Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-11-25 கல்கிஆன்லைனில் பிரசுரமான கட்டுரை!
மறையப் போகும் தேசங்களும் நகரங்களும்!
ச. நாகராஜன்
இன்றைய உலக வரைபடத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கும் பல தேசங்களும், நகரங்களும் வரைபடத்திலிருந்து மறையப் போகின்றன என்பது சோகமான ஒரு செய்தி தான்!
போரினாலோ அல்லது உள்நாட்டுச் சண்டைகளினாலோ இவை அழியப் போவதில்லை.
கடல் மட்டம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகின்றது அல்லவா? அதனால் கடல் ஓரத்தில் இருக்கும் நகரங்களும் கடல் நடுவே இருக்கும் பல தீவுகளும் இருப்பது இனி சந்தேகம் தான்!
சென்ற நூற்றாண்டில் 1.4 மிலிமீட்டர் அளவு உயர்ந்து கொண்டிருந்த கடல் நீர் மட்டம் 2006 முதல் 2015 வரை 3.6 மிலிமீட்டர் அளவு உயர்ந்திருப்பதாக நேஷனல் ஓசியானிக் அண்ட் அட்மாஸ்பரிக் அட்மினிஸ்ட்ரேஷன் (NOAA) தெரிவிக்கிறது.
2100ம் ஆண்டு வாக்கில் இந்த கடல் மட்டம் உயர்வதால் 25 கோடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.
எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் 45 செண்டிமீட்டர் அளவில் கடல்மட்டம் உயர்ந்தால் மாலத்தீவுகள் 77 சதவிகிதம் 2100ம் ஆண்டு வாக்கில் அழிந்து விடும். இங்கு 1200 சின்ன பவழப்பாறை தீவுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 5,40,000!
பசிபிக் கடலின் நடுவில் உள்ள கிரிபடி என்னும் தீவும் ஆறு அடி நீர்மட்டம் உயர்வதால் மூன்றில் இரண்டு பங்கு அழிந்து விடும். இங்குள்ள ஜனத்தொகை1,20,000!
சீனாவை எடுத்துக் கொண்டால் 430 லட்சம் பேர்கள் கடலோரத்தில் வசிக்கிறார்கள்.
பங்களாதேஷில் 320 லட்சம் மக்கள் கடல் பகுதியில் வசிக்கிறார்கள். இந்தியாவிலோ 270 லட்சம் பேர்கள் கடலோரப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.
மிக வேகமாக அழிந்து வரும் நகரம் ஜாகார்தா என்கிறது பிபிசி.
உலக பொருளாதார ஃபோரம் பங்களாதேஷ், லாகோஸ், நைஜீரியா,பாங்காக் ஆகியவை நீருக்கடியில் மூழ்கி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறது.
அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் எப்போதும் சூரிய வெளிச்சத்தில் மின்னுவதால் சன் ஷைன் சிடி என்ற செல்லப் பெயரை எடுத்திருக்கும் ப்ளோரிடாவுக்கும் இதே அபாயம் உண்டு.
க்ளைமேட் சென்ட்ரல் ரிஸர்ச்-இன் ஆய்வின் படி அமெரிக்காவில் 36 முதல் 50 நகரங்கள் கடல் மட்டம் உயர்வால் பாதிக்கப்படும்.
ஆக என்ன தான் செய்வது? இந்தக் கேள்விக்குப் பதிலை ஓரளவு நெதர்லாந்தும் அமெரிக்காவும் தருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும் என்பது தான் அந்த பதில்.
,மிகமிக உயரமான மட்டத்தில் வீடுகளை அமைப்பது ஒரு வழி. சாலைகளையும் அதே உயரத்தில் அமைக்க வேண்டும். ஏராளமான அளவு பவழப்பாறைகளை வளர்க்க வேண்டும். அலையாத்திக் காடுகளை (MANGROVES) கடல் ஓரத்தில் மிக அதிகமாக வளர்க்க வேண்டும்.
ஆனால் இதற்கு பெரும் செலவைச் செய்ய வேண்டி வரும்.
நெதர்லாந்தும், அமெரிக்காவும் செலவழிப்பதைப் போல, இதை எல்லா நாடுகளாலும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான்!
இப்போதிலிருந்தே படிப்படியாக மக்களை இடம் பெயரச் செய்வது மக்களை அழியாமல் பாதுகாக்க எடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கையாக அமையும்.
சரி, 2100;ல் உலகம் எப்படி இருக்கும்? இதை யாராலும் சொல்ல முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.
பசுமை வாயுக்கள் எனப்படும் க்ரீன் ஹவுஸ் கேஸ்களை நம்மால் தடுக்க முடியுமா? முடியும் என்றால் அழிவிலிருந்து தப்பிக்கலாம்!
இதற்கு ஒவ்வொரு மனிதனும் பாடுபட வேண்டுமே! பாடுபட்டால் அழிவிலிருந்து ஒருவேளை இந்தக் கடலோரப் பகுதிகள் தப்பிக்க வாய்ப்பு உண்டு!
இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்
வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,
சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,
****
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்
படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற
இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய
வித்தகனே, வேலாயுதனே,
உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட
பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்
தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க
ஆசை கொண்ட மணவாளனே,
பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்
பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய
திருப்புகழில் பூகோள பாடம்
காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,
****
பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி
பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.
நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).
உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).
இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு ; அது இறுதியில் காவிரியில் கலக்கிறது.
பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.
மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது
****
கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்
கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.
***
பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை
நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,
இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான
தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி
போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)
இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்
விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய
(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்
சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து
வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு
ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு
கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
* இது ‘திருக்கற்குடி‘ அல்லது ‘உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும்.திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.
** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான்பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின்நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமதுநண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில்ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால்கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ‘ஆதிஉலா‘ என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன.சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.
***
பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி
கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்
தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்
கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களைவைத்துக்கொண்டு,
நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து
இருக்குமோ எனில் … அவர்களது முகமானது, ஒரு செய்யுளும்
வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும்விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்
அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்
வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து
போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.
முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்
செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி
போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்றசெவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.
To be continued……………………………
Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும், பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-, டாக்டர்கள், நோய்கள், காவேரி, சோழநாடு, போலிப்புலவர்கள்
செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. ஆகவே ஒரு செயலை முன்னதாகவே யோசித்துச் செய்ய வேண்டும். சரியான ஆலோசனை இன்றி செய்யப்படும் அனைத்துச் செயல்களுமே பின்னால் மன வருத்தத்திற்கு இட்டுச் செல்லும்.
க்ருதஸ்ய கரணம் நாஸ்தி ம்ருத்ஸ்ய மரணம் ததா | கதஸ்ய ஷோஸனா நாஸ்தி ஹ்ரேதத் வேதவிதாம் மதம் ||
செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. இறந்தது மீண்டும் உயிர் பிழைத்து மரணத்தை அடைய முடியாது. எது இழக்கப்பட்டதோ அதை நினைத்து வருத்தப்பட முடியாது. இதுவே வேதத்தைக் கற்றறிந்தோரின் பார்வையாகும்.
கும்பம் நிர்மாதி சக்ரேண கும்பகாரோ ம்ருதா முவி |
ததைவ கர்மசூத்ரேண பலம் தாதா ததாதி ச ||
பூமியிலிருந்த களிமண்ணை எடுத்து தனது சக்கரத்தில் ஒரு குயவன் பானையைச் செய்கிறான். அதுபோலவே படைப்பானது (அதாவது விதியானது) கர்ம விதியின் படி கர்ம பலனைத் தருகிறது.
கும்ப: பரிமிதம்ப: பிபத்யசௌ கும்பசம்பவோப்மோதிம் |
அதிரிச்யதே சுஜன்மா கஸ்சித் ஜனகம் நிஜேன சரிதேன ||
ஒரு பானையானது குறிப்பிட்ட அளவே தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் கும்பத்திலிருந்து பிறந்த கும்பமுனியானவர் (அதாவது அகத்தியர்) முழுக் கடலையுமே குடித்து விட்டார். ஒரு நல்ல மகனானவன் தனது செயல்களால் தந்தையையே மிஞ்சுகிறான்.
கும்பா: பயோநிதிபயோஹரணப்ரவூத்தா
நித்யம் வஹந்தி கில யே விபலதமத்வம் |
சித்ரம் க்ஷணாதிஹ ததேகசமுத்பவேண
சந்தர்ஷிதா நிகில வாரிதிபானலீலா ||
கடலிலிருந்து நீரை எடுக்கப் பயன்படுத்தப்படும் பானையானது பயனற்ற விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், என்ன ஆச்சரியம், அதிலிருந்து பிறந்த ஒருவர் விளையாட்டு லீலையாக கடலையே குடித்து விட்டார்!
வெள்ளை நிற குமுத மலர்களின் மீது படும் சந்திர கிரணங்கள் அதன் பிரகாசத்தைக் கூட்டுகின்றன. அது போலவே மிக மிக ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களின் நடத்தை மிக அதிகமாகப் பாராட்டப்படுகிறது.
Date uploaded in Sydney, Australia – 2 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
During my previous two trips to Sydney, I covered Shiva, Murugan (Skanda/ Kartikeya), Venkateswara, and Nantien Buddhist temples. During this third trip, I decided to cover rest of the temples. So, I went to Ganapathy (Vinayakar) temple and a Shakti temple in the past few weeks. My son told me that there are two more temples in an industrial area one next to another. Who will say we don’t want two birds in one stone. So, we rushed there in car on 31 January 2026 to get two mangoes in one stone. We were not disappointed.
In a vast industrial area with trucks and cranes, two small temples peeped out. First, we entered the Sydney Durga temple.
Surprise! Surprise!
Wes aw Tamil poet Tiruvalluvar statue next to Sarasvati Devi statue in the temple complex. When we moved a little further, we saw Tamil poet Ilango’s statue, the author of the most famous Tamil epic Silappadikaram.
Then we climbed several steep steps to see a huge hall with Goddess Durga in the main shrine. From the temple posters we came to know that it is run by Sri Lankan Tamils. On either side of the main shrine Lord Ganesh and Lord Skanda/ Murgan occupied two small shrines.
The unique feature of the temple is the eight beautiful Lakshmi statues (Ashta Laksmi) in the corridor. Apart from them, there are Navagrahas and other minor deities. There were four priests looking after the visiting devotees. In total only 25 devotees were inside the huge Mandapa. So, we had good Darshan (viewing) of Gods. It has a divine atmosphere.
There is a canteen outside where one can buy Tamil snacks.
Shirdi Saibaba Temple
Just a few doors away, is the Shirdi Sai Temple. Again, we climbed a number of steps to see a huge hall with Shirdi Sai baba occupying the Main shrine. A beautiful and melodious divine song was going on air. It created more divine atmosphere. About 15 people with one priest were there. Lord Ganesh, Siva and Hanuman are in smaller shrines. The unique feature of the temple is a Siva Linga where one can do Abisheka. Water pots are placed near it. We did Abishek (bathing of the God) with Mrtyunjaya Mantra from the Yajurveda. Here also one canteen is operating.
Both the temples must be visited by the devotees. There is good scope for big Puja, ceremonies and Dhyana (meditation).
After visiting Sai Mandir, we came back to Tamil Durga temple and bought hot Idli, Vadai, Sambhar, Chutney and Masala Tea.
Date uploaded in Sydney, Australia – 2 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 8
இவை அனைத்தும் பழனி மலை முருகன் பற்றிய பாடல்களில் உள்ளவை!
சென்னை வசவு கஸ்மாலம் !
குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு … சிறு குடிலாகிய
இந்த வீடு – உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட
வழுவழுப்பான கொழுப்பும்,
எலும்பு அணி சரி தசை இரல் குடல் … எலும்பும், அடுக்காகச்
சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும்,
நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு … முறையின்றி
சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன்,
இவை பல கசுமாலம் … இவற்றோடு கெட்ட அழுக்குகள்
நிறைந்ததுமான,
பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலுள்ள கஸ்மலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் பிற்காலத்தில் சென்னை வணிகர்கள் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பயன்படுத்தும் வசை மொழியாக மாறிவிட்டது .
श्रीभगवानुवाच ।
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् ।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ २-२॥
கஸ்மலம் – மதிமயக்கம், தீய எண்ணம்
śrībhagavānuvāca
kutastvā kaśmalamidaṃ viṣame samupasthitam
anāryajuṣṭamasvargyamakīrtikaramarjuna 2-2
The Blessed Lord said: Whence is this perilous condition come upon thee, this dejection, un-Aryan-like, heaven-excluding, disgraceful, O Arjuna?
śrībhagavānuvāca = the Supreme Personality of Godhead said; kutaḥ = wherefrom; tvā = unto you; kaśmalaṃ = dirtiness; idaṃ = this lamentation; viṣame = in this hour of crisis; samupasthitaṃ = arrived; anārya = persons who do not know the value of life; juṣṭaṃ = practiced by; asvargyaṃ = which does not lead to higher planets; akīrti = infamy; karaṃ = the cause of; arjuna = O Arjuna.;
Sanskrit dictionary
[«previous (K) next»] — Kashmala in Sanskrit glossary
விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே,
வயல் வாவி புடை மருவு வீரை வரு பழநி ஞான மலையில்
வளர் பெருமாளே. … வயல்களும் குளங்களும் பக்கங்களில்
பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும், பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
(மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர்,முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்).
***
சிவன் செய்த ஐந்து வீரச் செயல்கள்
பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல்
இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு
அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு
ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே … சூரியனின்
பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,
***
கண்ணன் செய்த செயல்கள்
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம்
அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக்
கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி …
இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில்
(இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி,nஅவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய*அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும்,
செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு
தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே … செம்மையான
குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே,
(பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன்
ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.)
***
விருதா ! = வெட்டிப்பயல், உதவாக்கரை
சிவனார் மனங்குளிர … சிவபிரானது மனம் குளிரும்படியாக
உபதேச மந்த்ரம் … ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை
இருசெவிமீதி லும்பகர்செய் … அவரது இரு செவிகளிலும் சொன்ன
சூரியனுடைய மகனான சுக்ரீவனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து
பரி(வு) தக அழையா முன் வந்து பரிவாலே பரவிய
விபீஷணன் … (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும்
அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று,
பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன்
***
ஐந்து வகைச் சக்திகள்
ஒருமாது சேர்பஞ்ச வடிவி … ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச*
சக்திகளின் கலவையான வடிவழகி,
மோகி யோகங்கொள் மவுன ஜோதி … சிவத்தின் காதலி,
சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி
வடிவினாள் ஆகிய உமா தேவியார்
சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா … சேர்ந்திருக்கிற
இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப்
பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே,
(* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.)
To be continued …………………………………
Tags- நவ மணிகள் பஞ்ச, ஐந்து சக்திகள், நவ நதிகள், விபூதி, கலிசை, விருதா, கஸ்மாலம், அருணகிரிநாதர், அரிய செய்திகள் -Part 8, சொல் அழகும், பொருள் வளமும், திருப்புகழ்
Date uploaded in Sydney, Australia – 1 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மேலும் இரண்டு பெரிய, அழகிய கோவில்களுக்கு எனது விஜயம்
ஆஸ்திரேலியாவில், குறிப்பாக சிட்னி நகரிலுள்ள, எல்லா கோவில்களையும் பார்க்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டேன் . இதுவரை சிட்னி சிவன், முருகன், கணபதி, வெங்கடேஸ்வரா , துர்கா உள்பட ஐந்து கோவில்களுக்குக் சென்றுவிட்டேன் இன்னும் சில கோவில்கள் இருப்பதாகவும் இரண்டு கோவில்கள் அடுத்தடுத்து இருப்பதாகவும் என்னுடைய மகன் சொன்னவுடன் நேற்று ஜனவரி கடைசி நாளன்று (31-1-2026) காரில் விரைந்தோம்.
பெரிய கோவிலின் போர்டில் துர்கா தேவஸ்தானம் என்று எழுதியிருந்தது; அது தமிழ்த் தென்றலோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. காரை நிறுத்திவிட்டு கோவில் வளாகத்துக்குள் காலடி வைத்தோம்.
சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்! Surprise ! Surprise !
திருவள்ளுவர் சிலை! அருகில் கலைவாணி (சரஸ்வதி) சிலை!! மிகவும் சந்தோசம் ஏற்பட்டது ; காமெரா ‘கிளிக்’ ‘கிளிக்’ என்றது .
சிறிது நகர்ந்தோம் ; மேலும் சர்ப்பிரைஸ்!
சமண மதத் துறவி கோலத்தில் இளங்கோ அடிகள் ! கீழே ஆங்கிலத்தில் விளக்கம்.
இதை அடுத்து இருப்பது ஷீரடி பாபா கோவில்.
இரண்டு கோவில்களும் பக்கா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருக்கிறது . கோவிலைக் கண்டுபிடிப்பது எப்படி என்று என் மகன் முன்கூட்டியே சொல்லிவிட்டான்; எந்த இடத்தில் நூற்றுக் கணக்காண டிரக்குகளும், லாரிகளும், பளுதூக்கும் கிரேன்களும் தென்படுகிறதா அங்கேதான் இரண்டு கோவில்களும் உள்ளன என்றான்; ஆகையால் லாரிகளைப் பார்த்தவுடன் கோவிலைத் தேடினோம். சிறிய கோபுரம் எங்களை எட்டிப்பார்த்தது . ஆனால் இரண்டு கோவில்களும் பிரம்மாண்டமான அமைதி தவழும் அற்புதக் கோவில்கள்.
துர்கா கோவில் வளாகத்தில் கார்களை நிறுத்தலாம் . மலை போல படிகள் ஏறிச் செல்ல வேண்டும் . பெரிய சந்நிதியில் துர்கா தேவி; இரு புறமும் கணபதியும் முருகனும் குடிகொண்டுள்ள சிறிய சந்நிதிகள். மூன்று நான்கு பட்டர்கள் பக்தர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர் உபயதாரர்களுக்கான பூஜையை ஒருவர் செய்துகொண்டிருந்தார் . மொத்தத்தில் சுமார் 25 பேர் இருந்தோம்; ஆகையால் நல்ல தரிசனம்
இந்தக் கோவிலின் சிறப்பு நவக்கிரகம், சிவன் போன்ற தெய்வங்களுடன் அஷ்ட லட்சுமியையும் அழகாக பெரிய சிலைகளாக வடித்துள்ளனர். கோவிலைச் சுற்றி பெரிய திறந்த வெளிப் பிரகாரம் தமிழ் நாட்டுக் கோவில்களை நினைவு படுத்தியது. கோவிலுக்குள் தெய்வீக சூழ்நிலையை, சாந்நியத்தை, உணர முடிந்தது.
சில சீன பக்தர்களும் வந்திருந்தனர் ஏனையோர் தமிழ் பக்தர்கள்தான் .
கோவிலுக்கு வெளியே வந்தோம் பெரிய கான்டீன் மண்டபம் தென்பட்டது. சூடான இட்லி, வடைகளை விலைக்கு வாங்கிச் சாப்பிட்டோம் . மசாலா டீயும் கிடைத்தது
ஷீரடி சாய் பாபா கோவில்
ஆனால் அதற்கு முன்னால் அடுத்த கோவிலுக்கும் சென்று ஷீரடி பாபாவை வழிபட்டோம். மீண்டும் படிகள் ஏறிச் செல்ல வேண்டும் . பிரம்மாண்டமான மண்டபத்தின் முக்கிய சந்நிதியில் ஷீரடி பாபா சிலை ; இனிமையான வேற்று மொழிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது; நல்லDivine Atmosphere தெய்வீக அட்மாஸ்பியர்! ஒரு வடக்கத்திய அர்ச்சகர் இருந்தார். ஒரு பத்து பேர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
கணபதி, அனுமார், சிவன் மூர்த்திகளும் இருந்தன. கோவிலின் சிறப்பு சிவலிங்கத்துக்கு நாமே ஜலத்தினால் அபிஷேகம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது; நாங்களும் ஓம் நமசிவாய மற்றும் திரயம்பக (மிருத்யுஞ்சய) மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்தோம்.
இங்கும் வெளியே கான்டீன் உள்ளது மெனு மட்டும் பார்த்துவிட்டு இட்லி வடை சாப்பிட தமிழ்க் கோவிலுக்குத் திரும்பிவந்தோம்.
இரண்டு கோவில்களும் பார்க்க வேண்டிய கோவில்கள். பூஜைகள், தியானம் செய்ய உகந்த கோவில்கள். கூட்டம் இல்லை என்பதும் மிக உயர்ந்த பிரம்மாண்டமான மண்டபங்கள் என்பதும் இரண்டு கோவில்களுக்கும் உள்ள சிறப்பு .
பல முத்து உதிர் செய்ப் பழநிப்பதி வெற்பினில் நில் குமரப்
பெருமாளே. … பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின்
உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி மலையில் நின்றருளும் பெருமாளே.
*(மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இடையே போட்டியும் பொறாமையும் வெடித்தது . ஒவ்வொரு புரும் தன்னுடைய கவிதையே சிறந்தது என்று சொன்னபோது விவாதம் ஏற்பட்டது , அப்போது சிவபெருமான் சொன்னபடி, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது பாடலையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் பாடல்களைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் கவிதையே சிறந்தவை என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.- திருவிளையாடல் புராணம்.)
***
ரஷ்ய விண்வெளி வீரர் யுரி ககாரினை விட வேகமாக முதன் முதலில் பூமியைச் சுற்றியது முருகன்தான் !
கடலை பொரியவரை பலகனி கழை … கடலை, பொரி, அவரை,
பலவிதமான பழங்கள், கரும்பு
நுகர் கடின குட உதர … இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்
போன்ற வயிற்றையும்,
விபரீத கரட தட மு(ம்)மத … அதிசயமான மதம் பாய்ந்த
அடையாளத்தையும், மும்மதத்தையும்*
நளின சிறுநயன … தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்
கொண்ட கரிணி முகவரது துணைவோனே … யானைமுகத்தோருக்கு
இளையவனே,
வடவரையின் முகடு அதிர … வடமலையாகிய மகாமேருவின்
சிகரங்களும் அதிரும்படி,
ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா … ஒரே நொடியில்
உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே,
***
சுக்ரீவன் 11 ருத்திரர்கள் பற்றி
இரவி குலத்தி ராசத மருவி … சூரிய அம்சமாக வந்த
சுக்ரீவன் ரஜோகுணத்தை மேற்கொண்டு
எதிர்த்து வீழ்கடு ரணமுக … (வாலியை) எதிர்த்து, தோற்று
நின்ற கொடிய போர்க்களத்தில்,
சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு … சுத்த வீரியம்
வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்ரீவனுக்கு உதவி,
நீண்முடி அரசது பெற்று வாழ்வுற … அவன் பெரிய
அரசாட்சியைப் பெற்று வாழுமாறு
இதமொடளித்த ராகவன் மருகோனே … அன்புடன் அருளிய
ராகவனின் மருமகனே,
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை …
பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில்
பரிவொடு நிற்கும் ஈசுர … அன்போடு எழுந்தருளியிருக்கும்
தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே.
***
சமணர்கள் பற்றி
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த
பெருமாளே. … தலை மயிரைப் பறிக்கின்ற இழிந்தோராகிய
சமணர்களை (திருஞானசம்பந்தராக வந்து) கழு ஏறச் செய்து,
பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(சம்பந்தர், அப்பர் , அருணகிரிநாதர் பாடல்களில் குண்டர்களென்று வசைபாடப்படும் ஜைனர்கள் , அரசியலில் ஈடு பட்ட சமணர்கள் ஆவர். சமண மத்திலுள்ள பாமரர்கள் உலக மஹா சாதுக்கள் )
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1-2-2026 தைப்பூச நன்னாள் – சிறப்புக் கட்டுரை!
புண்ணியம், பாவம் என்பவை எவை? வள்ளலார் பிரான் அருளுரை!
ச. நாகராஜன்
வள்ளலார் இராமலிங்க அடிகளார் தோற்றம் 5-10-1823 ஜோதியுடன் கலந்த நாள் 30-1-1874
சமீப காலத்தில் வாழ்ந்து சன்மார்க்கத்தை நிறுவி ஏராளமான ரகசியங்களை உலகிற்கு அளித்தவர் வடலூர் ராமலிங்க அடிகளார் ஆவார்.
வள்ளலார் என்று அனைவராலும் போற்றப்படும் இவர் ஶ்ரீ முக வருடம் தை மாதம் 19ம் நாள் (31-1-1874) வெள்ளிக்கிழமை அன்று தன் அறையில் சென்று இறைவனுடன் ஜோதி மயமாகக் கலந்தார்.
அவரது பாடல்களையும் நூல்களையும் ஒவ்வொரு தமிழரும் படித்தல் வேண்டும்.
இங்கு அவரது உரைகளில் புண்ணியம் பாவம் பற்றிய விளக்கத்தைக் காணலாம்.
அருளை நாம் எப்படிப் பெறுவது?
புத்தி தத்துவத்தால் நன்மை, தீமையை விசாரிக்க வேண்டும்.
பெரியாரைத் துணை கொண்டு அவர் சொல்லும் திருப்பணியை இடையறாது செய்ய வேண்டும்.
நன்மை, தீமை என்பவை யாவை?
நன்மை தீமை என்பவை புண்ணிய பாவம் ஆகும்.
புண்ணியம் என்பது என்ன?
ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். இது புண்ணியம்.
பாவம் என்பது என்ன?
ஆரம்பத்தில் சுகமாயும் பின்னர் துக்கமாயும் இருக்கும். இது பாவம்.
புண்ணிய பாவங்கள் எப்படி நம்மை வந்து அடைகின்றன?
மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இவை அடைகின்றன.
மேலும் மனத்தினிடத்தில் நால் வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும் ஆக பன்னிரண்டு வகையாக இவை நம்மை வந்து அடையும்.
அவை யாவை?
அவையாவன:
மனத்தினால் – 1. பரதார கமனம் பண்ண நினைத்தல் 2. அன்னியருடைய சொத்தை கிரகிக்க நினைத்தல் 3. அன்னியருக்குத் தீங்கு செய்ய நினைத்தல் 4. முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமைப் படுதல்.
இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
வாக்கினால்:- 1.பொய் சொல்லல் 2. கோள் சொல்லுதல் 3. புறம் கூறல் 4. வீணுக்கு அழுதல் இவை நான்கும் வாக்கினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
தேகத்தினால் :- 1. பிறர் மனைவியைத் தழுவுதல் 2. புசிக்கத் தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல் 3. அன்னியர்களை இம்சை செய்தல் 4.தீங்கு செய்வோரைத் தடுக்காமல் அவர்களுக்கு உதவி செய்தல்.
இவை நான்கும் தேகத்தினால் உண்டாகும் பாவங்கள் ஆகும்.
இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
திருவாசகம், திருமந்திரம் பற்றி வள்ளலார்
திருவாசகம் என்பது மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை. மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.
சாத்திரங்களில் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இது மொத்தம் எண்ணாயிரம்.
தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம்.
இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
இது போன்ற அபூர்வமான ஆயிரக்கணக்கான தெய்வீக விஷயங்களை
வள்ளலார் பாடல்களிலும் நூல்களிலும் பார்க்கலாம்.
இவற்றை இணையதளத்தில் பெறலாம்.
சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்
வடலூர்
607303 என்ற விலாசத்திலிருந்து நூல்கள் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.