குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!(Post No.4962)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 30 April 2018

 

Time uploaded in London –  5-45 AM  (British Summer Time)

 

Post No. 4962

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்குமண்டல

கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!

 

ச.நாகராஜன்

 

கொங்கு மண்டலத்தின் பெருமைகளை உரைக்கும் கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் உள்ள நூறு பாடல்களில் சிலவற்றை அவ்வப்பொழுது பார்த்து வந்திருக்கிறோம்.

 

இப்போது இன்னும் ஒரு அருமையான சம்பவத்தைக் கூறும் பாடலைப் பார்ப்போம். 89வது பாடலாக அமையும் பாடல் இது:

 

கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு

மெரியா முடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்

பரிபா லனஞ்செய மட்பாவை யிற்குறி பார்த்துச்சுட

மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே

 

இப்பாடலின் பொருள் ; கரிகாலச் சோழன் மகளுக்கு வந்து நேர்ந்த பெரிய வலிப்பு நோயை, ஒரு குலாலன் மட்பாவை செய்து அதை நோக்கிக் குறி பார்த்துச் சுட, அவ்வலிப்பு நோய் தீர்ந்ததும் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

வரலாறு : பாடலின் அடிப்படையாக அமைந்ந்த வரலாறு இது தான் :

கரிகாலன் என்ற சோழனின்  மகளுக்கு பெரிய வலிப்பு நோய் வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் தம்மால் இயன்ற வைத்தியம் செய்து பார்த்தார்கள். நோய் தீரவில்லை.

கொங்கு நாட்டில் இருக்கும் ஒரு குயவன் இந்நோயை வெகு விரைவில் நீக்கி விடுவான் என்று பலர் சொல்லக் கேட்டான் கரிகாலன். அவனை வரவழைத்தான்.

 

“நீ சூடு போட்டு நோயை நீக்கி விடுவாய் என்று கேள்விப் படுகிறேன். ஆனால்  என் இளம் குழந்தை சூட்டைப் பொறுக்க மாட்டாளே” என்று வருத்தத்துடன் கூறினான்.

 

அதற்கு அந்தக் குயவன், “மன்னா! கவலைப்பட வேண்டாம். ராஜகுமாரியின் மேனியில் படாது சூடு போட்டு வலியைப் போக்குகிறேன்” என்றான்.

 

வியப்புற்ற மன்னன் அதற்குச் சம்மதம் தெரிவித்தான்.

குயவன் குழந்தை போலவே ஒரு பாவையை மண்ணினால் செய்தான். ராஜகுமாரிக்கு வலி எங்கிருக்கிறது என்பதைக் கேட்டு அறிந்து கொண்டான். அந்த இடத்தைக் குறி பார்த்து நெருப்பிற் காய்ந்த இரும்புக் கோலால் அந்த மண் பாவையில் சுட்டான். உடனே அரசிளங்குமரிக்கு வலிப்பு நோய் தீர்ந்தது.

 

குறிப்பிட்ட பொருளில் உருவம் செய்து அப்பாவையின் உறுப்பில் ஊசி முதலியவற்றைக் குத்தல், குறிப்பிட்ட இடத்தில் சுட்டு வியாதியைப் போக்கல், இல்லாத வியாதியை உண்டாக்கல் ஆகியவற்றை சல்லியம் என்னும்  மந்திர சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

 

அதன் படி ராஜகுமாரியின் நோய் நீங்கிற்று.

இந்த வரலாறைச் சற்று மாற்றியும் சொல்லும் ஒரு சுவடி உள்ளது.

 

அதன் படி மேற்கண்ட நோய் தீர்ந்தது விக்கிரம சோழன் மகள் என்றும், பொன்கலூர் நாட்டு வானவன் சேரி என்னும் ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்றும்  குறுப்பி நாடு கற்றாங்காணி ஊரிலுள்ள ஒரு கொங்குக் குயவன் அங்கு வந்து குறி சுட்டான் என்றும் தெரிய வருகிறது.

 

குயவர்களிடம் உள்ள ஒரு பழைய சுவடி இதனைத் தெரிவிக்கிறது!

***