மெசபொடோமியாவில்,எகிப்தில் நாய் தெய்வம்! 1000 நாய்கள் கல்லறை! (Post No.3644)

Written by London swaminathan

 

Date: 17 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-24 am

 

Post No. 3644

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒருவன் நாய் போல அலைந்து திரிந்து, கண்டவர்களிடம் எல்லாம் உணவை பிச்சை எடுப்பதைவிட கேவலம் ஏதேனும் உண்டா? — மஹாபாரதம் 1-147-17

யாசமானா: பராத் அன்னம் பரிதாவே மஹீஸ்வவத்?

 

நாய்களைத்தான் மனிதன் முதல் முதலில் வீட்டு மிருகமாகப் பயன்படுத்தினான்; பழக்கப்படுத்தினான். ஓநாயிருந்து வந்தது நாய்!

 

இதற்குப் பின்னர் ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையும் பழக்கப்படுத்தி, பயன்படுத்தினான்.

b8ece-hachiko

டோக்கியோவில் ஹசிகோவுக்கு சிலை

 

உலகில் நாய்களை இலக்கியத்தில் ஏற்றிய முதல் நாடு இந்தியா! உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் சரமா என்ற நாயின் கதை உள்ளது. அதை கிரேக்கர்கள் ‘திருடி’ ஹெர்மிஸ் HERMES என்று கதை செய்துள்ளனர். கிரேக்கர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஸ் (S) சப்தம் வராது ஸ என்பதை ஹ (H) என்று மாற்றிவிடுவார்கள். அதனால்தான் நமக்கு ஹிந்துக்கள் என்றும், இந்த நாட்டுக்கு இந்துஸ்தான், இந்தியா என்றும் பெயர் வந்தது. சிந்து நதிப் பிரதேசம் என்பதை ஹிந்து (S=H) என்று மாற்றி உச்சரித்தனர்.

 

இது தவிர 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மஹாபாரதத்தின் 18-ஆவது பர்வத்தில் தருமரின் (யுதிஷ்டிரரின்) பின்னால் சென்ற நாயின் கதை உள்ளது.

 

ராமாயண உத்தர காண்டத்திலும் ஒரு நாயின் கதை வருகிறது.

 

இதுபற்றியும், டோக்கியோ நகரில் ஹசிகோ (HACHIKO) என்ற நன்றியுள்ள நாய்க்கு சிலை வைத்திருப்பது பற்றியும், தமிழர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே ஊரைக் காப்பாற்றிய கோவிதன் என்ற நாய்க்கு நடுகல் வைத்தது பற்றியும் அலெக்ஸாண்டரின் நாய், குதிரை பற்றியும், காஞ்சி சங்கராசார்யார் மடத்தின் நாய் பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டேன். இன்று எகிப்திய சுமேரிய நாய்களைக் காண்போம்.

 

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவுக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷ்கெலான் (ASHKELON)  என்ற நகரில் 1000 நாய்கள் புதைக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பாரசீக ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. இன்னொரு நகரான இசின் (ISIN) என்னுமிடத்தில் ஒரு கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை எல்லாம் ஆதிகால மெசபொடோமியா பிரதேசத்துக்கு உள்ள்டங்கிய பகுதி

 

எகிப்து நாட்டில் சேத் (SET), அனுபிஸ் (ANUBIS) நன்ற தெய்வங்கள் நாய் முகம் உடைய கடவுள் என்றும் நரிமுகம் உள்ள கடவுள் என்றும் இருவிதமாகப் பகர்வர்.

 c1190-horus_hieroglyphs

இறந்தவர்களின் இதயத்தை எடைபோடும் அனுபிஸ்.

92491-weighing_of_the_heart3

நாய்களின் கண்களுக்கு எமன் தெரியுமாம்!

 

எப்படி ரிக்வேத சரமா கதையை கிரேக்கர்கள் திருடி ஹெரமா என்று மற்றினரோ அப்படியே எமன் – நாய் தொடர்பையும் இந்துமதத்திலிருந்து உலகத்தினர் எடுத்துக் கொண்டனர்!

 

உலகம் முழுவதும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நாய்களின் கண்களுக்கு எமன் தெரியும் என்று! உண்மையில் இக்கதை இந்துக்களின் கதை. மஹாபாரதத்தில் தருமனைப் பின்தொடர்ந்த நாய், தரும தேவதையின் மறு அவதாரம். இந்தியாவிலும் நாய்-எமன் தொடர்பு பற்றிய கதைகள் உண்டு. நாய்கள் ஊளையிட்டால் யாராவது இறப்பார்கள் என்று சொல்லுவர். இதற்கு விஞ்சான பூர்வ விளக்கமும் உண்டு.

 

நாய்களுக்கு 3000 மடங்கு மோப்ப சக்தி இருப்பதால், துப்புத் துலக்குவதோடு, சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் நுண்ணலைகளை உணரும் சக்தியும் பெற்றுவிடுகிறது. இதனால் முன்கூட்டியே ஊளை இடும். இதனால்தான் நாயை யமனுடன் தொடர்பு படுத்துகின்றனர்.

 

சீன ராசிச் சக்கரத்தில் ஒரு மாதம் நாயின் மாதமாகும். இதே போல தென் அமெரிக்க அஸ்டெக் (AZTEC) நாகரீகத்திலும் இருபது நாள் (TWENTY DAYS A MONTH CALENDAR)  மாதத்தில் ஒரு நாளுக்கு நாயின் பெயர்.

நாய்களுக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு என்றும் மெசபொடோமியாவில் நம்பிக்கை இருந்தது.

fee5c-tutanhkamun_jackal

எகிப்தில்

 

அனுபிஸ், சேத் முதலிய கடவுளரின் முகம் நாய் போல இருக்கும். இதை சிலர் நாய் என்றும், மற்றும் சிலர் நரி என்றும் பகர்வர்.

 

ஆனால் நாய் என்பதே சரி. ஏனெனில் பிற பண்பாடு போலவே இறந்த மனிதனைக் கடைத்தேற்றும் பணியைச் செய்வது அனுபிஸ் என்ற கடவுள்தான். இது போல எல்லாக் கலாசாக்ரங்களிலும் இறந்த பின் நடக்கும் வாழ்வில் நாய்தான்  அணுசரணையாக உள்ளது.

 

எகிப்தில் முதல் அரச வம்ச மஹாராணியின் Queen Herneith of First Dynasty கல்லறையில் ஒரு நாயின் உடல் புதைக்கப் பட்டிருந்தது.. இன்னொரு அதிகாரி நாய்க்கு நீண்ட அடைமொழி கொடுத்து (One owner of such a dog, Senbi the Governor of Cusae in Upper Egypt (2000 BCE), named his hound ‘Breath of Life of Senbi”)   கல்வெட்டில் பொருத்தினார். இரண்டு பெரிய அதிகாரிகளின் நாற்காலிகளுக்கு கீழே நாய் அமர்ந்திருப்பது போல சித்திரம், சிலைகள் உள்ளன.

 

இடைக் காலத்தில் கல்லறைகளில் நாயின் வடிவத்தைச் செதுக்கினர். போர் வீரர்கள் தங்களின் பிரபுக்களிடம் விசுவாசமாக இருந்ததாலோ, கணவனிடத்தில் மனைவி விசுவாசமாக இருந்ததாலோ இந்த வழக்கம் ஏற்பட்டது.

 

இந்தியாவில் பைரவருக்கு நாய் வாஹனம். தத்தாத்ரேயர் அவதாரம் எப்போதும் நாய்களுடன் காணப்படுவார். இது போல கிறிஸ்தவ மத புனிதர்களில் மூன்று. (St Francis of Assisi, St.Hubert, St Eustace and St Roch) நான்கு பேர், எப்போதும் நாயுடனே சித்தரிக்கப்படுவர்.

Anubis

நாயின் விசுவாசமும், அன்பும் அறிவும் பற்றி நாள்தோறும் பத்திரிக்கை  செய்திகள்  வருகின்றன.

போலீஸ் துறையிலும் ராணுவத் சிறந்த சேவை ஆற்றிய நாய்களுக்கு பெரிய பரிசுகள் கொடுக்கப்பட்டன. நாய்கள் எதையும் விரைவாக கற்கும். அதனால் அதற்கு புதிய கட்டளைகளையும் பணிகளையும் கற்றுத் தருகின்றனர்.

 

எகிப்தியர் நாய் பற்றி சொல்லும் வசனம்: கடவுளும் நாயும் ஒருங்கே இருந்தனர். அம்புகளை விட வேகமாகப் பாய்வது நாய்கள்தான்” ( the dog was ‘one with the Gods, more swift than the arrows’).

 

–Subham–

 

இறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி அளிக்கும் உண்மை!! (Post No.2917)

newscientist-30602015feb13

Article written by London swaminathan

 

Date: 24 June 2016

 

Post No. 2917

 

Time uploaded in London :– 8-33 AM

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

‘நியூ ஸயின்டிஸ்ட்’ NEW SCIENTIST என்ற பிரபல விஞ்ஞான பத்திரிக்கையில் இந்த வாரம் ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. ‘இறந்தபின்னும்” நம்முடைய ஜீன்கள், அதவது மரபணுக்கள் கொஞ்ச நேரத்துக்கு உயிர்வாழ்கின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

 

இதை நம்முடைய யோகிகளின் வாழ்க்கையுடன் ஒப்பிடுவது, இந்துமதத்தின் அறிவியல் பின்னணியை நன்கு விளக்கும்.

 

இறந்து போன மீன்களின், சுண்டெலிகளின் ஜீன்களை ஆராய்ந்ததில் அவைகளின் மரபணுக்கள் இரண்டு நாட்களுக்கு உயிரோடிருந்தது தெரிய வந்தது.

 

ஒருவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் அறிவித்த பின்னரும் இப்படி ஜீன்கள்/ மரபணுக்கள் வாழ்வதால் அவர் ‘இறந்தது’ உண்மையா? சட்ட பூர்வமானதா? என்ற புதிய கேள்விகளை இது எழுப்பும். இறந்து போனவர்களின்  மாற்று உறுப்புக்ளை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் புதிய அணுகுமுறை வரும்.

 

சியாட்டில் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக டாக்டர் பீட்டர் நோபிள்ஸ் நடத்திய ஆய்வில் மீன்களின் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் 548 ஜீன்களும், எலிகளின் 515 ஜீன்களும் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னரும் உயிரோடிருந்ததைக் கண்டார். நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் , செத்துப் போன பின்னர் அவர்களின் உடலில் 12 மணி நேரத்துக்கு பல ஜீன்கள் சுறு சுறுப்புடன் செயல்பட்டதையும் கண்டார்.

2kanchi on mat

எனது கருத்து:-

நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் விஷயத்திலேயே 12 மணி நேரத்துக்கு மரபு அணுக்கள் உயிரோடிருக்குமானால், வாழ்நாள் முழுதும் யோகம், ஆசனம் செய்தவர்களின் உடலில் இறந்த பின்னரும் ஜீன்கள், சுறுசுறுப்புடன் செயல்படுவதில் வியப்பில்லை.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற முஸ்லீம் பெரியவரின் வாழ்க்கையில் , அவர் புதைக்கப்பட்ட பின்னரும் , தானம் வாங்க வந்த புலவருக்கு, அவர் கை நீட்டி மோதிரத்தைக் கொடுத்ததாக அறிகிறோம். இதுபற்றி முன்னரே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். மஹாபாரத அதிசயங்கள் பற்றிய கட்டுரையில் இறந்தவர்களின் உடலிலிருந்து, உயிர்கள் உண்டாக்கப்படதை எழுதிவிட்டேன்.

ஒரு யோகியின் சுய சரிதை என்ற புத்தகத்தில் பராஹம்ச யோகானந்தா(1893-1952) பற்றிய அதிசய செய்தி உள்ளது. அவர் இறந்து போய் இருபது நாட்களுக்குப் பின்னரும் அவர் உடல் அழுகவில்லை; அத்தோடு ஒளிவீசிக்கொண்டு திவ்ய தேஜசுடன் விளங்கியது என்று அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் மார்ச்சுவரி/ சவக் கிடங்கு டைரக்டர் ஹாரி டி.ரோவ் எழுதியுள்ளார்.

 

திருக்கோவிலுர் சுவாமி ஞானானந்தா சமாதி அடைந்த போது, அவர்களுடைய சிஷயர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது; சுவாமிகள் அடிக்கடி சமாதி நிலைக்குச் சென்று 150 ஆண்டுகளாகியும் இறக்காததால், இந்த முறையும் இப்படி அதிசயம் நடக்குமோ என்று காத்திருந்தனர். ஆனாலப்படி சமிக்ஞைகள் ஏதும் வராததால், காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் (1894-1994) சென்று கேட்டனர். அவரும் சில நாட்கள் பொறுத்திருந்து அடக்கம் செய்யலாம் என்று கருத்து தெரிவித்தார்.

 

அதர்வவேத, ரிக் வேத மந்திரங்களில் மரணம் பற்றிய மந்திரங்களில் உள்ள கருத்துகள் எதிர்காலத்தில் உண்மை யென்று நிரூபிக்கப்படும். இவை எகிப்திய மரணப் புத்தகத்தில் (THE BOOK OF DEAD தி புக் ஆப் டெட்) உள்ளதைப் போல இருப்பதையும் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.

 

ஒருவன் மரணம் அடைந்தவுடன் அவன் ஆவி உடலில் இருப்பதாகவும், சிதைத்தீ உடலில் பட்ட பின்னரே ஆவி வெளியேறும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

மேலும் 12 நாட்களுக்குப் பின்னரே அது பூமியைவிட்டு மேலுலகம் செல்லும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதனால்தான் உலகம் முழுதும் 13 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

 

உடலில் இருந்து வெளியேறும் ஆவிக்கு, இருளில் எங்கு செல்வது என்று தெரியாதாகையால், ஒருவர் இறந்த இடத்தில் விளக்கு ஏற்றிவைப்பதும் இந்துக்களின் வழக்கம். இதை மற்ற மதங்களும் பின்பற்றி மெழுகு வர்த்தி ஏற்றிவைக்கின்றனர். ஒருவர் இறந்த இடத்தில், இந்துக்கள் 12 நாட்களுக்கு விளக்கு ஏற்றிவைப்பதும் இதனால்தான். 13ஆவது நாளன்று ஆவி, இறந்த இடத்திலிருந்து மேலுலகத்துக்குப் பறந்துவிடும். கருடபுராணம் மற்றும் புரோகிதம் செய்துவைக்கும் பிராமணர்களின் செவிவழிச் செய்திகள் இதுபற்றி நிறைய தகவல்கலைத் தருவர். எதிர்காலத்தில் இவை அனைத்தும் விஞ்ஞான உண்மைகளாகி விடும்.

நியூ ஸைன்டிஸ்ட் – பத்திரிக்கையில் இப்போது வந்துள்ள செய்தி அதில் முதல் படி என்றால் மிகை இல்லை.

–சுபம்–