

Post No. 11,256
Date uploaded in London – 11 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.Let us rejoice in praise of womanhood,
Let us dance to the cry of ‘Victory to Woman’
For woman is the sanctified union
Of the mother’s fame and the spouse’s name.
1.பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்
2.We shall rejoice in praise of wedded love
We shall dance in honour of lovers’ bliss;
And as woman is the solvent of sorrow,
Her heroic sons shall hail her ‘Holy Mother’!
2.அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்
3.It is mother’s milk that gives us strength,
While the wife’s kind words reap our harvest of fame
As woman’s blessedness blasts all evil
Let us rejoice with linked hands
3.வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்
4.Could man’s valour defend woman’s grace
We would then face neither want nor defeat
As the eyelids enclose and sustain the eye
Woman and man must cherish holy wedded love
4.பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா
5.Woman is the heady wine we shall taste
And make the earth tremble with our might
We shall dance to the chime of flute and drum
And lose our hearts in ecstasy.
5.சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்
6.Blow the conch ! Dance in joy!
For woman is sweeter than life itself
She is the protectress of life, and creatrix too
She is the life of our life, and the soul of sweetness.
6.உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே
7.Hail holy mother! We make obeisance;
And we sing our darling’s praises to her ear
We shall canter across a hundred hills
In the service of a slender -waisted girl.
‘7.போற்றி தாய்’ என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே
8.Hail holy Mother To the beat of the drum
Hail holy Mother to the flute’s golden tune.
We shall sweep the blue firmament itself
In honour of a bright – eyed girl
‘8.போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய்’என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
9.We shall willingly swallow coals of fire
To serve the divine hand that fed us
And although her hands resist us as we kiss
We shall sing in praise of the chosen hands/spouse.
9.அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்
Translated into English by Subrahmanya Bharati
(there are two sets of manuscripts for the tamil original in the hand writing of Bharati)
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.
Tags- பெண்கள், பாரதி, வாழ்க, Glory, Womanhood, Bharati