வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

(English version of this article is published separately:- swaminathan)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும்—இவள்

என்று பிறந்தவள் என்று உணராத

இயல்பினளாம் எங்கள் தாய் —-(பாரதத் தாய் பற்றி பாரதி பாடியது)

 

இந்தியாவில் மனித இனம் தோன்றியதாக நமது புராண இதிஹாசங்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. இதை இது நாள் வரை மறுத்துவந்த வெளி நாட்டினர் இப்போது அவர்களின் தவற்றை உணரத் துவங்கிவிட்டனர்.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று தமிழர்கள் சொன்னது உண்மையாகி வருகிறது.

“நியூ சைன்டிஸ்ட்” என்ற பிரபல வாரப் பத்திரிக்கை 2013ல் வரப்போகும் 10 வியத்தகு திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. நவம்பர் மாதம் வரப்போகும் அதிகப் பிரகாச வால் நட்சத்திரம் அதில் ஒன்று. அது பற்றி விவரமாக தனியே எழுதிவிட்டேன். அதைவிட முக்கியமான செய்தி மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா அல்ல. ஆசிய நாடாக இருக்கவேண்டும் என்று ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதுவும் இந்தியாவுக்குப் பக்கத்தில்!

மனித குலம் ஆப்பிரிக்காவில், குரங்கிலிருந்து படிப் படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் ஆனதாகவும் 60,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா, ஆஸ்திரேலியா, முதலிய இடங்களுக்குச் சென்றதாகவும் இதுவரை கூறிவந்தனர். இப்போது அது தவறு, ஆசியாவில்தான் அவன் தோன்றினான் என்றும் இதற்கான சான்றுகள் பர்மா, சீனா, சைபீரியாவில் கிடைத்துள்ளன என்றும் “நியூ சைன்டிஸ்ட்” கூறுகிறது.

பர்மாவில் (மியன்மார்) 37 மில்லியன் ஆண்டு பழமையான மனித படிம அச்சுகள் (fஆஸ்ஸில்) கிடைத்துள்ளன. ஏற்கனவே போன வருஷம் சீனாவில் 15,000 ஆண்டுப் பழமையான சிவப்பு மான் குகை மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மனித இனம் வேறு எங்கும் காணாமல் மறைந்தது மர்மமாக இருக்கிறது.

3.2 million year old skeleton of Lucy (first woman) in Ethiopia

இவ்வாறு விட்டுப்போன தொடர்ச்சி (மிஸ்ஸிங் லிங்க்) இந்தோநேஷியாவில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். 2010ஆம் ஆண்டில் முதல் தடவையாக சைபீரியா ( ரஷ்யா ) குகையில் மனிதனின் மூதாதையரின் 50,000 ஆண்டுப் பழமையான எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளில் இருந்து டி என் ஏ எடுத்துப் பார்த்ததில் அதே டி என் ஏ தற்கால இந்தோநேசியர் ரத்தத்திலும் இருக்கிறது என்று தெரிந்தது. இவர்களை ஆராய்ச்சியாளர்கள் டெனிசோவன்ஸ் என்று அழைப்பர். இப்போதுள்ள பெரிய புதிர் சைபீரியா முதல் இந்தொநேசியா வரை மிகப்பெரிய பகுதியில் டெனிசோவன்ஸ் எப்படிப் பரவினர் என்பதாகும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பர்மாவில் 3.7 கோடி ஆண்டுக்கு முந்தைய மனித எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆப்பிரிக்க மனிதத் தோற்றக் கொள்கை பொடித்து விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

ஆசியாவில் அதிக மக்கட்தொகை ஏற்பட்டு பல தடயங்கள் அழிக்கப்பட்டதாலும் முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படாததாலும் உண்மைகள் மறைக்கப்பட்டிருந்தன. அடுத்த திடுக்கிடும் செய்தி இந்தியாவில்தான் மனித இனம் தோன்றியது என்று வெளி நாட்டினரே அறிவிக்கும் செய்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:

1.முதல் திராவிட ராணி: கி.மு 1320,

2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை,

3.HOW OLD IS INDIAN CIVILIZATION?

4.Double Headed Eagle: The Sumerian Indian Connection,

5.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu,

6.Naming a Country after a Man,

7.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvahu Dynasty,

8.Pandya King Who Ruled Vietnam

Contact swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com