
Written by S Nagarajan
Date: 4 February 2016
Post No. 2506
Time uploaded in London :– 8-08 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை ஹெல்த்கேர் ஜனவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
இதயத்தை மெதுவாகக் ‘கொல்லும்’ 6 உணவுகள்
ச.நாகராஜன்
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இதயத்தை மெதுவாகச் செயலிழக்க வைத்து உங்களைக் கொல்லும் ஆறு உணவு வகைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனித இதயம் ஒரு விசித்திரமான அமைப்புடன் கூடிய அற்புத இயந்திரம். சரியானபடி பொருத்தமான அளவில் ஊட்டச்சத்து இருந்தாலேயே போதும், அது நீடித்து இயங்கும்!
ஆனால் நாமோ இந்த உண்மையை அறியாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு நம்மை நாமே மெதுவாகக் கொன்று கொள்கிறோம்!
என்ன அநியாயம் இது!
அமெரிக்காவில் மட்டும் நான்கு இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.
சரியான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, நீடித்த வியாதிகளைக் கொண்டிருப்பது ஆக இந்த மூன்று காரணங்களே இறப்புக்கான காரணமாகப் பெரும்பாலும் அமைகிறது. இந்த மூன்று காரணங்களை நீக்கி விட்டாலே போதும் இதய நோய் வராமல், நீடித்த ஆயுளை நிச்சயம் கொள்ளலாம்!
சில உணவு வகைகள் நேரடித் தாக்குதலில் இதயத்தைப் பாதிக்கும். மேலும் சில உணவுகளோ உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி மெதுவாகக் கொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக சர்க்கரை நேரடியாக இதயத்தைப் பாதிக்காது. ஆனால் அதிக அளவில் சர்க்கரையை உணவில் சேர்க்க ஆரம்பித்தால் அது உடல் பருமனைக் கூட்டி இதயத்தைப் பாதிக்கும்.
TRANS FATS
வெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சில கொழுப்பு வகை உணவுப் பொருள்கள் நல்ல கொலஸ்ட்ராலான HDLஐக் குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. கொழுப்புகளில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவற்றை trans fats, saturated fats, polyunsaturated fats, unsaturated fats என்று குறிப்பிடுகின்றனர்.
உயிர் வாழ கொழுப்பு சத்து நிச்சயம் தேவை. ஆலிவ் ஆயில், கொழுப்புடைய மீன், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய் முதலானவை தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளவை. இவை மூளையையும் இதயத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள இன்றியமையாதவை.
பாக்கேஜ்களில் வரும் பிஸ்கட், பாப்கர்ன், க்ரீம் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை ஒதுக்கி விடுதல் நலம்.
REFINED GRAINS
மெஷினில் தீட்டப்பட்ட அரிசியில் ஊட்டச்சத்து இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!
பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளில் விற்கப்படும் உணவு வகைகளை விட்டு விட்டு பாரம்பரிய முறையில் அன்றாடம் சமைத்துச் சாப்பிடுவது இதயத்தைச் சீராக வைக்கும் அருமையான வழிமுறையாகும்.
எந்த தானியத்தையும் அரைத்து விட்டால் அதை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்துவது நல்லது. இரண்டு வாரங்கள் என்பது உச்ச பட்ச எல்லை.

SUGAR
க்ளூகோஸ் உடலுக்குத் தேவை தான் என்றாலும், சர்க்கரை சாதாரண அளவில் எடுத்துக் கொள்ளும் போது இதயத்தைப் பாதிக்காது என்ற போதிலும் லாலிபாப் ஒன்றை எடுத்துக் கொண்டு இதர இனிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் உள்ள இனிப்பு ஜீரோ ஊட்டச்சத்து என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஷுகர் கேண்டி சாப்பிட்டால் சக்தி அதிகமாகும் என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அதே சக்தியை ஒரு பழத்துண்டு தந்து விடுகிறது. பழம் சீரான ஜீரணத்தையும் ஏற்படுத்துகிறது. லாலிபாப் போன்றவற்றில் உள்ள ரிஃபைண்ட் ஷுகர் (Refined sugar) அடிக்கடி அவற்றை உண்ணத் தூண்டும்; பக்க விளைவுகளை ஏற்படுத்தும். களைப்பையும், தலைவலியையும் ஏற்படுத்தும். ஆகவே செயற்கை சர்க்கரை வகைகளைப் பயன்படுத்தக் கூடாது.
கேன்களில் அடைக்கப்பட்ட பழ வகைகளை வாங்கும் போது அது பழச்சாறாக இருந்தால் அதில் விடமின் ‘சி’யும் அதிக கலோரிகளும் இருக்கும். ஆனால் அவை சிரப்பாக (Syrup) இருந்தால் அதில் ஊட்டச்சத்து இருக்காது.
FATTY MEATS
இறைச்சி உட்கொள்பவர் என்றால் அது உங்கள் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.கேன்களில் அடைக்கப்பட்ட சிக்கன் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது இதயத்திற்கு நல்லது.
ENERGY DRINKS
‘சக்தியூட்டும்’ எனர்ஜி பானங்கள்
சக்தி தரும் பானங்கள் என்று விளம்பரங்களில் குறிப்பிடப்படும் பானங்களில் காபின், ஜின்செங், விடமின் ‘பி’, சர்க்கரை போன்றவை இருந்தாலும் இவை அனைத்தும் உடனடியாக சக்தியை அதிகப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அது உங்கள் இரத்த அழுத்தத்தை பானம் அருந்தியதிலிருந்து இரண்டு மணி நேரம் வரை அதிகப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதயமும் இரத்த அழுத்தமும் சீராக ஒருவருக்கு இருக்கும் வரை இந்த பானங்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அடிக்கடி இவற்றை குடிக்க ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; இதயமும் பழுதாகும்!

SALT
உப்பு
உப்பு இரத்த கனஅளவை உயர்த்தி நாளங்களில் நல்ல ஆரோக்கியமான முறையில் ஓட வைக்க உதவுகிறது. எளிமையாகச் சொல்வதென்றால் உப்பு தான் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க வைக்க உதவுகிறது. அதிக உப்பு உடலில் சேர்ந்தாலோ அல்லது உப்பை நீங்கள் சீரான முறையில் வைக்கவில்லை என்றாலோ இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே இரத்த அழுத்த பாதிப்பு உடையவர் என்றால் உடனடியாக உப்பின் அளவை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு உப்பு நிச்சயம் வேண்டும். உயிர்வாழ அந்த தாது அவசியமே. ஆனால் அதை ‘அதிகமாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது!
இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகள்
சரி, சுருக்கமாகச் சொல்லுங்கள், எவற்றை விலக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அதைச் சொல்வது எளிது. கீழே உள்ளவற்றை எப்போதாவது சாப்பிடுவது என்று வைத்துக் கொண்டால் ஒரு பயமும் இல்லை. அதை தினசரியோ அல்லது அடிக்கடி சாப்பிடும் ழக்கம் உண்டு என்றால் அவை இதயத்தை பாதிக்கும் எபன்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பீஸா
பேக் செய்யப்பட்ட கேக்குகள் (Baked Cakes)
கொழுப்புள்ள இறைச்சி வகைகள்
சிக்கன் ஸ்கின் (Chicken skin)
எண்ணெயில் வறுக்கப்பட உணவு வகைகள்
பாஸ்தா
ஐஸ்க்ரீம் மற்றும் இதர உறைநிலை frozen treats
சர்க்கரை உள்ள பானங்கள்
க்ரீம் சாஸ் வகைகள்
கெட்ச் அப்

ஆரோக்கியமான உணவு வகைகள்
எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டுமா என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். ஆலிவ் ஆயில், வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவை நல்லவையே.
ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கு பதில் ஒரு கோப்பை பழத்துண்டுகளைச் சாப்பிடலாம்.
I
இதயத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மேலே கூறியவற்றை மனதில் இருத்திக் கொண்டு உணவுப் பழக்கத்தைச் சற்று மாற்றிக் கொண்டாலே போதும். நீண்ட நாள் வாழலாம் – ஆரோக்கியத்துடன்
******
You must be logged in to post a comment.