இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 1 (Post No.10,887)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,887

Date uploaded in London – –     25 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம்! – 1

ச.நாகராஜன்

ஆச்சரியம்! ஆனால் உண்மை!!

இது உண்மையில் நம் முன்னே இப்போது நடக்கும் சம்பவம்.

23-10-2021 அன்று திவாகர் தத்தா ஹோம் நியூஸ் ரிபோர்ட்ஸ் வோர்ல்ட் – இல்

தரும் செய்தி இது. (Dibakar Dutta writes in Home News Reports World on 23 Octobeer 2021)

மஜபஹித்  சாம்ராஜ்யத்தின் மன்னனான ஐந்தாம் ப்ரவிஜயன்(King Brawijaya V of the Majapahit Empire).  1478ஆம் ஆண்டு ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினான். அப்போது ஹிந்து குருவான சப்தபாலன் (  Hindu Priest Sabdapalon) அது பொறுக்க மாட்டாமல் ஒரு சாபம் கொடுத்தார். தானே 500 வருடங்கள் கழித்து வந்து ஹிந்து தர்மத்தின் புகழை நிலை நிறுத்துவதாக அவர் கூறினார்.

2021 அக்டோபர் 26ஆம் தேதி.

இந்தோனேஷியாவில் பாலியில் சுக்மவதி சுகர்ணோபுத்ரி இஸ்லாமிலிருந்து ஹிந்து மதத்திற்குத் திரும்பப் போவதாக அறிவிப்பு வெளியானது..

சுக்மவதி சுகர்ணோபுத்ரி இந்தோனேஷியாவை நிறுவிய ஸ்தாபகரான சுகர்ணோவுக்கும் சுகர்ணோவின் மூன்றாவது மனைவியான பத்மாவதிக்கும் பிறந்தவர்.

அவர் இந்தோனேஷியாவின் ஐந்தாவது ஜனாதிபதியான மேகவதி சுகர்ணோபுத்ரியின் சகோதரியும் ஆவார்.

இந்தோனேஷியானின் ஆட்சிபீட அதிகாரத்தில் சக்தி வாய்ந்த குடும்பத்தில் ஒருவராக அமையும் சுக்மவதியின் இந்த தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பாலியைச் சேர்ந்த அவரது பாட்டியார் இடா ஆயு ந்யோமன் ராய் ஸ்ரிம்பென் அவர்களின் ஊக்குவிப்பே இதற்குக் காரணமாகும்.

இதற்கு முன்னரே சுக்மவதி பல ஹிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்; ஹிந்து மடாதிபதிகள் பலருடனும் பேசியுள்ளார்.

இப்படி அவர் ஹிந்துவாக மாற அவரது சகோதரர்களான குண்டூர் சோயகர்ணோபுத்ர மற்றும் குரு சோயகர்ணோபுத்ர ஆகியோரும் சகோதரியான மேகவதி சுகர்ணோபுத்ரியும் ஆதரவு தந்துள்ளனர்.

அவரது மகன் மற்றும் மகளான முஹம்மத் புத்ர பெரிவிரா உடாமா, இளவரசர் ஹர்யோ பாண்றஜர்னா சுமத்ரா ஜிவானெகரா மற்றும் குஸ்தி ரடன் ஆயு புத்ரி சினிவதி ஆகியோரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

சுகர்ணோ மையம் பாலியிலிருந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று இந்தோனேஷியா தான் மிகப் பெரிய இஸ்லாமிய நாடாக உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த தீவில் ஹிந்து மதம் செல்வாக்குள்ள ஒரு மதமாகத் திகழ்ந்தது.

கி.பி.முதல் நூற்றாண்டில் ஜாவா, சுமத்ரா ஆகியா தீவுகளில் ஹிந்து மதம் பரவியது. 15ஆம் நூற்றாண்டு வரை இதன் புகழ் மங்கவில்லை.

இஸ்லாமின் வருகையை ஒட்டி ஹிந்து மதம் க்ஷீணமடையத் தொடங்கியது.

இந்த நாடும் இஸ்லாமியர் அதிகமுள்ள நாடாக மாறியது.

இன்று இந்தோனேஷியாவில் உள்ள ஹிந்துக்கள் அவர்களின்  முன்னோர்களான மன்னன் ஜயபய மற்றும் குரு சப்தபாலனின் தீர்க்கதரிசன வாக்கைப் பெரிதும் நம்புகின்றனர்.

சப்த பாலனின் தீர்க்கதரிசன வாக்கு

சப்தபாலன் மன்னன் ஐந்தாம் ப்ரவிஜயனின் அரசவையில் செல்வாக்குள்ள ஒரு ராஜகுருவாக இருந்தார். 1478ஆம் ஆண்டு அந்த நாடு இஸ்லாமியரிடம் வீழ்ச்சி அடையும் சமயம் அவர் இஸ்லாமுக்கு மாறினார்.

சப்தபாலன் மன்னனுக்கு சாபம் அளித்தார்.

தான் இன்னும் 500 ஆண்டுகளில் அரசில் லஞ்சம் தாண்டவமாடும் போது, இயற்கை சீரழிவுகளின் போது மீண்டும் வருவதாக சபதமிட்டார்.

இஸ்லாமின் பிடியிலிருந்து இந்தோனேஷியாவை விடுவிப்பதாக அவர் சபதமிட்டதோடு மீண்டும் பழைய புகழுடன் ஹிந்து மதத்தை நிலைநாட்டப் போவதாகவும் அறிவித்தார்.

கல்பவிருக்ஷத்தின் படி சப்தபாலனின் கூற்று இது தான்:

ஜாவா நாட்டில் டான் ஹ்யாங் (தேவர்களுக்கும் ஆவிகளுக்கும்) மற்றும் ராணிக்கும் ஊழியன் நான். விகௌ மனுமானஸா, சகுட்ரம், பம்பாங் சக்ரி தொடங்கி பரம்பரை பரம்பரையாக  இன்று வரை நான் ஜாவா அரச குடும்பத்தின் ஊழியனாவேன். 2000 ஆண்டுகளாக இன்று வரை ஒன்றும் இங்குள்ளோரின் மதத்தில்  எதுவும் மாறவில்லை.  ஜாவானிய அரச வமிசத்தாருக்கு நான் ஊழியம் செய்யவே உள்ளேன்.  இதோ, இன்று நான் விடை பெறுகிறேன். எனது மூலத்திற்கு நான் திரும்புகிறேன். ஆனால் நமது அரசருக்கு ஒன்று மட்டும் நினவில் இருக்கட்டும், 500 வருடங்கள் கழித்து நான் மீண்டும் நம்  மதத்தை நிலை நாட்டுவேன்.”

சப்தபாலன் தீர்க்கதரிசனவாக்காகக் கூறியது “ எனது அரசனே! நீங்கள் இஸ்லாமுக்கு மாறினால் உங்கள் வம்சம் அழிந்து படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜாவானியர்கள் ஜாவாவை விட்டுச் செல்வர். ஜாவானியர்கள் மற்ற நாடுகளைப் பின்பற்ற வேண்டி வரும்.

ஆனால் வருங்காலத்தில் ஒரு நாள் உலகம் ஜாவானியர்களால் வழி நடத்தப்படும்.

தான் மறையும் முன்னர் சப்தபாலன் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்:

“ 500 வருடங்கள் கழித்து நான் வந்து ஆன்மீகத்தை ஜாவாவெங்கிலும் மீண்டும் புனருத்தாரணம் செய்வேன். இதை மறுப்பவர்கள் அழிந்து படுவர். அவர்கள் அரக்கர்களுக்கு இரையாவர். அவர்கள் அனைவரும் ஒழிந்துபடும் வரை நான் திருப்தி அடைய மாட்டேன்.”

அவர் ஜனங்களை நோக்கி தன் வருகை குறித்தும் கூறினார்:

“ மவுண்ட் மெராபி பொங்கி எரிமலைக் குழம்பு தென்மேற்கில் பரவி கோரமான நாற்றத்தைத் தரும் போது நான் வருவதற்கான அறிகுறி அது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”

இதை மெய்ப்பிக்கும் வகையில் 1978ஆம் ஆண்டு ஹிந்து கோவில்கள் இந்த தீவில் கட்டப்பட்டன. ஏராளமான முஸ்லீம்கள் தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினர். மவுண்ட் செமெருவும் பொங்கி வழிந்தது.

இதுவே சப்தபாலன் வருவதற்கான அறிகுறி என அனைத்து ஹிந்துக்களும் நம்பலாயினர்.

***

தொடரும்

TAGS- இந்தோனேஷியா, சப்தபலோன், சாபம், சப்தபாலன், சுக்மவதி , மேகவதி சுகர்ணோபுத்ரி

BHAGAVAD GITA ‘CHITRA RATHA’ MYSTERY SOLVED-2 (Post No.10,886)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,886

Date uploaded in London – –    24 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

THIS IS PART TWO

There are three Chitrarathas in Mahabharata.

1.Chtraratha

A Gandharva chief who tried to stop the Pandavas when they were on their way from Ekachakra to Panchala. Arjuna, however, captured him but he was released after pleading by his wife Kumbhinasi. In return Chitra Ratha imparted to Arjuna some Gandharva knowledge on warfare and gave him divine knowledge of warfare and gave him divine horses which never become tired . Before retiring he advised the Pandavas to appoint a priest for their own benefit.

Xxx

2.Chitraratha

King of Anga in ancient time. Husband of Ruchi’s sister Prabhavati

xxx

3.Chitraratha

A Panchala prince who, along with his brothers Veeraketu, Sudhanva , Chitraketu and Chitravarma, was killed by Drona in the Mahabharata war.

Xxx

Apart from these three people there is one

Chitrasena, described as the Chief of Gandharvas.

During Arjuna’s five years stay in Swarga to acquire divine weapons, Chitrasena befriended him and at Indra’s request taught him the celestial art of music and dancing.

He was anxious to prolong Arjuna’s stay in Swarga (Paradise) and with Indra’s permission he asked the Apsara Urvasi to amuse and enchant to such an extent that he would not want to go back to earth. However when Urvashi’s attempts misfired and it led to her cursing Arjuna severely, it was Chitrasena who intervened with Indra and got the curse softened to Arjuna’s advantage.

Later Arjuna returned to earth; Chitrasena with his divine vision saw that Duryodhna had evil intentions to harass Pandavas while they were still banished to the forest. He therefore went down to the earth with his Gandharva army and encountered the Kaurava forces in the battle. While Karna had to escape for his life, Duryodhana was captured alive. While Yudhishthira out of the goodness of his heart asked Arjuna to fight against the Gandharvas in order to obtain Duryodhana’s release. Chitra sena was glad to meet his old friend once again. He released Duryodhana in Arjuna’s care and went back to Swarga.

Xxx

There are seven more “Chitra” prefixed names in the Mahabharata.

Chitrasena and Chitraratha may be one and the same person or there may be more than one chief among them.

Even Rigvedic passage said there were many kings on the banks of river Sarasvati. So we can guess more than one Gandharva kings.

Xxx

Following is from Dowson’s Dictionary of Mythology

Gandharvas

The heavenly Gandharva of the Vedas is a deity who knew and revealed the secrets of heaven and divine truths in general. He is thought by Goldstucker to have been a personification of the fire of the Sun. The Gandharvas generally had their dwelling in the sky or atmosphere and one of their offices was to prepare the heavenly Soma juice for the gods. They had a great partiality for women, and had a mystic power over them.

The Atharva Veda speaks of the 6333 Gandharvas. The Gandharvas of later times are similar in character. They have charge of the Soma, are skilled in medicine, regulate the asterisms and are fond of women. Those of Indra’s heaven are generally intended by the term, and they are singers and musicians who attend the banquets of the gods.

The Puranas give contradictory accounts of the origins of the Gandharvas . The Vishnu Purana says, in one place, that they were born from Brahma, imbibing melody. Drinking of the goddess of speech,t hey were born and thence their appellation,

Gaam dayantah = Gandharva

Later on, it says they were the offspring of Kashyapa and his wife Arishta.

The Harivamsa states that they sprang from Brahma’s nose and also they were descended from Muni, another of Kashyapa’s wife. Chitra Ratha was chief of the Gandharvas ; and the Apsarasses were their wives or mistresses.

The cities of the Gandharvas are often referred to as being splendid .

The Vishnu Purana has the Gandharvas fighting with the Nagas in the infernal region, whose dominions they seized and whose treasures they plundered. The Naga chief appealed to Vishnu for relief and he promised to appear in the form of Purukutsa to help them. There upon the Nagas sent their sister Narmada to this Purukutsa, and she conducted him to the regions below where he destroyed the Gandharvas .

They are sometimes calling Gaatus and Pulakas. In the Mahabharata, a race of people dwelling in the hills and wilds is so called.

The science of music and dance including drama is called  Gandharva Veda.

Chitra Ratha means ‘ one who has a fine car.’

Xxx

Last but not the least, Vedic Index adds,

The Rigveda contains a Danastuti (8-21-18) of a prince Citra.

The latter legend attributes this panegyric to Sobhari, and describes Citra as a king of the Rats (Brihaddevata 7-58)

My comments:- It is interesting to note there was a Dynasty of Mushikas (Rat) in Kerala.

SOURCE BOOKS:-

Who is Who in the Mahabharata by S Mazumdar, B V Bhavan, 1988

Dowson’s Dictionary of Hindu Mythology

Vedic Index by Keith and Mac Donell

Xxx Subham xxx

 tags –  Gandharva, Mushika Dynasty, Chitraratha, Chitrasena, Arjuna

பகவத் கீதையில் சுவையான சொல் சித்ரரதன் (Post No.10,885)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,885

Date uploaded in London – –    24 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கந்தர்வானாம் சித்ரரதஹ — பகவத் கீதை 10-26

கந்தர்வர்களில் நான் சித்திரதன் – கிருஷ்ண பரமாத்மா (B G 10-26)

பகவத் கீதையில் நிறைய மர்மமான , சுவையான, பொருள் விளக்கப்படாத சொற்கள் நிறைய உள . அவைகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் கீதை என்பது ஒரு ஆன்மீக நூல். அதில் வரக்கூடிய வேறு விஷயங்கள் மற்றும் உவமைகள் பற்றி விளக்கத் தேவை இல்லை என்று பாராமுகமாக இருந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட சொற்களில் சித்ர ரதன் என்னும் கந்தர்வ மன்னன், உசன கவி என்னும் பழங்காலப் புலவர், உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை, ஐராவதம் என்னும் யானை , வாசுகி என்னும் பாம்பு, மிருக ராஜா சிங்கம், பறவை ராஜா கருடன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்..

இந்தச் சொற்களில் கச்ச தேவயானி போன்ற சில திரைப்படங்களால் சுக்ராசார்யார் அவருடைய தந்தை உசன கவி பற்றி கொஞ்சமாவது வெளி உலகிற்குத் தெரியும். சுக்ராச்சார்யார் அசுரர் குரு என்பதால், தேவர்களும் அசுரர்களும் நம்மவர்களே என்பதும் வெளிநாட்டுப் பறங்கித் தலையர் கூறுவது போல அவர்கள் இந்துக்களின் எதிரிகள்– அதாவது வேற்று இனத்தினர் – என்பது பொய்யென்றும் புலப்படும். மேலும் இந்திரன், அக்கினி, வருணன் , ருத்ரன் முதலிய தெய்வங்களை அசுரர் என்று அழைக்கும் பழைய பகுதிகளும் உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தில் இருப்பதும் கண்கூடு.

மேலும் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானவர் உசன கவி; ரிக்வேத காலத்திலேயே இவர் பழங் காலப் புலவர் ஆகிவிட்டார். அவர் மரபில், அதாவது காப்பிய குடியில் வந்தவர்தான் நமது பெருமைமிகு “ஒல்காப் புலவன் தொல்காப்பியன்”, மற்றும் சங்கப் புலவர் காப்பியாற்றுக் காப்பியனானர்.

கவி= காவிய = காப்பிய என்பதை மொழியியல் வல்லுநர்கள் அறிவர்.இவை ஒரு புறமிருக்க இன்றைய தலைப்புக்கு வருவோம்.

சித்திர ரத என்னும் சொல்லே சுவையான சொல். ஏனெனில் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் நூற்றுக் கணக்கான இடங்களில் பழைய நூல்களில் வருகிறது எவருமே ஆராயவில்லை. ஆராய்ந்தால் டாக்டர் பட்டம் கிடைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் பாடல்களை இயற்றிய 450 புலவர்களில் ஒருவர் பெயர் பெருஞ் சித்திரனார் ; ஸம்ஸ்க்ருதத்தில் மஹா சித்ரன் . அதே பெயரில் ரிக் வேதத்தில் ஒரு புலவர் இருக்கிறார்; அவர் பெயர் சித்ர மஹா வசிஷ்ட.

பெருஞ் சித்ரனார் பாடிய பாடல்கள் புறநானுற்றில் இருக்கின்றன; அவை கடை ஏழு வள்ளைகளைப் புகழ்வதால் சங்க கால இறுதியில்- அதாவது 1700 ஆண்டுகளுக்கு முன்னர் — வாழ்ந்திருக்க வேண்டும். அவர் மன்னர்களின் வள்ளன்மையைப் புகழும்போது மழை போலப் பொழிகிறார்கள் என்பார். இதுவும் ரிக் வேத உவமை.

புறநானூ ற்றில் பெருஞ் சித்திரனார் (மஹா சித்ரன்) பாடிய பாடல்கள் :- 158 முதல் 163 வரை; 207, 208, 237, 238

xxx

ரிக் வேத மன்னன் ஒருவன் பெயர் சித்ரன். அவரைப் பற்றிக் காண்பதற்கு முன்னதாக ‘சித்ர’ என்ற சொல் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்கிறேன் :-

தமிழர்களுக்கு முதல் முதலில் என்சைக்ளோபீடியா உண்டாக்கியவர் சிங்கார வேலு முதலியார். அவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அபிதான சிந்தாமணி’ என்ற பெயரில் இதை அச்சி ட்ட்டார் .

(இங்கு லண்டனில் எனது டேபிளில் எப்போதும் இருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று)

xxxx

அபிதான சிந்தாமணியில் 50-க்கும் மேலான ‘சித்திர’ — சொற்களைக் காணலாம். பல நதிகள், மலைகள், ஓவியங்கள், கவிகள்/பாடல்கள் முதலியவற்றுடன் சித்ர முன் ஓட்டாக (Prefix) வரும். அவற்றில் இன்றைய தலைப்பில் உள்ள சித்திர ரதன் கீழ் 15 விளக்கங்கள் உள . அவர்களில் பகவத் கீதையில் கண்ணன் சொன்ன சித்திரதன் யார் என்பதை ஆராயவே இக்கட்டுரை. மர்மத்தைத் துலக்க முயற்சிக்கிறேன் .

ஒரு எச்சரிக்கை !

கஸ்தியர், வசிஷ்டர் போன்ற பெயர்கள் வரும் போது எந்த அகஸ்தியர் என்று அறிய வேண்டும். இந்திரன் என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேலான மந்திரங்கள் ரிக் வேதத்தில் உள்ளன; வெள்ளைக்காரப் பயல்களையும், மார்க்சீய, திராவிடக் கும்பல்களையும்  திணறடித்து உளரவைத்த சொல் இந்திரன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின் (1894-1994) உபன்யாசங்களைப் படித்தோருக்கு இந்திரன் என்பது ஒரு ஆள் அல்ல. அது போப்பாண்டவர், சங்கராசார்யார், தலாய் லாமா , முதலமைச்சர், பிரதம மந்திரி என்பது போல ஒரு டைட்டில் Title என்பது.

போப்பாண்டவர்களில் (இலங்கைத் தமிழில் பாப்பரசர் ) 23 பேருக்கு ஜான் John என்று பெயர்; எகிப்திய மன்னர்களில் 11 மன்னர் பெயர்கள் ராம் செஸ் Rameses  (ரமேஷன் அல்லது ராம சேஷன்). தச ரதர் என்ற பெயர்களில் 5 மன்னர்கள் உண்டு. ஒருவர் அசோக சக்ரவர்த்தியின் பேரன். ராமாயண தசரதனை நாம் எல்லோரும் அறிவோம் . துருக்கியை கி.மு 1400-ல் ஆண்ட தசரதனின் கடிதங்கள் எகிப்தில் அமர்னா கடிதங்கள் (Amarna Letters) என்ற பெயரில் உள்ளன ; இந்த 5 பேருடன் என் விருதுநகர் நண்பர் தசரத நாடாரென்பவரையும் சேர்த்துக்கொள்ளலாம் . வெளிநாட்டுக்கார்கள் புத்திசாலிகள் .தற்காலத்தில் புஸ்தகம் எழுதும் போது ஜான்-11, ஜான் 23 என்று கைதி போல நம்பர் போட்டு விடுகின்றனர். நாம் அகஸ்தியர் 27 என்று நம்பர் போடாமல் எழுதியதால் மஹா குல , குள , குய ……… குழப்பம் !!!!

இவ்வளவு பீடிகை எதற்கென்றால் கிருஷ்ண பரமாத்தமா பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில் சொன்ன சித்திரரதன் யார் ?

இந்த மர்மத்தைத் துலக்க கீழ்கண்ட ரிக் வேத மந்திரம் உதவுகிறது. இது என் ஆராய்ச்சி!! பகவத் கீதைக்கு உரை எழுதிய மஹாத்மா காந்தியோ, வினோபா பாவேயோ , பால கங்காதர திலகரோ, திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தரோ ராமகிருஷ்ணமடத்தின் அறிஞர் அண்ணாவோ , இன்னும் நூற்றுக்கணக்கான சாமியார்களோ சொல்லவில்லை ; ஏனெனில் அவர்களெழுதியது ஆன்மீக உரை.

இதோ ரிக்வேத வரிகள் :-

8-21-17

பகைவனுக்கு இந்திரனா இத்தனை பெருஞ் செல்வத்தைத் தந்தான்? செளபாக்கியவதியான சரஸ்வதியா செல்வத்தைத் தந்தாள்? அல்லது சித்திரனே , நீயா?

8-21-18

சித்திரனே அரசன் ! ஸரஸ்வதி நதியின் கரையில் வசிக்கும் மற்றவர்கள் எல்லாம் சிற்றசர்களே . அவன் எல்லையற்ற ஆயிரக்கணக்கான தானங்களால் , மழையால் இன்புறுத்தும் பர்ஜன்யனைப் போல, இந்த நிலவுலகத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தினான்.

இதில் ‘சித்ரன்’ என்றே உளது; ஆனால் ‘சித்ர ரதன்’ என்பதை நாம் ஊகித்தறியலாம் . அது சரி, பகவத் கீதையில் கிருஷ்ணன் ‘கந்தர்வர்களில் நான் சித்திர ரதன்’ (ப.கீ. 10-26) என்றல்லவா சொல்கிறார். இங்கு ‘கந்தர்வர்’ என்பதும் இல்லையே? என்பர் சிலர்.

இதில் மேலும் ஒரு சுவையான  செய்தி வருகிறது. சிந்து சமவெளி நாகரீகம் என்பது சரஸ்வதி உள்ளிட்ட ஏழு நதிகளின் பூமி (சப்த சிந்து) என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அது ஒருகாலத்தில் கந்தர்வர் கீழே இருந்தது. அங்கு பாரத நாட்டியம் ஆடும்  பெண்மணியின் சிலையும் நமக்கு கிடைத்துள்ளது. ராமாயண லவ, குசர்கள் சிந்துவெளியையும் தம் வசமாக்கிய செய்தியும் நமக்குத் தெரியும் (சிந்து சமவெளி பற்றிய எனது 25 ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்கவும்)

சரி யார் இந்தக் கந்தர்வர்கள்? சித்திர ரதன் கதை என்ன ?

வெள்ளித் திரையில் காண்க !!!

— தொடரும்

tags-  ரிக் வேத மன்னன், சித்ரன், கந்தர்வர்கள், சித்திர ரதன், பகவத் கீதை, 10-26

A man who wants a pretty nurse, must be  Patient! (Post No.10,884)

COMPILED BY KATTU KUTTY, CHENNAI

Post No. 10,884

Date uploaded in London – –   24 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் 38

kattu kutty

Brilliant puns :



1) A man who wants a pretty nurse, must be (a)  patient


2) A man who leaps off a cliff, jumps to a conclusion


3) A man running in front of a car gets tired. And a man running behind a car, gets exhausted


4) War doesn’t determine who is right, it determines who is left.


5) A man who drives like hell, is bound to get there.


6) A lion will not cheat his wife, but a Tiger wood!


7) Toilets are a great place to think. No wonder they are called “Sochalayas”…


xxxx


Strange but true !!!!
1 – Inspite of so many colours – White is considered Class.


2 – Inspite of so many voices & sounds – Silence is considered ultimate.


3 – Inspite of so much to eat – Fasting is considered healthy.


4 – Inspite of so much to travel & explore – Meditating under trees & on mountains is considered superior.


5 – Inspite of so much to see – Closing your eyes & looking within is Apex.


6 – Inspite of listening to all the outside world – Voice from inside you is eternal.


7 – Inspite of a sweet charming life – A Peaceful Soul is Solace & Divine.

Trust your Senses. Live a Great Life.

xxx

A small dot can stop a big sentence,

but a few more dots can give continuity .

Amazing but true.

Every ending can be a new beginning!!!

Xxxx

Success can neither magical nor mysterious .

Success is the natural consequence of

Consistently applying basic fundamentals!!!

The best cosmetics of life :

TRUTH – for lips,

SYMPATHY – for eyes,

PRAYER – for voice,

CHARITY – for hands,

SMILE – for face and

LOVE – for heart.

Use them well and make life beautiful !!!

Value is more expensive than price!!!

REMEMBER

MOST OF YOUR STRESS COMES THE WAY YOU RESPOND

NOT THE WAY THE LIFE IS.

ADJUST YOUR ATTITUDE, AND ALL THAT EXTRA STRESS IS GONE.

xxxx

A -Action

C -Changes

T -Things

xxx

If you want to achieve greatness,

Stop asking for permission.

xxxx

W O M E N

W- Wonderful wife

O – Outstanding friend

M – Marvelous daughter

E – Enjoying sister

N – Nice gift of mother

xxxxx

Lucky means, who get the opportunity,

Brilliant means, who create the opportunity,

Winner means who uses the opportunity.

xxx

A question was asked in a seminar.

Why employee don’t discuss with their problems with

Their management ???

The best answer came from a real frustrated employee,

‘You cannot discuss your malaria problems with the

Mosquito’.

Xxx

It is very simple to be happy,

But is very difficult to be simple.

Xxxx

Every relationship is a like glass.

A scratch on any side will

Reflect on the other side.

xxx

Helping one person might not change the world,

But it might change the world for one person.

 Xxxxx Subham xxxx

அகஸ்தியர் கடல் நீரைக் குடித்த வரலாறு! (Post No.10,883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,883

Date uploaded in London – –     24 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மஹரிஷி அகஸ்தியர் சரித்திரம்!

அகஸ்தியர் கடல் நீரைக் குடித்த வரலாறு!

ச.நாகராஜன்

அகஸ்திய மஹரிஷி பற்றிய வியத்தகு வரலாறுகளில் அவர் கடல் நீரைக் குடித்ததும் ஒன்று.

மஹாபாரதம் வன பர்வம் இந்த வரலாற்றைச் சுவைபடத் தருகிறது.

முன்னொரு காலத்தில் காலகேயர்கள் என்னும் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கொடிய யுத்தம் நடந்தது. காலகேயர்கள் இந்த உலகத்திற்கு மிகுந்த கொடுமைகளைப் புரிந்தனர், தேவேந்திரன் அவர்களது தலைவனான விருத்திராசுரனைக் கொன்ற பிறகு அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு சமுத்திரத்தின் அடியில் சென்று ஒளிந்து கொண்டார்கள்.

அங்கிருந்தவாறே தவம் புரியும் முனிவர்களை இரவில் கொல்ல ஆரம்பித்தனர். இன்ன பிற கொடுமைகளை அவர்கள் இழைத்து வர அதைத் தாங்க முடியாத தேவர்கள் வைகுண்டம் சென்று நாராயணனிடம் முறையிட்டனர்.

அவர் தேவர்கள் பால் இரக்கமுற்றார்.

“நீங்கள் ஜெயிக்க வேண்டுமெனில் சமுத்திர ஜலம் வற்ற வேண்டும். ஆனால் அந்தக் காரியம் எளிதல்ல. இதைச் செய்யக்கூடியவர் அகஸ்திய முனிவர் ஒருவரே தான். ஆகவே அவரைச் சரணடையுங்கள்” என்று கூறி அருள் பாலித்தார்.

தேவர்களும் அகஸ்திய மா முனிவரை தரிசித்து அவரைச் சரணடைந்து சமுத்திரத்தில் உள்ள ஜலம் வற்றச் செய்யும் படி வேண்டினர்.

அவரும் அதற்கு இணங்கினார்.

தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், நாகர்கள் புடை சூழ அவர் கடலை நோக்கிச் சென்றார்.

அங்கே அனைவரும் சந்தோஷம் கொள்ளும்படி அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கோபத்துடன் சமுத்திர ஜலத்தைக் கையால் அள்ளிக் குடிக்கலானார்.

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் இந்தச் செய்கையால் ஆச்சரியமுற்றனர்.

அவர்கள் அவரை நோக்கிக் கீழ்க்கண்டவாறு துதிக்கலாயினர்:

“தாங்களே எங்களுக்கு ரக்ஷகர்.

தாங்களே உலகத்திற்கு சிருஷ்டிகர்த்தா.

தங்களுடைய அருளினால் இந்த உலகமும் தேவர்களும் மிகப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்படுகிறோம்.”

அவரைச் சுற்றி தேவ கோஷம் முழங்கியது.

தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர்.

மிகப் பெரும் கடலானது நீரின்றி வற்றிப் போகும்படி அவர் செய்தார்.

தேவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அஸ்திர சஸ்திரங்களை எடுத்து தைரியத்துடன் அசுரர்களை எதிர் கொண்டனர்.

ரிஷிகளின் சாபத்தினால் ஏற்கனவே தங்கள் பலத்தை இழந்திருந்த அசுரர்கள் தேவர்களின் தாக்குதலைக் கொஞ்ச நேரம் கூட சமாளிக்க முடியாமல் தோற்றனர். அவர்கள் அனைவரும் வதைக்கப்படலாயினர். சில காலகேயரோ பூமியைப் பிளந்து கொண்டு பாதாள லோகத்தின் அடியில் சென்று ஒளிந்து கொண்டனர்.

தேவர்கள் வெற்றி அடைந்தவுடன் அகஸ்தியரை நோக்கி அவர்கள் புகழ் மொழிகளால் அவரைத் துதித்தனர்:

“ஓ! மஹா முனிவரே! தங்களுடைய தயவினால் மனிதர்கள் பெரும் வாழ்வையும் சந்தோஷத்தையும் அடைந்திருக்கின்றனர். தங்களுடைய சக்தியினால் பராக்கிரமசாலிகளான காலகேயர்கள் கொல்லப்பட்டனர். ஓ! பிரம்மாவுக்கு நிகரானவரே! தாங்கள் அருந்திய ஜலத்தை மீண்டும் சமுத்திரத்திற்குத் தந்து அதை நிரம்பச் செய்யுங்கள்”.

இப்படி தேவர்கள் அவரை நோக்கி வேண்ட உடனே அகஸ்தியர், “ தேவர்களே! நான் அருந்திய ஜலம் அனைத்தும் என்னால் ஜீரணிக்கப்பட்டு விட்டது. ஆகவே சமுத்திர ஜலம் நிரம்புவதற்கு வேறு ஏதேனும் ஒரு வழியைத் தேடுங்கள்” என்று கூறினார்.

அதைக் கேட்ட தேவர்கள் ஆச்சரியமும், துக்கமும் அடைந்தனர்.  அவர்கள் அகஸ்தியரை வணங்கி அவரிடமிருந்து உத்தரவு பெற்று அங்கிருந்து அகன்றனர்.

நேராக பிரம்மாவிடம் சென்ற தேவர்கள், கடலில் மறுபடியும் ஜலம் உண்டாக வேண்டும் என்று அவரை வேண்டினர்.

பிரம்மா,  “தேவர்க்ளே, சமுத்திரமானது முன் போல ஜலத்துடன் நிரம்ப வெகு காலம் ஆகும். அவ்வாறு உண்டாவதற்கு பகீரத மஹாராஜனுடைய முன்னோர்களான அறுபதினாயிரம் சகரர்கள் காரணஸ்தர்களாக ஏற்படுவார்கள்” என்றார்.

தேவர்களும் தங்கள் இடம் சென்று அப்படி ஒரு காலத்தை எதிர் நோக்கியவாறே காத்திருக்கலாயினர்.

காலம் சென்றது.

சகரர்கள், பகீரதன் வரலாறு உருவானது.

கடல் மீண்டும் நிரம்பியது.

இப்படி அகஸ்தியர் கடல் நீரைக் குடித்த வரலாறு ஏராளமான புராணங்களிலும், மஹாபாரதத்திலும் இடம் பெற்றது.

***

Tags- கடல், அகஸ்திய , மஹரிஷி, காலகேயர்கள்,

Bhagavad Gita – Chitraratha Mystery Solved ! (Post No.10,882)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,882

Date uploaded in London – –    23 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

‘AMONG THE GANDHARVAS, I AM CHITRA RATHA’ – 10-26 B.G.

A lot of mysteries are there in the Bhagavad Gita. But nobody bothered about them because they were considered out of place in a spiritual and philosophical book like Gita . Lord Krishna said that he was Usanas among the poets. Usanas became a mystery even during the days of the Rigveda. The great Tami l grammarian Tolkappiar also belonged to that clan and he had very ancient Kavya/Kappia in his name. At least about Usanas we read something interesting in the research articles. His son Sukra became the subject of many feature films in India under the title Kacha Devayani. He was Asura Guru. Asura is a good term in the older parts of the Rig Veda.

But another interesting word in Tamil and Sanskrit literature is not at all explored. The word Chitra is in thousands of places in the name of river, mountain, poems, genres and personal names. Chitra is mostly used by women nowadays in personal names. But the most interesting thing is there are poets in the Rigveda and Sangam Tamil literature with that name. There are kings with the name Chitra in Tamil and Sanskrit. Very interesting to note is a poet by name Maha Chitra in both the Rigveda and Purananuru of Sangam period.

Perunchittiranar was a poet who composed over ten poems in Purananuru. His name in Sanskrit is Maha Chitra. His first word Perum is also a cognate word of Brhat in Sanskrit. We have the oldest and largest Upanishad Brhat Aranyaka Upanishad. It is Big Forest Philosophical Treatise . And the same Maha Chitra is in the Rigveda too.

Chitra maha Vasishta is the author of hymn 10-122 in the Rigveda.

But one must be careful when one explores this word Chitra. There are over 50 entries for Chitra in the 150 year old Tamil encyclopaedia called Abhidana Chintamani. Under Chitra Ratha there are 15 entries in Tamil. It was the most popular personal name. We know there were at least 23 Popes with the name John. We know there were 11 pharaohs with the name Rameses in Egypt . We know there were at least six Dasarathas including my friend Dasaratha Nadar in Virudunagar in Tamil Nadu. But Ramayana Dasaratha and Mitanni king Dasaratha dated 1400 BCE are well known. Egyptian  and Vatican historians serialised the pharaohs and Popes with numbers. Hindus did not do it. So there’s a big confusion.

‘Dates and Dynasties in Earliest India’ by R Mortan Smith named at least 8 kings and queens with the prefix Chitra . He gave the date 1540 BCE for the king Chiraratha Yadava. His dates were not accurate but it gives us some idea who is first who is second etc.

Very interesting information comes from Bhagwan Singhs book ‘Vedic Harappans’.

Here is what he says,

Of all the kings on the river Sarasvati, Chitra is alone the real king, others are kings in name only —RV 8-21-18

Chitra ida raja rajaka idanyake yake Sarasvati manu.

We find similar statements in Sangam literature as well.

Now we have got two clues from Rig Veda and Morton smith. Though I don’t agree with his dating his chronological order for kings is somewhat meaningful. He placed Chitraratha mentioned by Lord Krishna, five hundred years before Yadava Krishna. Both of them were Yadavas. But we read in Bhagavad Gita that Chitra Ratha was the most famous Gandharva. Here comes a problem. Yadhavas were not Gandharvas. But any one who is a master of fine arts is called a Gandharva. We had famous musicians with that title in modern India. Gandhrava knowledge means expertise in dance and art. This gandharva clan lived in Indus Valley areas which is confirmed by the danseuse idol from Harappa, Mohenjo-Daro areas.

Now we will look at the stories and anecdotes about Gandharva Chitraratha.

In Bhagavad Gita we read,

Among the Gandharvas I am Chitraratha, (10-26) says Lord Krishna.

What is he famous for?

Rigveda, the oldest book in the world says (8-21),

17.Indra or blest Sarasvati alone bestows such wealth, treasure so great , or thou,

O Citra, on the worshipper

18.Citra is king, and only kinglings are the rest, who dwell beside Sarasvati

He, like Parjanya with his rain, hath spread himself with thousand,

Yea, with myself gifts.

—RigVeda

In 2000 year old Tamil Pura nanuru, Maha Chitran also praised Seven Great Tamil Philanthropists and compared them with Parjanya/ rain god for their munificence.

Who are the Gandharvas and Chitrratha ?

To be continued……………………………..

Gandharva, Chitraratha, Lord Krishna, Bhagavad Gita, 10-26, Rigveda

மொழியியல் விஷமங்கள்…… 3 கதைகள் – Part 3 (Post No.10,881)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,881

Date uploaded in London – –    23 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

எனக்கு திருச்சி பஸ் நிலையத்தில் நடந்த கஷ்ட நஷ்டங்களை திருப்பராய்த்துறை  (திருப்லாத்துறை) ஆர்.எஸ்.எஸ். முகாமிலுள்ள சுவயம்சேவகர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்களும் சிரித்துக்கொண்டே எங்கள் கன்யாகுமரி ஜில்லாவிலும் அழகான ஆரல்வாய் மொழி என்ற ஊரை ஆராம்பொலி என்றுதான் சொல்லுவார்கள் என்றார்கள்.

அடுத்த கதைக்கு வருகிறேன்

ஆங்கிலத்தில் முதல் எழுத்தான ஏ ‘A’  என்பதை எப்படியெல்லாம் உச்சரிக்கின்றனர் என்று பார்த்தால் அவர்கள்தான் இவ்விஷயத்தில் மிக மோசமான பேர்வழிகள் என்பது புரியும் ஸம்ஸ்க்ருதம் – தமிழ் இரண்டிலும் ம் +அ = “ம” என்றே சொற்களில் வரும்; ஆங்கிலத்திலோ இது வெவ்வேறு உச்சரிப்பில் வரும். இது போல நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகளைத் தர முடியும்

Machine ,Machette, Mall, Mark,Mate , Make

XXXX

முன்னரே எழுதிய கதைதான். ஆகவே சுருக்கமாகச் செப்புகிறேன்

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலம் :-

ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு (SCHOOL INSPECTION)  ஜில்லா கல்வி அதிகாரி DISTRICT EDUCATION OFFICER வந்தார்; அதற்கு முன் பள்ளியில், ஒரே தட புடல்; பள்ளி எல்லாம் சுத்தப்படுத்தப்பட்டது. ஆசிரியர் எல்லாம் சரியான டய (Time) த்துக்கு சரியான — டீக்கான – உடையில் வந்தனர். அதிகாரி வரும்போது என்ன பாடம் நடத்த வேண்டும்; திறமையைக் காட்டுவதற்காக எந்தப் பையனிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை எல்லாம் பத்து நாள் Rehearsal ரிஹர்சல் செய்தனர்; ஒத்திகை பார்த்தனர் .

வந்தார் அதிகாரி ; ஆங்கிலப் பாடம் நடக்கும் ஒரு வகுப்பில் திடீர் என்று நுழைந்தார் ; ஆசிரியர்க்கு ஒரே நடுக்கம்; இருந்த போதிலும் தனது கற்பிப்பதன் திற்த்தைக் காட்ட முன்னரே நிச்சயித்து இருந்த மாணவனை எழுப்பி ‘டேய் பையா! KVANOWLEDGE க்வானாலெட்ஜ் (KNOWLEDGE) என்ற சொல்லை எப்படி உச்சரிப்பாய் ? சொல், பார்ப்போம் என்றார் .

அவன் பயத்தில் நடுங்கிக் கொண்டே சொன்னான் “I DON’T KKUNOW  ஐ டோன்ட் க்னோ (KNOW) ஸார்”

ஜில்லா கல்வி அதிகாரி சொன்னார் :-

போத் ஆப் யூ ஆர் (WRONG) உராங் BOTH OF YOU ARE WURONG

இந்த மூன்று ஆங்கிலச் சொற்களிலும் முதல் எழுத்துக்கு உச்சரிப்பு இல்லை. ஆனால் மூவரும் அதை தவறாக உச்சரித்தார்கள் இப்படிப் பல விநோதங்கள்.

இந்தியர்கள் உலகில் உள்ள எந்த மொழியியல் கொள்கைகளையும் காலில் போட்டு மிதித்துத் துவைத்து குப்பைத்தொட்டியில் தூக்கி எறிய முடியும். ஏனெனில் எல்லா இந்திய மொழிகளிலும் பேச்சு வழக்கு வேறு; எழுத்து வழக்கு வேறு DIGLOSSIA இதனால் சொற்கள் கன்னாபின்னா என்று உரு மாறும்; ஒலிக்கும்.உலகில் வேறு எந்த மொழித் தொகுதியிலும் இவ்வளவு மாற்றங்களைக் காண முடியாது. இதற்கு வெளிநாட்டினர் தொடர்ப்பு அல்லது கலாசாரத் தாக்கம் என்பது காரணமல்ல. மொழியின் இயற்கைப் போக்கு அது.

வெளித் தொடர்பினாலும் மாற்றங்கள் வரும். உலகின் முதல் இலக்கிய கர்த்தாவான பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னரே ர= ல, ப=வ மாற்றங்களை சூத்திரத்தில் செப்பி விட்டான். அப்போது கிரேக்க மொழியோ தமிழ் மொழியோ உலகில் இல்லை. கிரேக்கமும் எபிரேயமும் அப்போதுதான் துளிர்விடத் துவங்கின ; ஏனெனில் பாணினி சொன்னது புதிது அல்ல. அவனுக்கும் முந்தைய 64 இலக்கண அறிஞர்கள் சொன்னதோடு அவன் சிலவற்றைச் சேர்த்தான்.

ஏற்கனவே இது பற்றி ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ளேன்

கார்ன் CORN என்றால் அதை, மொழியியல் ரீதியில்,  தமிழில் குறுணை அல்லது சோளம் என்று சொல்ல முடியும் ; அதே கார்ன் CORN  என்ற சொல்லுக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அர்த்தம். தமிழில் பொன் என்பதை எப்படியெல்லாம் அர்த்தம் செய்யலாம் என்பதை முன்னரே காட்டிவிட்டேன்

பசு என்ற சொல்லுக்கு நெருங்கிய சகோதர COGNATE  சொற்களை இந்திய ஐரோப்பிய மொழிகளில் காணலாம். ஆனால் பால் MILK என்பதற்கு வேறு  வேறு சொற்கள்!

காளை மாட்டு முத்திரையை சிந்து வெளியில் காணலாம். ஆனால் 4000 முத்திரைகளில் ஒரு பசு மாடும் கிடையாது. சங்க இலக்கியத்தில் பரத்தையர் பாடல்கள் அதிகம்; 300 பாடல்களில் சங்கத் தமிழர்கள் தமிழன் போன தேவுடியாள் / பரத்தை பற்றிப்  பாடியுள்ளான் ; இதற்காக தமிழனை எவரேனும் தரக்குறைவாகப் பார்க்க முடியுமா?  எழுத்தை வைத்து வனையுமே எடை போடாதே ; வெள்ளைக்காரன் சொல்லுவதை நம்பாதே என்பதுதான் இதிலிருந்து கிடைக்கும் நீதி.

மல்லி விலை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

5 Dec 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … திருப்பராய்த் துறை – திருப்ளாத்துறை.

tags- ஜில்லா கல்வி அதிகாரி, பரத்தை, பாடல்கள், ஆரல்வாய் மொழி

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ்-52; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,880)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,880

Date uploaded in London – –    23 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ்-52; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்-52

BHA ஒலி சொற்கள்

பாவம் (Bhaavam)  7-15  (அசுர ) BHA பாவத்தை

பாவஹ 2-16  இருப்பு

பாவாஹா 7-12 (சத்துவமான ) நிலையில்/ BHA பாவத்தில் உள்ளவை

பாவேஷு 10-17  பாவங்களில்

பாவைஹி  7-13 நிலைகளால்

பாஷஸே   2-11 பேசுகிறாய்

பாஷா 2-54  இலக்ஷணம்

பாஸயதே 15-6 விளக்குதல், வெளிச்சம் போட்டுக் காட்டுதல்

பாஸஹ 11-12  பிரகாசம், ஒளி

பாஸ்வதா 10-11   பிரகாசிக்கின்ற

பாஹா 11-12 பிரகாசம், ஒளி

பின்னா 7-4 பிரிந்தவை

பீதஹ 11-15 பயத்தில்

பீதம் 11-50 பயந்திருந்த

பீதானி 11-36 பயந்தவைகளாய்

பீதாஹா 11-21 அஞ்சியவர்களாய்

பீமா கர்மா 1-15  பெரிய தொழில்களைச் செய்யும்

பீமாபிரக்ஷிதம்  1-10 பீமரால் காக்கப்படும்

பீமார்ஜுன சமாஹா  1-4  பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான

பீஷ்ம த்ரோண பிரமுகதஹ 1-25 பீஷ்மர் , த்ரோணர் ஆகியோருக்கு எதிரிலும் 

பீஷ்ம 1-11 பீஷ்மர்

பீஷ்மாபிரக்ஷிதம் 1-10   பீஷ்மரால் காக்கப்படும்

புங்தே 3-12 நுகர்கிறானோ , அனுபவிக்கிறானோ

புங்க்வ 11-33 அனுபவி

புஞ்சதே 3-13 புசிக்கிறார்கள்

புஞ்சானம் 15-10 அனுபவிப்பவனை

புஞ்ஜீய 2-5 அனுபவிப்பேன்

புவி (Bhuvi) 18-69  பூவுலகு

Bhoota  sounding words

பூத கணான் 17-4 பூத கணங்களையும்

பூத க்ராமம் 9-8 பொருள்களின் கூட்டத்தை, தொகுதியை 30 words

பூத ப்ருதக் பாவம்  13-30  பிராணி களின் தனித்தனி வாழ்க்கை

பூத ப்ரவ்ருத்தி மோக்ஷம் 13-34 உயிர்கள்  பிரக்ருதியிலிருந்து  விடுதலை அடைதல்

பூத பர்த்ரு 13-16 பொருள்களைத் தாங்குவது

பூத பாவ உத்பவ கரஹ 8-3

பூத ப்ருத் 9-5 பொருள்களைத் தாங்குவது

பூத மஹேஸ்வரம் 9-11  பொருள்களுக்கு மஹேஸ்வரனாயுள்ள

பூத விஷேச சங்கான் 11-15 பற்பல பூதத் தொகுதிகளையும்

பூத ஸர்கவ் 16-6 உயிர்ப்பிறப்புகள்

பூத  தஸ்தஹ 9-5 பொருள்களில் இருப்புடைய

பூதம் 9-13  பொருள்

பூதாதிம் 9-13 பொருள்களின் ஆதியும்

பூதாநி 2-28 பிராணிகள்

பூதானாம் 4-6 உயிர்களுக்கு

பூதிஹி  18-78 பெருமையும்

பூதே ஜ்யாஹா 9-25  பூதங்களை வழிபடுவோர்      45 words

பூதேச 10-15   உலக நாயகனே

பூதேஷு 7-11 பிராணிகளிடத்தில்

பூத்வா 2-20 இருந்து

பூமிஹி 7-4  – பூமி

பூயஹ 2-20  மறுபடியும்           50 words

பூஹு 2-47 ஆகுதல், இருத்தல்

ப்ருஹுஹு 10-25  ப்ருஹு (Maharishi)

பேதம் 17-7 வேற்றுமை, வித்தியாசம் , பேதம்   53 words

53 words added in Gita word index part 52

ஓட்டலில் சாப்பிடாதீங்க – FAST FOOD ரகசியம்! (Post.10,879)

WRITTEN BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,879

Date uploaded in London – –   23 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஓட்டலில் சாப்பிடாதீங்க – ஃபாஸ்ட் ஃபுட் FAST FOOD  தயாரிப்பு ரகசியம்!

Kattu Kutty

நான் படித்ததைத் தருகிறேன்.

அதை அப்படியே

தயவு செய்து
படியுங்கள்

‘ஓட்டலில்
சாப்பிடாதீங்க’
ஒரு முன்னாள்
ஓட்டல் உரிமையாளர் தனது
தொழில் ரகசியங்கள்(!) பற்றி
முகநூலில் எழுதியிருக்கிறார்.

அதிர்ச்சி
ரகம் தான் இவரது முகநூல்
ஸ்டேட்டஸும்.
1.
ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்
வைத்திருக்கும்
நாங்கள்
அன்று வாங்கிய
சிக்கனை
மட்டுமே உபயோகப்படுத்துவது
இல்லை.

2 அல்லது
3 நாட்களுக்கு
முன் வாங்கிய
சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம்.

அதை
வினிகரில்
கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.

2.
சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக
உள்ள சிக்கனை
சிவப்பாக மாற்ற
ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம்.

ஆனால்,
அது தடை
செய்யப்பட்ட பொருள். அந்த
ஆரஞ்சு பவுடரை
உங்கள்
கையில் கொட்டி
திருப்பி
கை கழுவினால்
கூட அந்த
சிவப்பு சாயம்
உங்கள் கையில்
2 நாட்களுக்கு
இருக்கும்.

3.
சோயா சாஸ்…
விலை அதிகமாக இருப்பதால்
இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை.

மாறாகத்
தண்ணீரோ அல்லது
ஒரு வாரத்துக்கு
முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ
கலந்து செய்கிறோம்.

4.
எந்த
ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும்
சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.

5.
ஃப்ரைடு ரைஸ்
செய்யும் போது
சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக
அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.

6.
இன்னொன்று
சொன்னால் நம்ப மாட்டீர்கள்…

ஃப்ரைடு ரைஸ் செய்யும்
சட்டியை நாங்கள்
ஒரு வாரத்துக்குக்
கழுவ மாட்டோம்.

கழுவி எண்ணெய்
பசை போய்விட்டால் அடுத்த நாள்
எங்களுக்கு
அதிக கேஸ் (GAS) வேஸ்ட்டாகிவிடும்.

7.
மோனோசோடியம் க்ளூட்டமேட்…
இதை அதிகமாக பயன்படுத்துகிறோம்.

உடலுக்குக் கேடு உண்டாக்கும்
பொருள்
என்று பலரும் சொல்கிறார்கள்.
இதைத் தொட்டு
நாக்கில் வைத்தால்
அந்த இடம்
மரத்துப் விடும்.
சோதித்துப் பாருங்கள்.

8.
மிளகுத் தூளில் வெண்மை
நிறத்துக்காக
கோல மாவு
கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான்
நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.

9.
காலாவதியான
தக்காளி சாஸ்
விலை கம்மியாகக் கிடைப்பதால்
அதையே உபயோகப்படுத்துகிறோம்.

10.
சில்லி சாஸ்…
அதை அருகில்
சென்று முகர்ந்து பார்த்தால்
முகம் சுளிக்கிற அளவுக்கு
கெட்ட வாடை
அடிக்கும்.
எல்லாம் மசாலா மணத்தில் மறந்து போய்விடும்.

5 நிமிடத்தில்
8 பிளேட்
தயாராகிவிடும்.

ஒரு பிளேட்
50 ரூபாய்
என்றால் கூட
400 ரூபாய் சம்பாதித்து விடுவோம்.

இந்த
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்
சாப்பிட்டு
என் உடலும் கெட்டுவிட்டது.
மற்றவர்களின்
உடல் நலனையும் கெடுக்கும்
இந்த வேலை
வேண்டாம்
என என் மனசாட்சி உறுத்தியதால்,
அதை மூடிவிட்டு
8,000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக
வேறு வேலைக்குச் செல்கிறேன்!-

தினேஷ்
(ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)

XXXX

TAGS பாஸ்ட் ஃபுட், உணவு, மசாலா, ஓட்டலில் ,சாப்பிடாதீங்க,

*

ஓரெழுத்து வர்க்கப் பாட்டு! (Post No.10,878)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,878

Date uploaded in London – –     23 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஓரெழுத்து வர்க்கப் பாட்டு!

ச.நாகராஜன்

ஒரு பாடலில் ஒரே ஒரு எழுத்து வர்க்கமே வருமாறு பாடலை அமைப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். பொருள் பொதிந்த சொற்களுடன் அவை அமைந்திருக்கும் போது அதைப் படிப்பவர்களின் ஆனந்தமே தனி.

இப்படிப்பட்ட பாடல்கள் பல தமிழில் உள்ளன.

எடுத்துக்காட்டாக, சில பாடல்களை இங்கே காணலாம்.

ககர வர்க்கத்தில் வரும் இந்தப் பாடலை காளமேகப் புலவர் பாடி இருக்கிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கைக்கைக்கா கா

காக்கைக்குக் கைக்கைக்கா கா

பாடலின் பொருள் :

கூகை காக்கைக்கு ஆகா – கூகை (பகல் காலத்தில் காக்கைக்கு எதிர் நிற்றல் கூடாது

காக்கை கூகைக்கு ஆகா – காக்கை (இரவு நேரத்தில்) கூகைக்கு எதிர் நிற்றல் கூடாது

காக்கு ஐக்கு – கற்பகத் தருச் சோலைக்கு இறைவனாகிய இந்திரனுக்கும்

கைக்கைக்கு ஆகா – (காலமில்லாத காலத்தில்) பகைவரைக் கொல்வதற்கு இயலாது

கோக்கு – (ஆகவே) அரசனுக்கு

கூ – பூமியை

காக்கைக்கு – பாதுகாக்கவும்

கைக்கைக்கு – பகைவரைக் களையவும்

கொக்கு  ஒக்க – கொக்கு ஒக்க காலம் வாய்க்குமளவும் கொக்கைப் போல அடங்கி இருக்கக் கடவன்.

இதே பாடலை யாப்பருங்கலவிருத்தி இப்படித் தருகிறது:

“காக்கைக் காகா காக்கைக் காகா

காக்கைக் காகா காக்கைக் காகா

காக்கைக் காக்குக் ககாக்குக்குக் கூக்கக்

கூகூகைக் காகக்க காக்கைக்குக் கக்கை”

தகர வர்க்கத்தில் காளமேகப் புலவர் பாடிய பாடல் இது:

தாதீதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்திதத் தூததே – தாதொத்த

துத்திதத் தாதேது தித்துத்தேத் தோத்தீதூ

தித்தத்த தோதித் திதி

இந்தப் பாடலின் பொருள்:

தாதி – தொழியினுடைய

தூதோ – தூதோ

தீது – குற்றமுள்ளது

தத்தை – கிளியானது

தூது ஓதாது – தூது சொல்லாது

தூதி – தூதியே

தூது – உன் தூதானது

ஒத்த – (என் மனதுடன்) பொருந்தி

இதம் – நன்மையான

தூததே – தூதாகும்

தாது ஒத்த – (ஆதலால்) பொன்னை நிகர்த்த

துத்தி – தேமல்

தத்தாதே – படராத வண்ணம்

துதித்து – (அவரை) தோத்திரம் செய்து

ஒத்து – (அவருடன்) ஒத்து

தேத்து – (அவர் மனதைத்) தேற்று

இது – இந்தச் செய்தி

தித்தித்தது – (என் மனதுக்கு) இனித்தது

ஓதி – (இதை அவருடன்) சொல்லி

திதி – என்னைக் காப்பாற்று

தாதியும் கிளியும் என் தூதுக்கு இசைவாரில்லை. தூதியே, நீ தலைவரிடம் சென்று அவர் மனம் இரங்கும் படி செய்ய வேண்டும் என்பது பாடலின் திரண்ட பொருள்.

இதே பாடலை யாப்பருங்கலவிருத்தி இப்படித் தருகிறது:

தீத்தித் தாதூது தீதாதூதித் தத்துதீ

துத்ததை திதுத்து தைத்தா தூது

தித்தித் தித்தித் தாதூது தீதுத்

தாத்தெத் தாதோ தித்தித் தாது

இனி இன்னொரு அருமையான பாடலையும் இங்கு பார்க்கலாம்.வில்லிப்புத்தூரார் வாதுக்கு அழைத்து அவரிடம் தோல்வி கண்ட புலவரின் காதை குறும்பி அளவாக் குடைந்து தோண்டி அறுப்பாரம்.

அருணகிரிநாதருக்கும் அவருக்கும் நடந்த வாதின் போது அருணகிரிநாதர் ஒரு பாடலைப் பாட வில்லிப்புத்தூரார் திகைத்துத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து அவர் தோல்வி கண்ட புலவர் காதை அறுக்கும் கொடிய பழக்கமும் நின்றது.

அருணகிரிநாதர் ஒரேழுத்து வர்க்கப் பாடல் ஒன்றைத் தான் பாடி வில்லிபுத்தூராரை வெற்றி கொண்டார்.

அது கந்தர் அந்தாதியில் 54வது பாடலாக அமைகிறது.

பாடல் :-

“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

கடினமான இந்தப் பாடலின் பொருளைக் காண முதலில் பாடலை இப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும்:

திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி

(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து

(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து

(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.

பாடலின் பொருள் :

திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற

தாதை – பரமசிவனும்

தாத – பிரமனும்  

துத்தி – படப்பொறியினையுடைய

தத்தி – பாம்பினுடைய

தா – இடத்தையும்  

தித – நிலைபெற்று

தத்து – ததும்புகின்ற

அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி – தயிரானது  

தித்தித்ததே – தித்திக்கின்றதென்று

து – உண்ட கண்ணனும்  

துதித்து – துதி செய்து வணங்குகின்ற

இதத்து – பேரின்ப சொரூபியான  

ஆதி – முதல்வனே!

தத்தத்து – தந்தத்தையுடைய

அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட  

தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத – தொண்டனே!  

தீதே – தீமையே  

துதை – நெருங்கிய

தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்  

அதத்து – மரணத்தோடும்

உதி – ஜனனத்தோடும்  

தத்தும் – பல தத்துக்களோடும்

அத்து – இசைவுற்றதுமான  

அத்தி – எலும்புகளை மூடிய

தித்தி – பையாகிய இவ்வுடல்

தீ – அக்கினியினால்

தீ – தகிக்கப்படுகின்ற  

திதி – அந்நாளிலே  

துதி – உன்னைத் துதிக்கும்

தீ – புத்தி

தொத்ததே – உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்

பாடலின் திரண்ட கருத்து இது:

நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.



தமிழில் அமைந்துள்ள ஒரேழுத்து வர்க்கப் பாடல் பல உள்ளன.

அனைத்துமே அருமையான பாடல்களே

***

TAGS– ஒரேழுத்து ,வர்க்கப் பாடல், அருணகிரிநாதர், காளமேகப் புலவர், பாடல்