யாழ்ப்பாண ஐயர் பழமொழிகள்! (Post No. 2953)

pararajasekara

Compiled by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2953

Time uploaded in London :– 17-11

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

“பரராஜ சேகரன் ஆண்ட காலத்தில் சுபதிருஷ்ட முனிவர் என்பவர் அவன் சபைக்கு வந்தார். மன்னன் எழுந்து நின்று அவரை உபசரித்து,  தனது எதிர்காலம் பற்றிக் கூறுமாறு வேண்டினான். முனிவர் சொன்னார்:-

நீ புண்ணியவான். உனது ஆட்சி குறைவின்றி நடக்கும். அதற்குப்பின் உன் மூத்த புதல்வனை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள். இரண்டாவது மகனை வெட்டிக் கொன்றுவிடுவார்கள்.

 

இரண்டாம் பத்தினியின் வயிற்றில் பிறந்த சங்கிலி அரசோச்சுவான். அவனது கொடுங்கோலாட்சியில் பறங்கியர் வசம் ஆட்சி ஒப்படைக்கப்படும்.  பறங்கியர் சிவாலயங்களை அழித்து தமது சமயத்தைப் பரப்பி நாற்பது வருஷம் கொடுங்கோலாட்சி புரிவர். அவர்களை ஒல்லாந்தர் (ஹாலந்து/ டச்சு) வென்று  அவரைப்போல் கொடியராக 120 ஆண்டுகள் ஆள்வர். அதற்குப்பின் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர்- ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதியாக அரசு செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்தும் மீள்வதில்லை” என்றார்.

 

இதுவே சாரமான கல்வெட்டொன்று திரிகோணமலைத் தம்பத்திலுமுள்ளது

அது மிகவும் பழமையானது. பிற்காலத்தாரால் ஏடுகளில் மாற்றப்பட்டுத் திரிபுபெற்றுள்ள வைபவமாலைக் கூற்றுப்போல்வதன்று:-

 

முன்னாட்குளக்கோட்டன் மூட்டுந்திருப்பணியைப்

பின்னாட்பறங்கி பிடிப்பானே — பொன்னாரும்

பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய் மாற

மானேவடுகாய்விடும்.

 

இதனை வையா (வையாபுரி ஐயர்) பாடல் என்பர்.

வையாபுரி பாடல் பொய்யாதென்பது பழமொழி. வையாபுரி ஐயர் என்பது அவர் இயற்பெயர். அவர் பிராமண சந்யாசி. அவர் சுபதிருஷ்டர் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர்.

 

சித்தையர் இருந்து தவம் செய்த இடம் சித்தன்கேணியென்று வழங்குகின்றது. சித்தன்கேணிக் கிராமத்திலே அவர் இருக்கும் வரையில்  விஷப் பாம்புகள் செல்வதும், விஷம் தீண்டி இறப்பதும் இல்லையாம். வையாபுரி ஐயர் சீடர் கோவியத் திருமேனியுடைய கொற்றனார்.

 

ஐயருக்கு 12 மனைவிகள்!

 

அவர் சீடர் பெரியதம்பி ஐயர். அவர் கொற்றனார் கொடுத்த மூலிகையை உண்டு நரை திரை மூப்பு இன்றி 120 வயசில் இளமையோடிறந்தவர். அவருக்கு நான்கு பார்ப்பாரப் பெண்களும், நான்கு வேளாளப் பெண்களும், நான்கு கோவியப் பெண்களுமாக பன்னிருவர் பத்தினிமார் ஏக காலத்தில் இருந்தார்கள். இவருடைய அற்புத இளமையை நோக்கியே “பெரிய தம்பி ஐயர் வாலிபத்திலே” என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. பெரியதம்பி ஐயர் இருந்த வீடு வண்ணைச் சிவன் கோயிலுக்குத் தென் பாரிசத்தில் இன்றுமிருக்கின்றது. அவர் சந்ததியாருமங்கேயிருக்கின்றார்கள்”.

 

–ஆதாரம்: யாழ்ப்பாண சரித்திரம், ஏ.முத்து தம்பி பிள்ளை