க்ளோனிங் cloning- அதிசய ஹிந்து விஞ்ஞானம்! (Post No.5198)

Research Article Written by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 12-59  (British Summer Time)

 

Post No. 5198

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆண்களும் குழந்தை பெறலாம் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். மஹாபாரத்திலுள்ள அதிசயக் குழந்தை, சோதனைக் குழாய் குழந்தை போன்ற பத்து விஷயங்களை (26-3-2014) அதில் விளக்கி இரண்டு கட்டுரைகளாக (கீழே இணைப்புகளைக் காட்டியுள்ளேன்) தந்தேன்.

இப்போது மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சுவையான செய்திகள்

 

‘க்ளோனிங்’ CLONING என்றால் என்ன?

மனிதனை அல்லது உயிரினங்களை அச்சு எடுப்பது ஆகும். அதாவது ஒரு உயிர் அணுவிலிருந்து அந்த உயிரினத்தையே உருவாக்கலாம். இப்படிச் சில ஆடுகளை உருவாக்கி உலகையே வியக்கவைத்தனர் விஞ்ஞானிகள்

உடனே அட! ஆயிரம் காந்திகளை அல்லது ஆயிரம் ஆதிசங்கரர்களை உருவாக்கலாம்; அவர்களுடைய ஒரு உயிருள்ள செல் கிடைத்தால் போதும் என்றனர். ஐய்யயோ, வேண்டாமப் பா; ஆயிரம் ஹிட்லர்களையும் எவனாவது ஒருவன் உருவாக்கி  விடுவான்; இத்தைகைய ஆராய்ச்சிகளுக்கு கட்டு திட்டங்கள் வேண்டும், வரம்பு முறைகள் வேண்டும் என்றெல்லாம் பத்திரிக்கைகளும் டெலிவிஷன்களும் அலறின; நிற்க

 

‘ஸப்ஜெக்டு’க்கு வருவோம்!

இந்து மத இதிஹாச புராணங்களில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. விஞ்ஞானம் வளர, வளர அவைகள் எல்லாம் விளங்குகின்றன.

 

விஷ்ணுபுராணத்தில் ஒரு கதை வருகிறது:

நிமி என்ற அரசன் விதேக நாட்டை ஆண்டு வந்தான் (தற்போதைய பீஹார்- தெற்கு நேபாளம்); அவன் ஒரு 1000 ஆண்டு யாகத்துக்குத் திட்டமிட்டான்; குல குருவான வசிஷ்டரை அ ணுகி, ‘ஐயனே, அருள் புரியும் என்றான். அவர் சொன்னார்: மன்னர் மன்னா! நான் இந்திரனிடம் ஏற்கனவே ‘அட்வான்ஸ்’ வாங்கிவிட்டேன்; அவன் என்னை 500 ஆண்டு யாகத்துக்கு ‘புக்’ பண்ணிவிட்டான்; அதனால் ஒன்றும் குறைந்து போகாது; முடித்தவுடன் ஓடோடி வருகிறேன்’.

நிமி இதைக் கேட்டு விட்டு ஒன்றும் பதில் சொல்லவில்லை. வசிஷ்டர் நினைத்தார் ‘மௌனம் சம்மதம்’ என்பது பழமொழி. ஆகியால் வந்துவிடுவோம் என்று சென்றுவிட்டார்.

 

 

ஆனால் நிமியோ வேறு ஒரு ரிஷியை அழைத்து யாகத்தை நடாத்திவிட்டார். அந்த ரிஷியின் பெயர் கௌதமர்.

 

ஆசையோடு ஓடி வந்த வசிஷ்டர் அரண்மனையின் கதவைத் தட்டினார்; மன்னர் உறங்கிக் கொண்டு இருப்பதாக வாயில் காப்போன் செப்பினான்.

வந்ததே கோபம், வசிட்டனுக்கு.

பிடி சாபம்! நிமி, நீ இன்று முதல் நிமிர முடியாது; நீ விதேகன் (வி+தேஹ) ஆகக்கடவது! அதாவது உடல் அற்றவன் ஆவாய்.

 

மன்னன் எழுந்தான். ஐயா வசிட்டரே! தூங்கும் போது ஒருவருக்கு சாபம் போட எந்த ஸ்ம்ருதியில் ( இந்துக்களின் சட்டப் புத்தகம்) ‘ரூல்’ இருக்கிறது? இது அநியாயம்; இந்தாரும், பிடி சாபம்!

நீரும் அழிந்து போகக் கடவது!

 

இருவரும் அழிந்தனர். வசிஷ்ட மஹா முனிவன்  ஒரு short cut ஷார்ட் கட் (குறுக்கு வழி) கண்டுபிடித்து வந்துவிட்டார். நிமி, விதேஹன் ஆனதால் அவன் ஆண்ட நாட்டுக்கு விதேஹ நாடு என்று பெயர் ஏற்பட்டது.

 

உடனே அறிஞர் பெருமக்கள் மஹாநாடு கூட்டி புதிய அரசன் யார் என்று தீர்மானித்தனர். நிமியைக் ‘கடைந்து’ ஒரு மன்னனை உருவாக்குவோம் என்று நிமியின் இறந்து கிடந்த உடலைக் ‘கடைந்து’ மிதி என்ற ஒரு மகனை உருவாக்கினர். அவன் ஆண்ட பட்டிணம் மிதிலை ஆகி, அங்கே ஜனகன் ஆண்டு, சீதையை வயல் வெளியில் கண்டு எடுத்து, ராமாயணம் உருவான கதை எல்லோரும் அறிந்ததே.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள வினைச் சொல்லை அப்படியே ‘உடலைக் கடைந்து’ என்று எழுதிவிட்டனர். மொழிபெயர்த்த ஆங்கிலேயர்களும் இந்துக்கள் சரியான முட்டாள்கள் என்று நகைத்துக் கொண்டே  அப்படியே மொழி பெயர்த்து விட்டனர். ஆண்கள் குழந்தை பெறுவதா! என்று அங்கலாய்த்தனர். இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்தவுடன் ‘கடைதல்’ என்பது க்ளோனிங்- அச்சு எடுத்தல் – படி எடுத்தல் – என்று விளங்குகிறது. மஹாபாரதத்திலுள்ள பத்து அதிசயங்களையும் இன்னும் பல அதிசயப் பிறப்புகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போதுதான் நான் சொல்வது விஞ்ஞானக் கற்பனைக் கதையோ அல்லது பிதற்றலோ அன்று என்பது தெள்ளிதின் விளங்கும்!

 

இன்னொரு கதை பார்ப்போம்; வேனன் கதை!

 

வேனன் என்றொரு மன்னன் இருந்தான் இவன் கதையும் பல புராணங்கள் மநு ஸ்ம்ருதியின் வியாக்யானம் ஆகியவற்றில் வருகிறது.

வேனன் சொன்னான்

பிராஹ்மனணர்களே!

நான்தான் யாக யக்ஞங்களின் ஆகுதிகளைப் பெற தகுதியுடையவன்; ஆகையால் இந்திரன் சந்திரன் என்று சொல்லி வீணடிக்காமல் எல்லாவற்றையும் எனக்கே நல்குக.

 

ஐயர்மார்கள் சொன்னார்கள்

“மன்னா; கோபித்துக்கொள்ளாது அப்படியெலாம் வழக்கமும் இல்லை; மேலும் நமக்கும் மேலே ஒருவன் உளன்.”

மன்னன், பிடிவாதம் பிடிக்கவே, சரி ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்’ என்று கருதி பிராஹ்மண மஹாநாட்டு முடிவுப்படி மன்னனை தர்ப்பை புல்லைக் கொண்டே கொன்றுவிட்டனர்.

 

 

இந்து அகராதியில் ‘மன்னன் அற்ற’ (அ+ராஜக) என்றால் சட்ட ஒழுங்கற்ற ‘அ+ ராஅஜக’ என்று பொருள்; நாடு முழுதும் அராஜகம் தாண்டவ மாடியது. மீண்டும் ஐயர்கள் மஹாநாடு கூட்டி வேனனின் உடலைக் கடைந்து, பிள்ளையை உண்டாக்குவோம் என்று பணியைத் துவக்கினர் (ஹரி வம்ஸம் என்னும் நூல் வேனனின் உடலில் வலது கையைத் தேய்த்து……….என்று விளம்பும்). எல்லோரும் உடலைத் தேய்த்தவுடன் அல்லது கடைந்தவுடன் ஒரு கறுப்பு, குள்ள உருவம் வந்தது. நீ இங்கே அமர் நிஷத்த என்றனர். ஸம்ஸ்க்ருதத்தில் ‘நிஷத்த’. அவர்கள் நிஷாதர்கள் ( பழங்குடி வேடுவர்கள் ) ஆனார்கள். அவர்களை விந்திய மலைக்கு அனுப்பிவிட்டனர்.

அதாவது ஐயர்கள் செய்த முதல் க்ளோனிங் ஜ்ராஸ்ஸிக் பார்க் Jurassic Park கதை போல எதிரிடை விளைவை உண்டாக்கிவிட்டது. முதல் எக்ஸ்பெரிமெண்ட் தோல்வி.

பிராஹ்மணர்கள் மீண்டும் ஒரு மஹா நாடு கூட்டி இரண்டாவது முதல் தேய்தபோது—உடலை    கடைந்த போது– அற்புதமான, ஒளிவீசும் பிருது தோன்றினான். அவன் ஆண்டதால் பூமிக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘ப்ருத்வீ ‘என்ற பெயரும் நிலைத்தது.

கதையை நிறுத்திவிட்டு சிறிது ஆராய்ச்சி செய்வோம்; புராணங்கள் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கின்றன என்று பாருங்கள். முதல் க்ளோனிங் பரிசோதனை தோல்வி அடைந்து அறிவற்ற ஒருவன் வரவே அவனைக் கொல்லாமல் விந்திய மலைக்கு அனுப்ப, அவன் நிஷாதர்களென்ற ஒரு இனத்தை உருவாக்க, பிறகாலத்தில் அவர்களில் ஒருவனாக வால்மீகி எனும் மாமுனிவன் உருவாக வழிவ கடைந்தனர்.

 

இரண்டாவது Kலோனிங் எக்ஸ்பெரிமெண்டில் ப்ருது தோன்ற, உலகம் உய்வு பெற்றது

 

உடலைத் தேய்த்து— உடலைக் கடைந்து- அதாவது செத்துப்போன ஒரு ஆணின் ‘ஸெல்’ (cell) லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கினர். அதை அப்படியே எழுதியும் வைத்தனர். விஞ்ஞானம் வளராதபோது செத்துப்போன ஆண் உடலில் இருந்து ஒரு மனிதனா என்று நகைத்தோம்! இப்பொழுது வியக்கிறோம். இதிஹாச, புராணங்களில் உள்ள பெயர்கள் பல்லாயிரம்; அதில் இது போல அதிசயச் செய்திகள் விகிதாச்சரப்படி குறைவே; பெயர் தெரியாமல் இறந்த புராண மனிதர்கள் இன்னும் பல்லாயிரம்; அவர்களையும் கணக்கெடுத்தால் இந்த மாதிரி செய்திகள் குறைவே; ஆகவே இருக்கும் புராணக் கதைகளை அறிவியல் நோக்கில் நாம் பார்க்க வேண்டும்.

 

 

முன்னரே எழுதிவிட்டேன்; அகஸ்த்யர் கடலைக் குடித்தார் என்றால் அகஸ்த்யர் கடல் கடந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார் என்று பொருள்

அகஸ்த்யர் விந்திய மா மலையை கர்வபங்கம் செய்தார் என்றால் முதல் முதலில் மலை வழியாக சாலை அமைத்து தென்னகம் வந்தார் என்று பொருள்.

 

 

அதற்கு முன் பஞ்ச பாண்டவர்கள் ராமன், ராவணன் முதலானோர் படகு அல்லது கடலோர வழிகலையே பயன்படுத்தி தென்னகம் வந்தனர்.பகீரதன், பல்லாயிரமாண்டு தவம் செய்து கங்கையைக் கொணர்ந்தான் என்றால் அவன் முன் னோர்கள் செய்ய முயன்று தோல்வியுற்ற கங்கை நதி திசை மாற்றுத் திட்டத்தில் வெற்றி பெற்றான் என்று பொருள்.

 

 

ஆக புராணக்காரர்களின் மொழிகளைப் புரிந்து கொண்டால் இனி வரப்போவதையும் சொல்ல  முடியும். அதை நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

 

கண்டு மகிழ்க

 

–சுபம், சுபம்-

 

  1. ஆண்களுக்குகுழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கு குழந்தை … குழந்தை பெறலாம். … ஆண்களும் …

  1. ஆண்களுக்கும்குழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கும் குழந்தை … ஆண்களும் … //tamilandvedas.com/2017/05/23/%e0%ae …

மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1 …

tamilandvedas.com/2014/03/26…

Gandhari, Draupadi, Kunti. கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் 934 தேதி …

Previous Post
பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது