Post No. 15,232
Date uploaded in London – 1 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 37
Item 222
Akanānūru 17 composed by poet Kayamanār has interesting information about Tamil girls’ games and a few similes.
The poet’s name itself is interesting. We don’t know his given name. It is only a name given by the compilers of Akananuru anthology. It means Tank or water source. Because he has used this Kayam/water source in one of his poems, they named him Mr Tank or Mr Lake.
***
223
We come across the games played by Tamil girls 2000 years ago. They played ball games and jugglery with bean seeds.
Ball game originated in India. They made balls with flowers or cloth. It is like our ball badminton. But they did not use a net; they simply played throw and catch and jugglery.
With the big seeds from the bean plants, they played jugglery. Depending upon the skill of the player they used more seeds; throwing them up and catching them before they fell on the ground and at the same time more seeds are picked up from the ground. This type of jugglery is seen in Covent Garden in London and other town centres around the world.
***
224
The similes used by the poet is also interesting. The flowers from the silk cotton tree (Ilavam in Tamil) falling on the ground in the gusty wind are compared to the flame in the mud lamp. And the bare tree left with a few flowers is compared to a few stars in the morning sky. It is true that we see bright planets like Venus and Jupiter and bright stars like Sirius, Betelgeuse or Canopus when the sun is rising in the horizon.
Other scenes with salt vendors carts, Ya trees with torn barks are not uncommon. But the poet talks about jewels as well. Anklets in girls’ feet, bangles in her friends’ wrists.
***
225.
Last but not the least poet appreciates the courage of the teenage girl saying that she is too intelligent for her age. The reason for this is earlier she complained pain in her limbs when she played ball game and bean seed game. Now she is ready to run away with a youth along the arid, desert like region what Tamils call Paalai land.
சிறு முதுக்குறைவி too intelligent for her age : வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும் throwing ball game; இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் juggling with large bean seeds
***
226
Akanānūru 18, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Akanānūru 18 composed by the most celebrated Sangam poet Kapilar has not much interesting details. The message of the poem is that the lover should come and meet the lady love in daytime instead of dangerous nighttime. If something happens to him she will die and we, her friends, will be in agony. And the hazards in his way are described graphically: flooded wild river in the mountain, floods dragging rut elephants, but courageous wild boar crossing it in spite of crocodiles lying on the rocks. When he comes to the meeting place, we are shown beautiful flowering trees with honeycombs
Indirectly saying ‘get married soon without taking great risk’. Kapilar is very good in portraying nature.
***
227
Akanānūru 19 composed by Porunthil Ilankeeranār has nothing new except a comparison between the owl and makuli drum. Both emit similar sounds. One more point should be noted. The owls don’t hoot without meaning; they speak with meaning like drums, says the poet. The hero speaking to himself about leaving his wife on a business trip; we come across Makuli drum, a musical instrument.
***




228
Speaking Drums
African tribes use drums to convey messages. Different types of beating convey different messages for their tribe at a distance. Here also Tamil commentators add such messages in the commentary for this verse. Tamil commentators hear the drums saying குத்திப்புதை, சுட்டுக்குவி meaning stab and bury; burn and pile up (see Manikkanar commentary in Varthamanan Pathippakam publication)
Three Old Articles written by me from Year 2014
தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் செய்திகள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386; தேதி நவம்பர் 3, 2014.
தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.
1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)
இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)
2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.
3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.
4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்
5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.
6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.
7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.
8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).
9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
.
வள்ளுவர் யார்:–
10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.
இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)
(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)
11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–
முழவு:- குளிர், குடமுழா, முழவம், முழா
முழவு:– பேரிகை, படகம், இடக்கை, மத்தளம், தேசி, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பரை, தமருகம், தண்ணுமை, தவில், தடாரி, அந்தரி, முழவொடு, சந்திர வளையம்,மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், ஆசில், தகுணிச்சம், விரலேறு, பாகம், தொக்க உபாங்கி, துடி, பெரும்பறை,
முழவுக்கான மரங்கள்:- கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, கஞ்சம், குரவம், மண்; முழவுக்கான தோல்: இளம் பசுவின் வயிற்றுத் தோல்.
தமிழ்க் கள்ளர் தாக்குதல்கள்
12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–
காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.
ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:
காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.
இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.
உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.
ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)
எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.
பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.
மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:
‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!
வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.
(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)
ஆடம்பரம் – தோன்றிய வரலாறு
வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.
துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.
போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.
ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்
வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.
நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!
நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!

தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி
Date: 10 AUGUST 2019
Post No. 6756
ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் முரசு அடித்து செய்திகளைப்
பரிமாறிக் கொள்வது எல்லோரும் அறிந்த செய்தி.
தெருவுக்குத் தெரு தமுக்கு (Tom Tom) அடித்து முக்கிய
அறிவிப்புகளை வெளியிடுவது இந்திய நகரங்களில்
வழக்கமாக இருந்தது. இப்போது குறைந்து வருகிறது.
திருவள்ளுவர் யானை மீது இருந்து பறை அடித்து அரசு
ஆணைகளை அறிவித்தவர் என்பதும் ஒரு செய்தி.
காடுகள் வழியாகச் செல்லும் வணிகப் பெருமக்களை
மறவர்கள் தாக்கி வழிப்பறி செய்வதை சங்கத் தமிழ்
நூல்கள் இயம்புகின்றன. அப்படிச் செய்கையில் அவர்கள்
டமாரம் அடித்து அச்சத்தை உருவாக்குவர். இது தமிழ்
நாட்டில் மட்டுமின்றி நாடு முழுதும் இருந்ததை
சம்ஸ்க்ருத நாடகங்களும் காட்டுகின்றன.
ஆனால் டமாரம் “பேசும் அதிசயச் செய்தி அகநானூற்றில்
வருகிறது.
நன்றாக வாத்தியம் வாசிப்போர் வயலினையோ
ஹார்மோனியத்தையோ வாசிக்கும்போது பாடலின்
சொற்களை அப்படியே வாசித்துக் காண்பிப்பர்.
சொற்களையே காதில் கேட்கலாம். இது போல
டமாரத்திலும் தமிழர்கள் செய்தனர்.
உருமி மேளம், பூம் பூம் மாடு கொண்டு வரும் ஆட்கள்
வாசிக்கும் மேளங்களைப் பலரும் பார்த்திருப்போம்;
கேட்டிருப்போம். கொட்டும் கொட்டுக்கு எல்லாம் மாடு
தலை அசைக்கும்படி பழக்கி வைத்திருப்பர். அது அவன்
கேட்கும் கேள்விக்கு எல்லாம் தலை. அசைத்து பதில்
சொல்லும். இது போல வெளிநாட்டில் குதிரைகளைப்
பழக்கி அதை நடனமும் ஆட வைத்தனர்.
(நான் 40 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் வசித்தபோது
வாரந்தோறும் சனிக்கிழமை இரவுகளில் தானப்ப முதலித்
தெருவிலுள்ள சேதுராம் பஜனை மண்டலிக்கு
பெற்றோருடன் செல்வதுண்டு. அங்கே குண்டுராவ்
என்பவர் ஹார்மோனியத்துடன் பஜனைப் பாடல் பாடுவார்.
அவர் ஹார்மோனியத்தில் “விளையாடுவார்! என்றுதான்
சொல்ல வேண்டும். மராத்தி மொழி பாடல்களைப்
பாடிவிட்டு ஓவ்வொரு சொல்லையும் ஹார்மோனியத்தில்
இசைப்பார். மராத்தி மொழியே தெரியத நான் கூட அடுத்த
முறை அவர் வாசிக்கும்போது அந்தச் சொற்களைத்
திரும்பச் சொல்ல முடியும் எதிர்த்தாற்போலுள்ள
ஹோட்டல் வாசலில் ரிக்ஷாக்காரர்கள் சினிமாவின்
இரண்டாம் காட்சி (Second Show) முடிந்துவரும்
வாடிக்கையாளரைப் பிடிக்கக் காத்திருப்பர். அவர்கள் கூட
குண்டு ராவின் இசைக்கு மயங்கி உள்ளே வந்து சுண்டல்
பிரசாதம், அவல் பிரசாதம் வாங்கிச் செல்வர். பஜனை
முடிந்தவுடன் இரவு ஒரு மணி வாக்கில் சிறிது
உரையாடுகையில் ஹார்மோனியத்தில் குண்டுராவ்
மேலும் சில மாஜிக் செய்து காண்பிப்பார். அக
நானூற்றின் வரிகளைப் படித்தவுடன் அது நினைவுக்கு
வருகிறது)
அகநானூற்றில் வரும் செய்தி இதோ:
குத்திப் புதை, சுட்டுக்குவி
பொருந்தில் இளங்கீரனார் என்ற புலவர் பாடிய பாடல்
அகநானூற்றில் (19) வருகிறது;
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே! வந்து நனி
வருந்தினை! – வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம்
–அகநானூறு 19. ர
பொருள்
என் நெஞ்சே !நீ நாம் புறப்படும் நாளன்று
நான் வரமாட்டேன் என்று சொல்லி இல்லத்திலேயே தங்கி
விடவும் இல்லை. இவ்வளவு தூரம் வந்து மிகவும்
வருத்தம் அடைந்தாய்.
உயர்ந்த யா மரங்களில் இருந்துகொண்டு பருந்துகளும்
துன்பம் உண்டாக்கும் ஒலியை எழுப்புகின்றன. அங்கு
உருளும் இழுகு பறையின் ஓசையினைப் போல் பொருள்
தெரிய ஒலிக்கும் கடுமையான குரலைக் கொண்ட
ஆந்தைகள் உள்ள நீண்ட மலைகள் இருக்கின்றன.
நெஞ்சே இவற்றை என்னோடு சேர்ந்து கடக்கவும்
வரமாட்டாய் …….
(அதாவது மனம் என்னும் குரங்கு காதலியின் பக்கம்
திரும்பிப்போய் விடுகிறது|
பொருள் தெரிந்து இசைக்கும் என்ற வரிக்கு-
உரைகாரர்கள் சொல்லும் அர்த்தம்-
அவ்வோசையைக் கேட்பவர்தம் இயல்புக்கு ஏற்பப்
பொருள் தெரியுமாறு ஒலிக்கும். இதன் பொருளாவது: ்
வழிப்பறி செய்பவர் வாழும் இயல்புடைய அவ்வழியில்
பொருளுடன் போகும் வழிப்போக்கர்க்குக்
“குத்திப் புதை, சுட்டுக்குவி”
என்ற பொருள் தோன்ற ஒலித்தல் ; வினைவயின்
செல்பவர்க்குத் தீய நிமித்தம் அல்லது நன்னிமித்தமாக
ஒலித்தல் .
உருள்துடி மகுளி– உருண்ட வடிவுடைய இழுகு என்னும்
பறை (தோற்கருவி)
மகுளி பற்றி பரிபாடல் (12-10), மலைபடுகடாம் (131) ஆகிய
சங்க நூல்களிலும் காணலாம்.
இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு ‘டமாரப்
பேச்சு’ பற்றி அறிவது இயலாது. எனது முந்தைய
கட்டுரைகளையும் காண்க.
—Subham—
Ancient Tamil Encyclopaedia -Part 37; One Thousand Interesting Facts -Part 37, Talking Drums, Akananuru 19, Tamil Games, Jugglery





















