

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 20 December 2019
Time in London – 7-37AM
Post No. 7362
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள பூர்ணவர்மனின் 4 கல்வெட்டுகள்
சுவையான தகவல்களைத் தருகின்றன. அவை 1500 ஆண்டுகளுக்கு முந்தையவை .
போர்னியோ தீவில் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூலவர்மன் கல்வெட்டு போல, இவையும் கோ தானம் பற்றிப் பேசுகின்றன.பூர்ணவர்மன் 1000 பசுக்களை பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தகவலை சீன யாத்ரிகர் பாஹியானும் உறுதி செய்கிறார். அவர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குத் திரும்பி செல்லும் முன் ஜாவாவில் ஐந்து மாதங்களுக்குத் தங்கியிருந்தார் அவர் கி.பி.415ல் ஜாவாவில் உள்ள நிலவரத்தைப் பின் வருமாறு எழுதுகிறார் .
“இங்கு தவறான பல மதங்களும் இந்து மதமும் இருக்கின்றன. ஆனால் புத்த மதம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை . ஆயினும் இதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த ‘புத்த குருமார்களின் சரித்திரம்’ என்ற சீன புஸ்தகம் கி.பி 519ல் இந்திய அரசனான குணவர்மன் என்ற அரசன் புத்த மதத்தைத் தழுவி இலங்கை சீனா ஜாவா வரை சென்று வந்ததாகக் கூறுகிறது. அவன் ஜாவாவில் ராஜாவின் தாயாரை புத்தமதத்துக்கு மாற்றியதாகவும் அவள் மகனையும் மதம் மாற்றியதாகவும் சீனப் புஸ்தகம் சொல்கிறது. அந்த நேரத்தில் ஜாவாவை எதிரிகள் தாக்கியதாகவும் எதிரிகளைக் கொல்லுவது புத்த தர்மத்துக்கு விரோதமானதா என்று குணவர்மனைக் கேட்டபோது அவர் கொள்ளையர்களை ஒழிப்பது தர்மமே என்று சொன்னவுடன் ஜாவா மன்னன் எதிரிகளை அழி த்ததாகவும் சீன புஸ்தகம் சொல்கிறது. பின்னர் ஜாவா தீவில் புத்தமதம் படிப்படியாக வளர்ந்தது.
ஜாவாவில் சம்ஸ்கிருதம்
ஜாவாவில் முஸ்லீம் மதம் பரவும் வரை இருந்த மொழியை பழைய ஜாவானிய மொழி என்று அழைப்பர்.
இது சம்ஸ்கிருதமும் சுதேசி மொழியும் கலந்த கலப்பட மொழி.இந்த மொழியில் உள்ள கவிதைகள் சம்ஸ்கிருத யாப்பிலக்கணத்தைப் பின்பற்றுகின்றன . மேலும் சம்ஸ்கிருதக் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றன . அதிலுள்ள மிகப்பழைய நூல் அமரமாலா . இது உலகின் முதல் நிகண்டு நூலான அமரகோசத்தின் ஜாவானிய மொழிபெயர்ப்பு ஆகும் . இதே காலத்தில் எழுந்ததுதான் ஜாவானிய
ராமாயணம்.கிட்டத்தட்ட வால்மீகி ராமாயணத்தைத் தழுவிய நூல். ஆனால் இராவணன் கொல்லப்பட்ட பின்னர் ராமனும் சீதையும் ஒன்று சேர்ந்ததுடன் கதை முடிகிறது. அடுத்தபடியாக மகாபாரத உரைநடை நூல் கிடைத்துள்ளது . இது சுருக்கமான மகாபாரதம்.
இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இதற்குப் பின்னர் அர்ஜுனன் விவாஹ, கிருஷ்ணாயண, சுமனசாந்தக ஆகிய நுல்களைக் காணலாம். கடைசி நூல், ஒரு மாலை(garland) காரணமாக இந்துமதி இறந்த விஷயத்தைத் தழுவியது. இது காளிதாசன் காவியத்தில் உள்ள கதை
மிகவும் குறிப்பிடத்தக்க நூல் ‘பாரத யுத்த’ என்பதாகும். இது கிரேக்க காவியங்களுக்கு இணையானது என்பது அறிஞர்களின் துணிபு . இதற்குப் பின்னர் பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம், நீதி சாஸ்திரம் என எல்லா சம்ஸ்கிருத நூல்களும் ஜாவானிய மொழியில் ஆக்கப்பட்டுள்ளன.
ஒரு பெரிய வித்தியாசத்தைக் குறிப்பிடுவது அவசியமாகும். கம்போடியா, வியட்னாம் ஆகிய இரண்டு நாடுகளில் நேரடியாக சம்ஸ்கிருத இலக்கியமும், கல்வெட்டுகளும் தோன்றின. ஆனால் சுதேசி மொழி இலக்கியம் கிடையாது. ஜாவாவில் சம்ஸ்கிருதத்தை வீட சுதேசி மொழி இலக்கியமே அதிகம்.
இது ஒரு புறமிருக்க இமயம் முதல் இந்தோனேஷியாவின் கடைக்கோடி வரை உலகிற்கு இந்துமதம் அளித்த மிகப்பெரிய கொடை பிராமி எழுத்தாகும். தெகிழக்காசிய நாடுகள் அனைத்தும், இந்திய மொழிகள் அனைத்தும், பிராமியை பிடித்துக்கொண்டன. 2000 ஆண்டுகளில் அவை தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. இந்துமத அறிஞர்கள் கொடுத்த இந்தக் கொடையினால் அவர்கள் வெகு வேகமாக நாகரீகம் அடைந்தனர்.
Tags — பூர்ணவர்மன் , ஜாவானிய மொழி, பிராமி எழுத்து, சம்ஸ்கிருதம்
—-subham—


You must be logged in to post a comment.