மெல்லின எழுத்துப் பாட்டு! (Post.10,793)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,793

Date uploaded in London – –     30 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

மெல்லின எழுத்துப் பாட்டு!

ச.நாகராஜன்

சித்திர கவியில் இனவெழுத்துப் பாட்டு  வகையில், மெல்லின

எழுத்துப் பாடலை இப்போது பார்க்கலாம்.

மெல்லினம் என்பது ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய ஆறு எழுத்துக்களின் இனம் ஆகும்.

இந்த மெல்லினம் மட்டுமே வரும் பாடல் மெல்லின எழுத்துப் பாட்டு எனப்படும்.

எடுத்துக்காட்டாக ஒரு பாட்டு:

நன்மனமு நாணமு முன்னினு நான்முன்னே

னின்மனமு நின்னாணு மென்னென்னோ- நன்மனமு

நண்ணுமே நன்மாமை நண்ணுமா மெண்ணுமினோ

மண்ணின்மேன் மானன்ன மா

இது யாப்பருங்கலவிருத்தி தரும் பாடல்.

இதற்கான மாறனலங்காரம் தரும் சூத்திரம் இது:

“மெல்லினமுழுதுறன் மெல்லினப் பாட்டே”

மாறனலங்காரம் தரும் எடுத்துக்காட்டுப் பாடல் இது:-

மனமேநினைஞானமன்னாமைமீன

மனமேனமெங்ஙனெனினங்ஙன் – முனமானா

னேமிமான்மாமானினிநீண்மனமான

நேமிமானன்னாமநீ

பாடலின் பொருள் :

மனமே! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியே இருக்கும் என்னில் அப்படியே முன்னர் திருவவதாரமானவன்,

பூமி தேவியாகிய மான் போலும் விழியை உடையாளுக்கும் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள் மனம் எப்படியோ அப்படி யான ஞான மன்னன், சக்கரத்தை உடையவன், அவனது நல்ல திரு நாமங்களை இடை விடாது நீ நினைப்பாயாக.

இந்த நினைவே ஆன்ம லாபத்தைத் தரும் என்று சொல்ல வரும் மெல்லினப் பாடல் இது.

இப்படிப்பட்ட மெல்லினப் பாடல்கள் தமிழில் ஏராளம் உள்ளன.

தொகுப்பார் தாம் இல்லை!

***

Tags-   மெல்லின , பாட்டு, 

TAMIL ENCYCLOPAEDIA OF WEAVING AND WEAVERS-1 (Post No.10,792)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,792

Date uploaded in London – –    29 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Sangam Tamil literature has 18 books and they are 2000 years old. Tamil epics followed the Sangam literature . Of the five Tamil epics, Silappadiakaram, is the most famous one which contains a Tamil story of chaste woman Kannaki and her unjustly executed husband Kovalan. Two commentaries by Arumpatha Uraiaasiriyar and Adiyarku Nallaar are available. Both  make the epic an encyclopaedia. Though the story contained happened in Sangam period (Second Century CE), the language of Silappadikaram belongs to 5th or sixth century CE. A lot of Sanskrit words, post Sangam Tamil words and supernatural stuff in the 5000 line long epic betrays its age. For the first time we come across words like ‘Narada’, ‘Veena’ etc.

And the two commentaries are about 500 years old. But they contain lot of information which are not available from any other source. 30 words for Cloth are listed at one go by one of them. Clothes made up of rat’s hair is also mentioned!

( I am not repeating what I said I my 2012 articles about Tamil women’s Bra and Reed dress)

xxx

Let us look at details about weavers, weaving and cloths from Sangam period and epic period.

Kovalan , hero of  Tamil epic, was going through different shops in the great city Madurai. The author of the epic Ilango described the shops and the goods sold by them in vivid details.  The cloth/textile shops were selling clothes made up of hair, silk and cotton.

“Kovalan went through the street of cloth merchants, where several kinds of bundles were piled up, each of a hundred  cloths woven of cotton thread, hair or silk thread”.

Atiyaarku nallaar says the ‘hair cloths’ were made up of  rats’ hair. Hair cloths are referred to in another epic Seevaka Chintamani , verse 2686

xxxx

Panju / Panji and Paruthi are the words for Cotton in Tamil, unrelated to Karpasa in Sanskrit. Ilavam Panju is got from the silk cotton tree. Tukil , Kalingam and Aruvai , Pataam were common words for cloth in the olden days, now Thuni and Thundu are more common.

Brahmin priests and orthodox Brahmins wear the Dhoti (Veshti in Sanskrit from Vastra and Vaasa) in a particular style called Panja kacham.

Following is from the Tamil – English Cre-A dictionary:
Panjakacham – a mode of wearing Veshti running one end of it through the crotch and tucking it up in the back.

Thaarppaaychu – wearing a veshti by tucking one end of it behind one’s back (Similar to Panjakacham)

(for this one needs longer dhoti)

Tamils wear pure white Veshti/Dhoti

Kooraip Pudavai- saree, usually in deep crimson colour, worn by the Brahmin brides during wedding rituals ; Kanchi Paramacharya (1894-1994) also mentioned it  and says it may be from the Koorai nadu.

But no one knows whether the Koorai saree gave its name to the area or viceversa.

Naarmadi or Naarpattu– Brahmins observe strict cleanliness with the dress and food.  Children wearing old dress may come and touch them or hug them during religious rituals. To avoid pollution/Theettu /ritual defilement, they ask children to wear Koti/brand new clothes or Pattu/silk or they wear Naarmadi. It is made up of plant fibres

Brand new clothes or cloths are beyond ritual defilement, they believe.

Xxx

Applying starch to clothes

A particular caste of people did the washing for the public. The dhobi or the washerman was called Vannaar and his wife was called Pulaithi or Vannaathi; they not only washed and cleaned the dirt on the cloths, but also applied starch and folded them and delivered them at houses.

The following references from Sangam literature confirm the above details: –

Kurunthokai verse 390,

Narrinai verse 90,

Maduraikanchi – line 721,

Nedunalvaadai- line 134,

Aka naanuuru verse – 387, 34

Pura naanuuru verse- 311

(Tamil quotes are in my Tamil article posted today)

To be continued……………………

 Tags- weaver, washerman, starch, cloths with rat hair, Tamil terms, weaving

எலி மயிரில் ஆடை -2; தமிழர் கண்டுபிடிப்பு -2 (Post No.10,791)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,791

Date uploaded in London – –    29 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி மயிரில் ஆடை -2; தமிழர் கண்டுபிடிப்பு -2

தமிழர்கள் அணிந்த ஆடைகள் , சிந்து சமவெளி யோகி முத்திரையில் காணப்படும் பூ ஆர் ஆடை போல , பூக்கள் நிறைந்ததாக (மலர் டிசைன்) இருந்ததைக் கண்டோம். அவை பல வண்ணங்களில் இருந்த செய்தியையும் சங்க இலக்கியங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

இந்திர கோபப் பூச்சி போல சிவப்பு நிற ஆடைகளை  காண்கிறோம்.

கோபத்தன்ன தோயாப்   பூந்துகில் –

முருகு -14

பெரும்பாணாற்றுப் படையில், சிலந்தியின் நூலுக்கு , துகில் நூல் ஒப்பிடப்படுகிறது. அவ்வளவு மெலிதாம்!!.

துணங்கை யம்பூதந்துகிலுடு த்தவை போற்

சிலம்பி வாநூல் வலந்த மருங்கில் ….

-பெரும்பாண் ; வரி-235/6

xxx

பல மலர்களின் நிறத்தையும் வடிவங்களையும் குறிப்பிடும் வரிகள் இதோ :-

போ துவிரி  பகன்றைப் புதுமலர்  அன்ன

அகன்றுமடி கலிங்கம் – புறம். 393

அதே பாட்டில் கோடைப் பஞ்சு மூட்டை போல வயிறு பெருக்கும்படி உணவு தருவாயாக எனறு வேண்டுவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல பாணர்கள் வறுமை பற்றிப் பாடும்போது கந்தைத் துணிகள் பற்றிய விஷயங்களும் அம்பலத்தில் ஏறுகின்றன.

XXX

பிராமணப் பெண்கள் தாலி காட்டுவதற்கு முன்னால் அணியும் அரக்கு போன்ற சிவப்புநிறப்  புடவை கூறைப் புடவை எனப்படும். இதிலும் நிறம் முக்கியமானது தெரிகிறது.

நார்மடி என்னும் நாரால் செய்யப்பட்ட ஆடையை பிராமணர்கள்  ‘மடி’- ஆக பயன்படுத்திக்கிறர்கள். நார்ப் பட்டு என்றும் இதை அழைப்பர் .

‘மடி’ என்பது, பிறர் அணிந்த தீட்டுத் துணிகளால் பாதிக்கப்படாத என்று பொருள்.இதை ‘கோடி’ என்றும், அதாவது புதுத்துணிகளுக்குத் தீட்டு இல்லை- என்ற பொருளிலும்  சொல்லுவர்.

தார்ப்பாய்ச்சு – வேட்டியின் முன் முனையைப் பட்டையாக மடித்து கால்களுக்கு இடையில் கொடுத்துப்  பின்பக்கம்  இழுத்துச் செருகுதல்

பஞ்சகச்சம் —  வேட்டியை மூன்று முனைகளாக ஆக்கி இரு முனைகளை இடுப்பின் முன்புறத்தில் செருகி மற்றோர் முனையை கால்களுக்கு இடையில் கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் காட்டும் முறை ; பிராமணர்கள் எல்லா பூஜை முதலிய சடங்குகளில் உடை அணியும் முறை.

(From Cre-A Dictionary)

xxx

உடுக்கை, ஆடை, அறுவை , துகில், கச்சு, கச்சை  போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.

நெசவாளர், தையற்காரர்  என்பதற்குள்ள சொற்கள்:- கைக் கோளர் , அத்த கோளர், காருகர், வேதகார் , வேமையர் , துருவியர் , தந்துவாயர் , சாலியர், பொருத்தர்

தையற்காரர்

தூசுதைப்போர், பொல்லர் , துன்னர், தாந்துவீகர் , தோல் தைப்போர் , செம்மார்

மதுரையில் நெசவு வேலை செய்யும் செளராஷ்டிர சமூகத்தினரை பட்டு நூல்காரர்  என்பார்கள்.

சாலியர் பற்றி ‘அபிதான சிந்தாமணி’ ஒரு தகவல் தருகிறது:-

சாலியர் – இவர்கள் வடநாட்டு நெசவுத் தொழிலாளர். இவர்கள் தங்களை சேனாபதிகள் என்பர். பட்டுச் சாலியர், பத்ம சாலியர் என்று இவர்களில்  இரு வகையினர் உண்டு. பட்டுச் சாலியர் பூணுல் தரிப்பர். மாமிசம் சாப்பிட மாட்டார்கள் . பத்மசாலியர் மது, மாமிசம் சாப்பிடுவர். பூணுல் அணியமாட்டார்கள்

துணி என்பதற்கு ஆனந்த விகடன் அகராதி கொடுக்கும் சொற்கள் —

கந்தை, சீலைத் துணி, துண்டு, ஆடை, தொங்கல், மரவுரி, சீலை , கஞ்சுகம் /சட்டை, புடவை.

சங்க காலத்துக்குப் பின்னர் வந்த மணிமேகலை நூலில் புகார் நகர உபவனம் சித்திரத் துணி போர்த்தியது போல விளங்கியதைக் காட்டும்,

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கை படா அம் — மணி மேகலை 3-168

நூல் நூற்கும் தொழிலில் , வேத காலம் போலவே, தமிழ் நாட்டிலும் பெண்கள்தான் அதிகம் ஈடுபட்டனர். கணவனை இழந்த பெண்கள் இதைச் செய்ததாக சங்கப் புலவர்கள் பாடுகின்றனர்.

பருத்தி என்ற சொல் புறநானூற்றில் மட்டும் 7 இடங்களில் காணப்படுகிறது புறம் 326, புறம் 125 etc.

பஞ்சி, பஞ்சு என்பன குறைந்தது 10 இடங்களில் காணப்படுகிறது. இவை தவிர படாம் போன்ற சொற்களும் துணிகளைக் குறிப்பன ஆகும்.

ஆட்டு ரோமத்தாலும், எலி மயிரினாலும், பட்டு நூலாலும்  நெய்யப்பட்ட  துணிகளை நூலாக்கலிங்கம் என்று அழைத்தனர்.

நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ – பதிற்று.12

சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லார் நிறைய விஷயங்களைச் சொல்கிறார்.

ஆடைகளின் ஓரங்களில் அழகிய குஞ்சங்களை அமைப்பதுண்டு. இதை வம்பு நிரை முடினர்– என்ற வரியால்  அறியலாம்.

பட்டுப் புடவைக்குக் குஞ்சம் கட்டுவது பற்றி பொருநர் ஆற்றுப்படையில் படிக்கலாம் :

கொட்டைக்கரைய  பட்டுடை  நல்கி — வரி 155

தாமரை, மல்லிகை, பிச்சி, மாவிலை, மாம்பிஞ்சு வடிவங்களை துணியின் கரைகளில் அமைத்தனராம் ; துகில் என்பது வெண்மை கலந்த சிவப்பு நிறத்திலும், பூந்துகில் என்பதுமலர் வடிவம் வரையப்பட்ட துணி என்றும் அடியார்க்கு நல்லார் உரை செப்பும்.

Xxxx

துணிகளுக்கு கஞ்சி

துணிகளுக்கு கஞ்சி போட்டு, அவைகளை வண்ணார் மனைவியர் , மடித்துக் கொடுத்த செய்தியும் பல சங்க நூல்களில் வருகிறது –

சோறமை  வுற்ற நீருடைக்  கலிங்கம்

வறனில் புலைத்தி எல்லித் தோய்த்த

புகாப்புகார் கொண்ட புன் பூங்கலிங்க மொடு – நற்றிணை 90

கள ரப்படு கூவற் றோண்டி நாளும்

புலைத்தி கழி இய தூ வெள்ளறுவை – புறம் 311

நலத்தகைப் புலத்தி பசை தோய்ந்தெடுத்து – குறுந்.330

பசைகொல் மெல்விரல் பெருந்தோட் புலைத்தி  — அகம் 34

என்ற வரிகளால் துணி வெளுப்போர் தொழில் பற்றியும் அறிகிறோம்.

முடிவுரை:

பெண்களுக்கு முக்கிய வேலை கொடுத்தது நெசவுத் துறை. தமிழ் நாட்டிலுள்ள காஞ்சீபுரம், திருபுவனம், தர்மாவரம் , சின்னாளப்பட்டி சேலைகள் இன்றும் உலகம் முழுதும் பாராட்டப்படுகின்றன. இது போல நாகர்கோவில் வேட்டி , கருடாழ்வார் கரை வேட்டி என்பன துணிமணிகள் சிறப்பை எடுத்து ஓதுகின்றன .

–சுபம் –

TAGS-  சேலைகள், துணிகளுக்கு கஞ்சி, சாலியர், பஞ்சகச்சம், கூறைப் புடவை, தார்ப்பாய்ச்சு, நார்மடி

தாவரம் காப்போம்; பல்லுயிரினம் காப்போம்! (Post.10,790)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,790

Date uploaded in London – –     29 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 27-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஆறாவது உரை

6

தாவரம் காப்போம்; பல்லுயிரினம் காப்போம்!

ச.நாகராஜன்

இயற்கையோடு இயைந்து வாழ்வது என்பதை அனைத்து நாகரிகங்களும் தலையாய கொள்கையாகக் கடைப்பிடித்து வந்ததை வரலாறு நன்கு கூறுகிறது.

இந்த வகையில் இயற்கை அன்னை அளித்துள்ள தாவரங்களைக் காப்பது நமது தலையாய கடமையாகும். அடுத்து புவியெங்கும் பரவி வாழும் பல்லுயிர்களை, – அவற்றின் இனமே அழிந்துபடாமல் – காப்பதும் ஒரு கடமையாகும்.

பூமியில் மட்டும் மூன்றரை லட்சத்திலிருந்து நான்கு லட்சம் வரை வெவ்வேறு தாவர இனங்கள் உள்ளன என்பதை அறிவியல் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.

தாவரங்கள் இன்றி பூமியின் வளம் இல்லை. நமது வாழ்க்கை அமைப்பிற்குத் தாவரமே ஜீவநாடி. சுவாசித்தல், உணவை உட்கொள்ளுதல் உள்ளிட்ட பலவற்றிற்கும் மனித ஆதாரம் தாவரங்களே.

ஒளிச்சேர்க்கையால் சூரிய ஒளியைக் கொண்டு தாவரங்கள் நீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிளவு படுத்துகிறது. ஹைட்ரஜன் கார்பன் டை ஆக்ஸைடுடன் இணைந்து குளுகோஸை உருவாக்குகிறது.

மனிதன் உயிர்வாழ இன்றியமையாத ஒன்றாக அமையும் ஆக்ஸிஜன் அல்லது உயிர்வளி இதன் துணை விளைபொருளே (by-product) ஆகும்.

நுண்மையான ஒரு தாவரத்தின் வேர் 20 கெமிக்கல்களை – வேதியல் பொருள்களைப் பிரித்தறியும் பாங்குடையது என்பது எவ்வளவு ஆச்சரியமான ஒரு விஷயம்!

நுண்மையான தாவர வேர்கள் மற்ற உயிரைக் கொல்லும் இனக் கொல்லிகளை (predators) அகற்றி பூந்துகள் சேர்ப்பிகளை (Pollinators) கவர்ந்து இழுக்கிறது. இதனால் உயிரினம் காக்கப்படுகிறது.

90 விழுக்காடு அழிக்கப்பட்டாலும் தம்மைத் தாமே மறுபடி உருவாக்கித் தழைக்கும் தன்மை கொண்டவை தாவரங்கள்.

நீடித்த ஆயுளைக் கொண்டு மனித இனத்தை வாழ வைப்பவை இவை என்றால் அவற்றிற்கு உரிய பாதுகாப்பை மனித இனம் தர வேண்டுமல்லவா!

ஒரு லட்சம் ஆண்டு ஆயுளைக் கொண்ட தாவரங்கள் ஸ்பெயினிலும் 9560 ஆண்டு வயதுள்ள மரம் ஸ்வீடனிலும் பாதுகாக்கப்படுகின்றன என்பது உத்வேகமூட்டும் ஒரு செய்தி!

தாவர இனத்தால் உயிர் வாழும் இனங்களின் பட்டியலுக்கு ஒரு முடிவே இல்லை.

ஒரு முக்கியமான புள்ளி விவரத்தையும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டும். நாம் வாழும் பூமியில் BIOMASS எனப்படும் உயிரினத் தொகுதியில் 82.4 விழுக்காடு தாவரங்களே. 12.8 விழுக்காடு பாக்டீரியா;  0.4 விழுக்காடு மிருகங்கள். வெறும் 0.01 விழுக்காடு மட்டுமே தான் மனித இனம்!

ஆக 82 விழுக்காடு உள்ள பெரும் உயிரினத்தொகுதியாக அமைந்து அனைத்து உயிரினங்களையும் காத்து வரும் தாவரங்களை  0.01 உள்ள மனித இனம் தம்மை அறிந்தும், அறியாமலும் அழிக்க முற்படலாமா?

உணவாகவும், மருந்தாகவும் குளிர்ச்சி தரும் பசுமைக் காவலாகவும், மனித மனதிற்கு சாந்தி தந்து மன இறுக்கத்தைத் தளர்த்தி உற்சாகத்தை ஏற்படுத்தும் இயற்கை வளமாகவும் அமையும் தாவரம் ஒவ்வொன்றையும் காப்போம்; சூழலை இனியதாக ஆக்குவோம்!

**

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 28-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஏழாவது உரை

7

மண் வளம் காக்க மரங்களை நடுவோம்!

ச.நாகராஜன்

சுற்றுப்புறச் சூழலைக் காக்க உதவும் மிக முக்கியமான செய்கைகளில் ஒன்றாக அமைவது மரங்களைக் காப்பதே!

மரங்களை அழிக்காமல் காப்பது மட்டுமல்லாமல் இழந்த மரங்களின் இழப்பீட்டை சமனப்படுத்தும் வகையில் புதிய மரங்களை நட்டு வளர்ப்பது மனிதர்களின் தலையாய கடமையாக ஆகிறது.

இன்று மண்வளம் குறைந்து கொண்டே போக மரங்களின் அழிவே காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

மண்ணைச் சுரண்டி சுரண்டி, ஆறுகளை வழக்கம் போலப் பாய விடாமல் ஆக்குவதால், நீடித்த அளவில் நம்மை நாமே அழித்துக் கொண்டவர்களாக ஆகிறோம்.

செழுமை வாய்ந்த மண் வளத்தினாலேயே, பாரம்பரியம் மிக்க இந்திய விவசாயிகள், நூறு கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் உணவு பெற வழி வகுக்கிறார்கள்.

உலகில் இதர இடங்களில் உள்ள மண்ணை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்திய மண்ணில் ஒரு கியூபிக் மீட்டர் மண்ணில், மைக்ரோ ஆர்கானிஸம் (Micro-organism) எனப்படும் நுண்ணுயிர்கள் மிக அதிக அளவில் காணப்படுவது நமது மண் வளத்தின் பெருமையைப் பறை சாற்றும் ஒரு அரிய உண்மையாகும்.

இப்படிப்பட்ட அரிய வளம் வாய்ந்த மண்ணைப் பாதுகாக்க வேண்டிய நாம் அதற்கு உதவியாக அமையும் மரங்களை மிக அதிக அளவில் ஆங்காங்கே நட்டு, பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

மரங்கள் வெட்டப்படுவதால் மண் வளம் வீழ்ச்சி அடைகிறது. மண்வளம் வீழ்ச்சி அடைவதால் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகிறது.  ஆகவே நமது குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக வளர்கிறார்கள்.

பருவ மழையை நம்பி இருக்கும் நம் நாடு மழைக்காலத்தில் மழை நீரைச் சேமிப்பதோடு ஆறுகள் வற்றிடாமல் பாய வழி வகுத்தால் மண் வளம் செழிக்கும். ஏரிகள், குளங்கள், சிற்றோடைகள், ஊருணிகள், நீரோடைகள் என அனைத்தையும் பாதுகாத்து அவற்றின் அருகே உள்ள மரங்களையும் மலர்ச் செடிகளையும் பாதுகாத்தால் சூழல் மேம்படும்; நீர் வளம் வருடம் முழுவதும் குறையாது. மண் வளம் மேம்படும். ஊட்டச் சத்து உயரிய நிலையை அடைந்து ஆரோக்கியம் மேம்படும்.

நமது சந்ததியினருக்கு நாம் ஒரு பெரும் பாரம்பரியத்தை விட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல் தங்கத்தையோ, பணத்தையோ விட்டுச் செல்வதை விட அருமையான இயற்கை வளத்தை மேம்படுத்தி விட்டுச் சென்றோமெனில் அது அவர்களுக்கு நாம் அளிக்கும் உயரிய உரிய பரிசாக அமையும்.

ஆகவே உத்வேகத்துடன் மண் வளம் காப்போம்; மரங்களைக் காப்போம். மரங்கள் நடுவோம்.

ஆங்காங்கே குழுக்கள் அமைத்து மண்ணைச் சுரண்டுவோர்களை இனம் கண்டு உரிய அதிகாரிகளிடம் எடுத்துரைப்போம்.

–subham–

tags- மரங்கள் , தாவரம் ,நடுவோம், 

WEAVERS in THE RIG VEDA (Post No.10,789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,789

Date uploaded in London – –    28 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Marxist gangs and Max Muller gangs projected Vedic Hindus as outsiders and nomads. But the information in the Tamil and Sanskrit literature said they were sons of the soil. More over the agricultural terms and the weaving terms tore the faces of those liars. The terms regarding the horses and chariots show highly developed transport system even during Vedic times. Sangam Tamil literature came a few thousand years after the Rig Veda, the oldest book in the world, and they also talk about lovers coming in chariots to meet their lady loves.

Let us look at the weaving details today. There is a beautiful simile which compares weavers producing cloths with poets composing songs. And another poet complaints about the rats damaging the yarn in the loom. These show that the Vedic society had a very active population of weavers.

Xxx

Weaver 1

A hymn on creation 10-130

The sacrifice drawn out  with threads on every side, stretched by a hundred sacred ministers and one-

This do these fathers weave who hitherwards are come; they sit  beside the warp and cry, weave forth and weave back.

The man extends it and the man unwinds it ; even to this vaults of heaven hath he outspun it

These pegs are fastened to the seat of worship: they made their Sama hymns as their weaving shuttles.

Xxx

Weaver 2

RV.10-33

The ribs that compass me give pain and trouble me like rival wives

Indigence, nakedness exhaustion press me sore; my mind is fluttering like a bird’s.

As rats eat weavers’ threads, cares are consuming me, thy singer , Satakratu me

Have mercy on us once , O Indra, Bounteuos Lord: be thou a father unto us.

Xxx

Weaver 3

Atharva Veda 10-7-42/43/44

42.Singly the two young maids of different colours approach the six pegged warp in turns and weave it

The one draws out the threads, the other lays them; they break them not, they reach no end of labour.

43.Of these two , dancing round as it were, I cannot distinguish whether ranks before the other

A male in weaves this web, a male divides it ; a male hath stretched it to the cope of heaven.

44.These pegs have buttressed up the sky. The Samans have turned them into shuttles for the weaving.

Interpretation

This hymn is a glorification of the Supreme Deity embodied, under the name Skambha, the Pillar, the Support or Fulcrum of all existence

( In Tamil, it is Kanthazi in Tolkappiam etc.)

42.Two young Maids: Ushas/Dawn and Night.

Six pegged: stretched over the six regions of the world Dawn weaves the luminous weft of day, and Night removes it from loom.

43.A Male: the first Man or Male , Purusha, Adipurusha, Prajapati.

This web: meaning here the primaeval sacrifice which constitutes creation; The man extends it, and the Man unbinds it .

( I think it is Big Bang and Big Shrink; it is already in Rig Veda 10-130)

Xxx

My Comments

Whether it is a big topic like Creation or an insignificant one like a rat gnawing the weaver’s thread, the Vedic poets used the simile of weaving, because it is understood by everyone. The weaving was so common in Vedic society.

Xxx

RV 10-101

Make pleasant hymns, spin out your songs and praises.

Xxx

RV.1-164

An ignorant fool, I ask in my mind about the hidden footprints of the gods. Over the young calf the poets stretched out seven threads to weave.

Xxx

RV.6-9-2/3

I do not know how to stretch the thread, nor weave the cloth , nor what they weave  as they enter the contest. Whose son could speak here such words that he would be above  and his father below?

He is the one who knows how to stretch  the thread and weave the cloth; he will speak the right words.

Xxx

RV.2-38-4

What was spread out she weaves afresh, re-weaving. The skilfull leaves his labour half-complete

He hath arisen from the rest, and parted seasons

(This is in another Rig Vedic verse as well; dawn and night weaving and un weaving)

Xxx

RV.2-28-5

Loose me from sin as from a bond that binds me; may we swell, Varuna, thy spring of order.

Let not my thread, while I weave the song,  be severed, nor my work’s sum, before the time, be shattered.

Xxx Subham xxx

Tags- Weaving, Weaver, Thread, Shuttle, Spin, a song

எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!! (Post No.10,788)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,788

Date uploaded in London – –    28 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part 2 of  நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ப்ரா

நூலினு மயிரினும் நுழை நார் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து

நறுமடி செறிந்த வறுவை  வீதியும்

ஊர்காண் காதை , சிலம்பு. வரிகள் 205/7

((கீழே விளக்கம் காண்க))

xxx

நீலக் கச்சை, பூவார் ஆடை – புறம் 274, பாடியவர் உலோச்சனார்

ஒரு மறவன் போர்க்களம் சென்றான். அவன் பூப்போட்ட சட்டை அணிந்திருந்தான். இடுப்பில் நீல நிற கச்சையை / பெல்ட்டை அணிந்திருந்தான் .

உண்பது நாழி; உடுப்பது இரண்டே – புறம் 189; பாடியவர் நக்கீரர் ஆண்டியானாலும் அரசன் ஆனாலும் எல்லோருக்கும் உடம்பு ஒன்றுதான். ஒரு நாழி அளவு தானியம் போதும்; மேலாடை, அரை ஆடை என்ற ரண்டு துண்டுகள் போதும்.

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும் – புறம் 275

பாடியவர்- ஓரூ உத்தனார்

வளைந்த கண்ணியும் , கடல் அலை போன்ற மெல்லிய ஆடையும் அணிந்த மறவன்.

மேலாடையும் இடுப்பில் கச்சும் அணிவது பற்றி மதுரைக் காஞ்சியும் பாடுகிறது :-

திண்டேற் பிரம்பிற் புரளும் தானை

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி

–மதுரை. 435-436

எல்லோருக்கும் ஒரு வகை சீருடை, அதாவது UNIFORM யூனிபார்ம் இருந்தது. இன்று நாம் சட்டை போட்டுக் கொள்கிறோம். ஆனால் அக்காலத்தில் சட்டையில்லை; வேட்டியும், மேல் துண்டும்தான். சபைக்கு வருவோர் மட்டும் ‘கஞ்சசுகம்’  என்ற சட்டை அணிந்திருந்தனர்.

மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துக்கு வந்த ரிஷி முனிவர்கள் இப்படி கஞ்சுகம் அணிந்ததை குறிப்பிடுகிறது ; இதை ஆர்ய தரங்கிணி நூல் எழுதிய ஆ.கல்யாணராமன் குறிப்பிட்டுள்ளார்.இண்டிகோ என்னும் அவுரிச் செடி சாயத்தை இத்தாலிக்கு பழந்தமிழர்கள் ஏற்றுமதி செய்தனர். இந்த இந்திய சாயம் பற்றி பிளினி என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில்தான் அதிக விஷயங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான ஆடைச் சொற்கள் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

இப்போது பிராமணர்கள் மட்டும் அணியும் பஞ்ச கச்சம் அக்காலத்தில் அரண்மனைக்குச் செல்லும் அதிகாரிகள் போன்றோர் அணிந்த உடை ஆகும்..

கி.வா. ஜகந்நாதன் போன்ற அறிஞர்கள் எப்போதுமே இந்த உடையில்தான் வெளியே வருவார்கள்.

சேரன் செங்குட்டுவன் சபையில் இருந்தான். வேறு பெண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். மகாராணிக்கு ஊடல் வந்தது. எனக்கு தலை வலிக்கிறது என்று பொய் சொல்லிவிட்டு அந்தப் புரத்துக்குப் போய்விட்டாள். பக்கத்தில் இருந்த மஹாராணி திடீரென்று மறைந்த செய்தி அறிந்த செங்குட்டுவன் அவளைப் பார்க்க விரைந்தான். அப்போது மன்னனை இடைமறித்த பொற்கொல்லன் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டான். அவன் சட்டை போட்டுக்கொண்டு வந்த செய்தியும் சிலப்பதிகாரத்தில் உள்ளது —

மெய்ப்பை புக்கு விலங்குநாட்டைச் செலவின் 

கைக்கோற் கொல்லனைக் கண்டனனாகி

–கொலைக்களக் காதை 107-108

பாண்டியன் அரண்மனையில் வேலை பார்த்த வெளிநாட்டு யவனரும் சட்டை அணிந்து இருந்தனர்

உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர்

–முல்லைப்பாட்டு 66-67 வரிகள்.

சம்ஸ்க்ருதம் அல்லது தமிழ் மொழி பேசாதவர்களை ‘மிலேச்சர்’ என்றும் கரடு முரடான சொற்களைப் பேசுவோர் என்றும் தமிழ்ப் புலவர்கள் திட்டுவார்கள். ‘வன் சொல்’ யவனர் என்று ஏசுவர்.

XXX

.சிலப்பதிகாரத்தில் இன்னும் ஒரு செய்தி ….

சஞ்சயன் போன பிறகு , பாண்டிய நாட்டு வீரர்கள் ஆயிரம் பேர், சேரன் செங்குட்டுவனுக்கு திறைப் பொருள் கொண்டுவந்து கொடுத்ததாகவும் அவர்கள் கஞ்சுக யூனிபார்ம்/ சீருடை அணிந்து இருந்ததாகவும் இளங்கோ அடிகள் பாடுகிறார்.

சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள்

எஞ்சா நாவினர் ஈரைஞ்ஞூற்றுவர்

–சிலம்பு. கால்கோட் 167-68

XXXX

இடையர் போன்றோர் எளிய உடைகளை அணிந்து இருந்தனர் ,

ஒன்றாமற் உடுக்கைக் கூழார் இடையன்

–பெரும்பாண் . வரி 175

உடுக்கை இழந்தவன் கைபோல — என்று வள்ளுவனும் ஆடைக்கு ‘உடுக்கை’ என்று சொல்லுவதை ஒப்பிடலாம்

பெண்கள் இடையில் மட்டும் ஆடை அணிந்து இருந்தனர் . மலையாளத்தில் இப்படிப் பெண்கள் மார்பகத்தை மறைக்காமல் இருந்த படங்களை பழைய புஸ்தகங்களில் இன்றும் காணலாம். மஹாராணி போன்றவர்கள் மார்பகக் கச்சு (BRA) அணிந்தனர். பெண்கள் மார்பகத்தின் மீது சந்தனம் முதலியவற்றால் ஓவியம் வரைந்தனர். இது பற்றி அகத்துறைப் பாடல்களில் நிறைய குறிப்புகள் வருகின்றன ..

ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலை மேல்

தொய்யில் எழுதுகோ

–முல்லைக்கலி 11-16/17

இடையில் மேகலை அணிந்து, அதன்மேல் பூந்துகிலைச் சுற்றிக்கொண்டனர்.

பிறங்கிய  முத்தரை முப்பதிருகாழ்

நிறங்கினர்  பூந்துகில் நீர்மையின் உ டீ இ

–சிலம்பு. கடலாடு காதை 87-88

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து

-சிலம்பு .13-172

புதுமணப் பெண்கள் முதலிரவு அறைக்குள் வந்தபோது புத்தாடைகளால் உடலை மூடிக்கொண்டு வந்த செய்தி அகநானூறு திருமணப் பாடலில் -86 வருகிறது

வெண்ணிற ஆடைகளை அணிந்து பெண்கள் பந்தாடிய செய்தியும் கிடைக்கிறது. செக்கர் வானைப் போன்ற செவ்வண்ணம் ஊட்டிய பூத் தொழில் செய்யப்பட்ட ஆடைகள்  , புடவைகள் மதுரையில் விற்கப்பட்டன என்று மாங்குடி மருதப்பினார் பாடுகிறார் – மதுரைக்கு காஞ்சி வரிகள் 431-433; 513

டாக்கா மஸ்லின்

உலகப் புகழ்பெற்ற டாக்கா மஸ்லின், தாகேஸ்வரி தேவி கோவில் கொண்டுள்ள டாக்கா நகரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு மோதிர வளையத்துக்குள் பல நூறு அடி நீளமுள்ள டாக்கா மஸ்லின் துணியைச் சுருட்டி நுழைத்து விடலாம். இது இப்போது அடியோடு அழிந்துவிட்டது. டாக்கா மஸ்லின் துணியை

அழிக்க எண்ணிய வெள்ளைக்கார்கள் அந்த நெசவாளர் ஆயிரம் பேரின் கட்டை விரல்களைத் துண்டாக்கிய செய்தி வரலாற்றில்  நடந்த கொடூரங்களில் ஒன்றாகும்.

இது போன்ற நுண்ணிய ஆடைகளை தமிழர்களும் செய்தனர். பாம்புச் சட்டை போன்ற மெல்லிய ஆடை, கடல் அலை போன்ற மெல்லிய ஆடை, எலி மயிரால் செய்யப்பட்ட ஆடை என்றெல்லாம்  குறிப்புகள்  கிடைக்கின்றன . ஒருவேளை எலி மயிர் போன்ற மிருதுவான, மெ ன்மையான என்ற பொருளில் சொல்லி இருக்கலாம்.

நூலினு மயிரினும் நுழை நார் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து

நறுமடி செறிந்த வறு வை  வீதியும்

ஊர்காண் காதை , சிலம்பு. வரிகள் 205/7

பொருள்

நுண்ணிய பருத்தி நூலினாலும் , எலி மயிரினானும், பட்டு நூலினானும் தத்தம் பகுதிகளால் நெய்யப்பட்டு முற்கூறிய துகில் வருக்கங்களில் ஒவ்வொன்றை நூறாகத் தெரிந்தெடுக்க ப்பட்ட  அடுக்குப் பல நூறாகிய மடிப்பு புடவைக் கடைகளும்

புடவைக்கு கடைகளுக்கு வாசங் கொளுத்துதலின் ‘நறு மடி’ என்றார் .

அந்தக் காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய இழைகளால் ஆடைகள் நெய்யப்பட்டன ; அவற்றின் மீது பூக்கள் வரையப்பட்டிருந்தன. . பாம்பின் சட்டையைப் போல மெல்லியதாக இருந்தன. . இதை பொருநர் ஆற்றுப்படையில் காணலாம்

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூங்கனிந்து

அரவுரி  என்ன அறுவை நல்கி – பொருந. வரி 82-83

அரவு = பாம்பு; அறுவை = துணி

பாம்பின் சட்டை போலும் மூங்கிலின் உட்புறத்தேயுள்ள வெள்ளை நிற தோல் போலவும் அமைந்த பூங்கலிங்கத்தை புறநானூற்றுப் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார் :

பாம்புரியன்ன வடிவின காம்பின்

கழை படு  சொலியின் இழையணி  வாரா

ஒண் பூங்கலிங்கம் உடீ இ — புறம் 383.

புகையைப் போலவும் பாலாவியைப் போலவும் ஆடைகள் விளங்கிற்று —

புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ

ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் —

பெரும்பாண் . வரிகள் 469/70

சீவ சிந்தாமணியிலலும் மயிரால்  ஆடை நெய்வது குறிப்பிடப்படுவதாக (பாடல் 2686) உ.வே.சாமிநாதையர் எழுதுகிறார் .

To be continued…………………………………..

tags- எலி மயிர், ஆடை, உடுக்கை, பாம்புத் தோல், மெல்லிய , சிலப்பதிகாரம்

நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra …

https://tamilandvedas.com › நீலக…

20 hours ago — தமிழர்களின் தழை உடை (REED DRESS of TAMILS) பற்றிய இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை 2012-ல் …

புதிய வழிகளைக் காண்பிக்கும் புறச் சூழல் ஆர்வலர்கள்! (Post.10,787)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,787

Date uploaded in London – –     28 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 25-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய நான்காவது உரை

4

புதிய வழிகளைக் காண்பிக்கும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள்!

ச.நாகராஜன்

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டும் தான் என்று மெத்தனமாக இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் முனைந்து இதில் ஈடுபட வேண்டும் என்பது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் ஒரு மித்த கருத்தாகும்.

இதற்கென இந்தியாவெங்கும் உள்ள சூழல் ஆர்வலர்கள் வெவ்வேறு விதத்தில் தக்க செயல்களைச் செய்து எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

இதில் ஒரு வழி நமது வீட்டையும், நமது பயணத்திற்கான சூட்கேஸ், நாம் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லும் பை ஆகியவற்றைத் தணிக்கை செய்து பார்ப்பதாகும்.

பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ எடுத்துச் செல்லும் பையில் பிளாஸ்டிக் அல்லது சூழலுக்குக் கேடு பயக்கும் பொருள்கள் இல்லாமல் இருக்கிறதா என்று பலரும் தங்களைத் தாங்களே தணிக்கை செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஒரு கடற்கரைக்கோ அல்லது உல்லாச பயண தலத்திற்கோ செல்லும் போது பயணிகள் நிச்சயமாக கழிவுப் பொருள்களை ஆங்காங்கே போடாமல் தம்முடனேயே உடனுக்குடன் எடுத்துச் செல்ல, கழிவுப்பொருள் பைகளை எடுத்துச் செல்வது அதிகமாகி வருகிறது.

பயணம் முடிந்த பின்னர் சூட்கேஸை சுய தணிக்கை செய்து பார்த்தால் எவ்வளவு கழிவுப் பொருள்களை அனாவசியமாக நாம் உருவாக்குகிறோம் என்பது தெரிய வரும்; மேற்கொண்டு வரும் பயணங்களில் இவை படிப்படியாக குறைக்க இந்த தணிக்கை முறை உதவும்.

மறுசுழற்சி செய்யக் கூடிய பாட்டில்களை மட்டுமே எடுத்துச் செல்வது என்ற பழக்கம் வாழ்க்கை முறை பழக்கமாக ஆக வேண்டும்.

விடுதிகளில் தரப்படும் குளியல் அறை பொருள்களை ஏற்காது, நமது சொந்தப் பொருள்களையே எடுத்துச் செல்வது ஒரு நல்ல பழக்கமாகும்.

பயணத்தை இனிய ஜீரோ வேஸ்ட் டிராவலாக (ZERO WASTE TRAVEL) – கழிவுப்பொருளே இல்லாத பயணமாக இருப்பதை விரும்புவோரின் எண்ணிக்கை இப்போது பெருகி வருகிறது. ஆங்காங்கே குடிநீர் பாட்டில்களை வாங்காமல் ஒரே ஒரு பாட்டிலிலேயே ஆங்காங்கே பருகத் தக்க நீரைப் பிடித்துப் பயன்படுத்துவது சூழல் ஆர்வலர் வற்புறுத்தும் பழக்கமாக அமைகிறது.

பேப்பர் உபயோகத்தைக் குறைக்கும் வகையில் டிஜிடல் முறையிலான பயணச் சீட்டைக் கொண்டு செல்வது இன்றைய நல்ல பழக்காமாக மாறி வருவது வரவேற்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

நொறுக்குத் தீனிகளை பிளாஸ்டிக் பைகள், பெட்டிகளில் போடாமல் மறு சுழற்சிக்கு உள்ளாகும் பைகள், பெட்டிகளில் போட்டு வைப்பது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்படி நூற்றுக் கணக்கான வழிகளை மேற்கொண்டு பிறருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

நாமும் இவர்களைப் போல பயணம் ஒவ்வொன்றையும் ‘ஜீரோ வேஸ்ட்’ பயணமாக ஆக்கி சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கலாமே!

**

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 26-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஐந்தாவது உரை

5

தட்பவெப்பம் சீராக இருக்க மீத்தேன் வாயுவைக் கட்டுப்படுத்துவோம்

ச.நாகராஜன்

 சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் தொழிற்புரட்சி ஏற்பட்டது.

அதன் பின்னர் நமது பூமியின் வெப்பம் ஒரு டிகிரி செல்ஸியஸ் கூடி இருப்பதை அனைவரும் அறிவோம்.

இப்படி வெப்பம் கூடிக் கொண்டே போவதற்கு கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயு மட்டுமே காரணமல்ல. இன்னொரு காரணமாக மீதேன் வாயுவையும் கூறலாம். இது சற்று குறைவு தான் என்றாலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக அமைகிறது.

மீதேன் வெளிப்பாடு ஆண்டொன்றுக்கு 380 மில்லியன் டன்கள் என்ற அளவில் இப்போது இருந்து வருகிறது. ஆகவே இது கார்பனுக்கு அடுத்த அபாயமாக இருக்கிறது.

சமீபத்தில் வெளியான மக்கென்ஸி அறிக்கை (McKinsey Sustainablility report) இது பற்றிய பல விவரங்களைத் தருகிறது. நாம் இன்று காணும் வெப்பத்திற்கு, 30 விழுக்காடு இது காரணமாக அமைவதாக இந்த அறிக்கை அறிவிக்கிறது.

இதில் ஒரே ஒரு நல்ல அம்சம் என்னவெனில், இந்த மீதேன், வளி மண்டலத்தில் பத்து வருடங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகவே இதைக் குறைத்தால் அதன் பலனை உடனடியாகக் காண முடியும் என்பது தான்.

மீதேன் முக்கியமாக மனிதச் செயல்பாடுகளினாலேயே ஏற்படுகிறது என்பதோடு முக்கியமாக ஐந்து துறைகளினாலேயே 98 விழுக்காடு மீதேன் வெளிப்பாடு அமைகிறது என்பதையும் அறிய முடிகிறது.

இவற்றில் கவனம் செலுத்தி மீதேனைக் கட்டுப்படுத்தி வருடத்திற்கு 2 விழுக்காடு என்ற அளவில் குறைத்து விட்டால் 1.5 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் பூமியின் உஷ்ண அதிகரிப்பைக் குறைத்து விடலாம்.

விவசாயம், எண்ணெய் மற்றும் எரிவாயு, நிலக்கரிச் சுரங்கம், Sold Waste எனப்படும் திடக்கழிவு, கழிவு நீர் ஆகிய ஐந்தைக் கட்டுப்படுத்தினால் 2030 ஆம் ஆண்டு வாக்கில் 20 விழுக்காடு மீதேனைக் கட்டுப்படுத்தியவர்களாவோம்.

கால்நடை மற்றும் செம்மறி ஆடுகள் மட்டுமே உலகளாவிய விதத்தில் விவசாயத் துறையில் 70 விழுக்காடு மீதேன் வெளிப்பாட்டிற்கான காரணமாக அமைகிறது. இவற்றின் தீனியைச் சற்று மாற்றினாலேயே மீதேன் வெளிப்பாடு வெகுவாகக் குறையும் என்பது விஞ்ஞானிகளின் பரிந்துரை.

வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தினால் எண்ணெய் மற்றும் எரிவாயுவினால் ஏற்படும் தீங்கைக் கட்டுப்படுத்தியவர்களாவோ,.

அடுத்து நிலக்கரிச் சுரங்கம் பத்து முதல் பதினைந்து விழுக்காடு மீதேன் வெளிப்பாடிற்கான காரணம் என்பதால் இதைக் கட்டுப்படுத்தினால் வரும் முப்பது ஆண்டுகளில் 13 விழுக்காடு மீதேன் வெளிப்பாடைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

திடக்கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மையை நவீன தொழில்நுட்ப உதவி கொண்டு சீரமைத்து கழிவு நீரைத் தூய்மைப்படுத்தினால் நாம் இன்னும் 14 விழுக்காடு மீதேனைக் கட்டுப்படுத்தலாம்.

கால்நடைகளின் தீனியை மாற்றுவது, வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்துவது, திடக்கழிவைக் குறைப்பது, நீர்க்கழிவைச் சுத்தப்படுத்துவது ஆகிய இவற்றில் சாமானியரின் பங்கு நிறையவே இருப்பதால் ஒவ்வொருவரும் மீதேன் புகை வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த உறுதி பூண வேண்டும்.

இதனால் பெருமளவு புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும் என்பது

ஒரு நல்ல செய்தி அல்லவா?!

**

TAGS- மீதேன், மறுசுழற்சி

நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ‘ப்ரா’ -1 (Post.10,786)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,786

Date uploaded in London – –    27 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழர்களின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது பெண்கள் அணியும் BRAZZIERE பிரேசியர், ப்ரா எனப்படும் மார்பக கச்சு ஆகும் . இது பற்றி நான் 1993 முதல் 2006 வரையில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின்  தொகுப்பில் காணலாம் இதை 2009-ம் ஆண்டில் “தமிழ் இலக்கியத்தில் அதிசயச்  செய்திகள்” என்ற புஸ்தகமாக நாகப்பா பப்ளிகேஷன்ஸ் மூலமாக (Nagappa Publications, Royapetttah, Chennai-14) வெளியிட்டேன் . தமிழர்களின் தழை உடை (REED DRESS of TAMILS) பற்றிய இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை 2012-ல் எனது பிளாக்குகளில் வெளியிட்டேன்.

2012ம் ஆண்டு கட்டுரையில் சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் தந்த 30 சொற்களையும் வெளியிட்டேன். தமிழ் அகராதியிலோ, தமிழ் நிகண்டுகளிலோ அதிகமாக ஸம்ஸ்க்ருதச் சொற்களைத்தான் காண்கிறோம். ஏனெனில் கால்டுவெல் போன்ற கயவர்கள் வரும்வரை தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்ற கருத்தே நிலவியது. காளிதாசன் 2100 ஆண்டுகளுக்கு முன்னர்  எழுதிய ரகுவம்சம்  நூல் முதல் நமது காலத்தில் பாரதியார் பாடிய பாடல் வரை அகஸ்தியர்- பாண்டியர்- தமிழ் மொழி தொடர்பு பேசப்படுகிறது. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவ பெருமான் உடுக்கை ஒலியில் பிறந்தது என்ற கருத்தை காஞ்சி புராணத்திலும் திருவிளையாடல் புராணத்திலும் காண்கிறோம். இதன் காரணமாக தமிழ் ஸம்ஸ்க்ருதச் சொற்களை எந்த வித வேறுபாடும் இன்றி நம் முன்னோர்கள் வெளியிட்டனர். இப்பொழுது சில சொற்களை ஆராய்வோம்.

(Following is from my 2012 article)

36 வகை ஆடைகள் (36 Types of Clothes)

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்களின் 36 வகை உடைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அவையாவன: கோசிகம், பீதகம், பச்சிலை,  அரத்தம்,

நுண் துகில், சுண்ணம்,  வடகம், பஞ்சு,

இரட்டு, பாடகம், கோங்கலர், கோபடம்,

சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம்,

புரியட்டம், காசு, வேதங்கம், புங்கர் ,

காழகம், சில்லிகை, துரியம், பங்கம்,

நல்லியம், வண்டை, கவற்றுமடி, நூல்,

 யாப்பு, தேவாங்கு, திருக்கு, பொன்னெழுத்து,

குச்சரி, தேவகிரி, காத்தூலம், கிறைஞ்சி,

செம்பொத்தி, பனிப்பொத்தி.

இவைகளில் சில கடாரம், காழகம் (மலேசியா, பர்மா), கூர்ஜரம் (குஜராத்) ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதியானது பெயரில் இருந்தே தெரிகிறது. அதே போல நமது துணிகள் எகிப்திய நாட்டின் இறந்தோர் உடலைச் (மம்மி) சுற்றவும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

எகிப்திய நெய்தல் தெய்வத்தின் பெயர் நெய்த்(Neith). இதுவே தமிழ்ச் சொல்!

தமிழர்கள் அணிந்த தழை உடை, Bra ப்ரா , சிந்து சமவெளி யோகி அணிந்துள்ள நீல நிற பூ ஆடை ஆகியனபற்றி 10 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டதால் மீண்டும் எழுதப் போவதில்லை . சில சொற்களை ஆராய்வோம்.

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்பதற்கு அவர்களின் சிந்தனைப் போக்கே நல்ல உதாரணம். அறம், பொருள், இன்பம், வீடு (சம்ஸ்க்ருத தர்ம, அர்த்த, காம, மோக்ஷ) என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் அதே வரிசையில் உள்ளன. அர்த்த என்ற சொல்லுக்கு பொருள் , செல்வம் Meaning and Wealth என்ற அர்த்தம் இருப்பதையும் சூத்திரம் என்ற சொல்லுக்கு புஸ்தகம், நூல் இழை (Book and Thread( என்ற அர்த்தம் இருப்பதையும் இரண்டு மொழி நூல்களிலும் காண்கிறோம். திருவள்ளுவர் தன் நூலையே அறம் பொருள் இன்பம் என்று பாடி அமைத்தார்.

ஆக நூல்= சூத்திரம்/புஸ்தகம் ; இழை என்ற ஒற்றுமையே நெசவு என்பதும் இருவர்க்கும் பொதுவானது என்பதைக் காட்டுகிறது.

நூல் இழையை வைத்து, நெய்து, துணியை உண்டாக்குவது போல புஸ்தகங்களை உண்டாக்கினர்.

மற்றோரு முக்கியச் சொல் “சித்திரம்” ; சங்க கால புலவர்களில் ஒருவர் பெயர் மஹா சித்திரன்= பெருஞ்சித்திரனார். இந்த சித்திரம் என்ற சொல் ரிக் வேதகாலம் முதல் புறநானூறு வரை வருகிறது. அர்ஜுனனை மணந்த சித்திரங்கதாவையும் அறிவோம்.

இன்றும் எம்ப்ராயடரி துணிகளில் உள்ளதை சித்திர வேலைப்பாடு என்றே சொல்கிறோம் . “உண்பது நாழி, உடுப்பது இரண்டே” என்ற கருத்தை 2300 ஆண்டு பழமையான ஓவியங்களிலும் சிற்பங்களிலும் பார்க்கிறோம்.

ஊசி , கஞ்சுகம் என்ற இரண்டு சொற்களை எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டும் சங்க இலக்கியத்துக்கு முன்னரே வேத, இதிஹாசங்களில் இருக்கிறது; மஹாபாரத யுதிஷ்டிரரின் பட்டாபிஷேகத்திற்கு ரிஷி முனிவர்கள் கஞ்சுகம் அணிந்து வந்த செய்திகள் உள்ளன. பிற்காலத்தில் பாதுகாவலர், போலீசாரும் இப்படி அணிந்தனர். இதை (ஊசி)  சங்க இலக்கியத்தில் படிக்கிறோம்

இதோ கஞ்சுகம், ஊசி பற்றிய சங்க காலக் குறிப்புகள் :–

ஒரு குறிப்பிட்ட வகை சட்டை, UNIFORM யூனிபார்ம்/சீருடை அணிந்தவர்களை கஞ்சுக மாக்கள் என்று அழைத்தனர். பெரிய அதிகாரி, தூதர், மெய்க்காப்பாளர், காவலர் ஆகியோருக்கு இந்த சீருடை இருந்தது தெரிகிறது .

கஞ்சுக மாக்கள் – சிலப்பதிகாரம் 26-166; 28-80

கஞ்சுக முதல்வர் – 26-138, 27-188

சங்க இலக்கியத்துக்குப் பின்னர் மட்டுமே இச்சொற்களைக் காண்கிறோம்.

ஊசி- பதிற்றுப்பத்து  .42-3, ; 70-7;

அகம்- 48-9; 199-8;

புறம் – 82-4, 100-4, 229-9. (சூசி/ சம்ஸ்க்ருதம்)

நெய்தல் என்ற சொல் பல இடங்களில் வந்தாலும் வேறு வேறு பொருள்களில் வருவதால் பொருளை உணர்ந்து சொல்ல வேண்டும் ஆனால் ‘நெய்’ என்ற வினைச் சொல் பரிபாடல் 19- 80 ல் வருகிறது. நெய்கிறவன், நெசவு என்பனவும் அகராதியில் காணப்படுகிறது

MY OLD ARTICLES:–

Ancient Tamil Dress

https://tamilandvedas.com › 2012/09/08 › ancient-tamil…

8 Sept 2012 — I was looking for such dress in the sculptures and… … It shows the ancient Tamils wore one upper garment and one under garment like Dhoti.

costumes | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › costumes

10 Aug 2021 — Posts about costumes written by Tamil and Vedas. … Hindu dramas of ancient India followed their own rules in ornaments and dresses.

தமிழர்களின் தழை உடை-1 | Tamil and Vedas

https://tamilandvedas.com › தமிழ…

· Translate this page

8 Sept 2012 — தமிழர்களின் தழை உடை (Reed Skirt) பற்றி சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் …


தமிழர்களின் தழை உடை-2 | Tamil and Vedas

https://tamilandvedas.com › தமிழ…

· Translate this page

8 Sept 2012 — தமிழர்களின் தழை உடை-2. Wearing saris: two different styles. ( Please read part 1first to maintain continuity: London swami ).

கச்சை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

· Translate this page

8 Sept 2012 — Tagged with கச்சை … 36 வகை ஆடைகள் (36 Types of Clothes) … நீலக் கச்சை பூவார் ஆடை” (புறம்.

You’ve visited this page 2 times. Last visit: 27/03/22

தமிழர்களின் தழை  உடை, செப்டம்பர் ,  2012

ப்ரா கண்டுபிடித்தது தமிழனா 1993-2006,நாகப்பா பப்ளிகேஷன்ஸ், 2009

To be continued……………………………………

tags– தமிழர், தழை  உடை, நீலக் கச்சை, பூவார் ஆடை,தமிழ்ப் பெண், ‘Bra’ ‘ப்ரா

WEAVING IN VEDAS AND SANGAM TAMIL LITERATURE- Part 2 (Post No.10,785)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,785

Date uploaded in London – –    27 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Foreign Links

Marshall observes (1931) about the cotton textile of the Harappans

“The cotton resembles the coarser varieties of the present day Indian cottons… This discovery which is one of the most interesting of the minor discoveries made at Mohenjo-daro , disposes finally the idea that the fine Indian cotton known to Babylonians as Sindhu and  to the Greeks as Sindon was a product of the cotton tree and not  true cotton.

(But all these remarks come from impressions made by cloth used for bags and may not be of much value)

Tamils have never mentioned Sindhu river in Sangam or later literature. Sindhu for cloth was also used in late literature. Sindhu is used in Tolkappiam and Silappadikaram in different sense.

xxxx

But Neithal is a very interesting Tamil word

It is interesting to compare the words in English with Sanskrit and Tamil words –

Attire – aadai/ udai for clothing in Tamil

Warp and woof – Paavu and Uudu in Tamil (W/V= P)

Tunic – Thuni in Tamil

Kanchuka – Sanskrit word in Sangam Tamil literature

Suchika in Skt. Is Uusi/needle in Tamil.

Neith – goddess of weaving in Egypt; neithal is weaving in Tamil.

Uurna / skt becomes Wool in English and ‘Vaya’ becomes Weave in English.

Karpasa for Cotton in Sanskrit gave birth to words in Greek and Latin :-

“The word for cotton in Sanskrit is KARPAASA. It is found in Greek, Hebrew and Latin. The botanical term Gossypium is also derived from the Sanskrit word. There are two more ancient words for cotton – katn in Arabic and a few other old languages. Tamil which is spoken for at least 2000 years, has PANJI and PARUTHTHI for cotton. We don’t find Tamil word anywhere else in the ancient world”.

Indigo – colour dye was exported from India according to Pliny.

Purple for Roman Toga- Dye from sea shell was exported to Rome

Roman trade with Tamil land was flourishing in the first few centuries according to Greeks, Romans and Tamil literature.

Xxx

A.Kalyanaraman in his voluminous, scholarly work Aryatarangini (1968) says,

“Weaving was well known in Vedic times; the warp, the woof and the shuttle are mentioned. Technical words like tantu (warp) and out (woof) are found in the Rig Veda. The shuttle and the loom are found in the Yajur Veda. The Greek writers mention “silk and woollen cloth in gold and ornamented with precious stones. In Panini’s time , clothes made of silk (Kauseya) wool (aurna), linen (aumaka) and cotton (karpasa) were freely worn. It would appear from Panini;s descriptions that ordinary people in his time wore two satakas or pieces of cloth one for the lower body and one for the upper.

(Panini is dated 7th or 8th century BCE by famous Sanskrit scholars of India and Indologist Goldstucker)

The Greeks of Alexander’s army were much impressed by the simplicity and elegance of Indian dress. Arrian observes thus, ‘The dress worn by the Indians is made up of cotton;—— they wear an under garment of cotton which reaches below the knee half way down to the ankles; also an upper garment which they throw partly over their shoulder and partly twist in folds round their  head”.

Panini mentions the under garment as ‘aaprapaadinaa’  (i.e. reaching to the ankles) which was tied to the waist by a girdle (as evidenced by the numerous statues of Mauryan period). The price of each ‘sataka’ ( or Dhoti to use a more modern word) was one silver karshapana in Panini’s time.

Buddha’s Dress

The wearing of a tunic or a loose gown seems to have become very common by 6th century BCE. Buddha is occasionally portrayed wearing such a gown; (more often, he is draped in loose cloth, worn in plaids). Panini mentions a ‘brhatya- aacchadana’, which was also known as ‘pravara’, a big all covering mantle measuring about 24 feet X 12 feet (Roman Toga)

. He also enumerates various kinds of blankets worn over the tunic, particularly the Pandu Kambala, brightly dyed and embellished with zigzag designs

The Mauryan sculptures make it clear that a loose gown hanging down the to the leg was a favourite custom with all classes of people. The Amaravati sculptures also show good evidence of the tailor’s art.

Ancient Sanskrit literature contains terms for embroidery, darning (tuna vaaya) and tailoring (suuchikaa). In fact there was a separate caste of tailors known as sauchika and their incidence must have been widespread. The names of various dresses also indicate the existence of this profession all over the land. ‘Kanchuka’ was a waist coat or a male dress shaped like a bodice some times going below the waist to the knee.  The sages who attended the Yuthisthira’s coronation are mentioned as wearing turbans and ‘kanchukas’. The ordinary term for eunuch gurads was kanchukinaa, i.e. wearers of gowns (as distinguished from those wearing belts and armours. The feminine or dimunitive form of Kanchuka was kanchulikaa, over which was worn a short jacket with half-sleeves (called angikaa), often shining with bright borders and golden lace work.

The following items of made dress are mentioned in Vedic literature:

Atka (mantle), Upanah (sandal), Usnisa (turban), Tarpya (silk garment), Drapi (mantle), Nivi (under garment), Paridhana (garment), Pandva (un coloured garment), Pesas (embroidered garment) Vatapana (wind gurad), Samula (woollen shirt)

Nivi – tape with which drawers or skirts were tied to the waist.

Indian cloth has been found in countries like Sumeria and Egypt. Sanskrit Karpaasa became carpus in Hebrew, Karpasa in Greek and Carbusus in Latin. That it is native to India, is now freely admitted; from India it travelled all over the Pacific and into the New World.”

–from Arya Tarangini of A.Kalyanaraman

xxxx

Tamil literature has more about dress (given in third part of this article).

(While I am writing this, I am reminded of my weaving lessons. 65 years ago, I was studying in Madurai Yadhava School in North Masi Street. We had one period to spin yarn from raw cotton with Taqli. Later , about 60 years ago, when I was studying in Madurai Sethupati High School, where the great poet Bharatiyar worked, there were lot of weaving machines, in a corner room. Those who opt for Thari (loom/weaving) lesson, were taught there. Though I did not opt for it, I used to enter the room now and then to watch them with curiosity. Just before coming to London for BBC broadcasting in 1987, I used to visit lot of Sourashtra community weavers’ houses for RSS work. We used to sit between the weaving machines and talk. RSS shakas in East Madurai were conducted in open fields which the weavers used. As soon as the RSS exercise finish at 7-30 am, weavers used to peg their poles and start their work of dying the clothes etc. Just to say my connection with weaving until 1987. Muppuri Nool/Three ply Thread of Brahmins is mentioned several times in Sangam literature . I have seen Brahmin youths spinning and making it in Madurai Dhanappa Mudali street Veda Patasala/Vedic school ).

To be continued……………………………….

tags-  Weaving, cotton, Tamil, Sanskrit, Words,  Cloth, Dying, Neithal

மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்! – Part 2 (Post No.10,784)

PICTURES OF TREE WORSHIP

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY B. KANNAN, Delhi

Post No. 10,784

Date uploaded in London – –     27 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வஸந்த விழா  – மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்! 2

                            Written By B.Kannan, Delhi

உலகளாவியத் தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இப் பதிவில் கவிஞர்களும், புலவர்களும், பெண்கள், மரங்கள், பூங்கொடிகளுக்கு இடையே நிலவும் நட்புறவைப் பற்றி எவ்விதமெல்லாம் தாங்கள் இயற்றியக் காவியங்களில் சிருங்கார ரஸம் தோய்ந்திருக்க வர்ணித்திருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

அன்பர்கள் நாடகத்தின் பின்னணியைத் தெரிந்துக் கொள்ள ஏதுவாக இங்குச் சொல் லப்படும் காவியங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் கொடுத்திருக்கிறேன்

வஸந்த விழா ஆரம்பித்து விட்டாலே மானுடர்கள் மட்டுமின்றி மரம், செடிகொடி களுக்கும் ஒருவிதக் கிளுகிளுப்பு உண்டாகிவிடுகிறதாம். ஆடவர்களின் ஆசாபாசங் களை விருப்பமுடன் களையும் மங்கையர் தங்களின்”தோஹத” எதிர்பார்ப்புகளையும் மனமுவந்து நிறைவேற்றி வைக்க மாட்டார்களா என்று அவைகள் ஏங்கிக் கொண்டி ருக்குமாம். இந்நிலையை விவரிப்பதில் கைதேர்ந்தவர்கள் சம்ஸ்க்ருத / பிராக்ருத மொழி கவிகள். அவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறான் வசந்த ருதுவின் நாயகன் வசந்தனும், உற்ற நண்பன் மலைய மாருதமும்!

மகாகவி சுபந்து ( சுபந்து, பாணர், தண்டின் மூவருமே உரைநடைக் காவிய விற்பன் னர்கள்) 4/5-ம் நூற்றாண்டில் குமார குப்தன்,மற்றும் ஸ்கந்த குப்தன் அரசவையை அலங்கரித்த கவிஞர்களுள் மிகச்சிறந்தவராகக் கருதப்படுகிறார். உரைநடை காவியப் படைப்பில் ‘நடந்த சம்பவங்களை உள்ளபடி எடுத்துச்சொல்லும்’ (ஆக்யாயிகா) பாணி யில் இயற்றப்பட்டது தான் இவரது வாஸவதத்தைக் காவியம். பாணரின் ஹர்ஷ சரிதம், தண்டின் தசகுமார சரிதம் இவ்வகையைச் சேர்ந்தவையாகும். காதம்பரி உரைநடை கற்பனை கலந்த ‘கதை’ப் பின்னணியைக் கொண்ட காவியம். நாயகியின் பெயரைத் தவிர, இதற்கும் உதயணன்-வாஸவதத்தை கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இளவரசன் கந்தர்பகேது, தான் கனவில் கண்ட அழகி, குசுமபுரா நாட்டின் இளவரசி வாஸவதத்தையைப் பல இன்னல்களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்து மணப்பதுதான் சிருங்கார ரசமிகுந்தக் கதைக் கரு. இதில், பேசும் பறவைகள், பறக் கும் புரவிகள், முனிவரின் சாபத்தால் கல்லாகச் சமைந்த இளவரசியை நாயகன் தொட்டதும் உயிர்த்தெழுவது போன்ற சாகச நிகழ்வுகளுக்குக் குறைவில்லை!,

வசந்த ருதுவுக்கானச் சம்பவங்களும் ரசிக்கும்படிக் கூறப்பட்டுள்ளன. (பூக்களின் தற்காப்புக் காவலர்கள் போல் மாந்தளிர் மொட்டுகளைச் சுற்றிப் பாதுகாப்பு வளை யம் அமைத்து ரீங்காரமிடும் கருநீல வண்டுகள் மகளிர் கழுத்தில் அணியும் அழகிய நெக்லெஸ் போல் தோன்றுகிறதாம் ; உடலைத் தழுவிச் செல்லும் தென்றல், தேகம் மெலிந்து,ஆழ்ந்த தியானத்திலிருக்கும் யோகிகளையும் முறுவலிக்க வைத்து விடும்!) தோஹதக் கிரியைச் சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பது பாரதத்தில் மிகவும் பிரபல மானது, சில குறிப்பிட்ட மரம், செடிகொடிகளை, முக்கியமாக, சாமுத்ரிகா லக்ஷணம் பொருந்திய நால்வகையானப் பெண்கள் ஸ்பரிசித்து, நுகர்ந்து, ஆலிங்கனம் செய்து முத்தமாரிப் பொழிந்து, உரியபடி வழிபட்டால் அவற்றின் எதிர்மறைச் சக்திகள் அழிந்து, பூப்பூத்து மணம் பரப்பும் என்பதை விவரிக்கிறார். அது மட்டுமா?

வாசனைத் திரவியங்கள் தடவிக் கூந்தலை நன்றாகச் சீவிசிங்காரித்தும், சரிந்த முன்நெற்றியில் விழும் முடிக்கற்றைகள் முகப் பொலிவை மேலும் அதிகரிக்க, தலைவனுடன் சல்லாபமிட ஆவலுடன் காத்திருக்கும் ‘லாதா’ (தெற்கு குஜராத்) பெண்கள், குங்குமப் பூக்கரசலைத் தங்கள் கலசம் போன்ற ஸ்தனங்களில் பூசிக் கொண்டு மணம் வீசும் கர்நாடக மங்கையர், முடி அலங்காரத்தில் தேர்ச்சிபெற்றவர் களும், மலர்ச்செண்டு அணிந்துள்ளக் கேசத்தைச் சுற்றி ரீங்காரமிடும் வண்டுகளை விரட்ட எத்தனிக்கும் அழகியக் ‘குந்தலா’ (இன்றையத் தெலுங்கானா பிரதேசம்) மங்கலமங்கையரும்,முகம் முழுவதும் சந்தனக் கரைசலைப் பூசி வசீகரிக்கும் கேரளப் பெண்மணிகளும், 64 கலைகளில் கைதேர்ந்தவர்களும், உருண்டுத் திரண்டப் பெரிதா னப் பிருஷ்டபாகத்தை உடைய ‘மாலவா’ (ம.பி.) இளம் கன்னிகளும், பருத்த மார்ப கங்கள் வேகமாய் நடப்பதற்கு இடையூறாக இருந்து வியர்வைத் துளிர்க்க வைக்க நாயகனின் வரவை ஆவலுடன் எதிநோக்கிக் காத்திருக்கும் ஆந்திர மகளி ரும்…..என இப்படிப்பட்டவர்கள் சூழ்ந்திருக்க, அவர்களைத் தீண்டியவாறு எங்களிடம் (மரங்கள்) வரும் மலைய மாருதமே! உன் இச்செய்கையால் எங்களது ‘மசக்கை’ தொந்தரவு அதிகரிக்கத் தான் செய்கிறது. அவர்கள் பார்வை எங்கள் மீது விழுமா? எங்கள் ஆசையைத் தீர்த்து வைத்தால் தானே மலர்ந்து பலனளிப்போம்…எனப் போகிறது வர்ணனை! படித்து இன்புற வேண்டியக் காவியம்!

அடுத்து, காஷ்மீரத்தைச் சேர்ந்தவரும்,5-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்தவம்ச ஆட்சியின் அந்திமக் காலத்தில் வாழ்ந்துள்ளதாகவும் அறியப் படுகிறவர் மற்றொரு மகாகவி சியமிலகா எனும் சியாமிளன்.

கவிஞர்கள் வரருசி, ஈஸ்வரதத்தா, சூத்ரகர் ஆகியோருடன் சேர்ந்து சதுர்பாணி (பாணம் என்கிற ஒரே கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஓரங்க நாடகம்) இலக்கியக் கர்த்தாவாகத் திகழ்ந்தவர் .நால்வரில் இவர் மட்டுமே ‘மகாகவி’ பட்டம் பெற்றவர். பாணம் என்பது ஒருவரே பல குரலைத் தானே எழுப்பி, வினா-விடை இரண்டையும் சொல்லியவாறுப் பேசிக் கொண்டேப் போவது. அன்றாட வாழ்வில் காணப்படும் போலிச் சித்திரங்கள் நகச்சுவையுடன் கூறப்படும். இதற்கு “ஆகாசபாஷிதம்” (அசரீரி யாக எழும் எதிர்தரப்பு வாதம்) எனவும் பெயர்.

இவர் இயற்றிய நாடகமே “பாததாடிதகம்” (பாதத்தால் எட்டி உதைத்தல்). உஜ்ஜயி னியை மறைமுகமாகக் குறிக்கும் சார்வபௌமா கற்பனை நகரம் நாடகக் களம். ஊதாரித்தனமாகத் தன் செல்வத்தையெல்லாம் இழந்து, இப்போது அன்றாடங் காய்ச்சியாக வாழ்க்கையை ஓட்டிவரும் ஓர் ‘அதி மேதாவி’ தான் ஓரங்க நாயகன். ஊரிலுள்ளத் தன-கனவான்கள், அவர்களின் இல்லக்கிழத்திகள் ஆகியோருக்கிடையே பாலமாக இருந்து, ஏவல் செய்து பிழைப்பை ஓட்டி வந்தான்.,அது வசந்தகாலம், கேளிக்கைகளுக்குக் கேட்கவா, வேண்டும்? 

அந்நாட்டு மந்திரி தௌண்டிகோகி விஷ்ணுநாகா என்பவன் தாசி ஒருவளுடன் சல் லாபத்தில் இருந்தபோது திடீரென்று ஏற்பட்ட ஊடலால் அவனைக் காலால் எட்டி உதைத்துத் துரத்தி விடுகிறாள். (நாடகத்தின் காரணப்பெயர் இதுவே). இந்த அடாதச் செயலுக்குப் பரிகாரமாக அவள் தன் மது நிறைந்த வாயால் என் சிரசில் உமிழ்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் (இப்படியும் ஒரு காதல் பைத்தியம்!) இதை ஊர் ஜனங் களிடம் கூறி ஆதரவு திரட்டு’ என்று அதிமேதாவியிடம் சொல்கிறான். அவனும் அப் படிச் செய்தவாறு ஒவ்வொருவரிடமும் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்க லானான்.

அவையெல்லாமே ரசிக்கத்தக்கச் சம்பாஷணைகள்! அங்கே இளம்பெண்கள் மரங்களின் தோஹத-மசக்கை-ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அதையும் வர்ணிக்கிறான். “பெண்களின் காலடி பட்டாலே மலருமே அசோக மரம்; நறுமண வாசனைத்திரவியத்தில் முக்கியெடுத்தப் பூக்களால் தெளிக்க உடனே சம்பா மரங்கள் மொட்டு விரித்து பூத்திடுமே; காஷ்மீரத்து கேசர் (குங்குமப் பூ) மரங்கள் கன்னியரின் கடைக்கண் பார்வையில் சிக்கி வேறுவழியின்றி பூத்துக் குலுங்குமே!’

அவர்களிடமும் மந்திரியின் நிலைமையைக் கூற அவர்கள் ,”அந்தோ, பரிதாபம்! அம்மணி மதுவை அவர் சிரசின் மீது உமிழ்ந்தால் தலைமுடி, என்ன, பகுள மரமா உடனே பூத்துக் குலுங்க?” எனக் கேட்காமல் கேட்டு வாய்விட்டு, விலாப் புடைக்க நகைத்தார்களாம்!….என்று போகிறது நாடகம். மந்திரிக்கு ஆதரவு கிடைத்ததா? அந்த ‘அதிமேதாவி’ க்கே அது வெளிச்சம்!

மகாகவி காளிதாசன் தனது முதல் சிருங்கார நாடகமான மாளவிகாக்நிமித்ரத்தில் நாயகி மாளவிகா வாயிலாக இப்படிக் கூறுகிறான்: ‘வெறும் வெற்றுக் கால்களைக் கொண்டு, பட்டமகிஷியின் செல்லமான அசோக மரத்தைத் தொடுவது தகுமோ? அடர்த்தியான சிவப்பு நிற மருதோன்றியால் அழகாக வடிவமைத்து அலங்கரிக் கப்பட்டப் பாதங்களில் கிலுகிலுக்கும் கொலுசணிந்து, வலிக்காமல் மெதுவாக உதைப்பதால், அல்லவோ, அது ரம்மியமானப் பூ உடை தரித்து எங்களை மயக்கும்?!

ஏறக்குறைய மற்றவர்களைப் போன்றுதான் ஶ்ரீ ஹர்ஷதேவரும் தனது “ரத்னாவளி” நாடகத்தில் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

‘வாய் நிறைய வைத்துள்ள மதுரசத்தை உற்சாகமுடன் பகுளமர வேர்களில் உமிழ,  அது உவகை மிகுதியால், மதுவின் மணத்தைத் தன் மொட்டுகளில் உறிஞ்சிக் கொண்டு விகசிக்கிறது, போலும்!

மது ருசித்த உதடுகளும், நாவும் சிவந்திருக்கும் ‘சந்திரமுகி’ கன்னியர் கலகலவெனச் சிரிப்பதைக் காணும் சம்பக மரங்கள் வெகு நாட்களுக்குப் பிறகு மலர்ந்து, பூச் சொரிந்து புன்முறுவல் பூக்குகிறதாம்.

கொலுசு அணிந்த காலால் அசோகமரத்தை உதைக்கையில் உண்டாகும் ‘ஜிலுங் ஜிலுங்’ ஓசைக்கேற்ப,உடனே பூத்துக் குலுங்கும் மரத்தைச் சுற்றி வண்டுகள் இடும் ரீங்காரம் பாடல் பாடுவது  போல் உள்ளதாம்!’ ( 1:18 )

கடைசியாக நாம் காண இருப்பது முழுக்க முழுக்க மகாராஷ்ட்ரி பிராகிருத மொழி யில் கவி ராஜசேகராவால் இயற்றப்பட்ட “கற்பூர மஞ்சரி” நாடிகாவாகும். பாட்டும், நாட்டியமும் (சட்டகா=ச+ஆட்ட,ஆடல்=நாட்டியம்,கூடி வருவது பாடல்) கலந்து வரும் நான்கு அங்கங்கள் கொண்ட ஒரு சிறு  உபகாவியம். பிராகிருத மொழி நாடகங்கள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.சட்டகாவின் பிரிவுகள் அங்கம் என்பதற்குப் பதில் ‘ஜவனிகாந்தரா’ (திரைச்சீலையால் பிரிக்கப்பட்ட / முக்கியச் சம்பவங்களைத் திரைக் குப் பின்னால் காட்டும் உத்தி))என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கமெல்லாம் ஆரம்பத்திலேயே சூத்திரதாரியால் சொல்லப்பட்டு விடுகிறது.

மாயாஜாலம்,மந்திரவாதியின் பங்களிப்பும் இருக்கும். பொதுவாக நாயகியின் பெயரே நாடகத்துக்கு வைக்கப்படும். ராஜசேகராவின் காலம் 8-10ம் நூற்றாண்டுக்குள் இருக் கலாம் என்பது அனுமானம். கன்னோஜை ஆண்ட அரசன் மகேந்திரபாலனின் ராஜ குருவாக விளங்கியவர். யாயா வராயப் பிரிவைச் சேர்ந்த சைவ அந்தணர் ஆவார். ஆளுமைத் திறமையும், மதியூக மும் நிறைந்த ராஜபுதன இளவரசி அவந்திசுந்தரி இவரது மனைவி. கவியின் இலக் கியப் பணியில் பெரிதும் உறுதுணையாக இருந் ததை அங்கீகரிக்கும் வகையில் அவளைச் சந்தோஷப்படுத்த இந்த நாடிகாவை எழுதியுள்ளார்.

இதன் கதைக் கரு– குந்தலா (தற்போதிய தெலுங்கானா) நாட்டின் அரசன் வல்லப ராஜன்-ராணி சசிபிரபாவின் மகள் கற்பூர மஞ்சரி.,தக்காணத்தின் ராஜா சந்திரபாலா வின் ஆஸ்தான மாயாஜாலக்காரன் பைரவாநந்தா தன் அதீத சக்தி மூலம் இளவர சியை அரசன், ராணி முன் வரவழைக்க ராணி விப்ரபலேகா இளவரசி உண்மையில் தனது ஒன்று விட்ட சகோதரிதான் என்பதை அறிந்து, ஒரு பட்சகாலம் தன்னுடன் தங்கியிருக்க அனுமதிக்கிறாள். அவள் மீது காதல் கொள்கிறான் ராஜா சந்திரபாலா. இதற்குப் பெரிதும் விதூஷகன் கபிஞ்ஜலா, மாயாஜாலக்காரன் இருவரும் உதவினா லும், அவன் ராணி விப்ரபலேகா பல இடையூறுகள் விளைவிக்கிறாள். அவற்றை யெல்லாம் ஒருவாறு சமாளித்துத் திருமணம் செய்துகொள்வது தான் கதை. இதில் பல சாகச நிகழ்வுகள், வசந்தகால கோலாகலங்கள் சுவாரசியமாகச் சொல்லப்பட் டுள்ளன. மகளிர் பங்கேற்கும் தோஹத நடவடிக்கைகள் 8 சுலோகங்களுக்கு மேல் விவரிக்கப் பட்டுள்ளன (2;43-50).

 குரபகதிலக அசோகா ஆலிங்கன தர்சனாக்ர சரணஹதா:|

 விகசந்தி காமினீனாம் தத் ஏஷாம் தேஹி தோஹதகம்|| (2-43), அதாவது,

வெவ்வேறு மரங்களின் மசக்கை ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் வழிமுறைகள் இதில் கூறப்படுகின்றன.

பார்க்கப் பரவசமளிக்கும் அமுதம் நிரம்பியக் கலசம் போன்ற  மார்பகங்களைக் கொண்ட இளம் பெண்கள் அமரந்த மரத்தை ஆர அரவணைத்துத் தன் இச்சையைத் தீர்த்து வைத்ததால்அது மனமகிழ்ந்துப் பூமாரிப் பொழிந்ததாம். மலர் வாசனையால் ஈர்க்கப்பட்டத் திரளான வண்டுகளும் ரீங்காரமிட்டவாறு கூடிவிட்டனவாம்! (2, 44).

உதிர்ந்துள்ளக் குரவகா பூ மொட்டுகளைத் திரட்டிக் கைகளில் பெண்கள் பொத்திக் கொண்டதும், மன்மதனின் காதற்கணைகளைப் போல் அவை மொட்டவிழ்ந்து மலர்ந்து விட்டதாம்! (2,45).

காமனின் வளைந்த வில் போன்ற புருவம், அஞ்சனம் தீட்டிய மானின் மருண்ட பார்வை கொண்ட இளம் கன்னியர் திடீரெனத் தங்களைக் கூர்ந்து பார்த்ததால் திலகம் மரம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிற்றாம். அதன் உச்சியில் கொத்துக் கொத்தாக பூக்கள் மலர்ந்து மலர் ஆடை அணிந்திருந்ததாம். (2,46). என்று ராஜா சந்திரபாலனும்,,விதூஷகனும் வியந்து போகிறார்கள்.

அவர்கள் மட்டுமா, நாமும் தான்!

நல்ல கதை அம்சம், கதாபாத்திரங்களின் ஹாஸ்ய நடிப்பாற்றல், பொருள் பொதிந்த அக்கால நாட்டு நடப்பை எடுத்துரைக்கும் பாடல்கள், பண்பாடு, கலாச்சாரத்தை விரி வாக விளக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இக்காவியங்களை ஒவ்வொருவரும் படித்து இன்புறவேண்டும்.

சுபம்.

        —————————————————————————————————–

tags- மங்கையர், மரங்கள், பூங்கொடிகள், part 2, வஸந்த விழா