2000 கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி (Post.9832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9832

Date uploaded in London –9 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எமிலி டிக்கின்ஸன் (EMILY DICKINSON) என்ற அமெரிக்கப் பெண் கவிஞரின் வாழ்வு மிகவும் மர்மம் மிக்கது. அவர் உயிருடன் இருந்த போது ஏழு கவிதைகள் மட்டுமே வெளியாகின. அவர் இறந்துபோன பின்னர் அவருடைய பெட்டி ஒன்றை சகோதரி திறந்து பார்த்து பிரமித்துப் போனாள் . அதில் 2000 கவிதைகள் இருந்தன.அவர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அவை முழுதும் அச்சாகின.இன்று அவர் புகழ் அமெரிக்கா முழுதும் பரவி இருக்கிறது. ஆங்கிலக் கவிதை ரசிக்கப்படும் எல்லா இடங்களிலும் எமிலியின் கீர்த்தி பரவிவிட்டது .

எமிலி திருமணம் செய்துகொள்ளவே இல்லை. எப்போதும் வெள்ளை உடையையே அணிந்தார். பல ஆண்டுகளுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி எவரையும் சந்திக்க மறுத்தார். ஆயினும் கடிதங்களை எழுதிக் குவித்தார். அவற்றின் மூலம் எல்லோரையும் தொடர்பு கொண்டார். மரணத்தைத் தனது நண்பன் என்றும் , அதைச் சந்திக்கத் தயார் என்றும் எழுதினார். பிற்காலத்தில் இவர் புகழ் பரவியபோது இவரது வாழ்வைத் சித்தரித்தோர் அவரை  அமைதியான எரிமலை (Silent Volcano) என்றும். பிரஷர் குக்கர் (Pressure Cooker)  என்றும் வருணித்துள்ளனர்

பிறந்த தேதி – டிசம்பர் 10, 1830

இறந்த தேதி – மே 15, 1886

வாழ்ந்த ஆண்டுகள் – 55

எமிலியின் வாழ்க்கை விந்தையானது; புதிரானது. ஒரு சன்யாசினிபோல ஏன் வாழ்ந்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை ; இதுவரை புரிபடவும் இல்லை. எல்லா குடும்பங்களிலும் நடை பெறும் பிரச்சனைகள்தான் இவரது சகோதரி, சகோதரர் வாழ்விலும் இருந்தன. அம்மா மிகவும் கண்டிப்பானவர். அப்பா, வேலை  நிமித்தம் வெளியூர் சென்றாலும் குழந்தைகளின் படிப்பில் நல்ல கவனம் செலுத்தினார். நல்ல வசதியான குடும்பம்தான் .

 அமெரிக்காவின் மாசசூசட்ஸ் பகுதியில் ஆமர்ஸ்ட்(Amherst)  என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை வழக்கறிஞர்.. பள்ளிக் கல்வியை முடித்த எமிலி, ஒரே ஒரு ஆண்டு மட்டும் வீட்டை விட்டு வெளியே வாசித்தார். அது ஒரு பெண்கள் கல்லூரி ஹா ஸ்டல். வீட்டுக்குத் திரும்பியவுடன் அம்மாவுக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டதால் தங்கையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை வகித்தார்.

பகல் முழுதும் ரொட்டி சுடுதல், தையல் வேலை, தோட்ட வேலை, நாயை கூட்டிக்கொண்டு உலா வருதல்; இரவு முழுதும் எல்லோரும் உறங்கச் சென்ற பின்னர் படித்தல், கவிதை எழுதல் என்று தன வாழ்க்கையை வகுத்துக்கொண்டார். அன்பு, வாழ்க்கை, வலி, வேதனை, மரணம், இயற்கை என்று பல விஷயங்களை கவிதையில் வடித்தார்.

கவிதையைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து மனிதர்களைச் சந்திக்க மறுத்தார். 40 வயது முதல் வீட்டை விட்டு வெளியேறியதே இல்லை. தோட்டத்தின் வேலிதான் அவருக்கு எல்லை. அதைத் தாண்டவுமில்லை. புது முகங்களை சந்தித்ததும் இல்லை. ஏன் இந்த மாறுதல்? இதுவரை எவருக்கும் புரிபடவில்லை. அவரும் எழுதி வைக்கவில்லை. அவர் எழுதிய ஏராளமான கடிதங்களையும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 2000 கவிதைகளையும் வைத்து ஊகிக்கத்தான் முடிகிறது. அப்போதும் புதிர் விடுபடவில்லை .

அவர் வாழ்ந்தகாலத்தில் ஒரு சில கவிதைகளே வெளியிடப்பட்டன. அவைகளையும் சிலரே புரிந்து கொண்டனர். அவருடைய காலத்துக்குப் பொருந்தாத விஷ யங்கள்; பொருத்தமில்லாத சொற்கள்  ; ; புதிய எண்ணங்கள்; ஆழ்ந்த பொருள் படைத்தவை. இவரைத் தவிர மற்ற கவிஞர்கள் வார்த்தைகளைக் கொண்டு இந்திரஜாலம் செய்த காலம் அது. சொல் வேட்டுவர்களுக்கு சுவை தரும் கவிதைகளை மற்றவர்கள் எழுதினர்.

அவர் 55 வயதில் இறந்த பின்னர், அவனுடைய தங்கை ஒரு பெட்டியைத் திறந்துபார்த்தபோது சுமார் 2000 கவிதைகள் இருந்தன. 1955ம் ஆண்டு வாக்கில்  அவை முழுதும் அச்சுக்கு வந்தன.

இவ்வளவு கவிதைகளையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடிதங்களையும் எழுதிவிட்டு சந்நியாசி போல வாழ்ந்ததால் இவரைப் பற்றி பல திரைப்படங்களும், புஸ்தகங்களும், டெலிவிஷன் தொடர்களும், வானொலி நிகழ்ச்சிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆமெர்ஸ்ட்(Amherst)  என்னும் அமெரிக்க கிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தை அமெரிக்க அரசு தேசீய வரலாற்றுச் சின்னமாகஅறிவித்துள்ளது.

எமிலி இறந்த பின்னர் வெளியான அவரது கவிதை நூல்கள் –

1890 – POEMS BY EMILY DICKINSON

1891 – POEMS SECOND SERIES

1896  – POEMS THIRD SERIES

1914 – THE SINGLE HOUND

1955 – THE COMPLETE POEMS OF EMILY DICKINSON

IN THREE VOLUMES

1958 – THE LETTERS  OF EMILY DICKINSON

IN THREE VOLUMES

1961 – FINAL HARVEST

–சுபம்-

tags- 2000 கவிதை, பெட்டி, , அமெரிக்க பெண்மணி, எமிலி டிக்கின்ஸன் ,EMILY DICKINSON,

ஆராய்ச்சி என்றால் என்ன? பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் (Post No.4075)

Written by London Swaminathan
Date: 12 July 2017
Time uploaded in London- 19-22
Post No. 4075

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அமெரிக்காவில் உள்ளது கொலம்பியா பல்கலைக் கழகம். இதன் தலைவராக நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler) இருந்தார். அவர் பெரிய அறிஞர்; நோபல் பரிசு வென்றவர். கல்வியாளர்.

 

அவரும் , அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிராண்டர் மாத்யூவும் (Brander Mathews) பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் இலக்கியக் கொள்ளை (Plagiarism) என்றால் என்ன என்று விவாதித்தனர். பிராண்டர், தான் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி விளக்கினார்.

 

யாராவது ஒருவர் ஒரு விஷயத்தை முதல் தடவை சொன்னால் அதுதான் ஒரிஜினல் (originality);

அதுதான் ஆதி; சுயமான சிந்தனை.

அதையே ஒருவர் இரண்டாவது தடவை சொன்னால் அது இலக்கியக் கொள்ளை- Plagiarism

(பேஸ்புக்கில் பலரும் செய்வது)

மூன்றாவது முறை அதையே ஒருவர் சொன்னால் அவருக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றலே இல்லை (Lack of Originality) என்று பொருள்.

அதையே நாலாவது முறை யாராவது சொன்னால், அது ஏதோ ஒரே மூலத்திலிருந்து (drawing from a common source) தோன்றியது என்று பொருள்.

 

இப்படி அவர் சொல்லிக் கொண்டே இருக்கையில் பட்லர் குறுக்கிட்டார், “அதையே யாரவது ஐந்தாவது முறை சொன்னால் அதன் பெயர் ஆராய்ச்சி! (Research)

 

எவ்வளவு உண்மை!

xxx

 

சொல் கஞ்சன்!

 

அமெரிக்க ஜனாதிபதி கூலிட்ஜ் (President Coolidge)பயங்கரமான கஞ்சன்; அதாவது சொல் கஞ்சன்; பெரிய சந்திப்புகளிலும், பொது விருந்துகளிலும் பேசா மடந்தையாக இருப்பார். அப்படியே பேசினாலும் இரண்டு, மூன்று சொற்களே வாயிலிருந்து வரும்; அதுவும் பெரிய அறிவாளி பேசுவது போல இருக்காது!

 

அமெரிக்காவின் புகழ்மிகு பெண் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் (Emily Dickinson). அவருடைய வீடு ஆமெர்ஸ்ட்(Amherst) எனும் இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை ஒரு கண்காட்சியாக மாற்றி அவருடைய ஒரிஜினல் படைப்புகள், நினைவுப் பொருட்களை வைத்துள்ளனர். அதற்கு கூலிட்ஜ் விஜயம் செய்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியே வருகிறார் என்பதால், பொது மக்கள் தொட முடியத பொருட்களை எல்லாம் தொட்டுப் பார்க்க அவரை அனுமதித்தனர்.

 

யாருக்கும் காட்டாத புலவருடைய நினைவுப் பொருட்களை எல்லாம் காட்டினர் கண்காட்சி அதிகாரிகள்.

 

அவரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தார். வாயே திறக்காமல்!

 

இவருடைய ஆர்வத்தைக் கண்ட அதிகாரிகள் ஒரு அரிய பொக்கிஷப் பெட்டியைத் திறந்து இவைதான் அவர் கைப்பட எழுதிய கவிதைகள் என்று காட்டினர். அவருடைய கண்கள் அகல விரிந்தன. புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

கடைசியில் இரண்டே சொற்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னது என்ன தெரியுமா?

“பேனாவால் எழுதினாரா, ஹூம்; நான் டிக்டேட் செய்வேன்” (சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதுவது டிக்டேசன்)

 

சொல் தச்சர்கள் தமிழிலும் சஸ்கிருதத்திலும் உண்டு; நல்ல வேளை, சொல் கஞ்சர்கள் கிடையாது!

–சுபம்–