
Post No. 9885
Date uploaded in London –23 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விஞ்ஞான புனைக் கதை எழுதிய முதல் ஆசிரியர் எச்.ஜி.வெல்ஸ் (H G WELLS) என்பது பலருடைய கருத்து ஆகும்.

ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் என்பது அவருடைய முழுப் பெயர் ஆகும். அவர் இங்கிலாந்தில் பிராம்லியில் (Bromley) பிறந்தார்.அவரது குடும்பம் ஏழைக் குடும்பம்.. ஒரு கடையில் உதவி செய்பவராகப் போனவருக்கு லண்டனிலுள்ள ஒரு விஞ்ஞானப் பள்ளியில் படிப்பதற்கு உபகார சம்பளம் கிடைத்தது.
கல்லூரியில் அவருடைய ஆசிரியர் பிரபல அறிவியல் நிபுணரான தாமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxley) ஆவார். அவர் டார்வின் எழுதிய பரிணாமக் கொள்கையை இவருக்குப் போதித்தார். பிராணிகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்து பரிணாம வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் அவை எவ்வாறு வளர்ச்சி அடையும் என்று எச்.ஜி.வெல்ஸ் கற்பனை செய்தார். அவற்றைப் பல நாவல்களில் எழுதினார்.
29 வயது வரை கணக்கராகவும், ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார். பின்னர் முழு நேர எழுத்துப் பணியில் குதித்தார். தன் வாழ்நாளில் சுமார் 80 கதைகளையும் ,நாவல்களையும் எழுதினார். அவற்றில் பல விஞ்ஞான கற்பனைக்கு கதைகள். அது போக மீதிக்க தைகள் சமூக, அரசியல் விஷயங்கள் பற்றியவை. வரலாற்றைச் சுவைபட படிக்கும் வகையில் ஒரு புஸ்தகமும் (Outlines of History) எழுதினார்.
வெல்ஸ் எழுதிய முதல் விஞ்ஞான கற்பனைக் கதை டைம் மெஷின் (Time Machine) எனப்படும் காலப் பயண யந்திரம் ஆகும். ஒருவர் வருங்காலத்துக்குப் பயணம் செய்து இந்த பூமி அழியும் காலத்தைக் காணும் கதை அது. எதிர்காலத்தில் இரு வகை மனிதர்கள் உருவாகலாம்; முதல் ரகம் ‘ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் போன்ற இலோய்’ வகுப்பு. இரண்டாவது, செயல் முறைக்கு உகந்த ‘மார்லக்ஸ் வகுப்பு’. இதற்கு அடுத்த படியாக கிரகங்களுக்கு இடையே எழும் சண்டை (வார் ஆ ப் தி ஒர்ல்ட்ஸ்) பற்றி ஒரு கற்பனைக் கதை எழுதினார்.
செவ்வாய்க் கிரக மக்கள் பூமி மீது படை எடுப்பதாவும் அவர்களை பூமியிலுள்ள புழு அளவேயுள்ள கிருமிகள் அழி ப்பதாவதும் எழுதினார் . இந்த இரண்டு புஸ்தகங்களும் இவருக்கு புகழ் ஈட்டின
மனித குலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல், அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் உண்டு என்று நம்பினார். ஆயினும் காலம் செல்லச் செல்ல மனித குலத்தின் கொடூரச் செயல்களும் சுயநலமும் அவருக்கு கவலை ஏற்படுத்தின.
பிறந்த தேதி — செப்டம்பர் 21, 1866
இறந்த தேதி – ஆகஸ்ட் 13, 1946
வாழ்ந்த ஆண்டுகள் -79

H G WELLS PROFILE
BORN SEP.21, 1866
DIED AUG.13, 1946
AGE AT DEATH – 79
PUBLICATIONS
1895 THE TIME MACHINE
1896 THE ISLAND OF DR MOREAU
1897 THE INVISIBLE MAN
1898 THE WAR OF THE WORLDS
1899 WHEN THE SLEEPER AWAKES
1901 THE FIRST MEN IN THE MOON
1908 THE WAR IN THE AIR
1920 THE OUTLINE OF HISTORY
1933 THE SHAPE OF THINGS TO COME
1939 THE HOLY TERROR

H G Wells | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › h-g…
15 Aug 2018 — H G Wells has such a big head that he has trouble getting hats to fit. Once when he found one that balanced nicely on his head he just …
H G Wells meeting | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › h-g…
16 Jan 2019 — Written by London swaminathan. swami_48@yahoo.com. Date: 16 JANUARY 2019. GMT Time uploaded in London –15-51. Post No. 5943

Tags- விஞ்ஞான புனைக் கதை எச்.ஜி.வெல்ஸ்


