Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ரிக் வேதத்தில் உள்ள பாம்பு கடி மந்திரம் மிகவும் பிரபலமானது . இது முதல் மண்டலத்தின் கடைசி மந்திரம் ஆகும் (1-191). இது அகஸ்தியர் பெயரில் உள்ள மந்திரம். அதாவது அவர் ‘கேட்ட மந்திரம்’. வேதங்களுக்கு ‘கேள்வி’ என்று பெயர். அதாவது மானசீகமாகக் கேட்கப்பட்டவை. இதை சம்ஸ்க்ருதத்தில் ‘ச்ருதி’ என்பர்.
துதியிலுள்ள 16 மந்திரங்களையும் இறங்கு வரிசையில் விளக்கியுள்ளேன்.
அகஸ்தியர் கேட்ட இந்த பாம்பு, தேள் கடி மந்திரத்தில் பல சுவையான செய்திகள் உள்ளன. இதிலுள்ள வரிகளைப் பார்க்கையில் இது கொரோனா (Anti Corona Virus) முதலிய வைரஸ் நோய்களையும் தீர்க்கும் என்றே தோன்றுகிறது. இந்த 191ஆவது துதியில் மொத்தம் 16 மந்திரங்கள் இருக்கின்றன.
பள்ளி கொண்டான் தமிழ்ப் பாடல்களுக்குப் பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்புபவன். சிவபிரானின் சிலையோ தங்கமாகும் அதாவது மேருமலை தங்கம் போல் ஒளிர்வதால் அதைப் புலவர் தங்கம் என்கிறார். திரிபுர சங்கார காலத்தில் இறைவனுக்கு மேருமலை வில்லாக அமைந்தது. ஆகவே அது ’செங்கை வரிச்சிலைத் தங்கம்’ எனப்படுகிறது. அந்த வில்லைக் காக்க நினைத்த சிவபிரான் அதை கங்கைக்கு வடபுறத்தில் ஒளித்து வைதததோடு சூரிய சந்திரரை தினமும் சுற்றிச் சுற்றி வந்து அதைக் காவல் காக்குமாறு பணித்தார்.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
கர்ப்பூரமும் வெள்ளை நிறம்; கடலுப்பும் வெள்ளை நிறம்.
இயற்கையில் கிடைக்கும்போது இரண்டும் ஒரே தோற்றம்.
ஆயினும் கர்ப்பூரமும் கடலுப்பும் ஒன்றாகுமா?
நான் மதுரையில் இருந்தபோது ஒரு பெரிய மில்லின் (நெசவாலை) ஒரு பெரிய அதிகாரியை எனது நண்பர் ஒருவர் கிண்டல் செய்வார். “அவன் யார் தெரியுமா? என் கூடப் படித்த காலத்தில் நசுங்கிய பித்தளைப் பாத்திரத்தில் தினமும் தயிர் சோறு கொண்டு வருவான்; பரம ஏழை; இன்று பார்! அவன் காரில் போகிறான்; நான் இங்கே உன்னுடன் உடகார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருகிறேன்” என்பார்.
அவரே இன்னொரு விஷயமும் சொல்லுவார்– ” பார் என் பாட்டியும் விக்டோரியா மஹாராணியாரும் ஒரே நேரத்தில் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்; இதோ பார்! ஜாதகம்! என்று காட்டுவார். பாராண்ட விக்டோரியா மஹாராணி எங்கே? பார்வை இழந்த மதுரைக் கிழவி எங்கே?
ஆக, நம்மில் பலரும் அறியாமையின் காரணமாகவோ, பொறாமையின் காரணமாகவோ உயர்ந்த பதவியில், உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர்களுடைய முயற்சி, உழைப்பு முதலியவற்றை மறைத்துவிட்டு நம்மை அவர்களுக்குச் சரி சமமாக காட்ட முயல்வோம். இது தவறு என்பதை விளக்க சில அழகான தமிழ்ப் பாடல்கள் உள.
கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங்
கர்ப்புர மாமோ கடலுப்புப் — பொற்பூரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியரா வாரோ புகல்
–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)
பொருள்:
கடல் நீரில் உண்டாகும் உப்பு, கர்ப்பூரத்தைப் போலவே இருந்தாலும், அந்த உப்பு, கர்ப்பூரம் ஆகி விடுமா?
ஒருக்காலும் ஆகாது, அது போல,
தீச்செயல் புரிவோர், தோற்றத்தில், அழகு மிக்க நல்வினையாளர் போலத் தோன்றினாலும், அவர்கள் புண்ணியர் ஆகிவிடுவரோ? நீயே சொல்.
கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி– வாக்குண்டாம்
முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.