ஒசை இன்பம் கொண்ட டாஃபோடில்ஸ்-1 (Post No.5018)

Written by S NAGARAJAN

 

Date: 17 MAY 2018

 

Time uploaded in London –  8-20 AM   (British Summer Time)

 

Post No. 5018

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -1

 

.நாகராஜன்

 

1

ஆசை தரும் கோடி அதிசயங்கள்  கண்டதிலே

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ (குயில் பாட்டு – 194)

என்றான் மகாகவி பாரதி.

 

 

ஒசை நுட்பமானது. அதை உணர்பவர்களே நல்ல கலா ரஸிகர்கள். கவிதையை ரஸிக்க வல்லவர்கள்.

கவிஞர்கள் இந்த ஓசை நுட்பத்தில் கரை கண்டவர்கள்.

அவர்கள் மனமும் சிந்தனையும் சொற்களின் வாயிலாக உயர் கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் போது ஓசை நுட்பத்திற்கு உயரிய இடம் கொடுத்து படிப்போரை ஈர்த்து தன்னுடன் லயப்படுத்துவர்.

 

ஒரு சொல்லை இன்னொரு சொல்லால் மாற்றிப் போட முடியாதபடி கவிதை தருபவனே உண்மைக் கவிஞன். ஒரே அர்த்தம் தரும் பல சொற்கள் உண்டு. ஆனால் கவிஞன் அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே தனது சொல்லைத் தேர்ந்தெடுக்கிறான்.

 

கோவில் மணியோசை தன்னைக் கேட்டதாரோ (கிழக்கே போகும் ரயில் 1978 வெளியீடு; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

என்ற பாட்டில் ஓசைக்குப் பதிலாக நாதம் என்ற சொல்லைப் போட்டு

கோவில் மணிநாதம் தன்னைக் கேட்டதாலே

என்று சொல்லிப் பாருங்கள். ரஸனை இடிக்கும்.

தேவன் கோவில் மணியோசை – இதுவும் திரைப்படப் பாடல் தான். (படம் மணியோசை-1962 வெளியீடு)

 

தேவன் கோவில் மணி நாதம் – கேட்கவே சரியில்லை.

சரி, நாதமென்னும் கோவிலிலே

ஞானவிளக்கேற்றி வைத்தேன்

ஏற்றி வைத்த விளக்கினிலே ….

(படம் : மன்மத லீலை; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

இதுவும் திரைப்படப் பாடல் தான்.

 

ஓசை என்னும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றி வைத்தேன் ?!

 

ரஸனை இடிக்கிறது.

இந்தப் பாடலில் நாதம், நாதம் தான்; ஓசை, ஒசை தான்!

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதனால் தான் கம்பன் வால்மீகியின் ராமாயணத்தைப் புகழும் போது

 

‘வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் என்று கூறி வால்மீகி முனிவரின் பாதம் ஒன்றைக் கூட மாற்ற முடியாது என்று புகழ்ந்து கூறினான். ( ஒரு சுலோகத்திற்கு நான்கு பாதம் உண்டு. விருத்தச் செய்யுளிலில் நான்கு அடிகள் இருப்பது போல!)

 

ஆக இந்த ஓசை இன்பம் தமிழுக்கு மட்டும் அல்ல; ஆங்கிலத்திலும் இதர எல்லா மொழிகளிலும் கூட உண்டு.

ஆங்கிலக் கவிஞர்களும் இதில் வல்லவர்கள்.

எடுத்துக் காட்டாக வோர்ட்ஸ்வொர்த் எழுதிய அற்புதக் கவிதையான டாஃபோடில்ஸ் கவிதையைப் பார்ப்போம்.

இந்தக் கவிதை கீழே தரப் படுகிறது.

 

 

இதை எனது பழைய கால சேதுபதி ஹை ஸ்கூல் உபாத்தியாயர் திரு எம்.எஸ்.ஆர் என்பவர் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற ராகத்தில் அழகுறப் பாடுவார்.

அதில் சொக்கிப் போன எங்களுக்கு பாடல் அப்படியே மனப் பாடம் ஆகி விட்டது!

 

 

ஓசை இன்பம் அப்படிப்பட்டது இந்தப் பாடலில்.

பாடலைக் கீழே முதலில் பார்ப்பொம். பிறகு ஓசை இன்பத்திற்கு வோர்ட்ஸ்வொர்த் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

 

2

I Wandered Lonely as a Cloud 

 

BY WILLIAM WORDSWORTH

 

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance. (வரிகள் 7 முதல் 12)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

***

இயற்கை போதிக்கும் 13 பாடங்கள்

Mute_swan_Vrhnika

இயற்கையில் 13 ‘குரு’க்கள்

இந்து சந்யாசிகள் வாழ்நாள் முழுதும் பாடம் கற்கும் மாணவர்கள். அவர்கள் எதிலிருந்தும் பாடம் கற்பார்கள், எப்போழுதும் பாடம் கற்பார்கள். உயர்திணை, அஃறிணை என்று வேறுபாடு பார்க்காமல் மிருகங்கள், பறவைகள், ஜடப் பொருட்கள் ஆகிய எல்லாவற் றிலிருந்தும் போதனை பெறுவார்கள். எதையும் ஆக்கபூர்வமாகவே அணுகுவார்கள். இது இன்று நேற்று தோன்றியதல்ல. வேத காலத்திலேயே துவங்கிய வழக்கம் இது. உபநிஷத்தில் ஒரு அருமையான கதை உள்ளது.

தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் மூவரும் உபதேசம் பெறச் சென்றார்கள். வானத்தில் இடி முழக்கம் கேட்டது. த…த….த… என்ற சப்தத்தோடு இடி உறுமியது. உடனே பிரஜாபதி, “என்ன? புரிந்து கொண்டீர்களா?” என்று தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய மூன்று குழுக்களையும் கேட்டார். அவர்கள் “ஆமாம், ஆமாம் நன்றாகப் புரிகிறது” என்றனர். “த என்றால் தம்யத” என்றனர் தேவர்கள். எப்போதும் இன்பம் அனுபவிக்கும் அவர்களுக்குத் தேவையானது தன்னடக்கம் (தம்யத). “த என்றால் தானம்” என்றனர் மனிதர்கள். சுயநலமிக்க மனிதர்களுக்குத் தேவையானது கொடுக்கும் குணம். “த என்றால் தயை” என்றனர் அசுரர்கள். ஈவு இரக்கம் இல்லாத அசுரர்களுக்குத் தேவையானது தயை (கருணை). இந்தக் கதை 3000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் இருக்கிறது.

இதற்குப் பின்வந்த பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மஹரிஷி, இயற்கையில் காணும் பறவை, மிருகங்கள் ஆகியவற்றிலிருந்து தான் அறிந்த விஷயங்களை எழுதினார். இந்த இரண்டு கதைகளையும் ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதியுள்ளேன். இதே போல, தமிழில் உள்ள விவேக சிந்தாமணி என்ற நூலில் பல பாடல்கள் உள்ளன. பர்த்ருஹரியின் நீதி சதகம் பாணியில் அமைந்த இந்த நூலை எழுதியது யார் என்று தெரியவில்லை. இந்த நூலில் உள்ள பெண்கள் எதிர்ப்புப் பாடல்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் “கோல மாமத யானையை நம்பலாம், சேலை கட்டிய மாதரை நம்பாதே” என்ற சினிமாப் பாடல் இந்த நூலில் உள்ளதுதான்.

மற்றொரு பாடலில் கீழ்கண்ட 13ம் புவியோர் போற்றும் ஈசனுக்கு இணையானது என்று பாடுகிறார். இதற்கு விளக்கம் என்ன என்று ஆசிரியர் கூறாவிட்டாலும், இலக்கிய விமர்சகர்கள் எழுதி வைத்துள்ளனர். இதோ அந்தப் பாடல்:

angry peacock,Duisberg, Germany

“மயில் குயில் செங்கால் அன்னம்
வண்டு கண்ணாடி பன்றி
அயில் எயிற்று அரவு திங்கள்
ஆதவன் ஆழி கொக்கோடு
உயரும் விண்கமலம் பன்மூன்று
உறுகுணம் உடையோர் தம்மை
இயலுறு புவியோர் போற்றும்
ஈசன் என்று எண்ணலாமே!

மயில்: நல்லவரை ஏற்று பொல்லாதவர்களை ஒதுக்கும் குணம்
குயில்: எப்போதும் இனிமையாகப் பேசல்
அன்னம்: பாலையும் தண்ணீரையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்தெடுப்பதுபோல நல்லவற்றைப் பகுத்து ஏற்றல் (தமிழ், வடமொழி இலக்கியங்களில் அன்னப் பட்சிக்கு இப்படி ஒரு அபூர்வ குணம் இருப்பதாக எழுதி வைத்துள்ளனர்)
வண்டு (தேனீ): மற்றவர்களுக்காக இடையறாது உழைக்கும் பண்பு
கண்ணாடி: முன்னால் உள்ள அனைத்தையும் கிரகிக்கும் தன்மை
பன்றி: சாக பட்சிணி (வெஜிட்டேரியன்)
B_Id_411194_manasa-goddess-1

பாம்பு: மகுடத்தில் ரத்தினம் உடைய பெருமை உடைத்து
சந்திரன்: எல்லோருக்கும், பலனை எதிர்பார்க்காமல், குளிர்ச்சியான கிரணங்களை வீசும் குணம்
சூரியன்: எல்லோருக்கும் சக்தியும் பாதுகாப்பும் கொடுக்கும் குணம்
கடல்: எங்கும் பரந்து விரிந்தது, பிரம்மாண்டமான தோற்றம்
கொக்கு: காரியத்தை அடையும் வரை பொறுமையுடன் காத்திருத்தல்
ஆகாயம்: எல்லாவற்றையும் தன்கீழ் வத்திருக்கும் பெருமை
தாமரை: பார்க்கத் தெவீட்டாத அழகு

?????????????????????????????

இப்பேற்பட்ட குணங்களை உடையவை என்பதால் இந்த 13-ஐயும் மக்கள் போற்றும் இறைவனுக்கு சமமானவை என்று அழைக்கலாம் என்கிறது விவேக சிந்தாமணி.

எதிலும் நல்லதையே காணும் ‘பாஸிட்டிவ்’ அணுகுமுறையை இப் பாட்டில் காணலாம்.
உபநிஷத்தும், பாகவதமும், விவேக சிந்தாமணியும் கூறும் கருத்தை 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞனும் பாடியிருக்கிறான். “புத்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்து இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள். வானம் பாடியின் பாட்டைக் கேளுங்கள். எல்லா முனிவர்களும் போதிக்கும் விஷயங்களைவிட கூடுதலாக ஞானம் பெறுவீர்கள் என்பது அவர் தரும் செய்தியாகும்.

archduke joseph diamond

William Wordsworth echoes this in these lines:

“And hark! how blithe the throstle sings!
He, too, is no mean preacher:
Come forth into the light of things,
Let Nature be your teacher”
“One impulse from a vernal wood
May teach you more of man,
Of moral evil and of good,
Than all the sages can”.

சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடத்தையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
Read my earlier posts :

1.The connection between William Wordsworth and Dattatreya (posted on 10 November 2011).

2.G for Ganga…..Gayatri….Gita….. Govinda…….. (For Upanishad parable about Da..Da…da)

3.சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா? (in Tamil)

700 கட்டுரைகள் பட்டியலுக்குத் தொடர்பு கொள்க: swami_48@yahoo.com

bees