
Written by London Swaminathan
Date: 25 NOVEMBER 2017
Time uploaded in London- 7-53 am
Post No. 4431
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
கடந்த சில தினங்களில் வெளியான மநு நீதி நூல் கட்டுரைகளைப் படித்துவிட்டு ஐந்தாவது பகுதியைப் படிப்பது நலம் பயக்கும்; அறிவு ஒளிரும்; நூல் வேட்கை அதிகரிக்கும்!
51.பிரம்மாவானவர் தோன்றியவாறே ஒரு பகல் பொழுது கழிந்தவுடன் சகல படைப்புகளுடன் ஒடுங்கி விடுகிறார். அதாவது அந்தப் பிரம்மாவின் ஆயுள் முடிந்தது.
52.மீண்டும் படைக்கவேண்டும் என்று எப்பொழுது அந்த சக்தி வெளிப்படுகிறதோ அப்பொழுது படைப்பு துவங்கும். எப்பொழுது அதை முடிக்க திருவுளம் கொள்கிறாரோ அப்பொழுது ஒடுங்கிவிடும்.
(ஸ்லோகம் 52ல் ஒரு சிலேடை உள்ளது; ஜகத் என்றால் நகரக்கூடியது; விழிப்பு என்பதற்கான வினைச் சொல் ஜாக்ருதி)
53.கர்ம வினையால் படைப்பெடுத்த உயிர்கள் பிரம்மா உறங்கும் பொழுது செயலற்றுப் போவார்கள். மனதும் அதன் செயல்பாட்டை நிறுத்திகொள்ளும்
54.இவ்வாறு பிரம்மாவின் ஒவ்வொரு பகலிலும் இரவிலும் படைப்பு தோன்றுவதும் ஒடுங்குவதுமாக நடந்து கொண்டே இருக்கும். அவரது ஆயுட்காலம் முடிந்த பின்னர், முழுமுதற்கடவுள் அந்த பிரம்மாவையும் அவரது படைப்புகளையும் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு, யோக நித்திரை எனப்படும் அறிதுயிலில் ஆழ்வார்.
- பிறவி எடுத்த உயிரினம் நீண்டகாலம் வாழ்ந்து முடிந்த பின்னர், மூச்சுவிட முடியாத நிலையில் ஸ்தூல உடலை விட்டு, சூட்சும உடலை (கண்ணுக்குத் தெரியாத) உடலை அடைகிறது.
56.பிறகு அணுப்போலாகி, அசையும்-அசையா பரம்பொருள் என்னும் விதையில் நுழையும். அதில் ஐக்கியமாகும் போது பூத உடல் மறைந்துவிடும். எப்போது அவன் எட்டுவகை குணங்களைப் பெறுகிறானோ, அப்போது அவன் ஸ்தூல உடல் எடுப்பான். எட்டு குணங்கள்- புரியஷ்டகம்=பஞ்ச மஹா பூதம்/பஞ்ச இந்திரியம்+மனது/புத்தி+ஜன்மாந்தர வாசனை/கர்மவினை+பிராணவாயு

- என்றும் அழியாத பரம்பொருள் விழிக்கும் போதும் உறங்கும்போதும் இவ்வாறு உலகைப் படைத்தும் துடைத்தும் செயல்படும். உலகை அழிப்பதில் இடைவிடாமல் ஈடுபடும்.
- அவர் முதலில் இதைக் கற்பித்தபோது, என்னை கிரஹித்துக் கொள்ளவைத்தார். நான் இதை மரீசிக்கும் மற்றவர்களுக்கும் கற்பித்தேன்.
- பிருகு உங்களுக்குச் சொல்வார். அவர் என்னிடமிருந்து முழுதும் கற்றுக்கொண்டார்.
60.இவ்வாறு மநு சொன்னது ப்ருகுவுக்கு மிகவும் மகிச்சி அளித்தது
61.சுயம்புவான பிரம்மாவிடம் தோன்றிய மேலும் ஆறு மனுக்கள் உண்டு. அவர்கள் மகான்கள்; மஹா வல்லமை படைத்தவர்கள்.
- அவர்கள் அனைவரும் சுயம் பிரகாசம் உடையவர்கள்.
அவர்களுடைய பெயர்கள்:– ஸ்வரோசிஷஸ், உத்தமர், தாமசர், ரைவதர், சக்ஷூஸ், தேஜோமயமான விஸ்வாவசு (சுவாரோசிஷன்,உத்தமன், தாமசன், ரைவதன்,சாக்ஷுசன்,வைவசுவதன்)
63.அவர்கள் ஆறுபேரும் சுவாயம்புவ மநுவும் அவரவர் ஆட்சிக் காலத்தில் மக்களைப் படைத்தும் பராமரித்தும் வருவர்.

காலக் கணக்கு
- 18 இமைகள் = ஒரு காஷ்டை எனப்படும்
30 காஷ்டை= ஒரு கலை
30 கலைகள் = ஒரு முகூர்த்தம்
30 முகூர்த்தம் = ஒரு நாள்
65.மானிடர்க்கும் தேவர்களுக்கும் பகல்-இரவை வகுப்பவன் சூரியன்; இரவு, தூங்குவதற்கும் பகல் நேரம், வேலை செய்வதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
66.முப்பது நாள் என்பது மனிதர்களுக்கு ஒரு மாதம்; அதில் 15 நாட்கள் தேய் பிறையாகவும், 15 நாட்கள் வளர்பிறையாகவும் இருக்கும். இவ்விரு பக்ஷங்களும் க்ருஷ்ண, சுக்ல பக்ஷங்கள் — பிதுர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேய் பிறை என்பது அவர்களுக்குப் பகல்.
67.12 மானிட மாதங்கள் தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையுள்ள உத்தராயணம் தேவர்களின் பகல்; ஆடி முதல் மார்கழி வரையான காலம் அவர்களுக்கு இரவு. ஆக, மானிட வருடங்கள் முப்பது என்பது தேவர்களுக்கு முப்பது நாட்கள். அது போல 12 மாதங்கள் தேவர்களின் ஒரு வருடம்.
68.இனிமேல் பிரம்மாவின் இரவு பகல்கள், யுகங்கள் பற்றிச் சொல்லுவேன்; கேளுங்கள்
69.கிருத யுகம் என்பது = 4000 தேவ வருடங்கள்; அதற்கு முன் அது உருவாகும் இடைவெளிப்பொழுது (யுக சந்தி), அதாவது வைகறைப் பொழுது 400 தேவ வருடங்கள். காலையிலும் மாலையிலும் இப்படி சந்தியா வேளை இருப்பதால் கிருத யுகம் என்பது 4000+400+400=4800 தேவ வருடங்கள்.
70.ஏனைய மூன்று யுகங்களும் குறைந்து கொண்டே வரும்; மேலும் காலை மாலை சந்திப் பொழுது என்பதும் குறையும்; இந்தக் கணக்குப்படி, திரேதா யுகம் 3600, துவாபர யுகம் = 2400, கலியுகம் 1200 தேவ வருடங்கள் என்று அறிக.

எனது கருத்து — மநு தர்ம நூலில் விண்வெளி விஞ்ஞானம்!
1.பிக் பேங் (Big Bang) என்பது போல பிக் க்ரஞ்ச் (Big Crunch) உண்டு என்று இந்துக்கள் கூறுகின்றனர். இதை விஞ்ஞானிகள் இன்னும் முழுதும் ஏற்கவில்லை. விரைவில் ஏற்றுக் கொள்ளுவர்.
- மநு நீதி நூல் போன்ற சட்ட நூலில் காலக் கணக்கீடு, வாய்ப்பாடு ஆகியன இருப்பது வியப்புக்குரியது. அவர் பிக் பேங், பிக் க்ரஞ்ச் பற்றிப் பேசுவது இன்னும் வியத்தற்குரியது
3.நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும். வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் வசிப்பர்.
4,ஐன்ஸ்டைனையும் மிஞ்சும் விஷயங்களை மநு கூறுகிறார். பிற்காலத்தில் புராணங்களும் இதை அப்படியே சொல்லும்.
- இவ்வளவு சொல்லும் மனு, உலகிலுள்ள எல்லாப் பண்பாடுகளும், நமது புரா ண ங்களும் சொல்லும் பிரளயக் கதையைச் (Story of Great floods) சொல்லாததால், மனு ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது. அதாவது பைபிள் (Story of Noah) , மச்சாவதாரம் முதலியன சொல்லும் பிரளயக் கதை (deluge) ரிக் வேதத்திலோ மனுவிலோ இல்லாததால் இவை இரண்டும் காலத்தால் முந்தியவை என்பது தெரிகிறது.
6.யுக சந்தி என்று இடைவெளி கொடுப்பது குறிப்பிடத்தக்கது. உடனே அடுத்த யுகம் துவங்குவதில்லை. அதாவது முந்தைய, பிந்தைய யுகங்களின் குணங்கள் கலந்து காணப்படும் குழப்பமான காலகட்டம். தேர்தல் முடிவால், ஒரு அரசியல் கட்சி பதவி இழந்து ,பின்னர் அடுத்த கட்சி பதவியில் அமர்வதற்குள் காணப்படும் இரண்டும்கெட்ட நிலை போன்றது இது. நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவியல் முறையில் யுக மாற்றத்தை அணுகினார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
to be continued………………………….