PRAYER IS NOT A SPARE WHEEL, IT IS A STEERING WHEEL (Post No.11,103)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,103

Date uploaded in London – 14 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்– 93

There is a great difference between worry and concern. A worried person only sees the problem and a concerned person solves the problem.

If a woman listens to U for less than 5 minutes then she is Ur daughter.

If a woman listens to U for about 15 minutes then she is Ur sister.

If a woman listens to U for over 30 minutes then she is Ur mother.

And ultimately

If a woman pretends to listen to U all the time but does not remember a word of what U said no matter how important, then she is….???

xxx

Success is getting what you want,

Happiness is wanting what you get.!!!

xxxxxxx

Nobody is inferior, nobody is superior, nobody is equal either. We are all unique, original and incomparable

It is not important how long we live but how well we live. Add meaning to your life each day.

xxxx

*Beautiful 10 lines*

📎 1). PRAYER is not a “spare wheel” that YOU PULL OUT when IN trouble, but it is a “STEERING WHEEL” that DIRECT the RIGHT PATH THROUGHOUT LIFE.

📎2). Why is a CAR’S WINDSHIELD so LARGE & the REAR VIEW MIRROR so small? BECAUSE our PAST is NOT as IMPORTANT as OUR FUTURE. So, LOOK AHEAD and MOVE ON.

📎3). FRIENDSHIP is like a BOOK. It takes a FEW SECONDS to BURN, but it TAKES YEARS to WRITE.

📎4). All THINGS in LIFE are TEMPORARY. If they are GOING WELL, ENJOY them, they WILL NOT LAST FOREVER. If they are going wrong, don’t WORRY, THEY CAN’T LAST LONG EITHER.

📎5). Old FRIENDS are GOLD! NEW friends are DIAMONDS! If you GET a DIAMOND, DON’T FORGET the GOLD! To HOLD a DIAMOND, you ALWAYS NEED a BASE of GOLD!

📎6). Often when WE LOSE HOPE and THINK this is the END, GOD SMILES from ABOVE and SAYS, “RELAX, SWEETHEART; it’s JUST a BEND, NOT THE END!”

📎7). When GOD SOLVES your PROBLEMS, you HAVE FAITH in HIS ABILITIES; when GOD DOESN’T SOLVE YOUR PROBLEMS, HE has FAITH in YOUR ABILITIES.

📎8). A BLIND PERSON asked GOD: “CAN THERE be ANYTHING WORSE THAN LOSING EYE SIGHT?” HE REPLIED: “YES, LOSING YOUR VISION!”

📎9). When YOU PRAY for OTHERS, GOD LISTENS to YOU and BLESSES THEM, and SOMETIMES, when you are SAFE and HAPPY, REMEMBER that SOMEONE has PRAYED for YOU.

📎10). WORRYING does NOT TAKE AWAY TOMORROW’S TROUBLES; IT TAKES AWAY today’s PEACE.

If you ENJOYED this, please COPY it and PASS it to OTHERS. It may BRIGHTEN SOMEONE else’s DAY, too…..“`

Xxx subham xxx

Tags-  ஞான மொழிகள்93

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67 (Post No.11,102)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,102

Date uploaded in London – –    14 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67

பாரதி புதையல் – 1

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் படைப்புகள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வெளிக் கொணரப் பாடுபட்டவர்களுள் மிக முக்கியமானவர்

ரா.அ.பத்மநாபன்.

1958 நவம்பர் மாதம் அமுத நிலையம் பிரைவேட் லிமிடட் வாயிலாக பாரதி புதையல் – முதல் பாகம் என்ற நூலில் பாரதியாரின் வெளிவராத 11 கவிதைகள், 10 கதைகள் மற்றும் 8 கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து அவர் வெளியிட்டார்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறிய அறிமுக உரையையும் அவர் தந்துள்ளார்.

சுதந்திர தேவியிடம் முறையீடு என்ற கட்டுரையில் ‘அன்னாயிங்குனை’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடல் – 1909ஆம் ஆண்டு துருக்கியில் முடியரசை ஒழித்துக் கட்டி குடியரசு நிறுவியதை வரவேற்று அவர் பாடிய பாடல் – இடம் பெறுகிறது.

அடுத்து ‘இந்தத் தெய்வம் நமக்கு அநுகூலம் இனிக் கவலைக் கிடமில்லை’ என்ற பாடல் மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சார்யாரின் புதல்வி யதுகிரி அம்மாள் எழுதி வைத்த கைப்பிரதியிலிருந்து கிடைத்த பாடல் ஆகும்.

அருவி போலக் கவி பொழிய என்று தொடங்கும் ‘குருவிப் பாட்டு’ 1909ஆம் ஆண்டு ஜனவரி மாதல் முதல் தேதி இளைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்க பாரதியார் இயற்றிய பாடல் ஆகும்.

எட்டயபுரத்தில் எட்டயபுர அரசர், அண்ணாமலை ரெட்டியாரின் காவடி சிந்துகளைப் புகழ்ந்து பேச அன்று மாலையே ‘பச்சைத்  திருமயில் வீரன்’ என்று தான் இயற்றிய சிந்து பாடலைப் பாடிக் காட்டி  மன்னரின் பாராட்டுதலைப் பெற்றார் பாரதியார்.

அடுத்து ‘செல்வத்துட் பிறந்தனமா’ என்ற பாடல் பாரதியார் பாடிய பாடலாக 13-4-1958 கல்கி இதழில் எல். கிருஷ்ணஸ்வாமி அவர்கள் வெளியிட்ட பாடலாகும்.

பிரெஞ்சு தேசீய கீதமான “லா மார்ஸெலேஸ்’ என்ற கீதத்தை

‘அன்னை நன்னாட்டின்’ என்று தொடங்கி பாரதியார் தமிழ்ப் படுத்திய கவிதையை மண்டயத்தார் குடும்பத்தைச் சேர்ந்த ரங்கநாயகி அம்மாள் பாதுகாத்து வைத்திருந்தார்; அந்தக் கவிதை அடுத்து இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

மணிமுத்துப் புலவர் என்பவர் எட்டயபுரம் புலவர்களில் ஒருவ்ர். அவரைப் பாராட்டி பாரதியார் இயற்றிய ஒரு வெண்பா அடுத்து இடம் பெறுகிறது. இதை இப்போது வரும் நூல்களில் காண முடிவதில்லை.

அடுத்து வந்தே மாதரம் பாடலில், இடம் பெறாத ஒரு சரணத்தை இங்கு பார்க்கிறோம்.

தேவி நம் பாரத பூமி – எங்கள்

      தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வால்

ஆவியுடல் பொருள் மூன்றும் – அந்த

      அன்னை பொற்றாளினுக்குக் கர்ப்பிதமாக்கி (வந்தே)

என்ற ஆறாவது சரணம் நம்மை மகிழ்விக்கிறது.

பத்தாவது பாடலாக இடம் பெறுவது ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலாகும். 1919இல் டிஸம்பர் மாதம் சுதேச மித்திரன் வருஷ அனுபந்தத்தில் இடம் பெற்ற பாடலின் முழு வடிவத்தை இங்கு காண்கிறோம்.

இறுதிப் பாடலாக, ‘இறவாமை’ என்று பாரதி பாடிய தாயுமானவர் வாழ்த்துப் பாவைக் காண்கிறோம்.

அடுத்து, பாரதியாரின் கதைகளில் பஞ்ச கோணக் கோட்டை, பாம்புக் கதை, காக்கை இலக்கணம் கற்ற கதை, பூலோக ரம்பை, மன்மத ராணி வேணு முதலி, வேணு முதலி விசித்திரம், ஆவணி அவிட்டம், பிராயச் சித்தம், கதவு ஆகிய பாரதியாரின் சுவையான பத்து படைப்புகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

கட்டுரைகள் பகுதியில் ‘தென்றலுடன் பிறந்த பாஷை’ என்ற தலைப்பில் 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா இதழில் பாரதியார் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை இடம் பெறுகிறது.

பாரதியார் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வர முயன்றார்.  ‘தமிழில் எழுத்துக் குறை’ என்ற அவரது கட்டுரை தமிழில் உச்சரிப்புக்குத் தக எழுத்துக்கள் இல்லாத குறையைச் சுட்டிக் காட்டும் ஒன்றாகும்.

‘தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்’ என்ற கட்டுரையில் தமிழின் அருமை பெருமைகளையும் கம்ப ராமாயணத்தின் பெருமையையும் பாரதியார் விளக்குகிறார். ‘தமிழ் நாட்டில் நாடகம்’ என்ற சிறிய கட்டுரையும், அதைத் தொடர்ந்து இந்தியாவுக்குப் பொது பாஷை என்ற தலைப்பில் உள்ள கட்டுரையும் இடம் பெறுகிறது.

சம்ஸ்கிருத பாஷையை இந்தியாவின் பொது மொழியாகக் கொள்ளலாம் என்ற கொள்கையை ஆதரித்து அவர் எழுதியுள்ள கட்டுரையே இந்தியாவுக்கு பொது பாஷை!

அடுத்து ‘நமது கல்வி முறையிலே ஒரு பெருங்குறை’ என்ற கட்டுரையில் நமது உபநிஷத்துக்கள் பற்றி பாதிரிகள் சொல்லி இருக்கும் அபிப்ராயங்கள் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம் சத்துருக்களாக முடிவோம் என்பதை அழகுறச் சுட்டிக் காட்டுகிறார்.

மாதர் என்ற பகுதியில் ‘நாகரிக வளர்ச்சியிலே ஸ்திரீகளுக்குரிய ஸ்தானம்’, ‘ருதுமதி விவாஹம்’ ஆகிய கட்டுரைகள் உள்ளன.

அருமையான இந்தப் புதையலில் உள்ளவை அனைத்தும் அடங்கிய விரிவான முற்றுப் பெற்ற பாரதியாரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் வெளி வர வேண்டும் என்பதே பாரதி ஆர்வலர்களின் ஆசை.

காலம் கனிந்தால் பாரதியாரை முற்றுமாகக் காண முடியும்!

பாரதி அன்பர்களின் பாரதி நூலகத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டிய நூல் இது!

***

tags- பாரதி நூல் 67

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-65 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No. 11,101)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,101

Date uploaded in London – –    13 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-65 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

சமம் 11-24  சமாதானம், அமைதி

சமஹ 6-3 ஒழிவு , செயல்படாமை

சரணம் 2-49 அடைக்கலம், சரணாகதி

சரீரயாத்ரா 3-8 உடலின் பராமரிப்பு

சரீரவாங்மனோபிஹி  18-15 உடல், மனம், பேச்சு

ஆகியவற்றால்

சரீர விமோக்ஷணாத் 5-23 உடல் நீங்குவதற்கு முன்னர் உடலை விட்டு உயிர் பிரிகையில்

சரீரஸ்தம் 17-6 உடலில் உள்ள

சரீரம் 13-1 உடல்

சரீராணி   2-22 உடல்கள்

சரீரணஹ  2-18 ஆன்மாவினுடைய

சரீரே  1-29 உடலில்

சர்ம  11-25 மன அமைதியை

சசாங்கஹ – 11-39 நிலவு

சசி சூர்ய நேத்ரம்  11-19 சந்திரனும் சூரியனும் கண்கள்

சசி சூர்யயோஹா  7-8  சந்திர சூரியர்களிடத்தில்

சசீ  10-21 நிலவு

சஸ்வத் 9-31 சாஸ்வதமான , எப்போதும்

சஸ்த்ர  பாணயஹ  1-46 ஆயுதம் தாங்கிய

சஸ்த்ர ப்ருதாம் 10-31 ஆயுதம் தாங்கியவர்களில்

சஸ்த்ர ஸம்பாதே  1-20 ஆயுதங்களைப் பிரயோகிக்கும்       20 WORDS

சஸ் த்ராணி  2-23  ஆயுதங்கள்

சங்கரஹ  10-23 சங்கரன், சிவன்

சம்ஸசி  5-1 புகழ்கின்றாய்

சாகாஹா 15-2 கிளைகள்

சாதி 2-7  கட்டளையிடு ,போதி , கற்பி

சாந்த ராஜஸம்  6-27 ராஜஸ குணம் நீங்கிய

சாந் தஹ  18-53 சாந்தி, அமைதி அடைந்தவன்

சாந்திம் 2-70 மன அமைதியை 

சாரீரம்  4-21 உடலுக்கு இன்றியமையாத ,உடல் சம்பந்தமான

சாஸ்வத தர்ம கோப்தா  11-18 சாஸ்வதமான தர்மத்தின்  காவலன் 

சாஸ்வதம் 10-12 நிரந்தரமான

சாஸ்வதஹ  2-20 அழியாதது

சாஸ்வதாஹா  1-43  தொன்றுதொட்டு வந்த

சாஸ்வதீஹீ   6-41  நீண்ட காலம்

சாஸ்வதே 8-2 6  என்றும் உள்ளவனவாக

சாஸ்த்ர விதான உக்தம்  16-24 சாஸ்திரங்களில் சொன்னபடி

சாஸ்த்ர விதிம்  16-23 சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதை

சாஸ்திரம் – 15-20 சாத்திரம்,

சிகண்டி 1-17 பீஷ்மரைத் தோற்கடித்தவன்; பெயர் சிகண்டி; ஒரு அலி

சிகரிணாம்  10-23 சிகரங்களில்     40 WORDS

சிரஸா 11-14 தலையால்

சிஷ்யஹ  2-7 சீடன், சிஷ்யன்

சிஷ்யேண  1-3 சீடனால்

சீதோஷ்ண ஸுக துக்க தாஹா  2 -14 குளிர், வெப்பம், இன்ப துன்ப உணர்ச்சிகளைத் தருகின்றன

சீதோஷ்ண ஸுக துக்கேஷு  6-7 குளிர், வெப்பம், இன்ப துன்பங்களிலும்

சுக்ல க்ருஷ்ணே  8-26 ஒளியும் இருளும் ,வெண்மையும் கருப்பும்

சுக்லஹ 8-24 சுக்ல பக்ஷம் ,

சுசஹ 16-5 வருந்துதல் ,துக்கம் , கவலை

சுசிஹி  12-16 பரிசுத்தனாய் , தூய்மையான , சுத்தமான

சுசீனாம்  6-41 பரிசுத்தர்கள் ,தூயோருடைய

சு செள  6-11  சுத்தமான

சுனி  5-18 நாய் இடத்தில்

52 WORDS ARE ADDED FROM PART 65 OF GITA WORD INDEX

TAGS – Gita tamil words, Bhagavad Gita index 65,

அக்ஞானம் என்ற  நல்ல பாம்பு; ஆசை என்னும் முதலை (Post No.11,100)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,100

Date uploaded in London – 13 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தெய்வீக மொழிகள் -92

அக்ஞானம் என்ற பாம்பினால் கடிக்கப்பட்டவனுக்கு “பிரும்ம ஞானம்”,

என்ற மருந்தை பருகாமல் முக்தி கிடைப்பதில்லை.

விவேக சூடாமணி

xxx

தோன்றி நாசமடையும் போகங்களிலிருந்து கிடைக்கும்சுகம் படமெடுத்த

பாம்பின் நிழலில் கிடைக்கும் சுகமாகும்

மகரிஷி வசிஷ்டர்

xxx

சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் அதனால் குருடனுக்கு

பிரயோஜனமில்லை. அதுபோல இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும்

அக்ஞானிகளுக்கு பயனில்லை.

ஞான ரத்னாவளி

xxxx

நீ அக்ஞானம்என்ற பெரிய நல்ல பாம்பால் தீண்டப்பட்டு “நான் கர்த்தா”

என்ற விஷம் ஏறியவனாய் இருக்கிறாய். நான் கர்த்தா அல்ல என்ற

ஞானமாகிய அமுத்த்தை உட் கொண்டு சுகமாய் இருப்பாயாக !

அஷ்டா வக்ர கீதை

xxx

நீ உலகில் வாழ்ந்து வா,ஆனால் உலகப்பற்றுள்ளவனாக இருக்காதே.

ராம கிருஷ்ண பரமஹம்ஸர்

xxx

பிறவிக்கடல் கரையைக் கடக்க முயற்சி செய்யும் உறுதியான உலகப் பற்றுடையவர்களை ஆசை என்னும் முதலை கழுத்தைப் பற்றி வேகமாகஇழுத்து நடுவழியில் மூழ்கடித்து விடுகிறது.

விவேக சூடாமணி

Xxxx

சக்தி நிறைந்த நீர்மேல் நிமிர்ந்து உயர நிற்கும்  தாமரையைப் போலவே

நீரினால் பாதிக்கப்பட முடியாத இறக்கைகளுடன் காற்றில் உயரப் பறக்கும்

கடல் பறவையைப் போலவே பற்று இல்லாமல் வாழ்க்கை நடத்துங்கள்.

குரு நானக்

Xxxx

என்தந்தை, என் தாய், என் மனைவி, என் வீடு, என்று இவ்வாறு உண்டாகும்

“எனது” என்னும் உணர்ச்சியே “மோகம்” எனப்படும்.

பத்ம புராணம்

Xxx

“நான்”, “என்னுடைய” என்ற இரண்டு வகை பற்றுக்களையும் வேர ர

வாசனை இல்லாதபடி அழித்துவிட்டு இறைவனை சேருங்கள்

நம்மாழ்வார்

Xxx

“ம ம” என்ற இரண்டு எழுத்துக்கள் மரணத்திற்கு வழியாகும்.

“ந ம ம”என்ற மூன்றெழுத்துக்கள் அமர நிலைக்கு வழி வகுக்கும்

அனு கீதை

Xxxx

ஒரு நெல்மணி பல நெல்மணிகளாக விளைகிறது.அது போன்ற

ஒருவன செய்யும் ஒவ்வொறு வினையும் பல வினைகளுக்கு

காரணமாக இருக்கும்.

ஞான ரத்னாவளி

Xxx

வெள்ளம் வரும்முன் அணை போட வேண்டும். வள்ளம் பெருக்கெடுத்து

வந்தால் எதுவும் செய்ய இயலாது.இதைப் போலவே மரணம் வரும்முன்

அறம் செய்து மீட்சி பெற வேண்டும்.

சிவப் பிரகாச முனிவர்

Xxx

நோய்கள் பகைவர்களைப்போன்று மனித உடலை பற்றிக் கொண்டு

அழித்து வருகின்றன. மூப்பு என்ற புலி மனித உடலின் மீது பாய்ந்து

அதை தாக்கி வீழ்த்துகிறது.எப்போது உடலின் மேல் பாய்ந்து அதை

உடமை ஆக்கிக் கொள்ளலாம் என்று மரணம் உடலை கவனித்துக்

கொண்டே இருக்கிறது.

ஶ்ரீ ராம பிரான்

Xxx

இயற்கையை மீறுவது யாராலும் முடியாது.உலகில் பிராணிகள் தோன்றி

முதுமையில் இறந்து விடுகின்றன.இறந்ததை நினைத்து வருந்தலாமே

தவிர இறந்தவரை திரும்பிக் கொண்டுவர யாராலும் இயலாது.தன்னுடைய

முறை வரும்போது மரணத்திலிருந்து தப்புபவர்கள் யாரும் இல்லை.

ஶ்ரீ ராம பிரான்

Xxx

வியாபாரத்தில் லாபம் ஏற்படலாம். நஷ்டமும் ஏற்படலாம்.ஆனால்

சத்சங்கத்தால் லாபம் மட்டுமே கிடைக்கும். நஷ்டம் என்பதே

கிடையாது.

சுவாமி ராம் சுக் தாஸ்

Xxxx

சாதுவுடன் சேர்ந்து சோளத்தவிட்டையும் சாப்பிடலாம்.ஆனால் சரக்கரை

பொங்கல் பாயசம் கிடைத்தாலும் பொல்லாதவனுடன் போக க்கூடாது.

மகான் கபீர் தாஸர்

xxx

மகாத்மாக்களுடனும்,சாதுக்களுடனுமே சேர்ந்திருப்பது சத்சங்கமாகும்.

இதை மனிதன் உறுதியுடன் செய்து வந்தால் அவன் இரும்பு நிலையிலிருந்து தங்கமாகி விடுவான்.

ஒரு மகானின் உபதேசம்

Xxx

கங்கை நதி பாவத்தைப் போக்கும்.

மதிநிலா உஷ்ணத்தை போக்கும்.

கற்பக மரம் வறுமையை போக்கும்.

ஆனால் சாதுக்களின் சேர்க்கை பாவம்,தாபம்,வறுமை

ஆகிய மூன்றையும் உடனே போக்கும்.

சுபாஷிதம்

Xxx

நாரதர் தனது சுய சரிதையை வியாசரிடம் கூறும்போது,அவர் முந்திய

கல்பத்தில் சாதுக்களுக்கு பணிவிடை செய்ததையும் அதன் காரணமாக

அவரகளுடைய கிருபைக்கு பாத்திரமாகி அடுத்த பிறவியில் தேவ ரிஷி ஆனதையும் குறிப்பிடுகிறார்

ஶ்ரீமத் பாகவதம்

Xxxx

ஒருவன் ஆன்மீக சாதனைகள் செய்வது தானே பணம் சம்பாதிப்பது

போன்றது. சத் சங்கம் என்பது பணக்கார ருக்கு த த்து போவது போன்றது்

சவீகாரம் போபவன் யாரோ சேர்த்து வைக்கப் பட்ட செலவத்தை

அடைகிறான்.

அதுபோலவே சத்சங்கம் சேர்பவன் சாதனை செய்யாமலே சாதனை

செய்து முடித்தவனாகிறான்.

சுவாமி ராம் சுக் தாஸ்

–subham —

Tags- தெய்வீக மொழிகள் -92 ,அக்ஞானம் ,  நல்ல பாம்பு, ஆசை , முதலை

சந்தோஷமாக இருப்போமே! (Post No.11,099)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,099

Date uploaded in London – –    13 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சந்தோஷமாக இருப்போமே!

ச.நாகராஜன்

சந்தோஷம் என்பது வாழ்க்கை சூழ்நிலை, மரபணு ஆக்கம், நமது வெற்றிகள், திருமண நிலை, சமூக உறவுகள் ஆகிய அனைத்தாலும் உருவாக்கப்படும் ஒன்று.

ஆனால் சந்தோஷமாக இருப்பது என்பது ஒருவரின் சுய கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

சிறு சிறு சந்தோஷம் அளிக்கும் விஷயங்களில் ஈடுபடுவது, சவால் விடும் வேலைகளில் ஈடுபட்டு ஜெயிப்பது, குறிக்கோள் ஒன்றை நிர்ணயித்து அதை நோக்கி நடைபோட்டு அதை அடைவது, சமுக உறவுகளை மேம்படுத்து அது எப்போதுமே சிதையாமல் பாதுகாப்பது, வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன என்பதை அலசி ஆராய்ந்து நிர்ணயிப்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்களே ஒருவரின் சந்தோஷத்தை நிர்ணயிக்கிறது.

எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஒருவரைப் பார்த்தால் நமக்கும் சந்தோஷம் வரும்.

சரி அப்படிப்பட்ட நபரிடம் எந்தெந்த குணாதிசயங்களைக் காண முடியும்?

இதோ இருக்கிறது பட்டியல்!

  • புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பார்.
  • எளிமையாக இருப்பார்; பொறுமையாக இருப்பார்
  • மனம் விட்டுச் சிரிப்பார்; எப்போதும் புன்முறுவல் பூத்த முகம் கொண்டிருப்பார்.
  • காலத்திற்கேற்ப அதனுடன் நீந்திச் செல்வார்.
  • அளவில்லா தயை காட்டுவார்
  • நன்றி மறக்க மாட்டார்
  • தன் உடல்நலத்தைப் பேணி பாதுகாப்பார்; உடல் பயிற்சி உள்ளிட்டவற்றில் அக்கறை கொண்டு ஈடுபடுவார்.
  • அனைவருடனும் ஆரோக்கியமான பழக்கம் கொள்வார்.
  • மற்றவர்களுக்காக சந்தோஷப்படுவார்; அவர்களின் சந்தோஷத்தில் பங்கேற்பார்.
  • அனைவருக்கும் கொடுப்பார். மற்றவர் தருவதை வாங்கிக் கொள்வார்.
  • வாழ்க்கையில் அடிநாதமாக உள்ள ஒரு குறிக்கோளுடன் வாழ்வார்.
  • குறைந்த எதிர்பார்ப்புகளை மட்டுமே கொண்டிருப்பார். வருவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்.
  • ஒருபோதும் மற்றவரை இழிவாகப் பேசமாட்டார்; திட்ட மாட்டார்.
  • எந்த ஒருவரின் மீதும் ஆத்திரம் கொண்டு மனதில் வன்மம் வைக்க மாட்டார்.
  • எடுத்ததற்கெல்லாம் எரிச்சல் பட மாட்டார்.
  • நேற்று நடந்ததைப் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்; நாளை நடக்கப்போவதைப் பற்றி எண்ணி எண்ணி கவலைப்பட மாட்டார்.
  • வம்புச் சண்டை மூட்டி விட்டு மகிழ மாட்டார்; அதில் ஆதாயம் பார்க்க மாட்டார்.
  • அவர் பெரிய தியாகி என்ற பட்டப்பெயரை விரும்பவும் மாட்டார்; யாருடைய தீய செயலுக்கும் பலியாகவும் மாட்டார்.
  • மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அள்ளித் த்ர தயங்கவே மாட்டார்; அவர்கள் சந்தோஷம் அதிகப்படப் பட இவரது சந்தோஷமும் அதிகரிக்கும்.

நவீன அறிவியல் உளவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் 1-3-86 அன்று tamilandvedas.com இல் வெளியான எனது கட்டுரையான (கட்டுரை எண் 2586)

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்!’ என்ற கட்டுரையைப் படித்து அதில் சொல்லப்படும் கருத்துக்களை இந்த அறிவியல் கூற்றுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் நாரதருக்கும் ஸமங்கருக்கும் நடந்த ஸம்வாதத்தை இதில் பார்க்கலாம். அத்துடன் ஜி.ஆர்.ஜோஸ்யரிடம்

மைசூர் மஹாராஜாசர் சி.பி.ராமஸ்வாமி ஐயர் போன்றோர் 

சம்ஸ்க்ருத ஞானத்தை வெளியிடுமாறு ஆலோசனை கூறவே அவர் சான்ஸ்க்ரிட் விஸ்டம்’ (Sanskrit Wisdom) என்ற சிறு நூலை (160 பக்கம்வெளியிட்டார்.

அதில் இடம் பெறும் ஒரு விஷயம் – நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

அதுவும் இந்தக் கட்டுரையில் இடம் பெறுகிறது.

ஆக அறிவியலும் நமது ஆன்மீக நூல்களும் எப்படி ஒத்துப் போகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படலாம்.

நாமும் தான் சந்தோஷமாக இருப்போமே!

**

குறிப்பு : சைக்காலஜி டு டே (Psychology Today) ஆங்கில இதழில் வந்த கட்டுரையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட குறிப்புகள்.

நன்றி : சைக்காலஜி டுடே

Tags- சந்தோஷம்

MY VISIT TO TIRUVANNAMALAI SHIVA TEMPLE AND ASHRAMS OF RAMANA & SESHADRI SWAMIGAL (11,098)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,098

Date uploaded in London – –    12 JULY 2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

I went to Tiruvannamalai Arunachaleswarar Shiva Temple, Ramana Ashram (AASHRAMAM IN TAMIL) and Seshadri Swamigal Ashram on 11th June 2022, just 36 hours before flying to London. My brother Prof.Suryanarayanan accompanied me ad we did Giri Pradakshinaam as well by car! This is not my first trip; probably third or fourth visit. This holy place became holier by the association of great saints like Sri Ramanar, Sri Seshadri Swamigal and Yogi Ramsuratkumar.

BULLET POINTS

*T V Malai is just four hours by car from Chennai. Exactly 192 kilometres from Chennai by road.

*It is representing AGNI (fire) among five elements

*The Shiva temple and the holy town not only attracted saints like Ramana, Seshadri Swamigal but also a great Hindu King Veera Vallalan (Ballala in Kannada) of Karnataka. He made T V Malai as his second capital. It happened 900 years ago.

*The temple is huge and has several places associated with Ramana Maharishi, Tamil devotional poet Arunagirinathar and Karnataka King Veera Vallalan.

(The stories are already in my blogs. Please see the links below)

*The temple has special rituals in connection with Veera Vallala (Bellalan)

*Main Shrines:

God Shiva – Arunachaleswar

Goddess Parvati – Unnaamulai Amman (Abhita Kujambal in Sanskrit)

*Sung and sanctified by three Tamil Saivite saints in Thevara hymns.

*Giri Valam (Giri Pradakshinam) is very popular here. It is a 12 kilometre journey around the Hill (Giri in Sanskrit, Malai in Tamil). Thousands of people go around it by foot. On Full moon day, the crowd swells to lakhs.

*The Giri (Anna malai) is home to several saints and Siddhas. Devotees believe saints live there even now, but invisible to ordinary men.

*Around the hills, several Shiva Lingas (Linga means symbol in Sanskrit. Linga represents formless God). Devotees stop at each Linga and pay their obeisance (See my attached map)

*Ramana Maharishi Ashram attracts a lot of foreigners.

Doing Dhyana (meditation) in silence in the hall is popular.

*A strange ritual attached to the temple is Lord Shiva himself doing the funeral rites to the great Hindu King Veera Vallala every year.

*Another strange ritual is procession of God comes through the Vallalan tower on the tenth day of annual festival (every ritual has a story behind it).

*The Eastern Tower in the temple is one of the tallest towers in South India with a height of 217 feet. It is a 11 tier tower. Thousand  Pillar Mandap here shows Nayak and Vijayanagara influence. The temple has over 1000 year old history.

*There is a famous Skanda (Murugan in Tamil) shrine inside the temple. HE was the one who saved the great Tamil poet Arunagirinathar when he attempted suicide. He jumped down from the top of the tower, but Lord Skanda/ Kartikeya saved him.

*Another legend is that the poet became a parrot and now there is a tower where there is a parrot sculpture. There is a shrine for Arunagiri inside the temple

*The Kartikai (Krittika in Sanskrit) Deepa Festival attracts million devotees every year. The light that is lit on top of the Anna Malai hill is visible for miles away.

xxx

MY ASSOCIATION WITH THE TEMPLE

We had good darshan in the temple. But Seshadri Swamigal ashram where his Samadhi is located was closed at 12 noon. We went round it and peeped through the iron gate.  Only 60 percent view. Ramana ashram opened at 2 pm for the afternoon darshan. We sat at the Samadhi and did meditation for some time.

There is an English woman by name Mrs Iswari Kamalabaskaran (who changed her Christian name to Iswari) in London suburb who was associated with the oldest Highgate Murugan Temple in London and Tiruvannamalai Temple in Tamil Nadu. She has written a very informative book on Tiruvannamalai with title ‘THE LIGHT OF ARUNACHALESWAR’.  I TRANSLATED THE 370 PAGE ENGLISH BOOK IN TO TAMIL AS A SERVICE TO HINDUISM. I refused to accept money for the translation work. Because of this work, I came to know about the minute details of the temple and its history. That is the only temple other than my own town Madurai Meenakshi Temple, which I studied thoroughly for 25 years. (My article THE WONDER THAT IS MADURAI MEENKASHI TEMPLE is still getting hundreds of hits every day.)

Last but not the least,

There are several Tamil and English articles in my two blogs about the great saints of Tiruvannamalai written by me and my brother S Nagarajan.

The Wonder that is Madurai Meenakshi Temple

https://tamilandvedas.com › 2013/09/29 › the-wonder-t…

29 Sept 2013 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. The Wonder that is Madurai Meenakshi Temple.

MY OLD ARTICLES ON TIRUVANNAMALAI

https://tamilandvedas.com/tag/tiruvannamalai/

Tiruvannamalai | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › tiruvannamalai

3 Feb 2015 — King Vallalan was a great devotee of Lord Shiva and used to visit Tiruvannamalai, one of the Panchabhuta (five elements) Shrines.


God performs Funeral Rites: Strange Custom in Tiruvannamalai

https://tamilandvedas.com › 2015/02/03 › god-perform…

3 Feb 2015 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. God performs Funeral Rites: Strange Custom in …

The Great Lamp Festival- Karthikai Deepam – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/11/24 › the-great-lam…

24 Nov 2012 — (27th November 2012 is Karthikai Deepam Festival in Tamil Nadu) … of the 2668 feet hill, a huge lamp is lit on the Karthikai deepa day.

—Subham–

TAGS-  TIRUVANNAMALAI, RAMANA MAHARISHI, SESHADRI SWAMIGAL, ASHRAM, ANNAMALAI, VEERA VALLALAN, BALLALA, ARUNAGIRINATHAR, GIRI PRADAKSHINAM, ARUNACHALESWAR TEMPLE

நடந்தவை தான் நம்புங்கள் – 27 (Post No.11,097)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,097

Date uploaded in London – –    12 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 27

ச.நாகராஜன்

1

கொசுக்கள் பற்றிய புள்ளிவிவரம் தேவையா?!

1937இல் சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக இருந்தார் ராஜாஜி. ஏழைகளிடம் அநியாய வட்டி வசூலிக்கும் அநியாய வட்டிக்காரர்களிடமிருந்து ஏழைகளைக் காப்பாற்ற நினைத்த அவர், அதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வர நினைத்து அவை முன்னே அதை சமர்ப்பித்தார்.

அப்போது டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவையில் பேசும் போது இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னால் எத்தனை ஏழைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் எடுக்கப்படவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

உடனே ராஜாஜி, “எனது அருமை நண்பர் கொசுக்கடியால் அவதிப்பட்டு கொசுவலை வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது நிச்சயமாக அவர் எத்தனை கொசுக்கள் தன்னைக் கடிக்கின்றன, அவை மைலாப்பூரிலிருந்து ஜார்ஜ் டவுன் வரை எந்த விகிதத்தில் பரவிப் பரந்திருக்கின்றன என்பன உள்ளிட்ட புள்ளி விவரங்களை எடுக்கமாட்டார் என்று நம்புகிறேன்” என்று பதில் அளித்தார்.

2

மெஜாரிடியும் லாஜிக்கும்!

ராஜாஜி உள்துறை மந்திரியாக இருந்த போது அந்நிய வெளி விவகார கமிட்டிக்கு சில பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு குழுவின் கூட்டம் கூடியது. ராஜாஜி தன் கருத்துக்களை முன் வைத்தார். ஆனால் குழுவிலிருந்த ஜவஹர்லால் நேருவிற்கு அந்தக் கருத்துக்கள் பிடிக்கவில்லை. அவர் அதை ஏற்கவில்லை. அவருடன் இரண்டு மந்திரிகளும் சேர்ந்து கொண்டனர். ராஜாஜியோ விடாது தன் கருத்துக்களை வற்புறுத்தினார்.

நேரு, “ராஜாஜி, மெஜாரிட்டி என் பக்கம் தான் இருக்கிறது” என்று கூறினார்.

உடனே ராஜாஜி, “ஆனால் லாஜிக் என் பக்கம் இருக்கிறதே” என்று பதில் கூறினார்.

3

டீயே மதுரம்!

பிரபல எழுத்தாளரான கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை பிரபல நகைச்சுவை நடிகரான என்.எஸ். கிருஷ்ணனைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

என்.எஸ். கிருஷ்ணனுக்கும் அவர் மனைவியான டி.ஏ. மதுரத்திற்கும் ஒரே சந்தோஷம்.

மிக்க மகிழ்ச்சியுடன் இருவரும் அவரை வரவேற்றனர்.

என்.எஸ். கிருஷ்ணன் அன்புடன், “ எது, காப்பியா, டீயா?” என்று உபசரித்துக் கேட்டார்.

உடனே கல்கி சொன்னார் : “டீயே மதுரம்”

T.A.மதுரமும் என்.எஸ். கிருஷ்ணனும் வெகுவாகச் சிரித்து மகிழ்ந்தனர்.

4

டைம் அண்ட் ஸ்பேஸ்

TIME AND SPACE

பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை ஒரு அறிவியல் கூட்டத்திற்குச் சற்று தாமதமாக வந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க -‘present’ செய்ய – வேண்டி இருந்தது.

தான் தாமதமாக வந்ததற்கு நிகழ்ச்சிப் பொறுப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் ஐன்ஸ்டீன். தனது பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

ஆனால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர், அவர் நேரம் கழித்து வந்ததைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்பி, “It is about Time..”

என்றார்.

“AND SPACE” என்று முடித்தார் ஐன்ஸ்டீன்.

அவரது ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு TIME AND SPACE!

5

பெர்னார்ட் ஷா ஒரு இசைப் பிரியரா?

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா இளைஞராக இருந்த சமயம் அவரை ஒரு குடும்பத்தினர் விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வீட்டிற்கு அவர் சென்ற போது குடும்பத் தலைவரின் பெண் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள்.

பெர்னார்ட் ஷாவைப் பார்த்த அந்தப் பெண், சந்தோஷத்துடன், “உங்களுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்குமாமே” என்று கேட்டாள்.

அதற்கு பெர்னார்ட் ஷா, “அதனால் பரவாயில்லை, நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்” என்றார்.

6

டிக்‌ஷனரியை ஜான்ஸன் தொகுத்தது எப்படி?

பிரம்மாண்டமான ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவெல் ஜான்ஸன். ஒருமுறை அவரது உழைப்பை எண்ணி வியந்த ஒருவர் அவரிடம், “அவ்வளவு பெரிய அகராதியை எப்படித் தொகுத்தீர்கள்?” என்று வியப்புடன் கேட்டார்.

உடனே ஜான்ஸன் சிரித்தவாறே, ஓ! அதுவா? என் மனைவியுடன் சண்டை போடும் போது ஒரு வார்த்தை இன்னொரு வார்த்தைக்குக் கொண்டு போவது போலத் தான் அது!” என்றார்.

7

வாழ்க்கையில் நகைச்சுவை முக்கியம்!

மனித வாழ்க்கையில் நகைச்சுவை மிக முக்கியம்.

நகைச்சுவை உணர்வு இல்லாத ஒரு மனிதன் ஸ்பிரிங் இல்லாத வாகனம் போல. சாலையில் கிடக்கும் ஒவ்வொரு கூழாங்கல் மேலும் அந்த வாகனம் போகும் போது பயங்கரமாகக் குலுங்கி ஆடும் என்று சொன்னார் ஹென்றி வார்ட் பீச்சர். (Henry Ward Beecher)

ஆப்ரஹாம் லிங்கன் தன் மேஜையின் மீது எப்போதும் ஒரு ஜோக் புத்தகத்தை வைத்திருப்பாராம்!

பெரிய மனிதர்களின் முதிர்ச்சிக்கு இன்றியமையாத காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வே தான்.

நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லை என்றால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்றார் மஹாத்மா காந்திஜி!

உண்மை தான் – சிரிப்பவனே சிறந்து வாழ்வான் என்பது பழமொழி.

சிரித்து மகிழ்வோம்; சிறந்து வாழ்வோம்!!

நன்றி.

**

முற்றும்

tags- டீயே மதுரம், என்.எஸ். கிருஷ்ணன்,  நடந்தவை தான் நம்புங்கள் – 27

பகவத் கீதையில் சுவையான சொற்கள்- ‘பிரயாண காலே’(प्रयाणकाले) Post No.11,096

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,096

Date uploaded in London – –    11 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ப்ரயாணம்  என்ற சொல்லை தமிழில் பயணம் என்று சொல்லுவோம். ‘ப்ர’  என்ற  சம்ஸ்க்ருத கூட்டெழுத்து தமிழ் இலக்கணப்படி ‘ப’ ஆகும். ப்ரதிமா என்பதை படிமம் (சிலை) என்றும்  ப்ரவாளம் என்பதை பவளம் என்றும் எழுதுவோம். காரணம் என்னவெனில் புள்ளி வைத்த மெய்யெழுத்தில் தமிழ் சொற்கள் துவங்கா. ஸ்படிகம் என்பதைக்கூட  ‘படிகம்’ என்றுதானெழுதுவோம். நிற்க.

தமிழில் பயணம் என்றால் ஒரு ஊரிலிருந்து அல்லது ஒரு நாட்டிலிருந்து மற்ற ஊருக்கோ நாட்டிற்கோ செல்வதைக்(Travel, Journey)  குறிக்கும். சங்க காலத்தில் ‘செலவு’ (Travel) என்ற சொல்லையே பயன்படுத்தினர்

பயண நூல்கள் – சில எடுத்துக் காட்டுகள் :–

ஏ.கே செட்டியாரின் ‘பிரயாணக் கட்டுரைகள் , பிரயாண நினைவுகள்’

பரணீதரனின் ‘புனித பயணம்’

சோமலெ எழுதிய ‘எனது பிரயாண நினைவுகள்’

இது தவிர பத்திரிகைகளிலும் , அண்மைக் காலமாக  பிளாக் (blogs) குகளிலும் ‘எனது ……………………. பயணம்’ என்ற தலைப்பில் பயணம் என்ற சொல்லைக் காணலாம்.

ஆனால் சுமார் 10, 000 சொற்கள் உடைய பகவத் கீதையில் பிரயாண காலம் என்பது நாம் எதிர்பாராத பொருளில் வருகிறது. அதாவது ‘இறுதி யாத்திரை’ பற்றிய சொல்!!

பகவத் கீதை எட்டாவது அத்தியாயத்தில் (8-2; 8-10) இந்த சொற்கள் வருகின்றன.

சாதாரணமாக நான் எழுதினால், ‘பிரயாண காலத்தில்  அதிகம் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸிலோ காரிலோ போகக் கூடாது’ என்று எழுதுவேன்.. உங்களுக்கும் எளிதில் அர்த்தம் புரியும். ஆனால் கிருஷ்ண  பரமாத்வோ , கொஞ்சமும்  தயங்காமல் இந்தச் சொல்லை இறுதி யாத்திரைக்குப் பயன்படுத்துகிறார். ஆகையால் சம்ஸ்க்ருதம் தெரிந்தவருடன் பேசுகையில் இந்த அமங்கலச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது.

प्रयाणकाले

இதோ அந்த இரண்டு ஸ்லோகங்கள்

அதியஜ்ஞ: கத²ம் கோத்ர தே³ஹேஸ்மிந்மதுஸூத³|
ப்ரயாணகாலே ச கத²ம் ஜ்ஞேயோஸி நியதாத்மபி⁴: || 8- 2||

மது⁴ஸூத³ந! அதி⁴யஜ்ஞ: அத்ர க: = யாகஞானம் என்பதென்ன?
அஸ்மிந் தே³ஹே கத²ம் ? = இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்?)
ச நியதாத்மபி⁴: = மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால்
ப்ரயாணகாலே கத²ம் ஜ்ஞேய: அஸி = இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்?

யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?

xxxx

ப்ரயாணகாலே மநஸாசலேந பக்த்யா யுக்தோ யோக³³லேந சைவ |
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்²ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி தி³வ்யம் || 8- 10||

ப்ரயாணகாலே = இறுதிக் காலத்தில்
அசலேந மநஸா = அசைவற்ற மனத்துடன்
ப்⁴ருவோ: மத்⁴யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்²ய = புருவங்களிடையே உயிரை நன்கேற்றி
ப⁴க்த்யா யோக³ப³லேந ச யுக்த: = பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு)
தம் தி³வ்யம் பரம் புருஷம் உபைதி = அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்

இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான். (பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் )

மேற்கூறிய இரண்டு ஸ்லோகங்களும் ‘சங்கதம்.காம்’  பதிவிலிருந்து எடுக்கப்பட்டன ;நன்றி

ஆனால் பொதுவான அர்த்தத்தில் நாம் பயன்படுத்தும் பயணம் என்பது சரியே. புறப்படுதல், ஆரம்பம், தாக்குதல், படை எடுப்பு, குதிரை அல்லது கழுதையின் முதுகில் பயணம் செய்தல் போன்ற பல பொருட்களில் ப்ரயாணம் என்பதை சம்ஸ்க்ருத நூல்கள் பயன்படுத்துவதை விஸ்டம் லைப்ரரி வெப்சைட் காட்டுகிறது.

Prayāṇa (प्रयाण) refers to “journeys”, according to the 11th century Jñānārṇava, a treatise on Jain Yoga in roughly 2200 Sanskrit verses.

Sanskrit dictionary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Prayāṇa (प्रयाण).—

1) Setting out, starting, departure.

2) A march, journey; मार्गं तावच्छृणु कथयतस्त्वत्प्रयाणानुरूपम् (mārga tāvacchṛṇu kathayatastvatprayāānurūpam) Meghadūta 13; Mahābhārata (Bombay) 7.166.1.

3) Progress, advance.

4) The march (of an enemy), an attack, invasion, expedition; कामं पुरः शुक्रमिव प्रयाणे (kāma pura śukramiva prayāe) Kumārasambhava 3.43; R.6.33; प्रयाणपटहध्वनिं प्रथयति स्म ताराध्वनि (prayāapaahadhvani prathayati sma tārādhvani) Rāmāyaṇachampū.

5) Beginning, commencement.

6) Death, departure (from the world); 

7) The back of a horse; Mahābhārata (Bombay) 3.71.16.

8) The hinder part of any animal.

பகவத் கீதையில் உள்ள 10, 000 சொற்களை தொடர்ந்து ஆராய்வோம்.

— subham-

Tags- ப்ரயாணம், பயணம், பிரயாண காலம்

நடந்தவை தான் நம்புங்கள் – 26 (Post No.11,095)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,095

Date uploaded in London – –    11 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 26

ச.நாகராஜன்

பட்டாபி சீதாராமையா தனது Feathers and Stones என்ற நூலில் குறிப்பிடும் சம்பவங்கள் இவை.

1

கூடுதலாக வந்த நாணயங்கள்!

ஒருவர் ஒரு ரயில் நிலையத்திற்குச் சென்று ஸ்லாட் மெஷினில் ஒரு அணாவைப் போட்டு விட்டு டிராயரைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கட் இருக்கும். அதே போல சிகரட் பெட்டி, தீப்பெட்டி, சாக்லட் அல்லது சில்லறை நாணயங்கள் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் பெற முடியும். இந்த ஸ்லாட் மெஷின்களைப் பற்றி பல விசித்திரமான கதைகள் உண்டு.

ஒரு முறை நண்பர் ஒருவர் இதில் அரை ஷில்லிங் நாணயம் ஒன்றைப் போட்டார். அவருக்கு வர வேண்டியது 6 காப்பர் நாணயங்கள். ஆனால் அவருக்கு வந்ததோ 26 காப்பர் நாணயங்கள்! கூடுதலாக உள்ள 20 நாணயங்களை அவர் என்ன செய்வது? ரயில்வே அதிகாரிகள் இது பற்றிய புகாரை வாங்க மறுத்து விட்டார்கள். ஏனெனில் அது அனாவசியமாக கடிதத் தொடர்பை நீட்டித்துக் கொண்டே போகும். அது மட்டுமல்ல, இந்த தவறுதலுக்காக அவர்கள் பக்கம் யாரேனும் ஒருவர் பலி ஆக வேண்டி இருக்கும். கூடுதலாக நிறைய நாணயங்களைப் பெற்றதால் அவர் மனச்சாட்சி உறுத்த அவர் என்னிடம் வந்து யோசனை கேட்டார் -“ இப்படி உங்களுக்கு நேர்ந்தது என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று?”

உடனே நான் சொன்னேன் -“ ஆறு நாணயங்களை நான் வைத்துக் கொள்வேன். மீதியை இருபது பிச்சைக்காரர்களுக்குப் போட்டு விடுவேன்.”

அதற்கு அவர், “ஓ! எங்கள் இங்கிலாந்தில் பிச்சைக்காரர்களே கிடையாது” என்று ஒரு போடு போட்டார்.

ஆனால் அவர் தனக்குப் பல சமயம் ஒரு பென்னி நாணயம் போட்டு ஒன்றுமே வராததை நினைத்துத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டார்.

(அதற்கு நஷ்ட ஈடாக இதை அவர் வைத்துக் கொண்டார் போலும்!)

2

ஒரு அணாவுக்கு இருவர் எடை பார்ப்பது எப்படி?

இந்த ஸ்லாட் மெஷின் சம்பவம் அலெக்ஸாண்டர் உபயோகித்த எடை  மெஷினைப் பற்றிய பேச்சுக்குத் திரும்பியது.

ஒருவருடைய சரியான எடையைக் கண்டுபிடிக்க பல சரிபார்க்கும் கணக்குகளைப் போட வேண்டி இருக்கும்.

அதில் நின்று,  முன்னால் குனிந்தால் 154 பவுண்ட் என்று அது காண்பிக்கும். பின்னால் சாய்ந்தாலோ 350 பவுண்ட் என்று அது காண்பிக்கும். ஆகவே உங்கள் எடையை கூட்டிக் கழித்து பார்த்து 152 என்று கொள்ள வேண்டி இருக்கும். பல ரயில் நிலையங்களில் சில எடை மெஷின்கள் செங்குத்தாக இருக்கும். மேலே டயல் இருக்கும். அதில் ஒரு அணாவைப் போட்டு உங்கள் எடையைப் பார்க்க வேண்டி இருக்கும். சில சமயங்களில் ஒரு அணாவைப் போட்டு இரண்டு பேரின் எடையைக் கூடப் பார்க்கலாம்.

ஒரு பெண்மணி, அவள் புருஷன், அல்லது இரண்டு பெண்மணிகள் அல்லது ஒருவரோடு அவர் குழந்தை என்று இப்படி இருவர் எடையைப் பார்க்க முடியும். அப்போது என்ன செய்வது?

ஒரு அணாவை ஓட்டை வழியே போடுங்கள். இருவரும் ஏறி நில்லுங்கள். எடையைக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒருவர் இறங்கி விடுங்கள். இப்போது வரும் எடையைக் குறித்துக் கொள்ளுங்கள். முதலில் உள்ள எடையை இப்போதுள்ள எடையிலிருந்து கிடைத்தால் வருவது கீழே இறங்கியவரின் எடை.

என்ன கணக்கு சரி தானே! இப்படிப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3

மொழிக் குழப்பம்

ஒரு சேட் தனது உதவியாளரைக் கூப்பிட்டார். அவர் அவசரமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருந்ததால் ஒரு தந்தியை தனது வீட்டிற்கு அனுப்பச் சொன்னார்.

உதவியாளரும் தந்தியை அனுப்பினார். தந்தி இது தான்.

பாபுஜி ஆஜ் மர் கயே. படி பஹு கோ பேஜ் தோ!

பாபுஜி – பாபுஜி,; ஆஜ் – இன்று, மர் கயே – இறந்து விட்டார்.

படி  பஹூ கோ – பெரிய பெண்ணை

பேஜ் தோ – அனுப்பு.

அலறி அடித்துக் கொண்டு வந்தாள் பெண்.

ஆனால் பாபுஜி இறக்கவில்லை என்று தெரிந்து கொண்டு அனுப்பி இருக்க வேண்டிய தந்தியின் வாசகத்தையும் கண்டு பிடித்தாள்.

உதவியாளர் அனுப்பி இருக்க வேண்டிய தந்தி இது தான்.

பாபுஜி ஆஜ்மீர் கயே படி பஹி கோ பேஜ் தோ

பாபுஜி – பாபுஜி, ஆஜ்மீர் கயே – ஆஜ்மீருக்குப் போயிருக்கிறார்

பாடி பஹி கோ – பெரிய கணக்குப் புத்தகத்தை

பேஜ் தோ – அனுப்பு.

ஆஜ்மீர், பஹு, பஹி என்ற வார்த்தைகள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன, அவ்வளவு தான்!

இப்படி ஏராளமான சுவையான நகைச்சுவைகளையும், உண்மையான சம்பவங்களையும் குறித்து வைத்துள்ளார் பட்டாபி சீதாராமையா!

***

Tags- நடந்தவை தான் நம்புங்கள் 26, பட்டாபி சீதாராமையா

My Visit to Thiruppullani Adi Jagannatha Perumal / Vishnu Temple (Post No.11,094)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,094

Date uploaded in London – –    10 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Thiruppullani (Pronunciation – Thiruppullaani) is situated 11 kilometres from Ramanathapuram. It is one of the 108 Vaishnava Divyadesas (108 holy Vishnu temples).

Vishnu devotees consider it to visit all the 108 Divyadesas, located from the Southernmost Kanyakumari district to the Northernmost Himalayan states.

I went to Thiruppullani on 31st of May,2022 on my return journey from Rameswaram to Madurai. One can easily cover at least four shrines in one day- Rameswaram, Dhanuskoti, Thiruppullani and Thiru Uttarakosamangai.

Though it is not my first visit , I found everything there new. What I remember from my previous visit is the huge waves at Sethukkarai , sea coast three kilometres from the temple. In Rameswaram the sea looks like a vast lake with very little waves. In Sethukkarai, one could see huge waves. Devotees who have time take bath here and then visit Adi Jagannatha Perumal Temple (Pronunciation- Aathi Jagannaatha Perumaal Kovil)

(Perumaal – Vishnu; Kovil- Temple).

Significance of the temple in Bullet Points:-

*The place is called Dharbasayanam in Sanskrit.

Dharba= Thiru Pul (Holy grass).

*The place is also known as Aathi Sethu (Old or Original Bridge). Lord Rama is said to have constructed the bridge from here . Or first constructed from here ;later hanged to Dhanushkoti; another possibility is constructing from  different locations and linking them

*Sung and glorified and sanctified by Thiru Mangai Azvar (pronunciation- Aalvaar). Tamil Vaishnavites call this Mangalaa Saasanam.

*Main shrine is Adi Jagannatha Perumal; but there are two more sub shrines Dharba Sayana Rama and Pattabhisheka Rama. All these are associated with Ramayana. In addition there is one Kalyana Krishna shrine. Kalyana krishna is a rare and beautiful metal idol of Dancing Krishna on Snake.

*Among the goddesses, the main shrine is Padamasani. And there is one for Kalyanavalli.

*Like all Vishnu temples, there is a sub shrine for Andal (Aandaal)

*The temple has a huge tank in front of it.

*Rama prayed to Samudra Raja (King of Ocean) from here before constructing the bridge to Sri Lanka.

*King of Ocean answered Rama’s prayer late and apologised. His figure and Lakshmna, Rama’s bother is also sculpted here.

*Dharba is holy grass, Anai is pillow, Sayana is bed. Since Rama slept here for three days praying to Ocean King, the place is called Dharbasayana= Thirup Pul Aani.

Dharbasayana Rama inside the temple is in reclining posture.

*Another legend is Rama gave a bow to one of the Rishis here and the Rishi was Kanvar.

*Historically it is at least 1200 years old. Chozas, Pandyas, Nayak Kings and Sri Lankan kings added several structures to the temple.

Childless couple pray here in the temple for issues  and at near by Devippattinam.also known as Navabhashanam.

–subham-

Tags- Thiruppullani, Sethukkarai, Adi Jagannatha temple, Samudra rajan