வரலாறு தெரிந்தவன் தமிழன் !!! (Post No.10,734)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,734

Date uploaded in London – –    11 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“பணைகெழு  பெருந்திறற் பல்வேன் மன்னர்

கரைபொரு  திரங்கும் கனையிரு முந்நீர்த்

திரையிடு மணலினும் பலரே  யுரை செல 

மலர்தலை  யுலக  மாண்டு கழிந்தோரே

-234/237 மதுரைக் காஞ்சி

xxx

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்

உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே

–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்

xxxx

தமிழர்களின் வரலாற்று உணர்வு அபாரமானது!! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவனுக்கு எவ்வளவு வரலாறு தெரிந்து இருந்தது என்பதைப் புற நானூற்று வரிகளும் மதுரைக் காஞ்சி வரிகளும் நிரூபிக்கின்றன. திருவள்ளுவர் ஒரு அற்புதமான உவமை மூலம் தனது புள்ளிவிவர இயல் (Statistical Knowledge) அறிவை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளைக்காரன் உளறல் வாயன் . அவனுக்குத் தமிழ் தெரிந்தால் சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருதம் தெரிந்தால் தமிழ் தெரியாது. இதனால்தான் கால்டுவெல் உளறலுக்கு திராவிட ஒப்பிலக்கண நூலை வெளியிட்டோரே, அடிக்குறிப்பில் இவர் சம்ஸ்க்ருதம் பற்றிச் சொன்னது தவறு என்று சேர்க்க வேண்டியதாயிற்று. அதாவது “நான் ஒரு முட்டாளுங்க” (Film Song by Comedian Chandrababu) என்று குன்றின் மீது ஏறி கால்டுவெல் அறிவிக்கிறார்.

இந்துக்களுக்கு கொஞ்சமும் வரலாற்று உணர்வே (Historical Sense)  இல்லை; நல்லவேளை காஷ்மீரி பிராஹ்மணன் கல்ஹணன் என்பவன் வரலாற்று உணர்வோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ தரங்கணி (Raja Tarangini by Kalhana) நூலை எழுதினான் என்று  வெள்ளைக்காரர்கள்  செப்பினார்கள். அதிலும் அவர் எழுதிய ராஜதரங்கிணியில் (ராஜ வம்ச நதி River of Kings ) முதல் நாலு அத்தியாயங்கள் வரலாறு  இல்லை என்று உளறினார்கள் . அவர்களுக்குப் புரியாத, தெரியாத எல்லாம் தப்பு!

அது  மட்டுமல்ல; சிந்து சமவெளியில் மன்னர் இல்லை, புத்தருக்கு முன்னர் மன்னர் இல்லை என்றெல்லாம் எழுதிக்குவித்தனர். அனால் புராணத்தில் 150-க்கும் மேலான மன்னர் பெயர்கள் (ஒரே வம்சத்தில் மட்டும் ) உள்ளதை பட்டியல் போட்டுள்ளனர். அதைக்கேட்டு வியந்த ரோமானிய , கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, அரியன்( Pliny , Arrian) ஆகியோர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதுகையில் “இவர்கள் 6000 ஆண்டு வரலாறைச் சொல்கிறார்கள்; அதற்குச் சான்றாக 153 மன்னர் பட்டியலையும் சொல்கிறார்கள்” என்று எழுதிவைத்துள்ளனர்.

புராண மன்னர் பட்டியலை இதுவரை எந்த வரலாற்று Syllabus சிலபஸிலும் சேர்க்கவில்லை! ஆனால் புராணம் உலக விந்தைகளில் உண்டு. உலகெங்கிலும் எல்லா கலாசாரங்களிலும் புராணம் உண்டு என்றாலும் இந்து மத புராணங்கள், அதற்கான இலக்கண வரம்புக்குள், எழுதப்பட்டுள்ளன. அதை பஞ்ச லக்ஷணம் என்பர். அந்த 5 அம்சங்களில் ஒன்று பூகோளம்/புவி இயல் இரண்டாவது வரலாறு /வம்சாவளி. உலகில் இப்படி 5 அம்சங்களுடன் எழுதப்பட்ட புராணம் வேறு எந்த பண்பாட்டிலும் இல்லை .

தமயந்தி, திரவுபதி, இந்துமதி ஸ்வயம்வரம் நிகழ்ச்சிகளுக்கு 56 தேச மன்னர்கள் வந்தார்கள் என்று படிக்கிறோம். காளிதாசன் தனது ரகு வம்சத்தில் பாண்டிய மன்னரும் இந்துமதி  ஸ்வயம்வரம் நிகழ்ச்சிக்கு வந்தார் என்று 4, 5 பாடல்களில் வருணிக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே , தமிழனையும் ,அகஸ்தியனையும் தொடர்புபடுத்தும் பாடல்கள் அவை.!

பிரதம மந்திரி பதவிவகித்த திருமதி இந்திராகாந்தி 1971-ம் ஆண்டில்  ஒருநாள் இரவில் திடீரென்று ஒரு அவசர சட்டம் அறிவித்தார். இந்தியாவிலுள்ள 560 மன்னர் சமஸ்தானங்களுக்கும் இனி ராஜ மான்யம் (Privy purse) கிடையாது என்றார். அதாவது வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுப் போகும்போது இந்தியாவில் 560 ராஜாக்கள்!! அவர்களுக்கு அவன் போட்ட ரொட்டித்துண்டு  ராஜ மான்யம் (Privy purse) .56 அல்லது 560-ஐ 153ஆல் பெருக்குங்கள். அதுதான் 2000 ஆண்டுளுக்கு முன்னர் உள்ள பட்டியல்!

இது எல்லாம் தமிழர்களுக்குத் தெரியும்! எப்போது?? 2000 ஆண்டுகளுக்கு முன்னரே!! பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் போற்றி மாங்குடி மருதனார் பாடியது ‘மதுரைக் காஞ்சி என்னும் நூல். 18 சங்க இலக்கிய நூல்களில் மிகவும் அதிகமான அடிகளைக் கொண்ட நூல். அதில் இதுவரை இருந்த மன்னர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகையில்

பணைகெழு  பெருந்திறற் பல்வேன் மன்னர்

கரைபொரு  திரங்கும் கனையிரு முந்நீர்த்

திரையிடு மணலினும் பலரே  யுரை செல 

மலர்தலை  யுலக  மாண்டு கழிந்தோரே

-234/237 மதுரைக் காஞ்சி

பொருள்

அகன்ற இடம் பொருந்திய இந்த உலகத்தை ஆண்டு மாண்டுபோன மன்னர்களின் எண்ணிக்கை, கரையை மோதி முழங்கும் கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலைவிடப் பலர் ஆவர்

சுருங்கச் சொன்னால் மன்னர் எண்ணிக்கை, கடல் மணல் துகள் எண்ணிக்கையை வீட அதிகம்! எப்போது நெடுஞ்செழியன் ஆண்ட காலத்திலேயே !

இதற்கும் முன்னர் புறநானூற்றில் பல பழம்பாடல் என்று அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாடல்களிலும் இந்த வரிகள் உள்ளன!

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்

உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே

–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர் பாடிய பாடல் இது

கரிய கடலால் சூழப்பட்ட இப்பெரிய இடத்தையுடைய மண்ணுலகத்தை– வேல மரத்தின் இலை அளவு இடமும் மற்றவர்க்கு விடாதபடி— தாமே ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை கடல் அலைகள் ஒதுக்கும் மணலை விடப் பலர் ஆகும்.

இதோ இன்னும் ஒரு பாடல்:-

சேற்றுவளர் தாமரை பயந்தஒண்கேழ்

நூற்றிதழ் அலரின் நி ரை கண்டன்ன

வேற்றுமை இல்லாத  விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந்தோரை எண்ணுங்காலை

–புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்

நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!

 நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்

எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்

மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்

பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ

–பாடல் 3010

பொருள்:-

பல யுகங்கள் இவ்வுலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போன அரசர்கள் மிகப்பலர். நினைக்கப்புகுந்தால் கடல் மணல்திட்டிலே உள்ள நுண்மையான மணலைக் காட்டிலும் அவர்கள் பலர் ஆவர். அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாமல் அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றையும் பார்த்தோம் இல்லை. ஆதலால் பனைமரம் போன்ற பெரிய கால்களை உடைய மதயானையைக் கொன்ற கண்ணபிரானது திருவடிகளை வணங்குங்கள்.

xxxx

வள்ளுவன் வாய்மொழி

வள்ளுவன்  திருக்குறளில் வரும் அருமையான உவமையையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தம் ஆகும் .

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:-22)

பொருள்-

பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

வள்ளுவன் பெரிய புள்ளிவிவர (Statistician)  இயல் நிபுணன்; ஆகையால் அவனுக்கு ‘டக்’ என்று மனதில் பட்டது இந்த உவமை. Super Fast Computers சூப்பர் பாஸ்ட் கம்பியூட்டர்களைக் கொண்டும் கூட 10,000 ஆண்டுகளில் இறந்து போன ஆட்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. அது போலத்தான் ஆதி சங்கரர், ரமண மகரிஷி , ராம கிருஷ்ண பரம ஹம்சர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோரின் பெருமையை எடுத்துக்கூற முனைவது அல்லது முயல்வது ஆகும்.

அதாவது எண்ணிக்கை என்பதற்கு மணல் துகளையும், இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிடுவது அவர்களது ஆழ்ந்த ஞானத்தைக் காட்டுகிறது

—-SUBHAM—

tags- வரலாறு, தமிழன் , கடல், மணல் துகள் ,எண்ணிக்கை இருங்கடல்

வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 1 (Post No.10,733)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,733
Date uploaded in London – – 11 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை
வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 1
ச.நாகராஜன்

சித்திர கவியில் வினா – உத்தரம் என்பது ஒரு வகை.
பாடலிலேயே வினாவும் அதற்கான பதிலும் – அதாவது உத்தரமும் – அமைந்திருப்பதால் இது வினா-உத்தரம் என்று அழைக்கப்படுகிறது.
இராமச்சந்திரக் கவிராயர் சித்திர கவி பாடுவதில் வல்லவர்.
அவர் திருவேங்கடநாதன் என்ற பிரபுவின் மீது பாடிய ஒரு பாடல் இது.

இரவல னேயுனக் கில்லாத தென்ன விதயமென்ன
பரவுண வேது சுவையற்ற தென்னசொற் பான்மையென்ன
தரவுரை செய்திட வென்றா னதற்கொன்றுஞ் சாற்றிலன் யான்
வரதிரு வேங்கட னாதாவென் றேன்பொன் வழங்கினனே

இந்தப் பாடலைச் சொன்னவுடன் திருவேங்கடநாதன் என்ற அந்த பிரபு பொன்னை வழங்கினார்.
அப்படி என்ன இருக்கிறது பாடலில்? பார்ப்போம்.

பொருள்:
இரவலனே – யாசகனே
உனக்கு இல்லாதது என்ன – உனக்கு இல்லாதது என்ன
இதயம் என்ன – உனது மனம் எத்தகையது
பர உணவு ஏது = மேன்மையாகிய உணவுக்கு ஆகாரம் ஏது?
சுவையற்றது என்ன – உணவுக்குச் சுவையற்ற உறுப்பு யாது?
சொல் பான்மை என்ன – நீ சொல்வதற்குரிய தன்மை யாது?
தர – நான் கொடுக்கும்படி
உரை செய்திட – சொல்லக் கூடியவை
என்றான் – எவை என்று வினவினான்
அதற்கு – அந்தக் கேள்விக்கு
யான் ஒன்றும் சாற்றிலன் – நான் ஒன்றுமே பதில் சொல்லவில்லை (என்றாலும் கூட)
வர திருவேங்கடநாதா – வர திருவேங்கடநாதா என்று மட்டும் சொன்னேன்
பொன் வழங்கினனே – நான் சொல்லிய அதன் பொருளை உணர்ந்து எனக்குப் பொன் வழங்கினானே

இந்தப் பாடலில் வினாவும் உத்தரமும் அடங்கியுள்ள விதத்தைப் பார்ப்போம்.

வினா உத்தரம்

உனக்கு இல்லாதது என்ன – திரு (செல்வம்)
இதயமென்ன – வேம் (புழுங்கும்)
உணவேது – கடன் (கடன் பட்ட பொருளினால் வாங்கிய உணவுப் பொருள்)
சுவையற்றதென்ன – நா (நாக்கு)
சொற்பான்மை என்ன – தா (கொடு)

பணம் இல்லாமல் புழுங்குகிறேன். கடன் பட்டு வாங்கிய பொருளையே உண்ணுகிறேன். சுவையற்ற நாக்கு உள்ளது. எனது சொல் ஒன்றே ஒன்று தான் – கொடு!

அவ்வளவு தான்! பொருளை உணர்ந்த திருவேங்கடநாதன் பொன்னை இராமச்சந்திரகவிராயருக்குத் தந்தார்.
தமிழுக்கு அழகிய இந்த வினா- உத்தரம் என்ற வகையிலான சித்திரக் கவி கிடைத்தது.


tags – இராமச்சந்திரக் கவிராயர் ,சித்திர கவி,திருவேங்கடநாதன்

ANCIENT TAMILS’ AMAZING HISTORICAL SENSE ! (Post No.10,732)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,732

Date uploaded in London – –    10 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Half baked foreign idiots wrote that Hindus have no historical sense and the Kashmiri Brahmin Kalhana was the first one to write proper history in his book Raja Tarangini (River of Kings). But strangely the same idiots rejected the first four chapters of his 1000 year old book because they could not understand it.

These people were so ignorant to reject all the Puranic King lists. Not only all the Puranas (Hindu Mythology) listed the kings in the Solar and Lunar dynasty, but also included a chapter on Geography. The Pancha Lakshana, i.e. five criteria of a Purana is that it should have chapters including one on history and one on geography. You cant see such an organised approach in Egyptian, Sumerian, Mayan, Persian, Chinese, Greek or Roman history.

Tamil Hindus followed their northern counterparts and wrote as much history as possible. The compilers of Tamil Sangam literature mentioned all the names of kings in the colophon or introduction of poems. Tamil Sangam poet Paranar listed at least eighty historical anecdotes in his poems. I would consider him the first Tamil historian. Then Saivite saint Appar , contemporary of Mahendra Pallavan (around 600 CE), listed historical and geographical details. He was the one who listed an important anecdote of Brahmin poet Tharumi’s clash with another Brahmin poet Nakkirar of Sangam age. Appar alias Tiru Navukkarasar mentioned the Manikkavasagar’s Nari- Pari  (Fox changing to Horses) episode as well.

Tamil Epic Silapadikaram mentioned the Gajabhau’s attendance in the consecration ceremony of Kannaki statue and because of it we were able to fix the date of Kannaki and Kovalan as second century CE.

No foreigner studied Tamil literature in a historical angle. I would like to point out three things found in Purananuru , Maduraik Kanchi and Tirukkural. Foreigners’ lack of knowledge in Tamil literature also led them to bluff through their writings.

xxxx

PURANANAURU VERSE 363

A poet by name Aiyathi Siruventheraiyar (translated into Sanskrit it would be Junior white Manduka Maharishi) sings,

“ The earth which is wearing the long and big seas as saris has seen more rulers than the sand particles on the shore…………”

Here we see even a poet who existed 2000 years ago knew the number of kings who ruled that place are innumerable.

PURANANAURU VERSE 358

Puram 358 composed by poet Vaanmiki in Tamil says

“This earth surrounded by atmosphere and round sun  passed between (the hands) seven kings on one single day!”

He knew seven people fought for one country. I knew a chaotic period in Egypt where in scores of kings fought for the land. But we did not know that seven people’s fighting for a country. Probably it happened in pre historic times. Mahabharata and other scriptures mentioned innumerable kings who are not in the dynastic lists.

MADURAIK KANCHI LINES 236-238

Sangam Poet Mankudi Marudanar also said that the number of kings who ruled the world are more than the number of sands in the sea (sea shore).

The poet was able to say this because they knew the number of kingdoms were at least 56 in the Puranic days. Even When Buddha lived, there were 16 mighty empires according to Buddhist and Sanskrit scriptures (16 Maha janapadas). Greek and Roman writers wrote that Hindus claim 6000 year old history showing 154 kings (in one dynasty alone). This was reported 2000 years ago! 154 kings multiplied by 56 kingdoms would give us a big list. Under them there were several princes paying tributes. When the British were ruling India it had over 560 kingdoms (princely states). Prime Minister Indira Gandhi abolished their privy purses at one stroke in 1971. This will give us some idea about the number of kings in 560 places. ( Alvar’s Tiru vaai mozi also has this simile)

Look at the number of Kings who joined the Mahabharata War.

Swayamvarams of Draupadi , Indumati and Damyanti were attended by all the kings of India! Kalidasa gave us a complete list including the Pandyas.

TIRUKKURAL COUPLET 22

Tiru Valluvar says in his book Tiruk Kural

“To attempt to estimate the greatness of ascetics is as absurd as to seek the (number of ) dead in the world”.

Another translation of the same couplet 22

“To tell their greatness who have left their all

Is just like counting up the whole world’s dead”.

What a beautiful simile!  You can’t count the number of dead. Even with the superfast computers you can’t tell precisely the number of people dead on earth in the past 10000 years. This simile itself shows how clearly, they (Hindus) saw the world. So comparing and saying ‘the number kings who ruled India were more than the number of sands particles on the sea shore!’ is amazing.

Remember Hindus were the one who counted the number of species on earth as ‘84 Lakhs Yoni Bedhas ‘ corresponding to modern estimate of 8-4 million different species of flora and fauna on earth! We are that accurate!!!!

–subham—

TAGS–Historical sense Tamils, Hindus, Maduraikanchi, Purananuru, Sand particles, numerous

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -47; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post No.10,731)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,731

Date uploaded in London – –    10 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் 47; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்

 ப்ரமுகே 2-6  முன், எதிரே

 ப்ரமுச்யதே 5-3  விடுபடுகின்றான்

 ப்ரய ச்யதி  9-26  அர்ப்பிக்கின்றானோ

 ப்ரயதாத்மனஹ  9-26  தூய்மையான அந்தக்கரணம் உடைய அவனது

ப்ரயத்நாத் 6-45  விடா முயற்சியுடன்

ப்ரயாணகாலே 7-30  மரண காலத்தில்

ப்ரயாதா  8-23  பயணப்பட்ட

ப்ரயாதி 8-5  செல்லுகிறானோ

ப்ரயுக்தஹ 3-36  ஏவப்பட்டு

ப்ரயுஜ்யதே 17-26 உபயோகிக்கப்படுகிறது  10 WORDS

ப்ரலபன் 5-9   பேசினாலும்

ப்ரலயம் 14-14   மரணம்

ப்ரலயாந்தாம்  16-11  மரணத்துடன் முடிவடையும்

ப்ரலயே 14-2  பிரளயம்

ப்ரலீனஹ 14-15 மரணம் அடைந்து

ப்ரலீயதே 8-19  ஒடுங்கி மறைகின்றது

ப்ரலீயந் தே 8-18  ஒடுங்குகின்றன 

ப்ரவக்ஷ்யாமி  4-16   எடுத்துரைக்கிறேன்

ப்ரவக்ஷ்யே  8-11  கூறுகிறேன்

ப்ரவததாம் 10-32  வாதம் செய்வோரிடம்  20 WORDS

ப்ரவதந்தி 2-42  இனிதாகப் பேசுவார்கள்

ப்ரவர்த்ததே 5-14   இயக்குவிக்கின்றது

ப்ரவர்த்திதம் 3-16  சுழன்றுவரும்

ப்ரவி பக்தம் 11-13  வகுக்கப்பட்ட

ப்ரவி பக்தானி  18-41 வகுக்கப்பட்டுள்ளன

ப்ரவிலீயதே  4-23  கரைந்துபோகிறது

ப்ரவிசந்தி  2-70  அடைகின்றனவோ

ப்ரவ் ருத்தஹ 11-32  பெரு வல்லமை உடைய

ப்ரவ் ருத்திம் 11-31  செய்கையை

ப்ரவ்ருத்திஹி  14-12   இந்திரியங்களின் சேஷ்டை   30 WORDS

ப்ரவ் ருத்தே  1-20  தருணம் வந்ததும்

ப்ரவ் ருத்தே 14-14  மேலோங்கி இருக்குமோ

ப்ரவேஷ்டும்  11-54 அடைவதற்கும்

ப்ரவ் யதிதம்  11-20  பயத்தால் நடுங்குகிறது

ப்ரவ்யதித அந்தராத்மா 11-24  மனம் நடுங்கிய

ப்ரசஸ்தே  17-26 சுப, நல்ல

ப்ரசாந்த மனஸம்  6-27  சாந்தியில் நிலைத்த மனத்தினனும்

ப்ரசாந்தஸ்ய  6-7 அமைதியான உள்ளம் உடையவனுக்கு

ப்ரசாந்தாத்மா 6-14 – அலையாத மனத்தனாய்        39 WORDS

ப்ரசக்தாஹா 16-16 ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு

ப்ரசங்கேன 18-34  ஆழ்ந்த பற்றினால்

ப்ரசன்னசேதஸஹ  2-65  தெளிந்த மனம் உடையவனுமக்கு

ப்ரசன்னேன 11-47  அன்புடன் கூடிய

ப்ரசபம் 2-60   பலாத்காரமாய்

ப்ரசவிஸ்யத்வம் 3-10  வளர்ச்சி அடையுங்கள்

ப்ரஸாதயே 11-44   இறைஞ்சுகின்றேன்

ப்ரஸாதம் 2-64  உள்ளத்  தெளிவை

ப்ரஸித்யேத்  3-8  முடியும்

ப்ரஸீத 11-31 அருள்புரிவாய்             50 words

ப்ரஸ்ருதா:  15-2 அடர்ந்து இருக்கின்றன

ப்ரவ் ருதாஹா   15-2 செழித்து

ப்ரஹஸன் 2-10  புன்முறுவல் பூத்தவண்ணம்

ப்ரஹாஷ்யஸி 2-39  அறுத்துவிடுவாய்

ப்ரஹ்ருஷ்யதி  11-36 களிக்கின்றது

ப்ரஹர்ஷ்யேத் 5-20  மகிழ்ச்சியால் கிளர்ச்சி அடைதல்

ப்ரஹலாத 10-30 ஹிரண்யகசிபுவின் மகன்; விஷ்ணு பக்தன்

To  be continued……………………………….

Tags- Gita word index 47, Tamil Gita 47

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 3 (Post No.10,730)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,730
Date uploaded in London – – 10 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 3
ச.நாகராஜன்

நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் புனைவது என்பது ஒரு கடினமான விஷயம்.

காளமேகப் புலவர் சித்திர கவி பாடுவதில் வல்லவர்.
அவர் புனைந்த ஒரு நடுவெழுத்து அலங்காரப் பாடல் இது:-

இது எண்சீர்க்கழி நெடிலடி விருத்தம் என்ற யாப்பு வகையில் அமைந்த ஒரு பாடலாகும்.

திருமால் வாகன நாவா யிராசியொன்று
கிளைதெவிட்டார் மாதுலன்கோ கிலமெவ் வேழின்
உருவாமே றெழுத்துநடு வெனக்குச் செய்தான்
உடனான பதினான்குந் தானே கொண்டான்
ஒருபாகத் திருத்தினான் றலையி லேற்றான்
ஒருமதலை தனக்களித்தா னுண்டான் பூண்டான்
பரிவாயொண் காத்தமைத்தா னுகந்தா னிந்தப்
பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன் றானே

அருமையான இந்தப் பாடல் தில்லையில் கூத்தாடும் சிவபிரானைப் பற்றிய ஒரு பாடல்.

பாடலின் பொருள் இது:
இந்தப் பைம்பொழிழ் தில்லையுள் ஆடும் பரமன் – பசுமையான சோலை சூழ்ந்த இந்தத் தில்லையில் (சிதம்பரத்தில்) நடனம் புரிகின்ற மேலோனாகிய சிவபிரான்
திருமால் வாகனம் – கருடன் (நாகாரி)
நாவாய் – தெப்பம் (கலம்)
இராசி ஒன்று – கன்னி
கிளை – கவடு
தெவிட்டார் – ஆரார்
மாதுலன் – மாமன்
கோகிலம் – பல்லி
இவ்வேழின் – இந்த ஏழு சொற்களில் உள்ள
உரு ஆம் ஏழ் எழுத்து நடு – வரி வடிவாம் நடு எழுத்து ஏழு எழுத்தாலும் ஆகியதை
எனக்குச் செய்தான் – (காலன் வராமல் – என்பதை எனக்குச் செய்தான்
உடனான பதிநான்கும் தானே கொண்டான் – கூட இருந்த பதினான்கையும் தானே கொண்டு
ஒரு பாகத்துக்கு இருத்தினான் – (முறையே) நீரை நாரியை ஒரு பங்கில் வைத்துக் கொண்டான்
தலையில் ஏற்றான் – சிரத்தில் ஏற்றுக் கொண்டான்
ஒரு மதலை தனக்கு அளித்தான் – (கனி மாங்கனியை) ஒரு புதல்வனுக்குத் தந்தான்
கடு – விஷத்தை உண்டான்
ஆர் – அத்தி மாலையை பூண்டான்
பரிவாய் – அன்போடு
ஒள் கரத்து அமைத்தான் மானை – (பலி பிச்சையை_ அழகாகிய கையில் அமைத்துக் கொண்டான்
உகந்தான் – சினை தெவிட்டார் என்றும் பட்டம் உண்டு – சினை கவடு விரும்பினான்.

நா(கா)ரி, க(ல)ம், க(ன்)னி, க(வ)டு, ஆ(ரா)ர், மா(ம)ன், ப(ல்)லி, நடுவில் உள்ள ஏழு எழுத்துக்களை இப்போது எடுத்துப் பார்த்தால் வரும் சொற்கள் – காலன் வராமல் என்பதாகும்.
காலன் வராமல் என்பதை எனக்குச் செய்தான் என்று பொருள் அமைகிறது.

இந்தச் செய்யுளில் பாடபேதங்களும் உண்டு.
ஒரு பாகத்திருத்தினான் கையிலேற்றான் என்று சிலர் கூறுவர்.
பாகம் – இதில் வரும் கம் என்பதை கபாலம் என்று பொருள் கொள்வர்.
ஆனால் பின்னால் கரத்து அமைத்தான் என்று வருவதால் இதை மேலே பாடலில் வருவதன்படியே
ஒரு பாகத்திருத்தினான், தலையிலேற்றான் என்பதே சிறப்புடையதாகும்.

இனி நடு எழுத்துக்களை நீக்கி விட்டு வரும் சொற்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
அவை தான் கூட இருந்த பதினான்கு ஆகும். அவற்றைத் தானே கொண்டான் என்கிறார் புலவர்.
அவையாவன :-
நாரி, கம், கனி, கடு, ஆர், மான், பலி ஆகிய ஏழு சொற்களைக் காணலாம்.

அதாவது பெண்ணை பாகத்தில் இருத்தினான்,
நீரைத் தலையில் ஏற்றான்,
கனியைப் புதல்வனுக்குத் தந்தான்,
விஷத்தை உண்டான்,
ஆத்தி மாலையை அணிந்தான்,
மானைக் கையில் அமைத்தான்,
பலியை விரும்பினான்
என்ற பொருள் அமைவதைக் காணலாம்.
இப்படி ஏழு வரலாறுகளைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நடுவெழுத்தலங்காரப் பாடல்!

கனி கொடுத்த செய்தி விநாயகரையும், முருகனையும் பற்றிய வரலாறாகும். நாம் அறிந்த
ஒன்று தான் அது. பழநி மலை வரலாறை மறக்க முடியுமா என்ன?

தமிழ் மொழியின் சிறப்பு என்ன என்று கேட்டால் இது போன்ற பாடல்களைச் சொன்னால் கேட்பவர்கள் தமிழ் என்னும் விந்தையைப் பற்றி அறிந்து மகிழ்வர்!


TAGS-  காளமேகப் புலவர், சித்திர கவி, 

STRANGE INFORMATION ABOUT SEVEN SUNS IN VEDIC LITERATURE (Post No.10,729)

picture of Switzeland Stamp with Karunanidhi like figure

#WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,729

Date uploaded in London – –    9 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

STRANGE INFORMATION ABOUT SEVEN SUNS IN VEDIC LITERATURE

Hindu Puranas (mythology) and 2000 year old Sangam Tamil literature described the Lunar and Solar Eclipses as Snake Dragons Rahu/Ketu devouring Moon and Sun. This story was used to explain the evil effects of eclipses on one’s health; but the Tamil astrologers were equally proficient in calculating and predicting the date and time of eclipses on scientific basis. The story was visibly correct because various stages of eclipse showed either devoured or spat out by the snake. Now we know the shadows of moon or earth cause the eclipses.

But in Vedic days they did not use this Snake story. They described it as a miracle and attributed it to Atri, one of the Seven Rishis worshipped by Hindus every day. Tamil Brahmins have been reciting Seven Rishis thrice a day in their Sandhyavandana ritual. That ritual is well documented in the ancient Tamil book Purananuru (verse 34 by Alathur Kilzar). Tamil Hindus repeat the 7 names in the same order that is found in 2700 year old Ashtadhyayi of Panini. Atri is the first seer in the list of seven.

Tamil Hindus recite everyday ATRI, BRHU, KUTSA, VASISTHA, GAUTAMA, KASHYAPA, ANGIRASA as seven seers.

From Vedic praise of Atri , one can easily surmise that he was the first one to calculate the date, time and duration of eclipses. Total Solar eclipses don’t last for more than 7 minutes; most of them take less than 7 minutes. In one Rig Vedic hymn he was praised as one who brought the sun back by reciting a few mantras. Now we know he calculated precisely the duration of that Solar eclipse and stunned his disciple. When he stopped reciting, the sun was out (from the shadow)

Moon is also linked with Atri’s name; Atri was said to be the father of moon. Now we know why? He calculated the movement of moon precisely, the shadow of which causes the Solar eclipse on earth. Moreover he could have calculated Lunar (moon) eclipse as well.

But for some reason another Risi Kasypa is also associated with Sun . Angiras is also associated with the Sun . Probably they were also astronomers like Atri. We know that Kasyapa married Diti and Aditi. Through Aditi, we got Adityas and devas and through Diti , the Danavas and other inferior races. Aditi is praised as the Mother of Gods in the Rig Veda, the oldest book in the world.

There is some strange information about SEVEN SUNS.

We understood Viswa Rupa Darshan in the Bhagavad Gita better after the seeing the Atom Bomb explosion and after reading about the Black Hole. Even Robert Oppenheimer quoted the Divi Surya Sahasrasya (brightness of 1000 suns). So we may understand what they say about 7 suns later when it is scientifically explained.

In the Rigveda, Angirasas Rishis are said to have discovered the day and let the sun climb to heaven (RV. 1-62-5; 1-71-2; 10-62-3

“The demon Swarbhanu struck the sun with darkness; Indra destroyed him and, Atri found the hidden sun- Atri placed the eye of the sun in the sky” (RV.5-40-6)

Both these give us very clear idea. Atri was the first astronomer to calculate the length of day and night and he was the one who calculated the speed of all objects in the Solar system.

The same message is found in different descriptions in AV.13-2-4 and four Brahmana books.

This story is slowly developed in the epics and Puranas. They say Atri is Sun and Moon. Some say he himself ascended to heaven and became Sun and Moon.

Following passage in the Mahabharata is interesting: –

“Svarbhanu pierced the sun and the moon with arrows, whereupon the gods were engulfed in darkness and began to be struck down by the demons. They caught sight of Atri doing Tapas in the wood, and asked him to help them; Atri asked how he could protect them and they replied, “Become for us the moon, the destroyer of darkness, and sun, the destroyer of demons”. Thereupon Atri created light through his tapas (Penance) and made the worlds bright and without darkness; he overcame hosts of gods’ enemies through his own tejas (fire) and the gods saw that the demons were being burnt by Atri.”-Mahabharat 13-141-1 to 13

It is interesting to note that Rishis are described as ‘Bh utakrtah’ in the Rig Veda and the Atharva Veda, meaning they create the worlds.

‘Demon’ has many meanings and we have to decidethe meaning only from its context. Catastrophic natural forces, disease causing germs and unknown phenomena are all described as demons.

xxxx

Kashyapa and Seven Suns

Kashyapa was the son of Marichi and he married Aditi and Diti. Kasyapa means tortoise. It may be his clan’s totem symbol. Kausika means owl and Bharadwaja means crow. All the ancient people have some symbols or flags. Later in the epics we see them as Flags (Arjuna had monkey flag, Durydhana had Snake flag; Bharata had Kovidhara tree and Ravana had Veena in flags). In Puranas they become Vahanas. For instance in Tamil Sangam literature both flags and Vahanas are mentioned. Now all South Indian Temple Gods are taken in Vahanas during festival days.

We have a passage in Atharva Veda about Kashyapa:

“That which is radiant (candram, also means moon) in you, O Kashyapa, and possessed of brilliance; that which is placed together and eminent, O one of bright light (citrabanu, also means sun); that in which the seven suns are set together (AV 13-3-10)”

This somewhat enigmatic passage is expounded in another work:

“Aaroga, Bhraaja, Patara, Patanga, Svarnaro, Jyotisiimat and Vibhaasa; all of these radiate heat in the sky for this world. It is said that they do not withdraw and they yield strength. Kasyapa is the eighth; he doe not depart from Mount Meru. There is this verse about them: ‘That which is skilful in you, O Kasyapa; possessed of brilliance, possessed of strength and eminent, O Citrabhanu; that in which the seven suns are set together, by that he may obtain kingship; all of those seven suns receive light for this world from Kahyapa. The seven pranas are in the head; the Acharyas say they are suns- Taittiriya Aranyaka

This may be something about Yoga and Dhyana(meditation) or some unknown astronomical matter.

In later Puranas, it is said that at the end of each Kalpa , Seven Suns burn the world to ashes.

Hope they are not Nuclear Bombs!!!

Source Book –Traditions of The Seven Rsis, John Mitchiner, 1982

This article has my inputs and comments.

–subham–

Tags- Seven Suns, Vedas, Kashyapa, Atri, Solar eclipse, Moon, Sapta Rishi

இந்திய ரிஷி கிரீஸில் கரடி ஆன கதை!- Part 2 (Post No.10,728)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,728

Date uploaded in London – –    9 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part  1 was posted here yesterday

பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சுமார் 50 சொற்களை நான்  கட்டுரைகளில் காட்டியுள்ளேன் . ஈரானில் ஒரு கோடியில் பேசப்பட்டு அழிந்து போன அவஸ்தன் மொழியில் 1 முதல் 100 வரை அப்படியே ஸம்ஸ்க்ருத எண்கள் இருப்பதைக் காட்டினேன். துருக்கியின் பொகஸ்கொய் நகரிலிருந்து இந்தோனீஷியாவின் அதிபயங்கர போர்னியோ தீவின் காட்டுக்குள்ளும், வியட்நாமிலும் உள்ள மூலவர்மன், ஸ்ரீமாறன் கல்வெட்டுகளையும் காட்டினேன். அதாவது கி.மு 1400 முதல் கி.பி இரண்டாம்  நூற்றாண்டுக்குள்ளேயே சம்ஸ்க்ருதம் ஈரான் முதல் வியட்நாம்- இந்தோனேஷியவரை காணப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக எகிப்தில் கி.மு 1500 முதல் வேத கால குதிரை திடீரென்று காட்சி தருகிறது. தசரதன் கடிதங்கள் அங்கே உள்ளன (ராமாயண தசரதன் அல்ல. துருக்கியை ஆண்ட தசரதன்) உலகெங்கும் காணப்படும் தமிழ்ச் சொற்களும் ஸம்ஸ்க்ருதச் சொற்களும் வெள்ளைக்காரன் சொன்ன பொய்களை பானையை தடிக்கம்பால் அடித்து நொறுக்குவது போல ( இது அதர்வண வேதத்தில் அடிக்கடி வரும் உவமை) தூள் தூள் ஆக்கிவிட்டது.

நிற்க, சப்ஜெக்டு subject க்கு வருவோம். கட்டுரையின் தலைப்பை விவாதிப்போம் . ரிக் வேதத்தில் பத்து புஸ்தகங்கள் / மண்டலங்கள் உண்டு .அதில் முதல் மண்டலத்தில் ‘ரிக் ஷ’ என்ற சொல் வருகிறது. இதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘கரடி’ என்று அர்த்தம். ஆனால் பின்னர் இதே சொல்லை நட்சத்திரம் என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஸப்த (7) ரிஷி நட்சத்திரக் கூட்டத்துக்குப் பயன்படுத்தினர். அந்த இடம் சதபத பிராஹ்மணம் என்னும் நூலில் வருகிறது அதற்கு உரை எழுதிய சாயனர் அங்கே ‘ரிக் ஷ’  என்று சொன்னது ரிஷிகள் என்று பொருள்படும் என்று எழுதியுள்ளார். சாயனர் நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் வேதங்களோ பல அல்லது சில ஆயிரம் ஆண்டு பழமையானவை.

சாயனர் எழுதியதை இந்து மத சந்யாசிகள்- குறிப்பாக சங்கராச்சார்ய மடங்கள் பெரிதும் புகழவும் மாட்டார்கள்; பின்பற்றவும் மாட்டார்கள்; ஏனெனில் வேதத்துக்கு அர்த்தம்  பார்க்காமல் நம்பிக்கையுடன் ஓதினால் போதும்; பலன்தரும் என்பது அவர்கள் வாதம். நல்ல வேளை இப்படிச் செய்ததால்தான் உலக அதிசயம் என்று எல்லோரும் அறிவிக்கும் ரிக் வேதம் நமக்கு எழுத்துப் பிசகாமல் வாய்மொழி மூலமாகவே கிடைத்தது.

சதபத பிராஹ்மண நூலுக்கும் யாஸ்கர் எழுதிய சொற்பிறப்பியல் நூலுக்கும் (நிருக்தம்) வெள்ளைக்காரன் குத்திய முத்திரை கி.மு எட்டாம் நூற்றாண்டு. அப்போதே யாஸ்கருக்கே 600 வேத சொற்களுக்கு அர்த்தமே தெரியவில்லை என்று அரவிந்தர் எழுதியுள்ளார்.

இதே கி.மு எட்டாம் நூற்றாண்டில்தான் கிரேக்க இலக்கிய வரலாறும் துவங்குகிறது. அதாவது ஹோமர் BLIND POET HOMER என்னும் அந்தகக் கவிஞர் எழுதிய இலியட் , ஆடிஸி ILIAD AND ODYSSEY என்ற இரண்டு காவியங்கள் உதயமாயின. அதில் கிரேக்க மொழி ARKTOS ஆர்க்ட்டோஸ் = கரடி என்ற சொல்லை அவர் இந்த சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்துக்குப் பயன்படுத்துகிறார். சதபத பிராஹ்மணத்திலும் அதேகால ஹோமர் காவியங்களிலும் ஒரே கருத்து உளது. இங்கேதான் வெள்ளைக்காரன் அவன் தந்திரத்தைக் காட்டுகிறான். நாம் எல்லோரும் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த காலத்தே பயன்படுத்திய சொல் கரடி.; பின்னர் நீங்கள் ரிஷி என்று மாற்றிவிட்டீர்கள் என்று ‘கரடி விடுகிறான்’.

அவன் உரை , பொய்யுரை என்பதற்கு நமக்கு நிறைய சான்றுகள் உண்டு

எகிப்தியர்கள் இதே நக்ஷத்திரக் கூட்டத்துக்கு நீர்யானை HIPPOPOTAMUS என்று பெயர் சூட்டினர் . இராக் என்னும் மெசபொடோமியாவில் வாழ்ந்தவர்கள் இதை WAIN = WAGON= VAHANA IN SANSKRIT வண்டி, வாஹனம் என்றனர். அதையும் ஹோமர் ஓரிடத்தில் பயன்படுத்துகிறார் . ஆக , ஹோ மர்தான்  காப்பி அடித்தார்; அது மட்டுமல்ல; அது மேற்கு நோக்கி நாகரீகம் (WESTWARD MOVEMENT OF IDEAS AND CULTURE) பரவியத்தைக் காட்டுகிறது  வெள்ளைக்காரன் சொன்னதுபோல (NOT EASTWARD MIGRATION OF CULTURE)  கிழக்கு நோக்கி ஆரியர்கள் வரவில்லை.

இதற்கு இன்னொரு சான்றும் உளது வட திசையைக் குறிக்க இந்த நட்சத்திரக்கூட்டத்தைக் குறிப்பர். அதில் ஒரு லத்தீன் மொழிச் சொல் ஏழு காளைகள் / எருதுகள். SEVEN OXEXN அதாவது இதே ஏழு கரடிக்கூட்டத்தை காளைகள் OXEN என்று பார்த்தோரும் உண்டு. அந்த ஏழு காளை குறிப்பும் ரிக் வேத மூன்றாவது மண்டலத்தில் உள்ளது. ஈரான் நாட்டுடைய கோட்டானீஸ் KHOTANESE LANGUAGE மொழியில் வடதிசையக் குறிக்க 7 கரடி கள் என்பர். லத்தீன் மொழி தமிழுக்கு சற்றே முந்தியது. சங்க இலக்கியத்துக்கும் முன்னர் அவர்கள் இலக்கியம் வருகிறது. ஆக 7 காளைக் குறிப்பும் லத்தீன் மொழியில் இருப்பது , இந்தக் கருத்து ரிக் வேதத்தில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றதைக் காட்டுகிறது.

XXXX

அது சரி , இந்துக்கள் முதலில் ரிக் வேதத்தில் “கரடி – ரிக் ஷ”  என்று சொன்னது பின்னர் எப்படி ரிஷி ஆனது?

இதை ஒரு தமாஷ் என்றே நான் கருதுகிறேன். காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் 12 ஸம்ஸ்க்ருத மாதங்களும் எப்படி சித்திரை முதல் பங்குனி என்று ஆயின என்று விளக்கும் அற்புதமான சொற்பொழிவில் எழுத்துக்கள் இடம் மாறி உச்சரிக்கப்படுவதைக் காட்டுகிறார்; அப்போது தமாஷாக ஒரு JOKE ஜோக் அடிக்கிறார். நாம் கூட மதுரை என்பதை மருதை என்றும் குதிரை என்பதைக் குருதை என்றும் சொல்கிறோம் அல்லவா என்று !

நான் மதுரைக்காரன் என்பதால் இந்த ஜோக்கைப் படித்துப் படித்து ரசித்தேன். ஏனெனில் நாங்கள் இதைக் கிராமத்துக்காரர் பேச்சில் கேட்பது மட்டுமல்ல; மதுரை என்பதே வட மதுரைக் கிருஷ்ணனுடன் தொடர்புடையது அல்ல; மருதம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே மருதை வந்து, அது மதுரை ஆனது என்றும் நூல்களில் எழுதியுள்ளனர். அவர்களும் ரு / ரை இடம் மாறியதை ஒப்புக்கொள்கின்றனர். ஆக ரிக்ஸ= கரடி , ரிஷி ஸ் = முனிவர்கள் ஆனதில் வியப்பில்லை. இதை நான் ஏன் ஜோக் என்று சொல்கிறேன் என்றால் பிராஹ்மண நூல்களில் (சதபதம், ஐதரேயம்) இதுபோன்ற சொற்புரட்டுகள், அதற்கான கதைகள் நிறையவே உள்ளன. மனு ஸ்ம்ருதியிலும் இது போன்ற சொற்பிறப்பியல் ETYMOLOGICAL FUN, PUN, EXPLANATIONS, RIDDLES விஷயங்கள் உண்டு .

இதெல்லாம் ஒரு புறமிருக்க சதபத பிராஹ்மண நூலின் காலம் கி.மு. 3000 என்று எஸ்.பி. தீக்ஷித் S.B.DIKSHIT என்னும் அறிஞர் சொல்வதையும்    மனதில் கொள்ளவேண்டும் . ஹெர்மன் ஜாகோபியும் பால கங்காதர திலகரும் சொல்லும் ரிக் வேத காலம் கி.மு 4000 முதல் 6000 என்பதை ஏற்றுக்கொண்டால் வெள்ளக்காரன் வாதம் தவிடு பொடியாகும் எஸ்.பி. தீட்சித்தும் கிருத்திகா (KRITTIKA= PLEIADES CONSTELLATION) நட்சத்திரம் கிழக்கில் உதயமாகும் குறிப்பை வைத்து சதபத நூலுக்கு காலம் கணித்துள்ளார் ; வெள்ளைக்காரர்கள் இந்த வான சாஸ்திர கணக்குகளை கண்டுகொள்வதே இல்லை. காரணம் நமக்கே விளங்கும்.

முடிவாகச் சொல்லுவது இதுதான்; வேதத்தின் காலம் மிகவும் பழமையானது. அதாவது குறைந்தது 4000 ஆண்டுகளுக்கும் முந்தையது; ஒரு வேளை , சிந்துவெளி நாகரீகமே வேத கால  நாகரீகமாக இருக்க லாம். ஆகையால் வெள்ளைக்காரன் வாதங்களை விலக்கி விட்டு நாம் நமது பண்பாட்டை விளக்குவோமாக

–சுபம் —

tags- கிருத்திகா, சதபத பிராஹ்மண , ‘ரிக் ஷ’, கரடி, ரிஷி 

கவிஞர்களின் வாய்ஜாலம்-1 (Post No.10,727)

picture of P R RAJAM IYER

WRITTEN BY B. Kannan, Delhi
Post No. 10,727
Date uploaded in London – – 9 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவிஞர்களின் வாய்ஜாலம்-1
Written By B.Kannan, Delhi

அன்புள்ள உலகளாவியத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
தற்போதைய சுற்றுப்புறச் சூழல்கள் தரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட நாம் சற்று நகைச்சுவையை .ரசிப்போமே வாருங்கள்……

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பெரியோர்களின் அனுபவ வாக்கு. மன இறுக்கத்தைக் களைய அதுவே ஒரு சிறந்த மருந்து. முற் காலத்தில் செல்வச் செழிப்புள்ள ஜமீந்தார்கள், சமஸ்தானாதிபதிகள், மன்னர்கள் எனப் பலரும் தங்களருகில் ஒரு புலவர் குழாமையே வைத்தி ருப்பர். தங்கள் எஜமானரின் மனபாரத்தைக் குறைக்க, சிரித்துச் சிரித்து விலா இற்றுப் போகும் படியானச் சம்பவங்களை நயமுடன் நக்கல் நையாண்டியுடன் சுவைபடக்கூறிக் குஷிபடுத்துவர். பீர்பல், தெனாலிராமன் போன்றவர்களை நாம் மறக்க முடியுமா? தனி மனிதர்களிடமும் இந்த நகைச்சுவை உணர்வு மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஓரிரு நிகழ்வுகளை தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி மொழி இலக்கியங் களிலிருந்து காண்போம்……….

ஶ்ரீமான் வேங்கடரமண ஐயங்கார் கொங்குவள நாட்டில் விசயமங்கலத்திற்கு அண்மையில் உள்ள நடுப்பட்டி எனும் சீனிவாசபுரத்தில் வைணவ அந்தணர் குலத்தில் 1865ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் சதகம் பதிகம் முதலிய பல சிறு நூல்கள் பாடியுள்ளார்.வேடிக்கையாகவுஞ் சிலேடையாகவும் பாடுவதில் வல்லவர். பொதுவாக மக்களால் அதிகம் விமரிசிக்கப்பட்டவர்கள் வக்கீல்கள் என்றால் மிகையாகாது  அவர்கள் சொத்துக்காக வழக்கு தொடுக்கும் கட்சிக் காரர்களிடம் கனிசமான காசை வக்கீல் ஃபீஸாகக் கறந்துவிடுவார்கள்.இதன் பின்னணியில் ஒரு நையாண்டிப் பாடலை ஐயங்கார் அவர்கள் இயற்றியுள் ளார். நாய்களை வக்கீலுக்கு நிகர் என உயர்த்தியப் பாட்டுதான் அது. இவ் வெண்பாவின் கருப் பொருளைப் பாரதியார் மறவன்பாட்டில் விரித்துப் பாடி யுள்ளார்.

எச்சிக் கலையும் எடுத்துப்பீ சாப்பிடலால்
இச்சித் துலாவோ டிருத்தலால் – மெச்சுதுரை
மக்கள்பாற் சென்று வாய்ச்சவடால் ஆடலால்
குக்கலும்வக் கீலெனவே கொள்.

வக்கீல் ஃபீஸ் என்று வாங்கிச் சாப்பிடுவதால், இச்சித்து லாவோடு இருத்தலால்–துரைமார்களுடன் கூடிக் குலாவி இருந்து, வெள்ளையரிடம் வாய்ச்சவடால் ஆடலால்.–ஆங்கிலேயருடன் வம்பளப்பதால் நாய் நாக் கைச் சவட்டி ( வளைத்து )- உண்பது போல் செயல்படுவதால் அவைகளும் வக்கீல் எனக் கொள்ளலாம் என்கிறார். துரை இம்மென்றால் நாய்போலே (குக்கலும்) உழைக்கத் தயாராய் வக்கீல்கள் இருப்பார்கள் என்று பொருள் படவும் நகைச்சுவையுடன் கூறுகிறார்! இம்மாதிரியான வேறு பல ருசிகரச் சம்பவங்களை, கலிவிடம்பனா, மதிமோச விளக்கம் போன்ற நூல்களிலும் படித்து மகிழலாம்!
——————————————————————————–
இன்றைக்கு 129 ஆண்டுகளுக்கு முன்(1893) விவேக சிந்தாமணி சஞ்சிகை யில் வரிக்கு வரி நகைச்சுவைத் ததும்ப விறுவிறுப்பான ஒரு தொடரை எழுதியவர் பி.ஆர். ராஜம் ஐயர். ‘ஆபத்துக் கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித் திரம்’ என்னும் பெயரிலமைந்தத் தொடரை எழுதியவர். இது, தமிழில் வெளியான முதல் நீண்ட தொடர்கதையும், தமிழில் தத்துவம் பற்றிப் பேசிய முதல் நாவலும் ஆகும். இரு தலைப்புகள் கொண்ட ( ஆரணி யாரின் ‘அரசூர் இலட்சு மணன் அல்லது அதியற்புதக் கள்ளன்’, வடுவூராரின் ‘இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி’ நாவல்கள் ஞாபகம் வருகிறதா?) முதல் நாவல் என்பது உட்பட பல்வேறு சிறப்புகளை உடையது. தமிழின் முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ 1879ல் வெளிவந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்துத் தான் (1896) இந்த நாவல் நூலாக வெளிவந்தது என்றாலும், பாத்திரப் படைப்பிலும், கதை சொல்லும் நேர்த்தியிலும், உருவகத்திலும், நாவல் அமைப்பிலும் இதுவே முதல் நாவலாக இலக்கிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இதோ அவரது நகைச்சுவை வண்ணம்….

இந்த நாவலின் ஏழாம் அத்தியாயம் ஒரு தமிழ்ப் பண்டிதரின் பழக்க வழக் கங்களைச் சிரிப்பூட்டும் வகையில் படம் பிடித்துக் காட்டுகிறது.
மதுரையிலிருந்த ஒரு ஜில்லா பள்ளிக்கூடம், அதன் தமிழாசிரியரைப் பற்றிதான் சொல்கிறார். சரியாய்ப் பத்து மணிக்குப் பள்ளியின் மணி அடித் தவுடன் சுமார் 20 மாணவர்கள் ”மெட்ரிக்குலேஷன்’ வகுப்பில் ஆஜராகிறார் கள். அவரவர் மேஜையின் மேல் எழுதுவதற்கு வேண்டிய மைக்கூடு வைக் கப் பட்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அம்மைத் தழும்புகள் நிறைந்த முகமும், உயரமான கறுத்த நிறமுடைய ஆசிரியர் வந்தார்.

அவர்தான் அம்மையப்ப பிள்ளை எனும் நாமகரணம் கொண்டத் தமிழ்ப் பண்டிதர். ஐந்தாறு வீடுகள், ஒரு புளியமரமும் உள்ளடக்கிய ஒரு பெரிய பட்டணமான ஆடுசாபட்டி அவர் பிறந்த ஊர்! அவர் அசகாய சூரர். எமகம், எதுகை, திரிபு என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத்திப் பழத்தை உதிர்ப்பதுபோல் சடசடவென்று உதிர்த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையில் அகப்பட்டுவிட்டால் ராமபாணம் போட் டாற்போல மூச்சு விடுமுன்னே முந்நூறு, நானூறு கணக்காகப் பாட்டுகளை வீசி அவன் காதைச் சல்லடைக் கண்களாகத் தொளைத்துவிடுவார்.

மைக்கூடிலுள்ள மையை ஆசிரியர் மேல் தெறிக்க வைத்து, அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு மாணவன் வண்ணம் பூசுவது போல் அதை மேலும் சட்டை, முகம் முழுவதும் பூசிவிட,பண்டிதர் திருவிழாவில்

விநோதமாய்ச் சிங்காரித்துக் கொண்ட கோமாளி போல் காட்சியளிக்க, வகுப் பில் மாணவர்கள் அடிக்கும் ரகளை ஒரே களேபரம் தான், போங்கள்!

ஒரு சமயம் தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாய்விட்டது. பைராகி தன் வசவுகளில் ‘காரே, பூரே’ என்று அபரிமிதமாய் வைய, சாஸ்திரியார் முட்டாள், போக்கிரி என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளையெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொ டுங்குகிற வழி யாகத் தெரியவில்லை. அய்யர் பழைய வசவுகளுக்கு இவன் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து புதுமாதிரியாக, ‘அடா போடா, புஸ்த கமே, சிலேட்டுப் பலகையே, பென்சிலே, ஏர் உழும் கலப்பையே, மோர்க் குழம்பே, ஈயச்சொம்பே, வெண்கலப்பானையே’ என்று இப்படி வாயில் வந்த வார்த் தையை எல்லாம் வசவாக அடுக்கவே, அந்தப் பைராகி வேறு புது வசவுகள் அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப் போனான்.

அதுபோல அம்மையப்ப பிள்ளையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம் பித்தால் ஆயிரக்கணக்கானப் பாட்டுகளைச் சொல்லி எதிராளி யின் வாயை அடக்கி விடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத்திற்கு சம்பந்தமில்லா விட்டால் என்ன? அதனுள் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள்தானே! அதுவும் அவர் பாட ஆரம்பித்தால் அவருக்குச் சரியாக மகா வைத்தியநாதையரால் கூடப் பாட முடியாது.!” எனப் போகிறது விருத்தாந்தம்.

சங்கீத ஞானம், நல்ல சாரீரம், தமிழ்ப் புலமை ஆகியவற்றில் சிறந்து விளங்கியது மட்டுமின்றி நல்ல புத்திமானாகவும் பிள்ளை திகழ்ந்தார். அதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டு இதோ…….

ஒரு சமயம் அவருக்கும், அம்மாப்பட்டிக் கவிராயருக்கும் இடையே, “நடை அழகுக்குப் பெயர்போன அன்னப்பட்சி உலகில் தற்போது உண்டா? இருக்கு மானால் அது எது?” என்ற வாதம் எழுந்தது. கவிராயர்,”காகம் தான் அன்னம். பட்சிகளுக்குள் நடையில் மற்றவரைக் கவர்வது காக்கையே. ஆதலால் அதுவே அன்னப்புள்ளாதல் வேண்டும்!” என்று ஆதாரங்களைக் காட்டிச் சாதித்தார். பண்டிதரோ, “அல்ல, அல்ல!அன்னம் என்றால் சாதம். அன்னம், சாதம் இரண்டுமே வெள்ளை. அன்னமும் ஒரு பட்சி, சாதத்தையும் நாம் பட்சிக்கிறோம் (சாப்பிடுகிறோம்). தட்டுபவனைத் தட்டான் எனச் சொல்வது போல் சாதத்தையே அன்னமென்று உருவக நவிர்ச்சி அலங்காரத்தில் சொல்லப்பட்டுள்ளது!” என்று ஆரவாரமாய்ப் பல பாட்டுகளை ஆதாரம் காட்டி முழங்கினார்.

இவ்விவாதம் இடைவிடாமல் பத்து நாட்கள் நடக்க, கடைசியில் பிள்ளை அவர்கள் கவிராயரிடம்,” அன்னத்தைக் காக்கை என்று சொன்னீர். அதனால் நீரே காக்கை!” எனப் பரிகசித்தார். விடுவாரா கவிராயர். “அன்னத்தைச் சாதம் என்று சொன்ன நீங்களே சாப்பாட்டு ராமன்!” எனப் பதிலுக்குச் சாடினார். அவர் இவரை, “கவிராயர் குரங்குராயர்!” (கவி=குரங்கு) என்று சீண்ட, இவர் அவரை, “அம்மையப்பப் பிள்ளை என்றால் உமக்கே தகும்!” என அவரது தழும்பு நிறைந்த முகத்தைச் சுட்டியவாறு எக்காள மிட்டார். அடுத்து அடிதடியிலும் இறங்கிவிட்டனர். போலீஸ்காரர் சமாதா னம் செய்யப் பிரிந்தனர். கவிராயர் இரவோடிரவாக ஊர்போய்ச் சேர்ந்தார். அதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகே அவரை வாதில்வென்றுவிட்டதாகப் பெருமைப் பேசிக் கொண்டார் பிள்ளை!. அம்மாப்பட்டி யிலோ கவிராயர் பண்டிதரை ஜெயித்து விட்டதாக ஒரே அல்லோலகல்லோலம்!

நடை அழகுக்குப் பெயர் பெற்றது அன்னமோ, காகமோ, பி.ஆர்.ஆரின் சொல்லாடலில் பொதிந்துள்ளத் தமிழ்நடை அழகே, அழகு!
———————————————————————————-
சாமானியர்களான ஐந்து புலவர்கள் எப்படிப் பெரும் கவிஞராகிய ஒட்டக் கூத்தரை நக்கலும், நையாண்டியும் கலந்த பாடல்களால் ‘கலாய்த்தார்’ கள் என்பதைப் பார்ப்போம்……….

பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம். புலவர் வில்லிபுத்தூரார் தன்னுடன் வாதிட வரும் பிற புலவர்கள் அதில் தோற்றால் அவர்களது காதைஅறுத்து விடுவாராம். இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் யார் வேண்டுமானாலும் தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு விளையாட்டு போல் தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுத லாம் என்று கேலியாக இடித்துரைக்கிறது

“குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே””
என்ற செய்யுள்.

தமிழின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த குலோத்துங்கச் சோழனின் பிரதான அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். தான் ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் உடனே அவரை சிறையில் அடைத்து விடுவார். அவர்கள் சிறையிலிருந்து மீள வாய்ப் பாக அமைவது ஒட்டக் கூத்தர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கூறுவது தான். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், சோழன் பாண்டிய இளவரசியை மணந்த போது ராணியுடன் புகழேந்திப் புலவரையும் சீதனமாக அனுப்பி வைத் தான் பாண்டிய மன்னன். ஒரு சமயம், தன் பாட் டுக்கு எதிர்ப் பாட்டுரைத்தப் புகழேந்திப் புலவரை எவ்வித விசாரணையு மின்றி ஒட்டக்கூத்தர் சிறையிலடைத்துவிட்டார். புகழேந்திப் புலவர் சிறை யிலிருந்த காலத்தில் தன்னுடன் இருந்த சிலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத் துப் புலமை பெறவைத்தார். அவர்கள் ஒட்டக்கூத்தரைச் சந்திக்கும் சமயம் ஒருநாள் வந்தது.

முதலில் குயவன் முன்னால் வர, அவனை நோக்கி ஒட்டக்கூத்தர், எதுகை மோனை முதலிய நயங்கள் கொண்ட இயல்,இசை,நாடகமெனும் முத்தமி ழான மதங்கொண்ட யானையாகிய என்னை எதிர்ப்பவர் யார்? எனும் பொருள்பட,
“மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன்வந்தெதிர்த்தவன் யாரடா?” என்று கேட்டார். அதற்குக் குயவன் சற்றும் தயங்காமல், நானா? நான் களிமண்ணால் குவளைகள், குடங்கள், சட்டிகள் முதலியவற்றை உருவாக்கும் சிறப்புடைய குயவன், யானையை அடக்கவல்ல அங்குசமும் ஆவேன் எனும் பொருள்பட,

“கூனையுங்குடமும் குண்டு சட்டியும்
பானையும் பண்ணும் அங்குசப்பயல் நான்” என்று பதிலிறுத்தான் (யானையை அடக்க ‘அங்குசப்பயல்,( அங்குசம் ), வேண்டும். குயவனா தலால் அம்+குசப்பயல் என்பதும் பொருள் அவன் பாடலில் தக்க மறுமொழி யிருக்கவும் அவன் விடுதலையானான்.

அடுத்து ஒரு கண் பார்வையற்ற நாவிதன் வர, அவனை நோக்கி, வானில் பறக்கின்ற கொக்கு, பருந்தினைக் கண்டால் எவ்வாறு பயத்தால் நடுநடுங் குமோ அவ்வாறு நடுங்கிக் கொண்டு பதைபதைக்கும் மனத்துடன் என்முன் நிற்பவனே, பொட்டைக் கண்ணா, சொல்வாய் எனும் பொருள்பட,

“விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக்கப்
புண்பட்ட நெஞ்சொடு மிங்கு நின்றாய் பொட்டையாய் புகலாய்”
என்று ஒட்டக்கூத்தர் மொழிய அதற்குப் பதிலாக, நான் பொட்டைக் கண் உடையவனாக இருப்பினும் நாவிதனாகிய நான் பண்ணில் உயர்ந்த செந் தமிழ்ப் பாடல்களை நீயும் திடுக்கிடும் வண்ணம் பாடும் வல்லமை படைத் தவன் எனும் பொருள்பட,

“கண்பொட்டையாயினும் நாவிதன் நான் கவிவாணர் முன் பண்பட்ட செந் தமிழ் நீயும் திடுக்கிடப் பாடுவனே” என்றான். அவனது பதிலும் முகத்தில் அறைந்தாற்போல் ஆணித்தரமாக இருக்கவே அவனும் விடுதலை செய்யப் பட்டான்.

அடுத்து வந்தான் கொல்லன். அவனிடம் பாடலாகக் கேளாமல் வசன நடையில், “நீ யார்?உன் தகப்பன் பெயர் என்ன? உன் தொழில் என்ன? சொல்வாய் எனக் கேட்டார் ஒட்டக்கூத்தர். அதற்கு அவன், “என் தந்தை பெயர் செல்லப்ப ஆசாரி, என் பெயர் திருவேங்கடாச்சாரி. நான் உலகுக்கே குருவாக விளங்குபவன். கொல்லனாகிய என் கவிதையில் குறை சொன்ன வரை அவரது பல்லைப் பிடுங்கி, ஆட்டிஅலைக்கழித்து அவரது பகைவர்கள் எள்ளி நகையாடும் வண்ணம் என் கவிதையாகிய இருப்பாணியாலேயே
அடிப்பேன் எனும் பொருள்பட,

“செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டாம் ஆட்டிப் பகைவர் முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே”
என்று கூறவே அவனும் விடுவிக்கப் பட்டான்.

அடுத்து வேளாளன் வந்து நிற்க, ” பிரபல கவிஞனான என்முன் வரண்ட பாழ்நிலம் போல் தோற்றமளிக்கும் நீயும் ஒரு கவியோ? என்முன் நிற்கும் தகுதி உனக்குண்டோ? எனக் கூத்தர் ஏளத்துடன் கேட்டார். உடனே அவன் ஒட்டக்கூத்தரையும் மன்னனையும் பார்த்து இப்படிப் பாடினான்

“கோக்கண்டு மன்னவர் குறைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூதலமேற்
காக்கின்ற மன்னவ, கவியொட்டக் கூத்த நும்
பாக்கண்டொளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே!”
பொருள்: கோக்கண்டு- சக்கரவர்த்தியைக் கண்டு (மற்ற அரசர்கள்), குறைகடல் புக்கிலர்- ஒலிக்கின்றக் கடலுக்குள் ஒளிந்துக் கொள்ளவில்லை, கோக்கனகப் பூக்கண்டு- செந்தாமரை மலரைப் பார்த்து, கொட்டியும்- நீர்க் கொடி வகையும், பூவாதொழிந்தல- மலராமல் இருந்ததில்லை, பூதலமேற்- 7 தீவுகளையும் காக்கின்றச் சோழமன்னனது (அவைப் புலவரான உமது), பாக்கண்டொளிப்பர்களோ- சொல்வண்ணம், பொருள் நயம் அமைந்தப் பாடல்களைக் கண்டு ( மற்ற தமிழ்ப் புலவர்கள்), ஒளிந்துதான் கொள் வார்களோ?

“பல தேசங்களைக் கட்டியாளும் மாமன்னர்களைக் கண்டு சிறு நாடுகளை ஆளும் குறுநில மன்னர்கள் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்ள வில்லை. பூக்களின் அரசனெனப் போற்றப்படும் தாமரைப்பூ மலர்வதனால் அருகிலிருக்கும் சிறு சிறு நீர்க்கொடி வகைகள் பூவாமல் இருப்பதில்லை, உலகைக் காக்கும் மன்னா! கவி ஒட்டக்கூத்தா!உங்கள் பாடல்களைக்கேட்டு பிற புலவர்கள் பாடாமல் இருந்து விடுவார்களா?” என்று பரிகாசம் தொனிக் கக் கேட்கவும் சுற்றியிருந்தோர் ஆரவாரமிட்டனர். தற்பெருமைப் பேசிய கூத்தருக்குக் கிடைத்ததோ சபையோரின் ஏளனப் பார்வையும், கேலிப் பேச்சும் தான்!

பாடலை நக்கலுடன் கூறிய வேளாளனும் விடுதலை செய்யப்பட்டான். ஒட்டக்கூத்தரின் செருக்கு ஓரளவு அடங்கியது.
ஏட்டிக்குப் போட்டி பேசும் தமிழ்ப் புலவர்கள் இருக்கும் வரை பரிகாசம், புன்னகை, கேலி, நக்கல், நகைச்சுவை உணர்வுகளுக்குப் பஞ்சமே இருக்காது!

picture of Ottakuthar

If u dont see pictures here, please go to my other blog swamiindology.blogspot.com

to be continued…………………..
அம்மாப்பட்டிக்கவிராயர் , கவிஞர், வாய்ஜாலம், ஒட்டக்கூத்தர், பிள்ளைப் பாண்டியன் ,அம்மையப்ப பிள்ளை, வேங்கடரமண ஐயங்கார் ,பி.ஆர். ராஜம் ஐயர்

முதல் எழுத்து அலங்காரம் – 1 (Post No.10,726)

Picture of Naguleswaram temple in Sri Lanka

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,726

Date uploaded in London – –     9 MARCH   2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

முதல் எழுத்து அலங்காரம் – 1

ச.நாகராஜன்

தமிழில் எழுத்து அலங்காரங்களில் மூன்று வகை உண்டு.

முதல் எழுத்து அலங்காரம், நடுவெழுத்து அலங்காரம், கடையெழுத்து அலங்காரம் என இப்படி மூன்று வகைகள்

உண்டு.

முதல் எழுத்து அலங்காரப் பாடல் ஒன்றை இங்கு பார்க்கலாம்.

கூத்திளமை நொய்மை மதி கூருநயம் மங்குலொடே

வாய்த்தசம்பை யென்றேழு மாண்பெயர்க்குஞ் – சார்த்துபதில்

ஏய்ந்தமுன்கள் சேர்ந்துநகு லேச சுவாமியெனா

வாய்ந்தபெய ரென்பாம் வழுத்து.

யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை அவர்கள் எழுதிய நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்ற நூலில் 53வது பாடலாக இது அமைகிறது.

நகுலேசசுவாமியைத் துதித்துப் பாடும் இப்பாடலில் பல சொற்கள் உள்ளன.

அநதச் சொற்கள் சுட்டிக் காட்டும் அர்த்தமுடைய ஒரு சொல்லைக் கண்டுபிடித்து எடுத்து,

அதன் முதல் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து முதல் எழுத்துக்களையும் கோர்த்துச் சொல்லாக அமைத்துப் பார்த்தால் நமக்கு பாடலின் பொருள் எளிதில் விளங்கி விடும்.

மேலே உள்ள பாடலைப் பார்ப்போம்.

கூத்து – இது குறிப்பிடும் சொல் (ந)டனம்  (இது பாடலின் முதல் அடியில் முதல் சொல்லாக வருகிறது)

இளமை – இது குறிப்பிடும் சொல் (கு)ழவு (இது பாடலின் முதல் அடியில் இரண்டாம் சொல்லாக வருகிறது)

நொய்மை – இது  குறிப்பிடும் சொல் (லே)சு (இது பாடலின் முதல் அடியில் மூன்றாம் சொல்லாக வருகிறது)

மதி – இது குறிப்பிடும் சொல் (ச)ந்திரன் (இது பாடலின் முதல் அடியில் நான்காம் சொல்லாக வருகிறது)

நயம் – இது குறிப்பிடும் சொல் (சு)கம் (இது பாடலின் முதல் அடியில் ஐந்தாம் சொல்லாக வருகிறது)

மங்குல் – இது குறிப்பிடும் சொல் (வா)னம் (இது பாடலின் முதல் அடியில் ஆறாம் சொல்லாக வருகிறது)

சம்பை – இது குறிப்பிடும் சொல் (மி)ன்னல் (இது பாடலின் இரண்டாம் அடியில் வருகிறது)

கூத்து, இளமை, நொய்மை, மதி, நயம், மங்குல், சம்பை ஆகிய ஏழு சொற்களில் உள்ள (அடைப்புக்குள்

இருக்கும்) எழுத்துக்களை இணைத்துப் பார்த்தால் வருவது நகுலேசசுவாமி.

நகுலேஸ்வரரைத் துதிக்க முதல் எழுத்து அலங்காரப் பாடல் இது.

எப்படி ஒரு எழுத்து அலங்காரம் பாருங்கள்!

இப்படி ஏராளமான முதல் எழுத்து அலங்காரப் பாடல்கள் தமிழில் உள்ளன.

விந்தை மிகு எழுத்தலங்கார மொழி தமிழ் என்பது புலனாகிறது அல்லவா!

***

TAGS–  முதல் எழுத்து, அலங்காரம்

TAMIL KAMAN PANDIKAI/FESTIVAL IN ROME AND GREECE! (Post No.10,725)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,725

Date uploaded in London – –    8 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Not many people knew that the 18 books of Sangam Tamil literature running to nearly 30,000 lines never used the word SIVA, but used Vedic Gods Indra, Vishnu and Varuna. Like Rig Veda the attributes of Lord Shiva are there but not the word SIVA in early Tamil. The word was used only from 7th century CE. Not many people knew that the Tamils say ‘Siva is Rudra and Rudra is Siva’ in 18,000 verses from seventh century CE. Lord Siva’s eight famous violent attacks as Rudra,  form Eight Famous Shrines( Ashta Veerattana Sthalas). So foreign idiots’ attempt to divide Siva and Rudra did not succeed in Tamil Nadu.

xxxx

Tamil month Masi corresponds with March -April in English calendar. It is the month of Holi Festival and Tamil Kaman Pandikai. (Pandikai means festival). In Northern India the Hindus celebrate Holi and throw colours at one another and make fun. Slowly Non Hindus also joined the fun, but still remains mainly a Hindu Festival The story behind it and burning Holika show it is Hindu. Tamils also celebrate it in the name of Kaman (Manmatha) Pandikai. Like Holika burning in the North, Tamils burn Manmatha, God of Love. Lord Shiva, who has the third eye, i.e. Eye Of Wisdom, burns Manmatha. Since Manmatha’s wife Rathi (Cupid) cried and begged for the revival of her beloved husband Manmatha, Lord Shiva agreed but with a big condition. The condition is that he would be living for ever but bodyless (Anangan), visible only to Rathi.

Highly philosophical and psychological principles are embedded in this story. A very big principle is taught to village folk in the simplest way with sexy dances all over the night for 13 days in Tamil Nadu. It was celebrated in Rome/Italy and Greece, but banned or controlled when it went berserk, hysterical and unruly.

Stupid and half -baked idiots compared Lord Shiva with Roman god Bacchus or Greek god Dionysus without understanding the principle behind Hindu festival.

xxx

First look at the simple and grand principle:

Love is blind; sexual feeling or urge is natural; but uncontrolled sex will damage one and the person who wins this base feeling is a saint. The person who can do is like Lord Shiva, with Third Eye, Wisdom Eye.

Ramana Maharishi, Ramakrishna Paramhamsa and very recently Kanchi Shankaracharya (1894-1994) were typical examples of this great feat. But no lay man should avoid sex. So Siva told Rathi God of Love will be there for ever but as An Angan=Less Body= Bodyless. That is the feeling of Kama/amour is abstract, it is not concrete; a woman gives green signal to it. That is why Shiva told Rathi (Cupid) your husband will be visible to you only.

Even if you mad after a woman, that Rathi/woman only can say yes or no and make it or mar it. This is the big philosophy behind this great Holi Festival and Tamil Kaman Pandikai. Both are celebrated at the same spring season when such sexy feelings start blooming. But Tamils start 13 days earlier than Holi (Full Moon Day) and culminates it on Full moon day, like Holi

All major Hindu festivals are celebrated on Full moon days. Millions of people gathered under moon light to celebrate it. A very few like Deepavali are celebrated in the dark but compensated with oil lamps.

Every society finds some excuse to celebrate, but they don’t have high principle behind it. In Kaman and Holi festival, we give he message to the society, please go ahead with your celebrations for two weeks, but at the end when you get wisdom burn the desire like Lord Siva and go higher and higher. This message is lacking in Western Festivals.

Early Greek and Roman writers saw Kaman Festival in the north and compared it to Bacchus Festival, because they did not understand the big message behind our Hindu festival.

Romans were the worst lot in the first few centuries of modern era. They imported Vedic God Mitra via Iran and changed it to Mithra, made it a secret underground festival and slaughtered Bulls indiscriminately. They drunk uncontrollably and had sex with everyone in public. So the Roman government and later Pope banned it. But yet they couldn’t wipe it out. Even today whoever visits Rome can see the Mithra cult temples in the underground chambers. Bacchanalia was for drinking and mixing with other sex

Tamil Kaman Pandikai dances have sexy gestures. It is to attract laymen. Normally village folk dancers dress and disguise like Manmatha, his wife Rathi and Lord Siva with other paraphernalia. They dance in street corners in big cities, but in the grounds or temples in small towns. We cant see unruly scenes. It was orderly.

When I lived in Madurai 45 years ago, while returning from night duty from my newspaper office, I used to stop my cycle and watch it for some time. Yesterday many Tamil newspapers reported Kaman Pandikai happening in many parts of Tamil Nadu. On the last day, lord Siva burns Manmatha. He is in Sangam Tamil literature and Sanskrit literature.

Now a brief description of Roman Bacchus and Greek Dionysus.

xxxx

BACCHUS

Roman god of wine and intoxication

Known period 400 BCE TO 400 CE

Synonyms – Liber, Dionysus / Greek

Centres of cult – throughout Roman empire  .

Literary sources – Aeneid of poet Virgil

Bacchus is modelled closely on the Greek god Dionysus. In Roman Mythology his parents are  Jupiter and  Semele, the daughter of Kadmos, who became deified only after her death by fire on mount  Olympus.

Bacchus is depicted as a youthful figure wearing an ivy or grape crown carrying a wand or thyrsus.

He is riding a chariot pulled by leopards. He was  worshipped extensively in festivals called Liberalia and  Bachchanalia. These posses strongly phallic connotations and on occasions  the god was modelled like a phallus (linga shape). This made the Greek and Roman writers to compare Lord Shiva(linga). But the main aim of Kaman Festival is destroying Kama (Uncontrolled sexual urge); that is completely absent in Greek or Roman festivals. Probably they stole the juicy part of the story and rejected the philosophy behind it.

Kaman Festival have different versions. In short Indra or Daksha asks Manmatha to seduce Lord Siva and he failed in it and was burnt alive. But the abstract idea of love as bodyless Manmatha will be there on earth; no one can wipe out sex.

xxxx

Now to Greece- DIONYSUS

Origin – Greece

God of wine and intoxication

Period – from pre Christian period until 400 CE.

 Synonyms –  Deunysos, Zonnysos, Liber, Bacchus

Centres of cult – Pylos, Ayla, Irini

Art references – Attic wine amphorae dated around sixth century BCE.

Literary sources- Hymns to DIONYSUS

Attributed to Homer/ only fragmentary

It is similar to bacchanalia described above. The festival was celebrated with intoxicated frenzy and carrying gigantic phallus symbol. They attribute it semitic people, not Hindus. Wine drinking and goat sacrificing festivals were also there. This carrying male genital organ (phallus) or  showing it to public through people who disguised as satyrs are not known to Hindus at any period. Semitic means the forefathers of people who founded Judaism, Christianity and Islam.

Seeing all these in their own places, the foreign half baked idiots misinterpreted Hinduism and Indus Valley civilization. Since these people did not know 2000 year old Sangam Tamil literature or later 18,000 Tamil Shiva (Saivite) verses they bluffed and bluffed throughout and said Vedic Rudra is different from Siva. The very word Siva came from Vedic Rudram for the first time in Yajur Veda. In Tamil it came into use only from 600 CE. That is at least 1600 years after Sanskrit Siva! Because Yajur Veda is dated 1000 BCE.

But I would add one more point, before I conclude; there is one SIVA in Rigveda, which Professor Wilson says Lord Siva, but Max muller gang says it is not Siva with capital S, but siva= auspicious. Prof. Wilson dated Rigveda 2000 BCE but Max Muller gang dated it first 1200 BCE later changed it to 1500 BCE or some unknown time before that!

In India if one does not know Tamil and Sanskrit, the person is unfit to write anything about Hinduism. They can only comment within a small circle. The 30, 000 lines written by 400+++ Tamil poets 2000 years ago have lot more on Vedic culture.

xxx

Conclusion

We don’t see any visible display of sex organs like phallus in any old or new Hindu rituals or festivals. Even the God of Love (Kaman) festival gives the message, ‘Destroy Kama through your Third (wisdom) Eye like Lord Siva (individually); but sex would survive Anangan (bodyless) for ever. Anangan is another name of Manmatha in Sanskrit. Manmatha means Mind churning. If one gets that Kama feeling his mind is churned. The Sanskrit word kama is used through out Sanskrit and Sangam Tamil literature. This gave birth to the English word (k)Amorous, amour etc. ( Probably the foreign invasion of North India changed Manmatha burning of Kaman Pandikai into Holika burning in the North).

Long Live Holi and Kaman Pandikai .

—subham—

TAGS – Bacchus, Dionysus, God of Wine, God of Love, Manmathan, Rathi, Cupid, Holi, Kaman Pandikai, Burning, Holika, Bodyless