அனாதையாக விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக் காக்கும்! (9573)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9573

Date uploaded in London – –  –6 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காட்டிலே அனாதையாக கை விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக் காக்கும்!

ச.நாகராஜன்

ந ஹி வித்யாசமோ பந்துர்ந ச வ்யாதிசமோ ரிபு: |

ந சாபத்யசம: ஸ்னேஹோ ந ச தைவாத் ப்ரம் பலம் ||

கல்வி போல உதவுகின்ற சகோதரன் இல்லை, வியாதி போல ஒரு எதிரி இல்லை, தனது குழந்தைக்காக ஒருவன் உணர்வது போன்ற அன்பு இல்லை, விதி போல சக்தி வாய்ந்தது வேறொன்றும் இல்லை.

There is no helping brother like learning, no enemy like a disease, no affection like the one a person feels for his child, and there is no greater power than fate.

– Translation by Kalyana- Kalpataru, May 2019

*

அரக்ஷிதம் திஷ்டதி தைவரக்ஷிதம் சுரக்ஷிதம் தைவஹஹம் வினஷ்யதி |

ஜீவத்யநாதோ விபினே விஸர்ஜித: க்ருதப்ரயத்னோபி க்ருஹே வினஷ்யதி ||

 விதியினால் காக்கப்பட்டவன், காக்கப்படாதவன் போல இருந்தாலும் கூட காப்பாற்றப்படுகிறான். ஆனால் நன்கு காக்கப்பட்டவன் போல இருப்பவன் விதி வசமானால் அவன் இறக்கிறான். அனாதையாகக் காட்டில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை உயிருடன் இருக்கிறது, ஆனால் நன்கு காக்கப்பட்ட ஒருவன் வீட்டிலேயே இறக்கிறான்.

Though seemingly unprotected, one survives well if protected by fate, while an apparently well-protected person will die if stuck down by fate. An orphan abandoned in the woods remains alive, whereas one well cared for, can die at home.

                             – Translation by Kalyana- Kalpataru, June 2019

         *

அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் தீர்தக்ஷேத்ரே விநஷ்யதி |

தீர்தக்ஷேத்ரே க்ருதம் பாபம் வஜ்ரலேபோ பவிஷ்யதி ||

மற்ற இடங்களில் செய்யப்படும் பாவம் தீர்த்த க்ஷேத்திரத்தில் போய்விடும். தீர்த்த க்ஷேத்திரத்தில் செய்யப்படும் பாவம் வஜ்ரம் போல பாவம் செய்தவர் மீது ஒட்டிக் கொள்ளும்.

Sin perpetrated in any other place is destroyed in a holy place of pilgrimage; but if it is  committed in the holy place itself; it sticks to us like an adamant-plaster.

–      Translation by Kalyana- Kalpataru, July 2019

            *

துர்பலஸ்ய பலம் ராஜா பாலானாம் ரோதனம் பலம் |

பலம் மூர்கஸ்ய மௌனித்வம் சௌராணாமந்ருதம் பலம் ||

பலஹீனர்களுக்கு ராஜாவே பலம். அழுவதே குழந்தைகளுக்குப் பலம். மௌனமாக இருப்பதே முட்டாளுக்கு பலம். திருடுவதே திருடர்களுக்குப் பலம்.

The king is the strength of the weak, crying aloud is the strength of children, to remain mum is the strength of a fool and of thieves falsehood is the strength.

–      Translation by Kalyana- Kalpataru, January 2020

*

ப்ரஸன்னம் ஷாரதம் வாரி ப்ரஸன்ன: ப்ரார்திதோ ஹரி |

ப்ரஸன்னாராதிகா வித்யா ப்ரேம்ணா விஸ்வப்ரஸன்னதா ||

இலையுதிர்காலத்தில் நீரானது பளிங்கு போலச் சுத்தமாக இருக்கிறது; பிரார்த்தனை புரியும் போது கடவுள் அனுகூலமாக இருக்கிறார். நன்கு மதிக்கப்பட்டு நேசிக்கும் போது கல்வி நம்மை அலங்கரிக்கிறது. அன்பு இருந்தாலோ உலகமே நமக்கு அநுகூலமாக இருக்கிறது.

Clear and pellucid is water in the autumn, God becomes propitious when solicited through prayer, learning leans towards us when adored, and if we have love, all the world becomes favourable to us.

–      Translation by Kalyana- Kalpataru, March 2020

              ***

tags-  அனாதை, விதி,  குழந்தை

என்னே விதியின் கொடுமை! (Post No.9152)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9152

Date uploaded in London – –17 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்னே விதியின் கொடுமை!

ச.நாகராஜன்

இதோ சில சுபாஷிதங்கள்; அப்படியே நடைமுறை உண்மைகளை விளக்கும் அற்புதங்களாக அமைகின்றன!

என்னே விதியின் கொடுமை!

ய: சுந்தரஸ்தத்வினிதா குரூபா யா சுந்தரி ஸா பதிரூபஹீனா |

யத்ரோபயம் யத்ர தரித்ரதா ச விதேர்விசித்ரானி விசேஷ்டிதானி ||

எவன் ஒருவன் அழகாக இருக்கிறானோ அவனுக்கு அவலக்ஷணமான மனைவி வாய்க்கிறாள்; எவள் ஒருத்தி அழகியாக இருக்கிறாளோ அவளுக்கு அவலக்ஷணமான புருஷன் வாய்க்கிறான். இருவருமே சரிசமமாக இருந்தால் அவர்கள் ஏழைகளாகக் காணப்படுகிறார்கள்! விதியின் விளையாட்டு எப்படி இருக்கிறது, பாருங்கள்!

He who is beautiful has a wife with an ugly form; She who has a beautiful form has an ugly husband; where both qualities are equal they are seen to be poor; see how different are the designs of fate.

                                                                                  (Translation by Dr N.P.Unni)

*

ஏழை சொல் அம்பலம் ஏறாது!

ஹேதுப்ரமாணயுக்தம் வாக்யம் ந ச்ரூயதே தரித்ரஸ்ய |

அப்யதிபருஷமஸத்யம் பூஜ்யம் வாக்யம் சம்ருத்தஸ்ய ||

அதிகாரபூர்வமானதாகவும் முறையானதாகவும் இருந்தாலும் கூட ஒரு ஏழையின் சொல்லை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் முறையற்ற, உண்மையல்லாத வாக்கியங்களை ஒரு பணக்காரன் கூறினால் அது மிகுந்த மதிப்புடன் வரவேற்கப்படுகிறது!

One does not lend one’s ear to the words of a poor man though they are properly authoritative, whereas coarse, untruthful words of the rich are considered with great merit.

                                                                        (Translation by Dr N.P.Unni)

*

கொடுத்தவனே கோமான்!

விதரதி யாவத்தாதா தாவத்ஸகலோபி கலபாஷீ |

விரதே பயஸி தனேப்ய: ஷாம்யந்தி சிகண்டினாம் த்வன்ய: ||

சலுகைகளை ஒருவன் கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில் தான் அவன் மதிப்புமிக்க மொழிகளால் புகழப்படுகிறான். மேகங்களிலிருந்து மழை பொழிவது நின்று விட்டால் மயிலின் ஓசை நின்று விடுகிறது!

As long as one distributes favours one is praised in laudable terms. Once the rains from the clouds are stopped the sounds of peacock come to an end.

                                                                              (Translation by Dr N.P.Unni)

*

பத்தாயிரத்தில் ஒருவனடா நீ!

சதேஷு ஜாயதே சூர: சஹஸ்ரேஷு ச பண்டித: |

வக்தா தச சஹஸ்ரேஷு தாதா பவதி வா ந வா ||

நூற்றில் ஒருவனே சூரனாக இருக்கிறான்; ஆயிரத்தில் ஒருவனே பண்டிதனாக இருக்கிறான்; பத்தாயிரத்தில் ஒருவனே தானங்களைக் கொடுப்பவனாக இருப்பானோ, மாட்டானோ!

One among hundred becomes a brave man: one among a thousand become a scholar and a spokesman in ten thousand may be there or not as also a giver of gift.

                                                                                 (Translation by Dr N.P.Unni)

***

tags-  விதி,  கொடுமை

ஜோதிடம் பலிக்குமா? குட்டிக்கதை (Post No.4817)

Pictures are from Facebook; posted by Lalgudi Veda

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 6-08 am

 

Post No. 4817

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மதியால்  விதியை வெல்லலாம்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

விதியை மதியால் வெல்லலாம். இதற்கு ஒரு நல்ல கதை உண்டு.

 

திருமூலர் சொல்கிறார்:

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

 

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

 

பொருள்:

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

நாயன்மார்களும் — குறிப்பாக அப்பர் சம்பந்தர், சுந்தரர்—, மேலும் மாணிக்கவாசகரும், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களும் இறையருளால் தீய வினைகள் பொடிபடும், தீயினில் தூசாகும் என்று பாடினர். மார்க்கண்டேயன், சத்தியவான் சாவித்திரி போன்ற புராணக் கதைகளும் அப்படியே மொழிகின்றன.

 

ஒரு ஊரில் ஒரு ஏழை வசித்து வந்தான்; எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. எல்லையில்லாத வறுமையில் வாடினான். எல்லோரும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடனைப் பார்க்கும்படி யோஜனை கூறினர். அவனும் அதற்குச் சம்மதித்தான்.

பக்கத்து ஊர் ஜோதிடனைப் போய்ப் பார்த்தான். அவன் ஏழையின் ஜாதகத்தைப்  பார்த்தவுடன்  முகத்தில் ஈயாடவில்லை’ -ஒரே திகில்; ஆயினும் அதை வெளிக்காட்டாமல் அந்த ஏழையைப் பார்த்து ”முடிந்தால்” நாளைக்கு வந்து பாருங்கள் என்றான்.

அவனும் கட்டாயம் வருகிறேன் என்று செப்பிச் சென்றான்; ஜோதிடனுக்கோ மனதுக்குள் ஒரே நகைப்பு! ஏனெனில் ஜாதகப்படி அந்த ஏழையின் வாழ்வு முடிந்துவிட்டது; அவன் எந்த நேரமும் இறக்க நேரிடும். மறுநாள் அவன் வரவே முடியாது என்பது ஜோதிடத்தில் தெரிந்த உண்மை.

 

அந்த ஏழை வீட்டுக்குத் திரும்புகையில் பேய் மழை கொட்டியது. அவன் ஒரு பாழடைந்த கோவிலில் தங்கினான். மழை நிற்கவே இல்லை. அவன் ஏழையானாலும் ஒரு பக்தன். ஆகவே அவன் மனத் திரையில் பல காட்சிகள் ஓடின. அட டா ! நான் பாழடைந்த கோவிலில்   அல்லவா நிற்கிறேன். கடவுளுக்கும் இவ்வளவு கஷ்டமா? நாளை நான் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குவேன். எனக்கு மட்டும் பரிசு விழுந்தால், முதலில் இந்தக் கோவில் மண்டபத்தைப் புதுப்பிப்பேன்; பின்னர் தமிழ்நாட்டிலேயே உயர்ந்த ராஜ கோபுரம் கட்டுவேன்; சிதம்பரம், மதுரை, ஸ்ரீரங்கம், திருப்பதி போல பொற்கூரை போட்டு தங்க கோவில் ஆக்குவேன்; அதற்கும் பின் பணம் மிச்சம் இருந்தால் என்னைப் போன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வேன் என்று எண்ணிக் கொண்டே போனான். மழையும் நின்றது. வீட்டுக்குச் சென்றான்.

 

மறு நாள் பொழுது புலர்ந்தது; ஆவலோடு ஜோதிடர் வீட்டுக்குச் சென்றான்; ஜோதிடருக்கு முன்னை விட திகில்!! வந்தவன் நேற்று வந்த ஏழையா? அல்லது அவனது ஆவியா? என்று.

 

ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை அமரச்  சொன்னார். பின்னர் அந்த ஏழைதான் வந்திருக்கிறான், அவனது ஆவி அல்ல என்று பேச்சைத் துவக்கினான்; மனதுக்குள் ‘இவன் நேற்றே இறந்திருக்க வேண்டுமே ! எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறான்’ என்று வியப்பு.

 

ஜோதிடர்– ஏழை சம்பாஷணை

 

தம்பி; நேற்று நீ வீட்டிற்குச் சென்றது முதல் இன்று வரை நடந்ததைச் சொல் என்றான் ஜோதிடன்.

 

ஏழை:-

நான் வீடு திரும்பியபோது பேய் மழை கொட்டியது. ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கிவிட்டு வீடு திரும்பினேன்.

 

 

ஜோதிடன்:–

அது என்ன கட்டிடம்?

 

பாழடைந்த கோவில்

 

ஓ அங்கே யாராவது சாது சந்யாசியைப் பார்த்தாயா?

 

இல்லை என்னைத் தவிர அங்கு ஒரு ஈ எறும்பு கூட இல்லை.

 

அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே! வேறு ஏதாவது நடந்ததா? ஏதேனும் அற்புதம் ஆச்சர்யம்……

 

இல்லவே, இல்லை.

 

பின்னர் எப்ப டிப் பொழுதைக் கழித்தாய்?

 

ஓ அதுவா? நான் ஒரு மனக் கோவில் கட்டினேன்- என்று சொல்லி முழு எண்ணக் க் கோர்வையயும் சித்தரித்தான்.

 

ஜோதிடரின் ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவன் ஒரு துளி விடாமல் அப்படியே தான் எண்ணியவற்றை நுவன்றான்.

 

ஜோதிடருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அப்பனே, உனது ஜாதகப்படி நேற்றே நீ இறந்திருக்க வேண்டும். அதனால்தான் “முடிந்தால்” நாளைக்கு வா என்றேன். நீ வந்தது பெரிய அதிசயம்தான். உன்னைப் போலவே பூசலார் நாயனார் என்பவர் மனதிலேயே கோவில் கட்டி இறைவனைக் கண்டார். நீயும் மனம், மொழி, மெய் (மனோ, வாக், காயம்) என்று த்ரிகரண சுத்தியுடன் எண்ணியதால் இறைவன் உன்னையும் மார்க்கண்டேயன் போல என்றும் 16 வயது என்று சொல்லிவிட்டார். இனிமேல் உனக்கு நல்ல காலம்தான் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.

அவனும் சுக போக வாழ்வு அடைந்தான்

எண்ணத்துக்கே இவ்வளவு நல்ல பலன் என்றால் நல்ல செயலுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்!!

 

சுபம்–

 

விதி கொடியது: ராம பிரானின் 16 பொன்மொழிகள் (Post No.4337)

Written by London Swaminathan

 

Date: 26 October 2017

 

Time uploaded in London- 12-44

 

 

Post No. 4337

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ராமன் வாய் மொழியாக 16 ஸ்லோகங்கள் வருகின்றன. அவற்றில் வள்ளுவர், இளங்கோ கூறிய ஊழ்வினை கருத்துக்களைக் காணலாம். அதாவது, வள்ளுவருக்கும், இளங்கோவுக்கும் முன்னதாக, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டில் உள்ள கருத்துக்கள்தான் இவை. சிலர் ஊழ்வினைக் கருத்துக்களை மட்டும் முன்வைத்து வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் மாற்று மதம் கற்பிப்பர்; சமணர் என்று புலம்புவர். அது தவறு என்பது ஒட்டுமொத்த நூலையும் படித்து எடை போட்டால் தெரியும்.

 

 

ராமாயணமும் மஹாபாரதமும் நமக்குத் தெரிந்த கதைகள்தாம். ஆயினும் அவைகளில் நிறைய நுட்பமான விஷயங்கள் உள்ளன. கதைப் போக்கை மறந்து விட்டு உவமைகளாகக் காணவேண்டும்; பொன் மொழிகளாகக் காணவேண்டும். அவை நல்ல இன்பம் பயக்கும். இதோ முதலில் சுருக்கமாக 16 பொன்மொழிகள், ஸ்லோகங்களுடன் கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும் போது வால்மீகி எழுதிய 24,000 ஸ்லோகங்களை, 48,000 வரிகளை ஊன்றிப் படியுங்கள்; தேன் ஊறும்; நாக்கில் அல்ல; மனதில், உள்ளத்தில். அதைத்தான் மாணிக்கவாசகர் ‘உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து’ என்று சொன்னார் போலும்.

சர்வே  க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:

சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்

सर्वे क्षय अन्ता निचयाः पतन अन्ताः समुग्च्छ्रयाः |
सम्योगा विप्रयोग अन्ता मरण अन्तम् च जीवितम् || २-१०५-१६

சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்.

xxxx

 

யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்

ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்

यथा फलानम् पक्वानाम् न अन्यत्र पतनाद् भयम् |
एवम् नरस्य जातस्य न अन्यत्र मरणाद् भयम् || २-१०५-१७

பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.

xxxx

யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி

ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:

यथा अगारम् दृढ स्थूणम् जीर्णम् भूत्वा अवसीदति |
तथा अवसीदन्ति नरा जरा मृत्यु वशम् गताः || २-१०५-१८

உறுதியான கட்டிடங்கள் இடிந்து விழும்; அழிந்து போகும்அ. தைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்

xxxx

 

 

அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத

யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்

अत्येति रजनी या तु सा न प्रतिनिवर्तते |
यात्येव यमुना पूर्णा समुद्रमुदकाकुलम् || २-१०५-१९

இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.

xxxxx

அஹோராத்ராணி கச்சந்தி சர்வேஷாம் ப்ராணினாம் இஹ

ஆயும்ஷி  க்ஷபயந்த்ய ஆசு க்ரீஷ்மே ஜலம் இவ அம்சவ:

अहो रात्राणि गग्च्छन्ति सर्वेषाम् प्राणिनाम् इह |
आयूम्षि क्षपयन्त्य् आशु ग्रीष्मे जलम् इव अंशवः || २-१०५-२०

 

கோடை காலத்தில் தண்ணீரை சூரியன் வற்றச் செய்வதுபோல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உயிரினங்களை மாயச் செய்கின்றன.

xxxx

 

ஆத்மானம் அனுசோச த்வம் கிம் அன்யம் அனுசோசசி

ஆயு: தே ஹீயதே யஸ்ய ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச

आत्मानम् अनुशोच त्वम् किम् अन्यम् अनुशोचसि |
आयुः ते हीयते यस्य स्थितस्य च गतस्य च || २-१०५-२१

நீ நின்றாலும் நகர்ந்தாலும் வாழ்நாள் குறைந்துகொண்டே வரும்; ஆகைஅயால் உன்னைப் பற்றி வருதப்படு; மற்றவர்கள் குறித்து வருந்தாதே.

xxxx

 

சஹ ஏவ ம்ருத்யுர் வ்ரஜதி சஹ ம்ருத்யுர் நிஷீததி

கத்வா சுதீர்கம் அத்வானம்சஹ ம்ருத்யுர் நிவர்தத

सह एव मृत्युर् व्रजति सह मृत्युर् निषीदति |
गत्वा सुदीर्घम् अध्वानम् सह मृत्युर् निवर्तते || २-१०५-२२

 

நாம் நடந்தாலும் மரணம் நம்மைப் பிந்தொடரும்; உட்கார்ந்தாலும் அதுவும் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்கும்; எவ்வளவு தூரம் போனாலும் அதுவும் வரும்; நாம் திரும்பி வந்தால் நம்முடன் திரும்பியும் வரும்.

xxxx

 

காத்ரேஷு வலய ப்ராப்தா: ஸ்வேதாள் சைவ சிரோ ரஹா:

ஜரயா புருஷோ ஜீர்ண: கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத்

गात्रेषु वलयः प्राप्ताः श्वेताः चैव शिरो रुहाः |
जरया पुरुषो जीर्णः किम् हि कृत्वा प्रभावयेत् || २-१०५-२३

நம் அங்கங்களின் மீது சுருக்கம் விழுகிறது; முடி நரைத்து விடுகிறது;

முதிய வயது காரணமாக போன அழகு திரும்பி வருமா?

xxxx

 

நந்தந்த்ய உதித ஆதித்யேநந்தந்த்ய அஸ்தம் இதே ரவௌ

ஆத்மனோ அவபுத்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்

नन्दन्त्य् उदित आदित्ये नन्दन्त्य् अस्तम् इते रवौ |
आत्मनो न अवबुध्यन्ते मनुष्या जीवित क्षयम् || २-१०५-२४

காலையில் சூரியன் உதிக்கும்போதும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்போதும் மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்; ஆனால் அவர்களின் ஆயுள் குறைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.

xxxx

ஹ்ரச்யந்த்ய ருது முகம் த்ருஷ்ட்வா நவம் நவம் இஹ ஆகதம்

ருதூணாம் பரிவர்தேன ப்ராணினாம் ப்ராண சம்க்ஷய:

हृष्यन्त्य् ऋतु मुखम् दृष्ट्वा नवम् नवम् इह आगतम् |
ऋतूनाम् परिवर्तेन प्राणिनाम् प्राण सम्क्षयः || २-१०५-२५

 

ஒவ்வொரு பருவம் வரும்போதும் ஏதோ புதிதாக வருவது போல மகிழ்கிறார்கள்; ஆனால் மாறி மாறி வரும் பருவங்களினால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வரும்.

xxxx

யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹா அர்ணவே

சமேத்ய ச வ்யபேயாதாம் காலம் ஆஸாத்ய கஞ்சன

 

ஏவம் பார்யா: புத்ரா: ச ஜ்நாதய: ச வசூனி ச

சமேத்ய வ்யவதாயந்தி  த்ருவோ ஹ்ய ஏஷாம் விநா பவ:

यथा काष्ठम् च काष्ठम् च समेयाताम् महा अर्णवे |
समेत्य च व्यपेयाताम् कालम् आसाद्य कंचन || २-१०५-२६
एवम् भार्याः च पुत्राः च ज्नातयः च वसूनि च |
समेत्य व्यवधावन्ति ध्रुवो ह्य् एषाम् विना भवः || २-१०५-२७

கடலில் மிதக்கும் இரண்டு மரக்கட்டைகள் சிறிது காலத்துக்கு ஒன்றாகப் பயணித்துப் பிரிந்து விடுகின்றன. அது போலத்தான் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், சொத்து, சுகம் ,செல்வம் எல்லாம் சிறிது காலத்துக்கு உடன் வரும். அவை பிரிவது தவிர்க்கமுடியாதது.

 

xxxxx

 

ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே

தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:

न अत्र कश्चिद् यथा भावम् प्राणी समभिवर्तते |
तेन तस्मिन् न सामर्थ्यम् प्रेतस्य अस्त्य् अनुशोचतः || २-१०५-२८

 

ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும்போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.

xxxxx

 

யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:

அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி

 

ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:

தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:

यथा हि सार्थम् गग्च्छन्तम् ब्रूयात् कश्चित् पथि स्थितः |
अहम् अप्य् आगमिष्यामि पृष्ठतो भवताम् इति || २-१०५-२९
एवम् पूर्वैर् गतो मार्गः पितृ पैतामहो ध्रुवः |
तम् आपन्नः कथम् शोचेद् यस्य न अस्ति व्यतिक्रमः || २-१०५-३०

வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பிவராத  பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?

xxxx

 

 

வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:

ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:

वयसः पतमानस्य स्रोतसो वा अनिवर्तिनः |
आत्मा सुखे नियोक्तव्यः सुख भाजः प्रजाः स्मृताः || २-१०५-३१

ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.

Slokas Source: valmikiramaan.net

Translated by London swaminathan

 

TAGS: ராமபிரான், விதி, பொன்மொழிகள், அயோத்யா காண்டம்

–SUBHAM–