அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள் (Post No.3768)

Compiled by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

Post No. 3768

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

ஏப்ரல் 2017 காலண்டர்

துர்முகி பங்குனி–  ஹேவிளம்பி சித்திரை 2017

 

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள்

 

Festival/ Holidays:

ஏப்ரல் 5- ராம நவமி, 9-மஹாவீர் ஜயந்தி, பங்குனி உத்திரம்; 13–பைசாகி, 14-தமிழ் புத்தாண்டு; ஹேவிளம்பி வருஷப் பிறப்பு; புனித வெள்ளி;  16-ஈஸ்டர்; 29-அக்ஷய த்ருதியை; 30- ஆதி சங்கரர், ராமானுஜர் ஜயந்திகள்

 

ஏகாதசி–6, 22

பௌர்ணமி- April 10

அமாவாசை- April 26

சுபமுகூர்த்த தினங்கள்- April 2, 9, 10, 17, 21

 

Pictures are from Newspapers;Gudi Padwa (New Year) in Maharashtra

ஏப்ரல் 1 சனிக்கிழமை

பயன்கருதாது உதவுக:

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல் என வேண்டா – மூதுரை செய்யுள் 1

 

ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை

நல்லோர்க்குதவி=கல்மேல் எழுத்து‘;தீயர்க்குதவி=நீர்மேல் எழுத்து

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே மூதுரை செய்யுள் 2

 

ஏப்ரல் 3 திங்கட்கிழமை

இளமையில் வறுமை துன்பம் தரும்

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் – இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு- மூதுரை செய்யுள் 3

 

ஏப்ரல் 4 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் வறுமையிலும் பண்பாளரே

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்- மூதுரை செய்யுள் 4

 

ஏப்ரல் 5 புதன் கிழமை

காலம் அறிந்து காரியம் செய்

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா – மூதுரை செய்யுள் 5

 

ஏப்ரல் 6 வியாழக்கிழமை

நுண் அறிவு

நீர் அளவே ஆக்கும் ஆம் நீர் ஆம்பல் தான் கற்ற

நூல் அளவே ஆகும் ஆம் நுண் அறிவு – மேலைத்

தவத்து அளவே ஆகும் ஆம் தாம் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம்–மூதுரை செய்யுள் 7

 

ஏப்ரல் 7  வெள்ளிக்கிழமை

மானம் காக்க உயிர் கொடுப்பர்

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? – கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான் –மூதுரை செய்யுள் 6

 

ஏப்ரல் 8 சனிக்கிழமை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே –மூதுரை செய்யுள் 8

 

ஏப்ரல் 9 ஞாயிற்றுக்கிழமை

வலியவர்க்கும் துணை வேண்டும்

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாது ஆம்- கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம்  செயல்- மூதுரை செய்யுள் 11

 

ஏப்ரல் 10 திங்கட்கிழமை

தீயரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே –மூதுரை செய்யுள் 9

 

 

ஏப்ரல் 11 செவ்வாய்க்கிழமை

தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை — மூதுரை செய்யுள் 10

 

ஏப்ரல் 12 புதன் கிழமை

உருவத்தைக் கண்டு மதிப்பிடாதே

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா- கடல் பெரிது

மண் நீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூரல்

உண் நீரும் ஆகிவிடும் மூதுரை செய்யுள் 12

 

ஏப்ரல் 13 வியாழக்கிழமை

மரமண்டை யார்?

சபைநடுவே நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நல் மரம்- -மூதுரை செய்யுள் 13

 

ஏப்ரல்  14  வெள்ளிக்கிழமை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி – – மூதுரை செய்யுள் 14

 

ஏப்ரல் 15 சனிக்கிழமை

அடக்கம் உடையார்

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு — மூதுரை செய்யுள் 16

 

ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை

தீயோர்க்குதவி செய்தல் வீண்

பாங்கு அறியாப் புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம் — மூதுரை செய்யுள் 15

 

ஏப்ரல் 17 திங்கட்கிழமை

வறுமை வந்ததும் பிரிபவர் உறவினரல்லர்

அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – மூதுரை செய்யுள் 17

 

ஏப்ரல் 18 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் – கீழ்மக்கள் வேறுபாடு

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும்;என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால்- மூதுரை செய்யுள் 18

 

ஏப்ரல் 19 புதன் கிழமை

கணவனும் செல்வமும் விதிப்படியே

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன் – மூதுரை செய்யுள் 19

 

ஏப்ரல் 20 வியாழக்கிழமை

உடன்பிறந்தும் கொல்வர்; தொலைவில் மலையில் உள்ள மூலிகையும் உயிர்காக்கும்

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்கவேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி- மூதுரை செய்யுள் 20

 

ஏப்ரல் 21  வெள்ளிக்கிழமை

அடங்கா மனைவி= புலி இருக்கும் புதர்

இல்லாள் கத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின் – இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்

புலிகிடந்த தூறுஆய் விடும் மூதுரை செய்யுள் 21

 

ஏப்ரல் 22 சனிக்கிழமை

கற்பக மரத்தில் தங்கினாலும் முன்வினை விடாது

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முன்பவத்தில் செய்தவினை மூதுரை செய்யுள் 22

 

ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை

நல்லவர் சினமும் அல்லவர் சினமும்

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும்……. சான்றோர் சினம் –செய்யுள் 23

 

ஏப்ரல் 24 திங்கட்கிழமை

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பு இல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்– செய்யுள் 24

 

ஏப்ரல் 25 செவ்வாய் க்கிழமை

வஞ்சகரே ஓடி,ஒளிவர்

கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவுவார்

கரவு இலா நெஞ்சத்தவர் –செய்யுள் 25

 

ஏப்ரல் 26 புதன் கிழமை

மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோர்க்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு– செய்யுள் 26

 

ஏப்ரல் 27 வியாழக்கிழமை

வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்- கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் — செய்யுள் 27

 

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை

மருவு இனிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் – திருமடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் –மூதுரை செய்யுள் 29

 

ஏப்ரல் 29 சனிக்கிழமை

சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆம் தனையும் காப்பர் அறிவு உடையோர் – மூதுரை செய்யுள் 30

 

 

Disguised as Veera Shivaji

 

ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை

மன்னர்கள் மன்னர்களே; தாழார்

தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று –மூதுரை செய்யுள் 28

 

-Subham–