இமய மலை ரஹஸியங்கள்! (Post No.5240)

WRITTEN by London swaminathan

Date: 20 JULY 2018

 

Time uploaded in London – 18-29  (British Summer Time)

 

Post No. 5240

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இமயமலை முழுதும் ரஹஸியங்கள், மர்மங்கள் இருக்கின்றன!

 

அமர்நாத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய பனிக்கட்டி லிங்கம் உருவாகும்; இது ஒரு இயற்கை நிகழ்வு என்றாலும் இப்படி பனி லிங்கமாகக் காட்சி தருவது மக்களின் பக்தி உணர்வை தூண்டி விடுகிறது. காஷ்மீரில் உள்ள முகமது நபியின் தலை (HAIR) முடியும், இதாலியில் டூரின் (TURIN) நகரில் உள்ள ஏசு மீது போர்த்திய ஆடையும் லட்சக் கணகான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்குமானால் அதிசயமாக உருவாகி மறையும் பனி லிங்கம் ஈர்க்காதா?

பிரம்ம கமலம் எனப்படும் அபூர்வ மலர்!!

நந்த தேவி என்னும் மிகப் பெரிய மலைச் சிகரம்!!

உலகிலேயே உயரமான எவரெஸ்ட்!!

 

புறநானூறு புகழும் காஞ்சன ச்ருங்கம் (பொற்கோட்டு இமயம்; இதைப் புலவர்கள் அப்படியே தமிழ்ப் படுத்திவிட்டனர்)

 

பனி மனிதன் எனப்படும் யேட்டி (YETI= SNOWMAN)

 

அதிசயம் நிகழும் மானஸரோவர் ஏரி; கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து ஆகிய மாபெரும் புனித நதிகள் புறப்படும் இடம் அருகருகே உள்ளன.

 

மணம் பரப்பும் கஸ்தூரி மான்!!

காஷ்மீரின் குங்குமப் பூ!!

புத்த சந்யாசிகள் வாழும் மலைக் குகைகள்!!

 

உபநிஷத முனிவர்கள் வாழ்ந்த அடர்ந்த கானகங்கள்!!

 

கிரேட் இண்டியன் பஸ்டார்ட் (GREAT INDIAN BUSTARD) எனப்படும் உயர்ந்த கொக்கு வகை!!

சைபீரியாவிலிருந்து குடியேறும் ரஷ்யப் பறவைகள்!

அரிய பெரிய வனவிலங்குகள்!

ஆர்க்கிடுகள் (ORCHIDS) எனப்படும் அபூர்வ மலர்கள்!

நேபாளத்தில் குமாரி எனப்படும் வாழும் சிறுமி!

எண்ணற்ற கோவில்கள்- கேதார் நாத்,பத்ரி நாத், கைலாஷ், வைஷ்ணவி தேவி குகைக் கோயில், பாதாள புவனேஷ்வர், ரிஷி கேஷ், ஹரித்வார்!!!

இப்படி நூற்றுக் கணக்கில் அடுக்கலாம். ஒரு சில விஷயங்களை மட்டும் இன்று காண்போம்.

XXX

32 சாமுத்ரிகா லக்ஷணம்!

நேபாள நாட்டில் குமாரி என்னும் ஒரு இளம் பெண், கடவுளின் அம்சம் உள்ளவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டு வழிபடப்படுகிறார். 32 சாமுத்ரிகா லக்ஷணங்கள் உடைய ஒரு சிறுமி இப்படிக் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் பருவம் எய்திவிட்டால் அவர் மீதுள்ள தெய்வாம்சம் போய்விட்டது எனப் பொருள்; வேறு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவாள். முன்னொரு காலத்தில் திரைக்குப் பின்னால் கடவுள் இருப்பதாக எண்ணி நேபாள மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஒரு மன்னருக்கு ஆர்வம் தாங்கவில்லை. திரைக்குப் பின்னால் இருப்பது தேவியா இல்லையா என்ற புதிருக்கு விடை காண திரையைத் திறந்தார். பின்னால் இருந்த இறைவிக்குக் கோபம் வரவே என்மீது சந்தேகப் பட்டாயா? இனிமேல் நீயே ஒரு சிறுமியைத் தேர்ந்து எடுத்து அவளைக் கண்ணால் பார்த்துக்கொள். நான் அவள் மூலம் உனக்கு அருள் புரிவேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

 

மன்னருக்கும் சந்தோஷம்! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்கிறது என்று குமாரியைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் நடை முறைக்கு வந்தது. நேபாள மன்னர்கள் அந்தச் சிறுமியிடம் ஆசி பெறுவது நடைமுறை.

 

தேர்ந்தெடுக்கப்படும் சிறுமிக்கு மென் தோல், சீரான பல் வரிசை, அழகிய கரு முடி, கரு விழி, சரியான விரல்கள், ரேகைகள் முதலிய இருக்கிறதா என்று இதற்கான பெண்கள் சோதிப்பர்.

 

இந்தியாவில் கன்யா ஸ்த்ரீக்களை இந்துக்கள் வழிபடுவது தென்னாட்டிலும் உண்டு. ஆயினும் அவை ஒரு சில விழா நாட்களில் மட்டும்தான்; நேபாளம் போல நிரந்தரமாக அல்ல.

நந்த தேவி ரஹஸியம்

 

இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய சிகரம் நந்த தேவி; இது ஒரு இறைவியின் பெயர். வரம் தரும் தேவி என்பது இதன் பொருள். தங்கச் சிகரம் என்று அழைக்கப்படும் பொற்கோட்டு இமயம் ‘’காஞ்சன ச்ருங்கம்’’ (KANJENJUNGA) இதை விட உயரமானது. நந்த தேவியின் உயரம் 25 643’.

நந்த தேவி பற்றிப் பல சுவையான கதைகள் உண்டு; இந்த சிகரத்தின் உச்சியில் அவ்வப்போது புகை கிளம்புமாம்; இதை தேவியின் சமையல் அறை என்று மலைவாழ் மக்கள் அழைப்பர். ஒரு வேளை புகை போன்ற மேகமாகவும் இருக்கலாம்.

 

ஆயினும் மலையில், குகையில், நீரில் தெய்வங்கள் உறையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை; சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் பல்வேறு அணங்குகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பாடிச் சென்றுள்ளனர்.

 

பிரிட்டனைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள்— வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆண்ட காலத்தே, ஒருவர் நந்த தேவி சிகரம் அருகே இருந்த அலுவலகத்தை அல்மோரா என்னும் இடத்துக்கு மாற்றினார். அவருக்கு திடீர் என்று கண் குருடாகிவிட்டது. பனி வெளிச்சத்தால் இப்படி ஆவதுண்டாம். மக்கள் அனைவரும் தேவியின் கோபத்தை எடுத்துரைத்து மன்னிப்புக் கேட்க சொன்னவுடன் அவரும் அப்படியே செய்தார். பின்னர் கண் பார்வை வந்தது.

கதை ஒரு புறம் இருக்கட்டும்; இந்துக்கள் எதையுமே தெய்வம் என்று நினைப்பதால்  அதை அமெரிக்கர்கள் பிரிட்டானியர்கள் போல துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள். மலைக்கும் மடுவுக்கும், ஏரிக்கும் குளத்துக்கும் பூஜை போடுவார்கள். இதனால் இயற்கையும் மக்களை, தான் பெற்ற பிள்ளை போல பாசத்துடன் வளர்த்து அருள் சுரந்தது (அந்தக் காலத்தில்).

 

XXX

அருணாசலப் பிரதேச வாஞ்சோ பழங்குடி மக்கள் கிராமத்துக்குக் கிராமம் நடைபெறும் சண்டையில் கொல்லப்பட்டவர்களின் மண்டை  ஓடுகளைப் பரிசு பொருளாக வைத்துக்கொள்ளுவர். மலைஜாதி மக்களின் தலைவன் வீட்டில் மண்டை ஓடுகள் காட்சிக்கு வைக்கப்படும்; இவர்கள் புலிகளின் நகம், மனிதனின் நகங்கள் பற்களை அணிவர். சங்கத் தமிழ் நூல்களிலும் பற்களை அணியும், புலி நகம் அணியும் பழக்கம் பாடப்பட்டுள்ளது

picture of praying rocks.

பெரிய பிராத்தனை செய்யும் கற்களை வழிபடும் மலைகள் என்று அழைப்பர்

–சுபம்–