
Written by S Nagarajan
Date: 9 February 2016
Post No. 2522
Time uploaded in London :– 9-27 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
ஹிந்து இலக்கியம்
மரண காலத்தில் அதிசயக் கவிஞரின் வீ ட்டிற்குத் தானே வந்த கங்கை!
ச.நாகராஜன்

ஹிந்து இலக்கியத்தில் ஒரு முக்கிய பிரதேசமாக விதேஹம் விளங்கி வந்திருப்பதை வரலாறு நன்கு விளக்குகிறது.
ஆயிரமாயிரம் அதிசய உண்மைச் சம்பவங்களைக் கொண்டுள்ள ஹிந்து இலக்கிய வரலாறை யாரே முழுதுமாக அறிய வல்லார்?
இங்கு சொல்லப்படுவது சரித்திரத்தில் ஒரு சிறிய துளி; ஆனால் பெரிய தாக்கத்தை அனைவர் மனதிலும் அது ஏற்படுத்தும்.
மிக பிரம்மாண்டமான இந்திய இலக்கிய வரலாற்றில் பெருங் கவிஞர் வித்யாபதி தனி ஒரு இடத்தை வகிக்கிறார்.
தர்பங்கா மாவட்டத்தில் மைதிலி பிராமணர் குலத்தில் கி.பி. 1350 வாக்கில் அவர் பிறந்தார். அந்தக் காலம் இசையின் பொற்காலம்.
மைதிலி மொழியும் வங்காள மொழியும் போட்டி போட்டுக் கொண்டு இலக்கியச் செல்வங்களை வாரி வழங்கிய காலம் அது. அந்தக் காலத்தில் பிறந்த மாபெரும் கவியை இப்படி வெவ்வேறு இரு மொழிகளைப் பேசி வந்த மக்கள் தங்கள் கவிஞர் என்று உரிமை கொண்டாடியது உலக இலக்கிய வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத ஒன்று என்கிறார் வித்யாபதியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் க்ரியர்ஸன் (Grierson)
வித்யாபதியின் வரலாறு பல நூறு பக்கங்களில் எழுதப்பட வேண்டிய ஒன்று. சுருக்கமாக இங்கு காணலாம்.
வித்யாபதி சிறு வயதில் பால்ய கால நண்பனான மஹாராஜா கீர்த்திசிம்மனுடன் விளையாடி வந்தார். அவரது தந்தை கணபதி தாகூரா மஹாராஜா கநேஸ்வரசிம்மனின் அரசவையில் பெரும் பதவி வகித்தவர்.

பெரும் நியாய சாஸ்திர நிபுணரான – நையாயிகர் பக்ஷதார மிஸ்ராவின் வகுப்புத் தோழருமாக வித்யாபதி திகழ்ந்தார்.
வித்யாபதி ஏராளமான கவிதைகளை யாத்தார்.
பல அரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வித்யாபதியை தங்கள் அரசவைகளுக்கு அழைத்து கௌரவித்தனர்.
வித்யாபதிக்கு இரு மனைவிகள்.இரு மனைவிகளும் அருமையான மகன்களையும் மகளையும் பெற்றேடுத்தனர். அவரது மருமகள்களில் ஒருவரான சந்த்ரகலா ஒரு பெரும் கவிஞர். வேத காலத்திலிருந்து பெண்களில் இப்படிப்பட்ட அரிய புலமை இருந்த ஏராளமானோரை நமது சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது. (ஆனால் அது தெரியாமல் பெண்களை நாம் அடிமைப் படுத்தி வைத்ததாக கூக்குரலிடுவது இப்போது ஒரு ஃபாஷனாகியிருப்பது பெரும் கொடுமை!)
தனது மரணம் எப்போது வரும் என்பதை அவர் முன் கூட்டியே அறிந்து விட்டார். மஹாராஜா சிவசிம்மன் என்ற மன்னர் இறந்து 32 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு கனவு வந்தது.
அதில் தன் கருமையான உருவத்தை அவர் கண்டார்.
அதன் மூலமாகத் தனது மரணம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த அவர் தனது மகளைக் கூப்பிட்டு தனது இறுதி யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளை கங்கைக் கரையில் செய்யுமாறு கூறினார். அவர் இருந்த நிலையில் அவரால் கங்கைக் கரைக்குச் செல்ல முடியவில்லை.
அன்றிரவு கங்கை பெருக்கோடி அவர் எங்கு இருந்தாரோ அந்த இடத்தை வந்து சேர்ந்தது. .
கங்கையைக் கண்ட மகிழ்ச்சியுடன் அவர் தனது மூச்சை விட்டார்.
தர்பங்கா மாவட்டத்தில் பஜித்புரா என்ற கிராமத்தில் இந்த அதிசயம் நடந்த இடம் இன்றும் உள்ளது.

வித்யாபதியின் குறிப்பிடத்தக்க சம்ஸ்கிருத நூல்கள்: அநேக தர்ம சாஸ்திரங்கள், நிபந்தங்களைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட சைவசர்வசஸ்வசாரா, கங்காவாக்யாவளி, விபாகசாரா, தானவாக்யாவளி,துர்காபக்தி தரங்கிணி, கயாபட்டாலகா, வர்ஷக்ரித்யா உள்ளிட்ட ஏராளமான நூல்கள்.
புருஷபரிக்க்ஷா என்ற நீதி போதிக்கும் கதைக் கொத்தையும் அவர் எழுதியுள்ளார். மைதிலி மொழியில் அவர் எழுதியுள்ள நாடகம் கோரக்க்ஷவிஜயா.
இன்னும் ஏராளமான நூல்களை எழுதியுள்ள இ மாபெரும் கவிஞர் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து அமைதியாக வாழ்ந்த விதத்தை அற்புதக் கவிதைகளாகத் தந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.
கங்கையே வீடு தேடி வந்து இறுதிக் காலத்தில் கவிஞரைக் ஆட்கொண்ட அதிசயக் கவிஞரின் புகழைச் சொல்லி மாளாது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று இவரை அறிந்தவர்கள் வெகு சிலரே.
இதைப் போக்கும் விதத்தில் வி.கே. மிஸ்ரா என்னும் அறிஞர் ‘A Cultural Heritate of Mithila’ என்ற ஆய்வு நூலை (A-4 பேப்பர் அளவில் 404 பக்கங்கள்) எழுதியுள்ளார். அதில் இவரது சரித்திரம் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

கார்த்திகை மாத சுக்ல பட்ச திரயோதசி திதியில் (கார்த்திகை மாதம் 13ஆம் நாள்) இவர் மறைந்ததாக ஒரு பழம் பாடல் தெரிவிக்கிறது.
கவிஞர் பூதவுடல் கங்கைக் கரையில் எரியுண்டாலும் புகழுடல் இன்றும் திகழ்கிறது. என்றும் திகழும்
*********
You must be logged in to post a comment.