FOR PICTURES AND ATTACHMENTS, GO TO swamiindology.blogspot.com
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,706
Date uploaded in London – – 2 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 2
கட்டுரையின் முதல் பகுதி நேற்று (1-3-2022) இங்கு வெளியானது. படங்களும் இணைப்புகளும் தெரியாவிட்டால் என்னுடைய மற்ற பிளாக்கிற்குச் swamiindology.blogspot.com செல்லவும்
Continued from No.6
7.ஓ புத்திமானே , மாதர்கள் புருஷனை வஞ்சனை செய்து, புருஷனுக்கு முன் உண்ணுதலும் , உறங்குதலும் செய்யப்போகிறார்கள்
(என் கருத்து – இப்போதே இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்லத் துவங்கியவுடன் குல தர்மங்கள் மாறிவிட்டன. இப்பொழுது எல்லோரும் திருக்குறளில் உள்ள கருத்துக்களையும் சங்க இலக்கியத்தில் காணும் “கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற கருத்தையும் எள்ளி நகை ஆடுகின்றனர் . ‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள்’ என்ற குறளை பெண்களுக்கு நடுவில் வோட்டுக்கு விட்டால், 100க்கு 90 சதவிகிதம் எதிர் வோட்டுப் போடுவார்கள். சங்க இலக்கியத்தில் கணவன் தெய்வம் என்று சொல்லி இருக்கிறதே என்றால், அப்போது எங்களையும் தெய்வம் என்று எழுதச் சொல்லுங்கள் அப்போது எங்கள் நிலையை எடுத்துரைப்போம் என்று விதண்டாவாதம் செய்வார்கள். அதாவது பழைய கருத்துக்களை நிராகரிப்பர். இதை 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் எழுதி இருப்பது அதிசயமே.)
கம்பியூட்டர், கால் சென்டர் தொழில்களில் பெண்கள் புகுந்தவுடன், தர்மம், தலை கீழாக மாறிவிட்டது.
8.பூமிகள் எல்லாம் சாரம் இல்லாமல் சுவல்ப பலனாய் (அதிக செழிப்பு இல்லாமல் ) பலிக்கப்போகிறது; பயிர்கள் யாவும் செழிப்பாக வளரமாட்டா .
9.ஜனங்களை பிணிகள் பீடிக்கப் போகிறதுகள் .விதவைகள் ஒரு புருஷனை மணந்து சந்ததிகளை யுண்டு பண்ணியும் , சுமங்கலி ஸ்த்ரீகள் புருஷனுட சண்டையிட்டு விதவைகளைப் போல ஆவார்கள்.
( என் கருத்து :– இது முற்றிலும் உண்மை ஆகிவிட்டது. மேலை நாடுகளில் இது முன்னரே நிகழ்ந்துவிட்டது. இந்தியாவில் பெரிய நகரங்களில் ஆண்டுக்கு 8000 (8000 divorce cases in every big city in India )டைவர்ஸ் கேசுகளுக்கு மேல் அதிகரித்துவிட்டன. மேலை நாடுகளில் single mothers சிங்கிள் மதர்களுக்கு சலுகைகள் அதிகம்; ஆகையால் பழைய கணவர்களை சட்ட ரீதியாக விவாக ரத்து (Divorce) செய்துவிட்டு அவருடன் நண்பன் போல வாழ்வது. அல்லது மற்ற ஆண்களுடன் சகஜமாக பழகுவது சர்வ சாதாரணம் .இப்படி வாழ்வதால் எல்லா ஆண்களையும் எப்போதும் அவர்கள் கவர முடிகிறது. இந்தியாவில் நடிகர், நடிகையிடம் காணப்படும் இவ்வழக்கம் பொது வாழ்விலும் பெருகும் என்பது இந்த வாக்கியத்தின் பொருள் )
சீன வைரஸ் Chinse Virus உலகைத் தாக்குவதற்கு முன்னர் இதைப் படித்திருந்தால் நமக்கே பொருள் தெரிந்து இருக்காது. சீன வைரஸ் பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட பின்னர், ஒரு டாக்டர் கூட இனிமேல் நோய்கள் பற்றி ஆரூடம் கூற முடியாது. நாளை என்பது நம் கையிலா, நமன் கையிலா என்பது டாக்டர்களுக்கே தெரியாது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே இதை ஒருவர் எழுதி வைத்தது அதிசயமே.)
10.கலியுகத்தில் ஈவதில் விருப்பமுள்ளவன் தரித்திரனாகியும் , கிருபணன் (Miser) தனிகனாகியும், , பாபியானவன் தீர்க்க வயதுள்ளவனாகியும் , அல்ப ஜாதியில் பிறந்தவன் மஹாராஜாவாகியும், உத்தம குலத்தில் பிறந்தோர்களால் சேவிக்கவும் படுவான்
(என் கருத்து:– இதை இந்தியாவின் பல மாநிலங்களில் காண்கிறோம். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நந்த வம்சத்து சூத்திரர்கள் மற்ற மூன்று வர்ணத்தாரையும் கொடுமைப்படுத்தவே, சாணக்கியன் என்னும் உச்சுக் குடுமி பார்ப்பான், மயில் வளர்க்கும் வைஸ்யனை மெளரிய மன்னன் ஆக்கி, அலெக் சாண்டரையே திரும்ப ஓடும்படி செய்தான். அதற்குப் பின்னர் ஆண்ட வைஸ்யர்களான குப்தர்கள் ஆட்சி, இந்தியாவின் பொற்காலம் எனப்படுகிறது அதற்கு முன்னர் இந்தியாவை ஆண்ட 154 மன்னர்களும் க்ஷத்ரியர்கள் . அவர்கள் 6000 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டதாக கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்துள்ளனர்.)
11.கலியுகத்தில் மேகங்கள் பெருங்காற்றில் அடிபட, சுவல்ப (கொஞ்சம்) மழை வருஷிக்கும். பூமி முழுதும் க்ஷஆமம் நிறைந்திருக்கும்
12.கலியுகத்தில் எல்லா ஜனங்களும் வேதாந்தம் பேசுவார்கள் ; ஒருவரும் தத்துவத்தை அறியார்கள். அந்தணர்கள் வெகு வாதங்களைப் பண்ணிக்கொண்டு வேஷத்தால் மாத்திரம் பிராமணத் தன்மையை அடைவார்கள்
(என் கருத்து:– இது 100 சதவிகிதம் உண்மை. சங்க கால இலக்கியங்கள் முத்தீ அந்தணர் என்று போற்றுகின்றன. நான் மறை அந்தணர் என்று வாழ்த்துகின்றன. இப்போது மூன்று தீயை தினமும் வழிபடும் அந்தணன் இல்லவே இல்லை. நான் மறைகளில் ஒரு வேதத்தை முழுக்கப் படித்து , அதன் படி வாழ்க்கை நடத்துவோரும் குறைவே .சூரிய உதயத்துக்கு முன்னர் எழுந்து குளித்துவிட்டு, வழிபடும் பிராமணர்கள், சம்பந்தர் காலத்துடன் போய்விட்டார்கள். ஆனால் அத்தனை பயல்களும் பூணுலை மட்டும் மாட்டிக்கொண்டு “நான் ஐயர் ஆகையால் எப்போதும் HIGHER ஹையர் / உயர்வானவன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
கண்டவன் எல்லாம், பிளாக் BLOG எழுதி வேதாந்தத்தையும் கோவில் பற்றியும் விளக்குகிறான்.
13. கலியுகத்தில் மனிதர் பொய்யை சத்தியமாகவும் மெய்யை அசத்தியமாகவும் செய்து, வேத மார்க்க கர்மங்களை தூஷித்து, நீதியை யனுசரிக்க மாட்டார்கள்
(என் கருத்து:– இது பெரும்பாலும் சரியே; வக்கீல் தொழில் புரிவோரும், கோர்ட் ஜட்ஜ்மென்டுகளை படிப்போரும் இது முற்றிலும் உண்மை என்பர். பொய்யை மெய்யாகக் காட்டத் துடிப்பவர்கள் வழக்கறிஞர்கள் . பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், நீதித் துறையில் இருந்தவர்கள் இப்படி நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்
14.கலியுகத்தில் குருக்கள், சீஷனென்று சிலரை சேர்த்துக் கொண்டு கட்டுக்கதைகளை சொல்லி பணத்தைப் பறிப்பார்கள் . மோக்ஷ மந்திரங்களை தாங்கள் அனுஷ்டிக்காமல் உபதேசம் பண்ண வருவார்கள்
( சிறையில் உள்ள பாபாக்கள் , வழக்கில் சிக்கிய சாமியார்களின் எண்ணிக்கை இதை சரி என்று நிரூபிக்கிறது)
15.கலியுகத்தில் சில குருமார்கள் நித்திய கருமங்களை இழந்து , இதரர்களுக்கு மாத்திரம் தியானத்தைப் போதித்து குலிங்க பக்ஷிகள் போல சஞ்சரிப்பார்கள்.
16.கலியுகத்தில் பிராம்மணாதி வருணங்கள் நித்திய கர்மாக்களை இழந்து அதர்மங்களைச் செய்து, சாராயம், மாம்ஸம், கள் முதலான தாமஸ பதார்த்தங்களை புஜித்து உலகத்து ஜனங்களை நிந்திக்கப் போகிறரர்கள்
மூன்று வர்ணத்தாரும் அவரவர் செய்ய வேண்டிய நித்திய வழிபாடுகளை இழந்தது உண்மையே. மது பானம் , மாமிசம் சாப்பிடும் உயர்சாதியினரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது . வீட்டில் Liquor Bottles பாட்டில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
17.கலியுகத்தில் வித்தியா குரு வென்றும், மந்திர உபதேச குருவென்றும் சிஷ்யன் என்றும் பேதமில்லாம, நாம வாசத்தால் மட்டும் பேதத்தையடைந்து ஆச்சாரிய பத்கினியை, சீஷனும் சிஷ்ய பத்தினியை குருவும் அனுபவிக்கப் போகிறார்கள்.
18. கலியுகத்தில் எவன் தனிகனோ அவன் நல்ல குலத்தில் பிறந்தவன் ஆகிறான். நல்ல குலத்தில் பிறந்து தரித்தரன் ஆனபின்னர், அவன் துஷ்க்ருதன் ஆகிறான் . சிலவிடங்களில் ஜாதி,பேதமில்லாமல் இருக்கும்.
19.கலியுகத்தில், மிருகம் முதலான ஜந்துக்கள் வயிற்றில் விசித்திர கர்மமும், கலியின் முடிவில் மனுஷ யோனியில் அல்ப மிருகங்களும் உண்டாக்கப் போகிறது
20.யோகிகளுள் சிறந்தவரான சூத புராணிகர், கலியுக தர்மங்கள் யாவற்றையும் ரிஷிகளுள் சிறந்தவரான வியாச முனியிடத்தில் நின்று கேட்டு பரம ஆச்சர்யத்தை அடைந்து, மறுபடியும் கிருத யுக தர்மத்தை கேட்டார்கள் .
சம்பூர்ணம்
–subham–
tags- tags- இலங்கை, கல்கி அவதாரம்-2, கல்கி புராணம்-2,