திருக்கஞ்சனூர் ஆலயம் அறிவோம்! (Post No.10,391)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,391

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 28-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருக்கஞ்சனூர்

மூவிலை நல்சூலம் வலன் ஏந்தினானை

      மூன்று சுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை

நாவலனை நரைவிடை ஒன்று ஏறுவானை

       நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை

ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோவை

      அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும்

காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்

      கற்பகத்தை கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.   

 ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  நவகிரகங்களில் போககாரகனானத் திகழும் சுக்ர பகவானின் சிறப்புத் தலமான திருக்கஞ்சனூர் திருத்தலம் ஆகும். தமிழகத்தில், கும்பகோணத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமம் : ஸ்ரீ அக்னீஸ்வரர்     அம்மன் : கற்பகாம்பாள்

ஸ்தல வ்ருக்ஷம் : புரச மரம்        தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு. பாற்கடலை கடைந்து அமிர்தம் வந்த போது தங்களை ஏமாற்றித் தேவர்கள் அதை அடைந்ததால் கோபமுற்ற அசுரர்கள் தங்கள் குருவான சுக்ராசாரியரிடம் சென்று முறையிட அவர் தேவர்களை தங்கள் லோகத்தை விட்டு பூலோகம் செல்லுமாறு சபித்தார். தேவர்கள் அனைவரும் வியாச பகவானிடம் சென்று  சாப விமோசனம் அருளுமாறு கேட்க அவர் பூலோகத்தில் உத்தரவாஹினி எனப்படும் வட காவிரியில் நீராடி கற்பகாம்பாளையும் அக்னீஸ்வரரையும் வழிபட அவர்கள் சாப விமோசனம் அடைவர் என்று கூறி அருளினார். தேவர்களும் இங்கு வந்து வழிபட்டு சாப விமோசனம் அடைந்தனர்.

இந்தத் தலம் பற்றிய இன்னொரு புராண வரலாறும் உண்டு. ஒரு முறை பிரம்மா செய்த யாகம் ஒன்றில் தேவர்களுக்குச் சேர வேண்டியதைத் தராமல் அனைத்து ஆகுதிகளையும் தானே எடுத்துக் கொள்ள, அதனால் அவருக்கு பாண்டு ரோகம் என்ற கொடிய வியாதி பற்றியது. தனது வியாதியைப் போக்க அவர் இங்கு வந்து அக்னி தேவனால் ஏற்பட்ட நோயைத் தீர்க்க அக்னி தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி இறைவனை வழிபட்டார். இதனால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிரம்மாவும் தன் படைப்புத் தொழிலை மீண்டும் தொடங்கலானார். இதனால் இங்கு ஓடும் காவிரி நதி பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

வட மதுரையை ஆண்டவன் கம்ஸ மஹராஜன். அவன் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடி இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபட்டான். அதனால் இந்த ஊர் கம்ஸனூர் என்ற பெயரைப் பெற்றது. நாளடைவில் இது மருவி கஞ்சனூர் என்று அழைக்கப்படலாயிற்று.மாண்டவ்ய மஹரிஷியின் மாத்ருஹத்தி தோஷம் போக்கிய தலம் இதுவே. பராசர மஹரிஷிக்கு இறைவன் தனது முக்தி தாண்டவ நடனத்தை ஆடிக் காட்டிய தலமும் இதுவே தான்.

தெற்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் இருக்கும் இத்தலத்தில் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். கற்பகாம்பிகைக்குத் தனிப் பிரகாரம் உண்டு.உற்சவ மண்டபம், அலங்கார மண்டபம், வாஹன மண்டபம், பதினாறு கால் மண்டபம் என ஒரு பெரிய பிரகாரம் உள்ளது. அக்னீஸ்வரரின் தெற்கில் சுக்கிர பகவானின் அருள் நல்கும் சிவபிரான் பார்வதி தேவியோடு கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

சுக்கிர பகவான் அறுபத்திநான்கு கலைகளுக்கும் அதிபதி. ஜோதிட சாஸ்திரப்படி களத்திரகாரகன் சுக்ரனே. கிழக்குத் திசை சுக்ரனுக்கு உகந்த திசை. வைரம் சுக்கிரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம். ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்ரன். வெண்மை நிறம் கொண்டவர். மொச்சை தானியமும் வெண்தாமரை மலரும் அத்தி சமித்தும் இவருக்கு உகந்தவை. இல்லற சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது சுக்ர வழிபாடு. அனைத்துக் கலைகளிலும் ஏற்றம் பெறவும் சுக்ர பகவானின் வழிபாடு சிறந்தது.         

 இங்கு அவதரித்த ஹரதத்த சிவாசாரியாரின் சரிதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இத்தலத்தில் வைணவ மரபில் அவதரித்தவர் சுதர்ஸனன் என்பவர். இவர் விபூதி தரித்து ஸ்ரீ  அக்னீஸ்வரரைத் தினமும் வழிபடலானார். இதனால் வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த பெற்றோர் அதிர்ச்சியுற்றனர். தந்தை வாசுதேவர் மிகவும் கோபம் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்த, சுதர்ஸனன் சிவபிரானைச் சரண் புகுந்தார். ஹரன் அவர் முன் காட்சி தந்து ‘உன் உடல் பொருள் ஆவி மூன்றையும் எனக்குத் தத்தம் செய்க என்று கூற அப்படியே செய்தார் சுதர்ஸனன். ‘மகனே! ஹரனான எனக்கு உடல் பொருள் ஆவியைத் தந்தமையால் உனக்கு ‘ஹரதத்தன் என்ற தீக்ஷை நாமம் தந்தோம் என்று அருள் பாலிக்கிறார் சிவபிரான். ஊரில் உள்ள வைணவர்கள் வெகுண்டெழுந்து ‘சிவனே பரம்என்று பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து கொண்டு சொல்ல முடியுமா என்று ஹரதத்தரைக் கேட்டனர். அப்படியே செய்து காட்டினார் அவர். அனைவரும் பிரமித்தனர்.         

           ஒரு சமயம் அந்தணர் ஒருவர் புல்லுக் கட்டை ஒன்றைத் தெரியாமல் போட அதை உண்ட பசுக் கன்று இறந்து விட்டது. இதனால் அவரை ஊரார் ஒதுக்கி வைத்தனர். இதனால் மனம் வருந்திய அந்தணர் பஞ்சாக்ஷர மந்திரத்தைச் சொல்லியவாறே ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார். இதைக் கேட்ட ஹரதத்தர் எப்போது அவர் சிவ பஞ்சாக்ஷரத்தைக் கூறினாரோ அப்போதே அவர் பாவம் போய் விட்டது என்று கூறினார். ஆனால் ஊரார் இதை ஏற்காமல் இதை நிரூபிக்குமாறு ஹரதத்தரிடம் கூறினர். உடனே ஹரதத்தர் அந்த அந்தணரிடம் காவிரியில் நீராடிவிட்டு ஒரு கட்டு புல்லைக் கொண்டு வருமாறு கூறினார். அவரும் அப்படியே செய்தார். அதை அங்கு கோவிலில் கல் நந்தியிடம் தரச் சொன்னார். கல் நந்தி உண்ணுமானால் பஞ்க்ஷாரத்தால் அந்த தோஷம் நீங்கும் என்று சொல்லி சிவ் பஞ்க்ஷாரம் சொல்லிப் புல்லைத் தர அந்தக் கல் நந்தி அதை உண்டது. அதனாலேயே இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்காமல் இருக்கிறது என்பது ஐதீகம். ராஜகோபுரத்திற்கு வெளியில் தெற்கு நோக்கி கற்பக விநாயகர் சந்நிதியும் சந்நிதி தெருவில் ஹரதத்தருக்கான கோவிலும் அமைந்துள்ளது.

கம்சபுரம், முக்தி புரி, பராசர புரம், பிரமபுரி எனப் பல பெயர்களைக் கொண்டுள்ள இந்தத் திருத்தலத்தில்

அப்பர் பிரான் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கற்பகாம்பாளும் அக்னீஸ்வரரும், சுக்ர பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும்

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்|

பனி, முல்லை, தாமரை போன்ற  வெண்மையான நிறம் உடையவன். அசுரர்களின் குரு. எல்லா சாஸ்திரங்களையும் உரைப்பவன். ப்ருகுவின் புதல்வன். அந்த சுக்கிரனை நமஸ்கரிக்கிறேன்.         

நன்றி, வணக்கம்!                                 

***

tags. கஞ்சனூர்,சுக்கிரன்,ஹரதத்த சிவாசாரியா

ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை! (Post No.10,390)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,390

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 அன்று தொடங்கி 20-11-21 அன்று முடிய ஒலிபரப்பாகி வந்தது.

19-11-2021 காலை ஒலிபரப்பான ஒன்பதாவது உரை கீழே தரப்படுகிறது. 

ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை!

ச.நாகராஜன்

மனிதர்கள் மட்டுமே பசியினாலும் தாகத்தினாலும் இறக்கக்கூடும் என்ற உண்மையை அறிந்திருப்போருக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை இருக்கிறது. மரங்களும் கூடப் பசியினாலும் தாகத்தினாலும் இறக்கக் கூடும், அப்படிப்பட்ட நிலை பல இடங்களில் ஏற்படுவதால் அற்புதமான இயற்கைச் செல்வமான மரங்கள் அழிந்து வருகின்றன என்பதே அந்த அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

இது ஓரிடத்தில் மட்டும் ஏற்பட்டிருக்கிறது என்பதில்லை. கனடா, ரஷியா, கிரீஸ், வட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா உள்ளிட்ட நாடுகளில், பல பகுதிகளிலும் மரங்கள் இறந்து படுவதை விஞ்ஞானிகள் அதிர்ச்சியுடன் கவனித்து வருகின்றனர்.

இப்படி பல மரங்கள் அழிந்து படுவதற்கான காரணத்தை உடனே அவர்களால் கண்டு பிடிக்க முடியாத நிலையில் இதற்கென ஒரு (Intensive Care unit) தீவிர கவனிப்புப் பிரிவைப் போன்ற ஒரு பிரிவை தனது சோதனைச் சாலையில் அமைத்து மரங்களைக் கவனிக்கலானார் நேட் மக்டவல் (Nate Mcdowell) என்னும் நியூ மெக்ஸிகோவைச் சேர்ந்த விஞ்ஞானி. ஆய்வின் முடிவில் தாகத்தினாலும் பசியினாலும் அவை இறப்பதை அவர் கண்டுபிடித்து உறுதி செய்தார். அதிகமான வெப்பம் உருவாகி நீரின் அளவு குறையும் போது “ஹைட்ராலிக் ஃபெயில்யூர்” (Hudraulic Failure) எனப்படும் நீர் குறைவுபடும் அல்லது நீர் இல்லாத சமயம், தாவரங்கள் சுருங்கி, ‘வாழ முடியாத நிலையை’ எய்துகின்றன. தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காத நிலையில் அவை பரிதாபமாக இறக்கின்றன. 

உலகெங்கும் 81 பகுதிகளில் 226 அரிய வகை தாவர இனங்கள் இப்படிப்பட்ட அபாயத்திற்கு உள்ளாகி வருகின்றன. நுண்மையான சென்ஸார்களை வைத்து செய்யப்பட்ட இந்த ஆய்வு புவி வெப்பமயமாதலால் மரங்கள் அழிந்து படும் என்பதை உறுதி செய்கிறது. அத்துடன் மழைக் காடுகள் அழிக்கப்படாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்ற உண்மையையும் வலுப்படுத்துகிறது. இந்த  மரங்களைக் காக்கும் பணி உலகெங்கும் உள்ள மக்களால் ஒவ்வொருவர் வீட்டிலுமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான உண்மை.

     ஒவ்வொரு பேப்பரையும் உபயோகிக்கும் போது இது அவசியமா, இதைத் தவிர்த்தால் ஒரு மரம் சற்று நீடித்து வாழுமே என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாக வேண்டும். நீரை அளவுக்கும், தேவைக்கும் அதிகமாக அனாவசியமாகப் பயன்படுத்தும் போது நாம் ஒரு மரத்தின் ஜீவனைப் பறிக்க உதவி செய்கிறோம் என்பதை உணர்தல் வேண்டும். ஆங்காங்கே நல்ல மழை வளத்துடனும் மண் வளத்துடனும் காடுகள் அழிக்கப்படாமல் – மரங்கள் வெட்டப்படாமல் – இருப்பின் பூமியின் மழை வளம் கூடும். நமது வாழ்வாதாரமான நீரும் நமக்குத் தடங்கலின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

மரங்களை நாம் பாதுகாத்தால் அவை நம்மைப் பாதுகாக்கும் என்பது ஒரு அபூர்வமான, அதிசயமான உண்மை. இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம். மரங்களைக் காப்போமாக!

****

tags-அரிய வகை, தாவர இனங்கள், 

PLEASE JOIN US TODAY MONDAY 29-11-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

29 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – 

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON POET KALIDAS

Talk by  DR CHITRA,BENGALURU

இலக்கியங்களில் தமிழனின் அறிவியல் திறன்

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

APPR. 50 MINUTES

— SUBHAM —-

tags – publicity29112021

உலக இந்து சமய செய்தி மடல் 28-11-2021 (Post No.10,389)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,389

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 28 -ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxx

சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பேருக்கு அனுமதி

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ON LINE ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 300 வாடகை அறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மேலும் 200 அறைகள் தயாராகி வருகிறது. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

அதே போல் பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவும் அனுமதி அளிக்கப்படும். தற்போது பம்பையில் இருந்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகிறார்கள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நீலிமலை வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நவம்பர் 13 ஆம் தேதி இதே அமைச்சர் சபரிமலை கோவிலில் கொடுக்கப்பட்ட தீர்த்தப்  பிரசாதத்தை கீழே சிந்தியும்  கையில் துடைத்தும் இந்து மதத்தை அவமதித்தது ஐயப்ப பக்தர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது  அவர் கடவுள நம்பிக்கையற்ற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.

XXXX

சபரிமலையில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம், லட்சார்ச்சனைக்கு ரூ.10 ஆயிரம், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம், திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்தவ பலிக்கு ரூ.30 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு 2026-ம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

XXXX

மலைக்கோவில்களுக்கு ரோப் கார்; சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மலைக்கோவில்களுக்கு ROPE CAR ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுங்குன்றம் மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கோயில்களில் ஆய்வு முடித்த பின், உலகத்தரத்தில் நவீன வசதியுடன் ரோப்கார் அமைக்க டெண்டர் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சோளிங்கா் நரசிம்ம சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில்களில் ரோப் காா் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் நிலுவையில் இருக்கிறது. 33 மலைக்கோயில்களில் கேபிள் ரோப் காா் வசதி ஏற்படுத்துவது, இயக்குவதற்கான நிதி நிலைத்தன்மை, பாதுகாப்பு தணிக்கை அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, தொழில்நுட்ப சாத்தியக்கூறு தொடா்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத் துறை, பொதுப் பணித்துறை, வருவாய் துறை, உள்துறை உள்ளிட்ட அரசுத் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பழனியில் ஒரு இடத்தில் தற்போது கேபிள் ரோப் காா் இயக்கப்பட்டு வருகிறது. சோளிங்கர், அய்யர்மலை கோயில்களில் கேபிள் ரோப் காா் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஐந்து இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கேபிள் ரோப் காா் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றாா்.

இதையடுத்து மற்ற கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், மனுதாரர் நேரடியாக அரசுக்கு இந்த விஷயங்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது

XXX

கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

‘கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.


இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கியை செலுத்தாமல், கோவில் சொத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1960ம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.


அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது. கோவில் சொத்துக்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும். வாடகை வசூல், குத்தகை, நியாயமான வாடகை நிர்ணயம் விஷயங்களில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்களில் சட்டவிரோதமாக ஏராளமானோர் உள்ளனர்.

எந்த அனுமதியும் பெறாமல், குத்தகைதாரர்கள் வசம் கோவில் சொத்துக்கள் உள்ளன. இது குறித்து அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையில் முழு திருப்தி இல்லை. துஷ்பிரயோகம் தனி நபர்களுடன், அதிகாரிகள் சிலர் கைகோர்த்து செயல்படுகின்றனர். கோவில் சொத்துக்களில் அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகளின் துாண்டுதலில் ஊழல் நடக்கிறது.

கோவிலில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது.

இந்த வழக்கை பொறுத்தவரை, தற்போதைய நிலையில், மனுதாரர் குத்தகைதாரர் அல்ல. எனவே, மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றால், அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

XXXXX

சிறுவாச்சூரில் தொடர்ந்து 4-வது முறையாக உடைக்கப்பட்ட சாமி சிலைகள்

நான்காவது முறையாகப் பெரம்பலூரில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்களமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலின் துணைக் கோயில்களான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்திருக்கின்றன. இங்கு சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட சாமி பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி பெரியசாமி கோயிலில் ஐந்துக்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலை தொடர்ந்து, இரு முறை சிறுவாச்சூர் மலை பகுதிக்கு சென்று, உடைபட்ட கோவிலையும், சிலைகளையும் தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன் பார்த்துள்ளார்.


அவர் கூறியதாவது: சிறுவாச்சூர் மலை பகுதியில் மர்மமான முறையில், ஏதோ நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதே நேரம், தமிழக அரசும், காவல் துறையும், சாமி சிலைகளை சேதப்படுத்தும் கும்பலை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ஆதங்கப்பட்டனர். இதையடுத்து, இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினோம்; நடவடிக்கை இல்லை.

செப்., 26ல் மீண்டும், அடுத்து நவ., 8ம் தேதி இரவும், நான்காவது முறையாகப் அதே கோவிலில் மிச்சம் இருந்த சாமி சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்த சாமி சிலைகள், முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன.

சிறுவாச்சூர் சம்பவம் போலவே, ஆந்திராவில் 19 மாதங்களில், 128 கோவில்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., நரசிம்மராவ், 128 கோவில்களில் சிலைகள் தாக்கப்பட்டது குறித்து, பார்லிமென்டில் பேசினார். அதன்பின், ஆந்திர அரசு தீவிர கவனம் செலுத்தி விசாரித்தது. விசாரணையின் முடிவில், மதமாற்ற அடிப்படைவாத சக்திகள், சாமி சிலை உடைப்பு மற்றும் ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர்.


. ஆந்திராவில் கோவில்களை தாக்கிய அதே கும்பலே கூட இதை செய்திருக்கக்கூடும். அதனால், இதை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை அலட்சியமாக உள்ளன.. அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் போராட்டம் அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

XXX

டெல்லி அரசின் இலவச யாத்திரை திட்டம்

டெல்லியின் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டத்தின் கீழ், ஸ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்ய 1000 யாத்ரீகர்கள் அயோத்திக்கு அனுப்பப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகர் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அன்று டெல்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.

முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ், பூரி, ராமேஸ்வரம், ஷீரடி, மதுரா, ஹரித்வார் மற்றும் திருப்பதி உட்பட 13 தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் மூத்த குடிமக்களின் புனித யாத்திரையின் முழுச் செலவையும் டெல்லி அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்ட புனித யாத்திரை பட்டியலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியை சேர்க்க கடந்த மாதம் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
 
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் வயதான 1,000 யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் முதல் ரயில் டிசம்பர் 3-ம் தேதி அயோத்திக்கு புறப்படும் என்று டெல்லி அரசின் தீர்த்த யாத்திரை விகாஸ் சமிதியின் தலைவர் கமல் பன்சால் தெரிவித்தார்.

XXXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tags – Tamil Hindu, Newround up, 28112021

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 28TH NOVEMBER ,2021 (Post.10,388)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,388

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by NITHYA SOWMY

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by NITHYA SOWMY

Xxxx

Feasibility Study Of Establishing Ropeways At Hill Temples Underway: TN Govt Tells Madras High Court


The Tamil Nadu government on Thursday informed the Madras High Court that a feasibility study for developing rope car facilities at five hill temples in the State is being undertaken at a cost of Rs 1 crore.

Advocate General (AG) R Shanmugasundaram made the submission before the first bench of Acting Chief Justice Munishwar Nath Bhandari and Justice PD Audikesavalu on a petition seeking orders for a project report on creating such facilities in 33 hill temples across the State.

Rope car facility is currently operational at Palani temple, and is under construction at Sholingur and Ayyarmalai, the AG informed. He added that the feasibility study is going on at Thirukazhukundram, Tiruchy Rock Fort, Tiruchengode, Tiruttani, and Thiruneermalai.

Disposing of the petition, the bench allowed the petitioner to make a representation to the TN government for finding out the feasibility in other places.

XXX

Kerala HC Bans Headload Workers From Loading, Unloading Pooja Articles At Sabarimala

A Sabarimala official had reported that a cartel of persons claiming to be the headload workers was causing obstructions to loading and unloading of articles.

The Kerala High Court (HC) on Saturday observed that even registered headload workers belonging to a trade union had no legal permission to carry out loading and unloading works at Sabarimala

The High Court’s order came after the Special Commissioner at Sabarimala, reported that a cartel of persons claiming to be the headload workers were causing obstructions to the loading and unloading of Pooja articles.

According to the official, this was adversely affecting the transportation of goods and articles to Sannidhanam. The bench led by Justice Anil K Narendran and Justice PG Ajith Kumar, which had taken suo-moto cognizance of the matter noted that only workers hired by the Devaswom board were allowed to engage in the transportation of articles pertaining to the Sabarimala temple. 

“We deem it appropriate to direct respondents to take necessary steps to ensure that the loading and unloading or the transportation of Pooja articles, raw materials for making Prasadam and Annadanam, etc. and also other articles and goods for providing facilities to the pilgrims in Nilackal, Pampa and Sannidhanam, by the Travancore Devaswom Board, its contractors and other parties engaged in the Temple for allied activities like providing facilities to the pilgrims are not obstructed in any manner by any loading and unloading workers their Unions or supporters,” the Kerala HC said in its order.

The District Police Chief and the Station House Officer shall take necessary steps to ensure that there is no law and order issues at Sabarimala, Pampa, and Nilackal in connection with the loading and unloading or the transportation of such articles. In case of any threat or obstruction from any corner, the Police shall render necessary protection to all such activities,” it added. 

Kerala Minister and Bengal Chief Minister offend Hindus

K Radhakrishnan, the Devaswom Minister in Kerala, has got himself in trouble after using holy Sabarimala temple water as a hand sanitiser. The incident happened on November 13 during his visit to the temple while priests were preparing to open the gates of the temple for the devotees for the season.

According to the reports, the temple priest performed pooja and gave holy water to the people present as part of the ritual. They were supposed to consume it and apply rest on their head. However, when he gave the water to MINISTER Radhakrishnan, he was caught on camera using the water as a sanitiser and not smearing it on the head. His act was captured by several media persons present in the temple.

The minister drew criticism on social media networks for disrespecting the holy water of the Sabarimala temple. Notably, Devaswom Board president Ananthagopan and local legislator Pramod Narayanan were also part of the pooja. Reportedly, they smeared the water on the head as per tradition, unlike Radhakrishnan.

Mamata Banerjee was criticised for disrespecting Charnamrit

Earlier on November 1, it was reported that West Bengal Chief Minister Mamata Banerjee drew flak from the devotees on social media for disrespecting Charnamrit meant for consumption during her visit to Goa’s famous Mangueshi temple.

In a video capturing Banerjee’s visit to the temple, she can be seen spilling the Charnamrit on the floor offered by the temple priest. At the end of the video clip, the priest was seen to be surprised by the act, trying to stop the Chief Minister

xxx

Siruvaachur Temple in Tamil Nadu vandalised for Fourth time

The Periyasamy – Chelliyamman Temple and the Sengamalayar Temple located in Siruvaachur has been attacked and vandalized for the fourth time .

Madura kaali amman temple is a famous temple located at Siruvachchur in Perambalur district. The Goddess is said to be the family deity of Kanchi Sankaracharya .

The Periyasamy – Chelliyamman Temple and the Sengamalayar Temple are associated temples of the Madurakaliamman temple and fall under the control of Hindu Religious & Charitable Endowments Department.

Earlier on October 7, many of the idols at the Periyasamy – Chelliyamman Temple and the Sengamalayar Temple including that of Amman, Maduraiveeran, the Saptakannis, etc were found displaced and broken by miscreants.

The temple was found vandalized inflicting far more serious damage with idols of horses, Goddess Amman, and other Gods found broken. Many of the idols had their heads cut off which indicates that the act has been done to deliberately hurt the Hindus.

In this third attack, that has happened on November 8-9, other huge idols have been smashed to smithereens.

Earlier, on October 27, the Hindu Munnani plunged into action and staged a road roko against the administration’s apathy. A crowdfunding campaign was also launched to repair the damages at the temple.

CCTV cameras were installed by the temple administration a few days ago

Many Hindu activists have been questioning the Hindu Religious & Charitable Endowments (HR&CE) department and its minister P. Sekar Babu for their silence and inaction on the matter.

Tamil Nadu BJP  has sent a fact finding team to the temple.

xxxx

Arvind Kejriwal says 1st Train To Ram Mandir Under Tirth Yatra Yojana Begins From Dec 3

Delhi Chief Minister Arvind Kejriwal said, “under the free pilgrimage scheme for senior citizens of Delhi, we are sending them to Ayodhya to have a darshan of Shri Ram Lalla.”

Kejriwal on November 24 vouched to facilitate Darshan to Ram Mandir in Ayodhya under the free pilgrimage scheme for senior citizens in the national capital.

Under the Mukhyamantri Tirth Yatra Yojana launched in March 2021, the AAP government stated that any citizen aged 70 years or above can offer prayers to Lord Ram and the Delhi government will bear all costs of pilgrims. 

During the press briefing, CM Kejriwal stated that registration for the pilgrimage has begun and the first train to Ayodhya will depart on December 3. 

Our first train for Ayodhya will be leaving on 3rd December, registrations have started.” He added.

XXX

RUDRABISHEKAM IN TIRUPATI

Rudra Yagam commenced in Sri Kapileswara Swamy temple on Monday as a part of ongoing Karthika Masa Homa Mahotsavams. This fete will last till December 2 for 11 days.

Laksha Kumkuma Archana and Ankuraarpanam in connection with annual Karthika Brahmotsavams in Sri Padmavathi Ammavari Temple at Tiruchanoor will be observed on November 29.  

In the morning Kumkumarchana will be observed while in the night Beejavapanam will be performed.  

In the meantime, TTD informed,

Total pilgrims who had darshan OF BALAJI VENKATESWARA  on 26.11.2021  is  21,515

XXXX

That is the end of WORLD HINDU NEWS ROUND UP FROM AAKAASA DHWANI.

READ BY NITHYA SOWMY

PLEASE WAIT FOR TAMIL NEWS.

Tags- Hindu News, Roundup,28112021

சாக்ரடீஸுக்கு வேதம் கூட தெரியும்! (Post.10,387)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,387

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸுக்கு(Socrates)  இந்து மத உபநிஷத்துக்கள் அத்துப்படி என்று பல ஆங்கில நூல்கள் வந்துவிட்டன. சாக்ரடீஸ் நேரடியாக நமக்கு எதையும் எழுதி வைக்க வில்லையாயினும் அவருடைய பிரதம சீடன் பிளாட்டோ(Plato) எழுதிய விஷயங்கள் மூலமாக நாம் முழு சித்திரத்தைப் பெறுகிறோம்.

சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அவருக்கு முந்தைய பித்தகோரஸ் (Pythagoras) முதலியோர் மூலம் இந்து மத நூல்களை அறிந்ததை நாம் ஊகிக்க முடிகிறது. பித்தகோரஸ் தியரம் (Pythagoras Theorem தேற்றம்) என்பது இந்துக்கள் முன்னரே வேத காலத்தில் சொன்னது என்பதை இப்பொழுது உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர்.(கணித வரலாறு பற்றிய நூல்களைக் காண்க)

ஆக, பித்தகோரஸ், அவருக்குப் பின்னர் சாக்ரடீஸ், அவரது சிஷ்யன் பிளாட்டோ, அவரது சிஷ்யன் அரிஸ்டாட்டில் (Aristotle) , அவரது சிஷ்யன் மாமன்னன் (Alexander)அலக்ஸ்சாண்டர் என்று வரிசையாக இந்து மத ஆதரவாளர்களைக் காணமுடிகிறது. கிரேக்க அறிஞர்களே இவர்களுடைய இந்து மத தொடர்பு, சைவ உணவு ஆதரவு பற்றி எழுதிவிட்டனர்.

நான் செய்த ஆராய்ச்சியில் வள்ளுவருக்கு சாக்ரடீஸ் தெரியும் என்று கண்டுபிடித்தேன். 1990-களில்  லண்டனிலிருந்து டாக்டர் இந்திரகுமார் வெளியிட்ட மேகம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இதை எழுதி அது 2015ல் விநாயகா பதிப்பக புஸ்தத்த்திலும்  வந்துவிட்டது. (காண்க – தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்)

குறள் 580-ல் நண்பர்களே விஷம் கொடுத்தாலும் அதை நண்பர்கள் மனம் வருந்தாமல் இருக்க குடிப்பது நாகரீகம் என்று வள்ளுவர் பாடுவது சிவபெருமானை அல்ல; சாக்ரடீஸையே என்று நான் எழுதியுள்ளேன்.

சாக்ரடீஸ் போதித்த ‘உன்னையே நீ அறிவாய்’ (Know thyself) என்ற ஆத்ம விசாரம், உபநிஷத் வாக்கியம் என்பதை உலகமே அறியும். மேலும் சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், நண்பன் கிரிட்டோ(Creto) வை அழைத்து “ஏய் , ஆத்தாளுக்கு கோழியை பலி கொடுக்க மறந்துவிடாதே ; நான் ஆத்தாளுக்கு நேர்த்திக் கடன் செய்ய வேண்டியுள்ளேன்” என்று சொன்னதும் அவர் ஒரு பக்கா ஹிந்து என்பதைக் காட்டுகிறது.

இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.

இதோ அதர்வண வேத மந்திரமும்  Griffith கிரிப்பித் விமர்சனமும்

காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)

மந்திரம் 7

“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.

நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன்  பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு  காணக்கிடக்கிறது

கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு

சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :

இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic  ரிபப்ளிக் என்ற நூலில் உளது

அக்காலத்திலேயே,  வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.

My Old Articles:-



சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி | Tamil and Vedas

https://tamilandvedas.com › சாக்…

12 Feb 2012 — சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் …

DID SOCRATES KNOW VEDAS? HIS ‘SUN AND EYE …

https://tamilandvedas.com › 2021/11/27 › did-Socrates-…

1 day ago — 13 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. Tiru Valluvar , author of Tamil Veda Tirukkural, says that man becomes god in two …



Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar

https://tamilandvedas.com › strange-l…

·

18 Sept 2011 — Lord Shiva is one of the Hindu Trinity, a great god worshipped by millions of Hindus. Socrates was a great Greek philosopher who lived …

Missing: valuvar ‎| Must include: valuvar



Socrates’ Meeting with a Hindu Saint | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/02/22 › socrates-meet…

22 Feb 2014 — Socrates (499- 399 BC) Greek Philosopher Plato (427-347 BC) Philosopher … Drinking poison: Shiva Socrates and Valluvar, Know thyself in …

–subham–

tags- சாக்ரடீஸ், சிவபெருமான், வேதம், வள்ளுவர், கண், சூரியன்,Scrates

டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,386

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – டிச. 4- சூரிய கிரஹணம் (இந்தியாவில் தெரியாது) ; 11- பாரதியார் பிறந்ததினம்; 16- மார்கழி மாதப் பிறப்பு ; 20-ஆருத்ரா தரிசனம்; 25- கிறிஸ்துமஸ்

அமாவாசை- 4; பெளர்ணமி – 18; ஏகாதசி விரத நாட்கள் -14, 29.

சுப முகூர்த்த நாட்கள் 1, 6,  8, 9, 10, 13

xxx

டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386)

டிசம்பர் 1 புதன் கிழமை

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி

மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி

ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி

ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

XXX

டிசம்பர் 2 வியாழக் கிழமை

ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை

XXX

டிசம்பர் 3 வெள்ளிக் கிழமை

மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்

XXX

டிசம்பர் 4 சனிக் கிழமை

தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற

தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்

XXX

டிசம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை

இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற

மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி

மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே

XXX

டிசம்பர் 6 திங்கட் கிழமை

சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

XXX

டிசம்பர் 7 செவ்வாய்க் கிழமை

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

XXX

டிசம்பர் 8 புதன் கிழமை

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

XXX

டிசம்பர் 9 வியாழக் கிழமை

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்

பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்

XXX

டிசம்பர் 10 வெள்ளிக் கிழமை

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி

பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்

XXX

டிசம்பர் 11 சனிக் கிழமை

திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ

வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.

XXX

டிசம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்

ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி

இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி

யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ

XXX

டிசம்பர் 13 திங்கட் கிழமை

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

XXX

டிசம்பர் 14  செவ்வாய்க் கிழமை

தூய சதாகதியே நேய சதாசிவமே

சோம சிகாமணியே வாம உமாபதியே

XXX

டிசம்பர் 15 புதன் கிழமை

தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே

தடம்வளர் புனலே புனல்வளர் நலனே

XXX

டிசம்பர் 16 வியாழக் கிழமை

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

XXX

டிசம்பர் 17 வெள்ளிக் கிழமை

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

எல்லாம்வல் லான்தனையே ஏத்து.

XXXX

டிசம்பர் 18 சனிக் கிழமை

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்

றென்றுவரு மோஅறியேன் எங்கோவே – துன்றுமல

வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து

சும்மா இருக்கும் சுகம்.

XXX

டிசம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்

பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்

கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

XXX

டிசம்பர் 20 திங்கட் கிழமை

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்

மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்

திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்

செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே

இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்

XXX

டிசம்பர் 21 செவ்வாய்க் கிழமை

தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்

XXX

டிசம்பர் 22 புதன் கிழமை

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

XXX

டிசம்பர் 23 வியாழக் கிழமை

எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே

இடையிலே கடையிலேமேல்

ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்

டெய்துவடி வந்தன்னிலே

XXX

டிசம்பர் 24 வெள்ளிக் கிழமை

வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே

மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே

நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே

நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே

XXX

டிசம்பர் 25 சனிக் கிழமை

சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்

தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே

XXXX

டிசம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

அமரரும் முனிவரும் அதிசயித் திடவே

அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே

கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே

XXXX

டிசம்பர் 27 திங்கட் கிழமை

. ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு

ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு

எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

XXX

டிசம்பர் 28 செவ்வாய்க் கிழமை

ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்

ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்

தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்

தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

xxx

டிசம்பர் 29 புதன் கிழமை

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

xxx

டிசம்பர் 30 வியாழக் கிழமை

அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்

அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்

வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்

வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

xxx

டிசம்பர் 31 வெள்ளிக் கிழமை

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

–SUBHAM—

TAGS– டிசம்பர் 2021 காலண்டர், வள்ளலார், பொன்மொழிகள்,

உத்வேகமூட்டும் ஆர்வலராக மாறலாமே! (Post.10385)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,385

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வந்தன.

18-11-2021 காலை ஒலிபரப்பான எட்டாவது உரை கீழே தரப்படுகிறது. 

உத்வேகமூட்டும் ஆர்வலராக மாறலாமே!

                     ச.நாகராஜன்

நாளுக்கு நாள் சுற்றுப்புறச்சூழலைக் காக்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டு வருவதை உங்கள் அனுபவத்தில் நீங்களே உணரலாம். ஆட்டோவில் ஏறி உட்காரும் ஒரு நபர் அங்கு அதை ஓட்டுநர் அருகில் இருக்கும் இளஞ் செடிக் கன்றுகளைக் கண்டு அது பற்றிக் கேட்டால் இப்படிச் செடிகளை எடுத்துக் கொண்டு மரக்கன்றுகளை நடுவது தனது பழக்கம் என்பார். இயற்கை வளத்தின் மீது ஆர்வம் கொண்ட அந்த ஓட்டுநர் போன்றோர் உலகெங்கும் ஆயிரக் கணக்கில் பெருகி வருகின்றனர்.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து வரும் இவர்களைத் தேடிப் பிடித்து பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்திகளை வெளியிடுகின்றன; பரிசுகளும் பாராட்டுகளும் அவர்களைத் தேடி வருகின்றன. சில நல்ல ஆர்வலர்களைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் உத்வேகமூட்டும் ஆர்வலராக மாறலாமே!

சில எடுத்துக் காட்டுகள் இதோ: மலைகா வாஸ் (Malaika Vaz) என்ற பெண்மணிக்கு வயது 23 தான்.இந்த இளம் பெண்மணி ஒரு இயற்கை ஆர்வலர். திரைப்படம் தயாரிப்பவர். காட்டில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆராய்பவர். தனது ஆய்வின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக காட்டு வாழ் உயிரினங்கள் கொல்லப்படுவதையும் கடத்தப் படுவதையும் ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டு அவற்றைத் தடுத்து இவர் நிறுத்தினார்; பாராட்டையும் பெற்றார். ON THE BRINK என்ற இவரது தொலைக்காட்சித் தொடர் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.     

டான்ஜானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ (Kilimanjaro) மலையடிவாரத்தில் வசிக்கும் ஹான்ஸ் காஸ்மஸ் கொடேயா (HANS COSMAS NGOTEYA) வனவிலங்குகளின் பாதுகாப்பாளர். இந்த விலங்குகளைப் பற்றி, அவர் அனைவருக்கும் பல உண்மைகளைத் தெரிவிக்க, அந்தப் பகுதி வாழ் அனைவரும் விலங்குகள் மீது மிக்க அன்பு பாராட்டினர். அவரையும் நல்லெண்ணத் தூதுவராகக் கொண்டாட ஆரம்பித்தனர்.         

பெர்டி கிரிகாரி (Bertie Gregory) என்ற 27 வயது இளைஞர் ஒரு புகைப்பட வல்லுநர்; திரைப்பட தயாரிப்பாளரும் கூட. மும்பைக்கு வந்த அவர் அங்கு சிறுத்தைகளைப் படம் பிடித்தார்; அண்டார்டிகாவில் பெங்குவின்களையும், வான்கூவரில் அபூர்வமான ஓநாய்களையும் படமாகப் பிடித்தார். அருகி வரும் வனவிலங்குகள் மீது ஆர்வம் பெருகி அவற்றைக் காக்கத் தொடங்கினார். அவருக்குப் பல பரிசுகளும் கிடைத்தன. தனது இந்தப் படங்கள் மூலம் மக்களிடையே வனவிலங்குகள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறார் அவர். இப்படி நூற்றுக் கணக்கானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இணையதளத்தில் கிடைக்கும் தகவல்கள் நமக்கு உத்வேகம் ஊட்டுபவை. நாமும் இந்த சுற்றுப்புறச் சூழல் காக்கும் களத்தில் முன்களப் பணியாளராக இறங்கலாமே!

***

tags– இயற்கை ஆர்வலர், புகைப்பட வல்லுநர், பெர்டி கிரிகாரி, மலைகா வாஸ்

PLEASE JOIN US ON SUNDAY 28-11-2021

28-11-2021 SUNDAY PROGRAMME

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer – 

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   KANJANUR TEMPLE 10 MTS

KANTHAR ANUBHUTHI– by MRS JAYANTHI SUNDAR’S GROUP  — 12 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

SONGS.

Talk by London swaminathan : Science and Hinduism in Tamil – 10 mts

XXXX

APPR. 60 MINUTES

xxx

TAGS- publicity28112021

DECEMBER 2021 CALENDAR : BABA QUOTATIONS (Post No.10,384)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,384

Date uploaded in London – –   27 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECEMBER 4- SOLAR ECLIPSE; 11- BHARATIYAR BIRTHDAY; 16-MAARKAZI MONTH BEGINS; 20-ARUDRA DARSAN; 25- CHRISTMAS

NEWMOON DAY/AMAVASAI- 4 , FULL MOON DAY-18,

EKADASI FASTING – 14, 29

AUSPISCIOUS DAYS-1, 6, 8, 9, 10, 13

Quotations from Sri Sathya Sai Baba

DECEMBER  1 WEDNESDAY

“The essence of spiritual wisdom lies in apprehending and experiencing the oneness of the trinity of sathyam, jnanam, and anantam.”- – Sri Sathya Sai Baba

xxx

DECEMBER  2 THURSDAY

“The secret of perfect health lies in keeping the mind always cheerful – never worried, never hurried, never borne down by any fear, thought or anxiety.”

xxx

DECEMBER  3 FRIDAY

“One who respected his/her parents became worthy of everyone’s respect. The one who did not respect his/her parents was compelled to bow down to all. This inevitable law can never be changed by anyone.”

xxx

DECEMBER  4 SATURDAY

“Humanness means unity in thought, word, and deed.”

xxx

DECEMBER  5 SUNDAY

“Keeping in view the atmosphere in the world, it is important to teach students about morality and ethics while equipping them with worldly knowledge.”

xxx

DECEMBER  6 MONDAY

“When we turn our vision to the world, we develop attachment. When we turn to Divinity, detachment results.”

xxx

DECEMBER  7 TUESDAY

“You must fill your heart with love for God (daiva preeti), fear of sin (paapa bheeti), and morality in society (sangha neeti).”

xxx

DECEMBER  8 WEDNESDAY

“Some say that knowledge is power, but it is not true. Character is power.”

Xxx

DECEMBER  9 THURSDAY

“Where there is faith, there is love; where there is love, there is peace; where there is peace, there is truth; where there is truth, there is God; where there is God, there is bliss. “

xxx

DECEMBER  10 FRIDAY

Always repeat: I am human, not animal. I am human, not animal. When we join these two halves, we have the full truth.”

xxx

DECEMBER  11 SATURDAY

“The best way to love God is to love all and serve all.”

xxx

DECEMBER  12 SUNDAY

“Removal of immorality is the only way to immortality.”

xxx

DECEMBER 13 MONDAY

“Work is worship. Duty is God.”

xxx

DECEMBER  14 TUESDAY

“See all work as spiritual exercise, as an offering. Then, work is transformed into worship.”

xxx

DECEMBER  15 WEDNESDAY

“Those anxious to live in joy must always be doing good.”

xxx

DECEMBER  16 THURSDAY

“Study to be steady.”

xxx

DECEMBER  17 FRIDAY

“Money comes and goes. Morality comes and grows.”

xxx

DECEMBER  18 SATURDAY

“For the mansion of life, Self-confidence is the foundation, Self-satisfaction the wall, Self-sacrifice the roof, Self-Realisation is the life.”

xxx

DECEMBER  19 SUNDAY

Education should be for life, not for a living.”

xxxx

DECEMBER  20 MONDAY

“We do not need different kinds of “information”. We need “transformation”.”

xxx

DECEMBER  21 TUESDAY

“See no evil, See what is good. Hear no evil, Hear what is good. Talk no evil, Talk what is good. Think no evil, Think what is good. Do no evil, Do what is good.”

xxx

DECEMBER  22 WEDNESDAY

“Love lives by giving and forgiving. Ego lives by getting and forgetting.”

xxx

DECEMBER  23 THURSDAY

“There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart.”

xxx

DECEMBER  24 FRIDAY

“Life is a challenge, meet it! Life is a dream, realize it! Life is a game, play it! Life is love, enjoy it!”

xxx

DECEMBER  25 SATURDAY

“When we “skill” our knowledge, life is well-balanced. When we “kill” our knowledge, the balance is upset.”

xxx

DECEMBER  26 SUNDAY

Love all; serve all; help ever; hurt never.

xxxx

DECEMBER  27 MONDAY

DECEMBER  28 TUESDAY

My life is my message. Expansion is my Life.

xxx

DECEMBER  29 WEDNESDAY

“The cause for this multiplication of human sorrow may be traced to man’s lack of faith in the essential unity underlying the phenomenal multiplicity.”

xxx

DECEMBER  30 THURSDAY

“To transform the world from its present state, there is no need for a new social system or a new religion or creed. What is essential is a body of men and women with sacred ideals.”

xxx

DECEMBER  31 FRIDAY

“Do not ever think that you and God are separate. Think always, “God is with me; He is inside me; He is around me. All there is, Is God. I myself am God. I am the Infinite, the Eternal. I am not two; I am one, only one. There is no one else besides me. I and God are one and the same.” To realize this Unity, the first step is to develop Self-confidence. It comes when you realize that God is not outside of you.” – Sri Sathya Sai Baba

—subham—

tags- December 2021, Calendar, Baba Quotes