
Compiled by London swaminathan
Date: 20 December 2015
Post No. 2408
Time uploaded in London: காலை 8-40
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ஒற்றுமையே பலம் என்பதை வலியுறுத்த பாரத நாட்டில் பல கதைகளும், பழமொழிகளும் இருக்கின்றன. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்று பாடினான் பாரதி.
சின்னக் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லுவதுண்டு. ஒரு குடியானவனுக்கு நாலு மகன்கள்; எப்போது பார்த்தாலும் அவர்களிடையே சண்டைதான். அந்தக் குடியானவனுக்கு அந்திம காலம் நெருங்கியது. மரணப்படுக்கையில் இருக்கும்போது, நான்கு மகன்களையும் அழைத்து, ஆளுக்கு ஒரு விறகுக்கட்டையைக் கொண்டுவரச் சொன்னான். இதை ஒடிப்போருக்குதான் நான் சொத்து முழுவதையும் எழுதிவைப்பேன் என்றான். பின்னர் ஒவ்வொருவ ரையும் விறகை ஒடிக்கச் சொன்னான். அவர்கள் பலம் முழுதையும் பிரயோகித்து எளிதில் உடைத்தனர்.
பின்னர் நாலு விறகுக் கட்டைகளையும் சேர்த்து ஒன்றாகக் கட்டச் சொல்லி இப்பொழுது இதை ஒடிப்போருக்குதான் முழுச் சொத்தும் கிடைக்கும் என்றான். நால்வரும் தனித்தனியே முயன்றனர். ஒடிக்க முடியவில்லை
அப்பொழுது சொன்னான்: என்னருமை மகன்களே, நீங்கள் தனித் தனியே இருந்தால் பலவீனம் அடைவீர்கள். நமது பரம்பரைச் சொத்துக்களைப் பாதுகாக்க இயலாது. உங்களை யாவரும் வென்று விடுவர். நீங்கள் நால்வரும் ஒற்றுமையுடனிருந்தால் பலம் அதிகரிக்கும். உங்களை யாரும் வெல்ல முடியாது என்றான். அவர்கள் நால்வருக்கும் புத்தி வந்தது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்தனர்; அதைக் கடைப்பிடித்தனர்.
ஒற்றுமை பற்றிய கீழ்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பொன்மொழிகள்- சான்றோர் மேற்கோள்களைப் படிக்கையில் உங்களுக்கு இந்தக் கதை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். இதோ அந்தப் பொன் மொழிகள்:–

1).அல்பானாம் அபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்ய சாதிகா- ஹிதோபதேசம்
எவ்வளவு சின்ன பொருளானாலும், அவை ஒன்று சேருகையில் செயலை முடிக்க உதவும்
2).ஏக சித்தே த்வயோரேவ கிம் அசாத்யம் பவேத் இதி – கதாசரித் சகரம்
இரண்டு பேருடைய மனம் ஒன்றுபட்டால், செய்யமுடியாதது எதுவுமில்லை.
3).ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்
இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் -972)
4).பஞ்சபிர் மிலிதை: கிம் யஜ்ஜஹதீக ந சாத்யதே – நைஷதீக சரிதம்
ஐந்துபேர் சேருமிடத்தில் என்னதான் செய்யமுடியாது?
5).பஹூனாம் அபி சாராணாம் சமவாயோ ஹி துர்ஜய:
த்ருணைர்விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: – பஞ்ச தந்திரம்
சாரமற்று இருப்பினும் எண்ணிக்கையில் அதிகமானதை வெற்றிகொள்ள இயலாது; புற்களைச் சேர்த்துச் செய்யப்படும் கயிறு மத யானையையும் கட்டிப்போடும்.
6).பஹூனாம் ச ஏவ சத்வானாம் சமவாயோ ரிபுஞ்ஜய: — சாணக்ய நீதி தர்பணம்
சாதுவானவர்களானும், ஒன்று சேர்ந்தால் எதிரிகளையும் வென்றுவிடலாம்.
7).சம் கச்சத்வம்
சம் வதத்வம்
சம் வோ மனாம்ஸி ஜானதாம் – ரிக் வேதம்
நாம் எல்லோரும் ஒன்றாகச் செல்வோம் (ஒன்றாகச் செல்லுங்கள்)
ஒன்றாகப் பேசுவோம் (ஒன்றகப் பேசுங்கள்)
ஒரே சிந்தனை உடையவர்களாவோம் (ஒன்றாகச் சிந்தியுங்கள்)
8).சங்கே சக்தி கலௌ யுகே
கலியுகத்தில் சங்கம் (ஒன்றுபட்டிருப்பதே) தான் சக்திவாய்ந்தது.
9).சமவாயோ துரத்யய:- போஜ சரித்ரம்
கூட்டாக இருப்பது வெல்ல இயலாதது (ஒன்றாக இருந்தால் அவர்களை யாரும் தோற்கடிக்க முடியாது)
(மீண்டும் மீண்டும் ஒரே கொள்கை/ தத்துவம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது)

பராதீனதா – அடிமை (பிறரிடம் தொழில் செய்தல்)
10).கஷ்டம் கலு பராஸ்ரய: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)
பிறரைச் சார்ந்து வசிப்பது கடினமாகும்.
11).கஷ்டாத் அபி கஷ்டதரம் பரக்ருஹவாச: பரான்னம் ச – (சு.ர.பா)
கஷ்டங்களிலும் பெரிய கஷ்டம் மற்றவர் வீட்டில் வசிக்க வேண்டியிருப்பதும், மற்றவர் கொடுக்கும் உணவுக்காகக் காத்திருப்பதும் ஆகும்.
12).கஷ்டா வ்ருத்தி: பராதீனா
பிறரிடத்தில் ஊழியம் செய்வது கடினம்
13).திகஸ்து பரவசதாம் – ராமாயணம்
பிறருடைய வசத்தில்/ ஆளுகையில் இருப்பது ஒழியட்டும்
14).பராதீனே பரம் துக்கம் ஸ்வாதீனே ச மஹத் சுகம் – புத்த சரிதம்
பிறர் வசம் இருப்பது துக்கமானது
சுதந்திரமாகச் செயல்படுவது மிகவும் சுகமானது.
–சுபம்–
You must be logged in to post a comment.