
Research Article Written by london swaminathan
Date: 9th August 2016
Post No. 3046
Time uploaded in London :– 6-27 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 2
விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் செய்திகள் தினமும் வருகின்றன. எங்கிருந்து? வானத்திலிருந்து!!
செவ்வாய், வியாழன் கிரகங்கள் பற்றியும் பல்லாயிரம் கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள நட்சத்திர (சூரியனைப் போன்றவை) மண்டலங்களில் புதுப் புது கிரககங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் நாம் தினமும் செய்திகளைப் படித்து வருகிறோம். இப்படிப்பட்ட ஒரு கண்டு பிடிப்புதான் கறுப்புத் துளைகள் (BLACK HOLES) அல்லது குழிகள்.

இதுபற்றி வானவியலார் கூறுவது என்ன?
வானத்தில் ஈர்ப்புவிசை மிகுந்த — மிகப் பெரிய அளவிலுள்ள — சில பகுதிகள் இருப்பதாகவும் இவை அருகிலுள்ள நட்சத்திரங்களைக் கபளீகரம் செய்வதாகவும் அவர்கள் சொல்லுவர்.
இதுவரை பிரபஞ்சத்தில் அதிக வேக வேகத்தில் செல்லக் கூடியது ஒளி-தான் என்றும் அது வினாடிக்கு 1,86,000 மைல்கள் செல்லும் என்றும் இந்த வேகத்தை அடையவே முடியாது என்றும் அறிவியல் அறிஞர்கள் செப்புவர். எவரேனும் ஒருவர் இந்த வேகத்தில் சென்றால் அவர் எப்போதும் மார்க்கண்டேயர் போல வாழலாம் என்றும், வேகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் காலத்தில் முன்னோக்கிப் பயணம் செய்யலாம் என்றும் பகர்வர். அப்பேற்பட்ட ஒளியைக் கூட வெளியே விடாத அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்டவை Black கருந்துளைகள். நட்சத்திரங்கள் சுருங்கிப் போய் இதை உருவாக்குகின்றன
அது மட்டுமல்ல; இதற்குள் நுழையும் விண்வெளிப் பொருட்கள் பிரம்மாண்ட வெப்பத்தை உண்டாக்குவதால் இங்கிருந்து எக்ஸ்ரே கதிர்கள் வெளிப்படும். இதை வைத்தே கருந்துளைகள் எங்கே இருக்கின்றன என்பதை அறிஞர் பெருமக்கள் அறிவர்.
முதல் முதலில் அணுகுண்டு வெடித்த காட்சியைக் கண்ட ‘அணு குண்டின் தந்தை’ ராபர்ட் ஓப்பனஹைமர் (J Robert Oppenheimer, American Theoretical Physicist, Father of Atomic Bomb), ஆச்சர்யத்தில் மூழ்கி “திவிசூர்ய சஹஸ்ரஸ்ய” (கீதை 11-12) என்ற ஸ்லோகத்தை உச்சரித்தார். பல்லாயிரம் கோடி சூரியன்கள் ஒருங்கே உதித்தாற் போல இருந்ததாம் கிருஷ்ணனின் விஸ்வ ரூப தரிசனம்! இதே போலத்தான் முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியபோது வானத்தில் பல்லாயிரம் கோடி சூரியன் உத்தித காட்சியைக் கண்டார் ஓப்னஹைமர். இது பற்றி முன்னரே விரிவாக எழுதி இருக்கிறேன்.
இப்போது கருந்துளைகளுக்கு வருவோம். இந்தக் காட்சியும் பகவத் கீதையிலும் , மனு ஸ்மிருதியிலும் உள்ளது. அங்கே “கடவுள்”, “விஷ்ணு” என்பனவற்றை மறந்து விட்டுப் பார்த்தாலோ அந்தச் சொற்களை நீக்கிவிட்டுப் படித்தாலோ ஒரு விஞ்ஞானக் கட்டுரையைப் படிப்பது போலத் தோன்றும்.
இதோ அந்த வரிகள்!
உலகங்களும், மன்னர்களும் உன் வாய்க்குள் புகுவதைக் காண்கிறேன் (கீதை 11-26)
எவ்வாறு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதிகள் அனைத்தும் கடலை நோக்கி விரைகின்றனவோ அவ்வாறே இந்த மானிட உலக வீரர்கள் எப்புறமும் கனல் வீசும் உன்வாய்களில் புகுவதைக் காண்கிறேன் (11-28)
எவ்வாறு விட்டிற்பூச்சிகள் அதிபயங்கர வேகத்துடன் நாசமடைவதற்காக, தீக்குள் புகுகின்றனவோ அவ்வண்ணம் உலகத்து உயிர்களும் நாசமடைவதற்காகவே உன் வாய்க்குள் நுழைகின்றன. 11-29
கனல் வீசும் வாய்கள் உலக ங்களை விழுங்குவதைக் காண்கிறேன். உன் நாக்குகள் அவைகளை நக்கி விழுங்குகின்றன. உன்னுடைய வெப்பம் மிக்க கிரணங்கள் உலகங்களை எரிப்பதையும் பார்க்கிறேன் 11-30
என்று அர்ஜுனன் இயம்புவதை படித்துவிட்டு கருந்துளைகள் பற்றி பார்த்தாலோ, அறிவியல் அறிஞர்கள் சொன்னது அப்படியே இருப்பதைக் கண்டு வியப்போம்.
பகவத் கீதையின் விஸ்வரூப தரிசன யோகத்தில் 5000 ஆண்டு களுக்கு முன் வியாசர் என்ன எழுதினாரோ அதை அப்படியே இன்று கருந்துளைகளின் காட்சியாக வருணிப்பர் வானைனியல் வல்லுநர்கள்!

(முதல் ஏழு அதிசயங்கள் மனு பற்றிய முதல் பகுதியில் உள்ளன)
அதிசயம் 8
மனு இதற்கும் மேலாக ஒருபடி சென்று ஆதியில் இருந்த கருந்துளைகள் பற்றி கறுப்பு (BLACK) என்றே சொல்லுகிறார்!
“கேள்! ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது (கறுப்பு). எது என்ன என்பதைக் காண இயலாதவாறு கும்மிருட்டு!!
அது என்ன என்றே யாருக்கும் புரியாது. எல்லாம் நெடுந் தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.
எப்போதுமுள்ள இறைவன், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். தனது சக்தியை எல்லாம் பயன்படுத்தி காணும்படி செய்தான். இருளை விரட்டி அடித்தான்” – மனு ஸ்ம்ருதி — 1–5/6
மாபெரும் வெடிப்பு (BIG BANG பிக் பேங்) கருந்துளைகள் (BLACK HOLE) ஆகியன இதில் அடக்கம்!
அறிவியல் செய்திகளை மக்களுக்கு இதைவிட எளிய சொற்களில் விளக்க முடியாது.
எதையேனும் ஒன்றை அறிவியலாளர் கண்டுபிடித்த பின்னர் எங்கள் சாத்திரங்கள் அதை முன்னரே சொல்லிவிட்டன என்று சொல்லுவது அறிவுடைமை அல்ல; முன் கூட்டியே வரப்போவதை உரைப்பவனே சிறந்தவன். இவ்வகையில் எதிர்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்று இந்து மதம் சொன்னதையும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

மீண்டும் சுருக்கமாக (In short):
1.ஒளியைவிட வேகத்தில் – மனோ (Mind) வேகத்தில் பயணம் செய்யும் வழி உண்டு விண்ணூலக வாசிகள் அதைப் பயன்படுத்தி பூலோகத்துக்கு மனோ வேகத்தில் வந்தனர். ஒளியைவிட வேகத்தில் செல்லுவது மனது. அதை ஓடம் போலப் பயன்படுத்தி எங்கும் செல்லும் ஆற்ற்றல் உண்டு.
காலப் பயணம் சாத்தியமே; காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்த செய்திகள் இந்து மத நூல்களில் இருக்கின்றன (எனது கட்டுரைகளில் காண்க)
மேலுலகவாசிகள் எப்படி இருப்பர் என்பதையும் எழுதியுள்ளேன்.
காலம் என்பது வட்டப் பாதையில் (Cyclical) செல்லும்; மேல் நாட்டினர் கூறுவது போல ஒரே நேர் கோட்டில் (Linear) செல்லுவது அல்ல.
பல்லாயிரம் கோடி உலகங்கள் உண்டு. பூமியிலிருந்து பார்ப்பவர்களு அந்தக் காலம் பிரம்மாண்டதாகத் தோன்றும். ஒரே நாள் மட்டும் வாழும் ஈ-க்கு (fly) 100 ஆண்டுகள் வாழும் மனிதன் எப்படியோ அப்படியே நமக்கு அவர்களுடைய ஆயுள். (இதுபற்றியும் தனிக் கட்டுரை எழுதியுள்ளேன்)
–சுபம்–
You must be logged in to post a comment.