விண்வெளியின் காலநிலை பூமிக்கு ஏற்படுத்தும் அபாயங்கள்! இனி கவலை இல்லை – கண்காணிப்பால்! (Post.15,132)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,132

Date uploaded in London –   30 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

10-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

SPACE WONDER 

விண்வெளியின் காலநிலை பூமிக்கு ஏற்படுத்தும் அபாயங்கள்!

இனி கவலை இல்லை – கண்காணிப்பால்! 

ச. நாகராஜன் 

விண்வெளி காலநிலை (SPACE WEATHER) என்பதைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அதிகமாகத் தெரியாது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் விண்வெளிச் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாறுபாடுகளே விண்வெளி காலநிலை ஆகும். 

இதனால் ஏற்படும் ஒரு சம்பவத்தை கிரகங்களுக்கு இடையே ஏற்படும் ஒளிவட்ட நிறை வெளியேற்றம் (INTERPLANETARY CORONAL MASS EJECTION)  எனக் கூறுகிறோம். சூரியனிடமிருந்து வெளியேறும் சூரியத் துகள்களையும் அநேக காந்தப் புலங்களையும் இந்த எஜெக் ஷன்கள் கொண்டுள்ளன. ஒரு வினாடிக்கு 1242 மைல் வேகத்தில் இவை பயணிக்கும்.

இவை உருவாக்குகின்ற புயலுக்குப் பெயர் ஜியோமாக்னெடிக் ஸ்டார்ம். பார்க்க அழகாக இருந்தாலும் இவை சாடலைட்டுகளின் பணிகளைத் தடுக்கும். மின் கிரிட்களை இயங்காமல் செய்யும். விண்வெளிவீரர்களின் பயணத்திற்குப் பெரும் ஊறு விளைவிக்கும்.

இதுமட்டுமின்றி ராணுவ நடவடிக்கைகளுக்கும் இது ஒரு பெரிய இடையூறாக அமைகிறது.

 \இந்த விண்வெளி காலநிலை அச்சுறுத்தலைத் தடுக்க மட்டும் ஆண்டிற்கு வருடந்தோறும் 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது.

 1859ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காரிங்டன் நிகழ்வு (CARRINGTON EVENT) என்ற ஒரு சம்பவத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெரும் தீ விபத்துக்கள் இந்த விண்வெளி காலநிலையால் ஏற்பட்டது; ஏராளமான டெலிகிராப் லைன்கள் சேதமடைந்தன.

 1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்னொரு காரிங்டன் நிகழ்வில் சந்திரனைச் சுற்றி வந்த விண்வெளிவீரர்கள் அபாயத்திற்குள்ளாயினர்.

2022 பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் தன்னுடைய 49 சாடலைட்டுகளில் 39ஐ இதனால் இழந்தது.

 ஆகவே இந்த அச்சுறுத்தலைப் போக்க மொஜ்தாபா அகவான் டஃப்டி (Mojtaba Akhavan Tafti) என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு பெரும் குழு இயங்கி வருகிறது

 இந்தக் குழு ஸ்பேஸ் வெதர் இன்வெஸ்டிகேஷன் ஃப்ராண்டியர் (SWIFT – Space Weather Investigation Frontier) என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக விண்வெளி காலநிலையை இது கண்காணிக்கப் போகிறது.

 ஒரு கண்காணிப்பு மானிட்டரை 13 லட்சம் மைல்களுக்கு அப்பால் இது நிறுவி இந்தப் பணியைச் செய்யும்.

 ஏற்பட இருக்கும் நிகழ்வுக்கு 60 நிமிடங்களுக்கு முன்னால் அது பற்றிய தகவல்கள் பூமியில் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும்.

ஸ்விஃப்ட் (SWIFT – Space Weather Investigation Frontier) இதற்காக ஒரு சோலார் செல்லை அமைத்துள்ளது. சோலார் செல் என்பது பாய்மரப் படகுகளில் சாதாரணமாக விரிக்கப்படும் பாய் என்று சொல்லலாம். இது சுற்றுப்பாதையை அடைய எரிபொருள் போலச் செயல்படும். இந்த பாயின் அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு இருக்கும். சூரியனிடமிருந்து வரும் துகள்களின்  இயக்கத்தையும் வேகத்தையும் இந்த சோலார் செல் சமனப்படுத்தும்.

ஒரு படகோட்டி எப்படி நிலைமைக்குத் தக தனது பாயை விரித்துக் கொண்டு மாற்றுகிறானோ அதே போல இந்த சோலார் செல்லையும் மாற்றலாம்.

 ஆக விண்வெளி காலநிலை இதுவரை ஏற்படுத்திய அபாயங்கள் இனி நேராது. இதன் அச்சுறுத்தலுக்கும் நாம் தயாராகி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

விண்வெளியில் இப்போது பலநாடுகளின் “நடமாட்டம்” அதிகமாகி விட்டது. ஆகவே ஸ்விப்டின் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்படுகிறது!

விண்வெளி விஞ்ஞானிகள் பெரிதும் மகிழ, விண்வெளி வீரர்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட ஸ்விப்ட் குழுவுக்கு நாமும் நமது நல்வாழ்த்துக்களை ராக்கெட் வேகத்தில் அனுப்புவோம்!

*** 

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL  இந்துமத கலைச்சொல் அகராதி– Part 9 (Post.15,131)

Written by London Swaminathan

Post No. 15,131

Date uploaded in London –  29 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அதிகாரம்

மற்றவர்களுக்கு கட்டளையிடவோ அவர்களை  ஆட்டிப்படைக்கவோ ஒருவருக்குள்ள சக்தி அல்லது தகுதி. மற்றோர் பொருள்-  செய்யுள் நூல்களின் அத்தியாயம் ; எடுத்துக்காட்டு திருக்குறள் 133 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் உள்ளன.

***

ஆறுமுகம்

முருகனின் பெயர்; ஆறு முகங்கள் இருப்பதால் சம்ஸ்கிருத மொழியில் ஷண்முகம் என்றும் சொல்லுவார்கள் . ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

Aarumukam – Six Faced; in Sanskrit Shanmukha; Six Kartikai mothers brought him um and hence the symbol- Six Faces.

***

அருணகிரிநாதர்

தமிழில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலிய பக்திப் பாடல்களை சந்த நடையில் இயற்றிய புலவர்; திருவண்ணாமலையில் முருகனின் அருள் பெற்றவர்.

Arunagirinathar

A sinner changed into a Saint. He composed 1300 Tiruppugaz songs and Kanthar Alankaram, Kanthar Anubhuti. The poems are in Santham style. He lived 500 years zgo.

***

ஆறுமுக நாவலர்  18 December 1822 – 5 December 1879)

இலங்கையில் வாழ்ந்த சைவ சமய அறிஞர். பல சைவ நூல்களுக்கு உரை எழுதியதோடு சைவ சமய வினா-விடை நூல்களையும் இயற்றியவர் ; இவருக்கும் ராமலிங்க சுவாமிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு  நீதிமன்றம் வரை சென்றது

Arumuga Navala- aarumukha naavalar –

A famous TamilSaivite scholar of Sri Lanka. He wrote many commentaries on Saivite scriptures in addition to his own works explaining Saiva Siddhanta.  Ramalinga Swamikal and Navalar folowers got into a controversy which went up to the judicial courts.

***

அஷ்டகிரி

எட்டு மலைகள்; கிரி, அசலம் ,பர்வதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு மலை என்று பொருள் .

இமயம் ஹேமகூடம் , கந்தமாதனம் கைலாயம் நிடதம் நீலகிரி மந்தரம் விந்தம் / விந்தியம் எட்டு மலைகள்.

Ashta Giri

Famous Eight Holy Hills. Giri, Achala, Parvata are the Sanskrit words for Hills or Mountain. Eight such holy mountains are grouped as Ashta Giri; Ashta is number eight. They are Himalaya, Hemakuta, Gandhamthana, Kailash, Nidatha, Nilgris, Manthara, Vindha/Vindhyachala

***

அற்புதத் திருவந்தாதி

சிவ பெருமான் மீது காரைக்கால் அம்மையார் இயற்றிய அந்தாதி வகை செய்யுள் நூல் .

முதல் அந்தாதி என்பதால் ஆதி அந்தாதி என்றும் பெயர்.

Arputha Tiru Anthaathi

A poem in the Anthaati genre composed by Karaikkal Ammaiyaar (Madam of Kaaraikkaal Town) in praise of Shiva.

***

அகோபிலம்

ஆந்திர மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற வைணவ தலம். ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ள புனிதத் தலம் .மலை மீதுள்ள குடைவரைக் கோவில். கீழ் அஹோபிலத்தில் பிரஹ்லாத வரதன் கோவிலும் புகழ்பெற்ற அஹோபில மடமும் இருக்கிறது . அதன் ஜீயர் , வைணவர்களால் பெரிதும் வணங்கப்படுபவர் ஆவார்  108 வைணவத்தலங்களில் ஒன்று

Ahobilam

A famous Narasimha Kshetra and one of the 108 Sri Vaishnavite shrines. There are Nine Narasimha Statues in the caves and hills of the place. It is in Andhra Pradesh. There is a famous Mutt and the saint /pontiff Jeeyar is followed by a large number of  Vishnu dvotee. The Prahlatha Varada shrine at the foothills is a famous shrine.

***

ஆழ்வார் திருநகரி

தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள முக்கிய வைணவத் தலம் .நம்மாழ்வார் அவதரித்த இடம் . அவர் தவம் செய்த புளிய மரமும் புகழ் பெற்றது . 108 வைணவத் தலங்களில் (திவ்ய க்ஷேத்ரங்களில்) ஒன்று. திருக்குருகூர் என்பது இன்னுமொரு பெயர்

Alwar Tirunagari

Birth place of the saint Nammalavaar . He is the most celebrated of the 12 Aalvaars/ Tamil Vaishnavite Saints. He meditated under a Tamarind Tree which is also worshipped there now along with the saint and Vishnu/ One of the 108 Vaishnava Divya Kshetras.

***

ஆலவாய்

மதுரையின் பெயர் . பாம்பு சுற்றிவந்து நகரின் எல்லையைக் காட்டியதால் இந்தப் பெயர். மதுரைப்

பேராலவாயார் என்ற பெயரில் சங்கப்புலவர் இருப்பதால் இதன் 2000 ஆண்டு வரலாறு உறுதியாகிறது

Aalavaay

Another name of Madurai. It means snake town. Pandya king wanted to know the limits of Madurai city. Then an ascetic sent a snake to show the borders of Madurai city. It went round and made the mark. Even a Sangam Tamil poet has this name. That proved the history of Madurai is at least 2000 years old.

***

அதர்மம் – தீய செயல்கள் . தமிழில் மறம் . நல்லோர்கள் ஏற்றுக்கொண்ட விதிகளுக்கு மாறான நடத்தை ;  சமய நூல்கள் சொன்ன விதிகளுக்குப் புறம்பான  செயல்கள்.

Adharma- Opposite of Dharma. Not virtuous, against the scriptures or rules prescribed in it.

***

ஆற்றுப்படை 

தான் பெற்ற நன்மைகளை பிறரும் அடைவதற்கு வழிகாட்டும் நூல். சங்கஇலக்கியத்தில் பரிசில் பெற்ற பாணர்கள் , புலவர்கள் ஏனையோரும் பரிசில் பெறுவதற்கு வழிகாட்டிய நூல்கள் பெரும்பாணாற்றுப்படை , சிறுபாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை  நூல்கள் ஆகும் . முருகனின் அருளைப் பெறுவதற்கு நக்கீரர் எழுதிய சங்கத் தமிழ் நூல் திருமுருகாற்றுப்படை ஆகும் .

Aatruppadai

A person who has benefiited from a philanthropist or a king  showing or directing others  along the path. Tell the newcomer the way and the methods to get access. Tamil Sangam literature has four books in this genre. Among them Tiru Murukaattruppadai written by poet Nakkeerar shows the devotees to the abodes of Lord Skanda/ Murugan

***

ஆலகாலம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அமிர்தமும் விஷமும் வந்தது . அந்த விஷத்தை ஆலகாலம் என்பார்கள் . அதை சிவன் உண்டபோது கழுத்துவரை சென்ற விஷத்தை, பார்வதி  தடுக்கவே சிவனின் கழுத்தில் விஷம் நின்றது இதனால் சிவனை நீலகண்டன் என்று போற்றுவர்.

Aalakaalam

It is the poison that came out when Devas and Asuras churned the milky ocean to get Amrita (Life giving elixir, Ambrosia). To save the churners, Lord Shiva started devouring the Aalakaala poison. But his wife Parvati prevented it going down his throat by placing her hand on the neck of Lord Shiva. This gave Shiva the name Tiru Neelakantan (Blue throated; Sangam Tamil poets used this)

***

அஷ்டபந்தன மருந்து

கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்யும்போது அதை நீண்ட காலத்துக்கு நிலையாக நிறுத்துவதற்கு மெழுகு, கோந்து போன்ற பசை, சாம்பிராணி ,சூடம், வாசனைப்பொருட்கள், முதலிய எட்டு பொருட்களின்  கொண்ட கலவையை விக்ரகத்தைச் சுற்றி இடுவர்.சிலைகளுக்குக் கீழே தங்கக்காசுகள் ரத்தினைக் கற்களையும் இட்டு மூடுவார்கள் .

Ashtabandhana marunthu

When a statue or idol is installed , the place or the pit is filled with a combination of substances to make the foundation stronger. It is a mixture of wax, resin, vermillion, frankinsense, butter etc Under the statue gem stones and gold coins are also buried to increase the power of the murti or statue.

To be continued……………………………….

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 9

Ancient Tamil Encyclopaedia -Part 28; One Thousand Interesting Facts -Part 28 (Post No.15,130)

Written by London Swaminathan

Post No. 15,130

Date uploaded in London –  29 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

169

GHOSTS IN THE MIDNIGHT, VEGGY FOOD, YADAV HOSPITALITY

Let us look at the last few verses of poet Mamular (MM),

Akam அக நானூறு poem 311 talk about bards getting elephants as gifts and the cowherds/ Yadavas offering tamarind rice to the travellers. Again chieftain Pulli is mentioned. cowherd community’s hospitality is to be noted. MM always talk about vegetarian food only. Here the poet gives two more interesting things-

1. The man entered the house when the guards failed to watch and had intercourse with the girl in the house.  2. That was the time when ghosts were roaming in the dark. Tamils believed that ghosts are going hither and thither until the sun comes out.

***

170.

Mothers hate love marriages

Akam அக நானூறு 325 is about a man delaying his return and the woman’s worrying talk. In this verse, MM adds two more historical names. He says Athiyan was interested in direct participation in battles and so he gave the country to Allal and went away. Mother was guarding the girl all the time.

MM’s description of mothers’ watchful eye shows mothers did not like their girls running away with some unknown persons.

***

171

Flower vending girls

Akam அக நானூறு 331 gives us an interesting picture of bears climbing the branches of a tree and eating white flowers of Iluppai tree. Then the girls there gather the flowers in the holes of big bamboo sticks and sell them in the towns. We read about enterprising girls selling milk, salt and flowers and food as well.  So, the ancient Tamils were earning money independently. Here MM mentioned Thithiyan, another chieftain.

***

172

Akam verse அக நானூறு 347 gives another picture. When the tiger attacked an elephant herd, the animals were separated. One female elephant was searching for its baby like a woman searching for her eloped daughter. How sad it is!  MM added again the Cheralathan chopping the Totem Kadampa tree of the islanders and establishing his suzerainty

***

173.

Akam verse அக நானூறு 349 gives us a simile of balance. The word used for balance is gneman ஞெமன்ன் தெரி கோல் in Tamil. Here we get a reference again to chieftain Nannan .

***

Akam verse அக நானூறு 359 mentioned again the chieftain Pulli and Chera king as Vaanavarampan , literally person with sky as the limit. It may be due to Kerala / Chera country is bound by the Western Ghats/Sahyadri and the sea. We also hear about the deforestation for farming. A town by name Veliyam is also mentioned. When the poets described the mountain, he used the epithet soorpukal adukkam meaning mountain is abode of divine beings or spirits or nymphs.வானவரம்பன் வெளியத்து அன்ன நம்;  சூர் புகல் அடுக்கத்து;

***

174

Business trip beyond Venkatam

Mm ‘s last verse is Akam verse அக நானூறு 393.

A man takes a business trip beyond Venkatam, that is beyond Tamil Nadu and delays his trip. Here again we get details of veggy food . Travellers get rice pudding with milk .  Pulli is mentioned again.

 When the rice pudding is mentioned, some new plants are also mentioned

The poet described a pukka village scene with winnowing pan, grinding stone, mortar and pestle, oven made up with hard stones. A Tamil boy or any Indian reading this verse today, wouldn’t know what these things are. (I have used all these things in my home at Madurai 60 years ago!)

கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,

வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து

ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,

முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்

கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, . . .

கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை

அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,

வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்

பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,

சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் . . . .

தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,

உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,

ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,

களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,

இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், . . . . [15]

குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,

மதர்வை நல் ஆன் பாலொடுபகுக்கும்

நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி

தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,

வேங்கடம் இறந்தனர் ஆயினும், ஆண்டு அவர் . .

நீடலர் வாழி, தோழி! தோடு கொள்

உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,

தகரம் மண்ணிய தண் நறு முச்சி,

புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்

வேனில் அதிரல் வேய்ந்த நின் . . . .

ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.-அக நானூறு

–subham—

Tags- Ancient Tamil Encyclopaedia -Part 28; One Thousand Interesting Facts -Part 28 , Ghosts, Veggy food, Hospitality, Bears, Balace simile, Flower vendors, Watchful mothers

என்னைக் கண்டால் தமிழறிஞர்கள் ஏன் சார் ஓடுகிறார்கள்? (Post 15,129)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,129

Date uploaded in London –   29 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 25-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

நகைச்சுவை கட்டுரை – சிரித்து மகிழ மட்டுமே தான்! 

என்னைக் கண்டால் தமிழறிஞர்கள் ஏன் சார் ஓடுகிறார்கள்? 

ச. நாகராஜன் 

என்னைக் கண்டால் தமிழறிஞர்கள் ஏன் சார் ஓடுகிறார்கள்? அது தான் எனக்குப் புரியவில்லை!!

ந்தத் தமிழறிஞரின் அற்புதமான உரையைக் கேட்டு மகிழ்ந்தேன்.

சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்து பாரதியார் முடிய, அந்த அறிஞர் கூறியபடி தமிழில் மலர்ந்த சொற்களின் அழகே அழகு தான்!

உரை முடிந்தது. அனைவரும் அகன்றனர்.

அவரைப் பாராட்டி விட்டு, ‘‘எனக்கு சில வார்த்தைகள் பற்றிய சந்தேகம் இருக்கிறது, கேட்கலாமா, ஐயா?’ என்றேன்.

உடனே தமிழ்ச் சொற்களின் அருமை பற்றி ஒரு சிறு உரை நிகழ்த்தி தன் அறிவைப் பற்றிப் பெருமை கொண்டு கர்வத்துடன் என்னைப் பார்த்தார் அவர்.

“கேளுங்கள், என்ன சொற்கள்? என்ன சந்தேகம்?”

“ஒன்றுமில்லை ஐயா,

‘கும்தல கும்மா, குமாய்க்காதே என் கோதுமை அல்வாவே?’ இதில் வரும் கும்தல கும்மாவுக்கு என்ன அர்த்தம் ஐயா? கும்தலவில் உள்ள ல-வுக்கு சின்ன ல போட வேண்டுமா, பெரிய ள- போட வேண்டுமா?

 என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார் அவர்.

“இது 1958ம் ஆண்டில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த ‘பிரேமபாசம்’ படத்தில் வந்த பாடல் ஐயா! தஞ்சை ராமையாதாஸ் எழுதி சீர்காழி கோவிந்தராஜனும் ஜிக்கியும் பாடிய பாடல் இது” என்றேன் நான்.

அவர் ஒரு மாதிரியாக இழுத்தவாறே, , “உங்களின் அடுத்த சந்தேகம்?” என்றார்.

“ஐயா! டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே” இது 1958ல் அன்பு எங்கே படத்தில் வந்த பாடல் ஐயா! டிங்கிரி டிங்காலே, தில்லாலே என்றால் என்ன பொருள் ஐயா! இது தான் என் சந்தேகம்!”

 வெறுப்புடன் என் மீது பார்வையை ஓட்டிய அவர், “ இது தான் சந்தேகமா என்றார்.

 “இல்லை ஐயா! இன்னும் நிறைய இருக்கிறது. ஜிங்குச்சா ஜிங்குச்சா, செகப்பு கலரு ஜிங்குச்சா,  மீனா நடனமாடி பாடும் இதில் ஜிங்குச்சா என்றால் என்ன அர்த்தம்? – இது நான்.

 “இதற்கெல்லாம் நான் அர்த்தம் சொல்லணுமா? – சற்று கோபத்துடன் கேட்ட அவரிடம் எனது மொபைலிலிருந்து ஒரு பாடலைப் போட்டுக் காட்டினேன். அமரதீபம் படத்தில் மலர்ந்த பாடல் அது. பாடல் இது தான்: 

ஜாலிலோ ஜிம்கானா ஓஓஓஓ

ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஹேய் ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா

ஹேய் ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா

சாயுமாசாயுமாசாயுமா சாயாதம்மா ஜம்பம் இங்கே சாயாது சாயாது

ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஓஓஓஓ

ஓஓஓ நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா…….
பயங்கர கோபத்துடன் ஒரு வெறிப் பார்வை பார்த்த அவர் என் மொபைலை சடக்கென்று பிடுங்கி ஆஃப் செய்து விட்டு,  வேகமாகத் திரும்பிச் சென்றார்.

சூரியன் படத்தில் வந்த ‘லாலாக்கு டோல் டப்பிமா’ என்று கூறியவாறே அவரிடமிருந்து அகன்றேன். அன்றிலிருந்து தமிழறிஞர்களிடம் என் புகழ் பரவி விட்டது போலும், என்னைக் கண்டாலே எல்லோரும் ஓடுகிறார்கள், சார்!

 உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழறிஞர் யாரேனும் உண்டா, சார்?

ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா!

**

November 2025 Calendar with More Adi Shankara Quotes (Post No.15,128)

Written by London Swaminathan

Post No. 15,128

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Last month we saw 31 beautiful Quotations from Shankara’s Prasnottara Ratna Malika.  Prasnothara rathna malika is a Garland of Gems of Questions and Answers composed by Shankaracharya. Here are 30 more quotations from that hymn. 

November 2025 Festivals:- 2-Tulsi Vivaha;5-Guru Nnak Jayathi and Annabisheka in Tamil Nadu Temples; 14-Children’s Day; 17- Sabarimalai Temple opens.23- Sri Sahya Sai Baba Birth Day. (23 November 1926 – 24 April 2011)

New Moon Day-20;   Full Moon Day-5;  Ekadasi- Hindu Fasting Days .1,15.

Auspicious Days- November 10, 27, 30.

***

November 1 Saturday

32. What leads to wrong results?

Pride leads to wrong results.

***

November 2 Sunday

33. What leads to pleasure?

Friendship with good people leads to pleasure.

***

November 3 Monday

34. Who is expert in removing all sorrows?

He who forsakes everything is such an expert.

***

November 4 Tuesday

35. Which is equivalent to death?

Being a fool is equivalent to death.

***

November 5 Wednesday

36. Which is invaluable?

Giving anything at the time when it is required badly is invaluable.

***

November 6 Thursday

37. What hurts till you die?

The sin committed in secret hurts you till death.

***

November 7 Friday

38. For what should you take effort?

To learn, to be healthy and to give in charity needs great effort.

***

November 8 Saturday

39. What should be disregarded?

Bad people, other’s wife and other’s wealth.

***

November 9 Sunday

40. What should you think of always during day and night?

You should think that there is no meaning in life and not about women.

***

November 10 Monday

41. To what should you get attached?

To mercy towards sad people and towards friendship with good people.

***

November 11 Tuesday

42. Whose soul cannot be reformed?

Bad people, doubting Thomases, people with an ever sad face and ungrateful people.

***

November 12 Wednesday

43. Who is good man?

The one with good character is a good man.

***

November 13 Thursday

44. Who is debased?

The one with bad character is a bad man.

***

November 14 Friday

45. Whom will Gods worship?

Gods will worship those who have mercy.

***

November 15 Saturday

46. Seeing which, should we be afraid?

Seeing the forest of domestic life, we should be afraid.

***

November 16 Sunday

47. Who can control all living beings?

He who tells truth, speaks pleasantly and has humility can control all beings.

***

November 17 Monday

48. For getting things that we see and things that we cannot see, where should we stand?

In the path of justice.

***

November 18 Tuesday

49. Who is blind?

The learned man who does evil acts.

***

November 19 Wednesday

50. Who is deaf?

He who cannot hear good words.

***

November 20 Thursday

51. Who is dumb?

He who cannot speak comforting words at appropriate time.

***

November 21 Friday

52. What is wisdom?

Giving without asking is wisdom.

***

November 22 Saturday

53. Who is a friend?

He who prevents us from doing sin.

***

November 23 Sunday

54. What is beautiful?

Good character is beautiful.

***

November 24 Monday

55. What are beautiful words?

Truth is the most beautiful word.

***

November 25 Tuesday

56. What is as transient as the lightning?

Company of bad people and friendship with women.

***

November 26 Wednesday

57. Who do not slip from obeying rules of the caste?

Learned people.

***

November 27 Thursday

58. What is difficult to get in this world like, chinthamani – the wish giving gem?

The good four (chathur pathram)

***

November 28 Friday

59. What is Chathur pathram (the good four) which drives away the darkness of ignorance?

1. Charity coupled with sweet words.

2. Knowledge without pride.

3. Valour with patience.

4. Wealth with sacrifice.

These four rare things are called the good four.

***

November 29 Saturday

60. What should be pitied?

Miserliness.

***

November 30 Sunday

61. What is fit to be praised when one has wealth?

Philanthropy.

–subham—

Tags- November 2025, Calendar, Adi Shankara quotes, Prasnottara Ratna Malika Hymn.

நவம்பர் 2025 காலண்டர்- ஆதிசங்கரர் மேற்கோள்கள் (Post.15,127)

Written by London Swaminathan

Post No. 15,127

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற துதியில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி- பதில் வடிவத்தில் ஆதி சங்கரர் பதில் அளிக்கிறார் . அவற்றில் மேலும் 30 பதில்களை இந்த மாத காலண்டரில் காண்போம். சென்ற அக்டோபரில் 31 மேற்கோள்களைக் கண்டோம்.

நவம்பர் பண்டிகைகள் – நவம்பர் 1 ஏகாதசி , 2 துளஸி விவாகம் , 5 குருநானக் ஜயந்தி , தேவ தீபாவளி , பெளர்ணமி தமிழ் நாட்டுக் கோவில்களில் அன்னாபிஷேகம்,  14 குழந்தைகள் தினம் , 15 ஏகாதசி, 17 சபரிமலை கோவில் திறப்பு 20 அமாவாசை,

அமாவாசை-20;   பௌர்ணமி-5;  ஏகாதசி- .1,15.

நவம்பர் முகூர்த்த தினங்கள்-10, 27, 30.

(P R Ramachandran’s translation is used from shastra.com; thanks)

நவம்பர் 1 சனிக்கிழமை

மனிதன் தவறான முடிவுக்கு என் வருகிறான் ?

அகந்தையால் கர்வத்தால்.

****

நவம்பர் 2  ஞாயிற்றுக் கிழமை

இன்பம் தருவது எது?

நல்லோருடைய நட்பு.

***

நவம்பர் 3  திங்கட் கிழமை

துக்கங்களை நீக்கும் நிபுணர் யார்?

எல்லாவற்றையும் துறந்தவனே அத்தகைய நிபுணர் .

***

நவம்பர் 4  செவ்வாய்க் கிழமை

மரணத்துக்குச் சமமானது எது?

முட்டாளாக இருப்பது

***

நவம்பர் 5  புதன் கிழமை

விலை மதிக்க முடியாதது எது?

மிகவும் தேவையான ஒன்றினை அந்த நேரத்தில் கொடுப்பது.

****

நவம்பர் 6  வியாழக் கிழமை

மரணம் வரை நமது மனத்தை உறுத்துவது என்ன?

ரகசியத்தில்l  செய்த தவறு / பாவச் செயல்

***

நவம்பர் 7  வெள்ளிக் கிழமை

எதனை அடைய பெரு முயற்சி எடுக்க வேண்டும்?

கற்பதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தர்மம் செய்யவும் பெரு முயற்சி தேவை.

***

நவம்பர் 8  சனிக்கிழமை

எதை எதை ஒதுக்க வேண்டும் ?

கெட்ட மனிதர்கள், மற்றவரின் மனைவியர், அடுத்தவர்களின் செல்வம்

***

நவம்பர் 9  ஞாயிற்றுக் கிழமை

அல்லும் பகலும் அனவரதமும் சிந்திக்க வேண்டியது என்ன?

வாழ்க்கையிலும் பெண்களிடத்திலும் பற்றுவைப்பதில் பொருளே இல்லை

***

நவம்பர் 10  திங்கட் கிழமை

எதில் பற்று தேவை?

துன்பம் அடைந்தோருக்கு கருணை காட்டு; நல்லோரின் நட்பினில் பற்று வை.

***

நவம்பர்  11 செவ்வாய்க் கிழமை

யாரைச் சீர்திருத்த முடியாது?

தீயோர், சந்தேகப்படுவோர் , எப்போதும் வாடிய முகம் உடையோர் , நன்றி மறந்தோர்.

***

யார் நல்ல மனிதன் ?

ஒழுக்கம் உள்ளவன் நல்ல மனிதன்

***

நவம்பர் 12  புதன் கிழமை

கெட்டவன் யார்?

தீய ஒழுக்கம் உடையவன்

***

நவம்பர் 13 வியாழக் கிழமை

யாரை தெய்வமே வணங்கும்?

கருணை உள்ளவனை.

***

நவம்பர் 14  வெள்ளிக் கிழமை

எதைக் கண்டு அஞ்சவேண்டும்?

இல்லற வாழ்வு என்னும் காட்டினில் நுழைய அஞ்சவேண்டும்.

***

நவம்பர் 15  சனிக்கிழமை

எல்லா உயிரினங்களையும் கட்டுப்படுத்த வல்லவன் யார்?

உண்மை விளம்பி, இனிமையாகப் பேசுபவன், பணிவுடையோன்.

****

நவம்பர் 16  ஞாயிற்றுக் கிழமை

கண்டதும் காணாததும் உள்ள இடத்தில் நாம் எங்கே நிற்கவேண்டும்?

நீதியின் பாதையில் .

***

நவம்பர் 17  திங்கட் கிழமை

யார் கண்ணிருந்தும் குருடன்?

தீய செயல்களைச் செய்யும் கற்ற மனிதன்

***

நவம்பர் 18  செவ்வாய்க் கிழமை

காதிருந்தும் செவிடன் யார்?

நல்ல சொற்களைக் கேளாதவன்

***

நவம்பர் 19 புதன் கிழமை

வாயிருந்தும் ஊமை யார் ?

உரிய தருணத்தில் ஆறுதல் தரும் சொற்களைச் சொல்லாதவன்.

***

நவம்பர் 20  வியாழக் கிழமை

எது விவேகம்?

கேளாமல் கொடுப்பது .

***

நவம்பர் 21  வெள்ளிக் கிழமை

யார் நண்பன்?

பாவச் செயல்களைச் செய்யாமல் நம்மைத் தடுப்பவன்

***

நவம்பர் 22 சனிக்கிழமை

எது அழகானது?

நன்னடத்தை

***

நவம்பர் 23  ஞாயிற்றுக் கிழமை

அழகான சொல் எது?

சத்தியம்/ உண்மை

***

நவம்பர் 24  திங்கட் கிழமை

மின்னல் போல மறைவது என்ன?

தீயோருடனும் பெண்களுடனும் உள்ள நட்பு.

***

நவம்பர் 25  செவ்வாய்க் கிழமை

ஜாதி தர்மத்திலிருந்து விலகாதவர்கள் யார் ?

கற்றறிந்த மக்கள்  .

***

நவம்பர் 26  புதன் கிழமை

விரும்பியதைக்கொடுக்கும் சிந்தாமணி போன்றது எவை?

இனிமையான சொற்களுடன் செய்யும் தர்மம்; அகந்தை இல்லாத அறிவு; பொறுமை மிக்க வீரம்; தியாகம் செய்யும் செல்வம்

***

நவம்பர் 27  வியாழக் கிழமை

பரிதப்படவேண்டிய செயல் என்ன?

கருமித்தனம் .

***

நவம்பர் 28  வெள்ளிக் கிழமை

செல்வம் உள்ளவர்களிடம் புகழத்தக்கது எது?

வாரி வழங்கும் வள்ளன்மை

***

நவம்பர் 29  சனிக்கிழமை

புத்திசாலிகள் யாரை வணங்க வேண்டும்?

இயற்கையிலேயே பணிவுடைய மனிதர்களை.

***

நவம்பர் 30  ஞாயிற்றுக் கிழமை

சூரியனைக் கண்ட தாமரை மலர்வது போல  எவரைக்கண்டவுடன் ஒரு குலமே மலரும்?

நல்ல குணமும் பணிவும் உள்ளோரைக் கண்ட குலம் தாமரை போல மலரும்

–subham–

Tags- நவம்பர் 2025 காலண்டர், ஆதிசங்கரர் மேற்கோள்கள்,

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா,

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 8 (Post.15,126)

Written by London Swaminathan

Post No. 15,126

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

(கூடுதல் தகவல்களைச் சேர்ப்பதற்காக சில தலைப்புக்கள் மீண்டும் வந்திருக்கலாம்; நூலாக வரும்போது அவை சரி செய்யப்படும்; ஆங்கில அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது)

அபய வர முத்திரை – கடவுள் அல்லது சாது சந்யாசிகள் கையை பாதுகாப்பு தருகிறேன் என்று காட்டும் சைகை; நாமிருக்க பயம் ஏன் -என்பது இதன் கருத்து

Abhaya vara mudra – gods or saints showing hand in protecting pose—why fear when I am here?  is the meaning.

***

ஆதி சேஷன் – பாம்புப் படுக்கை ; பாற்கடலில் மஹாவிஷ்ணு பள்ளி கொண்டுள்ள ஆயிரம் தலைகள் உள்ள பாம்பு ; பூமியை ஆதிசேஷன் தாங்குவதாகவும் சொல்வர்.

Adisesha -aadisesha- snake bed on which Lord Vishnu is lying; earth is on the head of this snake with 1000 heads, according to Puranas. The king of serpents also called Ananthan. Lord Vishnu is on him in yogic sleep mentioned as Arithuyil in Tamil.

***

அக்னி – தீ ; நெருப்பு; வேதத்தில் போற்றப்படும் முக்கியக்கடவுள்; தென்கிழக்கு திசையின் அதிபதி

Agni – general meaning- fire; important Vedic God;  regent of the south east quarter.

***

ஐராவதம் – இந்திரனின் யானை வாகனம் ; தென் கிழக்கு நாடுகளின் சிலைகளிலும் தபால்தலைகளிலும் நான்கு தலைகளை உள்ளதாக காட்டப்பட்டுள்ளது

Airavata – Indra’s vahana/ mount. A sacred elephant. In South East Asian countries it appears with three or four heads on stamps and statues.

***

அகில் – பெண்கள் தலை முடியை உலர்த்தவும் நறுமணம் வீசவும் பயன்படுத்தும் மரம். இதன் புகையை அவர்கள் பயன்படுத்துவர்

Akhil – a fragrant wood- eagle wood-Aquila ; its smoke is used for drying and perfuming women’s hair

***

அலக்ஷ்மி– ஜேஷ்டா தேவி; மூதேவி; லட்சுமி அருளும் செல்வத்திற்கு எதிர்ப்பதம் / தரித்திரம்

Alakshmi – Jyeshta; Moodevi in Tamil; not auspicious; opposite of Lakshmi/wealth; sister of Lakshmi/symbol of poverty

***

ஆளுடைப் பிள்ளை – திரு ஞான சம்பந்தரின் பெயர்; இளம் வயதில் அற்புதங்கள் புரிந்து சைவ சமயத்துக்குப் புத்துயிர் ஊட்டியவர்

Aludaipillai- aaludaipillai- another name of great boy saint Tiru Gnana Sambandar who revived Saivism in Tamil Nadu. Period- 640 CE.

****

அநிருத்த -மஹாவிஷ்ணுவின் நான்கு நிலைகளில் நிற்கும் வடிவம்

Aniruddha – form of standing Vishnu

***

அர்ஜுனன் – பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் ; இந்திரனின் அருளால் யாதவ இளவரசி குந்தி தேவிக்குப் பிறந்தவர் ; இதனால் இடி இடித்தால் அர்ஜுனப்பத்து என்று இவருடைய பத்து பெயர்களையும் சொல்வது வழக்கம்

அர்ஜுனப்பத்து

அர்ஜுனன், பல்குனன் (பங்குனி நக்ஷத்திரத்தில் பிறந்தவன்), பார்த்தன்,கிரீடி, ஸ்வேதவாஹனன் (வெள்ளைக் குதிரைகள் கட்டிய தேரை உடையவன்), பீபத்சு (எதிரிகளை வெறுப்படையச் செய்பவன்) , கிருட்டினன் (அஞ்ஞானத்தை அகற்றுவோன்), சவ்யசாசி, தனஞ்சயன், விஜயன் (வெற்றி வீரன்)

Arjuna – one of the five Pandava brothers born with the grace of Indra to Kunti, the Yadava princess, mother of Pandavas. Tamils used to recite Ten Names of Arjuna when thunder and lightning strike to avoid catastrophes.

Ten Name of Arjuna recited during thunderclaps

Arjuna, Falguna, Paartha, Kreeti, Svethavaahana, Peebhatsu, Krushna, Savyasaachi, Dhanajaya, Vijaya

***

அரவான் – அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தார் ; மகாபாரத யுத்தம் துவங்கும் முன் சம்பிரதாயப்படி தன்னை பலி கொடுத்தார்; இன்னும் ஒரு கருத்து இவர் எட்டாவது நாள் போரில் கொல்லப்பட்டார் என்பதாகும். இவரை அலிகள் தெய்வமாகவும் வணங்குவர்.

Aravan – son of Arjuna and Naga Princess Ulupi; he sacrificed himself before the Mahabharata war; this type of self -sacrifice is practised throughout India before any war; transgender people worship him in festivals.

***

அண்ணாமலை – சிவ பெருமானின் பெயர்; இந்தக் கோவில் உள்ள இடம் திருவண்ணாமலை ; இன்னும் ஒரு பெயர் அருணாசலம் ; பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி வடிவத்தில் இறைவன் உள்ளார் என்பது ஐதீகம்; ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் முதலிய பல பெரியோர்களின் சமாதிகள் உள்ள புனித நகரம்

Annamalai – always added with prefix- tiru; god shiva’s name. Tiruvannaamalai – famous shiva shrine in Tamil Nadu with a big shiva temple. Another name Arunachalam where Samadhis- resting place — of Ramana Maharishi, Seshadri Swamikal and many other saints are located. One of the Pancha Bhuta Shrines representing the element Fire..

***

அபஸ்மார – நடராஜர் காலடியில் உள்ள அறியாமை என்ற அசுரன் ; முயலகன்  என்றும் கூறுவார்கள். மருத்துவத்தில் வலிப்பு நோய்க்கும் இதே பெயர்

Apasmara – a demon; also name of the disease epilepsy in medical dictionaries; Ignorance is shown as Apasmara under the feet of Nataraja idols and statues in Tamil Nadu. Tamil name Muyalakan .

***

அப்பர் (600 CE) – சைவ சமயத்துக்குப் புத்துயிரூட்டிய நால்வரில் ஒருவர்; சமண மதத்துக்குச் சென்று, மீண்டும் சைவ சமயத்தைத் தழுவி தேவாரம் பாடியவர்; நால்வர் என்று அழைக்கப்படும் நால்வரில் மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் இவர் ; நால்வரில் ஏனைய மூவர் – சம்பந்தர் ,சுந்தரர், மாணிக்கவாசகர்

Appar – Great Saivite saint who was reconverted to Hinduism from Jainism; lived during the reign of Mahendra Pallava (600 CE) ; one of the four great saints called Naalvar- The Four—other three saints are  Sambandar, Sundarar, Maanikkavaasagar .

***

அஸ்வினி தேவர்கள் – வேதத்தில் அற்புதங்களை புரிந்தவர்களாகவும் மருத்துவர்களாகவும் புகழப்படும் குதிரை வீரர்கள் ; இரட்டையர்கள்; மஹாபாரதத்தில் நகுல சகாதேவர்களின் தந்தை ; நாஸத்யர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் ; சில நேரங்களில் ஒருவர் பெயர் நாஸத்யர் இன்னும் ஒருவர் பெயர் தஸ்ரா என்றும் உளது இலக்கிய வரலாற்றில் தோன்றிய முதல் இரட்டையர்

Ashvins – Asvini devas – Horse riding twins – Vedic gods- physicians of the gods. Also known as Naasatyas. Sometimes one of them is referred to as Naasatya and another as Dasra. Oldest Twins in world literature.

***

ஆவுடையார்

– சிவலிங்கத்தின் கீழுள்ள அமைப்பு. அபிஷேகம் செய்யும்போது அபிஷேக தீர்த்தம், பால்  முதலியன இதன் வழியாகக் கீழே செல்லும் வகையில் வடிகாலுடன் இருக்கும்.

Avudaiyar (Tamil word)- aavudaiyaar- pedestal of a Siva Linga

***

அவெஸ்தா

இது பார்ஸி மதத்தவர்களின் புனித நூல்

Avestaa – scripture of the Parsees (Persians who followed Zoroaster)

***

அவஸ்தா

இது மனத்தின் ஒரு நிலை ; அனுபவம்; அவை நான்கு – ஜாக்ரத – விழிப்பு நிலை ,ஸ்வப்ன -கனவு நிலை , சுசுப்தி ஆழ்ந்த உறக்க நிலை , துரீய – நாலாவது நிலை

Avasthaa– states of mind or consciousness or experience; they are four- jaagrat-waking, svapna- dreaming, susupti- deep sleep, turiiya – fourth state

***

அஷ்டாங்க யோகம்

யமம் – புலன் இன்பம் அனுபவிக்காமல் இருத்தல்;

நியம – சுய கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றுதல் ,

ஆசன- உடலினை யோகப் பயிற்சிக்காக விதிகளின்படி உடலின் உறுப்புகளை வைத்துக்கொள்ளும் முறை,

பிராணாயாம- மூச்சுப் பயிற்சி ; விதிகளின்படி சுவாசத்தை உள்ளே இழுத்தல் அடக்கி வைத்துக் கொள்ளுதல் பின்னர் வெளியிடுவதற்கான பயிற்சி ,

பிரத்யாஹார – புலனடக்கம் ,

தாரண –மனத்தை ஒருமுகப்படுத்தல் ,

தியான – ஒரே பொருள் குறித்து ஆழ்ந்த சிந்தனை,

சமாதி- தியானத்தின்  இறுதி நிலை- அப்போது பேரானந்தத்தை அனுபவித்தல்  – இன்னுமொரு பொருள் – ஒரு சந்நியாசி இறந்த பின்னர் அவரைப் புதைத்து அந்த இடத்தில் துளசி அல்லது வில்வம் அல்லது லிங்கம் வைத்து வழிபடும் இடம் .

Ashtaanaga yoga – the eight limbed yoga-

Yama-abstension or restraint.

Niyama – observance of self-discipline;

Aasana- posture.

Praanaayaama- control of breathing; breathing exercise.

Pratyaahaara – sensory control.

Dharana – concentration.

Dhyaana – deep concentration; meditation

Samaadhi- super concentration, ecstasy, final stage of meditation. Another meaning- tomb where bodies of saints are laid and worshipped. Tulsi plant or Bilva plant or Linga is placed in the place.

***

அக்ஷய பாத்திரம்

குறைவில்லாமல் தொடர்ந்து  உணவினை வழங்கும் அதிசய பாத்திரம் . இது பாண்டவர்களின் மனைவியான திரவுபதியிடம் இருந்தது. கிருஷ்ணன் இதை கொடுத்தார்.

Akshaya Patra

A mythical Food vessel which never becomes empty. Akshaya means never destroyable/indestructible. It supplied food to all the Rishis/seers who visited the Pandavas in the middle of the forest. Krishna gave it to Kunti, wife of Pandavas, with which she served food to all.

***

அலர்மேல் மங்கை

விஷ்ணுவின் பத்தினி; தாமரை மேல் அமர்ந்த அல்லது நிற்கும் லெட்சுமி.

Alarmel Mnagai

Lakshmi standing or sitting on lotus. Wife of Vishnu.

***

அக்ஷரம்

அ முதல் க்ஷ வரையுள்ள சம்ஸ்க்ருத எழுத்துக்கள்; 51 என்பது கணக்கு . இவை தேவியின் அங்கங்கள் என்பதும் நம்பிக்கை . எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா எண்களுக்கும் தெய்வீக பொருளையும் இந்துமதம் கற்பிக்கிறது எடுத்துக்காட்டு – ஒன்று என்றால் இறைவன் ஒருவன் எ  டுஎன்றால் அஷ்ட வசுக்கள்; ஒன்பது என்றால் நவக்கிரகக்ங்கள் ;11 என்றால் ஏகாதச ருத்ரர்கள்; 12 என்றால் 12 ஆதித்யர்கள் ; இவ்வாறு எல்லாவற்றுக்கும் ஒரு பொருள் வரும்; மூன்று, ஐந்து, எட்டு போன்ற எண்களை கவிஞர்கள் அடையாளமாக சங்கேதமாகப் பயன்படுத்துவார்கள்; உரைகாரர்கள்தான் நமக்கு சரியான பொருளைத் தருவார்கள்.

Akshara

In English Greek letters Alpha+Beta gave us the word alphabet. In Sanskrit A+ Ksha , that is the first letter and the last letter of Sanskrit, give us the word Akshara for alphabet. It has got 51 letters; all are attributed divine qualities. They are part of the body of the Goddess. Numbers also have sanctity in Hinduism. One means God is one. Eight-Ashta Vasus, 11- Ekadasa Rudras, 12- Adityas, Nine- Navagrahas, it goes on like this. Three, Five and Eight are used as symbols of many things. Poets say only numbers and the interpreters give us the meaning

To be continued……………………….

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, இந்துமத கலைச்சொல் அகராதி– Part 8

அற்புத மனிதர் மிஹாய் சிக்செண்ட்மிஹாய் (MIHALY CSIKSZENTMIHALYI)! (Post.15,125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,125

Date uploaded in London –   28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

MOTIVATION/CREATIVITY 

அற்புத மனிதர் மிஹாய் சிக்செண்ட்மிஹாய் (MIHALY CSIKSZENTMIHALYI)! 

ச.நாகராஜன், 

மனித வாழ்வில் மோடிவேஷன், படைப்பாற்றல், சந்தோஷம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்த ஒரு அதிசய மனிதர் ஹங்கேரிய அமெரிக்கரான , மிஹாய் சிக்செண்ட்மிஹாய்

(MIHALY CSIKSZENTMIHALYI)! (பிறப்பு: 29-9-1934 மறைவு: 20-10-2021) 

படைப்பாற்றலை வெகு காலம் ஆராய்ந்து ‘ஃப்ளோ’ என்ற படைப்பாற்றல் உத்தியை வலியுறுத்திய இவரை ‘தி அஃபாதர் ஆஃப் தி ஃப்ளோ’ (The Father of the Flow) என்று புகழ்கின்றனர்.

 இப்போது ரிஜேகா, க்ரோஷியா என்று கூறப்படும் பழைய கால இத்தாலி நக்ரான ஃப்யூமில் 1934ம் ஆண்டு பிறந்த இவர் 2021ம் ஆண்டு மரணமடையும் வரை படைப்பாற்றலை அக்கு வேறு ஆணி வேராக அலசி அது பற்றிய அறிவியல் பூர்வமான பல தகவல்களை உலகுக்கு அளித்தார்.

 அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பயின்று டாக்டர் பட்டத்தை 1960ல் இவர் பெற்றார்.

பின்னர் படைப்பாற்றலில் ஃப்ளோ என்ற கொள்கையை முன் வைத்தார்.

ஃப்ளோ தியரி என்றால் என்ன?

நாம் ஒரு முனைப்பட்ட கவனத்துடன் நிகழ்காலத்தில் இந்த தருணத்தில் இருக்கும் போது நாம் ஃப்ளோ’ நிலையில் இருக்கிறோம். ஆகவே மோடிவேட் (உணர்வூக்கம் அடைகிறோம்) செய்யப்படுகிறோம். இதன் பயனாக நமக்கு நல்ல ஒரு பரிசு கிடைக்கிறது.

ஃப்ளோ நிலைக்கு எப்படிச் செல்வது? 

எதிர்நோக்கி இருக்கும் சவால்களுக்கும் செயல்திட்ட வாய்ப்புகளுக்கும் சரியாக திறமைகள் சிறிதளவேனும் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நமது குறிக்கோள்கள் (லட்சியங்கள்) குறுகிய காலத்தில் அடையக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது சரியாக வரையறுக்கப்பட வேண்டும். முழுத்தகவல்களுடனும் இருக்க வேண்டும்.

தொடர்ந்த முன்னேற்றத்திற்கு ஏதுவாக அவ்வப்பொழுது பின்னூட்டம் (Feedback) பெறப்பட வேண்டும்.

 ஒருமுக கவனிப்பு தீவிரமாக இருத்தல் வேண்டும். 

செயலும் நமது விழிப்புணர்வும் ஒன்றாக இணைய வேண்டும், 

காலமானது வேறுபடும் ஒன்று. திடீரென்று ஒரு நிமிடத்தில் எல்லாம் கிடைத்தது போல இருக்கும்.

அனுபவங்களுக்குத் தக்க பெரும் பரிசுகள் கிடைக்கும். செய்யப்பட்ட முயற்சி சரிதான் என்பது தெரியவரும். 

எதிரே இருக்கும் சவாலுக்கும் நமக்குள்ள திறமைக்கும் உள்ள சமநிலை வளர்ச்சியைப் பற்றி நன்கு தீர்மானித்து அதை அடைய வேண்டும்.

கீழ்க்கண்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம். 

இந்தச் செயலால் எனக்கு என்ன முன்னேற்றம் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்?

இந்தச் செயலைச் செய்யும் போது அது பிரமாதமாக செய்யப்படும் என்பதை எப்படி நான் அறிவேன்?

இப்போது எனக்கு இருக்கும் திறமைகளின் படி இந்தச் செயல் எப்படிப்பட்ட சவால் கொண்டதாக இருக்கும்?

 இப்படி யோசித்து நமது செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டால்

“ஃப்ளோ” என்ற மனோ ஒட்டம் என்ற நிலையை அடைவோம்.

 பிறகென்ன வெற்றி தான்! 

இதைப் பற்றி விரிவாக மிஹாய் சிக்செண்ட்மிஹாய் யூடியூபில் ‘FLOW, THE SECRED TO HAPPINESS’ என்று நிகழ்த்திய உரை கூட இருக்கிறது, காணொளியாகக் காண!லாம்!

பிறகென்ன, வெற்றி நம் கையில்!

**

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)


Written by London Swaminathan

Post No. 15,124

Date uploaded in London –  27 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் (GEM STONES) ரத்தினைக் கற்களை முந்தைய கட்டுரையில் கண்டோம் ; ஹயக்ரீவர் இதை அகஸ்தியருக்கு உபதேசித்தபோது புண்ணிய நாகரங்களின் பெயர்களையும் (HOLY CITIES) சேர்த்துள்ளார். தேவியின் நாமங்களை மக்கள் தங்களுடைய நகரங்களுக்கு, குறிப்பாக மன்னர்கள், சூட்டிக்கொண்டார்கள் என்பதே சரியான கருத்தாகும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீவிஜயம் என்ற நாமத்தைச் சூட்டிக்கொண்ட  தென் கிழக்கு ஆசிய  நாகரீகம்  நீண்ட காலத்துக்கு கொடி கட்டிப் பறந்தது. அதைப்  போல ஆதிசங்கரரும் ஹயக்ரீவரும்   பெயர் சூட்டிய ஸ்ரீநகர் இன்றுவரை காஷ்மீரின் கவர்ச்சிமிகு தலைநகராக இருந்து வருகிறது.

முதலில் எல்லா நகரங்களின் பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரி ஸ்லோகத்தை எடுத்துக்கொள்வோம்.

விஶாலா கல்யாணீ ஸ்புடருசிரயோத்யா குவலயை:

க்ருபாதாராதாரா கிமபி மதுராபோகவதிகா ।

அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகரவிஸ்தாரவிஜயா

த்ருவம் தத்தன்னாமவ்யவஹரணயோக்யா விஜயதே ॥ 49 ॥

தேவியின்  கண்கள் அகன்று இருப்பதால் – விசாலா ;

கல்யாணங்களை நடக்கச் செய்வதால் கல்யாணி ;

குவளை மலர்களாலும் வெல்லமுடியாத அழகுடையவள் என்பதால் அயோத்யா ;மழை போல் கருணை பொழிவதால் தாரா ;

இனிமையானவள் என்பதால் மதுரா;

போகத்தைத் தரும் பார்வையுடன் சிவனை நோக்குபவள் அல்லது

அபோகவதீ =நீண்ட பார்வை / நெடுநோக்குள்ளவள்  போகவதீ;

காக்கும் சக்தி உடையவள்  அவந்தீ ;

வெற்றியைத் தருபவள் விஜயா;

विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः

कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका।

अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया

ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते॥

viśālā kalyāṇī sphuṭarucirayodhyā kuvalayaiḥ

kṛpādhārādhārā kimapi madhurābhogavatikā |

avantī dṛṣṭiste bahunagaravistāravijayā

dhruvaṁ tattannāmavyavaharaṇayogyā vijayate ||

Meaning:-“All glories to Thy eyes which are wide (vishaalaa); auspicious (kalyaani) because of being brilliantly clear; undefeated (ayodhyaa) even by blue lillies; shedding a continuous flow of grace (kripaadhaaraa-dhaaraa); subtly sweet (madhura); long (abhogavathi); and offering protection to the world (avanthee). Surpassing all these great cities in their uniqueness, Thy glance is fit to be reffered to by the respective appellations.”

முதலில் ஆதிசங்கரரின் வியத்தகு பூகோள அறிவினை மெச்ச  வேண்டும் . எட்டு நகரங்களின் பெயர்களின் வாயிலாக தேவியின் அபூர்வ குணங்களை நமக்கு எடுத்துரைக்கிறார் . அயோத்தி, காசி முதல் விஜயவாடா வரை நமக்கு புவியியலையும் கற்பிக்கிறார் அப்படிப்பட்ட அறிவியல் நோக்கு இருந்ததால்தான் நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு சங்கர மடங்களை நிறுவினார்; காலடியில் துவங்கி  காஷ்மீர்  வரை கால் நடையாகவே சென்று நாட்டினை வலம் வந்தார்

எந்த அசட்டுப்பிச்சுக்களாவது வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டினை ஒற்றுமைப்படுத்தினான் என்று சொன்னால் புறநாநூற்றின் இரண்டாவது பாடலையும் இந்த ஸ்லோகத்தையும் அவர்கள் முகத்தில் வீசலாம்; இமயம் முதல் பொதியம் வரை என்று பாடினார் மிஸ்டர் நாகராஜன் புறநானூற்றில்! அதாவது முடிநகராயர்! இங்கு சங்கரர் அயோத்தியில் துவங்கி விஜயவாடா வரை வந்து விட்டார் என்பது எனதுரையாகும்.

போகவதி என்ற நகரம் நாகலோகத்தில் உள்ள நாகர்களின் தலை  நகரம் ; நல்ல அனுபவம் மிக்க பெண் என்பதால் பெண்களின் பெயர்களாகக் கதைப்புஸ்தகங்களில் காண்கிறோம்.

கல்யாணி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம் ;

மதுரா என்பது கிருஸ்ணன் பிறந்த பூமி; மதுரை மீனாட்சி அம்மனின் நகரம் என்றும் சொல்லலாம்

தாரா DHARA வில் ஒரு மசூதிக்குள் சரஸ்வதி கோவிலும் சித்திரக் கல்வெட்டும் உள்ளது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான உரையாற்றியுள்ளார்

ராமர் பிறந்த அயோத்தியின் பெருமை இப்போது உலகெங்கும் பரவிவிட்டது கோடிக்கணக்கானோர் அந்த ராமர் கோவிலுக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.

விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர்

காசியில் உள்ள விசாலாக்ஷி சமேத விஸ்வநாதரைத் தரிசிக்க ஆயிரக்கக்கான ஆண்டுகளாக இந்துக்கள் காசி யாத்திரை சென்று வருகின்றனர்

இதற்கு ஆதரவான சில நாமங்களை சஹஸ்ரநாமத்தில் காண்போம். லலிதா சகஸ்ரம் நாமத்தில் உள்ள  எல்லா  பெயர்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.

இதில் டாக்கீஸ்வரி கோவில் உள்ள பங்களாதேஷ் தலைநகரம் டாக்கா வருகிறது

பஞ்சாபில் உள்ள ஜலந்தரும் வருகிறது

ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகரும் வருகிறது

சண்டிகர் என்ற நாமத்தில் சண்டியைக் காணலாம்; சிம்லா  என்ற ஹிமாசலப்பிரதேச தலை நகர் சியாமளா என்பதன் மருவு ஆகும்.

கல்கத்தா என்பது காளிகாட் என்பதிலிருந்து வந்ததை நாம் அறிவோம்

மும்பை என்பது மும்பாயி தேவி பெயர்; சென்னை என்பது சென்னம்மா தேவியின் பெயர் காமரூபம் என்னும் அஸ்ஸாம் காமாக்யா தேவி கோவில்கொண்ட இடம் ; கன்னியாகுமரியின் பெயரிலேயே பகவதி உறைகிறாள் காஸ்மீர் முதல் கன்யாகுமரிவரை தேவியின் பூமி என்று சொன்னாலும் மிகை ஆகாது ; இதோ உங்கள் பார்வைக்கு சில நாமங்கள்-

கல்யாணீ – நாமத்தின் எண் 324; காமகோடிகா / காஞ்சி – 589; சண்டிகா-755டாகினீஸ்வரி – டாக்கா -484; துர்கா /துர்காபூர் – 190; திரிபுரா -626; பவானி-112; பாபநாசிநீ-பாபநாசம் – 167;  புவனேஸ்வரீ – புவனேஸ்வர் -294; புஷ்காரா – புஷ்கர் -804; மஹாகாளி – காளிகாட்-கல்கத்தா – 751; மாயா /ஹரித்வார் – 716; விஜயா / விஜயவாடா – 346; வைஷ்ணவீ ; வைஷ்ணவிதேவீ- 892; ஜயா  – ஜெயப்பூர் – 377; ஜாலந்தர ஸ்திதா -ஜலந்தர்– 378;ஸ்ரீ என்ற எழுத்துடன் துவங்கும் 12 பெயர்கள் அம்மனுக்கு உள்ளது ; இதன் தமிழ் வடிவம் திரு என்பதாகும் ; ஆகவே ஸ்ரீநகர் முதல் திருநகர் வரை உள்ள எல்லா ஊர்ப்பெயர்களையும் அம்பாளின் நகரங்களாகவே சொல்லலாம் .

–சுபம்—

Tags- லலிதா சஹஸ்ரநாமத்தில், புண்ணிய நகரங்கள் , ஆதி சங்கரரின், செளந்தர்ய லஹரி

GNANAMAYAM 26th October 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 GMT

Indian Time 5-30 pm (evening)

*****

nithya sowmy

GNANAMAYAM 26th October 2025

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer –

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

ALAYAM ARIVOM TALK ON

KATHIRKAMAM TEMPLE IN SRI LANKA

****

***

SPECIAL EVENT-

Significance of Famous Singer P Susila’s Devotional Songs -Presentation

By

Ms.Nithya Sowmy, London

(Active Social Worker, Producing Programs for Tamil and South Indian Organizations in Britain)

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 26 October 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் 

via Zoom, Facebook and You Tube at the same time.

***

இறைவணக்கம் —

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்,

லதா யோகேஷ் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —

சொற்பொழிவு– தலைப்பு  இலங்கை கதிர்காமம் முருகன் கோவில்,

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பிரபல பாடகி பி.சுசீலாவின் பக்தி கீதங்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி

பக்தி கீதங்களின் சிறப்பினை விளக்கிப் பேசுபவர்

லண்டன் நித்யா ஸெளமி ,

(சமூக ஆர்வலர்தமிழ்தென் இந்திய சங்கங்களில் தீவிர ஈடுபாடும் பங்களிப்பும் வழங்குபவர் )

—subham—

Tags-Gnanamayam Broadcast, 26-10- 2025, programme,