DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by London swaminathan
Date: 22 September 2015
Post No: 2179
Time uploaded in London :– 14-06
(Thanks for the pictures)
பிறவிக் குணம், சுபாவம் பற்றிய பொன்மொழிகள்
1.அங்கார: சததௌதேன மலினத்வம் ந முஞ்சதி
கரியை நூறு தடவைக் கழுவினாலும் அதன் கறுப்பு நிறம் போகாது
(ஒப்பிடுக: நாய் வாலை நிமிர்த்த முடியாது)
2.ஆஜன்ம உன்மஜ்ஜது துக்தசிந்தௌ ததாபி காக: கில காக ஏவ
பிறந்த நாள் முதல் பாற்கடலில் மூழ்கினாலும் காகத்தின் கறுப்பு நிறம் போகாது
3.அதீத்ய ஹி குணான் சர்வான் ஸ்வபாவோ மூர்த்னி திஷ்டதி – ஹிதோபதேசம்
எல்லா குணங்களையும் மீறி ஒருவனுடைய சுபாவம் தலைதூக்கி நிற்கும்( அதாவது பிறவிக் குணம் மாறாது)
4.சுதப்தமபி பானீயம் புனர்கச்சதி சீததாம் – பஞ்சதந்திரம்
ஒப்பிடுக: சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
நன்றாகச் சூடேற்றினாலும், நீரின் குணம் குளிர்ச்சிஅடைவதுதான்
பெரியோரின் குணமும் அப்படித்தான்.
குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள்).
5.சுதப்தமபி பானீயம் சமயத்யேவ பாவகம்- பஞ்சதந்திரம்
நல்ல கொதிக்கும் நீரானாலும்
நெருப்பை அணைக்கத்தான் செய்யும்.
(ஒப்பிடுக: தேளைக் காப்பாற்றினாலும் அது கொட்டத்தான் செய்யும்)
6.ஸ்வபாவம் நைவ முஞ்சந்தி சந்த: சம்சர்கதோ அசதாம்
ந த்யஜந்தி ருதம் மஞ்சு காகசம்பர்கத: பிகா: – த்ருஷ்டாந்த சதகம்
தீயோர் சஹவாசம் இருந்தாலும் நல்லோர் கெடுவதில்லை; காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை
ஒப்பிடுக:-புகைக்கினும் நன்மணம் குன்றாது …. சங்கு சுட்டாலும் வெண்மைதரும்
7.ஸ்வபாவோ யாத்ருசோ யஸ்ய ந ஜஹாதி கதாசன – சாணக்ய நீதி
ஒருவர், தன் சுபாவத்தை விடுவதே இல்லை
8.ஸ்வபாவோ ஹி துரதிக்ரம: – ஹிதோபதேசம்
ஒருவரின் சுபாவமானது மீறமுடியாதது.
9.அனுஹூங் குருதே கனத்வனிம் நஹி கோபாயுருதானி கேசரி – சிசுபாலவதம்
இடியோசை கேட்டால் சிங்கம், பதிலுக்குக் கர்ஜிக்கும்; சிறு மிருகங்களின் சப்தத்துக்கு பதில்தராது.
ஒப்பிடுக: யானையைப் பார்த்து குரைத்த நாய் போல
10.ஆகண்ட ஜலமக்னோபி ஸ்வா லிஹத்யேவ ஜிஹ்வயா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)
பால் ஆறாக ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஒப்பிடுக: காவேரி கஞ்சியாய் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்
11.ந ஸ்வபாவோ அத்ர மர்த்யானாம் சக்யதே கர்துமன்யதா – பஞ்சதந்திரம்
பூவுலகிலுள்ளவர்களின் சுபாவத்தை (இயல்பான குணத்தை) மாற்ற இயலாது
12.நஹி கஸ்தூரி காமோத: சபதேன விபாவ்யதே – சமயோசித பத்ய மாலிகா
கஸ்தூரியின் மணத்தை ஒருவர் சபதம் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. அது சுயமாகவே சுகந்த மணம் வீசும். நல்லோரும் சுயம் பிரகாசிகள்
(ஒப்பிடு: பல்பொடி வியாபாரி கூவி விற்பான்; வைர வியாபாரியை மக்கள் நாடிச்செல்வர்)
xxxxxxxxxxxxxxxxxxxxx




You must be logged in to post a comment.