WRITTEN BY S NAGARAJAN Post No. 10,674 Date uploaded in London – – 20 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலம் கனியாத வரையிலும் ஒருவன் தன் எதிரியை தோளில் சுமக்க வேண்டும். காலம் கனிந்து விட்ட நேரத்தில், குடத்தை பாறையில் மோதி உடைப்பதைப் போல, அவன் அந்த எதிரியை அழிக்க வேண்டும்,
One should carry his enemy on the shoulder as long as the time is unfavourable. As soon as the proper time arrives, he should destroy him as one would break a pitcher on a stone.
ஒருவன் மூத்தவனாக இருந்த போதிலும் கூட நல்ல நடத்தை உடையவனாக இல்லாதிருப்பின் அவனை மதிக்கக் கூடாது. இதற்கு மாறாக, கீழ் ஜாதியில் பிறந்திருந்தாலும் கூட ஒருவன் நல்ல நடத்தையுடன் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருந்தால் அவனை மதிக்க வேண்டும்.
One should not respect a person devoid of good conduct even though he is elder. (On the contrary) even a person of low caste should be honoured if he knows rules of good conduct and behaves properly.
ஈனர்களை ஒரு போதும் அண்டக் கூடாது. ஒருவன் எப்போதும் மஹத்தானவர்களையே நாட வேண்டும். மதுவை விற்கும் ஒரு மாதுவின் கையில் பால் இருந்தால் கூட அது மது என்றே கூறப்படும்.
Mean people should not be resorted to. One should take refuge with great people. Even the milk in the hand of a wine selling women is mentioned as wine.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(Article already published in Tamil here)
Bhumi Sukta from Atharvana Veda (Book/Kandam 12) continued………..
Please see the attachments for the original Sanskrit and translation of the verses.
In the stanza or mantra 52, we see the poet praying for the welfare of every household. This is the uniqueness of the Vedas. They pray for ‘Us’ and not ‘Me’. There is a beautiful colour description. The morning and night are described as Red and Black. Tamils say Night and Day. Sanskrit literature says Day and Night. This leads me to a hypothesis. Why is it reversed. We see it in many other expressions too. This , I think, shows the way they wrote the script. Since Vedic people in Indus valley wrote from right to left and the Tamils came later wrote from left to right like modern languages, this reversal happened. Aho Ratri in Sanskrit and Pahal/Day , Iravu/Night in Tamil.
XXXX
In the stanza or mantra 53, we see great self confidence in the Vedic community. They did not expect any freebies from the Government or kings. They did not go for ‘buy one get one free’. The poet says the God has given me the whole wide place and intellect; I am happy
He says I have got sky and earth; all the Vedic gods have given me intellect.
Xxxx
In the stanza or mantra 54
VENI VIDI VICI (Came, I Saw, I Conquered)
Julius Caesar’s (47 BCE) famous words Veni, Vidi, Vici ( I came, I saw, I conquered in Latin) are known to most of you. But they are only 2100-year-old. Thousands of years before Julius Caesar, we see Vedic poet declaring “ I AM VICTORIOUS; I AM CALLED THE MOST EXALTED ON EARTH, A CONQUEROR EVERYWHERE, A CONQUEROR OVER EVERYTHING, I AM A VICTOR ON EVERY SIDE”.
Probably Caesar learnt it from us. I say it with a proof. The Vedic Mitra cult was borrowed by the Iranians (also known as Parsis or Zoroastrians) from the Hindu Vedas and spread it to Rome. Mithra cult was at a peak in Rome around Caesar’s period. By that time it became a secret cult practised in underground temples by the soldiers. Now anyone visiting Roma in Italy can see them. It went there via Iran/ Paraseeka in a deteriorated form. Parsi’s Veda Zend Avesta relegated Indra to back , dubbing him as a demon, but retained Mitra-Varuna in high position. Throughout the Rig Veda we see Mitra-Varuna pair and Indra-Agni pair. Parsis has the Mitra prayer which is recited by every brahmin in the morning (Mitrasya …… mantra in the morning Sandhya Vandana). It shows the Romans were familiar with Vedic Mantras. Historians like Herodotus also said Indians formed a big battalion in the Persian army 2400 years ago.
This is the Self Confidence, positive thinking, we see throughout the Four Vedas. Atharvana is the last of the four Vedas.
Greatest of the modern Tamil poets, Subrahmanya Bharati also echoed it in his verses:-
SUCCESS
(1).SUCCESS in all the undertakings
SUCCESS wherever the eyes do fall
SUCCESS crowning each utterance,
These I sought and Kali gave!
Though a god should stand in the way
Or the race of man be ranged against
Kali great in grace would quell.
(2).SUCCESS sure to all thoughts
Everywhere and in everything!
Dear to me like eyes and life
Here graced me Mother Kali!
Wont earth and air, and fire and water
And heaven also before them bow
Won’t serve adore and serve,
Such as hail Kali’s feet?
(Kali= Mother Earth; Bharat= whole earth in Atharva Veda)
Xxxx
In the stanza or mantra 55
Here we see the poet describing the changing world. He says the earth is progressing forward (in space, in time and in customs). Even Devas/ heavenly angels praise the earth; because of Devas accolades, the glory of the earth has increased. Now it is known in all the four directions. If we replace the word earth with Bharat/ India it would be more appropriate. That is what the great poet did in his Tamil poem CHATRAPATHY SHIVAJI:-
Lines 35 to 40
Divine home of angels! Glorious land
Eagerly sought by the holy Munis(saints)
No imperfection mars this land of wisdom!
Majestic land by celestials sought
Is Bharat’s glory by me effable?
You are her children never forget this.
To be continued……………………….
tags- Self confidence, Success, Veni, Vidi, Vici, Vedic Society
WRITTEN BY B.KANNAN, DELHI Post No. 10,672 Date uploaded in London – – 19 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
கவி சாமர்த்தியம் . Written By B.KANNAN, DELHI
அன்பார்ந்த தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம். இப்பதிவில் நாம் பார்க்கப் போவது பாவேந்தர்களின் நாவன்மை, வாக்கு சாதுர்யம்,எந்தச் சூழ்நிலையையும் திடத்துடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியத் தையும் பற்றிதான் வாருங்கள் இராமநாதபுர சமஸ்தானத்துக்குள் பயணிப்போம்…
இராமநாதபுரத்து அரசர்களாகிய சேது வேந்தர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் புகழ் பெறுவதில் பெருவேட்கை உடையவர்கள். சங்க காலத் திற்குப் பிறகு அங்கங்கே சிற்றரசர்களுடையக் கொடைத் தன்மையால் தமிழ்ப் புலமையைக் கைவிடாமலும்,
வறுமையிலிருந்துத் தங்களைத் தற்காத்துக் கொண்டும் வாழ்ந்து வந்த புலவர்கள் பலர். அவர்கள் அவ்வப் போது தம்மைப் பாதுகாத்த உபகாரிகளைப் பாடிய பாடல்கள் பல. சேதுபதி மன்னர்களால் ஆதரிக்கப் பெற்றத் தண்டமிழ்ப் புலவர் ள் பாடிய பாடல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவர்களுள் இரகுநாத சேதுபதி மன்னர் தமிழன் பும் வள்ளன்மையும் மிக்கவர். அவருடைய அரசவையில் அமிர்தகவிராயர், ஆனந்த கவிராயர்,சவ்வாதுப்புலவர்,சர்க்கரைப் புலவர் முதலிய பலர் இருந் துச் சிறப்பித்துள்ளனர்.
இரகுநாத சேதுபதி வேந்தருடைய ஆஸ்தானத்தில் இருந்த அனந்த கவி ராயரும் அமிர்த கவிராயரும் உறவினர்கள்; முன்னவர் தமிழ்ச் செய்யுட் களை விரை வில் பாடக் கூடியவர். மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி என்ற நூலைப் பாடியவர் அவரே. அப்புலவர் தம் அரசரைப் பாராட்டிப் பல செய் யுட்களை இயற்றினார். சில பிரபந்தங்களைப் பாடியிருக்கவும் கூடும். ஆனால், அவை இப்போது கிடைக்கவில்லை. பாவாணர் தம்மைப் பாமாலை களாற் புனையப் புனைய அவர்களுக்குப் பரிசு பல வழங்கி ஆதரித்துப் பாது காத்து வந்த சேதுபதி வேந்தர் அனந்த கவிராயருக்கு மானூர் என்றதோர் ஊரை வழங்கினார். அது நல்ல வளப்பமுடையது.
மானூரைப் பெற்ற கவிராயர் மிக மகிழ்ந்து, “மகாராஜா அவர்கள் பல கலை களைத் தம்மிடம் கொண்டு மானை எனக்கு வழங்கினார்கள்” என்று சாதுரி யமாகக் கூறினார். கலையறிவு உள்ளவர் என்பதாலேயே இந்தப் பரிசு வழங் கினாரென்ற கருத்தில் இவ்வாறு கூறினார். இந்த வாக்கியத்தில், “அரசர் பல ஆண்மான்களை வைத்துக் கொண்டு எனக்கு ஒரு பெண்மானை அளித்தார்” என்றும் ஒரு பொருள் தொனிக்கின்றது. அது கேட்ட அரசர், புலவருக்குத் தான் ஒன்றும் சளைத்தவர் இல்லை என்ற தொனியில் “உங்கள் மானுக்குத் துணையாகக் கலையும் தருகிறேன்” என்று சொல்லிக் கலையூர் என்றதோர் ஊரையும் கவிராயருக்குப் பரிசாக அளித்தார். அரசருடைய சாதுரியத்தையும் வள்ளன்மையையும் புலவர்கள் பாராட்டினார் கள். அனந்த கவிராயர் மானூரையும் கலையூரையும் ஒருங்கே தமக்கு உரியனவாக்கிக் கொண்டார்.
புலவர்களுக்குள் போட்டி வந்துவிட்டால் அப்பொழுது வெளிவரும் நூலோ செய்யுளோ சிறந்ததாக இருக்கும். இதனை அறிந்த சேதுபதி அரசர் இரண்டு புலவர்களுக்குள் போட்டி விளைவித்துக் கலைவிநோதம் காண்பார். அந்தப் போட்டியால் மனவேறுபாடு உண்டாகாதபடி பார்த்துக் கொள்வார்.இறுதியில் இரு சாராருக்கும் ஏற்றபடி பரிசளித்து மகிழ்விப்பார். அந்த ஆஸ்தானத்தில் இருந்த சர்க்கரைப் புலவர் சவ்வாதுப் புலவரென்னும் இருவரிடையேயும் இத்தகைய வாதம் நடப்பதுண்டு. ‘சர்க்கரை தொண்டைமட்டும்; சவ்வாது கண்டமட்டும்’ ( சீனி தொண்டைக் குழி வரை இனிக்கும், சவ்வாதோ முன் கழுத்தின் மேல் மணக்கும்) என்னும் பழமொழி ஓன்று அவ்விரு புலவர்கள் சம்பந்தமாக இராமநாத புரத்தில் வழங்கி வருவதைக் கேட்கலாம்..
உறவினர்களாகிய அமிர்த கவிராயரும் அனந்த கவிராயரும் ஒருமுறை ஒரு கவிதைப் போரில் ஈடுபட்டார்கள். வண்ணமொன்றைக் குறித்த கால வரையறைக்குள் இருவரும் பாட வேண்டுமென்றுத் தீர்மானமாயிற்று., ( பாடலில் வரும் நடைநலத்தை இது குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப் பாங்கு வேறுபடும்).அதில் இன்ன இன்ன வார்த்தை களும் இன்ன இன்ன பொருளும் இன்ன இன்ன முறையில் அமைய வேண்டுமென்றும், யார்முதலில் பாடி முடிக்கிறாரோ அவர் மற்றவரின் காதை (வில்லிபுத்தூரார் போல்) துரட்டியால் அறுத்து விடுவதென்றும் வரையறை செய்து கொண்டனர். அரசவையில் அனைவர் முன்னிலையில் அது நடைபெற்றது.
இருவரும் வண்ணம் பாடத் தொடங்கினர். அமிர்த கவிராயர் வண்ணம் பாடி எழுதி முடித்து விட்டார்.அப்போது அனந்த கவிராயர் இறுதிவரியை எழுதிக் கொண்டிருந்தார். அமிர்தனார் கையில் துரட்டியை எடுத்துக்கொண்டு, “இவரே தோற்றார்; இன்னும் வண்ணத்தை முடிக்கவில்லை. இவர் காதை அறுத்து விடுவேன்” என்று அனந்தனாரை அணுகினார். அதற்குள் அனந்த னார் தன் வண்ணத்தை முடித்துவிட்டு, “பைத்தியமே! காதிருந்தாலல்லவோ அறுக்க முடியும்? அனந்தனுக்குக் காது ஏது?” என்று சாதுரியமாகக் கேட்டார். அனந்தன் என்பது ஆதிசேஷனது பெயர். பாம்புக்குக் கண்ணே காதாக உதவு வதென்றும் அதற்குத் தனியே காதில்லை யென்றும் சொல்வார்கள். அனந்த னுக்குக் காது ஏதென்ற வாக்கியம் ஆதிசேஷனுக்குக் காதில்லையென்ற பொருளைத் தோற்றச் செய்தது. அனந்தனார் தாம் தோற்றதாகச் சொல்லிக் கொள்ளாமல் சாதுரியமாக இவ்வாறு கேட்கவே அனைவரும் கொல்லென்று நகைத்தார்கள். அமிர்த கவிராயர் துரட்டியைக் கீழே போட்டு விட்டார்.காதை அறுக்கவேண்டுமென்பது தன் நோக்கமல்ல எனவும் கூறிச் சமாளித்தார்!
அரசர் அனந்த கவிராயரது பேச்சினால் கவரப்பட்டார். அப் பேச்சுக்காகத் தனியே பரிசு வழங்கப்பட்டது. “அனந்த கவிராயர் பாட்டுக்கும் பரிசு பெறு வார்; பேச்சுக்கும் பரிசு பெறுவார்” என மற்றவர் பேசிக் கொண்டனர்.
ஒரு நாள் அரசாங்க அலுவல்கள் முடிந்த பின் பணிச்சுமை அகன்றதும் அனைவரையும் தங்கள் நாவன்மையால் மகிழ்விக்கப் புலவர்கள் ஒன்று கூடியிருந்த சபையில் நடுநாயகமாய் ரகுநாத சேதுபதி வீற்றிருந்தார்.
புலவர்கள் மிக்க இடத்தில் தமிழையன்றி வேறு எதைப் பற்றிப் பேச்சு நிகழப் போகிறது? அங்கே இருந்த மதிமந்திரிகளுள் ஒருவர் புலவர்களை நோக்கி இன்று மகாராஜாவைப் பற்றி ஓர் அழகான செய்யுளை நீங்கள் இயற்ற வேண்டும் என்று சொன்னார். மற்றொருவர், எல்லாரும் புகழ்கிற மாதிரி இருக்கக் கூடாது. மகாராஜா தாம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்ததாகப் பொருள் அமைத்துப் பாடல் இயற்ற வேண்டும் என்று யோசனை சொன்னார். வணங்கா முடியையுடைய மகாராஜா தலை வணங்கினதாக ஒரு செய்யுள் சொல்லலாமே என்று வேறொரு மந்திரி சூசனைத் தெரிவித்தார். தான் பிறருக்கு முன் தலைக் குனிவதா என்ற எண்ணம் அரசரின் முகத்தில் கோபக் கீற்றாக வெளிப்பட்டது.
அதைக் கண்டுகொண்ட ஒரு புலவர் பேச்சின் போக்கைத் திருப்பினார். சிவபெருமானுக்கு மகாராஜா வணங்கினாலும் அவருடைய திருமுன் உலகமே வணங்கி நிற்கிறது என்று சாதுரியமாகச் சேதுபதியின் வணங்கா முடியும் குனிந்துப் போகும் சந்தர்ப்பத்தைப் புலப்படுத்த,அரசருக்குக் கோபம் அடங்கிவிட்டது. மற் றொரு புலவர் அது மட்டுமா? வேறொரு சமயத்திலும் மகாராஜாவின் திருமுடி வளையலாம். ஆனால் அதன் பயன் இன்ப சுகம் என்றார். அதன் உட்பொருளைப் புரிந்துகொண்ட மன்னர் முகத்தில்புன்னகை ஒளிர்ந்தது.
‘எனக்குப் பாட்டொன்று ஞாபகம் வருகிறதே’ எனத் துள்ளியெழுந்த ஒருவர், இச்சமயத்துக்கு அது உகந்ததாய் இருக்குமா எனத் தயங்கினாலும், பாடி வைப்போமே என்று முன்வந்தார். ஒரு முடி திருத்தும் வினைஞனை (HAIR DRESSER)ப் பற்றிக் கவியரசர் கம்பர் பாடியப் பாட்டே அது.
எத்தகையப் பெருந்தனக்காரராய் இருந்தாலும் முடி நிரம்பியத் தலை எனும் மைதானத்தைத் திருத்தம் செய்யக் கவனமாய்க் கையில் கத்தியுடன் காத்தி ருக்கும் முடிதிருத்துபவரின் முன், தலை வணங்கியேத் தீரவேண்டும் என்ற கருத்துடையப் பாடல் அது. எடார்–முடி நிரம்பிய தலை, மைதானம் சத்திரம்–கையிலுள்ளக் கத்தி, ஆராதார்–விருப்பம், வணங்காதவர் ஒரு மந்திரி, இவ்வளவு தானா? இதற்கு மேலே சாமர்த்தியமாகச் சொல்ல ஒன்றும் தோன்றவில்லையா? என்று கேட்டார்.
அப்போது சவ்வாது புலவர் தொண்டையைச் சிறிதே கனைத்துக் கொண்டுச் சொல்ல ஆரம்பித்தார். இவர் ஓர் இசுலாமியத் தமிழ்ப் புலவர் ஆவார். சேதுபதி ரகுநாயகன், விசயானந்த ரங்கன் ,பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை,
முத்து கிருஷ்ணன், கச்சி செல்லப்பன், ஆகிய வள்ளல்களை இவர் பாடி யுள்ளார் “ஆம். மகாராஜாவின் முடி வணங்கும் சந்தர்ப்பம் ஓன்று எனக்குத் தெரியும்” என்றார். எல்லோரும் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந் தார்கள். “வணங்காத மகாராஜாவின் பொன்முடி வணங்கும்; அதுவும் பகை மன்னருடைய முன்னிலையில் வணங்கும்!” என்றார். இது என்னடா, இவர் ஏதோ ஏடாகூடமாகப் பேசுகிறாரே, மன்னர் கோபப்படுவாரே என அனைவ ரும் திகைத்தனர். யோசித்துப் பேச வேண்டும், புலவரே! என்று ஒரு மந்திரி எச்சரித்தார் “ஆம், நம்முடைய வணங்கா முடியையுடைய சேதுபதி மகாராஜாவின் திருமுடி பகைவர் முன்னிலையில் வணங்கும் என்றுதான் சொல்கிறேன். பலமுறை யோசித்துத்தான் சொல்கிறேன். அப்படி வளைவதனால் நம்மு டைய மகாராஜாவின் பெருமை தான் ஓங்கித் தெரிகிறது. பகையரசரின் இழிவும் புலப்படுகிறது என்று கம்பீரமாகச் சொன்னார் புலவர். இந்த மூடு மந்திரம் ஒருவருக்கும் விளங்கவில்லை.
“போதும். போதும்.. எங்களைத் தவிக்க வைப்பது. விஷயத்தை வெளிப்படை யாகச் சொல்லிவிடுங்கள் என்று சிலர் வேகமாகக் கூறினர். புலவரும் புன்ன கையுடன் விளக்க ஆரம்பித்தார்.
“மகாராஜாவினால் தோல்வியுற்றப் பகையரசர்கள் கையில் தளை பூண்டு சிறைப்படுகிறார்கள். சில காலம் கழித்து மகாராஜாவுக்குக் கருணை பிறக்கிறது. பகைவர்களை விடுவித்துத் தளையைத் தறித்து விடுகிறார்.
அவர்களுள் சிலர் மகாராஜாவின் பாராக்கிரமத்துக்கு அடிமையாகி இங் கேயே குற்றேவல் செய்யத் துணிகின்றனர். மகாராஜாவுக்கு அருகிலிருந்து அவருக்கு வேண்டியப் பணிவிடைகளைச் செய்கின்றனர்.
மகாராஜா நல்ல இனிய வாசமுள்ள தாம்பூலம் தரித்துச் சுவைத்துவிட்டுத் திரும்புகிறார். அவர் குறிப்பறிந்த ஒரு பகையரசன் கையில் காளாஞ்சியை (பணிக்கம் -எச்சில் துப்பும் பாத்திரம்) ஏந்திக் கொண்டு மன்னர்பிரானுக்கு
அருகில் நிற்கிறான். அப்போது அந்தப் பகையரசனுக்கு முன்னே நம் மகா ராஜாவின் திருமுடி சற்றே வளையும். காளாஞ்சியில் எச்சில் தம்பலத்தைத் (தம்பர் என்றும் கூறுவதுண்டு) துப்பும்போது வளையாதா? அந்த வளைவி லேயே மன்னரின் வெற்றி மிடுக்குப் புலப்படவில்லையா?”
ஆஹா! என்ன சாமர்த்தியம்! என்ன அருமையான கருத்து! என்று அங்கே இருந்தவர்கள் ஆரவாரித்தனர். மகாராஜாவின் உள்ளம் மகிழ்ச்சி நிரம்பி அலர்ந்ததை அவர் முகத்தின் மலர்ச்சி தெரிவித்தது. புலவர் இந்தக் கருத் தைப் பாடலாகச் சொல்லலாமே என்று ஒரு மந்திரி சொல்லும்போதே, இதோ, சொல்கிறேன், கேளுங்கள் என்று சவ்வாதுப் புலவர் பின்வரும் அழ கிய பாடலைச் சொன்னார்.
“கிளையாளன் சேதுபதி ரகு நாயகன் கிஞ்சுகவாய் இளையார் கலவி யிடத்தும் நம் ஈச ரிடத்தும் அன்றி வளையாத பொன்முடி சற்றே வளையும் மகுடமன்னர் தளையாடி கையில் காளாஞ்சி ஏந்தும் சமயத்துமே”. இதன் பொருள் :
மந்திரி முதலிய சுற்றத்தையுடைய ரகுகுநாத சேதுபதியினது மகுடம், முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயையுடைய இளம் பெண்களோடு இன்புறும் சமயத்திலும் சிவபெருமான் முன்னிலையிலுமன்றி வணங்காத, பொன் அணிந்த திருமுடி, மகுடமணிந்த பகையரசர்கள் விலங்கு பூட்டியி ருந்த தம் கைகளில் காளாஞ்சி ஏந்தும் சமயத்திலும் சற்றே வளையும்.
கிளை – சுற்றம். கிஞ்சுகம் – முள் முருங்கை. இளையார் – இளம் பெண்கள். தளை – விலங்கு. ஆகா, என்னே புலவரின் கற்பனை வளம்! சங்கம் வளர்த்த கூடல் மாநகருக்கு எவ்வளவு பெருமையோ அதற்குச் சற்றும் குறைவின்றித் தமிழைப் போற்றிப் பாதுகாத்து, பேணி வளர்த்து, பற்பல அரிய தமிழ் நூல்களைப் புலவர்கள் மூலம் இயற்ற வைத்துப் பெருமையும், புகழும் சேர்த்ததில் பெரும்பங்கு ஆற்றியவர்கள் இராமநாதபுர சமஸ்தான மன்னர் பரம்பரையினர். அவர்கள் அரசாட்சி செய்த காலகட்டம் தமிழுக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையல்ல!
புலவர்களிடம் நாம் காண்பது அவர்களின் சாமர்த்தியம் மட்டுமா? குறும்பு, குசும்பு, நக்கல்,ஏகடியம் கலந்தப் பேச்சுகளுக்கும் குறைவில்லை. அவற்றை அடுத்துப் பார்ப்போம்…
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,671 Date uploaded in London – – 19 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
தசக்ரீவனான இராவணன் முக்கோடி வாழ்நாள் உடையவன். கொடுங்கோலன். அவனது அழிவுக்குக் காரணமாக இருந்தவள் ஒரு பெண். சீதையைச் சிறை எடுத்துச் சென்றவன் சின்னாபின்னமாக அழிந்து போனான்.
ஆனால் அந்த சீதை யார்? இதற்கு விடை காண மஹரிஷி குசத்வஜரின் சரித்திரத்தைப் படிக்க வேண்டும்.
ப்ருஹஸ்பதி மஹரிஷியின் புத்திரர் குசத்வஜர். இவர் மிகுந்த தவ வலிமை உடையவர். பிரம்ம தேஜஸுடன் கூடியவர். எல்லையற்ற அறிவுள்ளவர். தினம் வேதம் ஓதுபவர். இப்படி தினமும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் அவரது வேத உச்சரிப்பிலிருந்து ஒரு கன்னி உருவானாள். அவளது பெயர் வேதவதி.
பார்த்தோர் மயங்கும் படியான கட்டழகு கொண்டிருந்த அவளது அழகு சொல்லுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவள் மண வயதுக்கு வந்தவுடன் அவளை மணக்க தேவர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட அனைவரும் போட்டி போட்டனர்.
அனைவரும் குசத்வஜரிடம் வந்து வேதவதியை தங்களுக்கு மணம் செய்து தருமாறு வேண்டினர். ஆனால் குசத்வஜரின் எண்ணமோ வேறாக இருந்தது. அவளை மஹாவிஷ்ணுவுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
ஆகவே யார் கேட்ட போதும் அதற்கு அவர் இணங்கவில்லை. இதனால் அவர் மீது பலரும் கோபம் கொண்டிருந்தனர். ஒரு நாள் இரவு தைத்திய அரசனான சம்பு என்பவன் அவரைக் கொன்றான். அவருடைய மனைவியும் அவருடனேயே இறந்தாள். வேதவதி தனக்கு விஷ்ணுவே மணாளனாக வர வேண்டும் என்று எண்ணி அதற்காகக் கடும் தவம் புரிய ஆரம்பித்தாள். ஒரு நாள் லங்காதிபதியான ராவணன் அவள் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தான். அவளைக் கண்டு அவள் அழகில் மயங்கினான்.
அவளுடைய வரலாறை நன்கு தெரிந்து கொண்டான். பின்னர் அவளை நோக்கி, “ஓ! அழகிய பெண்ணே. தவம் செய்வது முதியவர்களுக்கானது. நீயோ அழகான இளம் பெண். நீ எனது மனைவியாக ஆனால் உன் இஷ்டப்படி சகல சுக போகங்களையும் அனுபவிக்கலாம். நீ சொல்லும் விஷ்ணு எனக்கு தவத்திலாவது, வீரத்திலாவது, சுக போகங்களிலாவது ஒரு போதும் ஈடாக மாட்டான். என்னுடன் வா” என்றான். உடனே வேதவதி, “ விஷ்ணுவைப் பற்றி இப்படிச் சொல்லலாமா?! உம்மைத் தவிர வேறு யாராவது விஷ்ணுவை இப்பாடி நிந்திப்பாரா! இந்த இடத்தை விட்டுப் போ” என்றாள். ஆசை அடங்காத இராவணன் அவள் கூந்தலைப் பற்றி இழுத்தான்.
உடனே வெகுண்டாள் வேதவதி. தனது தவ வலிமையினால் தன் கையை, கத்தியாக ஆக்கினாள். இராவணன் பிடித்திருந்த கூந்தலை அவிழ்த்தாள்.
பின்னர் மிகுந்த கோபத்துடன் ஒரு அக்னியை வளர்த்து அதில் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தாள்.
அப்போது அவள் இராவணனை நோக்கி, “ ஓ! அரசனே! இதோ உன் எதிரிலேயே நான் அக்னியில் பிரவேசித்து என் உயிரை விடப் போகிறேன். உன்னால் அவமானப்படுத்தப்பட்டதால் நான் உன்னுடைய நாசத்திற்காகவே மறுபடியும் பிறக்கப் போகிறேன். பாபியாக உன்னைக் கொல்வது பெண்ணான எனக்கு அடுக்காது. உன்னை சபிக்கலாம் என்றால் அது எனது தவத்தைக் குறைத்து விடும். நான் ஏதேனும் தானம் செய்திருந்தாலோ அல்லது தவம் செய்திருந்தாலோ அக்னிக்கு ஆகுதி செய்திருந்தாலும் அடுத்த பிறவியில் ஒரு பெண்ணின் யோனியில் பிறக்காமல் தர்மவானான ஒருவருக்கு மகளாகப் பிறப்பேன்” என்று சொல்லி விட்டு அக்னியில் பிரவேசித்தாள்.
அவள் கூறியபடியே சீதையாக வந்து ஜனகருக்கு ம்களாக ஆனாள்.
விஷ்ணுவின் அவதாரமாகிய ராமரை மணந்து அவருக்குப் பத்தினியாக ஆனாள்.
அவளை இராவணன் சிறை பிடித்துச் செல்லவே ராமர் அவன் மீது போர் தொடுத்து அவனை இராமாவதாரத்தில் வதம் செய்தார். அயோத்திக்கு மன்னனாக முடிசூடி சீதையுடன் ராம ராஜ்யத்தை உருவாக்கிப் பரிபாலித்தார்.
ஆக மஹரிஷி குசத்வஜரின் சரித்திரம் ராமாயணத்துடன் ஒரு விதத்தில் தொடர்பு கொண்டதாக ஆகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF YOU DONT GET PICTURES HERE,, PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM FOR PICTURES
I have collected Sanskrit words from Zoroastrian scripture Zend Avesta and other Parsi literature. Most of them are from the books published in the past 125 years, particularly from the book The Parsis by Martin Haug. If I have guessed some other words derived from Sanskrit, I will give them withing brackets.
Avestan f = ph, p, bh
Sanskrit nabhi/navel = nafa
Vipra / clever = vifra
Drapsa /banner = drafsa
Prasna /question = frasna
Pasu /cattle = fsu; fsuta/cheese; fsumant= possessing cattle; fsuso-matra= cattle owner/ a charm
Stana /breast = fstana; stin/Armenian ;
Urdhvastanii / high breasts = eredva fnya
Piivas/ fat = pig/Baluchi =pih/Pahlavi
Pitu = pitu/food/avestan Meat and food)
(Pittu in Tamil as well/ Food in English)
Priya = friya
Adding ‘na’ makes a word negative ; Afrin=blessing; nafrin= curse
Fryn / blessing (is it vara/m?)
Prathama / first = fratema
Martin Haug shows that it is in Hebrew Old Testament with im suffix – partemim
Xxxx
X = k
Khara /donkey = xara
Kumbha = xumba /pot (Sombu in Tamil is a pot like vessel in Tamil)
Chakra /wheel = caxra
Deerga / long = Dareya
Kshar / flow= yzar or yzrad
Dhanus / bow = tanvan
XXX
ASHA = artam= Rta in Sanskrit
Sh = accented ‘r’
Mashyeng = martyaan in Sanskrit
Asha becomes Arta in royal names; it is RTA in Rigveda.
Ahura mazda = Asura Mahathaa; Oromazdes in Greek; Aryatarangini p.144
Arta = Rta in Rigveda
Angra Mainyu= Angaara manyu= Ahriman= Aryaman ; p 144
( I guess it as Ahankara Manyu= anger out of Ahankara= Ego)
Druja= falsehood (in Rig Veda as well)
Yima = Yama (it becomes Jamshed in Parsi names)
Dakma = burial ground ; Dakma means burning in Persian; originally Persians cremated; (later they threw the dead bodies to birds as the Parsis do now).
Zarathushtra = Jarath Twashtaar; the creator of Agni/fire; p.146 (other derivations given in my earlier article; Martin Haug says it means Elder Preacher or Teacher Jara+ Ushtra)
Arur- Maaghas = Ahura Mazda
Cyrus = Kyros= Kurush
Xxx
Genealogy of Cyrus = Kyros= Kurush
Brother – Airya Ramana = Arya Raman
Father – Chishpish (In Vishnu Sahasranama we have several names with Sri; is it Srisas?)
His father – Hakhamanush= Sakamanushya
Xxx
Gayamardhana – putative ancestor of Aryan race in Avesta ; page 148 (may be Jayamardhana)
He was followed by Havoshyaha , the king of Paradata dynasty , who settled in Mount Hara in East Persia
Yima , son of Vivahant ; Yama , son of Vivaswant in Sanskrit ; he pressed haoma/soma exceedingly liberally and gave the land peace, plenty and good climate
Xxx
Gaathaa (song), Indra, Mithra, Varuna, Aramaiti, Druj/g, Deva, Asura etc are used in Zend Avesta without much change; only difference is Deva=Demon; Asura= God in Zend.
H= S or Z
HUMATA= SU MATHI IN SANSKRIT (H=S)
HUKHTA= SU UKTA IN SANSKRIT
HVRASHTA = SU VARISHTA IN SANSKRIT
HAOMA = SOMA
VOHU MANO or BAHMAN = GOOD MIND
Mano =Mind = Manam are used in Sanskrit, Tamil and Avestan- three ancient languages for over 2000 years!
In the same way P/B= V in both Avestan, Persian and Tamil
(I have explained it in my article ‘Amazing Linguistics show Hindu Migration’)
xxx
Source books-
DR MODI MEMORIAL VOLUME, written by several scholars, Bombay ,1930
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 18
அதர்வண வேத பூமி சூக்தத்தை இன்று நிறைவு செய்வோம். கடைசி மந்திரம் கீதையின் கடைசி ஸ்லோகத்துடன் நிறைவு
அடைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
63ஆவது மந்திரம் கீதையின் 18-78 ஸ்லோகத்தில் உள்ள ஸ்ரீ , பூதி ஆகிய இரண்டு சொற்களை உடையது சிறப்புடைத்து . இதன் பொருள் ‘வளமும் பெருமையும்’ அல்லது ‘வெற்றியும் பெருமையும்’ என்பதாகும் . பெருமாள் கோவில்களில் பெருமாளின் இரு புறத்திலும் ஸ்ரீ தேவியும் பூ தேவியும் காட்சி தருகிறார்கள்
பூதி, விபூதி என்றால் பெருமை/ வளம் என்று சொல்லலாம்.
இதோ பகவத் கீதையின் கடைசி ஸ்லோகம்; இதை பூமி சூக்த கடைசி மந்திரத்துடன் ஒப்பிடுங்கள்
ஸ்ரீர் ,பூதிர், நீதிர் மதிர் என்ற சொல் அழகை நோக்கவும் ; இது கீதை .
இதன் 18-78 பொருள்
எங்கே யோகேஸ்வரனாகிய கிருஷ்ணன் இருக்கிறானோ
எங்கே வில் வீரனாகிய அர்ஜுனன் இருக்கிறானோ ,
அங்கேதான் மங்களமும், வெற்றியும், பெருமையும், உறுதியான நீதியும் இருக்கிறது என்பதே எனது துணிபு என்று சஞ்சயன் சொல்வதே கீதையின் கடைசி ஸ்லோகம் 18-78.
தென் கிழக்காசிய நாடுகளில் கொடிகட்டிப் பறந்த இந்து நாகரீக வம்சாவளியும் ஸ்ரீ விஜய என்றே அழைக்கப்பட்டது .
XXXX
இனிய பேச்சின் மஹிமையை வள்ளுவன், மநு ஆகியோர் புகழ்ந்தது எல்லோருக்கும் தெரியும்
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – 96
நல்லதே சொன்னால் தருமம் செழிக்கும்; அதர்மம் அழியும் என்பது வள்ளுவன் துணிபு.
பாடல்/ மந்திரம் 58
யத் வதாமி மதுமத் தத் வதாமி யதீக்ஷே தத் வனந்தி மா
த்விஷீ மாநஸ்மி ஜுதி மானவான்யான் ஹன்மி தோதஹ -58
பொருள்
நான் தேனினும் இனிய சொற்களைப் பேசுகிறேன்.என்னைக் கண்டவுடன் மக்கள் அன்புமழை பொழிகிறார்கள் .நான் உடனடியாக துணிந்து முடிவு செய்வேன். என் மீது கோபம் கொள்வோரை நான் ஒ டுக்குவேன் -58
இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி 4-13
XXX
பாடல்/ மந்திரம் 59
சந்தி வா ஸுரபிஹி ஸ்யோனா கீலாலோக்னீ பயஸ்வதீ
பூமிரதி ப்ரவீ து மே ப்ருதிவீ பயஸா ஸஹ –59
பொருள்
பூமாதேவியின் பால் தரும் ஸ்தனங்கள் அமைதியாகவும், சுகந்தமாகவும், இனிமையாயாகவும் பால் நிறைந்ததாகவும் உளது. அவள் அந்தப் பாலைச் சொறிந்து என்னை ஆசீர்வதிக்கட்டும்- 59
பாடல் 5-9ல் பால் நினைந்தூட்டும் தாயாக பூமியை வருணிக்கிறான் புலவன்
வானக் கடலின் அகத்திலே அவள் ஒளியுடன் நுழைந்தபோது விஸ்வ கர்மன் அவளை அவி உணவுடன் சந்தித்தான்; அப்போது ரகசியமாக வைக்கப்பட்ட பொருள்களுடன் போக பூமியான அவள் மக்களுக்கு ப்ரசன்னமானாள் – 60
விஸ்வ கர்மன் என்பவன் தேவ லோக தச்சன். அவனால் தட்டிக்கொட்டி, வடிவாக உருவாக்கப்பட்டது பூமி. அது வான மண்டலத்தில் ஒளியுடன் வல ம் வருவதை புலவன் காட்டுகிறான்.
XXX
பாடல்/ மந்திரம் 61
த்வமஸ்யாவபனீ ஜனாநாமதிதிஹி காமதுதா பப்ரதானா
யத் த ஊனம் தத் த ஆ பூரயாதி ப்ரஜாபதிஹி ப்ரதமஜா ருதஸ்ய -61
பொருள்
பூமா தேவியே , நீ மக்களுக்கு எல்லாம் தாய்போன்றவள் ; விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் அமுத சுரபி நீ. சனாதன விதிகளுக்குள் இயங்கும், முதலில் பிறந்த பிரஜாபதி , உன்னிடமுள்ள குறைகளை நிறைவு செய்கிறான் ; எது குறைவு படுகிறதோ அதை அளிக்கிறான்.
இந்த மந்திரத்தில் பூமியில் எந்தக் காலத்திலும் குறையே இராது; ஏனெனில் பிரஜாபதி, அதை வளப்படுத்திக்கொண்டே இருப்பான்; குறைந்துபோன பொருள்களை நிறைவு செய்கிறான் என்பார் புலவர்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே-
என்று ஞான சம்பந்தரும் பாடி இருக்கிறார். இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்பது அப்பர் வாக்கு
தீர்க்க ந ஆயுஹு ப்ரதி புத்யமானா வயம் துப்யம் பலிஹ்ருதஹ ஸ்யாம -62
பொருள்
பூமியே , உன்னிடம் பிறந்தோர் , எங்கள் நலனுக்காக,நோய் நொடியில்லாமல் இருக்கட்டும் . விழிப்புடன் நீண்ட காலம் வாழ்வார்களாகுக! உனக்கு நாங்கள் நண்றிக கடன் செலுத்துவோம்.
எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்; நோய்கள் பறந்தோட வேண்டும் என்கிறது இந்த மந்திரம்; நல்ல சிந்தனை ;
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.—
என்ற சம்பந்தர் பாடலை நினைவுபடுத்தும் மந்திரம் இது. அந்தணர் முதலான எல்லா ஜாதியினரும், பசுக்கள் முதலான எல்லா ஜீவராசிகளும் நலமே வாழ்க! அதர்மம் அழிக ; மழை பொழிக; ஆட்சி சிறக்க என்பது அவரது வேண்டுகோள்.
XXX
பாடல்/ மந்திரம் 63
பூமே மாதர்னி தேஹி மா பத்ரயா ஸு ப்ரதிஷ்டிதம்
ஸ ம் விதானா திவா கவே ஸ்ரீயாம் மா தேஹி பூத்யாம் -63
பொருள்
தாயே , தரணியே , என்னை உன் ஆசியுடன் உறுதியாக நிற்க வை. புத்திசாலியான நீ என் புகழ் ஓங்கும்படி செய்வாயாக கவிதா ராணியே ஒளிபடைத்த வாழ்வு கிடைக்க அருள் பொழிவாயாகுக -63
இந்த கடைசி மந்திரத்தில்தான் ஸ்ரீ, பூதி இரண்டும் வேண்டப்படுகிறது வைணவர்கள் நெற்றியில் இடுவது ஸ்ரீ சூர்ணம்; சைவர்கள் நெற்றியில் இடுவது விபூதி; அவ்விரண்டும் செல்வத்தையும் புகழையும் தரும் .
.ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா
மெய்மை கொண்ட நூலையே =அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா
நொய்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
என்ற பாரதியின் கருத்து அனைத்தையும் இந்த மந்திரங்களில் கண்டோம். மந்திரத்தை ஒத முடியாதவர்கள் , பாரதி பாடல் வரிகளை தினமும் உரத்த குரலில் ஒருமித்த மனதுடன் படித்தாலே பலன் கிடைக்கும்.
அதர்வண வேத பூமி சூக்தம் நிறைவு
XXXX SUBHAM XXX
tags- அதர்வண வேத, பூமி சூக்தம், நிறைவு, கட்டுரை 18,
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,668 Date uploaded in London – – 18 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிந்தாமணி ப்ரக்ஞா! – பகவான் ரமணரின் விளக்கம்! ச.நாகராஜன்
ரமணாசிரமத்தில் நடந்த சம்பவம் இது.
ஒரு நாள் டைனிங் ஹாலில் இரவு நேரத்தில் உணவு அருந்தும் போது பகவான் ரமணர் நார்த்தங்காய் ஊறுகாய் (Country organge pickle) இருக்கிறதா என்று கேட்டார். அங்கு அது இல்லை.
இதைக் கேட்ட சர்வாதிகாரி நிரஞ்ஜநானந்த ஸ்வாமிகளுக்கு கோபம் வந்தது.
மறு நாள் மத்தியானம் வழக்கம் போல ரமணாசிரமத்திலிருந்து வெளியிடத்திற்குச் செல்லும் கடிதங்கள் ரமணரின் பார்வைக்கு வந்தது.
ஜி.எல். நரசிம்மராவ் என்ற அணுக்க பக்தர் அதைக் கொண்டு வந்து பகவானின் பார்வைக்கு வைத்தார். அதில் சர்வாதிகாரி மதுரையிலிருந்த ஒரு பக்தருக்கு நார்த்தங்காய் அனுப்பி வைக்கும்படி எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.
அதைப் பார்தத பகவான் ரமணர் உடனே வெடித்துக் கூறினார் : “இவர்களுக்கு முக்திக்கு வழி நார்த்தங்காயில் தான் இருக்கிறது போலும்!”
“இல்லாவிடில் எதற்காக ஒருவருக்கு இப்படிக் கடிதம் எழுத வேண்டும்? வரவேண்டும் என்று விதி இருந்தால் தானாக அது வராதோ? உம், உங்களுக்குத் தோணியதைச் செய்யுங்கள்” என்று கூறி முடித்தார் பகவான்.
இதைச் சொல்லி விட்டு பகவான் கடிதத்தை நரசிம்மராவிடம் விட்டெறிந்தார்.
நரசிம்மராவ் நடுக்கத்துடன் அந்தக் கடிதத்தை எடுத்தார். அந்தக் கணமே ஒரு ரயில்வே காண்ட்ராக்டர் ஹாலுக்குள் நுழைந்தார். அவர் கையில் நன்கு மூடப்பட்டிருந்த இரு கூடைகள் இருந்தன. அவற்றிற்கு ரெயில்வே ரசீதுகளும் இல்லை. அந்தக் கால கட்டத்தில் ஆசிரமத்திற்கு எது வந்தாலும் முதலில் அது பகவானின் பார்வைக்குக் கொண்டு வரப்படும். இப்போது பகவான் சிரித்தார்.
“அதில் என்ன நார்த்தங்காய் இருக்கிறதோ? பாருங்கள்!” என்றார். அந்தக் கூடைகள் திறக்கப்பட்டன.
என்ன ஆச்சரியம், அதில் நார்த்தங்காய் தான் இருந்தது. உடனடியாக அவை சமையலறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஊறுகாய் போடப்பட்டது.
பின்னர் பகவான் கூறினார்: “அதில் ஒன்று இனிப்பு ஆரஞ்சு போல இருக்கிறதே. இன்னொன்று தான் நார்த்தங்காயோ!” உடனே ஒருவர் அதை சரி பார்க்க சமையலறைக்குச் சென்றார்.
சரி பார்த்ததில் பகவான் கூறிய படியே ஒன்று இனிப்பு ஆரஞ்சு. இன்னொன்று ஊறுகாய் போடுவதற்கான நார்த்தங்காய்.
இனிப்பு ஆரஞ்சுகள் உரிக்கப்பட்டு சுளைகள் அங்கிருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. அங்கிருந்த பக்தரான ஜி.வி.சுப்பராமய்யா என்ற பக்தர் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.
இதை அற்புதம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்று எடுத்துக் கொள்வதா? பகவானிடமே தன் சந்தேகத்தை அவர் கேட்டு விட்டார்.
உடனடியாக பகவான் விளக்கமாகப் பதில் கூறினார்; “ யோக வாசிஷ்டத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஞானிகளின் இதயத்தில் பொக்கிஷமாக இருக்கும் இந்த பிரக்ஞா, சிந்தாமணி ப்ரக்ஞா ஆகும்.’ இது நினைத்ததை உடனடியாக நிறைவேற்றி வைக்கும்.
பகவான் மேலும் விளக்குகையில் ஆதி சங்கரர் விவேக சூடாமணியில் ப்ரக்ஞா என்பதற்கு விளக்கம் தருகையில் , “ வாசனையற்ற சுத்தமான ப்ரக்ஞையில் தோன்றும் எண்ணம்” என்று கூறுவதையும் சுட்டிக் காட்டினார்.
பின்னர் கருணையே வடிவமான பகவான் அந்த இரண்டு மேற்கோள்களையும் தன் கைப்பட எழுதி ஜி.வி.சுப்பராமய்யாவிடம் கொடுத்தார்.
Sri Ramana Reminiscences என்ற தனது புத்தகத்தில் தனது நினவலைகளைப் பதிவு செய்துள்ளார் ஜி.வி.சுப்பராமய்யா. அதில் 14ஆம் பக்கத்தில் இந்த அபூர்வமான சிந்தாமணி ப்ரக்ஞா பற்றிய விவரத்தைக் கண்டு மகிழலாம்.
சுயநலமற்ற மஹரிஷிகள் நினைத்தது நடக்கும். அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு “பொருள்” தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Bhagavad Gita in one of Hindu’s most important scriptures. Hindus believe that Vyasa was Krishna’s contemporary, and Vyasa was the one who divided Vedas into four. So Krishna’s Bhagavad Gita is at least 5000 years old. Though the age of Zarathushtra and the Zend Avesta (Parsi religion) are debatable, they are at least 2600 years old. May be older than Buddha and Mahavir.
Scholars like Martin Haugh who have studied both Parsi (Zoroastrian) and Hindu scriptures thoroughly believe that some of the parts in the Zend Avesta (Vedas of Parsis) may be older than or earlier than Spitama Zarathushtra (Zoroaster in Greek writings) . Zoroastra is at least 2600 years old.
The basic teachings of Zoroastra are Good Thought, Good Word and Good Deed. This is called Tri Karana Suddhi in Sanskrit in Hinduism.
I am a worshipper of God (Mazda), I am a Zoroastrian worshipper of God … I praise good thoughts (humata), I praise good words (hūkhta), I praise good deeds (hvarshta). I praise the good Mazdayasni religion which allays dissensions and quarrels, and which brings about kinship or brotherhood.
This is in Zend Avesta, Bhagavad Gita, Valmiki Ramayana, Manu Smrti, Kalidasa’s Raghu Vmasa and Buddha’s Dhammapada, just to mention a few books.
xxx
17th Chapter of Bhagavad Gita explains the three principles in detail:-
DEED
देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् | ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते || 14||
deva-dwija-guru-prājña- pūjanaṁ śhaucham ārjavam brahmacharyam ahinsā cha śhārīraṁ tapa uchyate
BG 17.14: When worship of the Supreme Lord, the Brahmins, the spiritual master, the wise, and the elders is done with the observance of cleanliness, simplicity, celibacy, and non-violence then this worship is declared as the austerity of the body.
anudvega-karaṁ vākyaṁ satyaṁ priya-hitaṁ cha yat svādhyāyābhyasanaṁ chaiva vāṅ-mayaṁ tapa uchyate
17-5 Words that do not cause distress, are truthful, inoffensive, and beneficial, as well as regular recitation of the Vedic scriptures—these are declared as austerity of speech.
satyaṁ brūyāt priyaṁ brūyān na brūyāt satyam apriyam priyaṁ cha nānṛitaṁ brūyād eṣha dharmaḥ sanātanaḥ (Manu Smṛiti 4.138)[v4]
“Speak the truth in such a way that it is pleasing to others. Do not speak the truth in a manner injurious to others. Never speak untruth, though it may be pleasant. This is the eternal path of morality and dharma.”
BG 17.17: When devout persons with ardent faith practice these three-fold austerities without yearning for material rewards, they are designated as austerities in the mode of goodness.
Xxxx
Kalidasa’s Raghu Vamsa
Most famous poet of India Kalidasa also mentioned the Trikarana Suddhi in his Raghuvamsa.
5. kaayena= by bodily rigour – in upavaasa aadi vrata-s; vaacaa= by speech – by Veda paThana paaTheNa etc; manasaa api= gaayatrii japa aadiinaam api= by regular meditations, even by; vaasava dhairya lopi= indra’s, courage, denigrator; yat= which [tapaH= ascesis is there, that ]; shashvat sa.mbhR^ita.m= always, accumulated; maharSheH= of that great sage; tri vidha.m= three, kinds – of penances; tat tapaH= that, ascesis; antaraayaiH= by impediments; vyayam na apaadyate= wastage, not, getting; kaccit= I hope! – asks a question mixed with hope, the expected answer being ‘yes’ or ‘no’ according to the form of question and is translated by ‘I hope that etc…’
“The threefold ascesis of that great sage which has long been accumulated by him by the exercise of his body, speech and mind i.e., by way of bodily rigour, speech function in reciting Veda-s, and by mental contemplation on meditations respectively, and which triad of pertinacity disturbs even the firmness of Indra, does not suffer waste by any kind of impediment – I hope… [5-5]
In another place also, Kalidasa mentioned it.
वाङ्मनःकर्मभिः पत्यौ व्यभिचारो यथा न मे। तथा विश्वंभरे देवि मामन्तर्धातुमर्हसि॥ १५-८१
15-81. vAk manaH karmabhiH= by speech, mind and action; patyau me vyabhicAraH na yathA= reg. husband, to me, infidelity, if it is not there; tathA= in such case – if I were to be clean; hè vishva.nbhare= oh, mother earth; devi= oh, bhUdevi; mAm antardhAtum arhasi= me, to secrete, apt of you.
“If there has been no violation of duty on my part towards my husband either by Speech or Thought or Action, then, oh, Mother Earth, pray, be good enough to secrete me in thy womb… [15-81]
XXXX
This is also in the Uttara Kanda of Ramayana(97- 14/15.
Through sinful acts due to the Body, man becomes inanimate; through those of Speech, a bird or a beast; and through those of Mind, he is born in the lowest caste.—(12-9)
Xxxx
BRAHMINS SAY IT EVERY DAY
Brahmins in Hindu community say these three every day at the end of their thrice a day parayer in the Morning, Midd day and Evening:
Kayena vacha manasa indriyair va Budhyath manava va
Whatever I do by (with my) body, word, mind or intellect or natural impulses- all these I surrender to the supreme god Narayana (Narayana= one who resides in water)
Xxx
In Buddha’s Dhammapada
Dhammapada is the Veda for the Buddhists. All that is in the Dhammapada is considered Buddha’s words.
In the last chapter of Dhammapada , Buddha praises Brahmins sky high; but like Manu Smrti he also defines the Brahminhood. Buddha says
He who hurts not with his THOUGHTS or WORDS or DEEDS who keeps these THREE under control – him I call a BRAHMIN- verse 391
Earlier in another verse Buddha says,
There are men steady and wise whose BODY, WORDS and MIND are self controlled. They are the men of supreme self-control- verse 234
Xxx
The principle of Avatars is both in Zend Avesta and Bhagavad Gita (Please read my article KALKI AVATAR IN PARSI LITERATURE)
SAMBHAVAAMI YUGE YUGE
LORD KRISHNA says IN BHAGAVAD GITA,
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत | अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् || 4-7||
4.7: Whenever there is a decline in righteousness and an increase in unrighteousness, O Arjun, at that time I manifest Myself on earth.
We can see this in Parsi scripture too. In GATHA USHTAVAITI, were see
I replied to him: Firstly, I am Zarathushtra. I will show myself as a destroyer to the wicked, as well as to be a comforter for the righteous man As long as I can praise and glorify you O Mazda! I shall enlighten and awaken all that aspire to property.(8)
Xxxx subham xxxxx
tags- Good Word, Good thought, Good Deed, Zoroaster, Parsi, Bhagavad Gita, Manu, Kalidasa, Buddha,
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,666 Date uploaded in London – – 17 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்பன் தரும் காதல் காட்சிகள் ஆற்றைக் கடக்க உனக்குத் துணையாக வருபவர் யார்? ச.நாகராஜன்
கம்பன் எழுச்சிப் படலத்தில் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களில் ஆறு இளைஞர்களைச் சுட்டிக் காட்டுகிறான்.மூவரைப் பார்த்தோம். இன்னும் மூவரை இப்போது பார்ப்போம்.
அவளது கேஸம் சுருண்டு அழகாக அலை போல இருக்கிறது. அந்தக் கேஸத்தின் ஈர்ப்பினால் வண்டுகள் அவள் தலையைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றன. அந்த அழகியின் விழிகளோ கூர்மையாக இருக்கின்றன. அவளைப் பார்க்கின்றான் யானை போல நடந்து செல்லும் ஒரு வாலிபன். (சின்ன யானை நடையைத் தந்தது என்ற திரைப்படப் பாடலை இங்கு ஒப்பிடலாம்) அவள் கண்களின் கூர்மை அவன் சிந்தனையைத் தூண்டி விடுகிறது.
தன் கையிலிருந்த வேலைப் பார்க்கிறான். இந்த வேலின் நுனி கூர்மையா, இல்லை அந்தக் கண்கள் கூர்மையா என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறான்.
இந்த வேலை விட அந்தக் கூரிய கண்கள் மிகவும் ஆபத்தானவை என்ற முடிவுக்கு அவன் வந்து விடுகிறான். ஏனெனில் இந்த வேல், கேவலம், ஒருவனின் உடலின் மீது மட்டுமே பாய்ந்து அவனை வருத்த முடியும். ஆனால் அந்தக் கண்களோ எனது உயிரின் மீது பட்டு உயிரையே அல்லவோ வருத்துகிறது, ஆகவே அந்தக் கண்களே மிகக் கூர்மையானவை என்ற முடிவுக்கு வருகிறான்.
பாடலைப் பார்ப்போம்: சுழியும் குஞ்சிமிசை சுரும்பு ஆர்த்திட, பொழியும் மா மத யானையின் போகின்றான், கழிய கூரிய என்று ஒரு காரிகை விழியை நோக்கி, தன் வேலையும் நோக்கினான் -எழுச்சிப் படலம் பாடல் 34 பொருள் : சுழியும் குஞ்சிமிசை – சுழியலுடன் இருக்கும் ஒருத்தியின் கூந்தலின் மேல் சுரும்பு ஆர்த்திட – வண்டுகள் ஆரவாரித்துக் கொண்டிருக்க மா மதம் பொழியும் யானையின் போகின்றான் – மத நீரைச் சொரிகின்ற யானை போலச் செல்லும் ஒரு வாலிபன் ஒரு காரிகை விழியை நோக்கி – அழகியான அவளது கண்களை நோக்கி, அவை கூர்மையாய் இருப்பதைப் பார்த்து தன் வேலையும் நோக்கினான் – தனது வேலையும் நோக்கினான் (ஒப்பிட்டுப் பார்த்தான் – எது கூர்மை என்று)
இன்னொரு வாலிபன். பேரழகன். அவன் ஒரு பேரழகியைப் பார்க்கிறான். அவனுக்கு வந்தது ஒரு சந்தேகம். அலை போல் நீண்டு சுருண்டிருக்கும் கூந்தல் ஒரு புறம். தாமரை போன்ற அழகிய சிறு பாதங்கள் இன்னொரு புறம். நெருங்கிய ஆபரணங்களை அணிந்த பெருத்த மார்பகங்கள்; அழகிய வளையல்கள் கொண்ட அழகிய தோள்கள். ஆனால், அடடா, அவளது இடையைக் காணோமே! அது தான் அவனது சந்தேகம். சரி, இதை யாரிடம் கேட்பது.
அவளிடமே கேட்டு விடுவது என்று தீர்மானித்து அவளையே கேட்டு விடுகிறான். (அவள் நாணினாளா, கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாளா, என்பது நமக்குத் தெரியாது) கம்பன் தரும் காட்சியைப் பார்ப்போம்:
தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக் கருங் கண் வாள் உடையாளை, ஓர் காளை தான், ‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்! மருங்குல் எங்கு மறந்தது நீர்?’ என்றான். எழுச்சிப் படலம், பாடல் 35
பொருள்: தரங்கம் வார் குழல் – அலை போலச் சுருண்டு நீண்ட கூந்தலையும் தாமரைச் சீறடி – தாமரை மலர் போன்ற சிறிய பாதங்களையும் வாள் கருங் கண் – வாள் படை போன்ற கரு நிறமுள்ள கண்களையும் உடையாளை – கொண்டிருக்கும் பேரழகியைக் கண்ட ஒரு காளை – ஒரு வாலிபன் ‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்! மருங்குல் எங்கு மறந்தது நீர்?’ – ‘நெருங்கிய ஆபரணங்களை அணிந்த, மார்பகங்களையும் நீண்ட வளையலை அணிந்த தோள்களையும் உடையவரே!நீர் உமது இடையை எங்கு மறந்து வைத்திருக்கிறீர்?’
என்றான் – என்று கேட்டான். ஆக அந்த அழகியின் இடை கண்ணுக்குப் புலனாகாதவாறு அவ்வளவு நுண்மையாக இருக்கிறது.
கடைசியாக இன்னொரு இளைஞனை கம்பன் சுட்டிக் காட்டுகிறான். இவன் கொஞ்சம் குறும்புப் பேர்வழி! தைரியமாக ஒரு கேள்வியைக் கேட்டு நான் உதவிக்கு வரலாமா என்று கேட்கிறான். யமனைப் போல கொலை செய்ய வல்ல கண்கள் அவளுடையது. கண் ஜாடையினால் மட்டுமே அவள் பேசுவாள்; வாயைத் திறக்க மாட்டாள். அவளிடம் சென்ற ஒரு வாலிபன்,
ஆற்றைக் கடக்கும் போது உம்மைக் கைகளால் எடுத்து அக்கரை சேர்ப்பார் யார்? என்கிறான். ‘நீ பேச மாட்டேன் என்கிறாய்? உன் பேச்சுக்கு உரியவன் அல்லாதவன் உன்னைத் தீண்டுதற்கு மட்டும் உரியவனோ, ஆகவே (தேன் மொழியாளே, உன் குரலைக் காட்டி) கொஞ்சம் பேசேன்’ என்கிறான்.
பாடல் இதோ: கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி, மாற்றம் பேசுகிலாளை, ஓர் மைந்தன் தான், ‘ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்த் ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?’ என்றான் எழுச்சிப் படலம், பாடல் 36
பொருள்: கூற்றம் போலும் – யமனைப் போன்ற கொலை கணினால் அன்றி – கொல்லும் தன்மையுள்ள கண் ஜாடையினால் அல்லாமல மாற்றம் பேசுகிலாளை – வாயைத் திறந்து பேசாமல் மௌனம் சாதிக்கும் ஒருத்தியை
ஓர் மைந்தன் – ஒரு இளைஞன் ‘ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்த் ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?’ – ‘வழியே இருக்கும் ஆற்று நீரில் உம்மை அழகிய கைகளால் எடுத்து கரை ஏற்ற வல்லவர் யார்?’ என்றான் – என்று கேட்டான். மைந்தனை காதலன் என்றும் கொள்ளலாம்; கணவன் என்றும் கொள்ளலாம்.
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்பது அவள் பேசினால் தான் அவனுக்குப் புரியும்! ஆக இப்படி ஆறு பாடல்களில் அழகிய காதல் சித்திரங்களை சித்தரிக்கும் கவிஞன் மகா கவிஞன் தானே!