Compiled by london swaminathan
Date: 4 March,2016
Post No. 2596
Time uploaded in London :– 14-57
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
(Already published in English a few days ago)
1.பஞ்சாமிர்தம்
ஐந்து வித பொருட்களைக் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் ‘ஜாம்’ பொன்ற பொருள் இது. ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள்; பஞ்ச பண்டவர் என்றால் ஐந்து பாண்டவர் என்பதை ஒவ்வொரு இந்துவும் அறிவர்.
பஞ்சாமிர்தம் பற்றிய ஸ்லோகம்:-
துக்தம் சசர்கரஞ்சைவ க்ருதம் ததி ததா மது
பஞ்சாம்ருதமிதம் ப்ரோதம் விதேயம் சர்வகர்மசு (சப்தகல்பத்ரும:)
துக்தம் – பால்
சர்கரா – சர்க்கரை
க்ருதம் – நெய்
ததி – தயிர்
மது – தேன்
தற்காலத்தில் இத்துடன் பலவகை பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.
2.பஞ்சகவ்யம்
கோமூத்ரம், கோமயம், க்ஷீரம் ததிசர்பிஸ்ததைவ ச
கவாம் பஞ்ச பவித்ராணி புனந்தி சகலம் ஜகத் —(சப்தகல்பத்ரும:)
கோ மூத்ரம் – பசுவின் மூத்திரம்
கோ மயம் – சாணி
க்ஷீரம் – பால்
ததி – தயிர்
சர்பி – நெய்
3.பஞ்சாங்கம்
ஐந்து அங்கம் என்பது இதன் பொருள்; அவையாவன: திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம்
திதி- ஒரு மாதத்தை இரண்டு பகுதிகளாக பிரித்திருக்கிறோம்; பிரதமை (முதல்) திதி முதல் 15ஆவது நாள் அமாவாசை வரும். மீண்டும் பிரதமை முதல் கணக்கிட்டு 15 ஆவது நாள் பௌர்ணமி வரும். சுருக்கமாகச் சொல்லப்போனால் சந்திரனனின் நிலை.
வாரம்: ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு நாட்கள் அல்லது கிழமைகள்.
நட்சத்திரம்:- நிலவு அதன் வட்டப்பாதையில் எந்த நட்சத்திரத்துடன் கூடியிருக்கிறதோ (உண்மையில் கூடியிருப்பதாகத் தென்படுகிறதோ) அது அந்த நாளின் நட்சத்திரம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
யோகம்:- சேர்க்கை என்று பொருள்; இரண்டு நட்சத்திரங்களின் சேர்க்கைக் காலம். ஒரு கிழமையும், ஒரு நட்சத்திரமும் கூடும் போது அது நல்லதா, கெட்டதா (அமிர்த யோகம், மரண யோகம், சித்த யோகம்) என்று அறிய உதவும். இந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உள்ளதால் 27 யோகங்களிலெது என்றும் சொல்லலாம்.
கரணம்- திதியில் பாதி
4.பஞ்சயக்ஞம்
பிரம்மயக்ஞோ ந்ருயக்ஞஸ்ச தைவயக்ஞஸ்ச சத்தம
பித்ருயக்ஞோ பூத யக்ஞ: பஞ்சயக்ஞ: ப்ரகீர்திதம்
பிரம்ம யக்ஞம் – வேத பாராயணம்
நர யக்ஞ – ஏழைகளுக்கும், விருந்தினர்களுக்கும் உனவு படைத்தல்
தைவ யக்ஞம்- இறைவனுக்குப் படைத்துவிட்டு உண்ணுதல்
பித்ருயக்ஞம் – தென்புலத்தார்க்கு நீர்க்கடன் செலுத்தல் (முற்காலத்தில் தினமும் செய்தனர். இப்பொழுட்து ஆண்டுக்கு 12 முறை முதல் 96 முறை வரை செய்கின்றனர்)
பூதயக்ஞம்: – எறும்பு முதல் யானை வரைக்கும் உணவளித்தல்; குறிப்பாக பசு மட்டுக்கு இலை, தழை அளித்தல்
மனு தர்ம சாஸ்திரத்தில் இது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வள்ளுவர் குறளிலும் (எண் 43) காண்க.
–சுபம்–
You must be logged in to post a comment.