Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அம்பாளின் தலைநகரம்! – 2
ச. நாகராஜன்
1. இரும்புக் கோட்டை
ஶ்ரீ நகரத்தின் எட்டு உலோகக் கோட்டைகளில் முதலாவதாக அமைவது இரும்புக் கோட்டை.
இது நாற்கோண வடிவினதாய் ஆயிரத்து அறுநூறு காதம் அகலமும் அதே அளவு நீளமும் உள்ளது. இது ஆகாயத்தை அளாவும் துவஜங்களையும் கோபுரங்களையும் கொண்டதாய் மிக்க மனோகரமாய் விளங்குகிறது.
2. எஃகுக் கோட்டை
இரண்டாவதாக அமைந்துள்ள இந்தக் கோட்டையின் மேல் கட்டப்பட்டுள்ள பல மணிகளின் ஒலியானது ஆகாயத்தை அளாவி முழங்கிக் கொண்டிருக்கும். இதற்கும் முதலாவது கோட்டைக்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் பூத்துக் காய்த்துப் பழுத்துள்ள பல்வகையான விருக்ஷ மஹோத்தியானத்தில் பல விருக்ஷங்களும் அவற்றின் மேல் படர்ந்தொளிரும் பல கொடிகளும் அக்கொடிகளின் பூங்கொத்துகளிலிருந்து பெருகியோடும் செந்தேனருவிகளும், அவற்றின் தேனை உண்டு மெய்ம்மறந்து ரீங்காரம் செய்யும் வண்டினக் கூட்டங்களும், மயில்கள், குயில்கள், கிளிகள் முதலிய பக்ஷி ஜாலங்களும், செந்தாமரை, வெண்டாமரை, செங்கழுநீர், ஆம்பல் முதலிய பல அழகிய புஷ்பங்கள் நிறைந்த நீரோடைகளும், உத்தியானவனங்களும், மேடை மாளிகைகளும், கூட கோபுரங்களும் சிறந்து விளங்கும்.
அங்கே நீலநிறமான திருமேனியையுடைய மஹாகாளரானவர், காளி என்னும் தனது பத்தினியோடு விளங்கி திரிபுரசுந்தரியைப் பூஜித்துக் கொண்டு ஞான ஐஸ்வரிய போகங்களுடன் ஆனந்தமாய் இருப்பார்.
3. செப்புக் கோட்டை
இது சகல தேவ முனிக்கூட்டங்களின் நேத்திரானந்தமாய் விளங்கும். இதற்கும் இரண்டாவது கோட்டைக்கும் இடையிலுள்ள பகுதியானது கற்பக விருக்ஷங்கள் நிறைந்த தோட்டங்களாலும், நதீநதங்களாலும், பல மாட மாளிகைகளாலும் சிறந்து விளங்குவதாகும். அங்கே மது ஶ்ரீ, மாதவ ஶ்ரீ என்னும் இரு சக்திகளோடு கூடி திரிபுரசுந்தரியை உபாசித்துக் கொண்டு ஞான, விஞ்ஞானம், போக போக்யங்கள், ஆரோக்யம் முதலியவற்றோடு கூடி விளங்கும் வஸந்தன் என்பவன் வசித்துக் கொண்டிருப்பான்.
4. வெள்ளீயக் (தகரக்) கோட்டை
இது தனது வெண்மையான காந்திகளால் விண்ணெங்கும் ஒளியைப் பரப்பி ஆகாயத்தை அளாவும் சிகரக் கூட்டங்களைக் கொண்டதாகும். இதற்கும் மூன்றாவதாக உள்ள கோட்டைக்கும் இடையேயுள்ள பிரதேசமானது நறுமணம் வீசும் மந்தமாருதத்தோடும், ஸந்தான தரு என்னும் கற்பக விருக்ஷங்களோடும் சிறந்து விளங்கும். இங்கே கிரீஷ்ம ருதுவுக்கு அதிதேவதையாகிய புருஷன் சுக்கிர ஶ்ரீ, சுசி ஶ்ரீ என்னும் இரண்டு சக்திகளோடு ராஜராஜேஸ்வரி தேவியின் சரணங்களில் நிலைத்த பக்தியோடு துதித்துக் கொண்டு வாசம் செய்வான்.
5. பித்தளைக் கோட்டை
இது மிகவும் உன்னதமான பல்லாயிரம் பொற்சிகரங்களையும், கொடிகளையும் கொண்டு விளங்கும். இதற்கும் நான்காவதான வெள்ளீயக் கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது ஹரிசந்தனம் என்னும் கற்பக விருக்ஷங்கள் அடர்ந்த தோட்டங்களும், செந்தாமரை, வெண்டாமரை, செங்குவளை, கருங்குவளை முதலிய புஷ்பங்கள் நிறைந்து விளங்கும் கமலாலயங்களும், நடைவாவிகளும் கொண்டு விளங்கும். அங்கே வர்ஷ ருதுவுக்கு அதிபனானவன் உருத்தரித்து நபஶ்ரீ, நபஸ்யஶ்ரீ என்னும் இரண்டு சக்திகளோடும் மிகவும் ஆனந்தமாய்க் கிரீடித்துக் கொண்டிருப்பான்.
6. பஞ்சலோகக் கோட்டை
இது இரத்தினங்களால் இழைக்கப்பட்ட பல்நெடுஞ்சிகரங்களையும். பொன் துவசங்களையும், பதுமைகளையும் கொண்டதாய் விளங்கும். இதற்கும் ஐந்தாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது, என்றும் மலர்ந்து நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த மந்தாரமென்னும் கல்ப விருக்ஷ வனங்களும், சுகந்தத்தை வீசும் இனிய தென்றலும், இன்னோரன்ன பல சிறப்புகளையும் கொண்டதாய் விளங்கும். அங்கே சரத் ருதுவுக்கு நாதனானவன், இஷ ஶ்ரீ, ஊர்ஜ ஶ்ரீ என்னும் இரண்டு பிராணநாயகிகளோடு ஶ்ரீ லலிதா தேவியின் சேவையில் தற்பரனாய் விளங்குவான்.
7. வெள்ளிக் கோட்டை
இது தனது பிரகாசத்தால் எங்கும் வெண்மையைப் பரப்பிக் கணக்கற்ற நெடுமுடிகளையும் துவஜங்களையும் கொண்டதாய் விளங்கும். இதற்கும் ஆறாவது கோட்டைக்கும் மத்தியில் உள்ள பிரதேசமானது விண்ணையொட்டித் தாவும்படி உயர்ந்து விளங்கும் பாரிஜாத கல்ப விருக்ஷங்களையும், இன்னிசையோடு கூவும் குயிலினங்களையும், மனோகரமான மாடமாளிகைகளையும் கொண்டதாய்ப் பிரகாசிக்கும். அங்கு அந்த பாரிஜாத வாடிகையில் ஹேமந்த ருதுவுக்கு நாயகனான புருஷன் ஸஹ ஶ்ரீ, ஸஹஸ்ய ஶ்ரீ என்னும் இரண்டு தேவிகளோடும் கிரீடித்துக் கொண்டு பரமேஸ்வரியை அர்ச்சித்துக் கொண்டு விளங்குவான்.
8. தங்கக் கோட்டை
இந்தக் கோட்டைக்குப் பல இரத்தின கோபுரங்களும், மணிப் பதுமைகளும் பொற்கொடிகளும் உண்டு. இதற்கும் ஏழாவது கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசமானது கதம்ப விருக்ஷத் தோப்புகளும், மகரந்தத் திட்டுகளும், செந்தேன் அருவிகளும், மனோகரமான மணத்தோடு உலவும் மந்தமாருதங்களும் மாடமாளிகைகளும் இன்னும் இத்தகைய பலவும் கொண்டதாய் சிறந்து விளங்கும்.
இக்கதம்பவன வாடிகையில் சிசிரருதுவுக்கு நாதனானவன் தப ஶ்ரீ, தபஸ்ய ஶ்ரீ என்னும் இரண்டு சக்திகளோடு மஹா திரிபுரசுந்தரியைப் பூஜிக்கும் பெருஞ்செல்வத்தோடு விளங்கி உலக முழுவதையும் குளிரச் செய்துகொண்டு வசிப்பான்.
அன்றியும் இந்தக் கதம்ப வனத்தில், திரிகோணம், பஞ்ச கோணம், அஷ்டதள பத்மம், ஷோடச (16) தள கமலம், உள், வெளியென்னும் இரண்டு தசகோணங்கள், சதுரம் ஆகிய ஏழு ஆவரண சக்ரங்களோடு கூடி பிந்துஸ்தானத்தில் மந்திரிணி என்னும் சியாமளா தேவி மஹா வைபவத்துடன் விளங்குவாள். மேலும் இம் மந்திரிணீ தேவியின் ஸ்வரூபமானது எங்ஙனம் இருக்கும் எனில் அதையும் அறியலாம்.
மயில்தோகையைப் போன்ற காந்தியைக் கொண்டு பனையோலையால் செய்யப்பட்ட தாடகங்களையும், கற்பூர மணம் வீசும் தாம்பூலம் நிறைந்த செவ்விய வாயையும், சிவந்த உதட்டில் நிர்த்தனம் செய்யும் மந்தஹாஸத்தையும், குங்குமக் கலவையை அணிந்த திருமேனியையும், உலகனைத்தையும் மலரச் செய்யும் பாலசந்திரனை அணிந்த சிகரத்தையும், கஸ்தூரி திலகத்தையும், கதம்ப மலர் மாலைகளையும், இடது புஜத்தின் மேல் சரிந்த அளகபாரத்தையும் கொண்டதோடு ஒரு கரத்தில் கிளியையும், ஒரு கரத்தில் தாமரை மலரையும் தரித்து, மற்ற இரண்டு கரங்களால் இனிய வீணையைத் தாங்கி வாசித்துக் கொண்டு, அவ் வீணா கானத்தின் ஆனந்தத்தில் மூழ்கிய மனோபாவத்தை உடையவளாய் ஸங்கீத மாத்ருகை என்னும் சியாமளை விளங்குவாள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அரைக் கிணறு தாண்டி விட்டோம்;பாதியில் நிறுத்தினால் ஆபத்து! பத்தாயிரம் பாடல்களில் பாதிக்கு வந்து விட்டோம்; சுவையான பகுதிகளை மட்டும் தந்து விரைவில் முடிக்க ஆசை! பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம். படித்துச் சுவையுங்கள்! இதற்கு முன்னர் வெளியிட்ட 290 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள். என்னுடைய 155 நூல்களில் வேறு சில நூல்களிலும் கம்பன் கட்டுரைகள் உள. வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!
291
வாலி மீது ராமன் விட்ட அம்பு பற்றி ஒரு அதிசயச் செய்தியைக் கம்பன் கூறுகிறான் ;உங்களுக்குத் தெரியுமா ?
“பொம்பளை விஷயத்துல ஜாக்கிரதையா இரு”! என்று முடி சூட்டு விழாவில் ராமன் சொற்பொழிவு ஆற்றியது ஏன் ?
294
RAMA REJECTED FIVE-STAR HOTEL TREATMENT; WHY?
“தேவரீர் என் கிஷ்கிந்தை நகருக்கு வந்து (பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற)என் அரண்மனையில் தங்கி என்னைக் கெளரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”-என்ற சுக்ரீவன் வேண்டுகோளை ராமன் ஏற்க மறுத்தது ஏன் ?
295
GOODBYE, SUGREEVA, LET US MEET AFTER FOUR MONTHS; SOUTH WEST MONSOON STARING IN A FEW DAYS TIME ACCORDING TO MADRAS A.I.R. WEATHER REPORT!
சுக்ரீவனுக்கு ராமன் விதித்த நான்கு மாத கெடு என்ன?
296
ஏராளமான பாடல்களில், ராமன் கண்ட இயற்கைக் காட்சிகளை வருணித்த கம்பன், கானக ஆர்கெஸ்ட்ராFOREST ORCHESTRA குறித்து விளம்பியது என்ன ?
297
தேவர்களும் மனிதர்களும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்று ராமன் வருந்தியது ஏன் ?
298
“நீ போய் சுக்ரீவனிடம் மாரிக்காலம் முடிந்தும் ஏன் வரவில்லை என்று அறிந்து வா” –என இலக்குமணனிடம் ராமன் பேசிய சூடான வசனம் என்ன?
299
ராமன் கட்டளையை ஏற்று கோபத்துடன் வந்த இலக்குவனைக்கண்ட வானரங்கள் எப்படி ஓடின?
300
குடிபோதையில் இருந்த சுக்ரீவன் எப்படிக் காட்சி அளித்தான்?
இராமன் மறைந்திருந்து எய்திய கொடிய அம்பு வாலியின் மார்பில் பாய்கிறது. வாலி அந்த அம்பைப் பிடித்து இழுக்கிறான்; ஆனால் அவனது கைகள் தளர்ந்து, அம்பு அவன் பிடியிலிருந்து நழுவுகிறது. வாலியின் கைகள் அந்த அம்பின் மீதுள்ள பிடியிலிருந்து நழுவிய அளவிலேகாலனைப் போன்ற வலிமை கொண்ட வாலியின்,கொடிய மார்பகத்தின் உள்ளே தங்கிவிடாமல் அந்த அம்பு ஊடுருவிச் சென்றுமேலும் மேலே உயர்ந்து சென்று விண்ணை நோக்கிச் சென்றது.இதைத் தொடர்ந்து, அந்த அம்பு தூய்மையான கடல்நீரில் தோய்ந்து, தேவர்கள் தூவிய மலர்களைப் பெற்று, இராமனிடமே சென்று சேர்ந்தது.
********
292. வாலி பரமபதத்தை அடைந்தவுடன், சுக்ரீவனுக்கு அரச பட்டம் கிடைத்தது; லெட்சுமணனிடம் முடிசூட்டக் கட்டளை இடுகிறான் ராமன்!
வேதம் வல்ல பிராமணர்கள் ஆசி கூறும் மந்திரங்களை முழங்கினார் கள். தேவர்கள் மலர்மாரி பெய்தனர்; இந்து மத நூல்களில் சொன்னா விதி முறைகளைப் பின்பற்றி சுக்ரீவன் தலையில் மகுடத்தை வைத்தான் இலக்குவன்.
முடி சூட்டு விழாவுக்கான பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்தது அனுமன் !
********
293.முடி சூட்டு விழாவில் ராமன்தான் தலைமைப் பேச்சாளர்; என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நீண்ட உரை ஆற்றுகிறான்! மைக் கையில் கிடைத்ததால் யார் பேச்சை நிறுத்துவார்கள்? ஓரிரு விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டுகளில் காண்போம் :
வாலி கெட்டதும், ராவணன் கெட்டதும் இந்திரன் கெட்டதும் பெண்கள் விஷயத்தால்தான்! இதனை மனதில் கொண்டு ராமன்சொல்கிறான் :
•மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்: பெண்களின் காரணமாக (அவர்களின் பொருட்டு) ஆண்களுக்கு மரணம் கூட ஏற்படும் என்பது,
•சங்கை இன்று உணர்தி: எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் நீ உணர்ந்து கொள்.
•வாலி செய்கையால் சாலும்: இதற்கு வாலியின் செயலே (தாரா மற்றும் ரூபவதி போன்ற விஷயங்களாலும், தன் மனைவியை விரும்பியதாலும் வாலி அழிந்ததே) சாட்சியாகும்.
•இன்னும் அங்கு அவர் திறத்தினானே,அல்லலும் பழியும் ஆதல் எங்களின் காண்டி அன்றே: மேலும், பெண்களால் நமக்குத் துன்பமும் பழியும் ஏற்படுவதை எங்களின் (என்னுடைய மற்றும் உன்னுடைய) வாழ்க்கையிலேயே காண்கிறாயே! இதற்கு வேறு சான்று தேவையா?
விவேக சிந்தாமணி பாடல் வரிகளைக் கம்பன் நம் நினைவுக்கு கொண்டு வருகிறான் :
காமத்தால் இந்திரன் கலக்க மெய்தினான்,
காமத்தால் இராவணன் கருத்த ழிந்தனன்,
காமத்தால் கீசகன் கவலையுற் றனன்,
காமத்தால் இறந்தவர் கணக்கி லார்களே
“இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே” என்பது தமிழ்ப் பழமொழி.
செய்வன செய்தல்,யாண்டும்,தீயன சிந்தியாமல்;
வைவன வந்த போதும்வசை இல இனிய கூறல்,
மெய் சொலல்,வழங்கல் யாவும்,மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடுஉயர்வன உவந்து செய்வாய்.’
•செய்வன செய்தல்: ஒருவருக்குரிய கடமைகளையும், செய்ய வேண்டிய நற்செயல்களையும் தவறாமல் செய்ய வேண்டும்.
• யாண்டும் தீயன சிந்தியாமை: எப்போதும் எவருக்கும் எந்தக் தீங்கான காரியங்களையும் செய்யக் கருதுதல் கூடாது.
•வைவன வந்த போதும் வசை இல இனிய கூறல்: நம்மைப் பற்றிப் பிறர் இகழ்ந்து பேசினாலும், வசை மொழிகளைக் கூறினாலும் (அவை நம்மிடம் வந்து சேர்ந்தாலும்), அதற்குப் பதிலாக நாம் கோபப்பட்டுத் தீய சொற்கள் கூறாமல், குற்றம் இல்லாத இனிய சொற்களையே பேச வேண்டும்.
• மெய்அன வழங்கல்: உண்மை உடையதான (பொருத்தமான / நேர்மையான) பொருள்களை வழங்குதல் வேண்டும்.
•யாவும் மேவின வெஃகல் இன்மை: மற்றவர்களுக்குரிய பொருட்களைக் கவரவோ அல்லது ஆசைப்படவோ கூடாது.
•உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன உவந்து செய்வாய்: இவை போன்ற நற்பண்புகளைக் கடைப்பிடித்து நம்மை மேம்படுத்திக் கொள்ளும் வழிகளைச் செய்து, நம்முடன் வாழ்பவர்களையும் உய்யச் செய்யும் செயல்களை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்
********
294.ராமன் நகர வாழ்க்கை ஒவ்வாது என்று கூறிய காரணங்கள் இரண்டு:
புன்முறுவலுடன் இராமன் சுக்ரீவனிடம் சொன்னான் : சுக்ரீவ என்னைப் போன்ற விரதம் அனுஷ்டிப்போருக்கு உன் அரண்மனை வாழ்வு பொருந்தாது; மேலும் என்னை உபசரிப்பதிலேயே நீ நேரத்தைச் செலவிடுவாய்; அது முறையல்ல; மேலும் பதினான்கு வருட காலம் நான் சென்று வெம்மை மிக்க காட்டில் வசிப்பதாக ஏற்றுக்கொண்டேன். அரசர்கள் வாழும் செல்வ வளம் வாய்ந்த நகரில் தங்குவதற்கு உடன்படேன். வலிமை வாய்ந்த அழகிய பெரிய புயங்களை உடைய வீரனே! யாழின் இசைபோலும் சொல்லையுடைய சீதையோடு அல்லாமல் நான் அடையும் இன்பம் யாதோ? நீ இதனை எண்ணிப் பார்த்தாய் இல்லை போலும்!
‘ஏழ் இரண்டு ஆண்டு,யான் போந்துஎரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும்வள நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடம் தோள் வீர!பார்த்திலை போலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி,யான் உறும் இன்பம் என்னோ?’ 4.8.21
********
295.”இன்னது தகைமை” என்ப,இயல்புளி மரபின் எண்ணி,
மன் அரசு இயற்றி,என்கண் மருவுழி மாரிக் காலம்
பின்னுறு முறையின்,உன் தன் பெருங் கடற் சேனையோடும்
துன்னுதி;போதி’ என்றான்,சுந்தரன். அவனும் சொல்வான்
ஆதலால் நூல்களில் கூறிய இயல்பின்படி முறைப்படி ஆராய்ந்து சிறப்பாக ஆட்சியை நடத்தி மழைக்காலம் கழிந்த பின்பு என்னிடம் வரும் பொழுது, முறைப்படி உனது பெரிய கடல் போன்ற சேனையோடு என்னிடம் வந்து சேர்வாய். இப்பொழுது செல்வாய்!” என்று கூறினான், இராமன்.
நான்கு மாத காலத்துக்கு சாது சந்யாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து ஒரே இடத்தில் தங்குவது இராமாயண மஹாபாரத காலம் முதலே உள்ளது ; ஏனென்றால் அப்போது SOUTH WEST MONSOON தென் மேற்குப் பருவமழை கேரளத்தில் துவங்கி இமயமலை வரை சென்று,RETURNING MONSOON ரிடர்னிங் மான்சூன் என்ற பெயரில் திரும்பி வரும்; இதைப் பயன்படுத்தி ராவணன் ஆண்டு தோறும் கப்பலில் கோதாவரி, கங்கைப் பிரதேசங்களுக்கு வந்து அட்டூழியம் செய்வான். பிற்காலத்தில் அசோகன் இதைப்பயன்படுத்தி மகள் சங்க மித்ராவை இலங்கைக்கு அனுப்பினான். இலங்கைபுத்த பிட்சுக்களும் பாடலிபுரம் வரை வந்தனர். கரிகாலனும் பாய்மரக் கப்பல்களை பயன்படுத்தியது புறநானூற்றில் உள்ளது (மேல் விவரங்களை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காண்க )
********
296.மலையில் நாடக அரங்கு
கிளைத்துளை மழலை வண்டுகின்னரம் நிகர்த்த,மின்னும்
துளிக் குரல் மேகம் வள் வார்த்தூரியம் துவைப்ப போன்ற;
வளைக் கையர் போன்ற,மஞ்ஞை;தோன்றிகள் அரங்கின் மாடே
விளக்கு இனம் ஒத்த;காண்போர்விழி ஒத்த,விளையின் மென்பூ. 4.9.32
சுக்ரீவனை மாரிக்காலம் முடிந்த பின்னர் பெரும்படையுடன் வருக என்று ராமன் சொல்லி அனுப்பிய பின்னர், ராமன் கண்ட இயற்கைக்கு காட்சிகளை ஏராளமான பாடல்களில் கையில் ‘மைக்’ கிடைத்த அரசியல் பேச்சாளர் போல வள வள வென்று வருணிக்கிறான் கம்பன்.ஒரே ஒரு பாடலில் சுவையான செய்தி உள்ளது:
கைக்கிளை என்னும் இசைக்கு நிகராக ஒலிக்கும் வண்டுகள் யாழை ஒத்தன; இடியோசையை உடைய மேகங்கள் அடர்ந்த தோல் வாரினால் கட்டப்பட்ட மத்தளம் போல ஒலித் தன; மயில்கள்; வளையலணிந்த மகளிரைப் போன்றன; செங்காந்தள் மலர்கள் நாட்டியமாடும் இடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்குகளாக விளங்கின; கருவிளையின் மென்மையான மலர்கள் பார்ப்பவர்களுடைய கண்களைப் போன்றன. இது காட்டில், இயற்கை நடத்திய இன்னிசைக் கச்சேரி!
********
297.’வானகம் மின்னினும் மழை முழங்கினும்
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா எனக்;
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும்;கீழ் நகும்;இனி என் வேண்டுமால்?
மேகம் மின்னினாலும் (அதனைக் கண்டும்);
மேகம் இடி முழக்கம் செய்தாலும் (அதைக் கேட்டும்);
நச்சுப் பற்களை உடைய நாகம் (வருந்துவது) போல;
நான் மனம் வருந்துபவனாவேன். நான் காட்டில் வந்து சாதித்த
செயலைக் குறித்து, மேல் உலகத்தவர் நகைப்பர், கீழ்உலகத்தவரும் நகைப்பர்; இனியும் வேறு என்ன அவமானம் வரவேண்டும்?
********
298.இலக்குமணனிடம் ராமன் பேசிய சூடான வசனம் :-
.’நன்றி கொன்று அரு நட்பொடு நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்து உளான்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்;
சென்று மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்.
(இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியை மறந்து, பெறுவதற்கு அருமையான நட்ப்பு என்னும் அன்புக்கயிறு அறுந்து விழும்படி
வாய்மையைவிட்டு வாக்குத் தவறியவனை கொன்று ஒழிப்பது பாவமில்லை (ஆகவே)நீ அங்கே சென்று அவன் என்ன நினைக்கிறான் என்று கேட்டு வா.
ஒருவன் செய்த நன்றியை மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான்
“வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில்
கொம்பும் உண்டு;அரும் கூற்றமும் உண்டு;உங்கள்
அம்பும் உண்டு ” என்று சொல்லு நம் ஆணையே.
கொடியவர்கள் (போரில் மடிந்து) வீர சொர்க்கம் அடையும்படி (அவர்களை) வேரொடு அழித்து;-இவ்வுலகில் முறையான
தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டு-(நாம்) கையில்
ஏந்திய வில் நம்மிடம் உள்ளது;(யாராலும் தடுக்கமுடியாத) இயமனும் இருக்கிறான் (வானரங்களாகிய) உங்களைக் கொல்லக் கூடிய வாலியைக் கொன்ற அம்பும்(எம்மிடம்) இருக்கின்றது -என்று நமது கட்டளையாக-(சுக்கிரீவனிடம்) சொல்வாய்.
‘நஞ்சம் அன்னவரை நலிந்தால்,அது
வஞ்சம் அன்று;மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில்,ஐம்பதில்,ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ,நிறுத்துவாய்.
கொடியவர்களைக் கொல்வது பாவமில்லை என்று மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது; (இதை) ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும் தக்கது தகாதது என்பதனை அறியாதவனான அச்சுக்கிரீவனது மனத்தில் பதியும்படி சொல்லிவிட்டு வா
********
கண்ட வானரம்
காலனைக் கண்டபோல்
மண்டி ஓடின;வாலி
மகற்கு, ‘அமர்
கொண்ட சீற்றத்து
இளையோன் குறுகினான்,
சண்ட வேகத்தினால்’
என்று,சாற்றலும்,
-(கோபத்தோடு இலக்குன் வருவதைப்) பார்த்த வானரங்கள் இயமனைக் கண்டது போல (அச்சம் கொண்டு)-வாலி மைந்தனான அங்கதன் இருப்பிடம் நோக்கி ஓடினர்; போர் செய்யும் கோபக்கனல் பொங்க இராமன் தம்பியான இலக்குவன் உக்கிரமான வேகத்தோடு வந்து சேர்ந்துள்ளான்-என்று அங்கதனிடம் கூறின.
********
300.குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு- தமிழ்ப்பழமொழி
தெள்ளியோர் உதவு அப்பெருஞ் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப்
புள்ளி மால்நெடும் பொன்வரை புக்கது ஓர்
வெள்ளி மால்வரை என்ன விளங்குவான்; 4.10.19
தெள்ளியோர் உதவ -தெளிந்த அறிவுடையவரான இராமலக்கு வரால் வழங்கப்பெற்ற;பெருஞ்செல்வமாம் -பெரிய அரசாட்சிச் செல்வமாகிய
கள்ளினால் அதிகம் களித்தான் -கள்ளைக் குடித்ததனால் மிகுதியாகக்
சேர்க்கையையுடைய;மாநெடும் பொன் வரை -மிகப்பெரிய பொன்னிற மாலையில்;புக்கது –புகுந்து தங்கக் கூடிய;ஓர் வெள்ளி மால் வரை என்ன –ஒரு வெள்ளி மலை போல;விளங்குவான் –
விளங்குபவன்.
களிப்பை உண்டாக்குதல் பற்றிப் பெருஞ்செல்வதைக் ‘கள்’ என்றான் கம்பன்– என்பது ஒரு விளக்கம் . உண்மையிலேயே அவன் கள் குடியன் என்பதை முன்னரே வாலி வழங்கிய அறிவுரையில் கண்டோம். ஆகையால் அதுவும் பொருந்தும் என்க.
‘வஞ்சமும்,களவும்,பொய்யும்,மயக்கமும்,மரபு இல் கொட்பும்,
“தஞ்சம் ” என்றாரை நீக்கும் தன்மையும்,களிப்பும்,தாக்கும்;
கஞ்ச மெல் அணங்கும் தீரும்,கள்ளினால்;அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால்,நரகினை நல்காது அன்றே?
பின்னர் நாம் காணப்போகும் இந்தப் பாடல் சுக்ரீவன் குடிகாரன் என்பதைக் காட்டுகிறது; சுக்கிரீவன், மதுவுண்டு மதி மயங்கித் தன் கடமையினை மறந்த குற்றத்தினை எண்ணிவருந்தி கொண்டு கூறிய வசனம் இது!
–SUBHAM—
TAGS-கம்ப ராமாயணம் ,300 கேள்விகள், குடிபோதை சுக்ரீவன், ராமன் கோபம், நான்கு மாத கெடு, குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to Ponder
Kural 565 refers to the interesting ghost stories from Sanskrit books such as Katha sarit Sagara etc. Sri Rama Krishna Paramahamsa also gave us a beautiful ghost story where a ghost was guarding Seven Jars of Gold and how a barber was fooled by it.
Kural 568 reminds us of a story from 2000 year old Sangam Tamil literature; King Nannan executed a little girl for taking a mango that was floating in a stream; when all the town objected to it and came forward to give gold in Tulaa Bhaaram equal to the weight of the girl, he rejected it and killed the girl; Tamil poets vowed not to sing about him and his lineage.
Many couplets in this chapter remind us of the destruction of the arrogant Nanda Dynasty by the great Brahmin Chanakya.
Manu Smriti deals with the just rule and tyrannical rule in more detail than any other ancient law book. Relevant slokas that can be compared with this chapter occur in 7-41, 7-42, and 7-112
As the lives of living beings perish by the emasciation of their bodies, so do the lives of Kings perish by oppressing their kingdom—(7-112)
Here is the ghost story link by Sri R K Paramahamsa:–
Rockefeller and Ramakrishna Paramahamsa on Desire! …
Tamil and Vedas
27 Jun 2017 — A barber, who was passing under a haunted tree heard a voice say, ‘Will you accept seven jars full of gold?’. The barber looked around, but ..
******************
Tirukkural Encyclopaedia -Chapter 57- Against the Reign of Terror –வெருவந்த செய்யாமை– Avoiding terrorism
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
****
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar – SB
5.EVS Publishers, Singapore – EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 75; Chapter 57 in Tirukkural Book- Avoiding Repression in Penal Practice- Against the Reign of Terror – Absence of ‘Terrorism’-–வெருவந்த செய்யாமை–Avoiding terrorism- Penalties
*****
561.He alone is a king who impartially investigates a crime, judges it according to the nature of its guilt, and awards such punishment as will act as a deterrent- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
561.Taking cognisance of an offence in his realm, he king makes enquiries and imposes a penalty,
Which is appropriate to the gravity of the offence and ensures prevention- S M Diaz, I G of Police – SMD, Year 2000
***
561 Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he. He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.-Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
561.A king enquires and gives sentence Just to prevent future offence. Suddhananda Bharathiyar – SB 561
***
561.He is a leader who inquires justly and punishes appropriately to prevent recurrence- EVS Publishers, Singapore – EVS, Year 1986
562.He enjoys a long and glorious reign, who as a judge, looks stern and severe, but really seasons justice with mercy – ANM+2
***
562.The king, who desires his rule to prosper on a permanent basis should make a gesture of severity
When awarding punishment, but let the final blow fall lightly– SMD
***
562 For length of days with still increasing joys on Heav’n who call, Should raise the rod with brow severe, but let it gently fall. Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires wi th strictness, and then punish with mildness.– GUP, Year 1886
***
562.Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway. – SB 562
***
562.Let them that want their greatness to continue begin with sternness and punish within measure – EVS, Year 1986
***
562. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
563.Swift and sure is the ruin of the monarch whose rule is a regular reign of terror- ANM+2
***
563.The king, who rules with oppressive harshness and terror,
Will find that his reign ends in isolation and ruin – SMD
***
563 Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure. The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.– GUP, Year 1886
***
563.His cruel rod of dreadful deed Brings king’s ruin quick indeed. – SB 563 ***
563.Should he be a tyrant who strikes terror, he would perish swiftly and surely- EVS, Year 1986
564.The days of a tyrant, on whose head falls the curses of his subjects, are numbered and perishes- ANM+2
***
564.When a king’s cruelty becomes a byword among his people,
He will lose his and shorten his life too– SMD
*** 564 ‘Ah! cruel is our king’, where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay. The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.– GUP, Year 1886
***
564.As men the king a tyrant call His days dwindled, hasten his fall. – SB 564 ***
564.When people call him a cruel tyrant, the kingdom falls and the leader’s end come soon- EVS, Year 1986
565.Like the hoarded wealth jealously guarded by a sleepless monster, is the wealth of the king, who is hard of access and grim and fierce in his looks- ANM+2
***
565.A prince, who is harsh of countenance and offensive in speech,
Will be feared like the demon guarding his wealth– SMD
***
565 Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon’s glance. The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.– GUP, Year 1886
***
565.Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul. – SB 565 ***
565.The wealth of hi who is hard of access and fierce of favour is like that in the keeping of a fiend- EVS, Year 1986
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX 566.Even the boundless riches of a monarch run to decay who is harsh tongued and unforgiving- ANM+2
***
566.If a king is harsh of word and devoid of compassion, his great wealth of ancient origin too, will come to an unfortunate end – SMD
*** 566 The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall die. The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.– GUP, Year 1886
***
566.Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade. – SB 566 ***
566.If his words are cruel and his eyes be without love, even boundless riches will not last and are lost at once- EVS, Year 1986
567.Bitter words and heavy punishments, like the keen edge of a saw, wear away the conquering might of a sovereign- ANM+2
***
567.Hard words and disproportionately severe punishments are in the nature of files,
Which wear away the king’s iron strength, intended for use against enemies– SMD
***
567 Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch’s conquering might. Severe words and excessive punishments will be a file to waste away a king’s power for destroying (his enemies).– GUP, Year 1886
***
567.Reproofs rough and punishments rude Like files conquering power corrode. – SB 567 ***
567.Harsh reproofs and rude punishments file off the iron power of the self-willed leader- EVS, Year 1986
568.The prosperity of a king, who acts not in the counsel of his ministers, but frets and fumes against them, for the failure of his projects, dwindles into nothingness- ANM+2
***
568.The king who does not take counsel with his ministers on affairs of state,
He rages towards failure and his kingdom will shrink– SMD
***
568 Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o’er! The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.– GUP, Year 1886
***
568.The king who would not take counsels Rages with wrath-his fortune fails. – SB 568 ***
568.His prosperity fails and wanes who acts in a wide rage without taking counsel with good ministers- EVS, Year 1986
***
568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு
XXXXXXXXXXXXXXXXXXXX
569.The king, who has not built for himself a safe stronghold of defence, will, in times of war, tremble with fear and swiftly perish- ANM+2
***
569.The king, who does not prepare himself in time for his defence, including a strong fortress,
When war comes, will be seized with fear and succumb quickly – SMD
***
569 Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die. The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.– GUP, Year 1886
***
569.The king who builds not fort betimes Fears his foes in wars and dies. – SB 569 ***
569.The leader who does not fortify his defence in time, shall die in war fearing his enemies- EVS, Year 1986
570.The very earth groans under the tread of a cruel sovereign, who gathers around him ignorant and wicked counsellors – ANM+2
***
570.There is no greater burden for the earth to bear,
Than a tyrant surrounded by ignorant men of no worth– SMD
***
570 Tyrants with fools their counsels share: Earth can no heavier burthen bear! The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).– GUP, Year 1886
***
570.The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth. – SB 570
***
570.No burden is crushing to earth as the tyrant bound to the council of fools- EVS, Year 1986
***
No Kural was translated by H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931- in chapters 56 and 57.
*** 570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.
—Subham—
Tags- Tirukkural Encyclopaedia -Chapter 57- Against the Reign of Terror –வெருவந்த செய்யாமை–Avoiding terrorism
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அம்பாளின் தலைநகரம்! – 1
ச. நாகராஜன்
அம்பாளின் பக்தர்கள் பக்தியுடனும் ஆர்வத்துடனும் தெரிந்து கொள்ள வேண்டிய இடம் அம்பாளின் தலைநகரமாகும்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அவள் எத்தனை கோடி பிரபஞ்சங்களையும் எத்தனை கோடானு கொடி கிரகங்களையும் நட்சத்திரங்களையும் படைத்துக் காத்து பரிபாலித்து வருகிறாள் என்பதை அறிந்தவர் யாருமில்லை.
ஶ்ரீ சக்ரத்தைத் தன்னுடைய இருப்பிடமாக உடையவள் என்பது இதன் அர்த்தம்.
இந்த ஶ்ரீ நகரமே அம்பாளின் தலைநகரம். தலமையகம்.
ஶ்ரீ சக்ரம் சிவயோர் வபு: என்று ஶ்ரீ லலிதா த்ரிசதியில் சொல்லியபடி சரீரமானது ஜீவனுக்கு எப்படி அவதானமாக இருக்கிறதோ அதே போல ஶ்ரீ சக்ரமானது சிவன், சக்தி இருவர்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்கிறது என்று சொல்லப்படுகிறது.
சக்ரங்களுக்கெல்லாம் ச்ரேஷ்டமானது என்பதால் பிந்து திரிகோணங்களாகிய நவயோன்யாத்மகமான அம்பாளுடைய சக்ரத்தை ஶ்ரீ சக்ரமென்றும்,
சக்ரராஜம் என்றும் ஶ்ரீ சக்ரராஜம் என்றும் சொல்லப்படுகிறது.
அம்பாளின் அணுக்க பக்தரான துர்வாஸ மஹரிஷி அம்பாளின் ஶ்ரீ நகரத்தை நன்கு வர்ணித்தும், அந்நகரத்தைச் சுற்றியுள்ள 25 கோட்டைகளை விவரித்தும், கோட்டைகளுக்குள் இருக்கும் சிந்தாமணி கிரகத்தைப் புகழ்ந்தும், அதற்குள் தேஜோமயமாக விளங்கும் ஶ்ரீ மஹா சக்ரத்தை விவரித்தும், அந்த சக்ரத்தின் நடுவே பிந்து பீடத்தில் விளங்கும் பரபிரம்மமாகிய காமேஸ்வரரையும் பிரம்ம சக்தியாகிய காமெஸ்வரியை ஸ்தோத்திரத்தும் வடமொழியில் ஒரு நூலை இயற்றியுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஶ்ரீ லலிதா ஸ்தவ ரத்தினம்’ அல்லது ‘ஆர்யா த்விசதி’ என்பதாகும். இது 213 திருவிருத்தங்களைக் கொண்டது.
இந்த நூலின் அருமையைக் கருதி 1937ம் வருடம் திருவேட்டீச்சுரத்தைச் சேர்ந்த திரு ந. சுப்பிரமணிய ஐயர் இதைத் தமிழினில் அழகுற மொழிபெயர்த்து ‘ஶ்ரீ நகர விமர்சம்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
அதில் ஶ்ரீ நகரத்திற்கு உள்ள இருபத்தைந்து கோட்டைகளை விளக்கியுள்ளார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to Ponder
Kural 560 refers to Cow and Brahmins; Why?
All the 100 year old books in Tamil Nadu libraries and British library in London give us the strange story of Tiru Valluvar. According to them Valluvar is 50% Brahmin and 50% low caste. After the Dravidian rule in 1967, all those stories are avoided in later editions. Whatever may be the truth , here he gives his Brahminical views.
All the Hindu discourses by well known religious speakers end with the famous sloka
स्वस्ति प्रजाभ्यः परिपालयन्ताम् ।
न्यायेन मार्गेण महीं महीशाम् ॥
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं ।
लोकाः समस्ताः सुखिनो भवंतु
• Go (गो):Cows / Cattle (often symbolizing nature and animal life).
• Brahmanebhyah (ब्राह्मणेभ्यः):To the Brahmanas (representing spiritual educators, scholars, and righteous people).
• Shubham astu (शुभमस्तु):May there be goodness, auspiciousness, or well-being.
• Nityam (नित्यम्):Eternally / Forever
“Lokah Samastah Sukhino Bhavantu” (May all beings in all worlds be happy)—it completes a universal blessing that leaves no living creature behind.
Titu Gnana Sambandar, The Miracle Boy Saint, who lived 1400 years ago translated it verbatim in Tamil (Vaazka Anthanar Vaanavar Aaninam……) which is used in all Saivite Mutts even today. The commentary on these Sanskrit Tamil hymns say From Brahmins all human beings, From Cows all the animal kingdom should live happily and peacefully. Valluvar being a 50% Brahmin used this in Kural 560.
***
See Kural 559 and 545 (Rain- Just Rule Link)
His link “Rain and Just rule” is also a purely Hindu concept. In the last chapter also, we saw Valluvar’s strong belief in it. It is in early work of Kalidasa -Raghuvamsaa and Manu Smriti (9-246/7):
बालाश्च न प्रमीयन्ते विकृतं च न जायते ॥ २४७ 9-247 ॥Manu smriti
yatra varjayate rājā pāpakṛdbhyo dhanāgamam |
tatra kālena jāyante mānavā dīrghajīvinaḥ || 9-246 ||
niṣpadyante ca sasyāni yathoptāni viśāṃ pṛthak |
bālāśca na pramīyante vikṛtaṃ ca na jāyate || 9-247 ||Manu
In a country where the King avoids the income of wealth from sinners, men are, in time, born to be long-lived—(246) the crops of husbandmen grow, according as they are sown; children do not die, and no mis-shaped child is born.—(9-247 Manu Smriti)
***
Also in Kalidasa: Raghuvamsa 5-33
When King Raghu is about to restart his wealth offensive on the next dawn, officers of his treasury have flabbergastedly reported to him about a shower of gold fallen from sky in the vaults of treasury they are handling. [5-29]
That heap of shining gold showered by Kubera when he is about to be attacked resembled a peak Mt. sumeru once struck down by Indra’s thunderbolt, and king Raghu gave whole lot of it to scholar Kautsa, the disciple of sage Varatantu. [5-30]
किमत्र चित्रं यदि कामसूर्भूर्वृत्ते स्थितस्याधिपतेः प्रजानाम्|
“What is strange if earth yields all the desired objects of a monarch who conducts himself righteously? In your case, even the heaven has been forced by you to give you your desired object… incomprehensible is your cogency… [5-33] Raghuvamsa
***
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar – SB
5.EVS Publishers, Singapore – EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 74; Chapter 56 in Tirukkural Book: The Cruel Sceptre
கொடுங்கோன்மை–The cruel tyranny; Oppression;Unjust government
551.Worse than an assassin is the cruel prince who harasses his subjects and does grievous wrong–A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
551.The oppressive king, who misgoverns, is worse than the murderer- S M Diaz, I G of Police – SMD, Year 2000
***
551 Than one who plies the murderer’s trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing. The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer-Rev.Dr.GU Pope – GUP, Year 1886
*** 551.The unjust tyrant oppressor Is worse than cruel murderer. Suddhananda Bharathiyar – SB
***
551.The tyrant harnessing and oppressing his subjects is more cruel than a merciless assassin –EVS Publishers, Singapore- EVS, Year 1986
552.The king who extorts money at the point of the bayonet, is like highway man, who waylays the benighted traveller, with his threatening cry “stand and deliver”- ANM+2
Is like an armed robber relieving wayfarers of their belongings – SMD
*** 552 As ‘Give’ the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gift. The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says “give up your wealth”.– GUP, Year 1886
***
552.Sceptered tyrant exacting gold Is “give” of lanced robber bold. – SB 552
***
552.The oppressive demand of money, by a sceptred king from subjects, is like the demand of a highway robber who waylays with weapon in hand-EVS Publishers
553.The power of the king who does not redress the grievances of subjects wanes away- ANM+2
***
553.A king who fails to inform himself daily of the wrongs suffered by his people, and, render justice,
Will find his rule and his kingdom wearing away to nought by the day– SMD
***
553 Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bring. The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.– GUP, Year 1886
***
553.Spy wrongs daily and do justice Or day by day the realm decays. – SB 553
***
553.The leader who does not hurt and adopt proper measure each day- his kingdom will perish day by day-EVS Publishers
*** 553. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
554. An improvident and a foolish king who prostitutes justice for his private ends will not only lose his fortune but also his kingdom- ANM+2
***
554.Where the king fails to render justice to his people, without considering attendant consequences
He will in no time lose all his wealth and his kingdom too– SMD
***
554 Whose rod from right deflects, who counsel doth refuse, At once his wealth and people utterly shall lose. The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.– GUP, Year 1886
*** 554.The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse. – SB 554
*** 554.The leader who, without reflection, rules unjustly will lose his wealth and his subjects-EVS Publishers
*** 554. கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
555.It is the tears of the oppressed and the downtrodden , who groan under the tyrannous yoke of a prince, that wear away his fortune- ANM+2
***
555.There is no weapon more potent than the bitter tears of the people,
Who are groaning under the oppression of a king– SMD
***
555 His people’s tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch’s wealth away? Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?– GUP, Year 1886
*** 555.Groaning tears caused by tyrant’s sway File the royal wealth away. – SB 555
***
555.The leader who without reflection on the evil consequences acts unjustly will lose at once both his wealth and his subjects-EVS Publishers
556.Glory eternal springs from an upright government. But there is no halo about the king who does not rightly wield the sceptre- ANM+2
***
556.The lasting security and renown of a king is determined by his just rule
Failing this, he will lose all claim to his greatness– SMD
***
556 To rulers’ rule stability is sceptre right; When this is not, quenched is the rulers’ light. Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.– GUP, Year 1886 *** 556.Glory endures by sceptre right Without it wanes the royal light. – SB 556
*** 556.Right administration brings the leader enduring glory, without which glory wanes away-EVS Publishers
557.Ill fares the land where rain drops not from the heavens; ill fare the subjects who chafe under the tyranny of a ruthless king- ANM+2
***
557.What the drying up of the bounty of rain clouds means to the green plants on earth,
Absence of compassion in the king will be to all life– SMD
***
557 As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe. As is the world without rain, so live a people whose king is without kindness.– GUP, Year 1886
***
557.Dry like the earth without rainfall Is graceless king to creatures all. – SB 557
***
557.As the earth goes dry without rain fall, so do people’s life become miserable by a graceless tyrant –EVS Publishers
*** 557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
558.More galling than the plight of the poor is the lot of the opulent under the iron rule of a prince- ANM+2
***
558.Under a ruler, who does not observe the law, and render justice,
The haves will fare much worse than the have-knots – SMD
***
558 To poverty it adds a sharper sting, To live beneath the sway of unjust king. Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.– GUP, Year 1886
***
558.To have is worse than having not If ruler is unjust despot. – SB 558 ***
558.Prosperity is worse than poverty, for people groaning under an unjust despot-EVS Publishers
559.Seasons alter, heavens withhold their showers, in the realm of the monarch who swerves from justice- ANM+2
***
559.The heavens will not send forth showers in season,
If the king swerves from justice and righteousness
***
559 Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain. If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.– GUP, Year 1886
*** 559.The sky withdraws season’s shower If the king misuses his power. – SB 559
***
559.If the leader rules in unjust ways, seasonal rains will fail as the clouds withhold their showers-EVS Publishers
560.If the guardian of the country neglects to guard it the produce of the cows will fail and the men of six duties/ brahmins will forget their book/Vedas – ANM+2
***
560.If the ruler does not perform his protective function righteously,
The cows yield less and the brahmins forget their mantras – SMD
***
560 Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ sacred lore will all forgotten lie. If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the Vedas.– GUP, Year 1886
***
560.The *six-functioned forget their lore Cows give less if kings guard no more. – SB 560 — * the six functions of Brahmins are : learning, teaching, giving, getting, sacrificing, kindling sacrifice – These are duties of Vedic savants. ***
560.Cows yield less, and sages forget their lore, if the leader does not guard justice-EVS Publishers
***
H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931did not translate any couplet from this chapter 56
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நான் பி எஸ் சி B. Sc. படித்த காலத்தில் தமிழும் ஆங்கிலமும் கம்பல்சரி/ கட்டாய பாடம் ; மதுரையில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த , கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் வாங்கிய எஸ். ஆர். கே (ரஷிய ஆதரவு வலது கம்யூனிஸ்ட் பேச்சாளர் -டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன்) எழுதிய சிறியன சிந்தியாதான் புஸ்தகம்தான் எனக்கு நான் டீடைல்ட் பாடப் புஸ்தகம் ; அந்த வரி இந்தப் பகுதியில் வருகிறது! அற்புதமான பகுதி! ராமன் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அதே வாலியின் வாயிலாக ராமபிரானை கம்பன் புகழும் அற்புதமான பாடல்கள் நிறைந்த பகுதி! ராமனிடம் வாலி கேட்ட இரண்டு வரங்களும் வாலியின் பெருமையை உயர்த்துகிறது ; அவன் சிறியன சிந்தியாதான் என்று கம்பன் புகழ்வது சாலப்பொருத்தமே!
***
பால காண்டம்,அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம். மிகவும் சுவையான பகுதிக்கு வந்துவிட்டோம்; படித்துச் சுவையுங்கள்! இதற்கு முன்னர் வெளியிட்ட 280 கேள்விகளும்,விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.
***********
281
வாலியின் குற்றச்சாட்டுக்கு பதில் தந்த
‘ராமனின் விளக்கம்: மக்கள் யார்? மாக்கள் யார் ?
282
அது சரி ! போகட்டும்; ஏன் மறைந்து நின்று அம்பு விட்டாய் ? என் கேள்விக்கென்ன பதில்?– வாலி
283
வாலியின் கேள்விக்கு ராமன் பதில் சொல்லவில்லை; லெட்சுமணன் இடையில் புகுந்து என்ன செப்பினான் ?
284
சிறியன சிந்தியாதான்என்ற அற்புதமான அடைமொழியை வாலிக்குச் சூட்டி, கம்பன் புகழும் படி, என்ன நடந்தது ?
285
பிழைகளைப் பொறுத்தருள்வாய் என்று வேண்டிய வாலி, ராமனை என்ன சொல்லிப் போற்றினான் ?
286
ராமனிடம் வாலி இரண்டு வரங்களைக் கேட்கிறான்; முதல் வரம் குடிகார சுக்ரீவனின் குடிப்பழக்கம் பற்றியது; அது என்ன வரம்?
287
ராம பிரானிடத்தில் வாலி கேட்ட இரண்டாவது வரம் என்ன?
288
288.அனுமன் பற்றி வாலி என்ன மொழிந்தான்?
289
சுக்ரீவனைக் கட்டித் தழுவி வாலி பகர்ந்த அறிவுரை என்ன?
290
இறப்பதற்கு முன்னர் அங்கதனை அழைத்து,அவனுக்கு வாலி வழங்கிய புத்திமதிகள் யாவை ?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
விடைகள்
281. ‘நன்று ,தீது ,என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ ,விலங்கின் இயல் ?
நின்ற நல் நெறி ,நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை ,உன் வாய்மை உணர்த்துமால் . ‘
எது நல்லது, எது தீயது என்று வேறுபடுத்தி அறியும் நல்ல அறிவு
இல்லாமல் வாழ்வது விலங்குகளின் இயல்பு அல்லவா? நீ நல்ல அறநெறிகளை அறியாதவனில்லை ; நீ தெரிந்தே தவறு செய்திருக்கிறாய் என்பதை உன் வார்த்தைகளே உணர்த்துகின்றன என்று வாலியிடம் இராமர் கூறுகிறார்.
மேலும் மக்கள் யார்? விலங்குகள் யார்? என்று மனு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது என்று ராமர் விளக்குகிறார்:-
‘தக்க இன்ன,தகாதன இன்ன,என்று
ஒக்க உன்னலர் ஆயின் ,உயர்ந்துள
மக்களும் ,விலங்கே ;மனுவின் நெறி
புக்கவேல் ,அவ் விலங்கும் புத்தேளிரே .
எவை நல்லவை, எவை தீயவை என்று பகுத்தறிந்து,
எண்ணிப் பார்த்து அறியவில்லையானால், பிறப்பால் உயர்ந்துள்ள மனிதர்களும் விலங்குகளுக்குச் சமமானவர்களே. ஆனால், விலங்குகளானாலும் மனுநீதி கூறும் அறநெறியில் நடப்பவை உயர்ந்த தேவர்களுக்கு இணையானவை என்று ராமர் விளக்குகிறார்
*********
282.’நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது ஏன்? ஏன்? ஏன்? ‘ என வாலி இராமனை வினாதல்:
அவ் உரை அமையக் கேட்ட
அரி குலத்து அரசு , ‘மாண்ட
செவ்வியோய் ! அனையது ஆக ;
செரு களம் அத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன ,
விலங்கியே மறைந்து ,வில்லால்
எவ்வியது என்னை ? ‘என்றான் ;
இலக்குவன் இயம்பல் உற்றான் .
இராமனின் நியாயமான வார்த்தைகளைக் கேட்ட வானரங்களின் அரசனான வாலி, “மாட்சிமை பொருந்திய செம்மையான குணமுடையவனே! நீ கூறிய காரணங்கள் அப்படியே இருக்கட்டும்! ஆனால், போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று கோபத்துடன் அம்பைச் செலுத்தாமல், கொடிய வேடர்களைப் போல ஒரு பக்கமாக மறைந்து நின்று என் மீது வில்லால் அம்பெய்தது ஏன்?” என்று கேட்டான். வாலியின் இக்கேள்விக்கு இலக்குவன் மறுமொழி கூறத் தொடங்கினான்
*********
283.வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்
‘முன்பு ,நின் தம்பி வந்து
சரண்புக ,முறை இ(ல்)லோயைத்
‘’தென் புலத்து உய்ப்பன் ”என்று
செப்பினன் ;செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி ,
‘’அடைக்கலம் யானும் ”என்றி
என்பது கருதி ,அண்ணல்
மறைந்து நின்று எய்தது ‘என்றான் .
“வாலியே! இதற்கு முன்பு உன் தம்பியாகிய சுக்ரீவன் எங்களிடம் வந்து அடைக்கலம் (சரண்) புகுந்தான். அப்போது இராமபிரான் அவனிடம், தர்மநெறி தவறி முறை இல்லாமல் நடக்கும் உன்னை (வாலியை), ‘நான் தென்திசையில் உள்ள எமலோகத்திற்கு அனுப்புவேன்’ என்று வாக்குக் கொடுத்தார்.ஒருவேளை இராமன் உன் முன்னே நேராக நின்று போர் புரிந்தால், நீ உன் உயிரின் மேல் உள்ள ஆசையினால் அவனிடம் ‘நானும் உன்னை அடைக்கலம் அடைகிறேன்’ என்று கூறி சரணடைந்து விடக்கூடும். அப்படி நீ சரணடைந்தால், சரணடைந்தவரைக் காப்பது இராமனின் கடமை என்பதால் உன்னைக் கொல்ல முடியாது. ஆனால், அதே சமயம் சுக்ரீவனுக்குத் தந்த வாக்கையும் நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டு தர்மசங்கடங்கள் வராமல், சுக்ரீவனுக்குத் தந்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகவே அண்ணல் இராமன் மறைந்து நின்று உன் மீது அம்பு எய்தார்” என்று இலக்குமணன் கூறினான்.
*********
284.ராம லெட்சுமணர்களின் உரைகளைக் கேட்ட வாலி மனம் திருந்தி சரண்டர் SURRENDERஆகிவிடுகிறான்!
தாய் என உயர்க்கு நல்கி ,
தருமமும் ,தகவும் ,சால்பும் ,
நீ என நின்ற நம்பி !
நெறியினின் நோக்கும் நேர்மை ,
நாய் என நின்ற எம்பால் ,
நவை அற உணரலாமே ?
தீயன பொறுத்தி ‘என்றான்
சிறியன சிந்தி யாதான் .
தாய் போல உயிர்களுக்கு நலம் செய்து, தருமமும், நடுநிலையும், நற்குண நிறைவும் நீயே என்று சொல்லும்படி அவ்வழி நின்று காட்டும் புருஷோத்தமனே! அறநெறி நோக்கில் காணும் தன்மையை “நாய் போன்ற எம்மிடம் குற்றம் காணலாமோ? தீய செயல்களைப் பொறுத்தருள்வாய்” என்றான் சிறிய எண்ணம் இல்லாத வாலி.
நாய் போன்றவனான என் மேல் குற்றம் பார்க்க வேண்டாம். நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள் என்றான் சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி!
*********
285.என் தம்பிக்கு கிடைத்தது இந்த உலக அரசு;எனக்கு நீ தந்ததோ வீடு பேறு (மோட்சம்)
285.‘உண்டு எனும் தருமமே உருவமாய் உடைய நிற்
கண்டு கொண்டேன் ;இனிக் காண என் கடவெனோ ?
பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்
தண்டமே ,அடியனேற்கு உறு பதம் தருவதே . ‘
‘மற்று இனி உதவி உண்டோ ?
வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ ! நின்னை ,என்னைக்
கொல்லிய கொணர்ந்து ,தொல்லைச்
சிறு இனம் குரங்கினோடும்
தெரிவு உறச் செய்த செய்கை ,
வெற்று அரசு எய்தி ,எம்பி ,
வீட்டு அரசு எனக்கு விட்டான் . ‘
வேதங்கள் ‘உள்ளது’ என்று கூறுகின்ற அறத்தின் வடிவமாகவே நின்றிருக்கும் பெருமானே!
உன்னைக் கண்களால் நேரில் கண்டு கொண்டேன்; இனிமேல் காண்பதற்கு வேறு என்ன இருக்கிறது? (வேறு எதையும் காண வேண்டிய தேவை எனக்கு இல்லை).
பண்டு தொட்டு இன்றுவரை என்னைத் தொடர்ந்து வந்த எனது பழைமையான தீவினையின் தண்டனையே, இப்போது அடியேனுக்கு முக்திப் பேற்றைத் (உறு பதம்) தருவதாகிவிட்டது !
“ஆகாசத்தைக் காட்டிலும் உயர்ந்த பெருமையையும் மாண்பையும் உடைய வெற்றி வேந்தனே (ராமனே)! என் தம்பியாகிய சுக்கிரீவன் தன் அறியாமையால் என்னை உன்னைக் கொண்டு கொல்வதற்காக இங்கு அழைத்து வந்தான். ஆனால், அந்தச் சிறு குலத்தைச் சேர்ந்த குரங்கினத்தோடு நீ நட்பு கொண்டு செய்த இந்தச் செயலானது, எனக்குப் பேருதவியாக முடிந்தது.
ஏனெனில்,என் தம்பி சுக்கிரீவன் மண்ணுலகின் வெறும் ‘வெற்று அரசை’ (பயனற்ற உலகியல் ஆட்சியை) அடைந்தான். ஆனால்,அவன் உன்னை என்னிடம் காட்டியதன் மூலம்,எனக்கு என்றும் அழியாத மோட்சமாகிய ‘வீட்டு அரசை’ (முன்னேற்றப் பெருநிலையை) அல்லவா தேடித்தந்துவிட்டான்! இதற்கு மேல் எனக்கு யாரால், என்ன உதவி செய்ய முடியும்?” என்று வாலி ராமனைப் போற்றித் துதிக்கிறான்
*********
286.வாலி கேட்ட முதல் வரம்
சுக்ரீவனின் குடிப்பழக்கத்தால்,நான்கு மாதம் கழித்துத் திரும்பி வராத போது லெட்சுமணன் வசைபாடியது பின்னால் வருகிறது; இதற்கு முன் எச்சரிக்கையாக வாலியின் வரம் அமைகிறது !
‘ஓவிய உருவ ! நாயேன்
உளது ஒன்று பெறுவது உன்பால் ;
பூ இயல் நறவம் மாந்தி ,
புந்தி வேறு உற்ற போழ்தில் ,
தீவினை இயற்று மேனும் ,
எம்பி மேல் சீறி ,என் மேல்
ஏவிய பகழி என்னும்
கூற்றினை ஏவல் ‘என்றான் .
சித்திரத்தில் வரையப்பட்ட ஓவியம் போல பேரழகு கொண்ட வடிவம் உடையவனே! (ராமனே!)
நாய் போன்ற எளியவனாகிய நான் உன்னிடமிருந்து வேண்டிப் பெற விரும்பும் வரம் ஒன்று உள்ளது.
மலர்களில் இருந்து எடுக்கப்பட்ட கள்ளைக் (மதுவை) குடித்து, அதனால் புத்தி மயங்கி இருக்கும் சமயத்தில், என் தம்பியான சுக்க்ரீவன் ஏதேனும் செய்யத் தகாத தீய காரியங்களைச் செய்தாலும், அவனது தவற்றைக் கண்டு கோபமடைந்து,
என் மீது ஏவி என் உயிரைக் குடித்த இந்த எமன் போன்ற அம்பினை,என் தம்பி மீது மட்டும் எப்போதும் ஏவிவிடாதே (அவனைக் கொன்றுவிடாதே) என்று வாலி ராமனிடம் வேண்டுகிறான்.
*********
287 வாலி கேட்ட இரண்டாவது வரம்!
‘இன்னும் ஒன்று இரப்பது உண்டால் ;
எம்பியை உம்பிமார்கள்
‘’தன்முனைக் கொல்வித்தான் ”என்று
இகழ்வரேல் ,தடுத்தி ,தக்கோய் !
முன் முனே மொழிந்தாய் அன்றே ,
இவன் குறை முடிப்பது ?ஐயா !
பின் இவன் வினையின் செய்கை
அதனையும் பிழைக்கல் ஆமோ ? ‘
வாலி கேட்ட இரண்டாவது வரம்:–
“மேன்மையான குணங்களை உடைய இராகவனே! நான் உன்னிடம் இரந்து (வேண்டி)க் கேட்கும் வரம் இன்னும் ஒன்று உள்ளது. என்னுடைய தம்பியான சுக்கிரீவனை, உன்னுடைய தம்பிகளான பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆகிய மூவரும் ‘இவன் தன் சொந்த அண்ணனையே (வாலியை) இராமனை விட்டுக்கொல்லச் செய்தவன்’ என்று பழித்து இகழக்கூடும். அப்படி அவர்கள் அவனைத் தூற்றாதபடி நீ தடுத்து அவனைக் காக்க வேண்டும்”. முன்பே சுக்கிரீவன் உன்னிடம் வந்து அடைக்கலம் அடைந்து தன் குறையைக் கூறியபோது, அதைத் தீர்த்து வைப்பதாக நீயும் வாக்குக் கொடுத்தாய். அதன் விளைவாகவே இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.எனவே, எனது மரணத்திற்கு விதிப்பயனும் அவனது விதியின் செய்கையுமே காரணமே தவிர, சுக்கிரீவன் மீது எந்தத் தவறும் இல்லை. இதனை உன் தம்பிகளுக்குப் புரிய வைத்து, சுக்கிரீவனை உங்களில் ஒருவனாக ஏற்றுப் பாதுகாக்க வேண்டும்” என்று வாலி வேண்டுகிறான்
*********
288.அனுமன் பற்றி வாலி :
4175 ‘அனுமன் என்பவனை – ஆழி
ஐய ! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைதி ;மற்று ,என்
தம்பி நின் தம்பி ஆக
நினைதி ;ஓர் துணைவர் இன்னோர்
அனையவர் இலை ;நீ ,ஈண்டு ,அவ்
வனிதையை நாடிக் கோடி –
வானினும் உயர்ந்த தோளாய் !
“கடல் சூழ்ந்த உலகிற்கு இறைவனே (இராமனே)! அனுமன் என்பவனை உன்னுடைய சிவந்த, சிறந்த கையில் ஏந்தியிருக்கும் ‘வில்’ என்று நீ நினைத்துக் கொள்வாயாக!” வில் செய்யக்கூடிய பயனை அனுமன் செய்து முடிப்பான். என் தம்பியை நின் தம்பியாக எண்ணுக. இவ்விருவரைப் போன்ற துணைவர்கள் வேறு யாரும் இலர். இவர்களின் துணை கொண்டு நீ சீதையைத் தேடி அடையலாம். (இவர்களைப் போன்றோர் ஒருவரும் கிடைக்க மாட்டார் என இவர்களின் பெருமையையும் ஆற்றலையும் அறிவித்துள்ளான் வாலி).
*********
289.சுக்ரீவனைக் கட்டித் தழுவி வாலி பகர்ந்த அறிவுரை என்ன?
வாலி,தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து அவனுக்கு உறுதியுரை பகர்தல் (4176-4182)
4177 ‘மறைகளும் ,முனிவர் யாரும் ,
மலர் மிசை அயனும் ,மற்றைத்
துறைகளின் முடிவும் ,சொல்லும்
துணிபொருள் ,தனி வில் தாங்கி ,
அறை கழல் இராமன் ஆகி ,
அற நெறி நிறுத்த வந்தது ;
இறை ஒரு சங்கை இன்றி
எண்ணுதி ;எண்ணம் மிக்கோய் ! ‘ 4.7.140
வேதங்களும், தவத்தில் சிறந்த முனிவர்கள் அனைவரும்,
தாமரை மலரில் வாழும் பிரம்மதேவனும், மற்ற சாத்திரங்களின் முடிவுகளும், உறுதியாக எடுத்துரைக்கும் உயர்ந்த தத்துவம் எதுவென்றால், அந்தப் பரம்பொருள்தான் வீரம் செறிந்த வில்லினைக் ஏந்தி, வீரக்கழல் அணிந்த இராமராக அவதரித்து, உலகில் அறநெறியை நிலைநாட்ட வந்திருக்கிறது. அறிவுடையவனே! இதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளாமல் இராமன் எத்தகையவன் என்பதை நீ தெளிவாகப் புரிந்துகொள் என்று வாலி சுக்கிரீவனிடம் கூறுகிறார்.
4178 ‘நிற்கின்ற செல்வம் வேண்டி
நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது ,இவன்தன் நாமம் ;
கருதுவது ,இவனைக் கண்டாய் ;
பொற் குன்றம் அனைய தோளாய் !
பொது நின்ற தலைமை நோக்கின் ,
எற் கொன்ற வலியே சாலும் ;
இதற்கு ஒன்றும் ஏது வேண்டா . ‘
அழியாமல் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் மேலான செல்வமாகிய ‘வீடுபேற்றை’ (மோட்சத்தை) அடைய விரும்பி,
அறநெறிகளைக் கடைப்பிடித்து வாழ்கின்ற உயிர்கள் யாவும், (அழிவில்லாத அந்தப் பரம்பொருளாகிய) இந்த இராமனின் திருநாமத்தையே ஓதுகின்றன; தங்கள் மனத்தால் தியானிப்பதும் இந்த இராமனைத்தான் என்பதை அறிவாயாக;
பொன்மலையைப் போன்ற வலிமையான தோள்களை உடையவனே!
உலகங்கள் அனைத்திற்கும் பொதுவான முழுமுதற் தலைவனாகிய இவனது தன்மையை ஆராய்ந்து பார்த்தால், என்னைக் கொன்ற இவனது ஒருசில வலிமையே இவனது பெருமையை உணர்த்தப் போதும்; இதற்கு வேறு எந்தத் சான்றும் (ஏதுவும்) தேவையில்லை.
*********
290.மகனே,அங்கதா! ராமனே அருமருந்து !
4193 ‘பாலமை தவிர் நீ;என் சொல்
பற்றுதி ஆயின் ,தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
மெய் பொருள் ,வில்லும் தாங்கி ,
கால் தரை தோய நின்று ,
கண் புலக்கு உற்றது அம்மா !
மால்தரும் பிறவி நோய்க்கு
மருந்து என வணங்கு மைந்த !
உன் சிறுபிள்ளைத்தனத்தை (அழுது புலம்புவதை) கைவிடுவாயாக.
நான் சொல்லும் இந்த வார்த்தையை நீ உறுதியான உண்மையாகக் கொள்வாயானால், தன்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறு எதுவுமில்லாத முழுமுதற் கடவுள், : கையில் வில் ஏந்தி, நிலத்தில் தன் திருவடிகள் படிய மனித வடிவில் நின்று, நம் கண்களுக்கு எதிரே நேரில் காட்சியளிக்கிறான்.
நம்மை மயங்க வைக்கும் இந்தப்பிறவிப்பிணிக்கு இவனே சிறந்த மருந்து; இவனை வணங்குவாயாக என் மகனே!
4194 ‘என் உயிர்க்கு இறுதி செய்தான்
என்பதை இறையும் எண்ணாது ,
உன் உயிர்க்கு உறுதி செய்தி ;
இவற்கு அமர் உற்றது உண்டேல் ,
பொன் உயிர்த்து ஒளிரும்
பூணாய் பொன்றுதி ;தருமம் போற்றி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான்
மலர் அடி சுமந்து வாழ்தி . ‘
“என் உயிருக்கு முடிவை (இறப்பை) ஏற்படுத்தியவன் இராமன் என்று கொஞ்சமும் எண்ணி வருந்தாமல், உன் வாழ்வுக்கு நல்லதைக் செய்து கொள். இராமனுடன் போர் செய்வதற்கு உரியது ஏதேனும் இருந்தால்… அறத்தின் பக்கம் நின்று, உலக உயிர்களுக்கு நன்மை செய்பவனாகிய அந்த இராமனின் திருவடிகளைத் தொழுது வாழ்வாயாக” என்று வாலி கூறுகிறான்.
–SUBHAM—
TAGS- கம்ப ராமாயணம், 290 கேள்விகள், வாலி- ராமன் கேள்வி பதில் , சிறியன சிந்தியாதான், அங்கதன், சுக்ரீவன், அறிவுரை , வாலி கேட்ட 2 வரங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 4
ச. நாகராஜன்
பக்தி நாமாக்களின் மஹிமை தொடர்கிறது.
நாமம் 545 புலோமஜார்ச்சிதா
இந்திராணியினால் ஆராதிக்கப்பட்டவள்.
நகுஷன் தேவலோகத்தை ஆளும்போது இந்திரனைத் தான் திரும்பவும் அடைவதற்காக இந்திராணி அம்பாளை பூஜித்தாள்.
இந்த விருத்தாந்தம் தேவி பாகவதம் ஆறாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 641 த்யானகம்யா
தியானத்தினால் அறியக்கூடியவள்
தியானம் என்பது சித்த விருத்திகளை நிரோதம் செய்து பாவனை செய்வதாகும். இதனால் அம்பாளை அடையலாம் என்று ச்ருதியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 732
நாமபாராயண ப்ரீதா
தனது நாமங்களைப் பாராயணம் செய்வதால் ப்ரியமடைபவள்
அ, ஆ, இ, ஈ, என்பது முதல் க்ஷ முடிய இருக்கும் அக்ஷரங்களெல்லாம் அம்பாளுடைய நாமங்கள் தான். இவற்றில் அ முதல் அ: வரையில் 16 பாக்கி அக்ஷரங்களாகிய வ்யஞ்ஜனங்கள் க காரம் முதல் க்ஷ காரம் வரையில் உள்ள 35 அக்ஷரங்களாகும்.
அகாரமும் வ்யஞ்ஜனங்கள் 35ம் சேர்ந்து ஆகும் 36 அக்ஷரங்களும் முப்பத்தாறு வர்ஷங்களின் ரூபங்களாகின்றன. அவற்றில் ஒவ்வொரு அக்ஷரத்துடன் பதினாறு ஸ்வரங்களைப் பெருக்கினால் (36X16=576) வர்ணங்கள் வருவது அத்தனை மாதங்கள் ஆகின்றன. இந்த 36 வர்ஷங்களை 576 மாதங்களால் பெருக்கினால் வரும் 20376 என்ற எண்ணிக்கையானது நாமங்களின் எண்ணிக்கை ஆகிறது, ஒவ்வொரு நாமமும் 7 அக்ஷரங்களுடையது. முதல் மூன்று அக்ஷரங்கள் மேலே சொல்லப்பட்டபடி வருவன. அவற்றிற்குப் பிறகு, ஆம், ஈம், நம: என்று சேர்த்தால் ஏழு ஆகிறது. (இந்த ஆ, ஈ இவ்விரண்டையும் பல்லவங்கள் – அதாவது தளிர்கள், கடைசி அக்ஷரங்கள்- என்று சொல்லப்படும்)
உதாரணமாக, முதல் நாமமானது அம், கம், அம், ஆம், நிம், நம: என்பது. இரண்டாவது அம், கம், கம், ஆம், ஈம், நம: என்பது. மூன்றாவது அம், கம், க2ம், ஆம், ஈம், நம: என்பது. இம்மாதிரி முதல் மூன்று பீஜங்களையும் மாற்றிச் சொல்ல வேண்டியது.
இம்மாதிரி நாமங்கள் ஏற்படுவதில் ஒவ்வொரு நாமத்திலும் ஆதியில் உள்ள பீஜத்ரயமானது முறையே நித்யாக்ஷர, யுகாக்ஷர, மாஸாக்ஷரங்கள் என்று சொல்லப்படும். இவை தான் மேலே கூறியபடி மாறிமாறிக்கொண்டுபோகும். இவற்றில் ஸ்வரங்கள் விமர்சாம்சம் என்றும், வ்யஞ்ஜனங்கள் ப்ரகாசாம்சமென்றும் இவையிரண்டின் ஸம்யோகமானது ப்ரஹ்மஸ்வரூபம் என்றும் சொல்லப்படும்.
இவ்விதமான நாம பாராயணத்தைப் பற்றி லகு ஸ்துதியிலும், தேவி பாகவதத்திலும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி பாராயணம் செய்யும் போது முதல் பீஜத்ரயத்திற்குப் பின்னும், பல்லவங்களுக்கு முன்னும், மூல மந்திரத்தைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
இந்த பாராயணக்ரமமானது ஐந்து விதமாகும். ஒரு தினத்திலாவது, ஒரு வாரத்திலாவது, ஒரு பக்ஷத்திலாவது, ஒரு மாதத்திலாவது, முப்பத்தாறு தினங்களிலாவது செய்யலாம் என்று காதிமதத்தில் பல ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
லகு ஸ்துதி ஸ்லோகத்தில் (ஆ ஈ பல்லவிதை என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம்) சொல்லப்பட்டதற்கு ராகவானந்தர் ஒரு வியாக்யானம் எழுதியுள்ளார். அதில் நாமத்திய அக்ஷரங்கள் சேர்ப்பதானது வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பாஸ்கர ராயருடைய அபிப்ராயம் பின் வருமாறு:-
அ முதலான ஸ்வரங்கள் பதினாறு.
க முதலான வ்யஞ்ஜனங்கள் ஒவ்வொன்றோடு பதினாறு ஸ்வரங்களையும் சேர்த்தால் (35X16=560) 560 வர்ணங்களாகின்றன. ஆக மொத்தம் 576. இவ்விதமான இரண்டு அக்ஷரங்களின் சேர்க்கைகள் ஒவ்வொன்றுடன் அடுத்தாற்போல் (அகாரம்+35 வ்யஞ்ஜனங்கள் =) 36 அக்ஷரங்களில் ஒவ்வொன்றையும் சேர்த்தால் (576X36 = 20736) 20736 பேதங்கள் ஏற்படுகின்றன. இவற்றுடன் ஒவ்வொரு முறையும் மேலே கூறப்பட்ட பல்லவத்தைச் சேர்க்க வேண்டும்.
இது தவிரம் இன்னமும் பேதங்கள் இருக்கக்கூடும் என்பதால், இந்த நாம பாராயணத்தின் ரகசியங்களை குரு மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம பாராயணம் என்று நாமத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இந்த சஹஸ்ர நாம பாராயணமே சொல்லப்பட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாராயணத்தின் மகிமையைப் பற்றி பூர்வ பாகத்திலும், உத்தர பாகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
முக்கிய குறிப்பு: இத்துடன் இந்த பக்தி நாமத் தொடர் முடிவடைகிறது. மேலே கூறிய குறிப்புகள், விளக்கங்கள் அனைத்தும் 1938ம் ஆண்டு G.V. கணேச ஐயர் B.A.B.L தமிழில் எழுதி அளித்துள்ள பாஸ்கர ராயரின் லலிதா சஹஸ்ர நாம பாஷ்யத்திலிருந்து எடுத்துத் தரப்பட்டது. பக்தி நாமாக்களின் தொகுப்பாக இதைக் கொள்ளலாம். சம்ஸ்கிருத ஸ்லோகங்களை அன்பர்கள் புத்தகத்தில் பார்த்துத் தெரிந்து கொள்வதோடு அதற்கான அர்த்தத்தை மூல நூல்களை நாடித் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போல கர்மம், ஞானம், யோகம் ஆகியவற்றில் உள்ள நாமாக்களையும் தொகுத்து அர்த்தம் தெரிந்து கொண்டால் இந்த சஹஸ்ர நாமம் எவ்வளவு அர்த்தம் பொதிந்த ரகசியமான அற்புத நூல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பால காண்டம்,அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம். மிகவும் சுவையான பகுதிக்கு வந்துவிட்டோம்; படித்துச் சுவையுங்கள்! இதற்கு முன்னர் வெளியிட்ட 270 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.
271
உலகில் நேர்மையில் நிற்பவர்கள் மிகச் சிலரே;பொய்யானவர்கள் அல்லது தவறு செய்பவர்கள் பலர்;இதுதான் உலக நியதி-ராமனின் பொன்மொழி எந்தப் பாடலில் வருகிறது ?
272
VALI SUGREEVA WRESTLING FIRST ROUND RESULT 10-10 DRAW!
வாலி -சுக்ரீவன் முதல் ரவுண்டு மல்யுத்தம் டிராவில் முடிந்தது ;மூச்சுத் திணறிய சுக்ரீவன் ,ராமனிடம் வந்து ஏதேனும் ஒரு ஐடியா சொல்லப்பா என்று கெஞ்சியவுடன் ராமன் என்ன ஐடியா சொன்னான் ?
273
ராமன் மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று அம்பு விடுகிறான் ;அது வாலியின் உடலை ஊடுருவி நின்றவுடன் வாலி எப்படிக் கதறினான் ?
274
அம்பின் மீது ராம என்ற பெயரைக் கண்ட வாலியின் மன எழுச்சியைக் கூறும் கீழேயுள்ள அற்புதமான,புகழ்பெற்ற பாடலின் பொருள் என்ன ?
மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை,முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை,தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை, ‘இராமன்‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான் .
275
ராமா இப்படிச் செய்யலாமா ?பரதனின் BROTHERபிரதர்அல்லவா நீ! என்று வாலி கேட்ட பொருத்தமான,சுவையான கேள்விகள் என்ன?
276
மறைந்திருந்து கொன்றாயே ,இது முறையோ,தகுமோ,நியாயமோ என்று வாலி கேட்டது என்ன ?
277
ஓஹோ ,எனக்குப்புரிகிறது ! மனைவியை இழந்த மதிமயக்கத்தில் இப்படிச் செய்தாயோ என்று ராமனை வாலி கிண்டல் செய்தது எப்படி?
278
தை பிறந்தால் வழி பிறக்கும்திரைப் படத்தில் சுரதா இயற்றிய
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
என்னும் பாடலை வாலி பாடியது எங்கே வருகிறது?
279
நீ அடுத்தவன் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போனேயே;அதுதாண்டா,ஒரே தப்பு- என்று ராமன் சொன்னானா ?
280
ராமா ,நீ புரிஞ்சுக்கலியே! நாங்கள் எல்லாம் கீழ் ஜாதி ! யார் மேலையும் கை வைப்போம்! என்று வாலி கூறிய பதில் என்ன ?
***********
விடைகள்
271. ‘அத்தா! இது கேள் ‘ என ஆரியன் கூறுவான் : ‘இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ ?
எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால் ,பரதன் பெரிது உத்தமன் ஆவது உண்டோ ? ‘
‘வில் தாங்கு வெற்பு அன்ன , இலங்கு எழில்
தோள ! `‘மெய்ம்மை
உற்றார் சிலர் ,அல்லவரே பலர் ”
என்பது உண்மை ;
பெற்றார் உழைப் பெற்ற பயன் பெறும்
பெற்றி அல்லால் ,
” அற்றார் நவை ” என்றலுக்கு ஆகுநர்
ஆர் கொல் ? ‘ என்றான் .
வாலி- சுக்ரீவன் மோதலைக் கண்ட இலக்குவன் “ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஒருவருக்கொருவர் இப்படிப் பகைத்துக் கொண்டு கொல்லலாமா?” என்று வருத்தத்தோடு கேட்கிறான். அப்போது ராமன் சொல்கிறான் :- பைத்தியம் பிடித்தது போன்ற விவேகமில்லாத இவ்விலங்குகளின் (சுக்ரீவன், வாலி போன்றோரின்) ஒழுக்க முறையையும் மனிதர்களின் ஒழுக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல; ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் எல்லாரும் ஒரே மாதிரி நடந்து கொள்வார்கள் என்றால், என் தம்பி பரதன் மட்டும் எல்லாருக்கும் மேலான உத்தமனாக விளங்குவது எப்படிச் சாத்தியமாகும்? (அதாவது எல்லா சகோதரர்களும் ஒன்றாக இருப்பதில்லை, பரதனைப் போலச் சிறந்தவரும் உண்டு, இவர்களைப் போல் வேறு விதமானவர்களும் உண்டு)
மேலும்…………….
வில்லினை ஏந்திய மலை போன்ற, விளங்குகின்ற அழகிய தோள்களை உடைய இலக்குவா!
“மெய்ம்மை உற்றார் சிலர்; அல்லவரே பலர் என்பது உண்மை.” — உண்மையான வழியில், நேர்மையில் நிற்பவர்கள் உலகில் மிகச் சிலரே; அவ்வாறில்லாதவர்கள் (பொய்யானவர்கள் அல்லது தவறு செய்பவர்கள்) பலராய் இருப்பதுதான் உலக நியதி– என்று ராமன் ஒரு பொன்மொழியை உதிர்த்தான் !
***
272.ராமன் சொன்ன ஐடியா: நான் உதவி செய்ய ரெடி! ஆனால் இரண்டு பெரும் ஒரே மாதிரியா இருக்கீங்க! ரெண்டு பெரும் சம மாக சண்டை போடுறீங்க; எனக்கு I AM CONFUSED ஒரே கன்ப்யூஷன் : நீ மாலை போட்டுக்கொண்டு போ ! அப்புறம் அந்த வாலியை நான் கவனிச்சுக்கறேன்
273.வாலி ,தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்
‘நேமி தான் கொலோ ?நீலகண்டன்
நெடுஞ் சூலம்
ஆம் இது ,ஆம் கொலோ ?அன்று எனின் ,
குன்று உருவு அயிலும் ,
நாம இந்திரன் வச்சிரப்
படையும் ,என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ ?
யாது ? ‘எனப் புழுங்கும் .
மார்பில் பாய்ந்த அம்பின் அதிபயங்கர ஆற்றலைக் கண்டு வாலி தன் மனதுக்குள் இவ்வாறு குழம்பித் தவிக்கிறான்:
“என் மார்பில் பாய்ந்திருக்கும் இந்த ஆயுதம் திருமாலின் சுதர்சனம் என்னும் சக்கராயுதமோ? அல்லது நஞ்சுண்ட கறுத்த கழுத்தையுடைய சிவபெருமானின் நீண்ட சூலாயுதம் தான் இதுவோ? அவை இரண்டுமே இல்லை என்றால், கிரவுஞ்ச மலையைத் துளைத்துச் சென்ற முருகப் பெருமானின் வேலாயுதமோ? அல்லது பகைவருக்கு அச்சம் தரும் இந்திரனின் வச்சிராயுதமோ? இவை அல்லாத வேறு எந்தச் சாதாரண ஆயுதத்திற்கும் என் உடலின் நடுவே பாய்ந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருக்குமா? இது என்னவாக இருக்கும்?” என்று வாலி புழுங்கித் தவிக்கிறான்.
***
274.அற்புதமான பாடலின் பொருள்:
•மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை: மூன்று உலகங்களுக்கும் (சுவர்க்கம், பூமி, பாதாளம் அல்லது முக்குணங்கள் சார்ந்த உலகம்) மூலமான மந்திரமாக விளங்குவதும்,
•முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை: தன்னை நம்பிய அடியார்களுக்குத் தன் முழுமையான அருளையும் தாராளமாகத் தருகின்ற ஒப்பற்ற உயர்ந்த நிலையாக இருப்பதுவும்,
•தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை: இந்தப் பிறப்பிலும், தொடர்ந்து வரும் ஏழு பிறவிகளாகிய துன்பம் எனும் நோய்க்குச் சிறந்த மருந்தாக இருப்பதுவும்,
• ‘இராமன்’ என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்: தூய்மையான ‘இராமன்’ என்னும் திருநாமத்தை (தன் நெஞ்சில் பாய்ந்த இராமனின் அம்பில் எழுதியிருந்ததை) வாலி தன் கண்களால் பார்த்து உணர்ந்தான்.
(வாலிக்கு இராமபிரான் அம்பு எய்தபோது, அந்த அம்பில் எழுதப்பட்டிருந்த ‘இராமன்’ என்னும் திருநாமத்தைப் பார்த்து அவன் ஞானம் அடைந்ததை இந்நிகழ்வு குறிக்கிறது).
***
275. ‘வாய்மையும் மரபும் காத்து
மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே ! நீ
பரதன் முன் தோன்றினாயே ;
தீமைதான் பிறரைக் காத்துத்
தான் செய்தால் தீங்கு அன்று ஆம் ஓ ?
தாய்மையும் அன்றி நட்பும்
தருமமும் தழுவி நின்றாய் . 4.7.85
உண்மையையும், அரச மரபையும் காவல் காத்து உயிரை கொடுத்த வள்ளல் தூயவனான தசரதனின் மகனே ! நீ பரதன் முன் பிறந்தாயே ; பிறரை தீமை செய்யாமல் தடுத்து தான் தீங்கு செய்தால் அது தீமை இல்லை என்று ஆகுமா? தாய்மைக் குணமும் நட்பும் தருமமும் கொண்டு நின்றவனல்லவா நீ.
****
276குலம் இது ;கல்வி ஈது ;
கொற்றம் ஈது ;உற்று நின்ற
நலம் இது ;புவனம் மூன்றும்
நாயகம் உன்னது அன்றோ ?
வலம் இது ;இவ் உலகம் தாங்கும்
வண்மை ஈது ;என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ ,
அறிந்திருந்து அயர்ந்துளார் போல் .
நீ பிறந்த குலமோ (சூரிய வம்சம்) மிகவும் உயர்வானது; நீ கற்ற கல்வியும் உயர்ந்தது; உன்னிடம் உள்ள ஆட்சியும் வெற்றியும் அத்தகையது; உன்னைச் சேர்ந்துள்ள நற்பண்புகளும் நன்மைகளும் இவ்வளவு சிறந்தவை; மூன்று உலகங்களுக்கும் நீயே தலைவன் அல்லவா? உனது வலிமையும் வீரமும் அப்படிப்பட்டவை; இந்த உலகத்தைக் காக்கும் பெருந்தன்மையும் அருளும் உன்னுடையது என்றால்; அறத்தின் திண்மையும் நீதியும் குலையுமாறு (மறைந்து நின்று என்னை அம்பு எய்து) இப்படிச் செய்வது முறையா? எல்லாவற்றையும் அறிந்திருந்தும் ஒன்றுமறியாதவன் போல் நடப்பது தகுமா?
***
277.’ ஓவியத்தில் வரையமுடியாத அழகு படைத்தவனே ! உங்கள் குலத்தினரின் பெருமையே தருமத்தைக் காப்பதுதான் ! ஆவியை,சனகன் பெற்ற அன்னத்தை ,அமிழ்தின் வந்த சீதா தேவியைப் பிரிந்தததால் உன் புத்தி நிலை தடுமாறிற்றோ! என்றான் வாலி
கோ இயல் தருமம் உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் –
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய் ; –உடைமை அன்றோ ?
ஆவியை ,சனகன் பெற்ற
அன்னத்தை ,அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை ,
திகைத்தனை போலும் ,செய்கை . ‘
****
278.ஏ ராமா,நான் உனக்கு ஒரு பாரமா? மனு ஸ்ம்ருதியில் குரங்கு இனத்தைக் கொல்லும் விதி ஏதேனும் உள்ளதா?
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
மனுநெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்?என்பால்
எப் பிழை கண்டாய்?அப்பா !
என்னிடத்தில் என்ன தவற்றினைக் கண்டாய் ? மேலும்
வீரம் அன்று;விதி அன்று;மெய்ம்மையின்
வாரம் அன்று;நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று;பகை அன்று;பண்பு ஒழிந்து,
ஈரம் அன்று இது;என் செய்தவாறு நீ? ‘
•வீரம் அன்று: நீ என்னைக் கொன்றது உனது வீரத்தைக் காட்டும் செயல் அல்ல.
•விதி அன்று:அறநூல்கள் வகுத்த விதிமுறைக்கு ஒத்த செயலும் அல்ல.
•மெய்ம்மையின் வாரம் அன்று: உண்மையைச் சார்ந்ததும் அல்ல.
•நின் மண்ணினுக்கு என் உடல் பாரம் அன்று: உனக்குரிய இந்த பூமிக்கு என் உடல் ஒரு சுமை அல்ல.
•பகை அன்று:நான் உனக்குப் பகைவனும் அல்ல.
•பண்பு அழிந்து ஈரம் இன்றி,இது என் செய்தவாறு அரோ?:இப்படிப்பட்ட எந்தக் காரணமும் இல்லாமல்,உனது நற்பண்புகளை இழந்து,இரக்கமில்லாமல் நீ என்னை மறைந்திருந்து கொல்வது என்ன நியாயம்?என்று இராமனை நோக்கி வாலி கேள்வி கேட்கிறான்
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-123; இந்து மத கலைச்சொல் அகராதி-123 (Post.16,273) 5-10 Yaga, Yajna, Yajnavalkya, Yajur Veda, Yaksha Prashna
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-124; இந்து மத கலைச்சொல் அகராதி-124 (Post.16,275) -யாக, யக்ஞ , யக்ஞவல்க்யர், யஜுர் வேத, யக்ஷ ப்ரஷ்ன
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-125; இந்து மத கலைச்சொல் அகராதி-125, Yamuna Yakshma, Yaudheya, Yayati ,8/10
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-126; இந்து மத கலைச்சொல் அகராதி-126 (Post.16,287) யக்ஷ்ம, யாதேயர் , யயாதி, , யமுனை
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-127; இந்து மத கலைச்சொல் அகராதி-127 (Post No.16,298) Chinese traveller, Yuga, Yoga, Yavana, Yoga Vasistha,
HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-128; இந்து மத கலைச்சொல் அகராதி-128(Post16,301)13/10 யுவான் சுவாங், யூபம், யுகம் ,யோகா, யோக வாசிஷ்டம், யவனர்
Last Part: HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-129; இந்து மத கலைச்சொல் அகராதி-129 (Post.16,313) Zoroaster, Parsi Religion, Zoroastrianism, Kanchi Sankaracharya View, Zend Avesta
கடைசி பகுதி: HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-130; இந்து மத கலைச்சொல் அகராதி-130 (Post.16,315) ஜொராஸ்தர், பார்சி மதம், லண்டன் சுவாமிநாதன், ஜராதுஷ்ட்ரர், ஜொராஸ்டர், பார்ஸி, அற்புதம், பில்லி சூனியம், செண்ட் அவஸ்தா
****************************
Tamil Articles by London Swaminathan
london swaminathan adorned with a shawl in Mayuram Veda Patasala by Sri A V Swaminatha Sivacharyar.Year 2026.
தமிழ் மொழி பிழைக்குமா? விஷ ஊசி போடுகிறார்களே! – Part 1 (Post.16,320)18/10
தமிழ் மொழி பிழைக்குமா? விஷ ஊசி போடுகிறார்களே!– Part 2 (Post No.16,323) 19/10
தமிழ் மொழி பிழைக்குமா? விஷ ஊசி போடுகிறார்களே! – Part 3 (Post.16,329)21/10
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 3
ச. நாகராஜன்
பக்தி நாமாக்களின் மஹிமை தொடர்கிறது.
நாமம் 331 வரதா
வரங்களைக் கொடுப்பவள்.
பிரம்மா, விஷ்ணு முதலான பக்தர்களுக்கெல்லாம் வேண்டிய வரங்களைத் தருபவள்.
பக்தியுடன் உபாஸனை செய்பவர்களுக்கு வேண்டிய வரங்களை அருள்பவள் அம்பாள்.
முத்திரைகளில் பயம், ஆபத்து ஆகியவைகளிலிருந்து காப்பாற்றுவதற்காகக் கைகளால் காட்டப்படும் முத்திரைக்கு அபயம் என்று பெயர். சகல அபீஷ்டங்களையும் கொடுப்பதாகக் காட்டும் முத்திரைக்கு வரதம் என்று பெயர்.
அபயம் வலது கையினால் காட்டப்படும்.
வரதம் இடது கையினால் காட்டப்படும்.
தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள் ஆகியோருக்குத் தேவையான வரன்களைக் கொடுப்பதாக அம்பாள் எப்போதும் தன் கையினால் காட்டிக் கொண்டிருப்பதாக மத்ஸ்ய புராணம், பத்ம புராணம் ஆகிய புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
உண்மையில் அம்பாள் கோரிய வரன்களைத் தருபவள் என்பதால் வரதா என்ற நாமம் ஏற்பட்டதே தவிர அவள் வரத முத்திரையைக் காண்பிப்பதனால் அந்தப் பெயர் ஏற்பட்டதென்று சொல்ல முடியாது. தியானம் செய்யும் போது அபய, வரத முத்திரைகளுடன் அம்பாளை தியானம் செய்வது வழக்கமல்ல. மாறாக நான்கு கைகளிலும் பாசாங்குச சாபபாணங்கள் இருப்பதாகவே தியானம் செய்வது வழக்கம். அம்பாளுக்கு தன் கைகளின் முத்திரைகளினால் வரங்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவள் தனது பாதங்களினாலேயே வரத்தைக் கொடுக்கும் திறன் உடையவள்.
இதை ஆதி சங்கரர் ‘த்வதந்ய பாணிப்யாம்’ என்ற சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தில் கூறுகிறார். (ஸ்லோக எண் 4)
அடுத்து தேவி பாகவதத்திலும் வராஹ புராணத்திலும் வரதா என்ற பெயர்க் காரணம் பற்றி அழகுறச் சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 375
காமபூஜிதா
மன்மதனால் உபாஸிக்கப்பட்டவள்
அம்பாளுடைய முக்கியமான உபாஸகர்கள் பன்னிருவர்.
அவர்களின் மன்மதனும் ஒருவர்.
ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் (ஸ்லோக எண் 6) “தநு பௌஷ்பம் மௌர்வீ” என்ற ஸ்லோகத்தில் அம்பாளின் கடைக்கண் பார்வையால் மன்மதனுக்கு அருள் கிடைத்ததைக் குறிப்பிடுகிறார்
அருணோபநிஷத் மன்மதன் ஶ்ரீ வித்யையான வித்யா ரத்னத்தை அடைந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
பக்தர்களுக்கு அருள் புரியும் அம்பாளின் கருணையை உபாஸகர்கள் பெற்ற பல பலன்கள் மூலமாகக் காணலாம்.
நாமம் 869
க்ஷிப்ர ப்ரஸாதினீ
சீக்கிரத்தில் அனுக்ரஹம் செய்பவள்
அதாவது பக்தர்களின் உபாஸனையால் அம்பிகை கொஞ்ச காலத்திற்குள்ளாகவே சந்தோஷப்படுகிறாள், அதனால் உடனே அனுக்ரஹம் செய்கிறாள் என்று அர்த்தம்.
இதை ஸௌர புராணமும் விவரிக்கிறது.
தீவிர பக்தியுடன் இருப்பவர்களுக்கு ஒரு ஜன்மத்திலேயே முக்தி கிடைக்கிறது. சாமான்ய பக்தி உடையவர்களுக்கு மறு ஜன்மம் அல்லது நான்காவது ஜன்மத்தில் முக்தி கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதை சிவபுராணத்திலும் தந்த்ர ராஜத்திலும் காணலாம்.
மேலும் பக்தி சம்பந்தமாக உள்ள சில நாமங்களை அடுத்துக் காணலாம்.