400 ரிக் வேத ரிஷிகள் ,புலவர்கள்  பட்டியல்-4 (Post No.10,754)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,754

Date uploaded in London – –    17 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

400 ரிக் வேத ரிஷிகள்  புலவர்கள்  முனிவர்கள்  கவிஞர்கள் பட்டியல்-4

ரிக் வேதத்தில் ஏறத்தாழ 400  புலவர்கள், ரிஷிகள், கவிஞர்கள்  பெயர்கள் உள்ளது .

அவர்களுடைய பெயர்களை வேத அநுக்ரமணி  தருகிறது.அதுதான் உலகின் முதல் INDEX இன்டெக்ஸ். .

இதோ நாலாவது பகுதி …..

155.தேவஸ் ரவா யாமயான 10-17

தேவாஹா  10-51, 10-53

தேவாதிதி காண்வ 8-4

தேவாபி ஆர்ஷ்டிசே ன 10-98 (மஹாபாரத காலம் )

த்யு  தான மாருத  8-96

த்யும்ன விஸ்வசர் சனி ஆத்ரேய 5-23

த்யும்னிக வாசிஷ்ட 8-87

த்ரோண சார்ங்க 10-142 (மஹாபாரத காலம் )

த்வித ஆப்த்ய 9-103

த்வித ம் ருக்த வாஹ ஆத்ரேய 5-18

தருண ஆங்கிரஸ 5-15

த்ருவ ஆங்கிரஸ 10-173

நபஹ  ப்ரபேதன வைரூப 10-112

நர பாரத்வாஜ 6-35/36

நஹுஷ மானவ 9-101

நாபாக காண்வ 8-39/42

நாபானெதிஷ்ட மானவ 10-61/62

இது முக்கியமான பெயர். மநு சொன்னதைக் கேட்காமல் முரண்டு பிடித்ததால் சுமேரியாவுக்கு அனுப்பப்பட்டவர்.

இதிலுள்ள பெயர் உத்தானபிஷ்டிம் என்றும் பைபிளில் நாபா= நோவா என்றும் பாரசீக ஜொராஷ்டிரர் புஸ்தகங்களில் இதே எயரிலும் உள்ளதால் பிரளய காலத்துக்குப் பின்னர் இந்துக்கள் சுமேரியா முதலிய இடங்களுக்குச் சென்றதற்கு நல்ல இலக்கிய சான்று கிடைத்துள்ளது.

நாபானெதிஷ்ட மானவ  என்றால் மநுவுக்கு  அடுத்து வந்தவர் என்று பொருள்.

நாரத காண்வ 8-13; 9-104/105

நாராயண 10-90

இதுவும் முக்கியமான பெயர். நாராயண என்பதற்கு நீரையே இருப்பிடமாகக் கொண்டவர் என்று பொருள். இந்த நீர் என்பது ரிக் வேதத்தில் வருவதை வைத்து சில அரை வேக்காடுகள் ரிக் வேதத்தில் தமிழ்ச் உள்ளது என்று உளறிவைத்தனர். ஆனால் நீரெய்ட்ஸ் Nereids என்ற நீர்த்த தேவதைகளை தமி ழுக்கம் முந்தைய கிரேக்க புராணக்  கதைகள் காட்டுகின்றன. கிரேக்கத்தில் ஒரு சொல் இருந்தால் அது சம்ஸ்க்ருத மூலம் உடைய சொல் என்பது வெளிநாட்டினர் வாதம். ஆனால் நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அது பிழை என்று காட்டியுள்ளேன். சுமார் 50 தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் உள்ளன. இவை அலெக்ஸ்சாண்டர் காலத்துக்கும் முந்தியவை. ஆகவே தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூல மொழி ஒன்றே; அதிலிருந்து சென்றவைதான் அந்தச் சொற்கள் என்றும் திராவிட மொழிகே க்கு டும்பம் என்பது பிதற்றல் என்றும் காட்டியுள்ளேன்.

நித்ருவி காஸ்யப 9-63

நீபாதிதி காண்வ 8-34

ந்ர் மேத ஆங்கிரஸ 8-89/90, 98/99, 9-27, 9-29

நர மேரு என்ற பெயரை எகிப்திய மன்னர் பட்டியலில் கி.மு.3000 லும்,  நப தேவர மண்டூகதேவ என்ற பெயரை கி.மு.2000 லு ம் காணலாம்.

நப என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ஆகாயம், வானம் என்று பொருள்.

நேம பார்கவ 8-100

நதா கெளதம 1-58/64; 8-88; 9-93

பதங்க ப்ராஜாபத்ய 10-177

பரமேஷ்டி ப்ரஜாபதி 10-129

பராசர சாக்த் ய 1-65/73; 9-97;

பரு ச்சேப தைவோதாசி 1-127/139

182.பர்வத காண்வ 8-12; 9-104/5

பவித்ரா ஆ ங்கிரஸ 9-67;9-73,9-83

பரசுராம ஜமதக்னி  10-110 (ராமர் காலத்து ரிஷி)

பாயு பாரத்வாஜ 6-75

புனர்வத்ஸ காண்வ 8-7

புருமீள ஆங்கிரஸ 8-71

புரு மீள செளஹோத்ர 4-43/44

புருஷமேத ஆங்கிரஸ 8-8/90

புரூருவ ஐல 10-95,

புருஹன்மா  ஆங்கிரஸ 8-70

புஸ்திகு காண்வ 8-59

பூத தக்ஷ  ஆங்கிரஸ 8-94

பூரண வைஸ் வாமித்ர 10-160

பூரு ஆத்ரேய 5-16/17

ப்ருது வைன்ய 1-48

முன்னர் கண்ட பரசுராமர், புரூரவஸ், ப்ருது , வேனன்  ஆகியோர் கதைகள் புராணங்களில் விரிவாக உள்ளன. டிக் வேதத்தை வரலாறு என்று நம்புவோர் இந்தப் புராணக் கதைகளையும் வரலாறு பூர்வ மன்னர்கள் என்றே கருத வேண்டும்

ப்ரசத்ர காண்வ 8-56

பெளர ஆத்ரேய 5-73/74

ப் ரகாத காண்வ 8-1, 8-48, 8-62/65

ப்ரசேத ஆங்கிரஸ 10-164

ப்ரஜாபதி பரமேஷ்டி 10-129

ப்ரஜாபதி வாகிய 3-38; 3-54/56; 9-84

ப்ரஜாபதி வைஸ் வாமித்ர 3-38, 3-54/56; 9-101

ப்ரஜாவான்  ப்ரஜாபத் ய 10-183

ப்ரதர்தன காசிராஜ 9-96, 10-179

இது முக்கியமான பெயர்; மஹாபாரதத்தில் காசிராஜாவின் புத்திரிகள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்போர் எப்படி கதையின் போக்கையே மாற்றுகின்றனர் என்பதை அறிவோம். வேத காலத்திலேயே காசி மன்னன் இருப்பதும் அவன் பெயர் பிரதர்தனன் என்பதும் தெரிகிறது. . இதே பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும்  மிட்டன்னியன் நாகரீகத்திலும் (MITANNIAN CIVILIZATION 1380 BCE  கி.மு.1380) வருவது குறிப்பிட்டத்தக்கது. காசி முதல் துருக்கி வரை கி.மு 1380க்கும் முன்னரே, மன்னர் பெயர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது

இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர். மஹாபாரத உத்தியோக பர்வமும் திவோதாசன் புத்திரன், மாதவியின் மகன், யயாதியின் தெளஹித்திரன் (அபிதான சிந்தாமணி , பக்கம் 1119) என்று கூறுகிறது. சத்ருஜித் என்பது மறறொரு பெயர் என்றும் சொல்கிறது. ஆக இது மிகவும் பிரபலமான  பெயர். துருக்கி வரை சென்றுவிட்டது. யயாதி என்ற பெயரில் மூவர் இருப்பது போல பிரதர்தனன் பெயரிலும் பலர் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

ப்ரதி க்ஷத்ர ஆத்ரேய 5-46

ப்ரதி ப்ரப ஆத்ரேய 5-49

ப்ரதி பானு  ஆத்ரேய 5-48

209.ப்ரதி ரத  ஆத்ரேய 5-47

SO FAR 209  RISHI NAMES LISTED

TO BE CONTINUED…………………………………….

tags- ரிக் வேத ரிஷிகள்,  புலவர்கள்,  முனிவர்கள் , கவிஞர்கள் ,பட்டியல்-4,

WHAT MADE LINGUISTS GO WRONG? (Post No.10,753)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,753

Date uploaded in London – –    17 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures

1.From the very beginning till the end Max muller gang stuck to one argument ‘Aryans came to India from outside’. No proof is in Sanskrit or later Tamil literature whereas all other cultures say they came from some remote place.

2.Just to justify their argument they created one imaginary language called Indo European or Proto Indo- European. There is no such language before the Rig Veda. All their words are from this supposed IE.  Just to discredit Sanskrit, they created this imaginary language. If someone says I need proof from older scriptures, they don’t have any book older than the Rig Veda.

3.Western Sanskrit learners did not know Tamil . Many changes found in Avestan are in Tamil as well. They turned a blind eye to it. In India there are two ancient languages. Thank god we have voluminous  Tamil literature running to nearly 30,000 lines which is 2000 year old. So next to Vedas in Sanskrit, one has to look at Tamil books.

4.Tamil books explode all linguistic theories or conjectures. For instance, Max Muller first proposed 1200 BCE for the Rig Veda and changed it after severe criticism to 1500 BCE or an unknown date before that. Wilson and others placed it around 2000 BCE. Herman Jacobi and BG Tilak dated Rig Veda between 4000 BCE and 6000 BCE. No one opposed it with any proof. Max Muller just used some guess work.

If we apply Max Muller’s conjecture that a language changes every 200 years to Tamil language, all Tamil dates for  Sangam literature and later Tirukkural and Silappadikaram will tumble down. Now they are placed within 200 year range; but there are changes in grammar as well as vocabulary in those works.

Satya Swarup Mishra in his scholarly work     “The Aryan Problem – A Linguistic Approach “dated Rig Veda 5000 BCE or beyond that on linguistic grounds. He showed that India was the home of Aryans and they did not come from Caspian sea area.

He placed Epic Sanskrit (Ramayana and Mahabharata) around 3500 BCE.

Since foreigners already decided that the Aryans came from outside, they showed everything in reverse direction or upside down.

One more example from Tamil Literature

Sangam Tamils used the word B/Paandil for cart. Now no Tamil knew this word. They know only Vandi (Cart) . How did this B=V change happen? Definitely not because of any influence from Sanskrit.

Asva (Horse) is called Aspa in Avestan. There also we see P=V change.

Sangam Tamils changed Rig Vedic Tapas (penance) into Tavam; who made them to change P in to V?

Oldest Tamil book changed Upama into Uvamai (silile) in Tamil. Sangam Tamil literature also followed it.

This B=V change is seen in Birya – Veerya in Mitannian inscription records (1400 BCE)

So even with one letter B/V, we can show the changes happened from Iran to Kanyakumari in Suth India at least 2000 years ago or even earlier.

Tapas changed to Tavam in Tamil

B/Paandil in Sangam Tamil changed to Vandi in modern Tamil

Tamil has no need to change it because Tamil has both sounds V and P. We don’t know how and why they changed it. What rules guided the Avestan Zoroaster and Tamil Tolkappiar (author of Tolkappiam)?

Mr Mishra has shown that many changes happened in Middle Indo Aryan period. For instance, we see such changes in Prakrta. Sapta  (Number Seven) becomes Satta. Such changes are seen in other parts of the world as well. (Even in English se’V’en , you see Sanskrit P (sa’P’ta) changed to V.

Mr Mishra has shown Vajra (Indra’s weapon Vajrayudha) has become Vazra in Iranian and Wasara in Finno Ugric languages. Tamils also wrote Vachchira. It is closer to Iranian and Finno Ugric!  2000 year old Tamil Purannuru verse 241 refers to Vedic Indra as Vacchira Thdakkai Nediyon. And it is same in several verses in Paripatal and Kalithokai. Tamil epic Silappadikaram repeats it in a number of places. Who made the Iranians and Tamils to make this change several thousand years ago?

Though we have no proof for such contact between Tamils and Iranians, we see the changes. This shows that the B=V change , the Jra= Chhira or Ssara changes are natural.

Also Badava = Vada mukha Agni in Tamil (Submarine Volcanic fire)

Like R=L change they may be universal.

Throughout Tamil and English we see S=T change

One Example:-

Sion= Tion in English words.

Thanai/army = Sena in Sanskrit.

Hundreds of Tamil words have this T=S change which we find in English TION=SION words. Why do we say TION as Sion?

If one drops the migration theory and looks the other way round, that is Hindus migrating from India , every piece in the Zig Zaw puzzle will fall in its place. Great linguists like Kanchi Shankaracharya (1894-1994) traces all these changes to Vedic Praatisaakhya (Vedic Pronunciation guide)

The very fact that Vedic Hindus wrote etymology (Nirukta of Yaskar), Grammar (Panini’s Ashtadhyayi), Jyotisha (astronomy) before Greek Homer wrote Iliad and Odyssey, shows that we were far advanced in these fields. Draw a line in 850 BCE and you will see a mountain of books in Sanskrit before 850 BCE and a mustard size of books in Hebrew and Greek. Tamil and Latin came very late in this scene.

Mitanian Inscription 1380 BCE (See Bogazkoy in all Encyclopedias or Dasaratha/Amarna Letters)

Like Greeks added some letters with all Hindu names and distorted them, Hurrian also added certain sounds with the words. This we see even in Tamil Purananuru! 2000 years ago Tamil Poet Paranar surprised everyone by using some Malayalam words (in Puram. Verse 341 ‘unthu’ suffix= unnu like Hurrian Nu). See below for Hurrian changes

xxxx

Mitannian Sanskrit

In Mitanian  inscription  we see the following:

Wasannasaya = of stadium= vasanasya in Sanskrit

A ratiya nni =part of cart= rathya+ Hurrian ni

Aswa ninni= stable master = asva +ni+ Hurrian ni

Babru nnu = red brown=babhru +Hurrian nubaritannu = baritannu =golden yellow= Bharita + Hurrian Nu

Pinkara nnu = red yellow= pale= pingara, pinjara

Urukmannu =jewel= = rukma +nu in Sanskrit

(Why not Rukmani, Krishna’s wife??)

Zirannu = quick= Jiira+ Hurrian Nu

Makanni = gift= Magha+ Hurrian Ni

Maryannu = young warrior= marya+ Hurrian Nu

Matunni = wiseman= Mati/wisdom, Mata/opinion in Sanskrit)

(Even Zarathushtra/Zoroaster’s Ahura Mazda is interpreted as Asura+ Medha or Asura+ Mahata)

Following names are also found in Miatanian inscriptions:-

Sutarna (Skt.Sutarana o Sutraana)

(Why not Sudarsana??)

Parsasatar (Skt.Prasastra)

(Why not Parasara or Parthasarathy??)

Saussatar (Skt.Susastra or Sausastra)

Artadhama (Skt.Rtadharma)

Tamil Grammar!! In Tamil no word can begin with R or L. we have to say A+Ranganathan, A+rangam/stage, I+london= London, I+Ramayanam= Ramayana, U+lokam= Ulakam/world etc. I see this in Mitanian and Iranian names as well. That is you have to add a vowel A, I, U. (See above Artadhama) before such words.

Tushrata (Skt.Tus+ratha)

Even today Tamils living far from India write Dasaratha as Tasaratha, Damayanti as Tamayanti. In London the Sri Lankan temples write Durga as Turka, and my friend Bhuvana writes her name as Puvana in Mauritius. So each language naturalize the sound according to their native language. In French speaking places Tamils write their names with strangest spelling variations!!!

Mativaza (Skt.mati-vaaja)

Artamma (Skt.Rtamna)

Rtam= Truth, Rhythm is a very important Rig Vedic word and found in the Emblem of Government of India; now English girls use Ruth etc as name. But Hindus prefer the synonym Sathya/Truth. My relatives have names Sathya Murthy, Sathyaa (woman).

Bardasva (Skt.Vrdh+asva)

Biryasura (Skt.Viirya – suura)

In the above two words we see B/V changes in 1380 BCE!!!!

Asva and Ratha suffixes are found in Iranian and Vedic names. Also in Mahabharata and Ramayana.

Purusa (skt.Purusa= English Person)

Saimasura (Skt.sima-suura or Saimasura)

Satavaaza  (Skt.Sata- Vaaja)

xxxx

I have already shown Mitanian Pratartana is even in Pratardhana of Vishnu sahsranama Hymn. Like wise Ahura Mazda’s Mahata or Medha etc are also in Vishnu Sahasranama. My point is Names of people are matched with names of people either in Iran or Mitani (Modern Turkey and Syria)

The Sanskrit numbers (numerals) in Kikkuli’s horse manual (1380 BCE in Turkey) are also debated long by the scholars. Even today the colloquial language is same. Written form is different. All Indian languages have diglossia. That is two forms are there ,Written and Spoken.

In Kalidasa’s Sanskrit dramas we see different speeches of fisherman, women, kings and Brahmins . They are in different Prakrit dialects.

If you listen to an elephant trainer in Kerala you will know how pure Tamil or Sanskrit words are changed in colloquial usage.

Even the Tamil Boy Wonder of 600 CE, Tiru Gnana Sambandar, boldly used  nazalised ‘Anchu’ for literal Aindhu (number five) in his Thevaram hymns.

Even the Tamil Alvars used ‘Kaluzan’ in Tamil for Garuda in Sanskrit. (R/L, D/L)

The Hurrian ‘nu’ suffix is like Malayalam, sister language of Tamils, where more nasalised sounds are seen. It must have existed parallel to Sangam Tamil 2000 years ago as well!

If a person has Sangam Tamil literature and Sanskrit books before that date, in his hand, he can trace all linguistic and grammatical forms found elsewhere in Avestan, Greek and Hebrew etc to Tamil and Sanskrit. The speakers of these two ancient Indian languages spread the language and culture around the world.

Mishra says,

There is sufficient evidence to show that India is the original home of Indo-Iranians.

I add the following,

Yes that is correct. I have shown linguistic similarities from Tamil Sangam literature. The so called ‘Iranians’ were Vedic Hindus went in different waves . From Darius period we have clear evidence in Behitsun inscription and Herodotus’ writings.  A close study of Tamil and avestan will throw more light. All must stdy Vedic Pratisakhya and Tamil  Sangam literature before coming to hasty conclusions. In this context I would recommend Kanchi Shankaracharya’s (1894-1994) linguistic lectures (Part of voluminous Bharatiya Vidhya Bhavan, Bombay publication).

–subham–

Tags- Mitanni, Sanskrit, Tamil, Avestan, Linguists, wrong

மார்பக கான்ஸர் அபாயத்தைத் தவிர்க்கச் சில வழிகள்! (Post No.10,752)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,752
Date uploaded in London – – 17 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்ச் 2022 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
மார்பக கான்ஸர் அபாயத்தைத் தவிர்க்கச் சில வழிகள்!
ச.நாகராஜன்
கான்ஸர் என்பது பரம்பரையாக வரும் ஒரு வியாதி அல்ல. என்றாலும் கூட, மார்பகம், ஓவரியன் எனப்படும் முட்டையகம், பெருங்குடல் மலக்குடல், ப்ரொஸ்டேட் எனப்படும் சுக்கிலவகம் ஆகிய இவற்றில் வரும் கான்ஸர் நோய் குடும்பங்களில் பரம்பரையாக வந்தால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்த மற்றவருக்கும் வரலாம்.
BRCA1, BRCA2 ஆகிய இரண்டு மரபணுக்களும் கான்ஸர் அபாயத்தை அதிகரிப்பவை. இவை மட்டுமல்ல, ஆய்வாளர்கள் சமீபத்தில் இன்னும் 100 வகையான மரபணு வேறுபாடுகள் மேலே கூறிய மார்பக மற்றும் இதர வகை கான்ஸர் அபாயத்தைத் தருபவை என்று கண்டு பிடித்துள்ளனர்.
குடும்பத்தில் கான்ஸர் யாருக்கேனும் இருந்து, இது பற்றிய கவலை ஏற்பட்டது எனில் உங்கள் குடும்ப டாக்டரைக் கலந்தாலோசியுங்கள். தேவை எனில் மரபணு சோதனை ஒன்றை எடுங்கள்.
இந்த சோதனையின் பெயர் NHS மரபணு சோதனை. பாஸிடிவ் என்று சோதனை முடிவு இருந்தது என்றால் அடுத்து செய்ய வேண்டியது என்பதை டாக்டர் நிர்ணயிப்பார். அத்தோடு வாழ்க்கை முறை மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் சில சோதனைகளின் முடிவுகள் சரியான முடிவுகளைத் தருவதில்லை என்பது இதில் உள்ள கெட்ட அம்சம்.
இந்த சோதனை எப்படி நடத்தப்படும்? உங்கள் இரத்தம் எடுக்கப்பட்டு, கான்ஸர் அபாயம் உள்ள மரபணு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்குள் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். 
BRCA1, BRCA2 மரபணு சோதனை எடுப்பது இன்னொரு வழி! இதன் முடிவு வர 4 முதல் 8 வாரங்கள் ஆகும்.
சோதனை நிச்சயமாக பாஸிடிவ் என்று வந்தால் பல விருப்பத் தேர்வுகள் உங்களுக்கு உண்டு.
சர்ஜரி செய்து கொள்ளலாம். மார்பகத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரலாம்.
மார்பகத்தில் கான்ஸர் வரும் அபாயம் என்றால் வருடாந்திர ப்ரெஸ்ட் (Breast) -மார்பக ஸ்கீரினிங் செய்து கொள்ளலாம்.
ஓவரியன் மற்றும் ப்ரொஸ்டேட் கான்ஸர் அபாயத்தைக் கண்டுபிடிக்க இப்போதைக்கு ஒரு ஸ்கீரினிங் டெஸ்டும் இல்லை.
Faulty BRCA எனப்படும் தவறான மரபணு இருப்பது தெரிந்தால் வாய் வழியே சாப்பிடும் மாத்திரை  (oral contraceptive pill )களைத் தவிர்க்கவும்.
ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெராபி (HRT) மேற்கொள்ளக் கூடாது.
மது அருந்துபவர் என்றால் அதைத் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை கூட இருந்தால் அதைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கான்ஸர் பற்றிய மிகுந்த அபாயம் உள்ள சில பெண்மணிகளுக்கு tamoxifen, raloxifen மற்றும் anastrozolole தரலாம் என NICE
பரிந்துரைக்கிறது.
NICE என்பது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸெலன்ஸ் (National Institue for Health and Care Excellence) என்ற பிரிட்டனில் உள்ள அமைப்பாகும்.


tags– மார்பக கான்ஸர்

400 ரிக்வேத புலவர்கள் பட்டியல்- 3 (Post No.10,751)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,751

Date uploaded in London – –    16 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் ஏறத்தாழ 400  புலவர்கள், ரிஷிகள், கவிஞர்கள்  பெயர்கள் உள்ளது .

அவர்களுடைய பெயர்களை வேத அநுக்ரமணி  தருகிறது.அதுதான் உலகின் முதல் INDEX இன்டெக்ஸ். உலகிற்கே இன்டெக்ஸ், பொருளடக்கம் என்பதை புஸ்தகத்தில் போடும் பழக்கத்தைக் கற்பித்தவர்கள் இந்துக்கள்தான் !

நேற்று இரண்டாவது பகுதியில் ‘ரிஷப’  என்ற பெயருள்ள சில கவிஞர் பெயர்களைக் கொடுத்தேன். பலரும் சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவரை அவர்களுடன் தொடர்புபடுத்தி பேசுவார்கள். அது நிரூபிக்கப்பட்டால் (Jain Religion)  சமண மதத்தின் பழமை விளங்கும் .

ரிக் வேதத்தில் 30 பெண் புலவர்கள் இருக்கின்றனர்.உலகில் 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு பெண் கவிஞர்களைக் காண முடியாது. ரிக் வேதத்துக்கு 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சங்கத் தமிழ் நூல்களில் மேலும் சுமார் 30 பெண் புலவர்களைக் காண்கிறோம். இந்த 60  பெரும் 2000 ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி இருந்தது, நாம்தான் உலகிற்கே நாகரீகத்தைக் கற்பித்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்தப் பகுதியில் கிருஷ்ணர், கோதை என்னும் பெயர்கள் வருவதைக் கவனிக்கவும்

XXXX

இது மூன்றாவது பகுதி :-

இதுவரை 100 புலவர்களைக் கண்டோம்.

101.க்ருத யஸா ஆங்கிரச 9-108

க்ருத்னு பார்கவ  8-79

க்ருஷ காண்வ  8-55

க்ருஷ்ண ஆங்கிரச 8-85/87, 10-42/44

கேது ஆக்னேய 10-156

கய ஆத்ரேய 5-9/10

கய ப்ளாட  10-63/64

கர்க பாரத்வாஜ 6-47

கவிஸ்திர ஆத்ரேய 5-1

க்ருத்சமட 2-1; 9-86

கிருஹபதி சஹஸ்ரபுத்ர 8-102

கோதம ராஹுகண 1-74/93; 9-31

கோதா 10-134

கோபவன ஆத்ரேய 8-73/74

கோஸூக்தி காண்வாயன 8-14/15

கெளரிவீதி சாக்த்ய 5-29, 9-108; 10-73/74

சங்கப் புலவர்களில் வெள்ளிவீதி என்ற பெயருடன் ஒப்பிடுக.

கர்ம தாபஸ 10-114

கர்ம ஸெளர்ய 10-181

கோர ஆங்கிரஸ 3-36

இதே பெயரில் கிருஷ்ணரின் குரு ஒருவர் இருந்தார் .

கோஷா காக்ஷிவதீ 10-39/40

சக்ஷு மானவ 9-106

சக்ஷு   ஸெளர்ய 10-158

இங்கு தாபஸ, மானவ முதலிய மனுக்களின் பெயர்கள் வருகின்றன. இவர்கள் 14 மனுக்களில் சிலரா அல்லது அவர்களுடைய பெயர்களைத் தாங்கியவரா என்பது பற்றி ஏற்கனவே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள் ளேன் .

சித்ரமஹா வாசிஷ்ட 10-122

ச்யவன பார்கவ 10-19

‘சித்ர’ என்ற பெயர் மஹாபாரதம், சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் ஆட்களின் பெயர்களில் வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்சித்திரனார் உண்டு. இவர்கள் நாகர்கள்  (ஓவியர்) என்பாருமுளர்.

ஜமதக்னி பார்கவ 3-62; 8-101; 9-62, 65, 67; 10-137, 167

இவர் பரசுராமரின் தந்தை; ராமர் காலத்ததுக்கு  சற்று முந்தியவர்.

128.ஜய ஐந்திரன் 10-180

ஜரத்கர் ண ஐராவத 10-76

ஜரிதா சாரங்க 10-142

மஹாபாரதத்திலும்  இந்தப் பெயர் வருகிறது

ஜூஹூ பிரம்மஜாயா 10-149

ஜுதி வாதரசன  10-136

ஜேதா மாதுசாந்தச 1-11

தபு மூர்த்தா பார்ஹபஸ்த்ய 10-182

தான்வ பார்த்தியா  10-93

திர சேய் ஆங்கிரஸ

த்ரசா தஸ்யு பெளரு குத்ஸ்ய 4-42; 5-27;9-110

த்ரித ஆப்த்ய 1-105; 8-47; 9-33/34, 102; 101/7

த்ரிசிர த்வாஷ்ட்ர 10-8/9

த்ரிசோ க காண்வ 8-45

த்ரையாருண த்ரை வ்ரஷ் ண 5-27; 9-110

த்வஷ்டா கர்ப கர்த்தா 10-184

தக்ஷிண ப்ராஜா பத்ய 10-107

தமன யாமாயண 10-16

திவ்ய ஆங்கிரஸ 10-107

தீர்க்க தமா ஒளசத்ய 1-140/164

துர்மித்ர கெளத் ஸ 10-105

துவஸ்யு வாந்தன 10-100

த்ர்த்தாச்யுத ஆகஸ்த்ய 9-25

தேவ ஜாமாயஹ இந்த்ர மாதரஹ 10-153

தேவமுனி ஐரம்மத 10-146

தேவராத வைச்வாமித்ர (காண்க சுனஸ்சேப )

தேவல காஸ்யப 9-5/24

தேவவாத பாரத 3-23

154. தேவ ஸ்ரவா பாரத 3-23

த்ரிசிர  த்வாஷ்ட்ர போன்ற ரிக் வேத அசுரர் பெயரும் இங்கே வருகிறது

அது மட்டுமல்ல ; 3 என்ற எண்ணுடன் பல பெயர்கள் உள்ளன. சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்திலும் 3 கோடுகள்  அதிகம் காணப்படுவதால் வேத கால பெயர்களாக இருக்கலாம் . ‘பாரத’ என்ற பெயரும் சிலர் பெயரில் காணப்படுவதால் அவர்கள் பரதன் வழிவந்தவர்களாவோ , அவரது முன்னோடிகளாகவோ இருக்கலாம் .

இதுவரை 154 புலவர்களைக் கண்டோம்

தொடரும் ……………………….

tags- ரிக் வேதம், புலவர்கள், ரிஷிகள், கவிஞர்கள் , பட்டியல்-3

புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட……. PART 2 (Post No.10,750)

Picture of Platinum One Kilogram weight in Paris Museum

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,750

Date uploaded in London – –    16 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிளாட்டினம் கிடைக்கும் இடம் :-

பிளாட்டினம் அதிக அளவில் கிடைப்பது தென் ஆப்பிரிக்காவில்தான். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது ரஷ்யா. வட அமெரிக்காவில் ஒண்டாரியோ (Ontario)பகுதியிலும் கிடைக்கிறது.. இது கட்டிகளாகவும் (Nuggets), ஏனைய உலோகங்களுடன் னும் கிடைக்கும்.ஆனால் உருகு நிலை (Melting Point) அதிகம் என்பதால் உலோகங்களாக வார்ப்பது எளிதல்ல.

உலக உற்பத்தியில் பாதி அளவு நகைகளைச் செய்ய பயன்படுகிறது. 30 சதவிகிதம் கிரியா ஊக்கி கன்வர்டர்களிலும் (Catalyst Coverters); மீதியுள்ள 20 சதவிகிதம் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. ஜப்பானியர் பிளாட்டினம் நகைகளை அதிகம் விரும்புகின்றனர். சீனர்களும் வைரஸ் நோய் தாக்கிய  காலத்திக்கல் பிளாட்டின இறக்குமதியை அதிகரித்தனர். மோதிரம் நெக்லஸ் , தோடு முதலியன செய்யப்படுகின்றன.

இதை பாரிஸ் நகரிலுள்ள தரக் கட்டுபாடு எடை நிர்ணய அமைப்பு ‘ஒரு கிலோ என்றால் என்ன’, ‘ஒரு மீட்டர்  என்றால் என்ன’ என்பதற்கு பிளாட்டின அளவுகளையே பயன்படுத்துகிறது. ஏனெனில் இதை காற்றோ வேறு ரசாயனமோ அரிக்க  முடியாது. மேலும் இரிடியம் (Iridium)  என்னும் உலோகத்தைக் கொஞ்சம் சேர்த்தாலும் மேலும் வலு கிடைத்துவிடுகிறது

இந்த உலோகம் மின்சார, மின் அணு, விமானம் கட்டும்  தொழில்களில்  உபயோகப்படுகிறது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் (Coating Hard disks)  பூச்சு கொடுக்கவும், மின்சாரத்தில் ஓடும் வாகனங்களில்  பேட்டரிகளிலும் பயன்படுகிறது ;கண்ணாடி ஆலைகளில் ஆப்டிகல் பைபர் , எல்.சி.டி (Liquid Crystal Display)  . டிஸ்பிளே ஆகியவற்றில் இதை உபயோகிக்கின்றனர்

ஜெட் எஞ்சின்கள், கார்களின் ஸ்பார்க் பிளக்குகள் இருதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் (Pace Makers) பேஸ் மேக்கர்ஸ், பலூன் கதீட்டர் (Balloon Catheter) ஆகியவற்றிலும் பிளாட்டினத்தைக் காணலாம். .

1997ல் அமெரிக்கா 25 டாலர் பிளாட்டினம் நாணயத்தை வெளியிட்டது.

தங்கத்தைப் போலவே இதையும் மெல்லிய தகடாகத் தட்ட முடியும். ஒரு மைக்ரோ மீட்டர் தடிமனுக்கும் இதைத் தட்ட முடிவதால் விண்வெளி ஏவுகணைகளிலும் இதைப் பொருத்துகிறார்கள்

ரசாயன குணங்கள்

Chemical Symbol குறியீடு – பி.டி Pt

Atomic Number அணு எண்  78

உருகு நிலை 1772 டிகிரி C செல்சியஸ்

கொதி நிலை 3800 டிகிரி C

தோற்றத்தில் வெள்ளி போலவே இருக்கும். ஆஸ்மியம், இரிடியம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அடர்த்தி – டென்சிட்டி Density — உடையது. காற்றில் கருக்காது. ஆனால் சூடாக்கப்பட்ட ராஜ திராவகத்தில் (Aqua Regia)  கரையும்  இதற்கு ஆறு ஐசடோப்புகள் (Isotopes) உண்டு. ஒன்று மட்டும் மிகவும் சிறிய அளவு கதிரியக்கம் உடையது.

பிளாட்டினத்தின் அபூர்வ குணங்களில் ஒன்று வினைகளைத் தூண்டிவிடும் (catalyst). சாதாரண அறை வெப்பத்தியேயே வினைகளை நிகழச் செய்யும் கிரியா ஊக்கி. ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம். ஒரு பிளாட்டினம் கம்பியை மெதனால் எனப்படும் (Methyl Alcohol) மெதில் ஆல்கஹாலின் ஆவியில் காட்டினால் அது செஞ் சுடராக ஒளிவிடும் அப்போது பார்மால்டிஹைட் (Formaldehyde)  என்னும் உருவாக ஆக்சிடேஷனை ஊக்குவிக்கிறது .இதே குணத்தைப் பயன்படுத்தி சிகரெட் லைட்டர்களும் செய்தார்கள் ;எரிபொருள் வரும் இடத்தில் பிளாட்டினம் இருந்தால் உடனே அது ஆக்க்சிஜனுடன் கலந்து தீயை உண்டாக்க உதவுகிறது.

கிரியா ஊக்கி என்பது என்ன ?

தான் ஒரு மாறுதலையும் அடையாமல் மற்ற ரசாயன விளைவுகளைத் தூண்டி விடுவது கிரியா ஊக்கி (Catalyst).

ஏதோ ஒரு பெரிய செயலை நீங்கள் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அப்போது உங்களின் அருமை நண்பர் வருகிறார். உங்கள் திட்டத்தைக் கேட்டவுடன், ‘கவலையே படாதே ; கொஞ்சமும் தயங்காதே; உடனே இறங்கு’ என்று உங்களை ஊக்குவிக்கிறார். ‘குட் பய்’ சொல்லி விட்டுப் போய்விடுகிறார். அவர் எந்த மாறுதலையும் அடையவில்லை. அவர் சொன்ன ‘சொல்’, கிரியா ஊக்கியாக இருந்து உங்களை ஊக்குவிக்கிறது. உங்கள் செயலில் உங்களுக்கும் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்தான் கிரியா ஊக்கி ; உங்கள் வெற்றிதான் ரசாயன கிரியை/ வினை

XXX

Picture of Platinum necklace and ear ring

ஒருகாலத்தில் தங்கத்தை வீட அதிகம் மதிப்புடையதாக இருந்த பிளாட்டினம் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின்  விலையை விட மிகவும் குறைந்துவிட்டது. காரணம் இதில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்ற எண்ணம் குறைந்துவிட்டது. மேலும் பாரம்பர்யமாக கல்யாண நகைகளை வாங்குவோர் தங்கத்தையே நாடுகின்றனர். பணக்காரர்களுக்கு மட்டுமே பிளாட்டினம் என்றால் என்ன என்று தெரியும் .அவர்கள் இன்றும் பிளாட்டினம் நகைகளை அணிந்து வலம் வருகின்றனர்.

பிளாட்டினத்தின் விலை மிகவும் ஏறியும் இறங்கியும் ஊசல் ஆடுகிறது இதை எழுதும் நேரத்தில் தங்கத்தின் விலையில் சரி பாதியாக பிளாட்டினத்தின் விலை சரிந்துவிட்டது .

பிளாட்டினத்தின் பெயர் ‘வெள்ளி’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. அந்த மொழியில் பிளாட்டினா என்றால் கொஞ்சம்/ சின்ன  வெள்ளி (Little Silver லிட்டில் சில்வர்) என்று பொருள்.

பிளாட்டினத்தை யார் கண்டுபிடித்தார்கள் என்றே சொல்ல முடியாது. அது என்ன என்று அறியாமலேயே பழங் காலத்தவர் நகைகளைச் செய்து அணிந்தனர்.

எகிப்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னரும், தென் அமெரிக்காவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் பிளாட்டினம் நகைகளைச் செய்தனர் .முதலில் தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளைக் கொள்ளையடித்த ஸ்பானியர்கள் தங்கத்தை மட்டுமே ஸ்பெயினுக்கு கொண்டு சென்றனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர்களுக்கு இதன் மதிப்பு தெரிந்தது. தோற்றத்தில் வெள்ளி போல இருந்தாலும் அதைப் போல காற்றில் கருப்பாகாது என்பதைக் கண்டனர்.

முதலில் ஸ்பானிய அதிகாரிகள், பிளாட்டின உற்பத்திக்குத் தடை போட்டனர். இதை தங்கத்துடன் கலந்து நகைகளில் கலப்படத்தை (Adulteration)  ஊக்குவிப்பதாக அவர்கள் எண்ணினார்கள். ஆகையால் இருக்கும் கையிருப்பை கடலின் ஆழத்தில் இற க்கும்படி உத்தரவிட்டனர் .பின்னர்தான் இதன் மஹிமை புரிந்தது. தென் அமெரிக்காவிலிருந்து  ஸ்பெயினுக்குக் கப்பலில் அனுப்பினர் . ரஷ்யாவில் யூரல் மலைகளில் இது கிடைத்தவுடன் ரூபிள் நாணயங்களைக்கூட பிளாட்டினத்தில் வெளியிட்டனர். 15 லடசம் நாணயங்களை வெளியிட்ட பின்னர் இது  அபூர்வமாகக்  கிடைக்கும்  உலோகம் என்ற ஞானோதயம் ஏற்பட்டது. அதற்குள் அந்த உலோகத்தின் மதிப்பு , நாணயத்தின் மதிப்பைவிட உயர்ந்தது. உடனே ரஷ்யா , நாணயம் அடிப்பதை நிறுத்தியது!

Picture of American 25 Dollar Platinum coin

—subham–

tags — பிளாட்டினம், நகை, நாணயம், உபயோகம், கிரியா ஊக்கி , இருதய நோய்

அகநானூறு பாடலில் ஒரு காதல் காட்சி (Post No.10,749)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,749
Date uploaded in London – – 16 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காதல் காட்சி

காதலுடன் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்த நிலை!

ச.நாகராஜன்

அகத்துறையில் அருமையான 400 பாடல்களைக் கொண்ட நூல் அகநானூறு.
காதலர்களின் பல்வேறு நிலைகளை பல்வேறு உவமைகளுடன் சுட்டிக் காட்டும் பாடல்கள் இவை.
எயினந்தை மகனார் இளங்கீரனார் என்ற புலவர் பாடிய பாடல் 399வது பாடலாக அமைகிறது.
திணை : பாலை
துறை : தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

காதலன் காதலியை விட்டுப் பிரிந்து நெடுந்தூரம் சென்றுள்ளான்.
காதலி வாடுகிறாள்.
அவள் வாட்டத்தைக் கண்ட அவளது தோழி அவளைத் தேற்றுகிறாள்.

அவள் அழகை வர்ணித்து இப்படிப்பட்ட அழகுடையாளை அவன் பிரிந்து நெடு நாள் இருப்பானா, என்ன, சீக்கிரமே வந்து சேர்வான் என்கிறாள் தோழி.

அவள் தலை உச்சியிலே பூங்கொத்து. அது மயிர்ச் சாந்து பூசப் பெற்றுள்ளது.
இருட்சி உடையது.
சந்தன மரக் காற்றை உள் வாங்கிக் கொண்டு இமயமலைக் காட்டினைப் போல் நறுமணம் கமழ்வது, அவளது கூந்தல்!
நல்ல நெற்றி வேறு அமைந்த அழகி அவள்!

கற்கள் இருக்கும் காட்டினைச் சார்ந்த இடம்.
அதில் குந்தாலியினால் தோண்டிய ஒரு குழி.
நெடிதும் கீழேயுமாக ஊறி வரும் நீர்.
அதை உண்ணும் இனிய தெளிந்த ஒலியினைக் கொண்ட மணிகளை அணிந்திருக்கும் பெரிய ஆநிரைக் கூட்டம்.
அக்கூட்டம் வறட்சியுற்ற பாலை நிலத்தே புகுகிறது.
ஊது கொம்பினால் ஒலி எழுப்பி அவற்றை அந்த இடத்திலிருந்து அகற்றி, தளர்ந்த தன்மையை உடைய கொன்றையின் நிழலில் தங்குபவர் பசுக்கூட்டங்களைக் கொண்டவர்களான ஆயர்கள்.

அவர்கள் அறியாது ஊதும், சிறிய மூங்கிலால் செய்யப் பெற்ற குழல்.
அது தனித்த தெளிவான ஒலியை எழுப்பும்.
அதை அழகிய மான்கள் கேட்கும்.
அத்தைகைய காட்டிலே மலைப் பாறைகளைக் கடந்து சிகரங்களைக் கடந்து அவன் சென்றிருக்கிறான்.
இனிமை ஊறும் மார்பகங்கள் கொண்டவள் தலைவி.
அதைப் பருகுதல் போன்ற காதல் கொண்ட உள்ளத்துடன் அவளைப் பிணைந்து தழுவி இன்பம் நுகர்வதைத் தவிர்த்து தான் சென்ற இடத்தில் அவனால் நெடுநாள் இருக்க முடியுமா, என்ன!

என் தலைவியே ! நீ வருந்தாதே. சீக்கிரமே அவன் வந்து சேர்வான்!
இது தான் திரண்ட பொருள்.
இனி பாடலைப் பார்ப்போம்:

சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்,
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு,
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார்   5

கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ,         10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி,

மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்,                15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
வேய் கண் உடைந்த சிமைய,
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. 18

‘பருகு வன்ன காதல் உள்ளமொடு ஆகம் திருகுபு முயங்கல்’ என்ற சொற்கள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு பின்னிப் பிணைந்து தழுவிக் கிடக்கும் நிலையைச் சொல்கிறது.

அழகியின் கூந்தல் வனப்பும் அழகுற விளக்கப்படுகிறது.

இமையக் கானம் என்பது இமய மலையைக் குறிக்கிறது.

நல் நுதல் அரிவை என்பது அவளது அழகிய நெற்றியைப் போற்றிப் புகழ்கிறது.
அழகிய பல இயற்கை வர்ணனையைக் கொண்டதோடு அழகியின் வனப்பைச் சுட்டிக் காட்டும் பாடலில் தலைவியைத் தோழி தேற்றுவதைப் புலவர் அழகுறப் பாடியுள்ளார்.
இமயத்தைச் சுட்டிக் காட்டி குமரிச் செல்வியின் அழகைச் சேர்த்து இணைக்கும் பாடல் இது.

இப்படி நானூறு பாடல்களைக் கொண்ட காதல் காவியம் அகநானூறு.

தமிழுக்கே உரித்தான அகம். புறம் ஆகிய இரண்டிலும் மொத்தம் 800 பாடல்கள் உள்ளன.
இன்பமும் சுரக்கும்; வீரமும் பெருகும்.


tags– அகநானூறு,  சிமையக் குரல சாந்து, 

புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது! (Post.10,748)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,748

Date uploaded in London – –    15 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 38 மூலகங்கள்/ தனிமங்கள் (CHEMICAL ELEMENTS) பற்றிய சுவையான செய்திகளைக் கண்டோம். இதோ தங்கத்தையும் விட  மதிப்பு உடைய  பிளாட்டினம் (PLATINUM) பற்றிய சுவையான செய்திகள்:–

உடலுக்கு பிளாட்டினம் தேவை என்று எந்த ஆராய்ச்சியும் காட்டவில்லை ; ஆனால் உடலுக்கு வரும் நோயையத் தடுக்கும் கருவிகளில் பிளாட்டினத்தின் பஃங்கு இன்றியமையையாதது ; இது வெள்ளி தங்கம் போன்ற ஒரு உலோகம் (metal) . ஆனால் அவற்றை விட மதிப்பும் விலையும் அதிகம்

புற்றுநோய்ச் (CANCER) சிகிச்சையில் பிளாட்டினம்:-

பிளாட்டினம், வெள்ளி போல பளபளக்கும்,  ஜொலி ஜொலிக்கும் ஒரு உலோகம். உலகில் அபூர்வமலாகக் கிடைக்கும் உலோகம் ; அது மட்டும் இதன் மதிப்பு உயரக் காரணம் அன்று. இதை காற்றோ, அமிலமோ, வேறு ரசாயனங்களோ எளிதில் (INERT) அரிக்க  முடியாது. ஆகையால் இந்த அபூர்வ குணத்தை புற்று நோய் சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த உலோகம் உள்ள மருந்து, புற்று நோய்  (Cancer) ‘செல்’லுக்குள் எளிதில் நுழையும்; ஆனால் அது பெருகுவதைத் தடுக்கும்  புற்று நோய்ச சிகிச்சையில் இதை பயன்படுத்துகிறார்கள்

புற்றுநோய் என்பது என்ன? செல்களின் தாறுமாறான வளர்ச்சி; அபரிமிதப் பெருக்கம். இவ்வாறு உடலில் ஒரு உறுப்பில் நிகழ்ந்தால் அது அந்த உறுப்பையே செயலற்றதாகச் செய்யும். அத்தோடு நில்லாமல், இதே செய்தியை உடலின் மற்ற செல்களுக்கும் அனுப்பிவிடும்; அப்போது அங்கும் புற்றுநோய் பரவும். இந்த நிலை ஏற்பட்டாமல் தடுக்க கீமோதெராபி (CHEMO THERAPY) எனப்படும் ரசாயன மருந்து சிகிச்சை கொடுக்கப்படும். அதில்தான் பிளாட்டினம் மிகவும் பயன்படுகிறது.

இதோ மேல் விவரம் ,

பிளாட்டினம் அடங்கிய ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு அலர்ஜி (Allergy) என்னும் ஒவ்வாமை ஏற்படலாம். இதன் பெயர் பிளாடினோசிஸ் (Platinosis). இது ஆஸ்த்மா, தடுமன் (cold) போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

1962-ம் ஆண்டு, பார்னெட் ரோசன்பர்க் (Barnett Rosenberg ) என்பவர் உயிரினங்களில் உள்ள ‘செல்’ கள் (CELLS)  மீது மின்காந்த மண்டலம் என்ன தாக்கத்தை ஏற்படும் என்று ஆராய்ந்து கொண்டு இருந்தார். மனிதர்கள் உள்பட எல்லா உயிரிங்களிலும் செல்கள் பிரிந்து, பிரிந்து பெருகிக்கொண்டே இருக்கும். அவர் ஆராய்ச்சியில் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார் ஈ கோலி (E. COLI = ESCHERICHIA  COLI) எனப்படும் பாக்டீரியாவில் மின்காந்த மண்டலம் (ELECTRO MAGNETIC FIELD)  பெரிய நூல் (filament) இழை போன்ற வளர்ச்சியைக் காட்டியது . செல்கள் வளர்ந்தாலும் அவை பிரியவில்லை . அதே விஷயத்தில் ரோசன்பர்க் 3 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சியை நீடித்தார்.அப்போது சில ரசாயனப் பொருட்களும் செல்கள் பிரிவதை, பெருகுவதைத் தடுக்கிறது என்று கண்டார். அதுதான் செல் பிரிவதைத் (CELL DIVISION)  தடுக்க உதவும் கீமோதெரபி உண்டாக உதவிய நிகழ்ச்சியாகும். 1978 முதல் இதை மனித நோயாளிகள் விஷயத்தில் பயன்படுத்த அனுமதி கிடைத்தது பின்னர் இதன் மூலம் பல்லாயிரக் கணக்காணோர் உயிர்பிழைத்தனர். குறிப்ப்பாக சிறுவர்கள் சிகிச்சையில் அதிக பலன் கிடைத்தது

பிளாட்டினம் மற்ற பொருட்களுடன் வேகமாக கிரியையில் ( INERT ) இறங்காது. இதனால் ரோசன்பர்க், பிளாட்டினத்தை ரசாயன சிகிச்சை முறையில் பயன்படுத்தினார். ஆனால் அதுவும் கூட குளோரைட் , அம்மோனியம் IONS அணுக்களுடன் சிறிது செயல்பாட்டில் இறங்கியது.இவற்றை எல்லாம் மனதிற்கொண்டு சிஸ்பிளாட்டின் CISPLATIN என்ற புற்றுநோய் சிகிச்சை மருந்து உருவாக்கப்பட்டது. அதன் விற்பனைப் பெயர் பிளாட்டினால் PLATINOL .

சிஸ் பிளாட்டின் போல வேறு சில பிளாட்டினம் சிகிச்சை மருந்துகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை புற்றுநோய் செல்களுக்குள் நுழைந்து அவற்றின் வளர்ச்சியை நிறுத்திவிடும்.. இது சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை செல்களிலும் பயன்படுகிறது . உடலுக்குள் செல்லும் எல்லா ரசாயனங்களும் வாந்தி எடுத்தல், சில உறுப்புகள் தற்காலிகமாக உணர்ச்சியை இழத்தல் முதலியவற்றை , அதாவது பக்க விளைவுகளை, உண்டாக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் தடுக்க வேறு சில மருந்துகளையும் சாப்பிடவேண்டிவரும். பெண்களின் ஜனன உறுப்புகளில் (Ovarian cancer) வரும் புற்றுநோயைத் தடுக்க கார்போ பிளாட்டின் (Carboplatin) உருவாக்கப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதனால் மேலும் மேலும் அதிக சக்தியுள்ள , குறைந்த பக்க விளைவுகள் உள்ள, மருந்துகள் கிடைக்கக் கூடும் . மொத்தத்தில் வாழ்நாளை நீடிக்கச் செய்து,  உயிர் இழப்புகளைத் தடுப்பதில் பிளாட்டினம் மருந்துகள் பேருதவி புரிந்து வருகின்றன.

கட்டுரையின் அடுத்த பகுதியில், பிளாட்டினத்தின் தொழில் முறை உபயோகங்களையும் பிளாட்டினம் நகை மீது பெண்களுக்குள்ள மோகத்தையும் காண்போம் .

–தொடரும் …………………

Tags-பிளாட்டினம், புற்றுநோய், மருந்து, சிஸ் பிளாட்டின்

400 ரிக் வேத ரிஷிகள் பட்டியல்-2 (Post No.10,747)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,747

Date uploaded in London – –    15 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேத கால புலவர்கள் 400 பேர் பட்டியல் தொடர்கிறது. நேற்று 47 பேரைக் கண்டோம்.

இரண்டாம் பகுதி

48.இட பார்கவ 10-171

இந்த்ர  1-165, 1-170, 4-18, 8-100, 10-28, 10-86

இந்த்ர முஸ்கவான் 10-38

இந்த்ர வைகுண்ட 10-48

இந்த்ர ப்ரமிதி வாசிஷ்ட 10-97

இந்த்ராணி 10-86, 10-145

இரும்பிடி கா ண்வ 8-16 -18

இ ச ஆத்ரேய 5-7, 8

இத்ம வாக தார்த்தச் யுத  9-26

உசத்ய ஆங்கிரஸ 9-50-52

உத்கீல காத்ய 3-15-16

உபமன்யு வாசிஷ்ட 9-97,

உபஸ்ருத வார்ஸ் த்திஹவ்ய 10-115

உருக்சய ஆமஹியாவ 10-118

உருசக்ய  ஆத்ரேய 5-69/70

ஊர்வசி 10-95

உல வாதாயான 10-186

உசன காவ்ய 8-84, 9-87/89

ஊரு ஆங்கீரஸ 9-108

ஊர்த்வ க்ருசண யாமாயண 10-144

ஊர்த்வ க்ராவா ஆற்புதி  10-175

ஊர்த்வ நாப ப்ரஹ்ம 10-109

ஊர்த்வச த்மா ஆங்கீரஸ 10-108

ரிஜ்ஸ்வா  பாரத்வாஜ 6-49/52, 9-98, 9-108,

ர்ஜ் ராஸ் வ  வார்சாகிர 1-100

73- ர்ணாஞ்சய 9-108

So far 73 poets covered

ர்ஷப  வைராஜ 10-166

ர்ஷப வைஸ் வாமித்ர 3-13/14; 10-166

ர்ஷப சக்வர 10-166

ர் ஷ்ய ஸ்ருங்க வாதரஸன 10-136/7

ஏக தாயு நவ் தச 8-80

ஏடச வாதரஸன 10-136

ஏவயாமருத் ஆத்ரேய 5-87

கக்ஷிவான் தை ர்க தமஸ 1-116/125; 1-16; 9-74

கண் வ கௌர 1-36, 1-43, 9-94

கத  வைச்வாமித்ர 3-17/18

கபோத நைர் த  10-165

கரிக்கரத  வாதரஸன  10-136

கர்ணஸ்ருத வாசிஷ்ட 9-27

கலி ப்ராகாத 8-66

கவச ஐலுச 10-30/34

கவி பார்கவ 9-47/49, 75/79

காஸ்யப மாரீச 1-99; 8-29; 9-64, 67, 91/92; 9-113/114; 10-137

குத்ச ஆங்கிரஸ 1-94/98; 1-101/115; 9-97

குமார ஆக்னேய 7-101/102

குமார ஆத்ரேய 5-2

குமார யாமாயன 10-135

குரு சுதி காண்வ 8-76/78

குல்மல பாரீஸ சைலூசி 10-126

குசிக ஐஸீரதி 3-31

குசிக ஸெளபரி  0-127

குஸீதி காண்வ 8-81/83

102. கூர்ம க்ருத்சமத 2-27/29

இதுவரை 100 புலவர்கள்

To be continued………………………………………………

tags–  ரிக் வேத, புலவர்கள் , 400 பேர்,  பட்டியல்-2,

காம தகனம் எனும் மதனோற்சவம் – part 2 (Post No.10,746)

FOR PICTURES GO TO MY BLOG swamiindology.blogspot.com

WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 10,746
Date uploaded in London – – 15 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காம தகனம் எனும் மதனோற்சவம் – 2
Written By B.Kannan, Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப்பதிவில் சம்ஸ்க்ருதம் மொழியில் மதனோற்சவ நிகழ்வு எப்படியெல்லாம் கவிஞர்களால் விவரிக்கப் பட்டுள்ளது என்பதைக் காண்போம்………

மகா சிவராத்திரியுடன் சிசிர ருதுவின் பனிப் பொழிவு ” சிவ,சிவ” என்று விலகி விடும். அடுத்து வரும் பூரண நிலவு நாளில் வசந்த ருதுவின் வரவை மிக்க உற் சாகத்துடன் வரவேற்க எல்லாரும் தயாராகி விடுவர். நமக்குச் சிசிர ருதுவின் பிற் பகுதி நடக்கையில், வட இந்திய மாநிலங்களில் கோலாகலத்துடன் வசந்த ருது களை கட்ட ஆரம்பித்துவிடும்.

மாறன், அரூவனான அனங்கன், காதல் வேட்கையைத் தூண்டுவதால் ராகவிருந்தன், மனதை அலைக்கழிப்பதால் மன்மதன், தேவர்களையும் வசப்படுத்துவதால் கந்தர்பா, போதைப்பொருள் போல் செயலாற்றுவதால் மதனா, ரதியின் பதி என்பதால் ரதி காந்தா, மலர்க் கணைகளை உடையவன் ஆதலால் புஷ்பவான்,குசுமஷரா, மனதை ஏக்கமடையச் செய்வதால் காமன், காதல் நினைவுகளில் மூழ்க வைப்பதால் ஸ்மரா, செங்கரும்பு வில் ஏந்தி இருப்பதால் இக்ஷுதனுர்தாரா, என வெவ்வேறு நாமங்களால் அறியப்படுகிறான் வசந்தன்.
வசந்த ருது, ரதி-மன்மதன் என்று சொன்னாலே கவிகளின் எழுத்தாணி கிளுகிளக்க ஆரம்பித்துவிடும். சிருங்கார ரசம் கரைபுரண்டு ஓடுவதற்குக் கேட்கவா, வேண்டும்? பழையமுது, தொட்டுக்க மாவடுக்காக (எவ்வளவு முறைதான் பலாச்சுளையை மொய்க்கும் ஈக்கள் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பது?) ஆவலுடன் ஜீயர்புரம் ஓடோடிப் போகும் திருவரங்கன் மனநிலையில் தான் அவர்கள் இருக்கக் கூடும்! விரகதாபத்தில் சிக்கித் தவிக்கும் நாயகனின் உற்ற தோழனாக இருந்து நக்கல், நையாண்டி, வேடிக்கையாகப் பேசி அவனை ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்வது பிராக்ருத, சம்ஸ்க்ருதக் காவியங்களில் வரும் விதூஷகர்கள் மட்டுமே! பல நாடகங் களில் இதைக் காணமுடிகிறது.

இனிமையாகக் கூவும் குயில், பிள்ளை மொழி பேசும் பஞ்சவர்ணக் கிளி, பூக்களிலி ருந்துத் தேனை உறிஞ்ச ரீங்கரித்தவாறு வட்டமிடும் தேனீக்கள், எங்கு பார்த்தா லும் மரங்களிலிருந்து உதிர்ந்த பல நிற மலர்கள் தரையில் பரவி வண்ணப் பட்டுக் கம்பளம் விரித்தது போல் தோன்றும் காட்சி,மனத்தைக் கிறங்க வைக்கும் பூக்களின் நறுமணம், தன் இணைபிரியாத் தோழன், தென்றல் காற்று, மிரு துவாய் உடலைத்
தழுவிச் செல்வது என இத்தகைய முன்னறிவிப்புகளுடன் தலை நுழைப்பவன்தான் வசந்தன் மன்மதன் என்று காளிதாசன் குமாரசம்பவத்தில் வர்ணிக்கிறான்.

வடமொழி இலக்கியங்களில் கன்னோஜ் ராஜ்ஜியத்தின் மாமன்னன் ஹர்ஷவர்தன ரின் ரத்னாவளி நாடகம் இப்பண்டிகைக் காட்சிகளைக் கொண்டாதாக இருக்கிறது.. கவிதை இயற்றுவதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். ரத்னாவளி, நாகாநந்தா, ப்ரிய தர்சிகா ஆகிய நாடகங்களை இயற்றியவர். நான்கு அங்கங்கள் கொண்ட இந்தக் காதல் நாடகம் “ரத்னாவளி” (ரத்தின நெக்லெஸ்-சிங்கள தேச இளவரசி) க்கும், கௌசாம்பியின் அரசன் வத்ஸராஜன் என்ற உதயணனுக்கும் இடையே அரும்பும் காதலைப் பின்னணியாகக் கொண்டது. ராணி வாஸவதத்தை செய்யும் இடையூ றுகள், விதூஷகனின் நகைச்சுவை, மேதாவினி எனும் பேசும் கிளியின் லூட்டி
என அனைத்தும் நம்மை முறுவலிக்க வைக்கின்றன. கடலிலிருந்து மீட்கப் பட்டவளாதலால் அவள் ‘சாகரிகா’ என்ற பெயரில் ராணி வாஸவதத்தையின்
பணிப்பெண்ணாக இருக்கிறாள்

இந்த நாடகத்தின் முதல் காட்சியே காமன் விழாவிலிருந்துத் தொடங்குகிறது. வசந் தோற்சவப் பண்டிகைக் கொண்டாட்டக் காட்சியை, அரசன் உதயணனுக்கு விதூஷ கன் வசந்தகன் சுவாரசியமாக விவரிக்கிறான்.

“அரசே, அதோ அந்தப் பணிப்பெண் மதுவைச் சுவைத்து விட்டுப் பண்ணும் ரகளை யைப் பாருங்கள்! கொண்டையில் சூடிய மலர்ப்பந்தின் பளுவைத் தாங்க முடியாமல் முடிக் கற்றைகள் அவிழ்ந்துப் பறக்க, நடனமாடும் கால்களின் அதிர்வால் இரண்டு கொலுசுகளும் சுணங்க, நடன அசைவுகளால் வேறு வழியின்றிக் கழுத்திலிருக்கும் ஹாரம் இருமலைக் குன்றுகளுக்கிடையே ஊஞ்சலாடுவதும், உருண்டுத் திரண்டப் பருத்த ஸ்தனங்களால் இடுப்பே முறிந்துவிட்டது போல் குனிந்தவாறே அழகைக் காட்டும் அந்தப் பைங்கிளியுடன் சேர்ந்து காமன் விழா கொண்டாட ஆசை, மன்னா, போகட்டுமா?” என்று ராஜனின் ஆசைத் தீயை வெகுவாகத் தூண்டுகிறான் விதூஷகன் .(பாடல் 1:16)
இதோ, மன்மதனை நாட்டின் பிரஜைகள் வரவேற்கும் விதத்தைப் பார்க்கலாம்…

धारायन्त्रविमुक्तसन्ततपय: पूरप्लुते सर्वत: |
सद्य: सान्द्रविमर्दकर्दमकृतक्रीडे क्षणं प्राङ्गणे ||
उद्दामप्रमदाकपोलनिपतत्सिन्दूररागारुणै: |
सौन्दूरिक्रियते जनेन चरणन्यासै: पुर: कुट्टिमम् || ( 1:11)

தா⁴ராயந்த்ரவிமுக்தஸந்ததபய: பூரப்லுதே ஸர்வத: |
ஸத்³ய: ஸாந்த்³ரவிமர்த³கர்த³மக்ருʼதக்ரீடே³ க்ஷணம்ʼ ப்ராங்க³ணே ||
உத்³தா³மப்ரமதா³கபோலனிபதத்ஸிந்தூ³ரராகா³ருணை: |
ஸௌந்தூ³ரிக்ரியதே ஜனேன சரணன்யாஸை: புர: குட்டிமம் ||

ஸத்³ய: க்ஷணம்ʼ= இந்தக்கணம் (பார்க்கும்போது), தா⁴ராயந்த்ர விமுக்த வஸந்தத: பய:= நீரை வீசும் கருவியிலிருந்து இடைவிடாமல் வீசப்படும் நீர், க்ருʼதக்ரீடே³= அவர்களின் விளையாட்டில், உத்³தா³ம ப்ரமதா³ = அங்குமிங்கும் (தப்பித்து) ஓடும் பெண்களின், கபோல நிபதத் ஸிந்தூ³ர= கன்னத்தில் இருந்து விழும் சிந்துரம், ராகா³ருணை:= சிவந்த பொடிகள், ஜனேன சரணன்யாஸை: =ஆண்களின் பாதச் சுவடுகள், ஸாந்த்³ர விமர்த³ கர்த³ம= மெல்லிய காலடி பதிப்புகளால் சேர்ந்த சேறு, புர: குட்டிமம் =தரை மற்றும் சுற்றுப்புறம், ப்ராங்க³ணே பூர: ப்லுதே ஸர்வத:= கூடும் அங்கணம் எங்கும் நிரம்பி ஸௌந்தூ³ரிக்ரியதே= அழகூட்டுகிறது.

பொருள்:
பீச்சாங்குழல் மூலம் நீரைப் பீய்ச்சியடிக்கும் ஜனங்களிடமிருந்துத் தப்பித்து ஓடும் பெருமைமிகு பெண்களின் பாதச்சுவடுகள் அவர்கள் கன்னங்களில் இருந்து விழும் சிந்துரத் துகள்கள், நீரில் கலந்த வாசனைப் பொருட்கள் இவையெல்லாம் வாச லெங்கும் பரவி வண்ணமயமான சேறாகி விட்டன!

இதனை அடுத்து ராணி வாஸவதத்தை, நன்றாக அலங்கரிக்கப்பட்ட நந்தவனத் திலுள்ள அசோகமரத்தின் கீழ் அனங்கனின் மறுபிறப்பாகக் கருதப்படும் கிருஷ் ணரின் புத்திரன் பிரத்யும்னனின் உருவச் சிலையை வைத்துப் பூஜிக்கிறாள். பிறகு அதே மாதிரி தனது பதி உதயணனை மரத்தின் கீழ் அமரவைத்து, புஷ்பாஞ்சலி செய்து தூப-தீபாராதனைக் காட்டி வணங்க மாறன் பூஜை நிறைவடைகிறது. ஆனால் நகர வீதிகளில் ஆரவாரத்துடன் விழாக் கொண்டாட்டம் தொடர்கிறது.

மேலே பார்த்தது வடநாட்டில் வாழ்ந்த அரசகவியின் மதனோற்சவத்தை விவரிக்கும் கவிதை. அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் தென்னாட்டில் வாழ்ந்த வைணவ சமயப் பெரியவரும், நிகமாந்த மஹாதேசிகன், சர்வதந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப்படும் ஶ்ரீ வேதாந்த தேசிகரின் கவிதை மொழியில் இப்பண்டிகையைக் குறித்துப் பார்ப்போம். வேதாந்த தேசிகர். நூற்றுக்கு மேற்பட்ட தத்துவ, கவிதை, நாடக நூல்கள் பலவற்றை ஒரு சமய குருவாக இருந்து இயற்றியுள்ளார். கவிதை இயற்றுவதில் காளிதாசன், பாரவி போன்ற பெறும் கவிஞர்களுக்குச் சற்றும் குறைந் தவர் அல்ல இவர். பரம அத்வைதியான கிருஷ்ண மிஸ்ரர் ஞான மார்க்கத்தினால் பெறுகிற அத்வைத சாந்த நிலையைப் பற்றி எழுதியுள்ளார். அதில் பல தத்துவங் களை உருவக (ALLEGORY)பாணியில் கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார். ஞானத்தைத் தேடுகிற ராஜன் ‘விவேகன்’ மஹாமோஹன் எனும் ‘மாயை’யை வென்று ஞானத்தை அடைவதாக “பிரபோத (ஞானம்) சந்திரோதயம்” நாடகக் கதை போகிறது. தனது வசிஷ்டாத்வைதக் கொள்கைக்கு ”பிரபோத சந்திரோதயம்” ஒத்து வராது எனக் கருதியவர் அதே பாணியில் “சங்கல்ப சூரியோதயம்” என்ற நாடகத்தை, அதே உருவக கதாபாத்திரங்களுடன் இயற்றியுள்ளார். மனிதனின் குணங்களான ‘த்ருஷ்ணை (ஆசை), குஹனை (வஞ்சம்),அசூயை, ‘டம்பன்’ (தற்புகழ்ச்சி) ஆகியவை இதில் அடங்கும்.
பத்து அங்கங்கள் கொண்ட இந்த மிகப்பெரிய நாடகத்தின் காட்சிகள் நடைபெறும் அரங்கம் ஸ்ரீரங்கம். அங்கே மருத்வ்ருதா நதிக்கரையில் காமன் பண்டிகை நடைபெறு வதாக ஒரு வருணனை, இடம்பெறுகிறது.

மருத்வ்ருதா என்பது காவிரிதான். மருத் என்றால் காற்று.(மலைய மாருதம்) காற் றால் வளர்பவள் என்ற அர்த்தத்தில் காவிரிக்கு சம்ஸ்க்ருதத்தில் இந்தப் பெயர். அக்காலத்தில் சிறிது காற்றடித்தாலும் போதும் காவிரியில் வெள்ளம் வந்து விடும் (!!) என்பதால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சங்கல்ப சூர்யோதய நாடகத்தின் துவக்கத்தில், ‘ஸ்த்ரீகளின் உடலமைப்பை ஒத்த வில், நாண்,அம்பு ஆகியக் கொடியகணைகளால் உள்ளங்களை வெல்ல வல்ல மன்மதனும் ரதியும்’ காமன் பண்டிகை நடைபெறும் இடத்துக்கு வருகிறார்கள். கூடவே வசந்தன் என்ற வசந்தகாலமும் மன்மதனுக்கு நண்பனாக வருகிறான். “நண்ப! நமது மகாமந்திரி மகாமோஹனுக்கே மங்கலம் உண்டாகுமாறும்,ராஜா விவேகனுக்குப் பீதியை விளைவிக்கும் படியும் மன்மத மகோத்சவமாம் உனது திருவிழாவை இப்போதே நான் தொடங்கப் போகிறேன்” எங்கிறான்.
காமன் பண்டிகை அழகிய சொல்லாட்சியுடன் கூடிய கவிதையாக கண்முன் விரிகிறது.

चूडा वेल्लित चारुहल्लक भरव्यालम्बि लोलम्बका:
क्रीडन्त्यत्र हिरण्मयानि दधत: शृङ्गाणि श्रुङ्गारिण: |
तन्वङ्गी करयन्त्र यन्त्रणकला तन्त्रक्षरद् भस्त्रिका
कस्तूरी परिवहमेदुर मिलज्जम्बाल लम्बालका: ||

சூடா³ வேல்லித சாருஹல்லக ப⁴ரவ்யாலம்பி³ லோலம்ப³கா:
க்ரீட³ந்த்யத்ர ஹிரண்மயானி த³த⁴த: ஶ்ருʼங்கா³ணி ஶ்ருங்கா³ரிண: |
தன்வங்கீ³ கரயந்த்ர யந்த்ரணகலா தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா
கஸ்தூரீ பரிவஹமேது³ர மிலஜ்ஜம்பா³ல லம்பா³லகா: ||
பொருள்:
வண்டுகள் சூழும், அழகிய செந்நிறப் பூக்கள் அள்ளி முடிந்த கூந்தலைக் கொண்ட பெண்கள் கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்கள் கலந்த நீரைத் தோற்பைகளில் அள்ளித் தெளித்து, அங்கே பொன்மையமான கொம்புகளில் நீரைத் தாங்கி வீசும் அழகிய இளைஞர்களுடன் விளையாட அவர்களின் தலை முழுவதும் முடிக்கற்றை கள் சேறாகி துவளுகின்றன…

சூடா³ வேல்லித சாருஹல்லக பர= தலையில் கட்டப்பட்ட நல்ல சிவந்த ரோஜா மலர்கள், கூட்டமாகத் தாங்கிய, வ்யாலம்பி³ லோலம்ப³கா= சுற்றி வரக்கூடிய வண்டுகள், ஶ்ருங்கா³ரிண:= அழகிய இளைஞர்கள், அத்ர க்ரீட³ந்தி= அங்கே விளையாடுகிறார்கள், ஹிரண்மயானி ஶ்ருʼங்கா³ணி =பொன்வண்ணமான கொம்பு களை, த³த⁴த:= தாங்குகிறார்கள், தன்வங்கீ³= அழகிய பெண்கள், கரயந்த்ர= கையி லிருக்கும் யந்த்ரணகலா =சிறு தோற்பையைக் கொண்டு அடிக்கிறார்கள், தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா= அதிலிருந்து வெளிவரும், கஸ்தூரீ பரிவஹ மேது³ர மில= கஸ்தூரி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த, ஜம்பா³ல= சேறு போல செறிந்த நீரால், லம்ப அலகா:= கற்றையாய் தொங்கும் குழலை, முடிக்கற்றை உடையவர்கள்.

காவிரிக் கரையில் மதனோற்சவம் நடைபெறுகிறது. அங்கே பெண்கள் கஸ்தூரி, சந்தனம் முதலான வாசனை திரவியங்கள் கலந்த நீரை தோற்பைகளில் அள்ளி, ஆண்கள் மீது வீசுகிறார்கள். ஆண்கள் தங்கள் பங்குக்கு, தங்க மயமான கொம்பு களில் நீரை நிரப்பி பெண்கள் மீது வீசி விளையாடுகிறார்கள், என்று இப்படி காமன் பண்டிகை களை கட்டுகிறது…….

இன்னும் இம்மாதிரியானச் சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்…………

அடுத்து வசந்தவிழாவில் மங்கையருக்கும், மரங்களுக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பைப் பற்றி பார்ப்போம்…….

    ------------------------------------------------------------------------------------------------------ 

TAGS, காம தகனம்-2, மதனோற்சவம் – 2, B.KANNAN

ஹரியோ, ஹரனோ நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது! (Post No10,745)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,745
Date uploaded in London – – 15 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்
ஹரியோ, ஹரனோ யாரானாலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது!

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷிதங்கள் இதோ:

அர்யாநாமர்ஜனே துக்கமர்ஜிதானாம் ச ரக்ஷணே |
ஆயே துக்கம் வ்யயே துக்கம் திகர்தா: கஷ்டசம்ஸ்ரயா: ||

ஒருவன் பணம் சம்பாதிப்பதில் கஷ்டம் அடைகிறான். அதை பாதுகாப்பதிலும் அவன் கஷ்டமடைகிறான். சேர்ப்பதிலும் துக்கம் செலவழிப்பதிலும் துக்கம். சீச்சீ! துன்பத்திற்கு வழி வகுப்பதே பணம்!

One suffers while gaining wealth. One also suffers while protecting it. There is pain in gaining and pain in spending money. Fie on this money which leads to misery!

**

வலிபிமுர்கமாக்ராந்தம் பலிதைரங்கிதம் சிர: |
காத்ராணி ஷிதிலாயந்தே த்ருஷ்ணைகா தருணாயதே ||

முகம் முழுவதும் சுருக்கங்கள். தலை முழுவதும் வெள்ளை நரை! தளர்வடைந்த அங்கங்கள். ஆனால் ஆசை மட்டும் இளமையோடு இருக்கிறது!

The face is covered with wrinkles. The head is marked with white hair. The limbs have slackened. Desire alone is (still) young.
**

ஹரிணாபி ஹரேணாபி ப்ரஹ்மணாபி சுரைரபி |
லலாடலிகிதா ரேகா பரிமார்ஷ்டு ந சக்யதே ||

ஹரியாகட்டும் ஹரனாகட்டும் பிரம்மாவாகட்டும் அல்லது எந்த கடவுளாகட்டும் ஒருவராலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது.

The line (of fate) drawn on the forehead cannot be wiped out even by Lord Vishnu, Sankara, Brahman or any other god.

**
ஸ்வயம் மஹேச: ஸ்வஷுரோ நகேஷ:
சகா தனேஷஸ்தனயோ கணேஷ: |
ததாபி பிக்ஷாடனமேவ சம்போ:
பலியஸீ கேவலமீஸ்வரேச்சா ||

அவரோ சிவன் – மஹேசன். அவரது மாமனாரோ ஹிமயத்திற்கே அதிபதி. அவரது நண்பரோ செல்வத்திற்கு அதிபதி (குபேரன்). அவரது மகனோ கணங்களுக்கு அதிபதி (கணேசன்). என்றபோதிலும் கூட அவர் பிக்ஷைக்காக அலைகிறார். எல்லாவற்றையும் விட இறைவனின் இச்சையே சக்தி வாய்ந்த ஒன்றாகும்.

(Lord Siva is) himself a great God; (his) father-in-law (is) the lord of mountains (Himalaya); (his) friend (is) the lord of wealth and (his) son is the lord of Ganesa (i.e. Ganesa). Even then (Lord Siva) has to wander for begging alms. The will of the almighty alone is more powerful than anything else.

**
சிரஸா தார்யமாணோபி சோம: சௌம்யேன ஷம்புனா |
ததாபி க்ருஷதாம் தத்தே கஷ்ட கலு பராஷ்ரய: ||

சிவபிரானின் தலையில் இருந்த போதிலும் கூட சந்திரன் தேய்கிறது. உண்மையில் அடுத்தவரை நம்பி இருப்பது துயரமானது தான்!
The moon gets emaciated even though she is carried on the head by the gentle lord Siva. Indeed, dependence on others is miserable.
**
(English Translation by Saroja Bhate)