
Written by london swaminathan
Date: 2 February 2016
Post No. 2500
Time uploaded in London :– 9-46 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact

“காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”- என்றும் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” – என்றும் தமிழில் பழமொழிகள் உண்டு. இது போல தெய்வ பக்தியுடையோருக்கு பாறையும் கடவுள் சிலையாகத் தோன்றும்! காதல் பித்து ஏறியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் காதலன் அல்லது காதலி போலத் தோன்றும். பக்தி என்னும் பேய் ஏறியவர்களின் குணங்களை நாரத பக்திசூத்ரமும் பாகவதமும் விளக்கும். இதை அப்பர் தேவாரத்திலும் பாடியிருக்கிறார்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
இது போல பக்திப் பித்து ஏறினால் பாறையெல்லாம் கடவுள் சிலையாகத் தோன்றும்!
நாங்கள் பன்னிருவர் ஒரு பெரிய காரில் (12 seater van) ஏறிக்கொண்டு, ஆஸ்திரேலியாவில் நீலகிரிக்குச் – BLUE MOUNTAIN ப்ளூ மவுன்டைந்—சென்றோம். அங்கு மூன்று பாறைகள் செங்குத்தாக இருக்குமிடத்துக்கு மூன்று சகோதரிகள் – THREE SISTERS த்ரீ சிஸ்டர்ஸ்—என்று போர்டு வைத்துள்ளனர். நாங்கள் பன்னிருவரும் அதற்கு துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என்று புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதற்குள் ஒருவர் எலிபெண்டா குகை த்ரிமூர்த்தியை நினைவுபடுத்தி—ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவா என்று சொல்லக்கூடாது என்று கேட்டார். அதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த எக்கோ பாயிண்டுக்கு ECHO POINT வந்தோம். இந்த எதிரொலி மலையில் நாம் எதைச் சொன்னாலும் எதிரொலி கேட்கும் என்றனர். நான் ராமா, கிருஷ்ணா என்று பெரிதாகக் கூக்கூரல் எழுப்பினேன். பலனில்லை. ஒருவேளை சரியான பருவநிலை இருக்க வேண்டும் போல. ஏனெனில் நாங்கள் நின்று கொண்டிருக்கும்போதே பெரிய மேகம் சூழ்ந்து அந்த இடமெல்லாம் புகைமூட்டம் போட்டது போல ஆகிவிட்டது.
தமிழ்நாட்டில் கொடைக்கனலிலும் எதிரொலி கேட்குமிடம் உள்ளது. பில்லர்ஸ் ராக் PILLARS ROCK என்னுமிடத்தில் திடீர் திடீரென்று இப்படி மேகம் சூழும். இதையெல்லாம் பேசிக்கொண்டே 12 பேரும் நகர்ந்தோம். அங்கு ஒரு பெரிய பெயர்ப் பலகையில் அங்கு பார்க்க வேண்டிய ஏழு இடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி இருந்தனர். எங்கள் 12 பேரில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “இதோ பாருங்கள் ஒரு மலை, பிள்ளையார் வடிவத்தில் இருக்கிறது” என்று காட்டினார். அந்தப் படத்தில் மூன்றாவதும் கணபதி போல இருந்தது (KINGS TABLELAND). எல்லோரும் ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வேகமாகக் காரில் ஏறினோம். மேக மூட்டத்தில் முழு வெளிச்சம் போட்டுக் கொண்டு காரை மேதுவாகச் செலுத்தி ஒரு வழியாக சிட்னி நகருக்கு வந்தோம்.

படத்திலுள்ள பாறைகளைப் பாருங்கள்! உங்களுக்கும் பல கடவுள் உருவங்கள் தோன்றும்!!
You must be logged in to post a comment.