

Written by S.Nagarajan
swami_48@yahoo.com
Date: 2 March 2019
GMT Time uploaded in London – 6-05 am
Post No. 6141
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
புனித பூமி பாரதம்
கங்கையின் புனிதம் பற்றிய மேலை நாட்டார் புளுகு!
ச.நாகராஜன்
திட்டமிட்டு பாரத தேசத்தின் எந்த விஷயத்தையும் பற்றி புளுகுவதே மேலை நாட்டு அறிஞர்களின் வேலை; பாதிரிகளின் பழக்கம்.
இந்த வகையில் கங்கை நீர் புனிதம் என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் இதைச் சொல்வது புராணங்கள் தாம் என்றும் அந்தப் புராணங்கள் எல்லாம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டிற்குள் தோன்றியவையே என்றும் பல மேலை நாட்டு “அறிஞர்கள்” எழுதி வைத்துள்ளனர்.
இது எவ்வளவு பெரிய புளுகு என்பதைப் பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
பின்னால் வந்த முகம்மதிய படையெடுப்பாளர்களும் அரசர்களும் கூட – அக்பர் உள்ளிட்டவர்களும் கூட – கங்கை நீரை மட்டுமே பருகும் பழக்கத்தைக் கொண்டிருந்ததை ஏற்கனவே கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்திருக்கிறேன்.
கங்கை புனிதமானது என்பதைப் புராணங்கள் தாம் கிளப்பி விட்டது என்று இவர்கள் சொல்லும் பொய்யையும் உடைக்கும் ஆதாரம் உள்ளது. முதலில் புராணம் இவர்கள் சொல்லும் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததே இல்லை; மிகவும் பண்டைய காலத்தது.
அது ஒரு புறம் இருக்கட்டும். கிறிஸ்துவுக்கு முன் இருக்கும் சரித்திரத்திற்கு வருவோம்.
சிலோன் என்று கூறப்பட்ட லங்கையின் அரசனாக திசா கி.மு.47இல் பதவியேற்றான். அப்போது மாபெரும் சக்கரவர்த்தியாக அசோகன் மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்குத் தன் மரியாதையையும் விசுவாசத்தையும் தெரிவிக்கும் விதமாக மன்னன் திசா, தான் அரியணை ஏறியவுடன் பல பரிசுப் பொருள்களைத் தன் தூதர்கள் வசம் கொடுத்து அனுப்பினான்.
அவற்றைப் பெற்ற சக்கரவர்த்தி அசோகன் மனம் மிக மகிழ்ந்தான்.
தூதுவர்கள் திரும்ப யத்தனிக்கையில் ஒரு கடிதத்தையும் திசாவின் பதவியேற்பைக் கருதி கங்கை நீரையும் சில சன்மானங்களையும் தூதுவர்களிடம் தந்தான்.
கடிதத்தில் புத்த தர்மம் பற்றி எழுதிய அசோகன் அதில் சேருமாறு திசாவை வேண்டிக் கொண்டான்.
கடிதத்தையும் கங்கை நீரையும் பரிசுப் பொருள்களையும் தூதுவர்கள் மன்னன் திசாவிடம் சென்று கொடுத்தனர்.
அத்துடன் நிற்காமல் அசோகன் லங்காவிற்கு தன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் புத்த மதம் பற்றிக் கூற நேரில் அனுப்பினான்.
ஆக கங்கை புனிதமானது என்பதும் பதவியேற்பு சமயத்தில் புனிதம் தரும் திவ்ய ஜலம் என்பதும் பெறப்படுகிறது. இது கிறிஸ்துவிற்கு முன் இருக்கும் சரித்திரத்திலேயே இடம் பெறும் ஒன்று என்பதும் பெறப்படுகிறது.
இப்படி ஏராளமான சரித்திர ஆதாரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மேலை நாட்டினரின் ஒவ்வொரு பொய்யையும் உடைக்கும் ஆதாரங்களாகும்.
இவற்றைத் தொகுத்து உண்மையான இந்திய சரித்திரத்தை எழுதுதல் வேண்டும். அதற்கு முன்னர் பாரதத்தை இகழும் வகையில் உள்ள பொய், புளுகுகளை பாட புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். இப்படிப்பட்ட புளுகுகளை அறிஞர்கள் யாரேனும் மேற்கோளாகக் காட்டினால் அந்தத் தவறை உடனடியாக அனைவரும் சுட்டிக் காட்ட வேண்டும். வேண்டுமென்றே இவற்றை ஆய்வுப் பேப்பர்களிலும் கட்டுரைகளிலும் மேற்கோளாகக் காண்பித்தால் அந்த “அறிஞர்களின்” புத்தகங்களுக்கு உடனுக்குடன் மறுப்புரை எழுதும் புத்தகங்களை ஆதரிப்பதுடன் அவற்றைப் பிரச்சாரமும் செய்ய வேண்டும்.
இது ஒவ்வொரு பாரதீயனின் கடமையாகும்!
வெல்க பாரதம்!
OLD ARTICLE IN THE BLOG
இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் …
18 Sep 2014 – இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்? river map_srilanka. Ganges is everywhere in Sri Lanka! கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
***
