2000 ஆண்டுக்கு முன் பாடிய ரோமானிய நையாண்டிப் புலவன் ஜுவெனால் (Post.9970)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9970

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் தலைநகரான ரோம் ROME நகரிலிருந்து பல கொடுங்கோல் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அதற்கு முன்னர் நல்லோரும் ஆண்டனர். ஆனால் கண்ணகி போல வெகுண்டெழுந்து பகிரங்கமாக மன்னர்களைக் குற்றம் சாட்டியோரும் உண்டு. பலர் கவிதைகளையும், சொற் பொழிவுகளையும், நாடகங்களையும் அரசுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தினர் இரண்டு கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்துப் பாடி , அவர்களின் கோபத்துக்கு உள்ளான ஜுவெனால் Juvenal என்ற கவிஞரின் வரலாற்றைக் காண்போம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் செல்வாக்கு பெற்று விளங்கியது ரோமானிய சாம்ராஜ்யம் (ROMAN EMPIRE). அதற்கு முந்தைய 500 ஆண்டுகளில் கிரேக்க சாம்ராஜ்யம் எப்படி கிரேக்க மொழி இலக்கியம் மூலம் ஐரோப்பிய சிந்தனையை வழிநடத்தியதோ அது போல அடுத்த 500 ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி இலக்கியம் வாயிலாக ஐரோப்பாவை செம்மைப்படுத்தியது லத்தீன் மொழி படைப்புகள். அந்த வரிசையில் சமுதாயத்தின் குற்றம் குறைகளை அச்சமின்றி உரைத்தவர் Juvenal  ஜூவெனால் ; அதையும் அழகாக கேலி, பகடி, நக்கல், கிண்டல் , நையாண்டி மூலம் , நம்ம ஊர் சோ CHO ராமசாமி போல நையாண்டி செய்து பாடல்களாகப் பாடினார்.

புலவருடைய முழுப்பெயர் டெசிமஸ் ஜூனியஸ் ஜூவெனாலிஸ்DECIMUS JUNIUS JUVENALIS . அக்காலப் புலவர்களைப் போல அவரும் நல்ல பணக்கார குடும்பத்தில்  பிறந்தார் .அதனால் நல்ல கல்வி வசதிகள் கிடைத்தன. தென் இத்தாலிய நகரான அக்வினத்தில் பிறந்தார் பின்னர் ரோமாபுரிக்குச் சென்று ‘பேசும் கலை’ பற்றிச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஆனார்.ரோமானிய ராணுவத்தில் கொஞ்ச காலம் பணியாற்றியதாகவும் தெரிகிறது .அவருடைய இளமைக் காலத்தில் ரோமானிய சாம்ராஜ்யத்தை நீரோ NERO மன்னனும் டொமிடியன் DOMITIAN மன்னனும் ஆண்டனர்.

இருவரும் நல்லாட்சி புரியவில்லை. மக்கள் மீது கடுமையான சட்ட திட்டங்களைப் போட்டனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சி மக்களுக்குச் சொல்லொணாத் துயர் கொடுத்தது. டொமீடியன் ஆட்சிக் காலத்தில் புலவர் ஜுவெனலுக்கும் ஏதோ ஒரு குற்றத்துக்காக தண்டனை கிடைத்தது ஒருவேளை அவர் சொற்பொழிவு ஆற்றுகையில் மன்னரைக் கடிந்து பேசியிருக்கலாம். ஊழல் மலிந்த ஆட்சியும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் புலவரின் சீற்றத்தைத் தூண்டிவிட்டன. எடுத்தார் பேனாவை; தொடுத்தார் கவிகளை. பழைய ரோமானிய பண்பாடு மறைந்து போய்விட்டது. பணக்கார ரோமானியர்கள் ஆடம்பர வாழ்க்கையில்தான் அக்கறை கொண்டுள்ளனர்; மக்களின் நலனில் அல்ல என்று சாடினார் ; கவி பாடினார்.

ஆயினும் மன்னர் டொமீடியன் இறக்கும்வரை அவர் தனது கவிதைகளை அச்சிடவில்லை. கி.பி 110 வாக்கில் ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியாயின.அப்போது புலவருக்கு வயது 55.

அடுத்த 20 ஆண்டுகளில் ஜுவெனால் 16 அங்கதப் பாடல்களை இயற்றினார். பணக்கார ரோமானியர்கள், சொகுசு வாழ்க்கை நடத்திய உயர்குலப் பெண்கள், ரோமானிய ராணுவம் என்ற பல விஷயங்களை சாடினார் . அவருடைய பெரும்பாலான தாக்குதல் டொமீடியன் மன்னர் மற்றும் அவருடைய ஆதரவாளர் மேல்தான் பாய்ந்தது .

பிறந்த  ஆண்டு –  கிபி.65

இறந்த ஆண்டு – கி.பி.140

வாழ்ந்த ஆண்டுகள் 75

எழுதிய கவிதைகள் ( 5 நையாண்டிக் கவிதைத் தொகுப்புகள் )

CE 110 – BOOK I (SATIRES 1-5)

116- BOOK II (SATIRE 6)

120- BOOK III (SATIRES 7-9)

125 – BOOK IV (SATIRES 10-12)

127 – BOOK V (SATIRES 13-16)

-SUBHAM-

  tags-  ரோமானிய, நையாண்டி, புலவன், ஜுவெனால், Juvenal

காதல் கவிதை எழுதியதால் நாடு கடத்தப்பட்ட ரோமானிய புலவர் ஓவிட் (Post No.9879)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9879

Date uploaded in London –21 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரோமானிய காதல் பாடல் கவிஞர் ஓவிட்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இத்தாலி நாட்டில் காதல் பாட்டுக்களை நகைச் சுவை ததும்ப எழுதிய புலவர் ஓவிட் (OVID) , லத்தின் மொழி இலக்கிய கர்த்தாக்களில் வர்ஜில் , ஹோரஸ் போன்றோருடன் வைத்து எண்ணப்படுபவர்.

ரோமானிய புராணத்தையும் இவர் சுவைபடப் பாடியுள்ளார். மத்திய இத்தாலியில் சல்மோனா என்னும் ஊரில் பணக்கார நிலச் சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை, ‘மகனே நீ சிறந்த வழக்கறிஞர் ஆக வேண்டும்’ என்று சொல்லி ரோம் நகருக்குக் கல்வி கற்க அனுப்பிவைத்தார். ஓவிட்டுக்கு வழக்காடுதலைவிட சொல்லாடல், கவியாடுதல் மிகவும் பிடித்தது. ஆகையால் வழக்கறிஞர் படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு எழுத்துச் சித்தராக மாறினார். நல்ல சுக போக வாழ்வு. முப்பது வயதுக்குள் ரோம் நகரம் முழுதும் அறிந்த பிரமுகர் ஆனார்.

ஓவிட் , அகஸ்டஸ் சக்ரவர்த்தி காலத்தில் வாழ்ந்தார். அவர்தான் ரோமானிய சாம்ராஜ்யத்தின் முதல் சக்ரவர்த்தி. அதற்கு முன்னர் பல நுற்றண்டுகளாக  இருந்த ரோமானிய ஆட்சி  ஊழல் புயலில் சிக்கி, உ ள் நாட்டுப் போரில்  இடிந்து விழுந்தது .புதிய சக்ரவர்த்தி புராதன ரோம சாம்ராஜ்ய பண்புகளை மீண்டும் எழுப்ப அரும்பாடு பட்டார் . பழைய பண்புகள் மலர வேண்டும் என்றார் .

இந்த சூழ்நிலையில் ஓவிட் காதல் பற்றி ஒரு கிண்டல், நக்கல் கவிதை (THE ART OF LOVE ) எழுதினார். அது அகஸ்டஸை ஆத்திரப்படுத்தியது. ஒரு ஆணையோ பெண்ணையோ மயக்கி காதல் வலையில் சிக்க வைப்பது பற்றி அவர் பகடியும் கேலியும் மிகுந்த கவிதை ஒன்றை யாத்தார். அவருடடைய யாப்பு, அவருக்கு ஆப்பு வைத்தது . ஆபாசக் கவிதை எழுதிய குற்றத்துக்காக உம்மை நாடுகடத்துகிறேன் என்று சொல்லி, சக்ரவர்த்தி அகஸ்டஸ், நமது கவிஞர் ஓவிட்டை கருங்கடல்  கரையிலுள்ள ஒரு  தன்னந்தனிக் காட்டு ஊருக்கு அனுப்பினார்.

ரோம் நகரை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மெட்டமார்பசிஸ் METAMORPHOSES  என்னும் நூலை எழுதி முடித்தார். ரோமானிய கிரேக்க புராணக் கதைகளில்  வரும் தேவதைகளைப் பற்றிய நூல் இது. இதன் பொருள் – உரு மாற்றம்.

கருங்கடலோர  ஊரில் தனிமை வாழ்வு வாழ்ந்தபோதும் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. தன்னை மீண்டும் ரோம் நகருக்குள் அனுமதிக்கும்படி கெஞ்சிக் கெஞ்சி கவிதைகளை யாத்தார் . அனால் அகஸ்டஸோ , அவருக்குப் பின்னர் வந்த டைபீரியஸ் என்ற மன்னரோ மனம் மாறவேயில்லை. ஓவிட் , கடலோர ஊரிலேயே உயர்நீத்தார் .

பிறந்த தேதி – மார்ச் 20, கி.மு.43

இறந்த ஆண்டு – கி.பி.17

வாழ்ந்த ஆண்டுகள் – 60

எழுதிய நூல்கள் –

Between 16 BCE AND 2 CE

AMORES

HEROIDES

THE ART OF LOVE

THE CURES OF LOVE

BETWEEN 2 CE AND 17 CE

FASTI

METAMORPHOSES

TRISTIA

–SUBHAM—

TAGS- ரோமானிய, காதல் பாடல், கவிஞர் ,ஓவிட், OVID

ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ் (9759)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9759

Date uploaded in London – –21 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ் 

மேலை உலகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங் கவிஞர்களில் (Latin Language Poets) சிறப்பிடம் பெறுபவர் ஹோரஸ் HORACE . இத்தாலி நாட்டின் தென் பகுதியில் உள்ள வெனுசியாவில் (VENUSIA)  அவர் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு அடிமை (Slave). பொருள் கொடுத்து அடிமைத் தளை யிலிருந்து விடுபட்டார். ‘தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச்  செயல்’ என்பதைக் கருத்திற்கொண்டு மகனுடைய கல்விக்காக ரோம் நகருக்குச் சென்றார். அங்கே ஹோரஸ் கல்வி கற்ற பின்னர் அந்தக் காலத்தில் புகழ் மிகு கிரேக்க அகாடமியில் கற்பதற்காக ஏதென்ஸ் ATHENS நகரத்துப் போனார்.

பிறந்த தேதி – டிசம்பர் 8, கி.மு.65

இறந்த தேதி- நவம்பர் 27, கி.மு 8

வாழ்ந்த ஆண்டுகள் – 56

படைப்புகள் – LATIN கவிதைத் தொகுப்புகள்

 கி.மு ஆண்டுகள்

35- சடைர்ஸ் – முதல் புஸ்தகம் SATIRES BOOK I

30 – சடைர்ஸ் – இரண்டாம்  புஸ்தகம் SATIRES BOOK II

30- எபோட்ஸ் EPODES

23 – ஓட்ஸ் (1,2,3 தொகுப்புகள்) ODES- BOOK I, II, III

20 – எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – முதல் புஸ்தகம் EPISTLES BOOK I

14- எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – இரண்டாம்  புஸ்தகம் EPISTLES BOOK II

14- ஓட்ஸ் (நாலாவது தொகுப்பு) ODES BOOK IV

8- ஆர்ட்ஸ் பொயட்டிகா / கவிதைக் கலை ARTS POETICA / ART OF POETRY

கி.மு 44ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை நடந்த நாளில் ஹோரஸ் , அகாடமியில் படித்துக் கொண்டு இருந்தார். ரோமானிய சாம்ராஜ்யம் அதிபயங்கர குழப்பத்தில் வீழ்ந்தது. ஸீஸர் படுகொலையில் ஈடுபட்டவர் ப்ரூட்டஸ் (Brutus) . அவர்  அமைத்த படையில் ஹோரஸ் சேர்ந்தார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பரூட்டஸை அகஸ்டஸ் சீசர் மற்றும் மார்க் ஆன்டனி தோற்கடித்தனர்.

ஹோரசுக்கு பெருத்த ஏமாற்றம்; சொல்லொணா வருத்தம். அவரது தந்தையும் இறந்த நிலையில் புதிய ஆட்சியாளர்கள் ஹோரசின் சொத்துக்களை அபகரித்தனர்.. ஒரு சின்ன வேலையில் சேர்ந்த ஹோரஸ் பணம் வேண்டும் என்பதற்காக, கிடைத்த நேரத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவருடைய கவிதைகளின் அழகைக் கண்டு வியந்த அக்காலத்தின் மிகப்பெரிய கவிஞர் வர்ஜில் (Virgil) ,  ஹோரஸை மெசினஸ்  MAECENAS என்ற பணக்கார வள்ளலிடம் அறிமுகப்படுத்தினார் அவர் கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரித்தது போல ஹோரஸை ஆதரித்தார்.

முப்பதே வயதில் ஹோரஸ் , சடைர்ஸ் SATIRES என்ற அங்கதச் செய்யுளை இயற்றினார். ஐந்தே ஆண்டுகளில் அத்தொகுப்பின்  இரண்டாபவது தொ குதியை வெளியிட்டார் . அத்தோடு எபோட்ஸ்(Epodes) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது ;வள்ளல் மெசினஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இத்தாலியிலுள்ள அவரது பண்ணை ஒன்றை  ஹோரசுக்கு அளித்தார். இது ரோம் நகரிலிருந்து  தொலைவில் இருந்ததால் ஹோரசசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று வள்ளல்  நினைத்தார். அ ந்த அமைதியான சூழ்நிலையில் ஹோரசும் அருமையான இசைக் கவிதைகளை (ஓட்ஸ்) இயற்றினார் ODES / ஓட்ஸ் என்னும் பாணியில் 88 கவிதைகளின் தொகுப்பு அது

ODES/ ஓட்ஸ் என்பன ஏதேனும் ஒரு பொருளையோ பிராணி, பறவை ஆகியவற்றையோ நோக்கிப் பாடும் “கூவி அழைக்கும் மகிழ்ச்சிப் பாட்டு” ஆகும்.

வர்ஜில் இறந்த பின்னர் அவருக்கு அடுத்த புகழ் பெற்ற லத்தின் மொழிப் (Latin Poet) புலவர் இவர்தான்.

–subham–

tags- ரோமானிய, கவிஞர் , ஹோரஸ், Horace