three articles in the blog about the festival and the temple).

Tiruvannamalai is considered holy because of the Ashrams and Samadhis (pronounced Aaashramam and Samaadhi) of Ramana Maharishi, Seshadri Swamigal, Yogi Ramsurathkumar and Arunagirinathar. The last of the four saints is associated with the temple.

Tamils light lamps for at least three days; the previous day is Bharani Deepa. Rohini star comes after Kartikai or Krittikaa.

For children it is a memorable period. Every temple make bonfire in front of the temple. Children gather there and throw salt and fireworks in the fire. So it is the Bonfire Night (Sokkappanai in Tamil) for Tamil Hindus. Special dishes are made with fried rice, jaggery and sweet pan cakes (Pori Urundai and Appam in Tamil)

The science behind the bonfire is to kill all the insects that damage the crops. Grasshoppers and other insects fall in the fire on its own. You don’t go and kill them.

All the left over fire works are used during this festival.

As I mentioned earlier the North East Monsoon becomes very active in this month.

Since Kaarthigai stars (Pleiades constellation) are associated with the birth of Lord Murugan/Skanda/Kaartikeya, devotees celebrate all Krtittikais.

To be continued……………………….Tags- Tamil months, Aippasi, Karthigai, Krittika, Diwali, Skanda shasti, Muruga

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 4 பாடல்கள் : ஒரு பார்வை! (Post No.11,252)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,252

Date uploaded in London – –    10 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 4 பாடல்கள் : ஒரு பார்வை!

ச.நாகராஜன்

புண்ணிய தேசமான பாரதத்தைப் பற்றி இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு அனைத்தையும் 19 பாடல்களில் கூறி முடித்து விட்ட மஹாகவி பாரதியாரின் பெருமையை என்னென்று சொல்வது?

எளிய, கூரிய, ஆழ்ந்த, வீரிய, அர்த்தமுடைய, இனிய சொற்கள்.

அவை தருகின்ற சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களோ பல்லாயிரம்!

ஆம் இந்த சொற்களின் விளக்கத்தைப் பார்க்க புராண, இதிஹாஸம் தரும் விளக்கக் கருத்துக்கள் பல்லாயிரம்.

பாரதம் பற்றிய அவரது திரண்ட ஞானத்தை சுருக்கமாக இங்கு அவரது நான்கு பாடல்களில் பார்ப்போம்.

**

வந்தே மாதரம் பாடல்!

1) வந்தே மாதரம் என்று சொல்லி வணங்குவோம். வந்தே மாதரம் என்றால் எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் என்பது பொருள்.

2) இந்த தேசத்தில் ஜென்மம் எய்துவது உயர்வு.

3) இங்கு ஜென்மம் எய்திய எவருடைய ஜாதியையும், மதத்தையும் பார்க்க மாட்டோம். வேதியரோ, ஈனப் பறையரோ, வேறு ஒருவரோ யாரானாலும் சரி, அனைவரும் சமமே.

4) இங்கு பிறந்தவர் அனைவரும் இந்தியரே. சீனத்தவரோ அல்லது தீங்கிழைக்கும் பிற தேசத்தவராகவோ மாட்டார்கள்.

5) ஒன்று பட்டு வாழ்வோம். இதை நன்கு தேர்வோம். இதுவே ஞானம். இது வந்து விட்டால் வேறெதுவும் வேண்டாம்.

6)  வாழ்வோ, தாழ்வோ தேசத்தில் உள்ள அனைவருக்கும் அது பொது. வீழ்ந்தால் அனைவரும் வீழ்வோம்; வாழ்ந்தால் அனைவரும் வாழ்வோம்.

7) அடிமைத் தொழில் செய்த, அந்த வெட்கப்படும் நாள்கள் கழிந்தன. அந்த அடிமைத் தோழிலை ‘தூ’ என்று தள்ளுவோம்.

ஜய வந்தே மாதரம் பாடல்

8) பாரதத்திற்கு வெற்றி! வெற்றி!. பத்து முறை வெற்றியைக் கூறுவோம் இப்படி:

ஜயஜய பாரத!

9) இது ஆரிய பூமி. நாரியர், நர சூரியர் இங்கு வாழ்கின்றனர். அவர் சொல்லும் வீரிய வாசகம் வந்தே மாதரம்.

10) நொந்தாலும் சரி, வெந்தாலும் சரி உவந்து நம் தேசத்தவர் சொல்வது வந்தே மாதரம்.

11) உயிரே போகட்டும் அல்லது வெற்றி உண்டாகட்டும். ஒன்றாகவே நிற்போம். வலி குன்றாமல் ஓதுவது வந்தே மாதரம் தான்!

நாட்டு வணக்கம் பாடல்

12) இந்த நாட்டிலே தான் எம் தந்தையரும் தாயரும் மகிழ்ந்து குலாவினர்.

13) அவர்களுக்கும் முந்தையராக இருந்த எம் முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழம் பெரும் நாடும் இதுவே தான்.

14) அவர்களது சிந்தையில் சிறப்பான பல்லாயிரம் எண்ணங்கள் தோன்றி வளர்ந்து சிறந்ததும் இந்த நாட்டிலே தான். இதை வணக்கம் செய்து கூறுவேன் வந்தே மாதரம் என்று!

15) அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து எங்களை வளர்த்து அருள் புரிந்தது இந்த நாடே.

16) எங்களைப் பெற்ற அன்னையர் தமது மழலைச் சொற்களால் மகிழ்வித்ததும் இந்த நாட்டிலே தான்!

17) அவர்கள் கன்னிப் பருவம் எய்தி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்த நாட்டிலே தான்!

18) பொன் போன்று மின்னும் அவர் உடல்கள். அந்த உடல் இன்புற விளையாடி நீரில் ஆடி, பின்னர் மகிழ்ச்சியுடன் இல்லம் ஏகுவது அவர் தம் வழக்கம். அது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது இந்த நாட்டிலே தான்!

19) மங்கையராய் அவர் மணம் முடித்து இல்லறத்தை நல்லறமாக வளர்த்ததும் இந்த நாட்டிலே தான்!

20) அவர் பெற்ற தங்கக் குழந்தைகளுக்கு இன்னமுதை ஊட்டி அவர்களைத் தழுவி அவர்கள் கொஞ்சியதும் இந்த நாட்டிலே தான்!

21) மக்கள் புகழ் ஓங்கி வளர, அது வளர்வதற்குக் காரணமாக இருந்த கோவில்கள் தேசமெங்கும் சூழ்ந்து இருந்தது இந்த நாட்டிலே தான்.

22) பின்னர் காலம் செல்லச் செல்ல அவர்கள் தம் உயிர் துறக்க அவரது உடல்களின் பூந்துகள் ஆர்ந்ததும் இந்த நாட்டிலே தான். இப்படிப்பட்ட அரும் நாட்டை வந்தே மாதரம் என்று சொல்லி வணங்க மாட்டேனா, என்ன?!

பாரத நாடு பாடல்

23) உலகில் ஏராளமான தேசங்கள் உண்டு. ஆனால் பாருக்குள்ளே நல்ல நாடு எது என்று கேட்டால் அது எங்கள் பாரத நாடு தான்!

24) ஞானத்திலே உயர் நாடு.

25) பர மோனத்திலே உயர் நாடு.

26) உயர் மானத்திலே உயர் நாடு.

27) அன்னதானத்திலே உயர் நாடு.

28) கானத்திலே உயர் நாடு,

29) அமுதாக நிறைந்த கவிதையிலே உயர் நாடு.

30) தீரத்திலே உயர் நாடு.

31) படை வீரத்திலே உயர் நாடு.

32) நெஞ்சில் ஈரத்திலும் உபகாரத்திலும் உயர் நாடு.

33) சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு தருவதிலே உயர் நாடு.

34) நன்மை செய்வதில் உயர் நாடு

35) உடல் வன்மையிலே உயர் நாடு

36) செல்வப் பன்மையிலே உயர் நாடு.

37) மறத் தன்மையிலே உயர் நாடு.

38) பொன் மயிலாகத் திகழ்பவர்கள் இந்த தேசத்தின் அழகிய மகளிர். அவர்களது கற்பு உயர்ந்தது. அந்தப் புகழினில் உயர் நாடு இது.

39) ஆக்கம் அதாவது செல்வத்திலே உயர் நாடு.

40) தொழில் ஊக்கம் அதிகம் கொண்டதில் உயர் நாடு.

41) புய வீக்கம் – தோள் வலிமையில் உயர் நாடு.

42) எந்த நோக்கத்தை எடுத்துக் கொண்டாலும் உயர்ந்த நோக்கம் மட்டுமே உண்டு இங்கு. அந்த உயர் நோக்கத்தில் உயர் நாடு.

43) இங்குள்ள மல்லர்கள் அனைவரும் தேசத்தைக் காக்க திறமும் ஆர்வமும் கொண்டவர்கள்.

அவர்கள் கடல் போல இங்கு உள்ளனர். அந்த சேனைக் கடலில் உயர் நாடு.

44) வண்மையிலே உயர் நாடு.

45) உளத் திண்மையிலே உயர் நாடு.

46) மனத் தண்மையிலே குளிர்ந்த உள்ளத்திலே உயர் நாடு.

47) நுட்பமான மதி கொண்டவர்கள் இங்குள்ளோர். அந்த மதி நுண்மையிலே உயர் நாடு.

48) ஸத்தியமே இந்த நாட்டோருக்கு உயிர். அந்த உண்மையிலே தவறாத புலவர் உணர்வினிலே உயர் நாடு.

49) யாகத்திலே உயர் நாடு

50) தவத்தோர் உள்ள நாடு. ஆக தவ வேகத்திலே உயர் நாடு.

51) தனி யோகத்திலே உயர் நாடு.

52) போகங்களைக் கொண்டு சிறக்க வாழ்பவர்கள் பாரத மக்கள். பல போகத்திலே உயர் நாடு.

53) ஆகத்திலே உயர் நாடு

54) தெய்வ பக்தியே இங்குள்ளோரின் உயிர் மூச்சு. தெய்வ பக்தி கொண்டார் தம் அருளினிலே உயர் நாடு.

55) இயற்கை வளம் அற்புதமாகக் கொண்ட நாடு இது. ஆற்றினிலே,

சுனை ஊற்றினிலே, தென்றல் காற்றினிலே, மலைப் பேற்றினிலே, ஏற்றினிலே, பயன் தந்திடும் காலி இனத்தினிலே உயர் நாடு.

56) இங்குள்ள இயற்கை வளத்தின் சிறப்பே சிறப்பு.

தோட்டத்திலே, மரக் கூட்டத்திலே, கனி ஈட்டத்திலே, பயிர் ஊட்டத்திலே, தேட்டத்திலே அடங்காத நதியின் சிறப்பினிலே உயர் நாடு.

***

19 பாடல்களில் நான்கு பாடல்களின் கருத்துக்கள் இவை.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு பேறுகளையும் தரும் உயர் நாடு என்பதை எப்படிப்பட்ட சொற்களால் விவரித்து விட்டார் மஹாகவி!

அற்புதம், அற்புதமே! இன்னும் இருக்கின்றன 15 பாடல்கள்! அவற்றையும் படித்தால் மெய் சிலிர்ப்போம். உத்வேகம் பெறுவோம்.

அன்னையை எந்த நாளும் போற்றுவோம்.

வாழிய பாரதம்! வாழ்க மஹாகவி பாரதியாரின் திரு நாமம்!

**

புத்தக அறிமுகம் – 52

அறிவியல் துளிகள் – பாகம் – 12

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

287. எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!

288. விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!

289. விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்!

290. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 1

291. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 2

292. ப்ளாக் ஹோல் மர்மம்!

293.உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்!

294. விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்!

295. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 1

296. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 2

297. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 3

298. அறிவியலின் ‘ஹார்ட் ப்ராப்ளம்’!

299. சிறந்த படைப்பாளியாக ஒரு அருமையான கண்டுபிடிப்பு!

300. அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!

301. ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!

302. கடைசியில் என்ன சொன்னார்கள்?!

303.விண்வெளியில் ‘மூழ்க’ இருந்த வீரர்!

304. 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

305. மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை!

306. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1

307.புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2

308. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

309. மர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி!

310 சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

311. ஜப்பானில் கற்கலாம்! வா!

312. கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பனிரெண்டாம் பாகம் – 287 முதல் 312 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 

19/8/2016 முதல் 10/2/2017 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்தபோது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                           ச.நாகராஜன்

31-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

தாததோ துத்த துத்தாதீ தாததோ தூததீத தோ-கிருஷ்ணன் கவிதை (Post No.11,251)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,251

Date uploaded in London – 9 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஸம்ஸ்க்ருதம் விந்தைகள் நிறைந்த மொழி. தமிழைத் தவிர, வேறு எந்த மொழியிலும் செய்ய முடியாத விந்தைகளைச் செய்ய வல்ல மொழி  . பிற்காலத்து தமிழில் இத்தகு விந்தைக் கவிதைகள் உண்டு. ஆனால் சம்ஸ்க்ருத விற்பன்னர்கள் அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அலங்காரங்களைச் செய்தனர். இதோ மேலும் சில கவிதைகள்

மெய் எழுத்துக்களில் ஒரே எழுத்தை –  வர்க்கத்தை — மட்டும் பயன்படுத்திய கவிதையை ‘மாக’ (MAAGA) என்னும் புலவர் இயற்றிய சிசுபாலவதத்தில் (Shisupaalavadha)  காணலாம் :

தாததோ துத்த துத்தாதீ தாததோ தூததீத தோ

துத்தாதம் தததே துத்தே தாதாததததோ ததஹ

சிசுபாலவதம் 19-114

மாக என்னும் புலவர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ; குஜராத் பகுதியைச் சேர்ந்தவர்.

பொருள்

கிருஷ்ணன் , எல்லா வரங்களையும் தருபவன்; கள்ள மனம் படைத்தோருக்கு கசையடி கொடுப்பவன்.நம்மைத் தூய்மைப் படுத்துபவன். மற்றவர்களுக்குத் துன்பம் தருவோரைத் துடைத்தழிக்கும் புஜங்களை உடையோன். எதிரி மீது வலி ஏற்படுத்தும் அம்பினை எய்தான்.

XXX

ஸம்ஸ்க்ருதத்தில் 33 மெய்யெழுத்துக்கள் இருக்கின்றன.அவைகளை அதே வரிசையில் வைத்து உருவாக்கிய கவிதையை போஜனின் சரஸ்வதி கண்டாபரணம்  என்னும் நூல் தருகிறது:

கஹ ககெள காங்சிச் செளஜா ஜாஞ்ஞோ  அடேளடீ டடண்டணஹ 

ததோததீன் பFபபாபிர்  மயோ அரில்வாசிஷாம்  ஸஹக

பொருள்

பறவைகளை நேசிக்கிறானே, யார் அவன்? அறிவில் சிறந்தவன் ; மற்றவர்களின் பலத்தைத் திருடுவதில் நிபுணன் ; எதிரிகளை அழி ப்பவனின் தலைவன்; உறுதியுடையோன்; பயமற்றவன் ; கடலை நிரப்பியவன்? அவன்தான் மயன் என்னும் அரசன். எதிரிகளை அழிக்கும் வரங்களின் பெட்டகம்/கிடங்கு.

XXXX

சம்ஸ்க்ருத மொழியின் 33 மெய்யெழுத்துக்களில் — த , வ , ந/ன  — ஆகிய மூன்றை மட்டும் பயன்படுத்திய கவிதை :

தேவானாம் நந்தனோ தேவோ நோதனோ வேத நிந்தினாம்

திவம் துதாவ நாதேன  தானே தானவ நந்தினஹ

—காவ்ய தர்ச , புலவர் தண்டின் 3-93; போஜன் நூலிலும் உளது.

தண்டின் ஆறாம் நூற்றாண்டுக் கவிஞர்

பொருள்

கடவுள் (விஷ்ணு) வேதத்தை நிந்திப்பவர்களுக்கு துயரத்தையும் ஏனைய தேவர்களுக்கு இன்பத்தையும் அளிக்கிறார்.ஒரு அசுரனைக் கொன்றபோது (ஹிரண்யகசிபு) வானம் முழுதும் சப்தம் நிரம்பியது .

சம்ஸ்க்ருத மொழிக்கு இத்தகைய கவிதைகள் அழகு சேர்த்தாலும்  இந்தப் புலவர்களை ‘அதம கவி’கள் என்றே அழைப்பர். அதாவது தாழ்வான நிலையில் உள்ளோர். காளிதாசன் , வால்மீகி , வியாசர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் அல்ல. ஏனெனில் இவர்கள் செயற்கை முறையில் கவிகள் இயற்றி சொற் சிலம்பம் ஆடுபவர்கள் என்பது சான்றோர் துணிபு .

—SUBHAM—

 Tags- தாததோ துத்த, காவ்ய தர்ச , புலவர் தண்டின், சிசுபாலவதம் ,

மாக

IMPORTANCE OF 12 TAMIL MONTHS……. PART 3 (Post No.11,250)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,250

Date uploaded in London – 9 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

6.PURATTAASI- Garba and Golu; Dasarah  and Durga Puja

When I was a school student in Madurai, Tamil Nadu, I used to hear VENKATA RAMANAAA GOVINDAA every Saturday morning at my door step. Immediately my mother would rush to the door and deposit some rice  in their bowl of who recited that holy slogan. Even my school mates came with a big ‘Naamam’ as tilak on their foreheads with ‘begging bowls’. Actually they are not ‘beggars’ roaming for food. They make a vow to offer it to Lord Venkata Achala Pathi (Venkataachalapathi) at Tirupati (Baalaaji Temple). Decent people make a vow to go to door to door and ‘beg’ and offer it to God, because the God cured their disease or solved their problems. So no Tamil could forget the Tamil month Purattaasi.

Naamam is a three vertical line symbol that Vishnu worshippers wear.  The middle line in  three lines will be in red colour, other two being white lines.

Shiva worshippers wear three horizontal lines of white ash called Vibhuuti. It is a familiar scene in Tamil Nadu.

When sun enters Kanyaa Raasi (kanni in Tamil standing for Zodiac sign Virgin), the month Purattaasi begins.

Brahmins consider this month sacred because of the Mahaalaya  (Maalaya) Paksham. It is a period of 15 days (paksha=fortnight) dedicated to the ancestors ,departed souls. Orthodox Brahmins follow strict dietary rules. They don’t eat outside; they don’t eat garlic and onion.

About garlic and Onion…………….

About 100 years ago, Brahmins did not use garlic and onion at all. Their food was so tasty without these items. All non- brahmins used to enjoy it. Now it is all gone with the wind. Only during ceremonies for departed souls they use the traditional vegetables (not even chillies are used because they are from South America. They use only black pepper for the spicy taste).

Nowadays in London, only Gujarati Swaminarayan followers and Hare Krishna movement (ISKCON) followers follow non- garlic and non-onion diets. One must visit Hare Krishna restaurants in London and Lisbon. When I went to Lisbon (Capital of Portugal) to take part in the AGM of Hindu Forum of Europe, I  had only that kind of tasty food for three days.

About Maalaya/Mahaalaya Fortnight……..

Those who could not do the oblations for 14 days, they do it on Mahaalaya Amaavaasai (new moon day); in addition to the new moon day, fatherless people do one more on the Thithi/day of their father. That is the day a person’s father departed.

NAVARATRI

Navaratri (Nine Nights of Goddess worship) is the most famous festival of this month. No Hindu can miss it because of the Gujarati Garba dance, Bengali Durga Puja and Tamils Sundal and Golu.

All the Tamil temples have special Alankaara (decorations) for goddesses in the temples; women used to flock to the temples in thousands; temples arrange special musical concerts during the nine days.

Brahmin and Chettiyar families organise Kolu or Golu and distribute different types of Sundal every night. Kolu or Golu is a doll show on step like wooden structures. Women invite other women to their houses and give them gifts like blouse pieces or saris with Kunkum and Turmeric. It happens even in London today. Some temples also do K/Golus.

The last day of the Navaratri is Vijaya Dasami. Little boys and girls go to school for the first time. They do Akshara Abhyaasa (learning letters) on that day. Dasami means Tenth Day (dasaraah). Merchants do Puja to their account books (nowadays computers); workers do Puja to their instruments; so it is called Aayudha Poojaa. Aaayudha means weapons or instruments.

Boys and girls go from house to house and demand Sundal. It is spicy snack made out of boiled pulses. If they are not taken care of, they curse the householders.

They shout “ Bommai Kolu Bakshanam, Veettaip Paaru (ava) Lakshnam. It is like Trick or Treat in Western countries. If the boys and girls, who disguise themselves as ghosts with masks, are not given something, they shout against the householders. In London I Used to buy chocolates and biscuits for that Halloween Night.

Bommai Kolu is the doll show. Lakshanam is beauty; but the disappointed boys and girls say Ava Lakshanam. It means Ugly. If you are not able to give us Bakshanam/Sundal, your house looks ugly is the meaning of ‘Bommai Kolu Bakshanam, Veettaip Paaru (ava) Lakshnam’.

In Mysuru (Karnataka) famous Dasarah festival happens. Scores of elephants march with golden Howdah.

When I was in Madurai, I worked for the newspaper Dinamani. In those days Ayudha Puja (poojaa) was a declared holiday for workers. So, newspaper would come out the next day. The gigantic Rotary Machines, Mono and Lino teleprinters will be cleaned and decorated meticulously. It happened in big factories as well (Madura Coats and TVS in Madurai). Workers get big packets of food and Sundal (spicy snacks). Machines and instruments are worshipped, and Arti shown to them.

Music and dance students visit their Gurus (teachers) and give them Coconut, Banana and Money, falling at their feet (Prostration).

London Police Advertisements

Metropolitan police place big advt.s at this time of the year warning Hindus to be extra careful. Thieves use this period to break into houses, because the whole family goes to temple for hours leaving the houses dark. Gold chain snatchings also happen. So the police advise Hindus to leave the lights on and take extra care not to expose golden jewellery. For women it is a period of Showing off!

Tamil Hindus don’t do auspicious things like Marriages, Grha Pravesam etc during this month.

For a Hindu Purattaasi is holy because of this Navaratri which begins the next day of Amaavaasyai (new moon day). This is a rainy period. South West monsoon is disappearing and North East monsoon is seen in the horizon.

English poet Percy Bysshe Shelley said

O, wind, if winter comes, can spring be far behind?

Hindus say

O ye Rains, if Navaratri comes, can Deepaavali (Diwali) be far behind?

Shop owners clear their old stock and get newer things and start advertising for Diwali which falls in the next month Aippasi.

To be continued…………………………

 tags- Tamil Months-3, Purattasi, Navaratri, Mahalaya, Amavasai

அறிவியல் அறிஞர் வாழ்வில்…4 (Post No.11,249)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,249

Date uploaded in London – –    9  SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   4

ச.நாகராஜன்

4

தொண்டையில் தவளை!

பிரபல விஞ்ஞானி சர் ஐஸக் நியூட்டன் எழுதிய ‘தியானம்’ பற்றிய அவரது கைபிரதியை ஒருவர் ஏலத்தில் எடுத்தார். நியூட்டனின் இந்த கைபிரதியானது 1,08,083 டாலர்களுக்கு வாங்கப்பட்டது. ப்ளேக்கிற்கு பயந்து சுமார் இரண்டு வருடங்கள் அவர் தனிமையில் இருந்து   பின்னர் கேம்பிரிட்ஜுக்கு அவர் திரும்பி வந்தவுடன் எழுதியது இந்த நூல். 2020இல், கொரானா வந்தது அல்லவா, அது போன்ற காலத்தில் இது அவ்வளவாக உபயோகப்படக் கூடிய நூல் என்றாலும் கூட இதில் தொண்டை கரகரப்பையும் அதனால் ஏற்படும் தொற்று வியாதியையும் போக்க வல்ல ஒரு மருந்து பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். தவளையையும் தவளையைப் பொடியாக்கிய தவளை பவுடரையும் கலந்த ஒரு கலவை மருந்து அது.

5

பயிற்சியாளர் கண்டுபிடித்த புதிய கிரகம்!

உல்ஃப் குக்கியர் (Wolf Cukier) என்ற 17 வயது இளைஞன் நியூயார்க் நகரைச் சேர்ந்தவன். அவன் மேரிலாண்டில் உள்ள நாஸாவில் காடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் (Goddard Space Flight Center) கோடைகாலத்தில் கிடைக்கும் வேலை மூலம் பயிற்சியாளராகச் சேர்ந்தான்.

என்ன நடந்தது தெரியுமா? அவன் ஒரு புதிய கிரகத்தையே கண்டுபிடித்து விட்டான். அவன் வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குள் இதை அவன் சாதித்தது இன்னும் பெரிய் ஆச்சரியம். நாஸாவின் தரவுகளிலிருந்து நீண்ட நெடுந்தொலைவில் உள்ள சூரியன்களிடமிருந்து ஒரு ஒளி வருவதை அவன் பார்த்தான். இந்த ஒளி வரும் ஒரு ஒழுங்கு முறை (pattern) அவற்றிற்கு முன்னால் ஏதோ ஒன்று நகர்ந்து வருவதாக அவனுக்குத் தோன்றியது. அந்தப் பொருளை ஆராய்ந்து அவன் கண்டு பிடித்தது டிஓஐ 1338 பி (TOI 1338b) என்ற கிரகம் ஆகும். இது சனி கிரகத்தை விட  மிகப் பெரியது.

இது இருக்கும் இடம் பூமியிலிருந்து 13000 ஒளிவருட தூரம் ஆகும்.

ஒரு ஒளி வருடம் என்பது 5.88 ட்ரில்லியன் மைல்  (5.88×1012 mi). அல்லது 9.46 ட்ரில்லியன் கிலோ மீட்டர்  (9.46×1012 km)

ஆகும்.

 6

விண்வெளி வீரர் ஜான் யங் விண்வெளிக்குக் கொண்டு சென்ற சேண்ட்விச்!

அமெரிக்காவின் ஜெமினி திட்டம் உலகறிந்த ஒன்றாகும், சந்திரனை நோக்கி மனிதனின் பயணம் அமைய அந்தத் திட்டம் சாதித்த சாதனைகள் பல.

முதல் விண்வெளி நடையை அமெரிக்கர் செய்து காட்டியது அதில் தான். இரண்டு விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்ததும் அதில் தான்! முதன் முதலாக கார்ன் பீஃப் சேண்ட்விச் (corned beef sandwich) விண்வெளிக்கு அனுப்பப்பட்டதும் அதில் தான்.

ஜெமினி-3இல் பயணப்பட்டார் விண்வெளி வீரர் ஜான் யங். ஒரு சின்ன சேண்ட்விச் துண்டை தனது பையில் போட்டுக் கொண்டார் – விண்ணில் செல்லும் போது கொறித்துப் பார்க்கலாமே என்று!

விண்கலம் சுற்றத் தொடங்கியது. ஜான் யங் ரொட்டித் துண்டை எடுத்தார். தனது பக்கத்தில் அமர்ந்திருந்த வீரரான கஸ் கிரிஸாமுக்கும் (Gus Grissom) ஒரு துண்டைக் கொடுத்தார். இலவசம், இலவசம் தானே! ஆவலுடன் அதை வாங்கிக் கொண்டார் கிரிஸாம். அதை தனது பையில் வைக்கப் போகும் போது விண்கலம் முழுவதும் ரொட்டித் துகள்கள் பறக்க ஆரம்பித்தன. எங்கு பார்த்தாலும் ரொட்டித் துகள்கள்!

விண்வெளி வீரர்களுக்கு நாஸா அளிக்கும் உணவு ஒரு விசேஷ வகையிலானது. அதில் மேலே ஒரு பூச்சு தடவப்பட்டிருக்கும். அந்த உணவு வகையிலிருந்து எந்த ஒரு துகளும் வெளியே வர முடியாது.

ஆனால் ரொட்டித் துகள்கள் வெளியில் வந்து விண்கலத்தில் சுற்ற ஆரம்பித்தால் அதில் உள்ள எலக்ட்ரிக் பேனல் எனப்படும் மின் தகடுகளின் பின்னால் படிந்து அவற்றைச் செயல் இழக்கச் செய்யும். விண்கலம் இனி பறந்த மாதிரி தான்! பெரும் விபத்து நேரும்; வீரர்கள் உயிரிழக்க நேரிடும்!

நாஸா இது போன்ற ‘விளையாட்டுக்களை’ எல்லாம் இனி விண்வெளி வீரர்கள் செய்யக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.

அமெரிக்க காங்கிரஸும் சும்மா இல்லை. பல லட்சம் டாலர்களை செலவழித்து விண்கலம் அமைத்து, பயிற்சி தந்து விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். இந்தப் பணம் அமெரிக்கர்கள் தரும் வரியின் மூலமாக வந்தது. ஆகவே இது போல் இனி நேரக் கூடாது என்று எச்சரிக்கையை விடுத்தது.

உடனே நாஸா அதிகாரிகள், “இது போல இனி மேல் ஒரு போதும் நடக்காது. உரிய நடவடிக்கைகளை எடுத்து விட்டோம். ரொட்டித் துகள்கள் இனி விண்கலத்தினுள் பறக்காது” என்று அறிக்கை விட்டனர்.

அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்!

xxx

புத்தக அறிமுகம் – 51

அறிவியல் துளிகள் – பாகம் – 11

பொருளடக்கம்

என்னுரை 

அத்தியாயங்கள்

261) பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

262) செவ்வாய் குடியிருப்பு வேண்டாம்! கிண்டலான பரபரப்புக் 

    கட்டுரை!

263) உருகும் பனிப்பாறைகள், உயரும் உஷ்ணநிலை – எச்சரிக்கும்

    விஞ்ஞானிகள்!

264) நாம் இனி ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்!

265) வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?

266) சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

267) சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

268) சூரிய கிரகணமும் மன்னர்கள் மரணமும்!

269) இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?

270) 2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த

     மூளை அறுவை சிகிச்சை!

271) 103வது இந்திய அறிவிய மாநாட்டில் சிவபெருமான்!

272) மன்னிக்க வேண்டுகிறேன்!

273) சந்திரனில் ஒரு கிராமம்!

274) அதிசய யோகி குர்ட்ஜியெஃப்! – 1

275) அதிசய யோகி குர்ட்ஜியெஃப்! – 2

276) அதிசய பாட்ச் மலர் மருந்துகள்

277) விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்!

278) விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

279) உலகின் புரட்சிகரமான மாத்திரை!

280) சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

281) ஆட்டம் போடும் சீனாவின் விண்கலம் விழப்போகும்

    விபரீதம்!

282) குழந்தைகள் விளையாடும் வீடியோ மூளை விளையாட்டு

    ஆபத்தானதா?

283) உப்பு நீரால் ஓடும் கார்!

284) உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

285) டர்பாவின் அதிசய ஆய்வுகள்!

286) டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் –  பதினொன்றாம் பாகம் – 261 முதல் 286 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 19/2/2016 முதல் 12/8/2016 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                          ச.நாகராஜன்

23-3-2022

IMPORTANCE OF 12 TAMIL MONTHS…… PART 2 (Post No.11,248)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,248

Date uploaded in London – 8 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 3. Ani

The third Tamil Month is Ani (aani). This is the time when sun enters the third zodiac sign Mithunam. It is Gemini. But one should not get confused with the numerological date for these months. For Tamils it is the first day of the month.

The first day of every Tamil month roughly corresponds to 14th or 15th (even 16, 17th) of an English month. Tamil months Aaani and Aavani have 32 days. Tamil months Karthikai and Thai have 29 days.

Ani Uththiram Star day is celebrated as Ani Thirumanjanam in Shiva temples. Chidambaram Nataraja temple has Chariot festival during this time. Thiru Manjanam means special bathing/Abhisheka or holy bathing of God.

Manikavasagar’s Star day (thiru nakshaththram) falls in this month. So Saivites (Shiva worshippers) consider this month very important.

xxx

4. Adi

Adi (aadi) is the fourth month in Tamil calendar. Sun enters fourth zodiac sign Kataka Rasi (raasi).

This is very important for villagers. Festivals and Pujas (worship) of Grama Devatas (graama devataas are local village deities) are held during this month. Villagers give free gruel (Kanji or Kuuz) to all devotees. Fire Walking (Thee Mithi) events are held in many village temples. People who follow Vrata (vow) walk on burning wood or charcoal.

Adi Amavasyai (aadi ammaavaasai) is very important for all communities. Brahmins are supposed to pay obeisance for departed souls at least 96 times in a year. But non brahmins do it only twice a year during Dakshinayana (southward march of sun) and Uttarayana (northward march of sun).

The Dakshinaayana Punya Kaala happens in this month. Millions of Hindus go to rivers and coasts to offer oblations to departed souls on Aadi New moon day..

In addition to Aadi Ammavaasai, Aadi Kriththikai (Kartika star day) is important for devotees of  Lord Muruga (Skanda or Kartikeya in Sanskrit).

Varalakshmi Vratam is important for all Hindu women.

Tamil saint Sundaramurthy Swamikal Star is celebrated  in this month.

Aadip Pooram (Adi Puram) in Srivilliputhur Andal temple and Aadi Tapas in Sankarankovil Gomathy Amman temple attract thousands of devotees.

Tamil proverb is Aadip Pattam Thedi Vithai (Start sowing in the month of Aadi). So farmers start cultivation. Aadi 18 is celebrated on the river banks. On the 18th day of this month river Kaveri gets new floods. So the villagers go to the river banks and do pujas and organise feasts with colourful rice (Chitraannam) and Pappad. Children pull toy carts towards the river banks.

(As children we also did it on the banks of river Vaigai in Madurai. Because of the new dam across Vaigai and sand mining, the river became dirty. Then we did it in the terrace of the house. All Tamil houses had open terraces in those times. We use it for drying clothes and playing games)

Tamil Proverbs- ஆடிப் பட்டம் தேடி விதை ,ஆடிக்  காற்றில் அம்மியும் பறக்கும்

The windy season begins in Aadi in Tamil Nadu (naadu). So the saying is Even an Ammi ( granite Grinding Stone in the kitchen) will fly in the Aadi wind.

Aaadikku Azaiththal (Inviting Couple for a Feast) is an important social event in Tamil families. It is not just an invitation for a feast. The in laws must give gold jewels and clothes to the couple.

Xxx

5.Avani

Aaavani is Sravana. Sun enters the fifth zodiac sign Simha Rasi (Simma raasi). Many festivals fall in this month. Ganesh Chaturthy (Pillayaar Chaturthy) is celebrated by all Hindus. For Malayaalees (Keralites), Onam festival is important.

For Brahmins the full moon day of this month is important. They change their sacred thread (Poonool/Puunuul) on the day. (Sometimes it falls in Aadi like in 2022). Brahmins renew their Vedic study on that day. It is also called Upaakarma or Aaavani Avittam (Sravishtaa Nakshatra day)

Rakshaa Bandhan is celebrated on the same Purnima day (Full moon day).

Marriages are held in this month

Krishna Jayanthi or Janmashtami is celebrated by all Hindus. Big festivals are organised in Vaishnavite (Vishnu worshippers) temples.

Tamil proverb is ‘Vattam Kalinja Ettaam Naal Kittan Pirappu’ (Eight days after Avani Avittam (vattam) is Krishna’s (Kittan) birthday)

The Mula (moola) star day is called Aavani Muulam. Shiva temples (Madurai Meenakshi Sundareswarar Temple) hold many local festivals.

Kalki Jayanthi, Vaamana Jayanthi,Anantha Vratam, Uma Maheswari Vratam are also celebrated.

Aavani has 32 days. In English calendar see only 31 days as the highest number.

Tamil saying-

வட்டம் கழிஞ்ச எட்டாம் நாள் கிட்டன் பிறப்பு 

To be continued………………………..

 tags- Tamil months, Ani, Adi, Avani, festivals

வரலாற்றில் சரியான தருணத்தில் ஒரு பாடம்! – 2 (Post.11,247)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,247

Date uploaded in London – –    8 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வரலாற்றில் சரியான தருணத்தில் ஒரு பாடம்! – 2

ச.நாகராஜன் 

7.  பெயரளவுக்கே இருந்தாலும் கூட இன்னும் இங்கிலாந்து முடியாட்சி அரசியல் சட்டத்தையே கொண்டிருக்கிறது; காலனி ஆதிக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளைக் கொளையடித்த பிரபுத்வ குடும்பங்கள் அங்கு இன்னும் தலை வணங்கி மதிக்கப்படுகின்றவையாக உள்ளன. மஹாராணி தான் அரசாங்கத் தலைவர். அதே போலத் தான் சர்ச்சும். சர்ச் தான் இங்கிலாந்தின் தேசத்திற்கான அடையாளமாக, மைய அச்சாக உள்ளது.

8. இந்தியா பழையகால ராஜாங்க குடும்பங்களை அங்கீகரிக்கிறது. ஆனால் ஐரோப்பாவோ, உலகின் முக்கால் பங்கை ஆண்ட போது அந்த புகழ்வாய்ந்த சாம்ராஜ்யத்தின் நினைவை கௌரவப்படுத்தும் விதமாக 12 முடியாட்சிகளைக் கொண்டுள்ளது. ஆனால் பி.பி.சி.க்கோ இங்கிலாந்து முடியாட்சி ஒரு முழு ஜனநாயகம் தான்; ஆனால் இந்தியாவோ தேர்தலால் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சி ஆகும்!

9. தேசீய கீதத்தை எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்தின் தேசீய கீதம் 11 இடங்களில் ராணியைக் குறிப்பிடுகிறது; கடவுளைப் பிரார்த்தித்து அவருக்கு அரசியல் வெற்றிகளைப் பெற உதவி செய்ய வேண்டுகிறது.

அடிமைகளைக் கொண்ட ஒருவரால் இயற்றப்பட்ட அமெரிக்காவின் தேசீய கீதம் அடிமைத்தனத்தைப் பற்றிய வரிகளைக் கொண்டுள்ளது; அது இன்னும் அதிலிருந்து அகற்றப்படவில்லை.

இந்தியாவின் தேசீய கீதமோ அனைவரையும் சமமாகக் கருதும் ஒன்று. அதில் மதத்தைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ குறிப்பிடப்படவில்லை அல்லது எந்த ஒருவருக்கும் எதிரான குறிப்பையும் கொண்டிருக்கவில்லை.

10. அமெரிக்கா இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக 2006இல் ஜெர்மனி ஐரோப்பிய அரசியல் சட்டத்தை கிறிஸ்தவ சாயலோடு முன் நிறுத்தியது.

இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் விசேஷமான உறவுகளை சர்ச்சுடன் கொண்டிருக்கின்றன.

பிரான்ஸிலோ, அதன் அரசியல் சட்டமானது, சர்ச்சையும் அரசையும் பிரிக்க முடியாதபடி பல பகுதிகளைக் கொண்டுள்ளது. வடக்கு ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் நாடுகளான நார்டிக் நாடுகள் அரசு தரப்பிலான சர்ச்சுகளை இயக்குகின்றன.

11. அராபிய நாடுகள் இஸ்லாமைக் கொண்டிருக்கும் போது ஐரோப்பா கிறிஸ்தவ அடையாளத்தை நுட்பமாகக் கொண்டு செகுலரிஸம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு வேடம் தரிக்கிறது. கிறிஸ்தவத்திற்கு தார்மீக ஆதரவு தந்து அரசியலில் மேம்பட இயங்க வழியைத் தருகிறது. அது ஆழ்ந்த வெள்ளை இன கிறிஸ்தவ உணர்வைக் கொண்டுள்ளது. அதை உக்ரேனில் சகோரத்துவம் கொண்டாடப்படும் விதத்தில் பார்க்கிறோம்.

12. கிறிஸ்தவ காலனி ஆதிக்க பாரம்பரியத்தை இரட்டை வேடம் தரிக்கும் மேற்கு கொண்டுள்ளது. ஆனால் அதே சமயம் மூன்றாம் உலக நாடுகளை அதன் மதம், அடையாளம், பண்பாட்டை விடச் சொல்லி கட்டளை இடுகிறது. வேண்டுமென்றே கொண்டுள்ள இந்த போலித்தனத்தை தனது வடிவமைப்பாகக் கொண்டுள்ளது தான் அது கூறும் உலக முற்போக்கு கொள்கையை கேலிக்கூத்தாகிறது. இதில் சுயமரியாதை உள்ள எந்த ஒரு நாடும் பங்கு கொள்ள முடியாது.

மேற்கண்ட கருத்துக்களைப் படித்தால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று இருக்கும் ஐரோப்பா நமக்கு உபதேசிக்கும் கேலிக்கூத்தை நினைத்து சிரிக்க வேண்டியிருக்கிறது.

இதை இந்திய மக்களில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ளவில்லை. அனைவருக்கும் இவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். இது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் ஆகும்.

 ஆதாரம்நன்றி கொல்கொத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும்

ட்ரூத் இதழ்-  08-07-2022 TRUTH  Vol 90 No 13

இதை ஆங்கில மூலத்தில் படிக்க விரும்புவோருக்காக ஆங்கிலக் கட்டுரை அப்படியே தரப்படுகிறது :

A timely lesson in History – 2

VII. Though titular, UK is still a constitutional monarchy where descendants of aristocratic families that pillaged the third world with colonialism are bowed to and revered. The queen is head of the state church as well, making Church the central axis of England’s nationhood identity. 

VIII. India recognizes no erstwhile royal families. But Europe has 12 monarchies, honoring memory of a glorious empire past when they enslaved and ruled 3/4th of the world. But according to BBC, UK monarchy is a full democracy but India is an electoral autocracy. 

IX. Take National anthems. England’s makes 11 references to its Queen, invoking gods to help her for imperial conquests. US anthem authored by a slave owner has passages about slavery still not removed. India’s Anthem is equitable, no reference to religion/god or against any people. 

X. Beyond US/UK, Germany in 2006 pushed for EU constitution with Christian flavor. Italy, Portugal and Spain have special relationships with their churches, France has areas where separation of Church and State doesn’t apply. All Nordic nations run state churches. 

XI. While Arab states exhibit their Islamism, Europe is subtle in camouflaging its Christian identity in cloak of secularism. Gives them better operability and moral standing in geopolitics. It has a deep Caucasian Christian consciousness, we are seeing invoked in fraternity with Ukraine. 

XII. Duplicity of the West in retaining its Christian/Colonial legacy while parallelly placing demands on third world to strip its religion, identity and culture. This wilful

hypocrisy by design is what makes a global liberal order a farce, which no self-respecting nation can participate in. 

Source : 08-07-2022 TRUTH.  Vol 90 No 13          

*

புத்தக அறிமுகம் – 50

அறிவியல் துளிகள் – பாகம் – 10

பொருளடக்கம்

என்னுரை

235. விண்வெளி வீரர்களின் மனைவியர் சங்கம்!

236. மனோசக்தியின் வலிமை! -1

237. மனோசக்தியின் வலிமை! – 2

238. பூமியைக் காப்பாற்றுங்கள் –ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான இறுதி உரை!

239. இனி டெலிபதி மூலம் செய்திகளை பரிமாறலாம்!

240. பிரேதக் கடத்தல்!

241. உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

242. உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

243. தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!

244. ஷீனா ஐயங்காரின் ஜாம் ஸ்டடி!

245. மறு பிறப்பு – மறு ஜென்மம் உண்மையா? பொய்யா?

246. உலகின் செக்ஸியான பெண்மணி எமிலியா க்ளார்க்!

247. விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘கணக்குப் போடும் குதிரை’!

248. சிந்திக்கும் இயந்திரங்கள் பற்றிய உங்கள் சிந்தனை என்ன?

249. ஆவிகள் மூலம் அற்புத இசை வழங்கிய இசை மீடியம்கள்!

250. மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?

251. மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!

252. இறந்த பிறகும் எழுதிய அதிசய எழுத்தாளர்!

253. உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த யோகிகள்!

254. அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

255. அறிவியல் சவால் – மில்லியன் டாலர் பரிசு!

256. மன்னர்கள் சந்தித்த உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்!

257. உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்!

258. இறந்த ஒரு வாரம் கழித்து நாற்காலியில் அமர்ந்த எழுத்தாளர்!

259. ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி!

260. மூலிகைப் போர்!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரைகள் இவை.

பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பேராதரவு என்னை பிரமிக்க வைத்தது. 4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடைபோடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பில் இது பத்தாவது பாகமாக அமைகிறது. 21-8-2015 முதல் 12-2-2016 முடிய உள்ள இதழ்களில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன. இந்த பத்தாம் பாகம் – 235 முதல் 260 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழிம் ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் மட்டுமே இவ்வளவு கட்டுரைகளைப் படைப்பது சாத்தியமானது. அவருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் காட்டும் வழியில் முன்னேறி பாரதத்தை உலகின் வல்லரசுகளில் முதன்மை அரசாக ஆக்கிக் காட்டுவோம். அதற்காக அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்.

நன்றி.

பங்களூர்                                            ச.நாகராஜன்

19-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

 Tags- Lesson in History