மாவீரர்கள் சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும் (Post No. 2382)

IMG_2814 (2)

சிவாஜி புகைப்படம், பம்பாய் விமான நிலையம்; எடுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

Written by S NAGARAJAN

Date: 12 December 2015

Post No. 2382

 

Time uploaded in London :– 5-40 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ச.நாகராஜன்

 

 

IMG_2814

அன்னையின் மீது அன்பு

 

மாவீரன் சத்ரபதி சிவாஜிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டருக்கும் ஒரு பெரும் ஒற்றுமை உண்டு. இருவரும் பெரும் வீரர்கள் என்பது தானே ஒற்றுமை என எண்ணம் தோன்றும். ஆனால் இன்னொரு விஷயத்தில் இவர்களிடையே ஒற்றுமை உண்டு. அது தான் தன் தனது தாயை நேசிப்பது. இருவரும் அபாரமான அன்பு, மரியாதையைத் தாயின் மீது கொண்டிருந்தனர்.

சிவாஜி எதைச் செய்வதாக இருந்தாலும் தன் தாயின் ஆசியுடன் தான் தொடங்குவார். வெற்றிகளை தாய்க்கே சமர்ப்பிப்பார்.

அலெக்ஸாண்டரும் தன் தாயின் மீது அபாரமான பிரியத்தைக் கொண்டிருந்தார்.

 

 

Alexander_lifetime

ஆயிரம் கடிதங்கள்

ஆனால் அவரது தாவரட்டும்யாரான ஒலிம்பியஸ் (Olympias) ஒரு முசுடு. எல்லோரிடமும் குறை காண்பவர்; எரிச்சலை மூட்டுபவர். ஆகவே அவரை எந்த வித அரசியல் விவகாரத்திலும் அலெக்ஸாண்டர் ஈடுபடுத்தவில்லை. என்றாலும் கூட தானாகவே அனைத்து விஷயங்களிலும் தலையை விட்டு ஒவ்வொருவரைப் பற்றியும் அலெக்ஸாண்டரிடம் அவர் புகார் கூறுவது வழக்கம்.

அலெக்ஸாண்டர் தனது அன்னை கூறும் ஒவ்வொரு சொல்லையும் அமைதியுடனும் பொறுமையுடனும் கேட்பார்.

ஒரு சமயம் அவரது தொந்தரவு தாங்காமல் ஐரோப்பாவில் அலெக்ஸாண்டரின் உதவி தளகர்த்தராக இருந்த ஆண்டிபேடர் (Antipater) அலெக்ஸாண்டருக்கு அவரது அன்னையைப் பற்றி ஒரு பெரிய புகார் கடிதத்தை எழுதினார்.

அதற்கு அலெக்ஸாண்டர் பதிலாக இப்படி எழுதி அனுப்பினார்:-“ நீ எழுதியது போன்ற ஆயிரம் கடிதங்களைக் கூட என் அன்னையின் ஒரு சொட்டுக் கண்ணீர் ஒதுக்கித் தள்ளி விடும்”

 

Stamp_UK_2003_1st

சப்பாத்தி தந்த போர்த் தந்திரம்

 

இதே போல சத்ரபதி சிவாஜியும் தன் அன்னையின் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒலிம்பியஸைப் போலன்றி அன்னை ஜீஜாபாய் அருமையான குணநலன்கள் கொண்டவர். ராஜாங்க காரியங்களில் அநாவசியமாகத் தலையிடாத தன்மை அவருக்கு இருந்தது. சிவாஜிக்கு ராமாயண மஹாபாரதம் போன்ற இதிஹாஸங்களையும் அறநெறிகளையும் அவர் இளமையிலிருந்தே ஊட்டி வந்தார். இதுவே சிவாஜியை ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க அடி கோலியது.

 

ஒரு சமயம் சப்பாத்தியை சுடச் சுடத் தயாரித்து சிவாஜிக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் அன்னை ஜீஜாபாய்.

ஆனால் உணவில் கவனம் செலுத்தாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் சத்ரபதி. பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டு பெரும் வலிமையுடன் இருக்கும் ஔரங்கசீப்பை வெல்வது எப்படி என்ற யோசனையில் தீவிரமாக ஆழ்ந்திருந்த அவருக்கு உண்வின் மீது எப்படிக் கவனம் இருக்கும். சூடாக இருந்த சப்பாத்தியின் நடுவில் கையை வைத்தார். அதிகமான சூட்டால் ஆ என்று அலறினார்.

அன்னை அவரை நோக்கினார்:”மகனே! அப்படி சாப்பிடக் கூடாது. சப்பாத்தியின் ஓரத்தை முதலில் கிள்ளிச் சாப்பிடு. அங்கு சூடு இருக்காது. அது ஆறி இருக்கும். பின்னர் மெதுவாக நடுப்பகுதியை எடு” என்றார்.

சிவாஜி உட்னே துள்ளிக் குதித்தார். அவருக்கு ஔரங்கசீப்பை வெல்லும் உபாயத்தை அன்னை கற்பித்து விட்டார் ஒரு நொடியில்!

 

 

வலுவான மையத்தோடு பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த ஔரங்கசீப்பை நேரில் தாக்காமல் முதலில் சுற்றிவர இருக்கும் கோட்டைகளைக் கைப்பற்றி அவரை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை சப்பாத்தி அவருக்கு கற்பித்து விட்டது. சூடான மையப் பகுதி சுற்றி வர இருப்பதைக் கிள்ளிச் சா போது ஆறி விடும், இல்லையா!ப்பிடும்

 

 

சிவாஜி உடனே சுற்றி வர இருந்த கோட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றினார். ஔரங்கசீப் வலுவிழந்தார். ஹிந்து சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது.

 

 

ஆதி சங்கரர் முதல் விவேகானந்தர் வரை அனைவருமே அன்னையின் அன்புக்கு அடிமைகள்! மாவீரர்களான சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும் அன்னையைப் போற்றி வணங்கியதில் வியப்பில்லை தானே

*******