ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!!

Number_5

ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!!

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 26

Post No 830 dated 9th February 2014.

பெரியோர்கள் பல்வேறு காரணங்களால் பல விஷயங்களை நமக்கு அறிவுறுத்துகிறார்கள். உலோகாயத நோக்கில் தங்கள் அனுபவத்தின் மூலம் அவர்கள் தரும் அறிவுரைகள் பல. நம்மால் அறிய முடியாத, ஆனால் அவர்களின் உள்ளுணர்வாலும் தவ ஆற்றலினாலும் உணர்ந்து அதன் காரணமாக வழங்கும் அறிவுரைகள் பல. காரணத்தை ஆராயமல் கீழ்ப்படிந்து அவற்றை ஏற்று நடந்தால் நமக்கு நல்லதே நடக்கும். காலப்போக்கில் உலோகாயத நோக்கில் நமது அனுபவத்தாலும், சாஸ்திர அறிவாலும் ஏன், உள்ளுணர்வினாலும் கூட அவர்கள் கூறும் அறிவுரைகள் மெய்யே என்பதை அறியலாம்.

இந்த வகையில் இரண்டு அறிவுரைகளைப் பார்க்கலாம்.

ஐந்து பெயர்களின் பெயரைச் சொல்லக் கூடாது. யார் யாரை?
1) ஆத்ம நாமம் – தன்னுடைய சொந்தப் பெயரைக் கூறக் கூடாது.
2) குரு நாமம் – தான் குருவாக வரித்தவரின் பெயரைக் கூறக் கூடாது.
3) க்ருபண நாமம் – கஞ்சனின் பெயரைக் கூறக் கூடாது.
4) ஜ்யேஷ்டாபத்ய நாமம் – மூத்த மகனின் பெயரைக் கூறக் கூடாது
5) களத்ர நாமம் – தனது மனைவியின் பெயரைக் கூறக் கூடாது.

இதனால் தானோ என்னவோ பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் மூத்த மகன் மற்றும் மனைவி ஆகியோருக்கு இன்னொரு செல்லப் பெயர் இருக்கும்.

இதை விளக்கும் பாடலைப் பார்ப்போம்:-

ஆத்மநாம குரோர்நாம நாமாதிக்ருபணஸ்ய ச I
ஸ்ரேய: காமோ ந க்ருஹ்ணியாத் ஜ்யேஷ்டாபத்ய களத்ரயோ: II

இனி பேச்சை எப்படிப் பேசக் கூடாது என்பதைப் பார்ப்போம்.

???????????

1) பருஷம் – கடும் சொற்களைக் கூறக் கூடாது
2) அதிமாத்ரம் – அதிகமாகப் பேசக் கூடாது
3) சூசகம் – பின்னால் புறம் கூறிப் பேசக் கூடாது
4) அன்ருதம் – பொய்யைப் பேசக் கூடாது
5) அகாலயுக்தம் – சமயத்திற்குப் பொருந்தாத பேச்சைப் பேசக் கூடாது.
6)
இதை விளக்கும் பாடலைப் பார்ப்போம்:

பருஷஸ்யாதிமாத்ரஸ்ய சூசகஸ்யாந்ருதஸ்ய ச I
வாக்யஸ்யாகாலயுக்தஸ்ய தாரயேத்தேகமுத்திதம் II

சரக சம்ஹிதையில் சூத்ர ஸ்தானத்தில் ஏழாம் அத்தியாயத்தில் 28வது ஸ்லோகமாக அமைகிறது இது.

பேசும் போது இந்தக் கருத்துக்களை உள்ளத்தில் இருத்திப் பேச ஆரம்பித்தால் வளம் ஓங்கும்! வாழ்க்கை செழிக்கும்!!

Compiled by Santanam Nagarajan; contact swami_48@yahoo.com

***************