உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்? (Post No.2894)

Logo Three people on podium

Written by London swaminathan

 

Date: 14 June 2016

 

Post No. 2894

 

Time uploaded in London :– 16-16

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

three figures

நல்லவன் யார்?

மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.

சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.

இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்).

 

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:

ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:

விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:

ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

Snakes---Banded-Egyptian-Cobra

விஷப் பாம்பும், தீயோரும்

தாழ்ந்தோருக்கு செய்யும் (உபகாரம்) உதவியால் கெடுதலே (அபகாரம்) வரும். பாம்புக்கு பால் வார்த்தால் விஷம்தான் அதிகரிக்கும்.

உபகாரேண நீசானாம் அபஹாரோ ஹி ஜாயதே

பய: பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்தனம்

–சுபம்–