சென்னை மழையில் உலராத மன ஈரம் (Post No. 2454)

chennai rain 9

Date: 3 January 2016

 

Post No. 2454

 

Time uploaded in London :–  6-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து இந்தியா

 

 

ஹிந்து பரம்பரையின் நற்பண்புகள் எந்நாளும் தொடரும்!

 

.நாகராஜன்

 

சென்னை மழையில் உலராத மன ஈரம்

 

 Suruji-Chennai

சமீபத்திய சென்னை மழை ஒன்றை உலகிற்கு உணர்த்தி விட்டது. பெரு வெள்ளத்தால் ஈரமான பூமி கூட ஒரு நாள் உலர்ந்து விடும், ஆனால் ஹிந்து பரம்பரையில் ரத்தத்தில் ஊறி உள்ள அவனது ஈரத்தை யாராலும் அகற்ற முடியாது.

ஈர மனம் என்றுமே ஈர மனம் தான் என்பதை ஹிந்து இந்தியா நிரூபித்து விட்டது.

 

 

உ;பியிலிருந்து பண உதவி, கேரளத்திலிருந்து பல கார்களில் ஏராளமான உதவிப் பொருள்கள், கர்நாடகத்திலிருந்து அலை அலையாக கார்களில் வந்த தன்னார்வத் தொண்டர்கள் துன்பப்பட்டவர் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்குத் தேவையான பொருள்களைத் தருதல் என இப்படி மதம், ஜாதி, அந்தஸ்து, மாநிலம், மொழி என எதையும் பாராது உதவி செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர் அனைவரும்!

 

 

இன்றைய அரசியல்வாதிகளில் மோசமானோர் சிலர் இந்த நிலையிலும் ஒட்டை மனதில் நினைத்து இயற்கைச் சீற்றத்திலும் கூட அரசியல் ஆதாயம் பார்த்த நேரத்தில் மக்கள் தாங்கள் ஒரு பெரும் ராஜ பரம்பரையில் வந்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.

 

 

ஹிந்து மண்ணின் வாசனையை எந்த முகலாயப் படையெடுப்பு ஆக்கிரமிப்பினாலும். எந்த ஆங்கிலேய ஆட்சியினாலும் போக்க முடியவில்லை; முடியாது என்பதை இந்த ஈர நெஞ்சங்கள் நிரூபித்து விட்டன.

chennai rss

இது ஒன்றும் புதிதில்லை.

 

 

வரலாறு நெடுக லட்சக்கணக்கான சம்பவங்கள் ஒரே பாரதம் என்ற உணர்வை மக்கள் தொன்று தொட்டுக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன.அவர்களின் அறப்பண்புகள் இந்தியா முழுவதும் பரவி ஒரே மாதிரியாக இருப்பவை என்பதையும் நிரூபிக்கின்றன.

 

 

அனைத்தையும் தொகுத்தால் பல கலைக்களஞ்சியங்களாகி விடும்.

மாதிரிக்கு ஒரு சில சம்பவங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

chennai rss2

சுனாமியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்

 

சுனாமி சென்னையைத் தாக்கிய சமயம் அது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி நாகைப்பட்டினமே அல்லோலகல்லோலப் பட்டது.தொடுவை என்ற ஊரிலிருந்த ராஜலக்ஷ்மி- ஜயகுமார் தம்பதி தங்கள் அருமைக் குமாரனை சுனாமிக்கு பலி கொடுத்து விட்டனர்.தமிழ்நாடு அரசு இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் தந்தது. ஜயகுமாருக்கும் ஒரு லட்சம் கிடைத்தது.

 

 

ஆனால் 2005 மார்ச் மாதம் 5ஆம் தேதியன்று ஜயகுமாருக்கு ஒர் நற்செய்தி கிடைத்தது.அவரது நண்பர் ஒருவர் தான் அந்த நற்செய்தியை அவரிடம் கூறினார்.

 

 

ராட்சஸ அலையினால் தூக்கிச் செல்லப்பட்ட ஜயகுமாரின் புதல்வர் வேளாங்கண்ணியில் 50 மைல் தூரத்திற்கு அப்பால் உயிருடன் பிழைத்துக் கொண்டார்.

இதைத் தெரிந்து கொண்ட தம்பதியினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

 

 

உடனடியாக அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா? அந்த ஏழை தம்பதியினர் நாகை மாவட்ட கலெக்டர் ஜே.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். தங்கள் மகன் உயிருடன் இருக்கும் செய்தி கிடைத்து விட்டதாகவும் ஆகவே அரசு தந்த ஒரு லட்ச ரூபாயைத் திருப்பித் தர வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

 

அனைவரின் மனமும் கசிந்தது. யாரும் அவர்களிடம் பணத்தைக் கேட்கவில்லை.

 

அந்தப் பணம் இன்னொருவருக்கு உதவட்டும் என்ற நோக்கில் அங்கு உடனே வந்த அவர்களைத் தூண்டியது எது?

அவர்கள் உடலில் ஓடுகின்ற ஹிந்து சக்தி!

khrushchev DDR STAMPS_zpsugatzps9

குருஷேவின் வியப்பு

 

ரஷியாவில் கொடி கட்டிப் பறந்த ரஷிய பிரதம மந்திரி நிகிதா குருஷேவ் 1954இல் டெல்லிக்கு வந்தார். தனது பேண்டுகள் இரண்டை துவைத்து அயர்ன் செய்ய சலவைக்காரரிடம் தந்தார். துணிகளைத் திருப்பித் தர வந்த சலவைக்காரர் அவர் பையில் நானூறு ரூபாய் இருந்ததாகக் கூறி அதைத் தந்தார். “உங்கள் நாட்டின் பாரம்பரியத்தை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்” என்று உணர்ச்சி ததும்பக் கூறினார் குருஷேவ்.

 

 

பொய் சொல்லாத ஹிந்து

 

சுமார் நூற்றிஅறுபது ஆண்டுகளுக்கு முன்னர் துக்கீயர்களைக் கொடுமைப்படுத்துவதற்கு பெயர் பெற்ற ஸ்லீமன் (SLEEMAN), “ “ஒரே ஒரு பொய் சொன்னால் போதும், வீடு, மானம், மரியாதை, அனைத்தும் காப்பாற்றப்படும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களை என் வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு ஹிந்து எந்தக் காலத்திலும் எதை இழப்பதாயிருந்தாலும் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை” என்றான்.

 

chennai4

போர்த்துக்கீசியரின் வியப்பு

 

500 ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கீய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டின் ஒரு ப்குதியைப் பிடித்த போது அவர்கள் பிடித்து வைத்த ஹிந்து போர் வீரர்களை பரோலில் ஆறு மாதம் அனுப்ப பிணைத்தொகை கட்டி விட்டுத் தான் போக வேண்டும் என்று ஆணையைப் பிறப்பித்தனர். ஆனால் அப்படி பிணைத்தொகையைக் கொடுக்க ஆளில்லாத போர்வீரர்கள் பணம் கொடுக்க தங்களுக்கு யாரும் இல்லை என்று கூறித் தாமாகவே போர்த்துக்கீசியரிடம் திரும்ப வந்ததை அவர்கள் வியப்புடன் நோக்கினர்.

ஒரு ஹிந்துவை யாராலும் பொய் சொல்ல வைக்க முடியாது; அதை விட மரணத்தை அவன் ஏற்பான் என்று எழுதி வைத்தனர்.

 

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கிரேக்க வரலாற்றாசிரியன் மெகஸ்தனிஸ் ஒரு ஹிந்து எப்போதுமே, எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டான் என்று எழுதி வைத்தான். அது இன்று வரை தொடர்வதைப் பார்க்கும் போது நமக்கு பெருமிதம் பொங்குவது இயல்பே!

 

 

ஹிந்துவின் அறப்பண்புகள் பொய் சொல்லாமை, திருடாமை, நாணயத்துடன் இருத்தல், ஹிந்து காலம் மாறலாம்; மோசமான அரசியல்வாதிகள் மாறி மாறி வரலாம்.

 

ஆனால் ஒரு நாளும் அவனது அடிப்படை அறப்பண்புகள் மாறாது.

ஆஸேது ஹிமாசல் – சேது முதல் இமயம் வரை ஹிந்து இந்தியா ஒன்று தான்.

 

ஹிந்துவின் தர்மம் ஒன்றே தான்!

 

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது தான் நமது தேசீய தர்மம். இது உலக தர்மமும் கூட.

 

சொல்லவொணாத் துன்பத்தைச் சென்னையில் தந்த இயற்கைச் சீற்றம் நமக்கு ஆறுதலாக விட்டுச் செல்லும் செய்தி நமது பண்டைய அறப்பண்புகள் நம்மை விட்டு நீங்கவில்லை என்பதே!

–Subham-