WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,435
Date uploaded in London – – 12 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரதியார் பாடலில், அதர்வண வேதத்தில் சிரியஸ் நட்சத்திரம்- Part 2
கட்டுரையின் முதல் பகுதியில் சிரியஸ் SIRIUS நட்சத்திரம் பற்றி பாரதியார் பாடிய ‘திசை’ என்ற பாடலையும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் நேற்று தந்தேன் . அதர்வண மந்திரத்தில் குறிப்பிடும் ‘நாய்’ DOG என்பது நாய்/ CANIS MAJOR & CANIS MINOR (SUNA, SVANA IN SANSKRIT BECOMES S/CANIS IN LATIN) நட்சத்திரமான சிரியஸ்தான் என்பதை வெள்ளைக்காரர்களும் ஒப்புக்கொண்டு மந்திரத்தின் கீழ் அடிக்குறிப்பு எழுதி இருப்பதை யும் வெளியிட்டேன். ஆனால் அந்த மந்திரத்தில் வரும் மூன்று கால காஞ்சர்கள் என்ன என்பது தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். அவை பிளாக் ஹோல் BLACK HOLE எனப்படும் கருந்துளைகள் என்று எனது கண்டுபிடிப்பையும் வெளியிட்டேன். சிரியஸ் என்பது இரட்டை நட்சத்திரக் BINARY STAR கூட்டம் என்ற தற்கால வானியல் தகவலை உறுதி செய்யும் அதர்வண வேத கவிதையை இன்று காண்போம் .
‘பகவத் கீதையில் கருந்துளைகள்’ BLACKHOLES IN BHAGAVD GITA என்ற எனது பழைய கட்டுரையில் கருந்துளைகள் பற்றி விளக்கியுள்ளேன். அவை பிரம்மாண்ட ஈர்ப்பு விசை கொண்ட, நட்சத்திரங்களை விழுங்கி ஏப்பம் விடும், மர்ம கருப்பு மையங்கள். காலம் கூட அதிலிருந்து தப்பிக்க முடியாது; இதை பகவத் கீதை விஸ்வரூப தரிசன அத்தியாயத்தில் காண்கிறோம். அதர்வண வேத துதியில் காணப்படும் கால காஞ்சர்கள் என்ற சொற்களும் இதை எடுத்துக் காட்டுகின்றன.
இந்துக்கள் சொல்லும் காலம் TIME IS CYCLICAL சைக்ளிக்கல் (வட்டப்பாதை); மேலை நாட்டோர் சொல்லும் காலம் லீனியர் (நெடுங்கோட்டுப் பாதை) TIME IS LINEAR ; இந்துக்கள் சொல்லுவதே சரி என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை .
XXX
ATHARVANA VEDA MANTRA IN FULL; BOOK 6, HYMN 253
6ம் காண்டம், துதி 253, காலகாஞ்சர்கள்
1.கீழேயுள்ள எல்லாப் பொருட்களையும் பார்த்துக்கொண்டே அவன் மேலே பறக்கிறான் ; வானத்தில் உள்ள நாய் ஆகிய உன்னை நாங்கள் வணங்கி படைக்கிறோம்.
2.கடவுள் போல வானத்தில் தோன்றும் மூன்று கால காஞ்சர்களை உதவிக்கு அழைக்கிறேன் . இந்த மனிதனை துயரிலிருந்து விடுவிக்கவும்.
3.நீரில் நீ உதித்தாய்; வானமே உனது இருப்பிடம்; பூமியிலும் கடலிலும் உனது மகிமை பிரதிபலிக்கிறது.தெய்வீக நாய் DIVINE DOG வடிவில் உள்ள உன்னை நாங்கள் வணங்குகிறோம்
ஒரு வேளை எகிப்தியர்கள் போல சீரியஸ் நட்சத்திர உதயத்தைக் கொண்டாடும் சடங்காக இது இருக்கலாம். EGYPTIANS CELEBRATED RISING OF SIRIUS THAT COINCIDED WITH THE FLOODING OF NILE RIVER.
அவர்கள் நைல் நதியின் வெள்ளப் பெருக்கு சிரியஸ் நட்சத்திர உதயத்தன்று ஏற்பட்டதால் அதற்கு தனி மரியாதை செலுத்தினர்
XXX
THIRD STAR IN SIRIUS/ CANIS CONSTELLATION? OR BLACK HOLE?
மூன்று காலகாஞ்சர்களை நான் கட்டுரையின் முதல் பகுதியில் பிளாக் ஹோல் என்னும் மர்மம் மிக்க கருந்துளைங்களோடு ஒப்பிட்டேன். இன்னொரு விளக்கமும் மனதில் உதிக்கிறது. அண்மைக்கால வானியல் சஞ்சிகைகள் சிரியஸ் நட்சத்திரக் கூட்டத்தில் மூன்றாவது நட்சத்திரமும் இருப்பதாகவும் பேசுகினறன. ஆகவே எதிர்கால அமெரிக்க ரஷிய கண்டு பிடிப்புகள் இந்துக்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் .
ரிக் வேதம் உலகிலேயே பழமையான புஸ்தகம். அதிலுள்ள மந்திரங்களைக் கொஞ்சம் கொஞ்சம் மாற்றியும் கூட்டியும் குறைத்தும் அதர்வண வேதம் நெடுகிலும் உள்ளன. ரிக் வேதத்தில் யமன் பற்றிய பாடல்களில் யமனிடம் இரண்டு நாய்கள் உள்ளதாகவும் அவைகளை நான்கு கண் நாய்கள் (2+2 கண்) என்று வருணிப்பதையும் காண்கிறோம். இவைகளை பிற்கால கிரேக்கர்களும் கடன் வாங்க்கி சரமா SARAMA = HERMES என்ற நாயை ஹெர்மஸ் என்று எழுதிவைத்துள்ளனர். அவர்கள் மொழியில் எஸ் S இல்லாததால் சிந்துவையும் ஹிந்து என்று மாற்றி எழுதி நமக்கு எல்லாம் புது நாம கரணம் செய்தவர்களும் அவர்கள் தான்.
அதர்வண வேத துதியில் வரும் இரட்டை நாய்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் விளக்கம் சொல்லவில்லை ;அவை கேனிஸ் மேஜர் கேனிஸ் மைனர் என்னும் சிரியஸ் நாய் நட்சத்திரக் கூட்டமே என்பது எனது வியாக்கியானம் .
சிரியஸ் SIRIUS= SCORCHING என்ற சொல் கிரேக்க மொழியில் எரியும் SCORCHING/ BURNING BRIGHT என்று பொருள்படும். ஜொலிக்கும் என்ற பொருள். தமிழில் உள்ள எரியும் என்பதோடு ஒரு எஸ் S ஒலி சேர்ந்துள்ளது போலும்!!!
XXX
இதோ அதர்வண வேத 7ஆம் காண்ட 320 ஆவது துதி
1.தேவர்கள் வேள்வியால் வேள்வியைப் போற்றினார்கள் ; அதுவே பூர்வீக தருமம்; அதன் மூலம் சாத்யர்கள் உயர்ந்த உலகத்தை அடைந்தார்கள்
2.வேள்வி தோன்றியது; அது தோற்றுவிக்கப்பட்டது ; அது மறுபடியும் வளர் ந்தது; அது தேவர்களின் அதிபதியாயிற்று. அது எங்களுக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்
3.எங்கு தேவர்கள் அவியால் தேவர்களை பூஜித்தார்களோ, இறவா நிலை எய்தியோரை அதே உற்சாகத்துடன் பூஜித்தார்களோ, நாங்களும் அந்த உயர்ந்த நிலையத்தில் இன்பமுடன் இருப்பதற்கு அருளுக
4.தேவர்கள் யக்ஞத்தை புருஷன் என்னும் அவியால் வேள்வியாக்கினார்கள்; முன்னர் சொன்னதைவிட இதுவே பெரிய வேள்வி
5.வியப்புற்ற தேவர்கள் நாயாலும் பசுக்களின் அங்கங்களாலும் வேள்வியில் பூஜித்தார்கள் / போற்றினார்கள்; இந்த வேள்வியை மனத்தால் அறிபவனை நீ எங்களுக்கு அறிவி ; நீ இங்கு பேசுவாயோ !
இந்த துதிக்கு முழு விளக்கம் கிடைக்காமல் வெள்ளைக்காரர்கள் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்
கருத்து – வேள்வியைப் புகழ்ந்து பாடுதல்.
வெள்ளைக்காரன் கொடுக்கும் அடிக்குறிப்புகளை முதலில் காண்போம் —
மந்திரம் 1- சாத்யர்கள் = பூஜிக்கத்தக்கவர்கள்; வானத்தில் வசிக்கும் தேவதைகள் என்பது யாஸ்கரின் கருத்து. சிறிய தேவதைகள் என்பது மிகவும் பிற்காலத்தில் தோன்றிய அமரகோஷம் சொல்லும் கருத்து
வெள்ளைக்காரன் கணக்கில் யாஸ்கர் – கி.மு.800; அமரசிம்மன் – கிபி. 400; இருவருக்கும் இடைவேளை 1200 ஆண்டுகள்! இந்த மந்திரம் ரிக்வேதத்திலும் உளது 1-1164-50; 10-90-16
மந்திரம் 4
புருஷேன ஹவிஷா; இது பிராமணர்கள் தினமும் வீட்டிலும் கோவில்களிலும் சொல்லும் ரிக் வேத ‘புருஷ சூக்த’ மந்திர வரிகள் 10-90
எல்லா வெள்ளைக்காரர்களும் வியப்புடன் உரை எழுதும் மந்திரம் ; பிரபஞ்சத்தையே கடவுளாக உருவகித்து மனிதனே தன்னை வேள்வியால் பலி கொடுக்கும் தத்துவம் இது.
மந்திரம் 5
சுனா = நாய் என்ற சொல்லும், முக்தா = வியப்பு என்ற சொல்லும் இதில் உள்ளன. நாய் வேள்வி பற்றி எங்குமே இல்லையே என்று சொல்லி வெள்ளைக்காரர்கள் பேந்தப் பேந்த முழிக்கின்றனர். மாக்ஸ்முல்லர்- மார்க்ஸீய கும்பலில் மொத்தம் 30 பேர் உண்டு. இந்த கும்பலைச் சேர்ந்த எம்.விக்டர் ஹென்றி M. VICTOR HENRY நிறைய அதர்வண வேத விஷயங்களுக்கு மனம் போன போக்கில் உரை எழுதுகிறார். அவர் சொல்லையே “மூர்த்தா” என்று புரட்டிப்போட்டு வேறொரு குதிரைத் தலைக் கதையை முடிச்சுப் போடுகிறார். அது தத்யங் என்ற முனிவர் கதை; ரிக்வேத 1-116-12 விளக்கத்தில் வருவது.
XXX
எனது கருத்துக்கள் MY COMMENTS
முதலில் கடைசி மந்திரத்தைப் பார்ப்போம் ; மந்திரத்தில் குதிரையும் இல்லை. தலையும் இல்லை. நாயுடன் ‘வியப்பான’ , ‘புதிரான’ PERPLEXED வேள்வி என்பது சிரியஸ் என்னும் நாய் நட்சத்திரத் தொடர்புடையதே. ஆறாவது காண்ட துதியில் இது வருவதையும் கண்டோம். எகிப்தியர் போல சிரியஸ் உதயத்தன்று சிறப்பான கொண்டாட்டம் இருந்திருக்கக் கூடும் ; அல்லது அந்த தினத்தில் நடந்த வேள்வியாக இருக்கலாம். இதே போல இரண்டு நட்சத்திரக் குறிப்புகள் மேலும் 3,4 துதிகளில் வருகிறது. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் போது நடந்த வேள்விகள் என்பது என் கருத்து
மந்திரம் 4 – புருஷ சூக்த விளக்கத்தில் உள்ளது (ரிக்.10-90)
மந்திரம் 1- இந்த சாத்யர்கள் யார் என்பது பற்றி எங்கும் முழு விளக்கம் இல்லை. யாஸ்கர் என்பவரே 600 வேத சொற்களுக்கு அர்த்தம் தெரியாமல் முழிப்பதாக அரவிந்த மகரிஷி வேதிக் க்ளோசரி VEDIC GLOSSARY BY AUROBINDO புஸ்தக முன்னுரையில் விளம்புகிறார். யாஸ்கருக்கும் ரிக்வேதத்துக்கும் இடைவெளி சில ஆயிரம் ஆண்டுகள் ; யாஸ்கருக்கும் சாயனருக்கும் உள்ள இடைவெளி, தள்ளிப்போன வெள்ளைக்கார பயல் கணக்கில் 2100 ஆண்டுகள் .
மதுரை நகர பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் உரை இல்லாவிடில் 2000 ஆண்டு சங்கத் தமிழ் நூல்களே நமக்கு விளங்காது; அப்படி இருக்கையில் பல்லாயிரம் ஆண்டுப் பழமையான வேதத்தை அறிய காஞ்சி மஹான் போன்ற பெரியோரை நாம் நாட வேண்டுமேயன்றி மாடு தின்னும் புலையனை நம்பக்கூடாது . நேற்று வந்த தள்ளிப்போன வெள்ளைக்காரன் உரை எழுதும் போது நான் எனது கருத்தை வெளியிட்டேன். அதையே ஏற்போருக்கு யான் இளைச்சவன் இல்லை .
வாழ்க வேதம்; 6000 ஆண்டுப் பழமையை வாய் மொழி மூலமாக காத்து நமக்கு அளிக்கும் பார்ப்பான் வாழ்க ;
அவன் பிரம்மத்தை மட்டுமே பார்ப்பான் !
XXX SUBHAM XXX
tags- சாத்யர்கள், சிரியஸ், சுனா = நாய் , அதர்வண மந்திரம்