பிரும்ம இலை ரகசியம் (Post No.8663)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8663

Date uploaded in London – –11 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரும்ம இலை ரகசியம் (Post No.8663)

முப்பெரும் தேவியர் மேல் உலகில் உள்ள நந்த வனத்தில் உலாவுவது வழக்கம்.

ஒருநாள் நந்த வனத்தில் ஒரு அழகான சிறிதளவு வாசனை உள்ள

ஓரு செடியின் இலையை பறித்தாள், லட்சுமி !!!தலையில் சூடிக்கொண்டாள்.

அதற்கு பெயர்தான் துளசி !!!!

சற்று தூரம் சென்றதும் ஓரு செடியில் மூன்று மூன்று இதழ்களாக்க்

கொண்ட ஒரு பெரிய செடியைக் கண்டாள் பார்வதி…….

பார்க்க அழகாக இருக்கவும் அதிலிருந்து ஒரு இலையைப. பறித்து தன் தலையில் சூடிக்கொண்டாள் பார்வதி…..

அதற்குப் பெயர் தான் வில்வம் !!!!

சரஸ்வதிக்கும் ஓர் ஆசை ….தானும் ஓர் இலையை தன்தலையில்

சூடிக்கொள்ள ஆசை…..வனம் மு ழுவதும் தேடிப்பார்த்தும்

தன்மனதிற்கு பிடித்த மாதிரி இலை கிடைக்க வில்லை………

நேராக பிரும்மனிடம் சென்றாள்.தனது ஆசையைதெரிவித்தாள்

அவர்ஓருயாகமே செய்துவிட்டார் மனைவி சரஸ்வதி தேவிக்கு!!!

யாகத்திலிருந்து ஓர் இலை தோன்றியது, இது வரைக்கும்

மனித இனிமே கண்டிராத இலை……..அந்த இலையின் மணமோ

நிறமோ அமைப்போ சரஸ்வதிக்கு சிறிதும் பிடிக்கவில்லை……பிரும்மனிடமே திருப்பித்தந்தாள்சரஸ்!!!

யாகத்தின் மூலமாக வந்த இலையை என்ன செய்வது ???

கடைசியாக பூலோகவாசிகள் அதை அனுபவிக்கட்டும் என நினைத்தார்.தூக்கி எறிந்தார் பூமியில் !!!!

அந்த இலையை மனிதர்கள் மட்டும் உபயோகிக்கலாமோ??

என்று எண்ணிய சரஸ்வதி யார் அந்தஇலையை

உபயோகித்தாலும் அவர்களுக்கு கெடுதலே

உண்டாகட்டும் என சபித்தாள் சரஸ்!!!!

பிறகு பிரம்மனின்

வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து உபயோகித்தால்

மட்டுமே கெடுதல் ஏற்பட ட்டும் என சாபத்தின் கடுமையை

சற்றே குறைத்தாள் சரஸ்வதி!!!!

அந்த இலைக்குப் பெயர் தான் பிரும்ம பத்திரம் என்னும்

புகையிலை!!!!

மனிதர்களை சிகரட் ,பான் , பான் பராக் , பீடி…………என்று

பல வகையிலும் ஆட்டிப் படைக்கிறது அந்த பிரும்ம பத்திரம்!!!!

tags- பிரும்ம இலை, பிரும்ம பத்திரம், புகையிலை

–subham—

சுவையான சுருட்டு சம்பவங்கள்: எடிசன், மாக்ஸ்முல்லர், டென்னிசன் (Post No. 2746)

1992-tennyson-present

Translated  by London swaminathan

Date: 22 April 2016

 

Post No. 2746

 

Time uploaded in London :–  9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

610-Max-Mueller-India-Stamp-1974-225x300

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் பற்றி பிரபல கீழ்திசை இயல் அறிஞர் மாக்ஸ்முல்லர், கீழ்கண்ட சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்:

“நான் நண்பர்கள் சிலருடன் டென்னிசன் வீட்டில் தங்கியிருந்தேன். டென்னிசன் எப்போதும் புகைபிடிப்பார். அவரால் புகைபிடிக்காமல் இருக்க முடியாது. ஒருநாள் சுருட்டு பிடிக்கும் பழக்கம் பற்றி காரசார விவாதம் நடந்தது. எல்லோரும் டென்னிசனை கிண்டல் செய்தனர்.

இந்த ஆள் கையில் சுருட்டு இல்லாமல் வாழவே முடியாது என்றனர்.

உடனே ‘யாராவது ஒருவர் எதையாவது நினைத்தால் அதைச் செய்ய முடியும்’ என்றார் புலவர்.

ஐயா, புலவர் டென்னிசன் அவர்களே! அதெல்லாம் உறுதியான ஆளுக்குதான். உம்மைபோல வழவழா கொழகொழா பேர்வழிகளால் அதெல்லாம் முடியவே முடியாது என்று நக்கல் செய்தனர்.

 

டென்னிசனுக்கு ஒரே கோபம். இதோ பார்! செய்து காட்டுகிறேன் என்று ஜன்னல் வழியாக புகையிலை பாக்கெட்டையும் அதை வைத்து ஊதும் குழாயையும் (பைப்) தோட்டத்தில் எறிந்தார். எல்லோரும் திகைத்து நின்றனர். ஒன்றும் பேசவில்லை.

மறுநாள் டென்னிசன் மிகவும் உற்சாகமக வேலைகளைச் செய்தார். இரண்டாம் நாள்,திடீரென் ‘மூட்’ அவுட்டானது; பிறகு வழக்கம்போலக் காணப்பட்டார்.

மூன்றாம் நாள் டென்னிசன் பித்துப் பிடித்தவர் போல இருந்தார். அடக் கடவுளே! டென்னிசனை இப்படி பகடி செய்திருக்க வேண்டாமே என்று எண்ணி நண்பர்கள் வருந்தினர். ஆனால் யாருக்கும் மீண்டும் இது பற்றிப் பேசவே அச்சம்.

 

அன்று காலையில் டென்னிசன் திடீரென்று தோட்டத்துக்குள் நுழைந்தார். தூக்கி எறிந்த புகையிலை பாக்கெட்டையும் பைப்பையும் (சிகார் குழாய்) சேகரித்தார். வழக்கம் போல புகைபிடித்தார்.

ஆனந்தம்; பரமானந்தம்.

எல்லோரும் கப்பு சிப்பென்று அவரவர் வேலையைப் பார்த்தனர். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” – என்று எதையும் செய்ய விரும்பவில்லை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” — என்ற பழமொழி சரியாய் போனது.

 

Xxx

Thomas-Alva-Edison

முட்டைக்கோசு இலை சுருட்டு!

பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில நடந்த சுவையான சுருட்டு சம்பவம்:–

 

தாமஸ் ஆல்வா எடிசன் விலையுயர்ந்த, பிரபல ஹவானா (கியூபா புகையிலை) சுருட்டுகளைப் பிடிப்பது வழக்கம். அவர் அறைக்குள் வரும் நண்பர்கள் அனைவரும் அதைக் கைப்பிடி எடுத்து பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வர். அவருக்கோ சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.

இது பற்றி அவருடைய நண்பர் கேரியுடன் அங்கலாய்த்தார்.

“அட! இது என்ன கஷ்டம்! எல்லாவற்றையும் ஒளித்து வையுங்கள்; அப்பத்தான் உங்கள் நண்பர்களுக்குப் புத்தி வரும்” என்றார் கேரி.

“அதுதானே முடியவில்லை. இதெல்லாம் எங்கே ஞாபகத்துக்கு வருகிறது? இன்னொரு சுவையான விஷயத்தைச் சொல்லுகிறேன் கேள்” என்று தொடர்ந்தார் எடிசன்

“என் செயலாளர் ஜான்சனை உனக்குத் தெரியுமில்லையா?அவர் அருமையான ஒரு தந்திரம் செய்தார். அவருக்கு சுருட்டு கம்பெனி நண்பர் ஒருவர் இருந்தார். அவரிடம் சொல்லி, என் நண்பர்களுக்குப் பாடம் கற்பிக்க, ஒரு விநோத சுருட்டு செய்யச் சொன்னார். நானும் இது பிரமாதமான ஐடியா என்று புகழ்ந்தேன். அதாவது, முட்டைக்கோசு இலையைக் காய வைத்து அதை பழுப்பு/ பிரவுன் காகிதத்தில் சுருட்டு போலச் செய்துவைப்பது. (அந்தக் கண்றாவியைச் சுவைத்துவிட்டால் மீண்டும் தன் நண்பர்கள் சுருட்டு பக்கமே வரமாட்டார்கள் என்று எடிசன் நம்பினார்.)

 

கொஞ்ச காலம் ஆயிற்று; வழக்கம்போல விலையுயர்ந்த சுருட்டுகள் காணாமற்போய்க் கொண்டேயிருந்தன. திடீரென்று முட்டைக்கோசு இலை சுருட்டு ஞாபகத்துக்கு வந்தது. உடனே அந்த நண்பரைத் தொடர்பு கொண்டு, “என்ன ஆயிற்று நம் திட்டம். எப்போது புதுவகை சிகரெட்டுகளை அனுப்பப் போகிறீர்கள்?” என்றேன்.

நாம் ரொம்ப நாளைக்கு முன்னரே அனுப்பிவிட்டேனே! என்றார் அவர்.

உடனே நான் என் மானேஜரைக் கூப்பிட்டு எங்கே அந்த சுருட்டுகள்? என்றேன்.

 

Thomas-Alva-Edison-

என் மானேஎஜர் சொன்னார்: ஒரு பார்சல் வந்தது. நீங்கள் கலிபோர்னியா செல்லுகையில் அதை உங்கள் கைப்பைக்குள் வைத்துவிட்டேனே என்றார்.

கேரி, என்ன நடந்தது தெரியுமா? அந்த சனியன் பிடித்த முட்டைக்கோசு சுருட்டுகள் முழுதையும் நானே குடித்துத் தீர்த்திருக்கிறேன்!!

(நண்பர்களை முட்டாளாக்க நினைத்த தாமஸ் ஆல்வா எடிசன் தானே முட்டாளானார்!)

–சுபம்–